Page 180 of 401 FirstFirst ... 80130170178179180181182190230280 ... LastLast
Results 1,791 to 1,800 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1791
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Vasudevan Sir,
    This thief is not a usual thief. His style is different and will try always to justify the reason for doing theft.

    But, in this movie particularly, Police is also equally smart and powerful with law points to arrest the thief.

    In this film thief will try all his stunts, sentiments, to escape from being convicted.

    The beauty of the film is police will also equally play mind-games quite tactfully. The viewers themself will appreciate the police and say, it is high time police should catch the thief. Screenplay is excellent with lot of twist and turn.

    All together it is an interesting subject on thief. Olden days film, they have not shown police taking money and leave the thief free..!

    Thief - in Style !

    Rks

  2. Thanks sss, vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1792
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Vasu sir,
    Am using mobile to write now.
    ANYHOW I have to reply for few lies that is still circulating as if they are truth. I have to expose those lies and it is possible only if I write in Tamizh.

    I will write a review of Thirudan Tomorrow.

    RKS

  5. #1793
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    சிவாஜி பாட்டு-8

    "ஆ..ஆஆ"...

    சுசீலாம்மாவின் தேன் குரல்
    செய்யும் ராக ஆலாபனையோடு துவங்கும்
    இந்தப் பாடல்...

    என் சிறு வயது ஆச்சரியம்.

    பாட்டு,இசை, வரிகளின் அர்த்தம் என்று எதுவும் தெரியாது போனாலும், இனிமையால் மட்டுமே
    இதயம் குடியேறிய ஆச்சரியப் பாட்டு.

    விபரமறிந்த வயசில் கேட்ட
    போது, இன்னும் வியப்பு
    கூடிற்று.

    அருமையான இந்தக் காதற்
    பாடலின் வரிகளில் சூசகமாய்
    நுழைந்திருக்கிற காமம்,
    காட்சிப்படுத்தலில் காணாமலே
    போயிருப்பது வியப்பு.

    "மாப்பிள்ளை,பெண்ணுக்கு"
    என கண் சுழற்றி, கலைச்செல்வி பாடிக் காட்ட
    அப்படியே ,அசத்தலான
    அதே பெண் பாவத்தில் நடிகர்
    திலகம் செய்து காட்டுவது
    வியப்பு.

    காலங்களைக் கடந்து இன்று வீசுகிற புதிய காற்றிலும் இந்தப்
    பாடல் இனித்தொலிப்பது
    வியப்பு.

    ஆடிப் பாடித்தான் ஒரு பாடலை
    வெற்றியடையச் செய்ய வேண்டுமென்பதில்லை.
    கதாநாயகியுடன் செய்யும்
    குறும்புகளைக் கூட ஒரு பாடலின் வெற்றிக்குக் காரணியாக்கலாம் என்று நம்
    நடிகர் திலகம் நிரூபித்திருப்பது
    வியப்பு.

    ஒரு குழந்தையின் ஈரமான முத்தம் போல காலகாலமாய்
    இந்தப் பாடல் நினைவில் நிற்பது வியப்பு.



  6. #1794
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    சிவாஜி பாட்டு-9

    "ரசத்தில் உப்பில்லை..
    கணவன் அடித்தான்.
    மனைவி அழுதாள்.
    அவள் கண்ணீரில் இருந்தது..
    ரசத்தில் இல்லாதது".

    -புரிதலற்ற கணவனிடம்
    சிக்கிச் சீரழியும் ஒரு அப்பாவி மனைவியின் கண்ணீர் குறித்த எனது பழைய கவிதை,அது.
    ---------
    இதோ..

    நான் பகிர்ந்துள்ள
    இந்தப் பாடலிலும்
    ஒரு கணவன் உண்டு.

    மனைவி சிந்தும்
    கண்ணீர் உண்டு.

    அந்தக் கவிதை காட்டிய
    பெண்ணின் கண்ணீருக்குப் பின்
    ஒரு புரியாத்தனமிருக்கிறது.

    இந்தப் பாடலின் நாயகி சிந்தும் கண்ணீரில் புரிதலின் உச்சமாய்
    ஒரு தெளிவிருக்கிறது.
    -----------
    நம்பிய உறவுகளால்
    வஞ்சிக்கப்பட்டு,
    வாழ்க்கை தந்த வெறுமைத் தனிமையில் கலங்கி நிற்கும்
    அகவை முதிர்ந்த கணவனும்,மனைவியும் தோன்றுமிந்தப் பாடல்..

    ஒரு நல்ல தம்பதி
    இப்படித்தானிருக்க வேண்டும்
    என்று போதிக்கிறது.
    ----------
    "பேருக்குப் பிள்ளை உண்டு.
    பேசும் பேச்சுக்கு
    சொந்தம் உண்டு.
    என் தேவையை யாரறிவார்?"
    -தள்ளாடி,தளர்ந்து நடந்து
    வந்து,தனக்கென விரிந்த
    மனைவியின் மடி கிடந்து,
    அந்தக் கிழவர் விரக்தி வினா எழுப்ப,
    அதிர்ந்து போகும்அந்தக் கிழவியின் முகத்தில் தோன்றும் சோகக் குறிகள் துடைத்து..

    "உன்னைப் போல்
    தெய்வமொன்றே அறியும்"

    -என்று அவரே பாடி முடிக்கையில், ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அந்தக் கிழவி சிந்தும் கண்ணீரை,நம் இதயப் பாத்திரங்கள் இன்னும்
    சேமித்துக் கொண்டேதான்
    இருக்கின்றன.


  7. #1795
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    சிவாஜி பாட்டு-10

    ஆர்வமாய் தேடித் தேடி...

    ஓடி ஓடி...

    அய்யா நடிகர் திலகத்தின்
    படங்களாய்ப் பார்த்த காலமது.

    (இன்னமும்தான் என்பது
    வேறு விஷயம்.)

    வழக்கமாக, ஒரு படத்துக்கு
    நான்கு இடைவேளைகள் விடும் அந்த டூரிங் திரையரங்கில், பழைய
    படங்களெனில் ஏழெட்டு இடைவேளைகள் விடப்படும்..
    படம் அறுந்து போவதால்.

    அங்கே அதிசயமாக நல்லவிதமாக முழுசாய்ப்
    பார்த்த படம் "தூக்கு தூக்கி".

    பழைய பாடல்களே மூன்று
    நிமிஷத்தில் முடிந்து விடுபவை. மோசமான பிரிண்டுகளாயிருந்தால், அந்த
    ஒரு பாடலிலேயே முந்நூறு
    வெட்டு விழும்.

    இந்தப் பாடல் திரையில் வந்த
    போதும், ஒரு ஓரத்தில் மின்னல் போல் வெட்டத் துவங்கிற்று.

    புள்ளிப் புள்ளியாய் மழை போல,
    நட்சத்திரங்கள் போல பாடல்
    காட்சி முழுதும் படம் அறுந்து
    விடுவதற்கான அபாய அறிவிப்புகள் நிறைய இருந்தாலும், தெய்வாதீனமாக
    அறுந்து போகவில்லை.

    "கண் வழி புகுந்து
    கருத்தினில் கலந்த
    மின்னொளியே ஏன் மௌனம்?"

    அய்யா மருதகாசியின் பாடல்
    வரிகளில் மட்டும் கேள்வி இல்லை.

    இசை மாமேதை ஜி.ராமநாதன் அவர்கள் அமைத்த இந்த மெட்டே ஒரு கேள்வி போல்
    இருப்பதை உணர்ந்தேன்.

    பாடல் பிடித்துப் போயிற்று.

    அந்தப்புர நந்தவனத்தில் அன்பு
    மனைவியைக் கொஞ்சிப்
    பாடும் அழகுப் பேருருவமாய்
    நம் நடிகர் திலகம்.

    நடையிலும், பாடும் பாணியிலும் புன்னகைப்பதிலும், கரும்பு, குறும்பு என மனையாளைக்
    கொஞ்சி விளையாடுவதிலும்,
    அமுதமெனத் தான் எண்ணியிருக்கும் இவள்
    விஷம் என்பதறியாத அந்த
    அப்பழுக்கற்ற முகம் அழகு
    பாவங்கள் காட்டுவதிலும்
    லயிக்காதிருப்ப்வனை அந்தப்
    பாடலின் இரண்டாம் வரியே
    கேலி செய்கிறது..

    "வேறெதிலே உந்தன் கவனம்?
    வேறெதிலே உந்தன் கவனம்?"


  8. #1796
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    சிவாஜி பாட்டு-11

    அன்பு-
    இந்தப் பாடலின்
    ஆதார ராகம்.

    பரிவு-
    பாடலின் மொழி.

    உள்ளம் புகும் பாட்டு
    வெளிக் கொணரும்
    உருக்கம்-
    பாடலின் தாளம்.

    நிமிர்த்தி வைத்த
    துப்பாக்கி போல
    கம்பீரமாயிருந்த கணவன்,
    நேசமிகு மனைவியின்
    நலிவு கண்டு
    நனைத்த துணியாய்த்
    தளர்கிறான்.

    குடும்பம் விளங்க
    வளைய வந்தவள்,
    கை ,கால் விளங்காமல்
    திண்டாடும் நிலை கண்டு
    துயருறுகிறான்.

    கலைந்த கூந்தல்
    காணப் பொறுக்காமல்,
    வாரி, பொட்டிட்டுப்,பூச்சூடி
    பணிவிடை புரிகிறான்.

    கணவனின் முகஞ்சுளியாப்
    பணிவிடைக்குக் கூசிக் குறுகும் நடிப்பில் புன்னகை அரசியின் திறமை ராஜாங்கம்
    விரிகிறது.

    கடமையில் விறைத்த
    மனசுக்குள்ளிருக்கும் கனிவு அத்தனையும் வெளிப்படுத்தும்
    நம் நடிகர் திலகத்தின்
    கண்களுக்கு,
    இயற்றி,இசை தந்து,
    பாடவெல்லாம் தெரிகிறது.

    ஆணென்கிற மமதை கொண்டு
    பெண்ணை இம்சிக்கிறவர்களுக்காக,
    இந்தப் பாட்டு ரகசிய சாட்டை
    வைத்திருக்கிறது.

    அவர்களை..

    இந்தப் பாட்டு, அடிக்கும்.

    அன்பான ஆண்களுக்கும்,
    கனிவு மிகுந்த பெண்களுக்கும் என்றும் இந்தப் பாட்டு...

    பிடிக்கும்.



  9. #1797
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அக்டோபர் 1 ம்தேதிவர முடிந்தால்சந்திக்கிறேன்சார்

  10. #1798
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Delete

  11. #1799
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களே,

    கடைசி பதிவு போட்டுவிட்டு ஒதுங்கி இருந்தேன். வேலை நிமித்தம் அலைச்சல். வியட்நாம் கோபால்,இந்தோனேசிய கோபால் ஆகி விட்டேன்.

    திரியில் மோசமாக நடிகர்திலகத்தை பற்றி அவதூறு பரப்பி ,பொய் சொல்லி திரியும் கலைவேந்தன் ,எஸ்.வீ ஆகியோரின் முகமூடி கிழிக்க பட்டே ஆக வேண்டும் ,கலைவேந்தனை வனவாசம் அனுப்பும் பொன்னான வாய்ப்பு வந்து விட்டது.

    நடிகர்திலகம் திரி பாகம்-9 ,தேதி 9 ஏப்ரல் 2012 இல் பக்கம் 269இல் பதிவு எண் 2688 இல் என் பதிவையும் , அதற்கு பம்மலாரின் திருத்தமாக 10 ஏப்ரல் 2012 பக்கம் 270 பதிவு எண் 2699 இல் வந்த விஷயத்தையும் பாருங்கள்.

    பம்மலார் ,விஷயங்களை புரட்டி பேசும் வழக்கம் கொண்டவரல்ல.

    நான் இதற்கும் மேல் விளக்க அவசியமில்லை.

    நன்றி.

    பம்மலார் அவர்களுக்கு ,என் முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மீண்டும் அக்டோபர் ஒன்றில் நடிகர்திலகம் ஜெயந்தி கொண்டாட்டத்தில் சந்திக்கலாம்.இனி திரியில் சந்திக்கவே வாய்ப்பில்லாத கலை வேந்தனுக்கு எனது பிரியா விடைகளை தெரிவித்து கொள்கிறேன்.
    Last edited by Murali Srinivas; 22nd September 2015 at 02:20 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #1800
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கு

    நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தந்திருக்கும் உங்களுக்கு வணக்கங்கள் !

    வருக...வருக..என்று வரவேற்கிறோம்.

    அக்டோபர் 1 சிவாஜி ஜெயந்தி - அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களின் வழிபாட்டு திருத்தலமான திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் கூறுவது போல "நம்முடைய தென்னாட்டின் மெக்கா" அன்னை இல்லம் மற்றும் சாந்தி வளாகத்தில் சந்திக்க வாய்பிருக்கும் என்று நம்புகிறேன்.

    விநாயக சதுர்த்தி நாளை - நம்முடைய தெய்வத்தின் பெயரே கணேச மூர்த்தி ஆஹா என்ன பொருத்தம் ...! நல்ல விஷயங்கள் தொடங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வது வழக்கம் அல்லது விநாயக பூஜை செய்வது நிலவில் உள்ள ஒன்று.

    திரை துறையை பொருத்தவரை நடிப்பு என்ற ஒரு கலைக்கு முதல் முதல் வித்தாக வந்தவர் வழிகாட்டியாக வந்தவர் நம்முடைய மூலவர் கணேச மூர்த்தி என்பது உலகமே ஒப்புக்கொண்டுள்ள விஷயம். நடிப்பு மட்டும் அல்லாமல் ஒரு வசனத்தை எப்படி ஏற்ற இறக்கத்துடன் பேசுவது, தமிழை வலிமையுடன் எப்படி நாடி நரம்புகளில் முறுக்குற செய்வது என்பது போன்ற பல வித்தைகளை தத்ரூபமாக உணர்த்தியவர் உணர்த்திகொண்டிருப்பவர்...உணர்த்தபோகிறவர் நம்முடை கணேச மூர்த்தி மட்டுமே !

    இந்த விநாயக சதுர்த்தி நன்னாளில் அனைவரும் நம்முடைய விநாயக பெருமான் கணேச மூர்த்தியின் அருள் பெற்று சர்வ சௌகர்யங்களையும் பெற்று பேரு வாழ்வு வாழ நம் தெய்வம் கணேச மூர்த்தியாரை வேண்டுகிறேன் !

    யார் எப்படி பொய் பேசினாலும் ...விழுந்த இடத்தில் இருந்துகொண்டே புரண்டாலும்...பொய் பொய் தானே தவிர மெய் கிடையாது என்பது உலக நடுநிலயாலர்களுக்கு தெரியும்.

    எப்படி நடிகர்திலகத்தை பற்றி ...கழித்து....களித்து........திரித்து ...மறைத்து...மறுத்து ......சரித்து ...விரித்து...மரித்து யார் எழுதினாலும் உண்மையை நாம் உரிய விதத்தில் உரித்து எழுதினால் பொய் என்பது பல்லை இளித்து ...புளித்து ...போய்விடும் !

    Rks

  13. Thanks Gopal.s thanked for this post
    Likes Harrietlgy, Russellbzy, Gopal.s liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •