Page 163 of 401 FirstFirst ... 63113153161162163164165173213263 ... LastLast
Results 1,621 to 1,630 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1621
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Producer/Actor Chithra Lakshman' Page


    2013 அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகத்தின் 85வது பிறந்த நாள் விழா. அவரோடுதான் எனக்கு எத்தனையெத்தனை
    அனுபவங்கள் ”நடிகர் திலகம் சிவாஜி என்ற மகா கலைஞனோடு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளன், பத்திரிகைத் தொடர்பாளன்,உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் இணைந்து பணியாற்றக்கூடிய அரிய வாய்ப்பு பெற்றவன் நான். 1970 தொடங்கி 15 ஆண்டுகள் நான் நடத்திய “திரைக்கதிர்” பத்திரிகை அதன் ஆரம்பக்கட்டங்களில் சிவாஜி ரசிகர்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிக்கையாக வெளிவந்தது. இதழ்கள் தோறும் ரசிகர்களின் கேள்விகளுக்கான சிவாஜியின் பதில்கள், சிவாஜியின் டைரி என்ற பெயரில் மாதம் முழுவதும் சிவாஜி கலந்து கொள்ளும் படப்பிடிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், சிவாஜி படச் செய்திகள் என்று முழுக்க முழுக்க சிவாஜி பற்றிய செய்திகளே அந்த இதழில் நிறைந்திருக்கும். இப்படிப் பத்திரிகையாளனாக அவரோடு தொடங்கிய நட்பு அவரைக் கதாநாயகனாக வைத்து படம் எடுக்கின்ற அளவிற்கு வளரும் என்று நான் கனவில் கூட எண்ணியதில்லை. அதை இறைவன் எனக்களித்த வரம் என்றுதான் கூறுவேன்.

    பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “மண் வாசனை”தான் தயாரிப்பாளராக எனது முதல் படம். அப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்குத் தலைமை தாங்கிய நடிகர்திலகம்தான் என் இரண்டாவது தயாரிப்பான ”வாழ்க்கை ” திரைப்படத்தின் நாயகன். ”வாழ்க்கை” படப்பிடிப்பில் நடைபெற்ற ஒரு சம்பவம் பத்திரிக்கைகளில் பதிவு செய்ய வேண்டிய ஒரு அரிய சம்பவம். எனக்குத் தெரிந்து சிவாஜி அவர்களின் திரைப்பட வாழ்க்கையில் அது வரை நடந்திராத ஒரு நிகழ்ச்சியாக அது இருக்கும் என்று நினைக்கிறேன்.
    ”வாழ்க்கை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் சிவாஜி அவர்களின் மற்றொரு படத் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நான் ஏவி.எம். ஸ்டூடியோ சென்றிருந்தேன். ஒப்பனை அறையில் படப்பிடிப்பிற்கு தயாராகிக்கொண்டிருந்த சிவாஜி அவர்களைச் சந்தித்தபோது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு,” படம் முழுவதும் பார்த்துவிட்டாயா? எப்படி வந்து இருக்கிறது” என்று கேட்டார் சிவாஜி. “மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்க்கும் போது பல காட்சிகளில் நான், டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் என்று பலரும் கண்கலங்கி விட்டோம்” என்றேன் நான்.

    சிறிது நேரம் படத்தைப் பற்றியும் அதற்குப் பிறகு என் திருமணம் பற்றியும் பேசிவிட்டு (நான் ஒரு நடிகையைத் திருமணம் செய்யப் போவதாக பத்திரிக்கைகளில் எல்லாம் கிசு கிசுக்கள் பலமாக எழுதப்பட்ட நேரம் அது) நான் கிளம்புகின்ற நேரத்தில் “படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் என் நடிப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னா கூட தயங்காம சொல்லுப்பா. நான் திரும்பவும் நடிச்சித் தரத் தயாரா இருக்கேன்” என்றார் சிவாஜி.


    அப்போது எனக்கு பெரிய அனுபவம் இல்லை என்பது தவிர அவ்வளவாக விவரம் இல்லாத வயசு என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் “சார் நானே உங்ககிட்ட சொல்லணும் என்று இருந்தேன். நல்ல காலம் நீங்களே கேட்டு விட்டீர்கள். எல்லா காட்சிகளும் ரொம்பப் பிரமாதமாக அமைந்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு காட்சியை மட்டும் திரும்பவும் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று எனக்குள் ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. டைரக்டர் சி.வி.ராஜேந்திரனிடம் கூட சொல்லிப்பார்த்தேன். இல்லையில்லை இதுவே நன்றாக இருக்கிறது என்று அவர் சொல்லிவிட்டார். அந்த காட்சியை மட்டும் நீங்கள் மீண்டும் நடித்துத் தந்தால் நன்றாக இருக்கும்” என்று சொல்வேனா?
    ”வாழ்க்கை” சிவாஜிக்கு 242வது படம். எனக்கு இரண்டாவது படம்.
    242 திரைப்படங்களில்இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குணச்சித்திரங்களைப் பிரதிபலித்து, நடிப்பிற்கு இலக்கணமாகவும்,பல்கலைக்கழகமாகவும் விளங்கிய கலைச்சக்க்ரவர்த்தியான அவரிடம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் ஏற்கனவே அவர் நடித்த காட்சியை மீண்டும் நடித்துத் தரச் சொல்கிறேன்.


    எப்படிப்பட்ட அறியாமை பாருங்கள்!

    “எந்தக் காட்சி உனக்குத் திருப்தியாக இல்லை?” என்று கேட்டு விட்டு “ஓ அந்தக் காட்சியா? அந்தக் காட்சியில் அதற்கு மேல் நடித்தாலோ, அல்லது வேறு மாதிரி நடித்தாலோ சரியாக வராது நன்றாகவும் அமையாது.” என்றெல்லாம் சொல்லி சிவாஜி என்னை சமாதானப்படுத்தவில்லை.

    இயக்குநர் சி.வி.ராஜேந்திரனுக்கு போன் செய்து “ சித்ரா விவரமில்லாம ஏதோ ஒரு சீன்ல நான் திரும்பவும் நடிச்சி தரணும்னு கேட்கிறான். அதெல்லாம் சரியா வருமாப்பா? நீ கொஞ்சம் சித்ரா கிட்ட போன் பண்ணி அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடு” என்று சொல்லவில்லை.

    நான் சொல்லி முடித்தவுடன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் “ சரிப்பா நீ படப் பிடிப்பிற்கு ஏற்பாடு செய். நான் வந்து மீண்டும் நடித்துத் தருகிறேன் என்றார்..

    அடுத்த வாரமே பிரசாத் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு அந்தக்காட்சி மீண்டும் படமாக்கப் பட்டது.

    இந்த சம்பவம் நடந்தபோது சிவாஜி அவர்கள் திரையுலகில் இருந்த உயரத்தையும், அவரது திரையுலக அனுபவத்தையும் மனதில் இருத்திக் கொண்டு இன்றைய சினிமாவின் நிலையோடு இந்த சம்பவத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் இந்த சம்பவத்தின் அருமை புரியும்.
    சிவாஜி என்ற அந்த மாமேதையோடு நானும் என் சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த “ஜல்லிக்கட்டு” திரைப்படத் தயாரிப்பின் போது நடந்த இன்னொரு நிகழ்ச்சியும் என் வாழ் நாளில் நான் மறக்க முடியாத ஒரு இனிய நிகழ்ச்சி.

    ஒரு நாள் காலையில் சிவாஜி சார் அவர்களின் வீட்டிற்குச் சென்ற நான் அவரிடம் “ சார். நாளை காலையில் ‘டப்பிங்’ கிற்கு ஸ்டுடியோ புக் பண்ணியிருக்கிறேன். நீங்கள் எத்தனை மணிக்கு வருகிறீர்கள்” என்று கேட்டேன்.

    சிவாஜியின் கூரிய கண்கள் என்னை ஒரு முறை ஊடுருவிப் பார்த்தன. “அண்ணனைப் பத்தி நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே? உன்னை என் தம்பி மாதிரி நினைச்சி பழகறதினாலே எப்படி வேணும்னாலும் என்னோட ‘டீல்’ பண்ணலாம்னு நினைச்சிட்டியா? உன் இஷ்டத்துக்கு டப்பிங்
    தியேட்டரை புக் பண்ணிட்டு என்னை டப்பிங்கிற்கு வரச் சொல்லி கூப்பிடறே? என்றார்.

    சிவாஜி அவர்கள் அப்படி என்னிடம் கடுமையாக என்றும் பேசியதேயில்லை. ஒரு நிமிடம் என்ன பதில் பேசுவது என்றே எனக்குப் புரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துப் பார்த்தேன். அப்போதுதான் எனக்கு நான் செய்த தவறு புரிந்தது. அவ்வளவு பெரிய கலைஞனிடம் முறையாக தேதி வாங்கிவிட்டு அதற்குப் பிறகு ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்யாமல் நானாக ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்துவிட்டு அவரை அழைப்பது எந்த வகையில் நியாயம்?
    என் தவறை உணர்ந்த அடுத்த நிமிடம் அவரிடம்,” SORRY SIR ஏதோ அவசரத்தில் தவறு செய்து விட்டேன். நாளைக்கு தியேட்டரை கேன்சல் செய்து விடுகிறேன். உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது சொல்லுங்கள் தியேட்டரை புக் செய்கிறேன்” என்றபடி சோபாவை விட்டு நான் எழுந்தேன்.

    தன் கைகளால் என் தோளைத்தொட்டு என்னை அமர்த்தினார் சிவாஜி. “எனக்காக தியேட்டரை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டாம்.நான் நாளைக்கு காலையில் டப்பிங் பேச வர்றேன். ஆனால் ஒரு கண்டிஷன்” என்றார்.

    “எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் சார் செய்யறேன்” என்றேன்.
    “நாளை முதல் டப்பிங் முடியறவரைக்கும் நீ என் கூடத்தான் காலையில டிபன் சாப்பிடணும். சம்மதம்னா சொல்லு டப்பிங் பேச வர்றேன்” என்றார்.
    கரும்பு தின்னக் கூலியா? உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன். இரண்டே நாட்களில் முழு படத்திற்கான டப்பிங்கையும் பேசி முடித்து விட்டார். அவர் கொண்டு வந்த டிபனில் நான் மட்டுமல்ல அந்த தியேட்டர் ஒலிப்பதிவாளர், டைரக்டர், உதவி டைரக்டர்கள் என்று பத்து பேருக்கு மேல் இரண்டு நாளும் சாப்பிட்டோம்.

    ”வாழ்க்கை” திரைப்படத் தயாரிப்பின் போது இன்னொரு சம்பவம்.
    படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாரானபோது படத்தில் நடித்ததற்காக 50 சதவிகித சம்பளத்தைத்தான் பெற்றிருந்தார் சிவாஜி. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று படத்தை வெளியிடுவது என்று முடிவெடுத்திருந்த நிலையில் மீதி சம்பளப் பணத்தைக் கொடுப்பதற்காக ஏப்ரல் 13ஆம் தேதியன்று சிவாஜி அவர்களைத் தொடர்பு கொண்டேன்.

    “பணம் எல்லாம் நான் அப்புறம் வாங்கிக்கறேன். நீ நாளைக்கு காலையில புறப்பட்டு முதல்ல தஞ்சாவூர்ல நாங்க கட்டியிருக்கிற சாந்தி-கமலா தியேட்டர் திறப்பு விழாவிற்கு வர்ற வேலையைப் பாரு. உனக்கு ஃபிளைட்ல டிக்கட் எல்லாம் கூட போட்டாச்சி” என்றார் சிவாஜி.
    தியேட்டர் திறப்பு விழா முடிந்ததும் சூரக்கோட்டையில் நண்பகல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூரக்கோட்டைக்கு வந்த எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து கே.பாக்கியராஜ் செல்ல அவருக்கு பின்னால் நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு உயர் காவல்துறை அதிகாரி பாக்கியராஜைக் காட்டி “ நல்லா பார்த்துக்கய்யா அடுத்த சி.எம். இவர்தான்” என்று ஒரு இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். (இது ஒரு கூடுதல் தகவல்)

    தியேட்டரைத் திறந்து வைத்த எம்.ஜி.ஆர். நண்பகல் விருந்து முடிந்து நீண்ட நேரம் சிவாஜி அவர்களோடு உரையாடிவிட்டு பிறகு சென்னை திரும்பினார். அவ்விழா நடந்த பிறகு ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நான் வீர்பாண்டி கோவிலுக்குச் சென்றுவிட்டு

    ஒருவாரம் சென்ற பிறகுதான் சென்னை திரும்பினேன். அதற்குப்பிறகே மீதி சம்பளத்துக்கான காசோலையை பெற்றுக்கொண்டார்சிவாஜி.

    எம்.ஜி.ஆர். அவர்களும் சிவாஜி அவர்களும் எதிரும் புதிருமானவர்கள் என்ற எண்ணம் இன்றுவரை தமிழக மக்கள் மனதில் நிலவி வருகின்றது. ஆனால் அதை பலமாக பல தடவை மறுத்திருக்கிறார் சிவாஜி.
    “தனிப்பட்ட முறையில் எங்களுக்கிடையே நல்லுறவு இல்லையென்றால் எதற்காக கடிதம் எழுதி என்னை அமெரிக்கா வரச் சொல்லுகிறார் எம்.ஜி.ஆர்? எதற்காக நான் ‘சார்ட்டர்ட் ஃப்ளைட்’ வைத்துக் கொண்டு பால்டிமோர் சென்று அவரைப் பார்க்கிறேன்? எதற்காக அவர் காலமாவதற்கு நான்கு நாட்கள் முன்பு “வீட்டிற்கு வா முக்கியமான பொறுப்பை உன்னிடம் கொடுக்கணும்” என்று சொல்லப்போகிறார்.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தனிப்பட்ட முறையில் நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்” என்று தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி. அவர்கள் இருவரது நெருக்கத்தை உணர்கின்ற வாய்ப்பு சிவாஜி அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி அவருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தியபோது எனக்குக் கிடைத்தது. அந்த பாராட்டு விழாக் குழுவில் பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு நானும் இடம் பெற்றிருந்தேன்.

    அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விழாவிற்கு தலைமை தாங்கினால் நன்றாக இருக்கும் என்று விழாக் குழுவினர் அனைவரும் முடிவெடுத்தோம். அதில் சிக்கல் என்னவென்றால் விழா நடைபெற இருந்ததற்கு முதல் நாள்தான் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவதாக இருந்தார். ஆகவே தனது பாராட்டு விழாவிற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிவாஜியே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி அவரை அழைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த கடிதத்தை இயக்குநர் பாரதிராஜா எடுத்துச் சென்று தில்லியில் வந்து இறங்கப் போகும் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் தந்து விழாவிற்கு எம்.ஜி.ஆரை தலைமை தாங்கக் கேட்டுக் கொள்வது என்றும் திட்டமிடப்பட்டது.

    கடிதத்தில் கையெழுத்திட வேண்டிய சிவாஜி அவர்கள் கோபிசெட்டிப்பாளையத்தில் “மண்ணுக்குள் வைரம்” படப்பிடிப்பில் இருந்தார். கோபிச்செட்டி பாளையம் சென்று எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதும் கடிதத்தில் கையெழுத்து வாங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி நான் கொபிசெட்டிபாளையம் சென்று சிவாஜி அவர்களிடம் கையெழுத்தை வாங்கிக்கொண்டு சென்னை திரும்பினேன். எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய ஒரே கடிதம் அதுவாகத்தான் இருக்கும் என்பதால் புகழ் பெற்ற அக்கடிதத்திற்கு ஒரு பிரதி எடுத்து பத்திரப் படுத்துக் கொண்டேன். இத்தனை தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் அந்த விழாவில் எம்.ஜி.ஆர். அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தக் குறையை நானும் எனது சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த “ஜல்லிக்கட்டு”நூறாவது நாள் விழாவில் தீர்த்துக் கொண்டேன்.

    சிவாஜி அவர்கள் நடித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் 100வது நாள் விழாவிற்கு எம்.ஜி.ஆர்.தான் தலைமை. ”பல்லாண்டு காலம் திரையுலகை ஆண்ட ஈடு இணையற்ற கலைச் சக்ரவர்த்திகளாக எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இருந்த போதிலும் சிவாஜி நடித்த திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்வது இதுவே முதல் முறை” என்று விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

    ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழாவின் போது நடந்த இன்னொரு ரசமான நிகழ்ச்சி என்னால் எப்போதும் மறக்க முடியாத ஒன்று.
    ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழா அழைப்பிதழின்.முகப்பில் எம்.ஜி.ஆர். படத்தையும்,நடுப்பக்கத்தில் சத்தியராஜ் அவர்கள் படத்தையும்.கடைசீ பக்கத்தில் சிவாஜி அவர்கள் படத்தையும் அச்சிட்டிருந்தோம். அந்த அழைப்பிதழை எப்படி வேண்டுமானாலும் மடிக்கலாம் என்பதால் சிவாஜி அவர்களிடம் அழைப்பிதழைக் கொடுக்கும்போது சிவாஜி அவர்கள் படம் முதலில் வரும்படி மடித்து அவரிடம் கொடுத்தேன். அழைப்பிதழைப் படித்துப் பார்த்துவிட்டு அழைப்பிதழை என்னிடம் திரும்பக் கொடுத்தார் சிவாஜி. அதில் முதல் பக்கத்தில் எம்.ஜி.ஆர். என் மனதைக் காயப் படுத்தாமல் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான் என்று அவர் சொல்லாமல் சொன்ன விதம் இருக்கிறதே அது இன்றளவும் என் மனதில் ஆழப் பதிந்துள்ள ஒன்று.

    சிவாஜி போன்ற இமாலயத் திறமை கொண்ட நடிகரை இனி எக்காலத்திலும் இந்தத் திரையுலகம் சந்திக்கப் போவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போல நூறு மடங்கு உண்மை சிவாஜி போன்று பழகுவதற்கு எளிமையான, இனியவரான மனிதனை இந்தத் திரையுலகம் இனி எந்தக்காலத்திலும் சந்திக்கப் போவதில்லை என்பதும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1622
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Actor Mr. Sivakumar's Face book post,

    எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடந்த திரைப்பட விழாவில் - 1958-ல் வெளியான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை சிறந்த
    படமாகவும் நடிகர் திலகம்
    சிவாஜியை சிறந்த நடிகராகவும்
    தேர்வு செய்தனர்...சென்னையிலிருந்து தயாரிப்பாளர், இயக்குநர் பி.ஆர். பந்துலு- சிவாஜி - பத்மினி - ராகினி உள்ளிட்ட குழு கெய்ரோ சென்றது... வெளிநாடு செல்லுமுன், மருத்துவ பரிசோதனை செய்த சான்றிதழை, கெய்ரோ விமான நிலையத்தில் காட்டச் சொன்னார்கள்.
    பத்மினி மட்டும் அகப்பட்டுக் கொண்டார். இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக சென்னையில் மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளவில்லை என்றார் பத்மினி.. அதிகாரிகள் அதை காதில் வாங்கவே இல்லை. சர்டிபிகேட் இல்லாமல் கெய்ரோவுக்குள் நுழைய
    முடியாது என்று கூறி அவரை அழைத்துச் சென்று 'க்வாரண்டைன்'- உள்ளே தங்க வைத்து விட்டனர்.
    நம் நாட்டில் நடக்கும் உலகத்திரைப்பட விழாவுக்கு இந்தியாவிலிருந்து வந்துள்ள
    கலைஞர்கள், கலாச்சார தூதுவர்கள்
    என்று சொல்லி அரசிடம் விசேஷ
    அனுமதி பெற முடியும்.அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை.
    சிவாஜிக்கு அதிர்ச்சி ..பப்பிம்மாவை எப்படியும் நிகழ்ச்சிக்கு அழைத்து வரவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.
    அடுத்த ஒரு மணி நேரத்தில் பப்பியம்மா
    ஆஜர் !!. என்ன மேஜிக் நடந்தது ?
    ஆயர்பாடி கோபியர் யூனிபாமில் விமான
    நிலையம் போன ராகினி , டாய்லட் அறைக்கு பத்மினியை வரச்சொல்லி இருவரும் அங்கே உடையை மாற்றி, அக்காவை நிகழ்ச்சிக்கு அனுப்பிவிட்டு அவர் உள்ளே போய்விட்டார் . இரண்டு பேர் முகமும் ஒன்று போல் இருந்ததால் அதிகாரிகளை எளிதாக ஏமாற்ற முடிந்தது.
    60 அடி நீளம் 15 அடி உயரமுள்ள திரையில்' கிஸ்தி - திரை- வரி - வட்டி'-
    வசனம் 5 நிமிடம்... குளோசப்பில் சிங்கம் சிவாஜி கர்ஜனை !!
    'மிஸ்டர், சிவாஜி கணேசன் ' ....
    மைக்கில் அறிவிப்பு.
    எறும்பு போல் சிறு உருவம் மேடை மீது
    ஊறிச் சென்றது.. சற்று முன் நெருப்பை உமிழும் கண்களுடன், கொடுவாள் மீசையுடன் ,கர்ஜனை செய்தது இவரா !! கரவொலியில், அதிர்ந்த அரங்கம் அடங்க ஐந்து நிமிடம் ஆயிற்று !
    இடி விழுந்தாலும் அசராத நடிக மன்னன்
    இரண்டு நொடி, தன் வசமிழந்தார்..
    'சிவாஜி ! சிவாஜி !!'- என்று பத்மினி உலுக்கி சுயநினைவுக்கு வரவழைத்தார்.
    என்னே தருணம் ! எத்தனை பேருக்கு
    இது வாய்க்கும் !! தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த அந்தத் தவப் புதல்வன் வாழ்க்கையில் இப்படி எத்தனை தருணங்களோ !!!

  4. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellbzy, Russellmai liked this post
  5. #1623
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    சிவாஜி பாட்டு-7

    அந்த
    எட்டையபுரத்தான் போல்
    முறுக்கி விட்ட
    மீசையில்லை.

    அந்தப்
    பாட்டுக் கோயிலின் மேல்
    வெண் கோபுரமாய் எழுந்த
    முண்டாசில்லை.

    அவனைப் போல்
    எப்போதும்
    கண்களில் கோபமில்லை.

    கனல் பறக்க
    அவன் எழுதிய காலத்தில்
    இவரில்லை.

    அவனைப் போல
    கவியெழுதும் தொழில்
    இவருக்கில்லை.

    "சிந்து நதியின் மிசை"
    பாடுவதாய்
    சினிமாத் திரை காட்டிய
    அந்த ஒரு பாடலன்றி,
    வேறெந்தப் படத்திலும்
    இவரை,
    அவனாகப் பார்த்ததில்லை.

    ஆனாலும்...

    தேனிலுஞ் சிறந்த
    தமிழை வளர்த்ததிலும்,

    தேசத்தின் செழுமை காண
    நெஞ்சு துடித்ததிலும்,

    பசியை, வறுமையை
    கலை கொண்டு
    ஜெயித்ததிலும்..

    மாசற்ற திறமைகளால்
    மக்கள் மனம்
    நிறைத்ததிலும்..

    அந்த
    மகாகவி போலத்தானே
    எங்கள்
    மதிப்புக்குரிய
    அய்யாவும்..!?



  6. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellbzy, Russellmai, eehaiupehazij liked this post
  7. #1624
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    From the Facebook page at : இராஜபாளையம் வட்டார இனிய திலகம் விக்ரம் பிரபு தலைமை ரசிகர் மன்றம்.முகவூர்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  9. #1625
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நண்பர் கலை,

    நண்பர் ஆர்கேஎஸ் சொல்வது போல் நீங்கள் சாதுர்யமான எழுத்தாளர் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதாலும் [சரிதானே?] கழக அரசியலுக்கே உரிய சில தனிக்குணங்கள் நிரம்பப் பெற்றிருக்கிறீர்கள் என்பதனாலும் இதை செய்கிறீர்கள். . என்னவென்றால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியை எதிர் தரப்பு முன் வைக்கும்போது சம்மந்தமேயில்லாமல் திருப்பி வேறு ஒரு கேள்வி கேட்பதுதான் அது. இதனால் என்ன ஆகும் என்றால் பதிலாக வந்த கேள்வி முன்னிலை பெற்று முதலில் கேட்டது விவாதத்திலிருந்து விலகி போகும். நேற்று அதைதான் செய்திருக்கிறீர்கள்

    தர்ம ராஜா பற்றி நீங்கள் எழுதியது மாலை 5.50 க்கு. என் பதிவு வந்தது 7.44க்கு. எப்படி அவ்வளவு நீண்ட பதிவு உடனே எழுத முடியும்? மேலும் உங்களைப் போல் அலுவலகத்தில் வேலை நேரத்திலேயே இது போன்ற நீண்ட பதிவு எழுத எங்களுக்கெல்லாம் வாய்ப்பில்லை நண்பரே. அது முதல் நாள் தொடங்கி மறுநாள் எழுதி முடித்தது

    என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகள் இருக்கட்டும். முதலில் நான் கேட்ட சில் கேள்விகளுக்கு உங்களிடமிருந்து பதிலே இல்லையே.

    குளோப் தியேட்டரை விட சித்ரா அரங்கம் சிறியது. எப்படி வசூல் கூடுதல் வரும் என்ற கேள்விக்கு பதிலில்லை!

    ஸ்ரீதர் ஏன் சிவந்த மண் நஷ்டம் என்பதை 1975 வரை சொல்லாமல் இருந்தார் என்பதற்கு பதிலில்லை!

    ஸ்ரீதர் சிவந்த மண் படம் தனக்கு லாபத்தை கொடுத்தது என்று சொல்லியிருப்பதை குறிப்பிட்டேன். அதற்கு பதிலில்லை.!

    சந்திரமௌலி புத்தகத்தில் நீங்கள் குறிப்பிட்டது போல் சிவந்த மண் நஷ்டம் என்றோ வசூல் குறைவு என்றோ எதுவும் இல்லை என்று சொன்னதற்கு பதிலில்லை.

    ஜேயார் மூவீஸ் நிறுவனத்தினரால் பணம் புரட்ட முடியாதது பற்றிய கேள்விக்கு பதிலில்லை.

    ஸ்ரீதரின் பிரச்னைக்கு நடிகர் திலகமோ அல்லது அவர் படங்களோ காரணமில்லை என்பதை நிறுவியிருந்தோம். அதற்கும் பதிலில்லை.

    முதலில் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லுங்கள்.

    உங்களுக்கு இருக்கும் ராஜ ராஜ சோழன் mania (அல்லது phobia-வா) உண்மையிலே மலைக்க வைக்கிறது. எந்த தஞ்சாவூர்காரருக்கும் RRC மேல் இவ்வளவு affinityயை நான் பார்த்ததில்லை.

    உங்கள் கேள்வியிலே ஒரு முரண் இருக்கிறதே? திருவருட்செல்வர் படத்திற்கு சாந்தியில் இருக்கும் கல்வெட்டில் H போடவில்லை. ஆகவே 100 நாட்கள் கிடையாது என்று சொல்கிறீர்களே, சில மாதங்களுக்கு முன்னால் ராஜ ராஜ சோழன் படத்திற்கு சாந்தியில் கல்வெட்டில் H போட்டிருக்கிறது. அதை ஒப்புக் கொள்ள முடியாது என்று சொன்னீர்களே. போட்டாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன் போடாவிட்டாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன். என்று சொன்னால்--- சூப்பர் சார் உங்கள் வாதம்.

    எப்படியோ சாந்தி தியேட்டருக்கு அடிக்கடி வந்து போகிறீர்கள் என்பது தெரிகிறது. நாங்கள் கொண்டாடும் இடத்திற்கு நீங்களும் அடிக்கடி புனிதப் பயணம் மேற்கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியே!

    இறுதியாக உங்களிடம் ஒரே ஒரு கேள்வி! ராஜ ராஜ சோழன் சென்னையில் ராம் தியேட்டரில் வெளியாகி 28 நாட்கள்தான் ஓடியது என்று ஒரு அண்ட ---- அவிழ்த்து விட்டீர்களே! அந்தப் படம் ராம் தியேட்டரிலேயே வெளியாகவில்லை என்று பத்திரிக்கை விளம்பரத்துடன் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது. இன்று வரை ஒரு மரியாதைக்கு கூட தவறான தகவலை சொல்லி விட்டேன் என்று ஒப்புக் கொள்ள மனமில்லாத நீங்கள் அடுத்தவர்களைப் பற்றி பேசுவது எந்த வகையை சார்ந்தது என்பதை உங்கள மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

    அன்புடன்
    Last edited by Murali Srinivas; 12th September 2015 at 06:27 PM.

  10. Thanks adiram thanked for this post
    Likes Russellbzy, Russellbpw, adiram liked this post
  11. #1626
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Dear Sailesh Sir,

    Don't get offended. That (சரடு) was not meant at you. Sorry if it sounded like that.

    Regards

  12. Thanks ainefal thanked for this post
    Likes Russellbpw liked this post
  13. #1627
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

    என்னை சாதுர்யமாக எழுதுவதாக சொல்வதன் மூலம் நான் ஏதோ பொய் சொல்கிறேன் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் உங்கள் சாதுர்யமே தனிதான் போங்கள்.

    நான் தஞ்சாவூர்காரனல்ல. சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

    முதலில் நேற்று நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். பிறகு நான் பதில் சொல்கிறேன்.

    சரி, அதுபோகட்டும். உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக மணியனுடன் சித்ரா கிருஷ்ணசாமி சென்றதை ‘சக்தி கிருஷ்ணசாமி’ என்று மாற்றி எழுதியதை (மக்கள் திலகம் மேல் உள்ள வெறுப்பு கண்களை மறைக்கிறது. நேற்று கூட ஸ்ரீதரை எம்ஜிஆர் பாடாய் படுத்தினார் என்று போட்டு தாக்கியிருக்கிறீர்கள். நான் அதில் உள்ள வார்த்தையை கொடுத்திருக்கிறேன். ) நான் அம்பலப்படுத்தியதற்காக என் மீது கோபப்பட்டீர்களே. அதற்கு நீங்கள் இதுவரை தவறான தகவலை சொல்லிவிட்டேன் என்று ஒப்புக் கொண்டீர்களா? அதுவும் ஒரு ஆண்டுக்கு மேலாகிறது.

    சரி அதுவும் போகட்டும். நேற்று சிவாஜியின் சாதனை சிகரங்களில் ஆகாச ..... அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கிறேனே? ஆம். அது தவறுதான் என்று ஒப்புக் கொள்ள மனமில்லாத நீங்கள், கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னை எப்படி கேள்வி கேட்க முடிகிறது என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  14. #1628
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    இதனால் நடிகர் திலகத்தின் படங்களின் வசூல் சாதனைகளை பொய் பிரசாரம் செய்து படம் ஓடவில்லை என்று DMK / MGR fans பரப்பினார்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது - including Sivatha mann BO crisis that MGR fans repeatedly highlights.

    Regards.

    Dear tac,

    As I appealed to you earlier, let us not stoop down. While i understand your feelings about NT and his films being unnecessarily bad mouthed, we putting up something like this will only open Pandora's Box and our efforts to glorify our NT and his deeds will take a back seat.

    I always hate to wear the garb of Moderator and I am sorry that I am editing your post. But please co-operate.

    Thanks for the understanding as always

    Regards
    Last edited by Murali Srinivas; 11th September 2015 at 10:17 PM.

  15. Likes Harrietlgy liked this post
  16. #1629
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    The Hindu has published an article on Paava Mannippu in the latest Cinema Plus: http://www.thehindu.com/features/cin...cle7619467.ece

    The author Randor Guy has done a poor job. It seems this article was written in a hurry, not highlighting about performances of any lead actors in the movie, including NT. Still, worth a reading, just for the sake of our NT! Wish he had highlight the massive success of the movie.

    Regards

  17. #1630
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    அன்புள்ள கலை சார்,

    ராஜா 50-வது நாள் விளம்பரத்தை மீண்டும் வெளியிடச்சொல்லி ரவிகிரண் அவர்களிடம் காட்டும் தீவிரத்தை கொஞ்சம் ஸ்ரீதரின் கல்கி கட்டுரை பக்கங்களை பதிவிடுவதிலும் காட்டுங்களேன் சார்.

    ஸாரி, உங்களுக்கும் (என்னைப்போலவே) புகைப்படம், வீடியோ, பத்திரிகை பக்கங்களை இணைக்கும் வித்தை தெரியாவிட்டாலும் மற்ற நண்பர்களின் உதவியை நாடலாமே.

    நண்பர் வேலூர் ராமமூர்த்தி அவர்கள் படகோட்டி படத்தின் ஒரிஜினல் 100-வது நாள் விளம்பரத்தை பதிவிடுவதற்கு முன்பு வரை, ஒரு போலி 100-வது நாள் விளம்பரம்தான் உங்கள் திரியில் உலா வந்தது என்ற ரவிகிரண் அவர்களின் குற்றச்சாட்டை நீங்கள் மறுக்க முடியவில்லைதானே.
    திரு அதிரம் அவர்களே

    நீங்கள் ஏதாவது கருத்தை சொல்லவேண்டும் என்றால் அதனை நேரிடையாக கூற உங்களுக்கு பூரண உரிமை உண்டு.

    என்னை ஏன் இழுக்கிறீர்கள் ? ஒரு பதிவை திரு கலைவேந்தன் அவர்கள் போட்டபோது நான் அதற்க்கு பதில் உரைத்தேன். Matter ends there ! என்னை பொருத்தவரை

    ஒரு கேள்வி ஒரு பதில் அதோடு முற்றுப்புள்ளி அந்த பதிலில் இருந்து இன்னொரு கேள்வி வராதவரை ! அவ்வளவுதான் !

    முற்றுபுள்ளி வைத்த பிறகு கமா எதற்கு போடவேண்டும் சார் ?

    புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன் !

    Rks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •