Page 212 of 401 FirstFirst ... 112162202210211212213214222262312 ... LastLast
Results 2,111 to 2,120 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #2111
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில் சிவாஜி சமூகநலப் பேரவையைத் துவக்கி, மக்கள்தலைவர் புகழ்பரப்ப புறப்பட்டிருக்கும் தங்களுக்கு நமது சிவாஜிகணேசன்.இன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. அழைப்பிதழ் முகநுாலில் இருந்து....



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellbzy, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2112
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரும்பத் திரும்ப தங்களின் வாதத்தையே நிலைநிறுத்தி நடிகர் திலகத்தைக் குறை கூறுவதைத் தவிர வேறென்றறியேன் பராபரமே என இருப்பவர்களிடம் பேசிப்பயனில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2113
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    தாங்கள் அளித்துள்ள நன்கொடைப் பட்டியலில் உள்ள ரூபாயை பாஸ்கரின் விருப்பத்திற்கேற்ப இன்றைய தேதிக்கு மதிப்பீடு செய்ய உதவும் அட்டவணை -

    Year Exchange rate
    (INR per USD)
    1948 3.30
    1949 3.67
    1950 - 1966 4.76[16]

    1966 7.50[16]

    1975 8.39[16]

    1980 7.86[17]

    1985 12.38[17]

    1990 17.01[17]

    1995 32.427
    2000 43.50[17]

    2005 (Jan) 43.47[17]

    2006 (Jan) 45.19[17]

    2007 (Jan) 39.42[17]

    2008 (October) 48.88
    2009 (October) 46.37
    2010 (22 January) 46.21
    2011 (April) 44.17
    2011 (21 September) 48.24
    2011 (17 November) 55.3950
    2012 (22 June) 57.15[18]

    2013 (15 May) 54.73[19]

    2013 (12 Sep) 62.92[20]

    2014 (15 May) 59.44[21]

    2014 (12 Sep) 60.95[22]

    2015 (15 Apr) 62.30[23]

    2015 (15 May) 64.22
    2015 (19 sep) 65.87
    2015(27 sep) 66.16

    இதன் படி பார்த்தால் 1965ல் டாலரின் மதிப்பு 4.76, இன்றைய தேதியில் 66.16 என்கிற போது 13.90 மடங்கு பெருகியுள்ளது.

    உதாரணத்திற்கு அன்று ரூ 5000 ரூபாய் இன்றைய மதிப்பில் ரூ 69,500.00.

    இந்த மதிப்பீட்டின் அடிப்படை விவரம் விக்கிபீடியா இணைய தளத்தில் உள்ளது.

    https://en.wikipedia.org/wiki/History_of_the_rupee

    இதை வைத்து நாம் கணக்குப் போட்டுக்கொள்ளலாம்.
    Last edited by RAGHAVENDRA; 27th September 2015 at 11:55 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2114
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    01.01.1972 அன்று சென்னை வானொலி நிலையத்தில் 1971ம் ஆண்டிற்கான அதிக அளவில் நேயர் விருப்பக் கடிதம் பெற்ற பாடல்களின் விவரம்..

    வரிசை எண், பாடல், வந்த மொத்த விருப்பக் கடிதங்கள், பாடலைப் பாடியவர், இடம் பெற்ற படம் என்கிற வரிசையில்

    1. இதோ எந்தன் தெய்வம் - 633 - டி.எம்.எஸ் - பாபு
    2. அழகிய தமிழ் மகள் - 595 - டி.எம்.எஸ். பி.சுசீலா - ரிக்ஷாகாரன்
    3. நிலவைப் பார்த்து வானம் சொன்னது - 117 - டி.எம்.எஸ். - சவாலே சமாளி
    4. நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் - 87 - பி.சுசீலா - நூற்றுக்கு நூறு
    5. அங்கே சிரிப்பவர்கள் - 83 - டி.எம்.எஸ். - ரிக்ஷாகாரன்
    6. பொட்டு வைத்த முகமோ - 76 - எஸ்.பி.பாலா, பி.வசந்தா - சுமதி என் சுந்தரி
    7. நீலக்கடலின் ஓரத்தில் - 70 - டி.எம்.எஸ். மற்றும் குழு - அன்னை வேளாங்கண்ணி
    8. நீ இல்லாத இடமே இல்லை - 54 - எம்.எஸ்.விஸ்வநாதன் - முகமது பின் துக்ளக்
    9. இன்று முதல் செல்வமிது - 51 - எஸ்.பி.பாலா, பி.வசந்தா - வீட்டுக்கு ஒரு பிள்ளை
    10. வசந்தத்தில் ஓர் நாள் - 48 - பி.சுசீலா - மூன்று தெய்வங்கள்
    11. கடலோரம் வாங்கிய காத்து - 48 - டி.எம்.எஸ். - ரிக்ஷாகாரன்
    12. குறவர் குலம் காக்கும் - 45 - எம்.ஆர்.விஜயா - கண்காட்சி
    13. முள்ளுக்கு ரோஜா சொந்தம் - 41 - பி.சுசீலா - வெகுளிப்பெண்
    14. நான் போட்ட புள்ளி - 37 - டி.எம்.எஸ். - வீட்டுக்கு ஒரு பிள்ளை
    15. விளக்கேற்றி வைக்கிறேன் - 34 - பி.சுசீலா - சூதாட்டம்

    மொத்த விருப்பக்கடிதங்களின் எண்ணிக்கையான 2016ல் நடிகர் திலகம் திரைப்படப்பாடல்களைக் கேட்டு வந்த கடிதங்களின் எண்ணிக்கை மட்டுமே 874. கிட்டத்தட்ட 43 சதவீதம்.

    இந்த நிகழ்ச்சி ஆண்டு மொத்தம் ஒலிபரப்பப்ட்ட பாடல்களின் விருப்ப அடிப்படையில் பெற்ற கடிதங்கள் பற்றிய தொகுப்பாகும்.

    இது இல்லாது நேயர் தேன்கிண்ணமாக விவித் பாரதியில் வாராவாரம் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில் சிவந்த மண்ணிலிருந்து ஒரு ராஜா ராணியடம், பார்வை யுவராணி கண்ணோவியம், பட்டத்து ராணி, நம் நாடு படத்திலிருந்து நல்ல பேரை வாங்க வேண்டும், நினைத்ததை நடத்தியே, தெய்வ மகன் படத்திலிருந்து கேட்டதும் கொடுப்பவனே என்று இருவருடைய படப்பாடல்களும் மாறி மாறி முதல் இடத்தில் வந்துள்ளன.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2115
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    இந்த வாதம் மிகவும் நன்றாக இருக்கிறது.


    தமிழ்நாட்டில் அரசியல் என்றால் அது சந்தர்ப்பவாத அரசியல்தான். யார் செய்யவில்லை சந்தர்ப்பவாத அரசியல்?. எம்.ஜி.ஆர், அவர்களே 1977-ல் ஜனதாவை எதிர்த்து காங்கிரசுடனும், 1980-ல் காங்கிரசை எதிர்த்து ஜனதாவுடனும், 1984-ல் மீண்டும் காங்கிரசுடனும் கூட்டணி வைக்கவில்லையா?. கருணாநிதியும் 77-ல் ஜனதாவுடனும், 80-ல் காங்கிரசுடனும் பிற்பாடு பல சந்தர்ப்பங்களில் மாறி மாறி கூட்டணி வைக்கவில்லையா?. மக்கள் இவ்விரு கட்சிகளை நிராகரித்து விட்டார்களா?. இன்றைக்கும் தமிழகத்தில் முதலிரண்டு இடங்களை இவைதானே பிடித்து வைத்துள்ளன.
    நீங்கள் உதாரணம் காட்டியவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்தால் நடிகர் திலகம் அவர்களும் செய்ய வேண்டுமா என்ன ?
    செய்தால் என்ன ? என்பது தானே வாதம் ? ....இல்லை இல்லை...விதண்டா வாதம் ?

    நல்ல கதையப்பா உங்கள் கதை !

    உங்கள் பக்கத்துவீடுக்காரன் திருடுவதை தொழிலாக கொண்டுள்ளான்...நீங்களும் அதை செய்வீர்களா ? பக்கத்துவீடுகாரன் திருட்டு தொழிலை செய்கிறான்...தமிழகத்தில் நிறைய பேர் திருட்டு தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்...யார் செய்யவில்லை திருட்டு தொழில் ...? நீங்களும் திருடலாமே...அந்த திருட்டு தொழில் செய்யலாமே சார்..ஏன் அப்படி செய்யவில்லை ?


    மன்னிக்கவும் ..நடிகர் திலகம் அப்படி செய்யமாட்டார் !

    நீங்கள் சினிமா வரை அவரை பார்த்து ரசியுங்கள் போதும் அதுவும் முடிந்தால் .....அவர் அரசியல் ...அவர் இஷ்டம்...அதில் நீங்கள் தலையிட ...யாருக்கும் உரிமை இல்லை. இதனால் அவர் படம் பார்க்கமாட்டோம் என்கிறீர்களா ...பரவா இல்லை....நீங்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் அவர் வர முடியாது !

    நீங்கள் நேசிப்பது அவர் கலையை ....அதை மட்டும் செய்யுங்கள் அதுவும் மனம் இருந்தால்...இல்லையா..அதுவும் உங்கள் இஷ்டம்...உங்கள் உரிமையில் யாரும் தலையிடபோவதில்லை.

    Rks

  8. Likes RAGHAVENDRA liked this post
  9. #2116
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by baskar trichi View Post
    அன்பு நண்பர் ரவிகிரன் சார்
    உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்!

    நன்றி !
    இதனை இப்போது பேசி பயன் யாருக்கும் இல்லை நமது ரத்தகொதிப்பு தான் அதிகரிக்கும் என்பதே எனது நிலைப்பாடு...நடிகர் திலகம் அவர்களின் அரசியல் பற்றி பேச்சை தொடங்கினால் ..!

    திரு MGR அவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்ததாக நினைக்க எனக்கு உடன்பாடு இல்லை. அவருடைய அரசியலில் ஒரு PLANNING 1953 முதலே இருந்தது ...ஒரு குறிக்கோள் இருந்தது ..அதாவது OBJECTIVE ..என்றாவது ஒரு நாள் நாமும்.....என்ற ஒரு PLANNING .....ஒரு DECISION ...இருந்தது..!

    நமது நடிகர் திலகம் அவர்களிடம் அப்படி ஒன்றும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. காரணம் 24 மணிநேரத்தில் 20 மணி நேரம் அவர் தமது தொழிலில் மிக கெட்டியாக ..மற்ற எவரை காட்டிலும் PLANNED ஆக...OBJECTIVE ஆக ...SUBJECTIVE ஆக இருந்துள்ளார்....பிறகு எப்படி அரசியலில் அந்த PLANNING OBJECTIVE SUBJECTIVE இருக்க முடியும் ?

    1952 டிசம்பர் முதல் 1987 வரை திரைப்பட தயாரிப்பாளர்கள் அவரை விட்டபாடில்லை...வருடத்திற்கு 8 படங்கள் என்று இருந்தவரை ...அவரது திரைப்படங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தும் லாபம் மற்றும் வியாபாரம் காரணமாக வருடத்தில் 10 படம்.....13 படங்கள் ....இப்படி ஒரு GRAPH உயர்ந்துகொண்டே எப்போதும் இருந்துள்ளது....இதில் எங்கிருந்து அரசியலில் யோசிக்க நேரம் இருக்கும் ?

    இத்துனை BUSY க்கு நடுவே பெற்ற இந்த TOTAL VOTES அதுவே மிக பெரிய இமாலய சாதனை சார் !

    திரு MGR அவர்கள் அரசியல் வேறு...அவர் நிறைய நேரம் செலவுசெய்தார் அதற்காக...IMAGE என்ற ஒன்று கச்சிதமாக மக்கள் முன் நிறுவினார்....!

    அவரை சுற்றி தம்பி, தமக்கை, அண்ணன் இப்படி ஒரே வீட்டில் 30 முதல் 40 பேர் வரை இருந்தார்களா அவர்களுக்கும் சேர்த்து சம்பாதிக்க...அவர்கள் வாழ்கையும் வளப்படுத்த...?

    அப்படி இருந்திருந்தால் திரு MGR அவர்களும் நடிகர் திலகம் போல திரையுலகில் CONCENTRATE செய்திருப்பார் ...!

    அவருக்கும் நடிகர் திலகம் போல நிகழ்வுகள் நடந்திருக்கும்...! முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள் !

    Rks
    Last edited by RavikiranSurya; 28th September 2015 at 12:15 AM.

  10. Likes RAGHAVENDRA, Harrietlgy liked this post
  11. #2117
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நினைவலைகள்

    நடிகர் திலகத்தை நான் முதன் முதலில் சற்று அருகில் பார்த்தது, 1964ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி பாரகன் திரையரங்கில். எதிரில் இருந்த பாலர் அரங்கில் (பின்னாளில் கலைவாணர் அரங்கம்) குழந்தைகளுக்கான படங்கள் திரையிடுவார்கள். சிறியவர்களுக்கு 6 பைசா, பெரியவர்களுக்கு 12 பைசா. அந்த 6 பைசா கிடைப்பதே பெரிய விஷயம். பள்ளி 12 மணிக்கு முடிந்தவுடன் சாப்பிட்டு விட்டு எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து, 6 பைசா டிக்கெட்டில் குழந்தைகளுக்கான படம் பார்ப்போம். அப்போது அடிக்கடி திரையிடக்கூடிய படங்கள், The Amphian Man, Operation Tiger உள்ளிட்ட அட்வென்சர் படங்கள். கூடவே நியூஸ் ரீலாக இந்தியன் நியூஸ் ரிவியூ போடப்படும்.. இதற்காகவே போவோம். பார்த்த படமாக இருந்தாலும் கூட, காரணம் கிரிக்கெட் தொகுப்பு மற்றும் ஸ்கோர் இடம் பெறும். அவ்வாறான கால கட்டத்தில் தான் உங்கள் நண்பன், சிங்க நாதம் கேட்குது படங்களைப் பார்த்தோம்.

    இதே மாதிரி ஒரு நாள் குழந்தைகள் படம் பார்க்க்போனால் அன்றைக்கு படம் ஆரம்பித்து கவுண்டர் மூடி விட்டார்கள். எதிரில் உள்ள பாரகன் தியேட்டருக்கு வந்தோம். நண்பன் ஒருவன் செலவு செய்ய தயாராக இருந்தான். ஆனால் பாரகன் தியேட்டர் மூடியிருந்தது. அதற்கு முன் தான் ஆண்டவன் கட்டளை ஓடிக்கொண்டிருந்ததே, ஏன் தியேட்டரை மூடி விட்டீர்கள் என ஊழியரிடம் கேட்டதற்கு, சிவாஜி புதுப்படம் வரப்போகுது, தியேட்டரில் புதுசா சவுண்டு சிஸ்டம் போடப் போறாங்க என்று கூறினார்.உள்ளே எட்டிப் பார்த்தோம்.

    அங்கே...

    தொடரும்..
    Last edited by RAGHAVENDRA; 28th September 2015 at 12:16 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #2118
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes eehaiupehazij, Russellmai, KCSHEKAR liked this post
  14. #2119
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    [quote=sundarajan;1254797]மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில் சிவாஜி சமூகநலப் பேரவையைத் துவக்கி, மக்கள்தலைவர் புகழ்பரப்ப புறப்பட்டிருக்கும் தங்களுக்கு நமது சிவாஜிகணேசன்.இன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. [/size]/quote]
    சுந்தரராஜன் சார்,
    தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  15. Likes eehaiupehazij liked this post
  16. #2120
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Congratulation Mr KC Sir for spreading the wings outside TN.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •