Page 201 of 401 FirstFirst ... 101151191199200201202203211251301 ... LastLast
Results 2,001 to 2,010 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #2001
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜாகண்ணு லாரி டிரைவரின் ரயில் பாட்டு



    பச்சைப்பசேல் என்று எங்கும் மரம் செடிகள் நிறைந்த பகுதி.கண்களுக்கு ரம்மியமான காட்சி. கூட்ஸ் ரயில் வண்டி ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது.அதிக பெட்டிகளை கொண்டதாய் நீளமாய் அந்த ரயில் வண்டி வளைந்து செல்லும் அழகு எல்லோரையும் கவரும்.மேலே இந்தப் பிரபஞ்சத்தை நினைக்க வைக்கும் நீல நிற ஆகாயம்.ரயில் வண்டி செல்லும் இருபுறமும் பசுமை நிறைந்த காட்டுப்பகுதி.இப்போது கூரையில்லாத அந்த திறந்த நிலைப்பெட்டிகளில் பயணம் செய்ய விரும்பாத மனமும் உண்டோ இப்பூவுலகில்?ஒரு ஆணும் பெண்ணும்ஆடிக்கொண்டு அந்த இன்பத்தை அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள்.அது மேலும் உற்சாகத்தை கூட்டுகிறதே. இப்போது அவர்கள் பாடத்தொடங்குவார்கள் போல் தெரிகிறது.அவர்கள் பாடும் அந்த பாட்டை சற்று கேட்போமா?
    இப்போது அந்த மங்கைஹம்மிங் செய்கிறாள்.

    ஹாஹாஹாஹாஆகாகாகாகேகேகே
    குரலிலே குயில் போலும்.இவ்வளவு நேரம் அதிசயித்த அந்த இயற்கையையே மறக்கசெய்து விட்டதே.சில நேரங்களில் இயற்கையையும் மீறி ரசிக்க வைக்கும் ஆற்றல் மனிதர்களுக்கும் இருப்பதும் இயற்கைதானோ?

    இப்போது ஒரு உயர்ந்த பாலத்தின் மேல் அந்த ரயில் சென்று கொண்டிருக்கிறது.கீழே அழகான நீர்நிலை.
    மேலே ஆகாயம்,இடையில் பாலத்தில் செல்லும் ரயில்,கீழே ஒரு ஏரி.
    ரசித்த மனம் இப்போது பிரமிப்பில்.இயற்கையும்,
    செயற்கையும் கலந்த கலவையான காட்சி அது.
    காட்டுப்பகுதியை பிளப்பது போல் வந்து கொண்டிருக்கிறதுஅந்த நீள ரயில் வண்டி.
    அவர்களே இந்தக் காட்சியின் பிரதானம்என்பதால் இனி மங்கை, மன்னவன் என்று அழைப்போம்.

    மங்கை தொடங்குகிறாள்:
    வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
    மெல்லத்தொடுகையில்பூவாகி,
    காயாகி,கனியாகி வண்ணம் பெறவோ
    மங்கை முடித்ததும் மன்னவர் தொடர்கிறார்...
    ஹஹாஹாஹாஹாக ஹேஹேகாஹஹாஹாஹாஹா
    அடேங்கப்பா என்ன ஒரு வசீகரமான குரலய்யா.இந்த ஹஹஹாஹாஹாஹஹாவுக்குக் கே இப்படி ஒரு ஈர்ப்பு சக்தி என்றால் பாடலைக் கேட்டால்....

    பக்கம் வரவோ பத்து விரல்களில்
    பந்தல் இடவோ
    வஞ்சிக்கொடியின் மேலாடை மேலாட
    நூலாடைபோலாடஎண்ணம்
    இல்லையோ

    "மேலாடை மேலாட
    நூலாடை போலாட"
    என்று பாடுவதை கேட்கத்தான் எத்தனை இன்பம்.
    மறுபடியும் அந்த ஹம்மிங்.
    ஹஹஹஹஹஹாஹாஹாஹாஹாஹாஹாகஹஹஹஹஹஹாகாகஹா
    'இந்த ஹம்மிங்கில் இன்னும்இனிமை.

    இனிமை மென்மை
    அந்த
    மென்மை பெண்மையின் குரலில்
    வெளிப்படும்போது கூடுதல் இனிமை.
    ஆகாயப் பார்வையில் ரயில் நின்று கொண்டு இருப்பதை பார்ப்பதே அழகு.அது மலைப்பாதையில் ஊர்ந்து செல்வதை பார்ப்பது அழகிலும் அழகு.அப்படித்தான் இந்தக்காட்சிசெல்கிறது.
    இருட்டான ஆகாயத்தில் முழுநிலவு
    இருக்கும் போது பார்ப்பதற்கு எப்படி இருக்குமோ அது போல மலையை குகைபோல பாதையாக்கி.,அந்த குகைக்குள்ளிலிருந்து பார்த்தால் இருட்டு குகை வெளிப்பிரதேச வான் வெளிச்சத்தில் வான் +முழு நிலவுகாட்சியைப் போல் இருக்குமல்லவா?அதே போன்ற இடத்தை நோக்கித்தான் இந்த ரயில் பயணம் இப்போது ஆரம்பிக்கிறது.மன்னவனும்,
    மங்கையும் இணைந்தபடி இருக்க
    அந்தநீள் தொடர் ஊர்தி குகைக்குள்
    செல்ல ஆரம்பிக்கிறது.ஊர்தி குகைக்குள் நுழைய நுழைய பக்கவாட்டு காட்சிகள் சிறிது சிறிதாக மறைந்து கொண்டே வர,கண்ணில் ஏற்படும்" க்ளாக்கோமா"நோய் போல்
    அந்தக்காட்சி கண்கள் காணும் பேரின்ப கவிதை.மன்னவனும்,மங்கையும் குகையை நெருங்கும் சமயம் அவர்களின் மேல் மட்டும் வெளிச்சம் பட்டு அவர்கள் அந்தரத்திலே நிற்பது போல காட்சி அளிக்கும் அந்தக்
    காட்சி க்கு மனம் மயங்கும். விழிகள் விரியும்.இப்படி ஒரு காட்சி கிடைக்கும் என்று யார்தான் யோசித்திருப்பார்கள்?
    அந்த தண்டவாள ஊர்தி வட்டமான குகைப்பாதையில் நுழைந்ததும்
    அந்த வட்டம் சிறிதாகி,மறைந்து இருள் சூழ்ந்து.,பின் சிறிது சிறிதாகபிறை போலஆரம்பித்து அந்த வட்டப்பாதை வெளிச்சம் பெறுவது,
    கண்ணுக்கு கிடைத்த விருந்து.
    மன்னவன் கீழே அமர்ந்திருக்க மங்கை நாணத்துடன்எழுந்து பொய்க்கோபத்துடன் நடக்கிறாள்.

    மன்னவன் பாடுகிறான்:

    நான் புஷ்பாஞ்சலிஒன்று செய்ய
    நீ பொன்னோவியம் என்று மாற

    மன்னவன் இடது புறமாக லேசாக சாய்ந்து வலது கையால்பாடல் வரிகளுக்கு காற்றில் அபிநயம் செய்வது வித்தைதெரிந்தவனின் ஜால வித்தை இது என்பது புரிகிறது.அவருடைய கை அசைவுகள் இவர் சாதாரண மனிதரில்லைஎன்பதை காட்டுகிறது."நான்ன்ன்ன் புஷ்பாஞ்சலி"என்று தொடங்குவது சுகமான ராகம்."நீ பொன்னோவியம் என்று மாற"என்பதை ஓவியம் வரைவது போல் காட்டும் விரல் அசைவுகள்
    அதிக அலட்டல்கள் இல்லாமலும்
    உடல் அசைவுகள் அதிகம் இல்லாமலேயே விரல்களின் அபிநயங்கள் மூலமாகக் கூட சிறந்த ரசிப்பை பார்ப்பவனுக்கு கொடுக்க முடியும் என்று மன்னவன் மூலம் நடிப்பை உணர முடிகிறது.

    நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
    நீ பொன்னோவியம் என்று மாற
    அந்த ரசனைகளின் இந்த ரசிகையது
    தேர்தேர்தேர் என்று ஆட
    இன்பக் கவிதைகளின்வண்ணம் முழுவதையும் பார்பார்பார் என்று பாட

    வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
    மெல்லத் தொடுகையில் பூவாகி,காயாகி,கனியாகி
    வண்ணம் பெறவோ...

    சில பாடல்களை கேட்கும்போது நம்மையறியாமலேயே தாளம் போட வைக்கும். அதற்கு அந்தப்பாடல் உற்சாகமான மெட்டிலும் ,குஷியான இசையிலும் அமைந்திருக்க வேண்டும்.அப்படி ஒரு மெட்டிலும் இசையிலும் அமைந்த பாடல்தான் இது.இப்படி ஒருமெட்டு,இசைக் கலவையில் ,தேன் மதுர குரல்களும் சேர்ந்து கொண்டால் பார்ப்பவர்களுக்கு கொண்டாட்டம்தானே!

    ரயில்
    மலை
    அலுக்காது.பார்த்துக் கொண்டே இருக்கலாம் .இப்போது இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும்போது அந்த இன்பம் இன்னும் மேல்.உயர்ந்த அந்த பாலத்தில் ரயில் செல்லும் அந்தக் காட்சி தமிழ் சினிமாவின் அப்போதைய பிரமாண்டம்.அதிரடி பாட்டுக்கள் சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே இது போன்றரயில்காட்சிகளை படம் பிடித்து வந்த தமிழ்திரையுலகில் ஒரு மென்மையான காதல் பாட்டுக்கு
    இந்த ரயில் பயண காட்சி படம் பிடிக்க பட்டிருப்பது புதுமையும் கூட.
    யானைகள் நின்று கொண்டிருக்க மரம் செடி கொடிகளுக்கு இடையில் ரயில் செல்வது போல் படம் பிடிக்கப்பட்டிருப்பது காட்சிக்கு கூடுதல் சிறப்பு.

    மங்கை பாடுகிறாள்:
    நான் புல்லாங்குழல் என்று ஆக
    நீ கண்ணன் விரல் என்று சேர

    புல்லாங்குழல் இசை கேட்பது ஒரு சுகம் என்றால்,இங்கே புல்லாங்குழல் என்று பாடுவதைக் கேட்பதே அதனினும் சுகம்.
    ரயில் செல்லும் விளைவால் பின்புல காட்சிகளும் மாயையால் நகர, அதனுடன் இருவரின் ஆடலும்,பாடலுமாயும் அந்தக் காட்சி
    இனிமையாக சென்று கொண்டிருக்கிறது.

    நான் புல்லாங்குழல் என்று ஆக
    நீ கண்ணன் விரல் என்று சேர
    என்று அவள் முடிக்க,
    சின்னக்கொடிமலர்கள் கன்னங்கரு விழிகள் பார்பார்பார் என்று துள்ள
    மன்னவனின் காந்தமும் சாந்தமும் இணைந்த குரல் நம்மை மென்மையாக மயக்க,

    தன்னந்தனிமையிது தனிமை இனிமையிது யார்யார்யார் தடை சொல்ல
    என பெண் முடிக்க.,
    முடிப்பது மேலும் தொடராதோ
    என நாம் ஏங்க...
    ஒரு சுற்றுலா சென்று வந்த சந்தோசத்தை அளித்து விட்டது இப்பாடல்.

    பாடல்:
    பெண்:வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
    மெல்லத்தொடுகையில் பூவாகி,காயாகி,கனியாகிவண்ணம் பெறவோ
    ஆண்: பக்கம் வரவோ பத்து விரல்களில் பந்தலிடவோ
    வஞ்சிக்கொடியின் மேலாடை மேலாட
    நூலாடை போலாட எண்ணம் இல்லையோ
    (வெட்கப்படவோ...
    ஆண்:நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
    நீ பொன்னொவியம் போன்று மாற
    பெண்:அந்த ரசனைகளின் இந்த ரசிகையது தேர்தேர்தேர் என்று ஆட
    ஆண்:இன்பக்கவிதைகளின் வண்ணம் முழுவதையும் பார்பார்பார் என்று பாட
    (வெட்கப்படவோ.,
    பெண்:நான் புல்லாங்குழல் என்று ஆக
    நீ கண்ணன் விரல் என்று சேர
    ஆண்:சின்னஞ்சிறு கொடிமலர்கள் கன்னங்கரு விழிகள் பார்பார்பார் என்று துள்ள
    பெண்:தன்னந்தனிமையிது தனிமை இனிமையிது யார்யார்யார் தடை சொல்ல
    (வெட்கப்படவோ...


    Vetka Padavo - Lorry Driver Rajakannu:
    Last edited by senthilvel; 24th September 2015 at 07:34 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2002
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துகள்.

    அன்புடன்

  4. #2003
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மலைக்கோட்டை மாநகரில் நடிகர் திலகத்தின் 87-வது பிறந்த நாள் விழா!

    திருச்சி மாநகரில் திருச்சி தமிழ் சங்கமும் அகில இந்திய சிவாஜி மன்றமும் திருச்சி மாவட்ட சிவாஜி மன்றமும் இணைந்து நடத்தும் நடிகர் திலகத்தின் 87-வது பிறந்த நாள் விழா.

    ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல்

    நடிகர் திலகத்தின் புகைப்பட கண்காட்சி ஆகியவை நடைபெறும்

    நாள் : 11.10.2015 - ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : மாலை 4.00 மணி

    இடம்:

    திருச்சி தமிழ் சங்க வளாகம்

    மேல புலிவார் ரோடு

    திருச்சி


    விழா ஏற்பாடுகளை அகில இந்திய சிகர மன்றத்தின் சிறப்பு அழைப்பாளர் திரு.அண்ணாதுரை அவர்களும் மற்ற மன்ற நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.

    அனைவரும் வருக!

    அன்புடன்

  5. #2004
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellbzy, Russellmai, eehaiupehazij liked this post
  7. #2005
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks eehaiupehazij thanked for this post
  9. #2006
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    24.09.2015 மாலை 5 மணிமுதல் 7 30 வரை என் வாழ்க்கைப் பயணத்தில் மதுரமான நிமிடங்கள்!!

    திரிகளின் இரும்புக்கை எழுத்து மாயாவி திரைப்பாடல்களின் அக்குவேறு ஆணிவேரிஸ்ட் திரித்துவத்தின் வாஸ்து வாசு சாருடன் (அவரது தம்பியுடன்) அவர் வருகையால் குளிர்ந்த கோவை மாநகரில் எழுத்துக்களின் இளம்துருக்கியர் அரிமா செந்தில்வேல் மற்றும் நடிகர்திலகத்தின் பற்றுமிகு மருத்துவர் கனவான் டாக்டர் ரமேஷ் பாபுவுடன் அளவளாவிய இனிய பொன்மாலைப் பொழுது!!

    உள்ளங்களையும் குளிர்வித்து நடிகர் திலகம் புகழ் பாடும் உணர்வுகளையும் ஒளிர்வித்தமைக்கு நன்றிகள் நன்றிகள்....நண்பர் வாசுஜி! Unforgetable moment with ever lingering memories!!

    with regards,

    senthil
    இப்போது இப்படிப் பாடத் தோன்றுகிறது !



    இன்னும் பத்து வருடங்கள் கழித்து இப்படிப் பாடுவோமோ?!

    Last edited by sivajisenthil; 25th September 2015 at 03:19 AM.

  10. Likes Russellbzy, sivaa, KCSHEKAR, Russellmai liked this post
  11. #2007
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    வாசு,



    அற்புதமான பாடல். அருமையான படம். ரா கண்ணா ரா என்ற தெலுங்கு படத்தின் [சோமயாஜலு, கேஆர்விஜயா] ரீமேக். 1980-களில் நடிகர் திலகம் பற்றி அவர் ஏற்கும் பாத்திரங்கள் பற்றி சிலர் விமர்சனங்களை முன் வைத்த காலம். அந்த நேரத்தில் தயாரிக்கப்பட்ட படம். நமது ஹப்பிலேயே 6,7 வருடங்களுக்கு முன்பு ஒரு சிலர் [ஈஸி சேர் விமர்சகர்கள்] அப்படி நடித்திருக்கலாம். இப்படி செய்திருக்கலாம் .சொந்த படமாக கூட தயாரித்திருக்கலாம் என்றெல்லாம் எழுதுவார்கள். 1982-லேயே இப்படி பேரனின் பாசத்திற்காக ஏங்கும் தாத்தா வேடத்தில் நடித்திருக்கிறார் அதுவும் சொந்தப் படம் என்று நாம் எடுத்துச் சொல்லும்போது அதைப் பற்றிய விவரங்களே அவர்கள் அறிந்திருக்கவில்லை.

    குற்றம் சொல்லுவதற்கு ஓடி வருபவர்கள் நல்ல படங்கள் வரும்போது அதற்கு ஆதரவளிப்பதில்லை. வா கண்ணா வா போன்ற படங்கள் வெளியான காலத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் அது பெற வேண்டிய வெற்றியை பெறவில்லை என்ற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு. அதே நேரத்தில் சென்னையில் மூன்று அரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி 20 லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை புரிந்தது.

    வெளியான நேரத்தில் இன்னும் சொல்லப் போனால் ஒரு மாதத்திற்குள்ளாக நடிகர் திலகத்தின் 4 படங்கள் ரிலீஸ் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஜனவரி 26 அன்று ஹிட்லர் உமாநாத் வெளியாகி ஓடிக் கொண்டிருக்க பிப்ரவரி 5-ந் தேதி ஊருக்கு ஒரு பிள்ளை வெளியாக மறுநாள் பிப்ரவரி 6 -ந் தேதி இந்தப் படத்தை அதுவும் சொந்தப் படத்தை ரிலீஸ் செய்ய யாருக்கு மனசு வரும்? இதெல்லாம் போதாதென்று அதே பிப்ரவரி 25-ந் தேதி கருடா சௌக்கியமா வேறு ரிலீஸ். உலகத்திலேயே இது போன்ற வணிக கட்டமைப்பு உள்ள [Producer -Distributor - Exhibitor set up] எந்த மொழிப் படமானாலும் சரி இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள ஆரம்ப நிலை கதாநாயகன் கூட இப்படி ரிலீஸ் செய்வதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நடிகர் திலகம் என்றைக்கு அதையெல்லாம் பார்த்தார்? In spite of all these things அவர் வெற்றிகளை குவித்தவர் அல்லவா?

    இந்தப் படத்தின் முதல் பிரதி ரெடியானவுடன் படம் பார்த்த திரு.வி.சி.சண்முகம் அவர்கள் இயக்குனர் யோகானந்தை ஆரத் தழுவி சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சரித்திரத்தில் இந்த படம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்த படம் எடுத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றாராம்.

    நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பை. அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டியிருந்தன. குறிப்பாக துக்ளக் இதழ் அவரது நடிப்பை பற்றி விவரித்து விட்டு சிவாஜியின் கால் நகத்தின் நடிப்புக்கு கூட யாரும் ஈடாக முடியாது என்று எழுதியிருந்தது. ஆனந்த விகடன் இதழும் வெகுவாக பாராட்டியது. குறிப்பாக நீங்கள் பதிவு செய்திருக்கும் எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுதான் இனிமேல் கிருஷ்ண ஜெயந்தி பாடலாக ஒலிக்கப் போகிறது என்றும் சொல்லியிருந்தார்கள். கவிஞர் வாலி நமது சொந்தப் படத்திற்கு முதன் முறையாக பாடல் எழுதியதும் இந்த வா கண்ணா வா படத்திற்குதான் [என நினைக்கிறேன்].

    இந்த படம் வெளியானபோது அதற்கு முன்பே மதுரையிலிருந்து கிளம்பி விட்ட நான் பத்திரிக்கை விமர்சனங்களை படித்துவிட்டு நான் இருந்த இடத்திலிருந்து 70 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த படத்தை போய் பார்த்தேன். நான் இருந்த ஊருக்கு படம் வந்தபோதும் இரண்டு மூன்று முறை பார்த்தேன். கொஞ்சம் ஆந்திர வாடையை குறைத்திருந்தால் மக்களால் படத்தோடு மேலும் ஒன்றியிருக்க முடியும் என்பது என் எண்ணம். நல்ல பாடல் தந்ததற்கு நன்றி.


    அன்புடன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. Likes Russellbzy, Russellmai, Russellbpw liked this post
  13. #2008
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அந்த நாள் ஞாபகம்

    1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்


    கடந்த பதிவின் இறுதி பகுதி

    1972 அக்டோபர் 1,2 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு பற்றி பார்த்தோம்

    இங்கிருந்து பதிவு தொடர்கிறது

    மதுரையில் ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு நடந்த நாட்களில் நடிகர் திலகம் மைசூர் அருகே நீதி படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் அன்று காலையில் படப்பிடிப்பு நடத்திவிட்டு மதிய உணவு இடைவேளையோடு pack up ஆனது. மைசூரில் படப்பிடிப்புக் குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலில் மிகப் பெரிய கேக் வரவழைக்கப்பட்டு நடிகர் திலகம் கேக் வெட்ட பிறந்த விழாவும் அதை தொடர்ந்து விருந்தும் சிறப்பாக நடைபெற்றது. நீதி தயாரிப்பாளர் பாலாஜி அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார். ஏராளமான தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் திலகத்தை காண வந்திருந்தார்கள் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

    சில பகுதிகளுக்கு முன்பு நீதி படத்திற்கு 15 நாட்கள் கால்ஷீட் என்றும் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 5 வரை ஷூட்டிங் என்பதையும் சொல்லியிருந்தோம். அக்டோபர் 6 வெள்ளியன்று மைசூரிலிருந்து கிளம்பி கோவை வந்து சேர்ந்தார் நடிகர் திலகம். ஏற்கனவே சொல்லியிருந்தபடி அக்டோபர் 7,8 கோவையில் சிகர மன்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்தார். அன்றைக்கு அவர் செல்லுமிடங்களிலெல்லாம் மக்கள் வெள்ளம் போல் கூடுவார். கோவையில் அன்றைய நாட்களில் மிக பிரபலமான ஹோட்டல் குருவில் தங்கியிருந்தார். ஹோட்டல் வாசலில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்ததை புகைப்படமாகவும் செய்தியாகவும் பத்திரிக்கைகள் வெளியிட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது. .

    எப்போதும் போல் இரண்டு நாட்கள் மாநாடு. முதல் நாள் கலைஞர்கள் கலந்துக் கொள்ளும் விழாவாகவும் இரண்டாம் நாள் அரசியல் மாநாடாகவும் நடைபெற்றது. முதல் நாள் பிரமாண்டமான ஊர்வலம் ஆரம்பித்து மாநாட்டு பந்தல் வரை சென்று முடிவடைந்தது. நடிகர் திலகம் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையிலிருந்து ஊர்வலத்தை பார்வையிட்டு கை அசைத்து ரசிகர்களிடம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ரசிகர்களோ சாதரணமாகவே கேட்கவே வேண்டாம். வெற்றி மேல் வெற்றியாக வந்துக் கொண்டிருந்த நேரம் எனும்போது மகிழ்ச்சி துள்ளல் அதிகமாகவே இருந்தது. ஊர்வலம் ஒரு இடத்தை கடக்க சுமார் ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஆனது என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. கடலலை போன்ற அந்த பிரமாண்ட கூட்டத்தை புகைப்படமாக பார்த்து பிரமித்தது இப்போதும் நினைவில் நிற்கிறது. ஊர்வலத்தையும் பின் நடைபெற்ற விழாவையும் ராமாநாயுடு தன் குழுவினரை வைத்து படமாக்கினார்.

    முதன் முதலாக 1970-ம் ஆண்டு அகில இந்திய சிகர மன்றம் சார்பில் சென்னையில் நடைபெற்ற நடிகர் திலகம் பிறந்த நாள் விழா செய்தி தொகுப்பு ஒரு சில மாதங்களுக்கு பின் தமிழகமெங்கும் அப்போது ஓடிக் கொண்டிருந்த எங்கிருந்தோ வந்தாள் படத்தின் இடைவேளையின்போது காண்பிக்கப்பட்டது. 1971-ம் வருடம் ஜூலையில் திருச்சியில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 150-வது படமான சவாலே சமாளி பட விழாவின் செய்தி தொகுப்பு சவாலே சமாளி திரைப்படத்தோடு காண்பிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா செய்தி தொகுப்பு பாபு திரைப்படத்தோடு காண்பிக்கப்பட்டது. ஆனால் 1972-ல் கோவையில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழா வசந்த மாளிகையோடு காண்பிக்கப்பட்டதா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த செய்தி தொகுப்பை நான் பார்த்த நினைவில்லை. ராகவேந்தர் சார் அல்லது வாசு போன்றவர்கள் தெளிவுபடுத்துவார்கள் என நம்புகிறேன்.

    முதல் நாள் கலை விழாவில் அன்றைய முன்னணி நாயக நாயகியர், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். மிக அதிகமான தயாரிப்பாளர்கள் விழாவிற்கு வந்திருந்தது குறிப்பிட்டத்தக்க விஷயம். அன்றைக்கு நடிகர் திலகத்தின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று அனைவரும் காத்துக் கிடந்த நிலை. அன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட் என்னவென்றால் மேடையிலிருந்த இசைக்குழுவினரின் வாத்திய பின்னணியோடு நடிகர் முத்துராமன் அவர்கள் என்னடி ராக்கமா பாடலை பாடியதுதான். மாநாட்டு பந்தலே திமிலோகப்பட்டது என்று சொல்வார்கள்.

    மறுநாள் அரசியல் மாநாடு. ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். அன்றைய அரசியல் நிலைமைக்கேற்ப பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பெருந்தலைவரின் பேச்சை கேட்க லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இறுதியாக நடிகர் திலகம் ஏற்புரை நிகழ்த்தினார். தானும் தனது ரசிகர் படையும் எந்நாளும் காங்கிரஸ் இயக்கத்திற்காக உழைப்போம் என்று சூளுரைத்தார். கொங்கு மண்டலமே குலுங்கிய மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

    அதே நாளில் (அக்டோபர் 8 ஞாயிறு) தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பதை ஏற்படுத்திய பொதுக்கூட்டம் ஒன்று சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றம் ஊரில் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் அன்றைய ஆளும்கட்சியான திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அக்டோபர் 10 செவ்வாயன்று கூட்டப்பட்டு அந்த கூட்டத்தில் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயற்குழுவில் பேச வேண்டியதை பொதுக்கூட்டத்தில் பேசினார் என்ற காரணத்தை சொல்லி திமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எம்ஜிஆர் அவர்கள் இடை நீக்கம் [suspend] செய்யபட்டார். தமிழகமெங்கும் பதட்ட நிலை ஏற்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நடந்தேறின. . .

    (தொடரும்)

    அன்புடன்

  14. Thanks uzzimah, Russellbzy, adiram thanked for this post
  15. #2009
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சில சமயங்களில் சில விஷயங்கள் சொல்ல வேண்டியவர்களுக்கு போய் சேராமல் பார்த்துக்கொள்வதில் சிலர் பாண்டித்யம் பெற்றவர்கள். குறிப்பாக இது பொது வாழ்வில் இதை ஒரு ராஜ தந்திரமாகவே பாராட்டுவதும் நடைபெற்றதுண்டு. 1972ல் நடந்த தமிழகத்தை உலுக்கிய நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா, அதன் கொண்டாட்டங்கள், நடிகர் திலகத்திற்கு உருவான மிகப் பெரிய செல்வாக்கு, அவர் பின்னால் தமிழகமே திரண்டு நின்ற அற்புதம், அப்போதைய ஆளும் கட்சிக்கெதிரான மக்கள் மனநிலையை ஒருமுகப் படுத்தி ஸ்தாபன காங்கிரஸுக்கு ஆதரவாக நடிகர் திலகம் மாற்றி வைத்திருந்த சூழ்நிலை, இவையெல்லாம் மக்களுக்கு வாய்மொழியாக தமிழகம் முழுதும் பரவலாக சென்று சேர்ந்து விட்டன. ஆனால் அன்றைக்கு இருந்த ஊடகங்களின் மூலமாக இவை சென்று சேர்ந்து விட்டால் தங்களால் காலத்திற்கும் மீண்டு வர முடியாது என நினைத்தவர்களின் மன வெளிப்பாடே அந்த மாநாட்டினைத் தொடர்ந்த நிகழ்வுகள். நடிகர் திலகம் தேவர் மகனில் சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வரும். இன்றைக்கு நான் விதைக்கிறேன். நாளைக்கு வேற ஒருவன் அறுவடை செய்வான். அதற்கப்புறம் இன்னொருவன். அதையெல்லாம் பார்க்க நான் இருக்க மாட்டேன். ஆனால் விதை நான் போட்டது. இந்த வசனம் 1972ம் ஆண்டின் அரசியல் சூழலின் பிரதிபலிப்பு எனலாம். அன்றைக்கு விதையை விதைத்து உழுது பயிராக்கி தன்னுடைய முதலாளியான ஸ்தாபன காங்கிரஸுக்கு அறுவடைக்குத் தயாரான நிலையில் தந்தவர் நடிகர் திலகம். அறுவடை செய்ய வேண்டிய முதலாளி கோட்டை விட்டதால் வேறொருவன் அறுவடை செய்து கொள்ள வழி கிடைத்து விட்டது.

    விரிவாக எழுதினால் அரசியலாகி விடும். இதற்கு மேல் இதைப் பற்றி நான் எழுத விரும்பவில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Likes Russellbpw, Russellmai liked this post
  17. #2010
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் முரளி சார்,

    தாமதமாக வந்தாலும் ஒன்றுக்கு இரண்டாக அருமையான பதிவுகளைத் தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்கள். வா கண்ணா வா தொடர்பான பதிவும், கோவையில் நடந்த சிவாஜி ரசிகர் மன்ற மாநாடு குறித்தும் பதிவுகள் அற்புதம்.

    வா கண்ணா வா படம் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் சரியாக வரவேற்பை பெறாமல் போனதற்கு ஆதங்கத்தை வெளியிட்டிருந்தீர்கள். அதற்கான காரணம் உங்கள் பதிவிலேயே உள்ளது. வேறென்ன?. இடைவெளியில்லாத தொடர் வெளியீடுகள்தான். இந்த விஷயத்தில் மட்டும் ரசிகர்களின் உணர்வை திரு வி.சி.எஸ். அவர்கள் மதிக்கவேயில்லை.

    கோவை மாநாடு பற்றிய விளக்க கட்டுரை அன்றைய நாட்களை கண்முன் நிறுத்தியது. அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்தி நடிகர் திரு. சஞ்சீவ்குமார், ஊர்வலத்தைப்பார்த்து மலைத்துப்போய், "சிவாஜி மீது ரசிகர்கள் இவ்வளவு உயிராக இருப்பது ஆச்சரியப் படுத்துகிறது" என்று வியந்து பாராட்டினார். மாநாடு படமாக்கம் வசந்த மாளிகையோடு காண்பிக்கப்பட்டதாக நினைவு (படம் கிட்டத்தட்ட 50 நாட்கள் கடந்தபின்பு). ஆனால் அந்த மாநாட்டின் ஸ்டில்கள் நீதி படத்தின் பயாஸ்கோப் (ஓடுதுபார் நல்ல படம் ஓட்டுவது சின்னப்பொண்ணு) பாடலின் வரிகளின்போது காட்டப்படும்.

    அப்போது 1970-ல் தொடங்கி, தொடர்ந்து ஐந்தாறு பிரம்மாண்ட மாநாடுகள் சிவாஜி ரசிகர்மன்றத்தால் நடத்தப்பட்டன. அனைத்தும் கலரில் படமாக்கவும் பட்டன. ஆனால் அவை தலைமை மன்றத்தால் பாதுகாக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. இருந்தால் அவற்றை டிவிடி வடிவில் வெளியிட்டு நடிகர்திலகத்துக்கு மேலும் புகழ் சேர்க்கலாமே.

  18. Likes Russellbzy, Harrietlgy, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •