Page 210 of 401 FirstFirst ... 110160200208209210211212220260310 ... LastLast
Results 2,091 to 2,100 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #2091
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் பிறந்த நாள் (அக்டோபர் 1ல் கரைகடக்கும்) நினைவலைகள் !

    மனிதனும் தெய்வமாகலாம் ...எப்போது?
    அவன் பிறந்தது முதல் அமரத்துவம் அடையும் வரை சக மனித குலத்திற்கு அவன் ஆற்றும் சமூகப் பணிகள், ஒரு வாழ்வியல் எடுத்துக்காட்டாக விளங்கும் அவனது நடை உடை பாவனை நடவடிக்கைகள், தலை முறைகள் தாண்டி அவன் வாழ்ந்த வாழ்வு இந்த சமுதாயத்துக்கு உரைக்கும் பாடம் ........

    ...........எல்லாவற்றுக்கும் மேலாக வாழும் போதும் அமரராக தொழும் போதும் மக்களின் மனதில் எப்படி ஒரு நிரந்தர அடிச் சுவட்டை அவன் பதித்து, காலங்கள் மாறினும் காட்சிகள் மாறினும் அவன்தான் மனிதன் என்ற அளவில் ஊனோடும் உதிரத்தோடும்...... இதயத்தோடும் மனதின் நினைவலைகளோடும்.... எப்படி இரண்டறக் கலந்து வாழ்ந்து கொண்டேயிருக்கிறான் என்பதையும் பொறுத்தே !!

    இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நம்மை உயிரூட்டம் செய்யும் சூரியன் இயங்கும் வரை கர்ணனாக கட்டபொம்மனாக திருவருட்செல்வராக சிக்கலாராக பாரிஸ்டர் ரஜினிகாந்தாக பிரஸ்டிஜ் பத்மநாபனாக கப்பலோட்டிய தமிழனாக சாக்ரடீஸாக அசோகராக பரதனாக பாசமலராக வசந்தமாளிகை மன்னனாக அம்பிகாபதியாக காளிதாசனாக விக்ரமனாக சௌத்ரியாக ஞான ஒளியாக எங்கமாமாவாக மனிதரில் மாணிக்கமாக ....வாழ்ந்துகொண்டேயிருப்பார்.....
    எனது வாழ்வியல் தமிழ் உச்சரிப்புக்கும் காலம் தவறாமைக்கும் கடமை உணர்வுக்கும் பொதுநல அர்ப்பணிப்புக்கும் முன்மாதிரி ரோல்மாடலான நடிகர்திலகம் என்னும் படிக்காத மேதை !
    !


    தொழுதல்களுடன்
    செந்தில்

    Last edited by sivajisenthil; 26th September 2015 at 09:44 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2092
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Muthayyan sir

    Nadigar Thilagam avargaludaya asaththalaana pala pose ungal kaivannaththil Stills Arunachalathirkku piragu kaangirom.

    Vaazhga ungal thondu...iraivan ungalukku nalla arogyam kodiththu anaivarayum magizha vaikkattum.

    Nandriyudan
    RKS

  4. Thanks Russelldvt thanked for this post
    Likes ifohadroziza liked this post
  5. #2093
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Senthil sir...Super

  6. Thanks eehaiupehazij thanked for this post
  7. #2094
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவஞ்சலி

    சிவாஜி / ஜெமினி கணேசன்களின் இணைவின் முன்னோட்ட நினைவலைகள் !

    சம அந்தஸ்தில் மக்களின் வரவேற்பைப் பெற்று புகழ் வெளிச்சத்தில் மின்னி ஒளிர்ந்த இரு நடிப்புச் செம்மல்கள் நடிகர்திலகமும் காதல் மன்னரும்!
    அகில உலக அளவிலும் ஒரு நல்ல புரிதலுடன் கதைக் களத்தின் வெற்றிகரமான நடிப்பு உருவகத்தை மட்டுமே மனதில் இருத்தி எந்த வித ஈகோவுக்கும் இடம் தராது பதினைந்து படங்கள் இணைந்து இரு கதாநாயகர்கள் கலக்கியது பெருமையுடன் நினைவுகூரத் தக்க சாதனையே !!
    வீரபாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டியதமிழன், பாசமலர், பாவமன்னிப்பு,பதிபக்தி, பந்தபாசம், நாம் பிறந்த மண், சரசுவதி சபதம், திருவருட் செல்வர், கந்தன் கருணை போன்ற படங்களில் நடிகர்திலகத்துடன் கதை முக்கியத்துவம் கருத்தில் கொண்டு அளவாக அடக்கி வாசித்திருப்பார் காதல் மன்னர் !
    சாவித்திரியை தனது பாசமலர் தங்கையாகவும் ஜெமினியை மாப்பிள்ளை என்றுமே நிஜ வாழ்விலும் மதித்தவர் நடிகர்திலகம்! குலமகள் ராதை படத்தில்உலகம் இதிலே அடங்குது என்னும் பாடல் காட்சியில் சினிமாக்காரங்க படத்தைப் போட்டா பத்திரிகைகள் கடைகளில் விரைவில் தீர்ந்துவிடும் என்ற கருத்துப்பட வரும் காட்சியில் நடிகர்திலகம் தன்னை முன்னிலைப் படுத்தாது ஜெமினி சாவித்திரி படங்களைக் காட்டி தனது கர்ணன் காலத்துத் தொடர்ச்சியான நன்றியறிதலையும் (கட்டபொம்மனில் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்கள் நடிக்க இயலாத இக்கட்டான சூழலில் நடிகர்திலகத்தின் பாசமலர் வழி வேண்டுதலை ஏற்று எந்த ஈகோவுமின்றி உடனே வந்து நடித்துக் கொடுத்து படத்திற்கே இனிமையும் பெருமையும் சேர்த்தவர் ஜென்டில்மேன் ஜெமினி) மரியாதையையும் வெளிப்படுத்தி அவர்களைப் பெருமைப்படுத்தியிருப்பார் !!
    பெண்ணின் பெருமை, பார்த்தால் பசி தீரும், உனக்காக நான் திரைப்படங்களில் இன்னும் ஒருபடி மேலே போய் ஜெமினிகணேசனின் பாத்திரப்படைப்பை கதையின் நாயகனாக முன்னிலைப் படுத்தும் வண்ணம் தனது விட்டுகொடுக்கும் மனப்பாங்கை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர்திலகம் !!




    Last edited by sivajisenthil; 26th September 2015 at 10:49 PM.

  8. #2095
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    முத்தையன் அம்மு சார்,

    'புதிய பறவை' ஸ்டில்கள் அருமை. இப்போதுதான் பார்ப்பது போல பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறீர்கள். நான் இரண்டு நாட்களாய் ஊரில் இல்லை. அதுதான் பின்னூட்டம் இட லேட்.

    அடுத்து என் உயிரான ஆண்டனி, அருண் இருவரையும் உயிரோட்டமாக உலவ விட்டு என் உறக்கத்தைக் கெட வைக்கப் போவதற்கு முன்னமேயே வாழ்த்துக்களும், நன்றிகளும்.

    அந்தக் காவியம் உங்களுக்கு மட்டுமா பிடித்தது? உலகில் உள்ளோர் அத்தனை பேருக்கும் அந்த 'ஒளி' பிடிக்கும். என் ஒருவனுக்கு பைத்தியமே பிடிக்கும். வெறி பிடிக்கும். பசி, தூக்கம் எதுவும் இருக்காது. என் ஆண்டனி, அருண் இவர்கள் போதும். இவர்களே என் சொந்தங்கள். இவர்களே என் தெய்வங்கள். என்னைப் பொறுத்த வரையில் ஆண்டனி, அருண், மாதா, பிதா, குரு, தெய்வம். இப்படித்தான் என்னால் வரிசைப்படுத்த முடியும். என் உடலை பல கூறாக்கினாலும் ஒவ்வொரு கூறும் ஆண்டனி, அருண் என்றே துடிக்கும்...ஒலிக்கும்...கூப்பாடு போடும். அன்புக்கும் அடிதடிக்கும் ஆண்டனி...அறிவுக்கு அருண். இரண்டையுமே என் தெய்வம் ஏற்று ஒருவனின் இருநிலையை அத்தனை பேர் மனதிலும் அற்புதமாக இருத்தியது. இறக்கியது.

    இப்போதே இதயத் துடிப்பு எகிறுகிறது. காத்திருக்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2096
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் அவர்களுடைய பிறந்தநாளில் வெளிவர இருக்கும் புலி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

    அக்டோபர் 2அம் தேதி மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் வெளிவரும் நமது நடிக பேரரசர் அவர்களின் உத்தமன் திரைப்படம் மிகச்சிறந்த வெற்றியும் வசூலும் பெற்றிட நம் திரி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

    மதுரை சிவா மூவீஸ் நிறுவனத்திற்கு எமது வாழ்த்துக்கள்.

    மதுரை ஜல்லிக்கட்டு காளை திரு சுந்தர்ராஜன் அவர்களின் விளம்பரங்கள் கண்ணை பறிக்கும் வண்ணங்களில் உள்ளது கூடுதல் பலம் !

    வளர்க ஜல்லிக்கட்டு காளை சுந்தர்ராஜன் அவர்கள் தொண்டு !

  10. Likes Russellbzy, Russellmai, RAGHAVENDRA liked this post
  11. #2097
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கிசு கிசு

    நிலக்கரி நகர வைரம் .....தென்னிந்தியாவின் மன்செஸ்டர் சென்றாராமே ?

  12. Likes Russellmai liked this post
  13. #2098
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    உங்கள் நிலைப்பாட்டை தவறு என்றோ, குற்றம் என்றோ சொல்லவில்லை. உங்கள் முடிவு முழுக்க முழுக்க உங்கள் விருப்பம். அதே சமயம், நடிகர்திலகத்தின் அரசியல் முடிவுகளை பற்றி தங்கள் எண்ணங்களை தெரிவிப்பவர்களை நடிகர்திலகத்துக்கு எதிரிகள் போலவும், அவரை குறை சொல்ல சமயம் கிடைக்காதா என்று அலைபவர்களைப் போலவும் சித்தரிக்காதீர்கள் என்பதுதான் என் வேண்டுகோள்.
    இதுபோன்ற விஷயங்களை நாம் விவாதிப்பது எப்படி இருக்கிறது தெரியுமா ?

    நடுரோட்டில் கண் மூடி சென்றால்...லாரியில் அடிபட்டு இறப்பது சிறப்பா அல்லது பஸ்சில் அடிபட்டு இறப்பது சிறப்பா ? என்பது போல உள்ளது !

    நடிகர் திலகம் அவர்களுக்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்றுமே இருந்ததாக நாம் கருதவில்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு பண்ணின நடிகர் திலகத்திற்கு அதற்க்கு தகுந்தாற்போல நடந்திருப்பார் என்பதே எனது கருத்து.

    அவர் கட்சி தொடங்கியது, திரு mgr அவர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே என்பதுதான் உண்மை. அவர் மீது அந்தளவிற்கு அன்பும் மரியாதையும் பாசமும் வைத்திருந்திருக்கிறார் நடிகர் திலகம்.

    ப்ரூக்ளின் ஆஸ்பத்திரியில் திரு mgr இருந்தபோது, பிரசாரத்திற்கு இப்போதைய தமிழக முதல்வரா போனார் ? இல்லையே ! போக முடியாது என்றல்லா இருந்தார் ? தமிழகம் முழுதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டது நடிகர் திலகம் அவர்கள் மட்டும்தானே !

    நடிகர் திலகம் அவர்களுக்கு பதவி மேல் ஆசை இருந்தால் இதை ஒருக்காலும் செய்திருக்க மாட்டார் ! மேலும் திருமதி ஜானகி அவர்களுடன் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும் ? சந்தர்ப்பவாத அரசியல் செய்திருந்தால் சுலபமாக 35 இடங்களை நடிகர் திலகம் மிநிமும் வென்றிருப்பார் ! அதுகூட நடிகர் திலகம் செய்யவில்லை !

    அவரது முடிவு...அவரது எண்ணங்கள்..பல காரணங்கள் மனதளவில் அவருக்கு இருந்திருக்க கூடும்....அவரை சும்மா விட்டுவிடுங்கள் ப்ளீஸ்...!
    அவர் அரசியல் பொதுமக்களுக்காக மட்டும்தான்...அவருக்காக அவர் எண்ணவே இல்லை !

    அவருடைய எண்ணத்திற்கு மதிப்புகொடுப்பதே நாம் அவருக்கு செய்யும் மரியாதை !

  14. #2099
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    முகநூலில் இருந்து






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  15. Thanks eehaiupehazij, Russellmai thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  16. #2100
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    சிவாஜி பாட்டு-16

    *குழந்தைப் பேறில்லாதவள்
    வருஷக்கணக்கில்
    காத்திருக்கிறாள்..
    மாசமாக".

    * ஞாயிற்றுக்கிழமை
    கடைவீதியாய் வெறிச்சோடிக் கிடக்கின்றன..
    குழந்தை இல்லாத வீடுகள்.

    -இவையெல்லாம், ஒரு குழந்தைக்காக ஏங்கிக் கிடப்போரின் மனநிலையைக்
    கற்பனை செய்து நான் எழுதிய
    கவிதைகள்.

    உலகத்திலேயே மிகக் கொடிய
    சோகம்,குழந்தைப் பேறு இல்லாதவளின் சோகமென்றால்.. உலகத்திலேயே மிக உயர்வான
    சந்தோஷம், தாய்மையடைந்தவளின் சந்தோஷம் எனலாம்.

    போற்றி மதிக்கும் அன்புக்
    கணவனிடம், மனைவி அவனது காதல்மிகு பரிசு
    தன் வயிற்றிலிருப்பதைத்
    தெரிவித்து மகிழ்வதாய் வரும்
    "தியாகி" படப்பாடல் இது.

    "வலது கையில் தாய் படுத்தால் ஆம்பளைப் பிள்ளை.
    மாங்காய் தின்னா,சாம்பல்
    தின்னா பொம்பளைப் பிள்ளை.
    இதில் சந்தேகம் இல்லை"
    -என்று பாடுகையில் குறும்பும்,தகப்பனான பெருமிதமும்
    காட்டும் அந்த எழில் முகம்..

    "அட..சும்மா போங்க
    நீங்க ஒன்னும்
    மருத்துவரில்லை.
    தொட்டதுதான் உங்க சேவை..
    மத்தது இல்லை".

    -என்று மனைவியும் குறும்பாய் மடக்க..
    நாக்கு துருத்தி
    பொய்க் கோபம் காட்டும்
    அந்த திறமை முகம்..

    நடிகர் திலகத்தின் அன்பு முகம்
    கண்டு,தாம் மலர்ந்த முகங்கள்தாம் எத்தனை கோடி?

    "எப்போ..எப்போ?" என்று ஆர்வமாய்க் காத்திருந்து..
    தடைகளை நொறுக்கியெறிந்து
    விட்டு இந்தப் படம் வந்து
    பார்த்த நிமிடம்..

    நம் இதயமும்தானே
    துள்ளலாய்ப் பாடிற்று..?

    "இந்த யோகம்..
    நல்ல யோகம்!"


  17. Thanks eehaiupehazij thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •