Page 202 of 401 FirstFirst ... 102152192200201202203204212252302 ... LastLast
Results 2,011 to 2,020 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #2011
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய திரி நண்பர்களுக்கு

    செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் புதிய தலைமுறை பத்திரிகையில் வெளியான நடிகர் திலகம் மணிமண்டபம் பற்றிய முற்றிலும் தவறான, தகவல் ஆராயாமல், தகவல் அறியும் எண்ணம் சிறிதும் இல்லாமல் வெறும் காழ்புணர்ச்சி கொண்டு 3ஆம் பக்கத்தில் பதிவிட்ட கட்டுரைக்கு, நமது நண்பர்கள் NADIGAR THILAGAM 360* சார்பாக உண்மை தகவலை ஆதாரத்துடன் தெளிவுபடுத்தும் மடல் ஒன்று நேரில் சென்று திரு மாலன் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

    அப்போது தம்முடைய தவறினை உணர்ந்து நமக்கு வருத்தத்தை தெரிவித்த பத்திரிகை நண்பர், அதற்க்கு வருத்தம் தெரிவித்து பதில் பதிவு செய்வதாக கூறியதன் பேரில், நண்பர்கள் விடைபெற்றார்கள்.

    இன்று வெளிவந்துள்ள புதிய தலைமுறை இதழில் பத்திரிகை சார்பில் வருத்தத்தை வெளியிடுவதற்கு பதிலாக பத்திரிகைக்கே உரித்தான கேடித்தனம் கொண்டு விளக்க கடிதம் பிரசூரம் செய்யப்பட்டது.

    ஆதாரம் கொடுத்தும் கூட இந்த பத்திரிகை களவாணிகள் காழ்புணர்ச்சியை விட்டொழிக்காமல் தம்முடைய EGO ஒன்றையே பிரதானமாக கொண்டு இதுபோல ஈன செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் தார்மீக பொறுப்புகூட இல்லாமல் இருப்பது, இன்றைய பத்திரிகை அராஜகத்தை காட்டுகிறது !

    புதிய தலைமுறை பத்திரிகையும் இந்த காழ்புணர்ச்சி கும்பலோடு சேர்ந்துள்ளது என்பதை கோடிட்டு காட்டுகிறது.


  2. Thanks Russellbzy thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2012
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் அதன் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் 21.07.2015 மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் நினைவுநாளன்று நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு அரசே மணிமண்டபம் கட்டவேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற வெற்றி உண்ணாவிரதத்தின் போது அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கலையுலகைச் சார்ந்தவர்கள் ஆற்றிய உரையின் காணொளியைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

    http://www.sivajiganesan.in/home%203.html


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

  5. Likes Russellbzy liked this post
  6. #2013
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2014
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    NT Birth day celebration invitation.


    Attachment 04467
    Attached Images Attached Images

  8. #2015
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே !
    அறுவடைக்கு தயார்நிலையில் நடிகர் திலகம் கொடுத்தார்! உண்மை!
    ஸ்தாபன காங்கிரஸ் முதலாளி பெருந்தலைவர் காமராஜர் கோட்டை விடவில்லை! அவர் அறுவடைக்கு முன்பே மறைந்து விட்டார்!
    கோட்டை விட்டவர்கள் மற்றவர்களே! நம் நடிகர் திலகம் உட்பட என்பதே உண்மையான அரசியல் வரலாறு!
    நன்றி !

  9. Thanks uzzimah, eehaiupehazij thanked for this post
    Likes uzzimah, adiram liked this post
  10. #2016
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அறுவடைக்கு முன்பே மறைந்து விட்டார். சரி..

    ஒரு முதலாளி தனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை என்றால் கூட தனக்கு விசுவாசமான, நம்பிக்கையுள்ள ஒரு மேனேஜரையோ அல்லது தன் குடும்பத்தில் ஒருத்தரையோ தான் திரும்பி வரும் வரையிலோ அல்லது நிரந்தரமாகவோ ஏற்பாடு செய்து விட்டுத்தான் போவான். இது ஒரு சாதாரணமான கடைக்கே பொருந்தக் கூடியது. அதுவும் தனக்கு வயதாகி விட்டது என்றால் நிச்சயமாக அந்த முதலாளி யாரையாவது ஏற்பாடு செய்யாமல் போகமாட்டான். அப்படி இருக்கும் போது, ஸ்தாபன காங்கிரஸ் என்கிற அத்தனை பெரிய ஸ்தாபனத்திற்கு யாரையுமே அடையாளம் காட்டாமல் அம்போவென விட்டு விட்டுப் போனதை எதில் சேர்ப்பது. ஆல் இந்தியா கிங் மேக்கர் லோக்கலில் யாரையுமே சுட்டிக்காட்டாமல் போனது ஏன். தனக்கு பின் தனக்கு வாரிசாக இன்னொரு முதலாளி வருவார் அவர் சொல்வதைக் கேட்டு நடந்து செல்லுங்கள் என்று தானே ஒரு முதலாளி சொல்லுவான். அப்படி எதுவும் நடக்காத போது, அறுவடைக்கு யார் பொறுப்பெடுப்பது என்கிற நிலை ஏற்படாத போது வேறு யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமே...

    விதண்டாவாதம் பேசிக்கொண்டிருந்தால் அதற்கு எல்லையில்லை. தங்களை விட அதிமேதாவி யாருமில்லை என்கிற நினைப்பில் இருப்பவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது. உண்மையை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்களிடம் பேசிப் பிரயோசனமில்லை.

    காங்கிரஸால் நடிகர் திலகம் தன் வாழ்க்கையில் பணம், பொருள், என அனைத்தையும் தியாகம் செய்தது தான் மிச்சம், அது எந்தக் காங்கிரஸாக இருந்தாலும் சரி. அவருடைய அரசியல் வாாழ்க்கையில் ஓரளவிற்கேனும் அவருக்கு மரியாதை கிடைத்தது, இந்திரா காந்தி மற்றும் வி.பி. சிங் இவர்கள் இருவர் காலத்தில் மட்டுமே.

    இது தான் உண்மை. இதை யார் ஏற்றுக் கொண்டாலும் ஏற்க மறுத்தாலும் இது தான் வரலாறு.

    நினைவில் இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.

    பெருந்தலைவர் மறைவுக்கு சில காலம் முன்னால். தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக பா.ரா. இருந்த நேரம். கர்நாக பிரதேஷ் ஸ்தாபன காங்கிரஸின் ஓரங்கமான பெங்களூரு பிரதேஷ் ஸ்தாபன காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவரை அழைக்க அந்த ஊர் நிர்வாகிகள் அவர்களுடைய சார்பாக அதில் ஒரு தமிழரைத் தேர்ந்தெடுத்து சென்னைக்கு அனுப்புகிறார்கள். அவரும் வந்து நடிகர் திலகத்தைக் கேட்கிறார். நடிகர் திலகம் உடனே சொன்னது, நீங்கள் உள்ளூர் நிர்வாகத்திடம் கேட்டு வாருங்கள், அவர்கள் சம்ததித்தால் நான் வருகிறேன், அவர்களை மீறி நான் வர மாட்டேன் என நேர்மையாக கூறி விடுகிறார். அந்த நிர்வாகியும் நேராக பா.ரா. விடம் செல்கிறார். விவரத்தை சொல்லி நடிகர் திலகத்தை பெங்களூர் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல சம்மதம் கேட்கிறார். ஆனால் இந்த பிரகஸ்பதி, மிகவும் அலட்சியமாக சிவாஜியெல்லாம் கூப்பிட்டுப் போக எங்களைக் கேக்கணுமா, அவரை நாங்கள் காங்கிரஸ் காரராகவே மதிக்கிறதில்லையே, அவர் வந்தால் கூட்டிட்டுப் போங்க, அவருக்கும் ஸ்தாபன காங்கிரஸுக்கும் சம்பந்தமில்லை, எனக் கூறி விட்டு அப்படியும் வேண்டுமென்றால் இன்னோர் நிர்வாகியின் பெயரைச் சொல்லி அவரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் என்கிறார். வந்தவரும் சளைக்காமல் அந்த நிர்வாகியிடமும் சென்று கேட்க, அவர் இவரை விட இன்னும் எகத்தாளமாகப் பேசி வந்தவரை அனுப்பி விடுகிறார். வந்தவர் மனம் நொந்து நடிகர் திலகத்திடம், நீங்கள் ஏன் சார் இந்தக் கட்சியில் இருக்கீங்க.. இந்த ஊர்லே இந்தக் கட்சியிலே இனிமே இருக்காதீங்க, இல்லைன்னா நம்ம பெங்களூருக்கு வந்திடுங்க எனக் கூறுகிறார். அவர்கள் சம்மதம் ஏன் கேட்க வேண்டும், நான் அகில இந்திய தலைமையிடம் பேசிக்கொள்கிறேன், நீங்கள் கண்டிப்பாக வந்தே தீர வேண்டும் எனக் கட்டாயமாக அழைத்துச் சென்று பெங்களூரு மாநகரமே குலுங்கும் அளவிற்கு மிகச் சிறப்பான நிகழ்ச்சியை நடத்திக் காட்டுகிறார்.

    நடிகர் திலகத்திற்கு சென்னையில் ஸ்தாபன காங்கிரஸில் ஏற்பட்ட அவமரியாதையைப் பற்றி வெளியூரில் இருந்தவர்களுக்கு எதுவும் தெரியாது. இதனால் பலர் தாங்கள் வதந்தியாகக் கேள்விப்பட்டதை வைத்து மன்றங்களைக் கலைத்ததெல்லாம் முழுக்க முழுக்க அறியாமையின் விளைவே,
    Last edited by RAGHAVENDRA; 26th September 2015 at 09:12 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2017
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே !
    காமராஜர் பொறுப்பை எவரிடமும் ஒப்படைக்க வில்லை சரி! அண்ணாதுரை தனக்கு பின்பு இன்னார் தான் கட்சி தலைமை ஏற்க வேண்டுமென்று சொல்லிவிட்டா மறைந்தார்? திமுக இன்றும் வலுவுடன் இருக்கிறதே? மக்கள் திலகத்தை திமுகவில் அலட்சியபடுத்த வில்லையா? அவர் தனி கட்சி கண்டு
    சாதனை படைக்கவில்லையா? உங்களை யார் மதிக்காத கட்சியில் இருக்க சொன்னது? அரசியலில் குறிப்பாக மக்கள் செல்வாக்கு உள்ளவர்களை எந்த
    கட்சியிலும் வளர விட மாட்டார்கள்! அதை மீறி துரோகிகளை வெற்றி கொள்வது தான் சாமர்த்தியம்! அந்த சாமர்த்தியம் திறமை நடிகர்திலகத்துக்கு
    சுட்டு போட்டாலும் வராது! திரைஉலகில் சிவாஜியின் சாதனைகளை எவரும் பாதி அளவு கூட நெருங்க வில்லை என்று எப்போதும் உரக்க சொல்வேன்!
    அரசியலில் அவரை போல் தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட ஒருவரை இதுவரை தமிழகம் கண்டதில்லை!
    சிவாஜியை போல் மக்கள் செல்வாக்கை வீணடித்த ஒருவரை இனி தமிழகம் காணபோவதில்லை! இதுதான் சத்தியமான உண்மை!
    அவரின் குணத்துக்கு அரசியலுக்கே வந்திருக்க கூடாது! அப்படி இருந்திருந்தால் ராஜ்குமார், நாகேஸ்வரராவ் போல் கௌரவமாக இருந்திருக்கும்!
    நன்றி !

  12. #2018
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஒரு மாநிலக் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் நிகழ்வுகளுக்கும் அகில இந்திய கட்சியின் நிலைப்பாடுகளுக்கும் வித்தியாசம் இல்லையா என்ன. தி.மு.க. வலுவுடன் இருக்கிறதென்றால் அதற்கென்று ஒரு நிர்வாகக்குழு, பொதுக்குழு என ஏகப்பட்ட உள் கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு அவர்கள் இயக்கம் நடைபெறுகிறது. மதிக்காத கட்சியில் இருக்கச் சொன்னது யார் என்று கேட்டால் .. அதற்கு உங்கள் மனசாட்சியே பதில் சொல்லி விடும். பெருந்தலைவர் காமராஜர் என்கிற ஒரு மனிதருக்காகத் தான் நடிகர் திலகம் அந்த இயக்கத்தில் இருந்தார். உங்களை யார் இருக்கச் சொன்னது என்பதெல்லாம் கேட்பதற்கு இனிப்பாக இருக்கும். நடைமுறையில் ஒத்து வராது. அன்றைக்கு நடிகர் திலகம் மட்டும் இல்லையென்றால் பெருந்தலைவரின் இயக்கம் என்ன கதி ஆகியிருக்கும் என்பது உலகளந்த உண்மை. அதைத்தான் நண்பர் எதிர்பார்த்திருக்கிறாரா.

    அண்ணா மறைவுக்குப் பின்னர் என்ன நடந்தது. போட்டி என்கிற சூழ்நிலை வந்த போது அதனை எல்லோரும் கூடிப் பேசி சமரசம் செய்து இன்னார் தான் அடுத்து வரவேண்டும் என்று ஒரு தீர்மானத்தை எடுத்தனர். அதன் மூலம் கலைஞர் அவர்கள் முதல்வராக பதவியேற்றார்.

    மக்கள் செல்வாக்கை நடிகர் திலகம் வீணடிக்கவில்லை. மக்கள் தான் அவருடைய செல்வாக்கை வீணடித்து விட்டார்கள். இதை எந்த உண்மையான சிவாஜி ரசிகனைக் கேட்டாலும் சொல்லுவான். அவர் எதையும் முயற்சிக்கவில்லை. கோட்டை விடுவதற்கு. தனக்கென்று அவர் எதுவும் முயற்சிக்காத போது சூன்யம் வைக்கும் கேள்விக்கே இடமில்லை. ஏதாவது நடிகர் திலகத்தை சொல்லியே தீர வேண்டும், அதன் மூலம் தன்னுடைய அதி மேதாவித்தனத்தை உலகிற்கு பறை சாற்ற வேண்டும் என்கிற ஒரு உள்நோக்கத்தை மட்டுமே வைத்துக் கொண்டு பேசுபவர்களுக்கு வேறு எதுவும் கண்ணில் தெரியாது.
    Last edited by RAGHAVENDRA; 25th September 2015 at 10:42 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellbpw liked this post
  14. #2019
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இளைய தலைமுறை நண்பர்கள் மிகவும் அருமையாக நடிகர் திலகத்தின் பாடல்களைப் பற்றியும் படங்களைப் பற்றியும் காட்சிகளைப் பற்றியும் எழுதும் போது தேவையற்ற இதுபோன்ற விவாதங்கள் இடம் பெறுவதை நான் விரும்பவில்லை. இருந்தாலும் சொல்ல வேண்டிய கருத்தை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் விடுவதும் நியாயமில்லை.

    லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தின் வெட்கப்படவோ பாடலை நண்பர் செந்தில்வேல் அவ்வளவு அழகாக எழுதியுள்ளார். அதைப் போன்ற பதிவுகளைப் பாராட்ட யாரும் துள்ளிக்குதித்து வருவதில்லை. நடிகர் திலகத்தைப் பற்றிக்குறை கூற வேண்டுமென்றால் துள்ளிக்குதித்து ஓடிவந்து விடுகிறார்கள். நடிகர் திலகத்தின் பின்னாளைய படங்களைப் பற்றிய விரிவான அலசல்கள் இடம் பெறுவதையும் அவை மக்களிடம் சென்று சேர்வதை திசை திருப்பும் முயற்சியிலும் இது போன்ற பதிவுகள் வருகின்றனவோ எனக்கூட என் மனதில் தோன்றுகிறது. இது என் மனதில் தோன்றும் ஐயமே தவிர யாரையும் குறை சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கமில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. #2020
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்/பாஸ்கர் சார்,

    உங்கள் இருவருக்குமிடையே நடக்கும் இந்த வாக்குவாதத்தை தொடர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஒரு அசாதாரண அரசியல் சூழலில் எடுக்கப்பட்ட ஒரு முடிவை பற்றி சர்ச்சை செய்யும்போது இங்கே எழுதப்படுபவைகளை வைத்துப் பார்த்தால் இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கிடையே நடக்கும் சண்டையாகவே காட்சியளிக்கிறது. அதை வேதனைக்குரியது.என்று சொல்வதா அல்லது வேறு என்ன வார்த்தை கொண்டு அதை விவரிப்பது என்றே தெரியவில்லை.

    ஒரு விஷயத்தைப் பொறுத்தவரை நிச்சயமாக இரண்டு கருத்து இருக்கும். அது சகஜம். அதை ஏற்றுக் கொண்டு பயணத்தை தொடர்வதுதான் சரி. அந்த கருத்தில் மாறுபாடு இருந்தால் அதை நாகரீகமான முறையில் சுட்டிக் காட்டலாம். அதை விடுத்து என் கருத்துதான் சரி என்று வாதித்தால் தேவையற்ற விவாதங்கள் நீடித்துக் கொண்டே இருக்கும்.

    பாஸ்கர் சார், அன்றைய நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகள் அதனால் ஏற்பட்ட காயங்கள் உங்கள் ஆதங்கம் அனைத்தும் புரிகிறது. ஆனால் அதற்காக நடிகர் திலகத்தின் அரசியல் பற்றி பேசும்போது நீங்கள் பயன்படுத்தும் சில வார்த்தைகள், வாக்கியங்கள் வரம்பை மீறி போகின்றன என்பதை வேதனையோடு சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். நேரில் நண்பர்களுடன் பேசுவது போல் பொது வெளியில் வார்த்தைகளை கொட்டுவது சரியல்லவே. இலட்சக்கணக்கான மக்கள் வாசிக்கும் ஒரு விவாத மேடையில் சில தேவையற்ற வார்த்தைகள் வாக்கியங்கள் பலரின் மனதையும் புண்படுத்தக் கூடியவை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

    ராகவேந்தர் சார்,

    நீங்கள் வயதில் மூத்தவர் மட்டுமல்ல மூத்த ரசிகரும் கூட. உங்களுக்கு நானோ மற்றவர்களோ அட்வைஸ் செய்ய தகுதியில்லாதவர்கள். ஆனால் அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சரி என்றே எனக்கு தெரியவில்லை!

    இன்றைய தினம் மாலையிலும் இரவிலும் பாஸ்கருக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் நீங்கள் எழுதியிருக்கும் பல விஷயங்களோடு நான் மாறுபடுகிறேன். ஆனால் அவற்றை பற்றி நான் பேசி விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். வெளியூரில் இருந்தவர்கள் அனைவரும் அந்த காலக்கட்டத்தில் பள்ளி மாணவர்கள் விஷயம் தெரியாதவர்கள் அறியாமையில் ஊறியவர்கள் அதனால் நடிகர் திலகம் எடுத்த முடிவை எதிர்த்தார்கள் என்று நீங்கள் சொல்வது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அதே போல் பெருந்தலைவரை சமயம் கிடைக்கும்போதெல்லாம் தாழ்த்தி பேசுவது சரியா? ஒரு காமராஜரையும் கக்கனையும் நாம் சரியாக நடத்தாத காரணத்தினால்தான் நமது நாடு இப்படி இருக்கிறது. இப்போது அப்படி ஆட்கள் இல்லையே என்று அங்கலாய்க்கிறோம். என்ன பயன்? போனது போனதுதானே!

    இனி நான் எழுதும் அந்த நாள் ஞாபகம் தொடரில் இன்று பதிவிட்ட பகுதியின் இறுதியில் அன்றைய ஆளும் கட்சியில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையை குறிப்பிட்டேன். அதை சொல்ல காரணமே அடுத்து வரும் பகுதியில் நடிகர் திலகத்தின் சில கலையுலக சாதனைகள் எந்த சூழலில் எப்படிப்பட்ட பின்னணியில் நிகழ்ந்தது என்பதை எடுத்துக் காட்டவே. எனவே அதை பற்றி பேசி தேவையற்ற விவாதங்களுக்கு வழி வகுக்க வேண்டாம்.

    அனைவரும் தயை கூர்ந்து வாக்குவாதங்களை தவிர்த்து நடிகர் திலகத்தின் பல்வேறு சிறப்புகளை பதிவு செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

    அன்புடன்

  16. Thanks uzzimah thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •