Page 2 of 401 FirstFirst 12341252102 ... LastLast
Results 11 to 20 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #11
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    அன்புள்ள திரு சிவாஜி செந்தில் சார்! அமர்களமான ஆரம்பம்.. வாழ்த்துகள்...



    ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ கலையின் உன்னதம்

    சில பாடல்கள் மட்டுமே காட்சிகளாக பார்க்க இன்னும் கூடுதல் அழகு பெறும். கே.வி. மகாதேவன் என்ற மேதை இதையமைத்த இந்தப் பாடல், காட்சியாக்கப்பட்ட விதம், அத்தகையதே.

    தமிழின் மிகச் சிறந்த பொழுது போக்கு படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் இடம் பெற்ற பாடல் இது. அநேகமாக இந்தப் பாடலில், இந்தப் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் நாகேஷை தவிர எல்லோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

    பாடல்கள் மட்டுமல்ல, சிறந்த திரைக்கதை. மிகச் சிறந்த நடிப்பு இந்தப் படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியம். படத்தின் கலர் இன்னொரு கூடுதல் அழகு.

    நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள், நடிக்க கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் இந்தப் படத்தை பலமுறை பார்த்தாலே போதும். முக பாவனைகள், வசன உச்சரிப்பு, வசனமில்லாத போது ரீ ஆக்ஷைன் இப்படி பல பரிமாணங்களில் மிரட்டி இருப்பார்கள்.

    பாலையா, சிவாஜி, மனோரமா, நாகேஷ், பத்மினி, தங்கவேலு, டி.ஆர். ராமச்சந்திரன் என்று ஒவ்வொருவரும் தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருப்பார்கள் என்பது சாதரண வாக்கியம்.

    தன் கதாபாத்திரத்தை மட்டுமல்ல, திரைக்கதையை புரிந்து கொண்டு நடிப்பதுதான் சிறந்தது; என்பதையும் இந்தப் படத்தில் நடித்த கலைஞர்கள் நிரூபித்திருப்பார்கள். இந்தப் பாடல் காட்சியே அதற்கு சாட்சி.

    மோகனாம்பாளின் நாட்டியத்தை பார்ப்பதற்கு சிக்கல் சண்முகசுந்தரம் குழுவைச் சேர்ந்தவர்கள், ரகசியமாக ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் என்று எல்லோரும் ஆஜராகி இருப்பார்கள்.
    தன் காதலன் சண்முகசுந்தரம் மறைந்திருந்து பார்க்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட மோகனாம்பாள் மகிழ்ச்சியும் பெருமையும் கலந்த உணர்வுகளோடு தன் பாடலுடன் கூடிய ஆடலை நிகழ்த்துவாள்.

    மோகனாம்பாளின் ஒவ்வொரு அசைவிலும் அவள் உடல் மொழியிலும் தன் காதலன் தனக்காகவே வந்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட பூரிப்பும் கர்வமும் கலந்து இருக்கும். அந்த பாவங்களில் அழகும் நளினமும் கர்வமுடன் கூடிய காதலும் ஆஹா..

    ஜனரஞ்சகமான ஆனால் கிளாசிக்கல் அசைவுகள், அட்டகாசமான ஸ்டைல்.
    பத்மினி நாட்டியத்தின் நுட்பங்களை நன்கு தெரிந்தவர். ஆனாலும் அதை எளிமையாக்கி நாட்டிய நுணுக்கங்கள் தெரியாத எளிய ரசிகர்களையும் ரசிக்க வைத்தவர். இந்தப் பாடலில் அதை மிகச் சிறப்பாக செய்திருப்பார்.

    “எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்..” என்று துவங்குதவற்கு முன்பு, முடியும் ‘ஜதி’ யின் போதே, இயக்குநர் ஏ.பி. நாகராஜன், சண்முகசுந்தரத்தை தனியாக தூணூக்குப் பின் நகர்த்தி ‘க்ளோசப்’பிற்கு தயார் செய்துவிடுவார். மீண்டும் “எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்..” இப்போது சண்முகசுந்தரத்திற்கு க்ளோசப்.



    ‘இந்தப் பெண் என்னை நினைத்துத் தான் பாடுகிறாள். எனக்காகத் தான் ஆடுகிறாள். இந்தப் பேரழகியால் நான் காதலிக்கப் படுகிறேன்’ என்கிற பெருமிதம் பூரித்து வழிய.. சிவாஜி கணேசன் ஒரு உலக நடிகன் என்பதை நிரூபித்திருப்பார். ‘சண்முகா..’ என்று ஜாடையாக தன் பெயர் சொல்லும்போதும்.

    ஒரு பெரிய சபையில் எல்லோருக்காகவும் நிகழ்த்தப்படுகிற தன் கலையை, யாருக்கும் தெரியாமல் அப்படியே தன் காதலனுக்கு சமர்ப்பணமாக்குகிற நுட்பம். அதுதான் இந்தப் பாடலின்அழகு.

    மானாட.. மலராட.. மதியாட.. நதியாட.. என்ற வரியின் தொடர்ச்சியாக “எனை நாடி இதுவேளை துணையாக ஓடி வருவாய்..” என்ற வரியின்போது தன்னை மறந்து சிவாஜி, தன் முன் அமர்ந்திருக்கும் பாலையா தோள் மீது கை வைப்பார்.
    பாலையா அந்த விரல்களை பார்த்தவுடனேயே சிவாஜி கணேசனின் முகத்தை பார்த்தது போன்ற அதிர்ச்சியை வெளிபடுத்துவார்.

    தவில் வாசிப்பவருக்கு நாதஸ்வரம் வாசிப்பவரின் விரல்கள், அவரின் முகத்தை விட அதிக பரிச்சியம் அல்லவா? தவில் வாசிப்பவராக வரும் பாலையா, அதனால்தான் நாதஸ்வரம் வாசிப்பவராக வரும் சிவாஜி யின் விரல்களை பார்த்தவுடன் அப்படி திடுக்கிடுவார்.

    பாலையா வை அறிமுகப் படுத்திய இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன், ‘ஹாலிவுட்டுக்கு வந்துவிடுங்கள்’ என்று பாலையா வை அழைந்தார் என்றால் சும்மாவா?


    நன்றி : https://mathimaran.wordpress.com/201.../thillana-827/

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak, Russellmai, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #12
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மனங்கனிந்த வாழ்த்துகள் சிவாஜி செந்தில் சார்! நீங்கள் தொடங்கும் இந்த பதிப்பு இதற்கு முந்தைய பதிப்புகள் எப்படி புகழ் பெற்றதோ அதே போல் "The Thread Of The Hub" என்று புகழ் பெறும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.

    அனைவரும் எப்போதும் போல் பல அருமையான பதிவுகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இதே நேரத்தில் நடிகர் திலகம் திரியின் Part 15-ஐ துவக்கி அது இன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றதற்கு சந்திரசேகர் சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்!

    இந்த பாகத்தையும் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேராக உருவாக்க அதன் மாண்பும் பெருமையும் பாராட்டப்பட நடிகர் திலகத்தின் புகழ் மேலும் பட்டொளி வீசி பறந்திட அனைவரும் வடம் பிடிக்க வருமாறு அழைக்கிறேன்.

    அன்புடன்

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  6. #13
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரு செந்தில் - மனப்பூர்வமான வாழ்த்துக்கள் - 16வது பாகம் உங்கள் திருக்கரங்களால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் இன்னும் பிரகாசமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை . ஒரு சின்ன வேண்டுகோள் .இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள் வீடியோ பதிவுகளை சற்றே குறைத்துக்கொண்டு நிறைய எழுதினால் அதன் மூலம் இன்னுமொரு முரளியும் , வாசுவும் , ராகவேந்திரா அவர்களும் , கோபாலும் எங்களுக்கு கிடைக்க ஒரு வாய்ப்பு உள்ளதே - செய்வீர்கள் என் நம்புகிறேன் .

    அன்புடன்

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  8. #14
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Dear sivaji senthil sir,
    my heartiest congratulations for starting the 16th part of the glorious thread of nadigar thilagam.
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  10. #15
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    MY HEARTIEST CONGRATULATIONS SIVAJI SENTHIL SIR,

    Wishing you the best and am sure, Thalaivar's soul will shower his blessings for your tremendous contributions.

    RKS

  11. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  12. #16
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like



    சிவாஜிக்கு அமைந்த பாடல்கள் சங்கதி, கமகம், ச,ரி,க,ம,ப,த,நி என்று சுரங்களை சொல்லியும், தா, தை என்று ஜதிகளோடும். ஹை பிச், லோயர் பிச், நார்மல் பிச் என்று எல்லா வகையிலும் பல இசை நுணுக்கங்கள் அமைந்ததாக இருக்கும். அவர் நுணுக்கமாக நடிக்கக் கூடியவர் என்பதால் இசையமைப்பாளர்கள் அதுபோன்ற பாடல்களை உருவாக்கினார்கள். (‘பாட்டும் நானே…’ ‘எங்கே நிம்மதி..’)

    அநேகமாக பாடல் காட்சிகளில் அதிக க்ளோசப்பில் நடித்த நடிகர் சிவாஜியாகத்தான் இருப்பார். சில நேரங்களில் ஒரிஜனலாக பாடிய, டி.எம்.எஸை விட இவர் ரொம்ப சிரமப்பட்டு பாடியது போலவும் மிகைப்படுத்திவிடுவார்.

    மற்றவர்கள் பாடல்களில் கமகம், சங்கதி, ஹை பிச் இந்த வகைகளில் பாடல்கள் அமையாது. பாடல்கள் அப்படி அமைந்தால், நுணுக்கமான பாவங்கள்காட்டி நடிக்க வேண்டிவரும்.துள்ளல் இசையோடு, வேகமான டெம்போக்களில். FLAT NOTES களில்தான் பாடல்கள் அமையும். அதை பாடுவது பாடகர்களுக்கு சுலபம்.
    கைகளை சுழட்டி, சுழட்டி நடிக்கும் பாணியே இதுபோன்ற பாடல்களால்தான் உருவானது

    courtesy:Net

  13. Likes eehaiupehazij liked this post
  14. #17
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Facebook


  15. Thanks eehaiupehazij thanked for this post
  16. #18
    Junior Member Junior Hubber
    Join Date
    Sep 2011
    Posts
    0
    Post Thanks / Like
    பாகம் பதினாறை துவக்கி வைத்திருக்கும் திரு. சிவாஜி செந்தில் அவர்களுக்கு இந்த சிவாஜி தாசனின் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்

    நட்புடன்,
    சிவஜிதாசன்

  17. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  18. #19
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    பாரம்பரியமிக்க நடிகர் திலகம் திரியின் 16-வது சரவெடியை கொழுத்திவிட்டிருக்கும் சிவாஜி செந்தில் அவர்களுக்கு வாழ்த்துகள்
    Last edited by joe; 24th July 2015 at 05:43 PM.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  19. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  20. #20
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajidhasan View Post
    பாகம் பதினாறை துவக்கி வைத்திருக்கும் திரு. சிவாஜி செந்தில் அவர்களுக்கு இந்த சிவாஜி தாசனின் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்

    நட்புடன்,
    சிவஜிதாசன்
    நண்பர் சிவாஜி தாசன் அவர்கள் இனி வரும் திரிப்பக்கங்களில் அதிகமான பதிவுகளை இட்டு நடிகர்திலகத்தின் தாசானுதாசர் என்ற முத்திரையைப் பதித்திட
    வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்
    செந்தில்

Page 2 of 401 FirstFirst 12341252102 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •