Page 213 of 401 FirstFirst ... 113163203211212213214215223263313 ... LastLast
Results 2,121 to 2,130 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #2121
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெற்றிக்கு ஒருவனின்தோரண ஒளிப்பதிவு

    பாடல் ஆரம்பித்து 37 விநாடிகள் வரை சூறாவளியைப் போன்ற இசையும் இயற்கை மிரட்டலை சார்ந்த
    ஒளிப்பதிவும் படம் பார்க்கும் எந்த ஒரு நபரையும் இருக்கையில் சற்று அழுத்தியும் நெஞ்சை நிமிர்த்தியும் பார்க்க வைக்கும்.

    ஒரே பிரேமில் பல முகங்ளைக் காட்டும் (MIRROR SHOT)ஆரம்ப ஷாட், அது டைரக்ஷன் SPமுத்துராமன் என்று
    அடையாளம் காட்டவோ?

    நீள செவ்வகத்தை குறுக்காக ஒரு கோடு கிழித்து (இடது கீழ் புறம் ,வலது மேல்புறம்)மேல் பகுதியில் ஆகாயமாகவும் கீழ் பகுதி புல்தரையாகவும் பார்க்கும்படி காமிரா கோணத்தில் அந்த பாடலின் ஆரம்பம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு பாடல் முழுவதும் வெவ்வேறு கோணங்களில் மிரட்டலாக படம் காட்சியாக்கப்பட்டிருக்கும்.



    லாலலா லாலலா லாலலா லாலலா
    லால லால லாலலா லால லால லாலலா

    தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி
    MIRROR SHOT
    ஸ்ரீப்ரியா பாடி ஆட.,நாயகன் என்னும் வார்த்தை வரும்போது சரியாக அந்த பிரேமுக்குள் நுழைவார்.
    தோரணம் ஆடிடும் மேடையில்
    நாயகன் நாயகி
    ௯ஸ்ரீப்ரியா ஆடிக்கொண்டே வர
    நடிகர்திலகம் மெல்ல நடந்து வர
    பின் நெடிய அந்த மரம்,விரிந்து பரந்த ஆகாயம் எல்லாம் அடக்கிய ஒரே பிரேம்.
    SUPER SNAP
    தரையை ஒட்டியோ அல்லது தரையிலிருந்து அதிக உயரம் இல்லாமல் காமிராவை வைத்து படம் பிடித்திருக்கலாம்.GLARE இல்லாமல் பளிச்சென இருப்பதுதான் சிறப்பு.

    மேளமும் ராகமும் நாலுபேர் ராஜ்ஜியம் சேருதே வாழ்விலே ஆனந்தம்
    (தோரணம்

    பக்கம் இருந்து காட்சியை படம் பிடித்த காமிரா அப்படியேபின்னால் சென்று லாங்சாட்டுக்கு மாறி மறுபடியும் பக்கம் வந்து படம் பிடித்து பின் லாங்ஷாட்டுக்கு மாறி மறுபடியும் பக்கம் வந்து படம் பிடித்திருப்பார் ஒளிப்பதிவாளர் பாபு. இந்த பாடலை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து பாடலை சிறப்பாக்க வேண்டும் என்பதில் அவரின் சிரத்தைதெரியும்.


    ஜோடி இது போலிருந்தால் ஆகா என பாராட்டுவார்

    ஓங்கி வளர்ந்த மரங்களை கொண்ட அந்த வனப்பகுதியை காமிரா காட்டுவது அழகு.
    வாழ்க என பண்பாடவா!வாழ்வோம் சுகம் நூறாகவே
    நாம் இன்று இங்கு பண்பாடவே
    வீணையின் நாதமும் பூவிலே வாசமும்போலவே சேர்ந்து நாம் வாழுவோம் வாழுவோம்
    (தோரணம்
    இருவரும் நடந்துவர காமிராவும் நகர்ந்து கொண்டே வரும் அந்த
    கிரேன் ஷாட் சூப்பர்.மலைப் பிரதேச அழகின் செழுமை கண்களுக்கு குளிர்ச்சி.

    ஆராரோ ஆராரிஆரோ ஆராரோ ஆராரிஆரோஆராரிராரி ஆரி ஆரி ஆரி ஆராரி ராரி ஆராரிரோ ஆராரி ஆரோ ஆராரோ
    தாலாட்ட வைக்கும் ஹம்மிங்.
    தாளம் போடவும் வைக்கும்.



    பேரன் கொஞ்ச வேண்டும் என்று அப்பா எந்தன் காதில் சொன்னார்
    நடிகர்திலகத்தின் அழகு மிகுந்த பாவனையை காட்டும் குளோசப் ஷாட்.




    பேத்தி கொஞ்ச வேண்டும் என்று அத்தை எந்தன் காதில் சொன்னார்
    போகட்டுமே ரெண்டும் பெத்துக்கொடு
    ரெண்டுதான்!போதுமே!அளவுடன் வாழ்வதே நாளுமே நல்லதே
    வாழ்விலே வாழ்விலே
    (தோரணம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2122
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆவணப் பொக்கிஷங்களின் பதிவுகள்

    அடுத்த சுற்று விரைவில்...


    .

  4. #2123
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செந்தில்வேல் சிவராஜ் சார்,

    நீங்கள் கேட்டிருந்த 'கருடா சௌக்கியமா' கட்டுரைப் பதிவு. மொத்தம் மூன்று பாகங்கள் எழுதியிருக்கிறேன். முதலாவது பாகம் 11th August 2011 அன்று எழுதினேன். நான் எழுதிய முதல் பட ஆய்வுக் கட்டுரை இதுதான்.

    இரண்டாவது பாகம் 30th August 2011 அன்று எழுதிப் பதித்தேன். மூன்றாவது பாகத்தை 4th December 2011 அன்று பதித்தேன்.

    இப்போது மீள்பதிவாக உங்கள் பார்வைக்கும், நண்பர்கள் பார்வைக்கும், புது உறுப்பினர்கள் பார்வைக்கும்'கருடா சௌக்கியமா'.


    கருடா சௌக்கியமா ஆய்வுக்கட்டுரை . பாகம்-1.

    25-02-1982 அன்று வெளியான நடிக மாமன்னனின் 222-ஆவது படைப்பான ரேவதி கம்பைன்ஸ் 'கருடா சௌக்கியமா' என்ற வண்ண ஓவியமான இக் காவியத்தைப் பற்றி ஆய்வு செய்து ஹப் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

    'பத்தோடு பதினொன்று' என்று ஒதுக்கி விடக் கூடிய படமில்லை இது. இப்படம் ஓர் அற்புதக் காவியம். இயக்குனர் திரு டி. எஸ்.பிரகாஷ்ராவ் அவர்களின் பழுத்த அனுபவமிக்க இயக்கத்தாலும், 'வியட்நாம் வீடு' சுந்தரம் என்ற வளமான வசனகர்த்தாவின் உயிரோட்டமான வசனங்களினாலும், திரு.என்.கே.விஸ்வாதன் அவர்களின் அற்புத ஒளிப்பதிவினாலும், 'மெல்லிசை மாமன்னரி'ன் தேனூறும் இசை அமைப்பினாலும், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று' நடிப்புலகச் சக்கரவர்த்தி',' நடிக மாமேதை',நடிகர் திலகம்' அவர்களின் அற்புதமான, வித்தியாசமான நடிப்பசைவுகளாலும் உருவான உயிரோவியமே' கருடா சௌக்கியமா' என்னும் காவியமாகும்.

    சரி! கதைக்கு வருவோம்.

    அனாதைக்குழந்தை' தீனா' 'மேரி' என்னும் கன்னிகாஸ்திரீயால் வளர்க்கப்படுகிறான். சிறுவயதிலேயே அவள் கணவனால் தீனா விரட்டியடிக்கப்படுகிறான். யாருமில்லாத அனாதையாக தனியாக வளர்ந்து பெரியவனாகிறான். தீனாவைப் பயன்படுத்தி, அவனை வைத்து குற்றங்கள் புரிந்து பணம் சம்பாதிக்கின்றனர் சில கயவர்கள். தீனா அதைப் புரிந்து கொண்டு உஷாராகிறான். அவர்கள் தனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களை அவர்களுக்கே கற்றுக் கொடுக்கிறான்.

    முத்துக்கிருஷ்ணன் எனும் அனாதைச் சிறுவன் தீனாவின் திறமைகளைக் கண்டு வலிய வந்து தீனாவிடம் அட்டை போல் ஒட்டிக் கொள்கிறான். தீனாவுக்கு வலது கையாகிறான்.

    தன் தாய்மாமனால் துன்புறுத்தப்படும் 'லஷ்மி' என்ற பெண்ணை அவனிடமிருந்து காப்பாற்றி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான் தீனா. அவளுடைய தாய்மாமனையும் தன்னுடைய அடியாளாக்கிக் கொள்கிறான்.

    தீனாவுக்கு வயதாகிறது. தீனா இப்போது' தீனதயாளு' என்று மக்களால் போற்றப்படும் ஆபத்பாந்தவர். அநாதை ரட்சகர். ஏழை எளிய மக்களுக்கு தீனதயாளு ஒரு காட்பாதர். தீனதயாளு ஏழை எளியவர்களுக்கு இன்னல்கள் கொடுக்கும் பணக்கார முதலைகளின் கொட்டங்களை தன் செல்வாக்கால் ஒடுக்கி அவர்களை நிலை குலைய வைக்கிறார். ஆனால் தீனதயாளு எப்போதுமே கெட்டவழியில் செல்வது இல்லை. மொத்தத்தில் அவர் ஒரு நல்ல' தாதா'.

    ஆனால் குடும்பத்தைப் பொறுத்த வரையில் அவர் ஒரு அப்பாவி. அவர் மனைவி லஷ்மிக்கு தன் கணவர் ஒரு பெரிய 'தாதா' என்பது தெரியாது. அப்படி அவள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் தீனதயாளு உறுதியாக இருக்கிறார். அவ்வளவு பெரிய தாதாவாக இருந்தும் தான் நேர்மையாக நடத்தி வரும் அச்சக ஆபீஸ் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் தீனதயாளு தன் குடும்பத்தை நடத்துவார்.

    தீனதயாளுவுடன் சிறுவயது முதற்கொண்டே வளர்ந்து வரும் முத்துகிருஷ்ணன் இப்போது இளைஞன். தீனதயாளு என்ற சிவனின் கழுத்தில் சுற்றிய பாம்பாய் யாரை வேண்டுமானாலும் கருடா சௌக்கியமா என்று கேட்பவன்.தீனதயாளுவுக்கு எல்லாமே அவன்தான். இதற்கிடையில் தீனதயாளு தன் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை அடிக்கடி சந்தித்து ஆறுதலடைகிறார். தீனதயாளுவுக்கு ராதா என்ற செல்ல மகள். ராதா மோகனை விரும்புகிறாள். திருமணம் செய்ய ஆசைப் படுகிறாள். ஆனால் தீனதயாளுவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் தன் மனைவி லஷ்மியின் விருப்பத்துக்காக அரைமனதுடன் சம்மதித்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

    ராதாவின் கணவன் மோகன் குடிகாரனாகி ராதாவை தீனதயாளுவின் வீட்டிற்கே அனுப்பி வைத்து விடுகிறான். சந்தோஷம் குடியிருந்த வீட்டில் சோகம் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.

    தீனதயாளுவை சில பணக்காரத் தீயவர்கள் சந்தித்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடவைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் தீனதயாளு அதை அடியோடு மறுத்துவிட்டு, அவர்களும் அதில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி விடுகிறார். இது முத்துகிருஷ்ணனுக்கு பிடிக்காமல் தீனதயாளுவை எப்படியாவது கடத்தலில் தான் ஈடுபட சம்மதிக்க வைப்பதாக அவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொள்கிறான்.

    சத்தியநாதன் என்ற தொழிலதிபர் தீனதயாளுவின் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை குடிபோதையில் காரை ஏற்றிக் குற்றுயிரும், கொலையுயிருமாக விட்டு விட்டு கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறான். இது தீனதயாளுவுக்குத் தெரியவர, துடிதுடித்து, மேரியாம்மாவை பார்க்க ஓடிவர, அவர் கண் முன்னமே மேரியம்மாவின் உயிர் பிரிகிறது. தன் வளர்ப்புத்தாயைக் கொன்றவனை பழிவாங்கத் தயாராகிறார் தீனதயாளு.

    இது புரியாமல் சத்தியநாதன் மேரியம்மாவின் மரணத்துக்காக தரும் சொற்பப் பணத்தை வாங்கிவந்து முத்துகிருஷ்ணன் தீனதயாளுவிடம் தர, தீனதயாளு மிகுந்த கோபமடைந்து அந்தப் பணத்தை வாங்கி வந்ததற்கு முத்துக்கிருஷ்ணனைக் கடிந்து கொள்கிறார். இருவருக்கும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுகிறது.

    தன் தாயைக் கொன்ற சத்தியநாதனைப் பழிவாங்க நேரிடையாக தலையிட ஆரம்பிக்கிறார் தீனதயாளு. சத்தியநாதனுக்கு பலவகையிலும் தொல்லைகள் கொடுத்து அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறார்.

    இப்போது சத்தியநாதன், மருமகன் மோகன், முத்துக்கிருஷ்ணன், மற்றும் தீனதயாளுவின் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீனதயாளுவைப் பழிவாங்க பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். கள்ளநோட்டுகளை அச்சடித்து அவற்றை தீனதயாளுவின் அச்சாபீஸில் போட்டு தீனாவை போலீசில் சிக்க வைத்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது தீனதயாளுவின் மற்றொரு முகமான' தாதா' முகத்தை அவர் மனைவி லஷ்மிக்கு தெரியப்படுத்தி விடுகின்றனர். லஷ்மி தன் கணவர் தீனதயாளு ஒரு கெட்டவர் என்று எண்ணி அதிர்ச்சி அடைந்து உயிரை விட முயற்சிக்கிறாள். தீனதயாளு அவளைக் காப்பாற்றி தான் நியாயமானவன் என்று அவளை சமாதானப்படுத்துகிறார்.

    எதிரிகளின் சூழ்ச்சி ஒருபுறம்.

    குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடிக்கும் சட்டம் ஒருபுறம்.

    மருமகனும், வளர்த்த முத்துக்கிருஷ்ணனும் எதிர்ப்புறம்.

    தன்னைக் கெட்டவன் என்று நினைத்து துயருறும் மனைவி மறுபுறம்.

    இவ்வளவு பிரச்னைகளையும் சர்வசாதரணமாக எதிர்கொண்டு, கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் தீனதயாளு.

    வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே தனக்கு வக்கீலாகி, தன் வாதத் திறமையாலும், சமயோசித புத்தியாலும், மனதைரியத்தாலும் தான் குற்றவாளி அல்ல என்று வாதாடி, தீயவர்களின் சூழ்ச்சிகளை வீடியோப்படக் காட்சிகள் மூலம் நிருபித்து நிரபராதியாய் வெளியில் வருகிறார் தீனதயாளு.

    பிரிந்த குடும்பம் ஒன்று சேர முடிவில் சுபம்.

    இத்திரைப்படத்தில் 'தீனதயாளு' என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் நடிகர்திலகமும், அவர் மனைவி லஷ்மியாக மறைந்த குணச்சித்திர நடிகை சுஜாதாவும், முத்துக்கிருஷ்ணனாக தியாகராஜன் அவர்களும்,மகள் ராதாவாக அம்பிகாவும், மருமகனாக மோகனும் நடித்திருக்கிறார்கள்.

    இந்தப் படம் நிச்சயமாக ஒரு 'ஒன் மேன் ஷோ' மூவி என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் ஆதிக்கம் தான் படம் நெடுகிலும்.

    மேக்-அப், கெட்-அப், நடை, உடை, பாவனை அனைத்திலும் மிக மிக வித்தியாசமாக காட்சியளிப்பார் நடிகர்திலகம் அவர்கள்.

    தாதாவாக உலா வரும்போது.....

    வெளியே அணிந்திருக்கும் மிக மெல்லிய ஜிப்பா என்ன!

    உள்ளே பளிச்' சென்று தெரியும் கட்-பனியன் என்ன!

    வேட்டியின் மேல் அணிந்திருக்கும் பச்சை நிற பெல்ட் என்ன!

    வலது கையில் மின்னும் மோதிரம் என்ன!

    கையில் ஜிப்பாவுக்கு மேல் கட்டப் பட்ட வாட்ச் என்ன!

    கையில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் என்ன!

    அப்பப்பா.... தீனதயாளுவாக அல்லோல கல்லோலப் படுத்துகிறார் நடிக மன்னன்.

    அதே சமயம் குடும்பத்தலைவனாகக் காட்சியளிக்கும் போது நீண்ட அங்கவஸ்திரம் அணிந்து கையில் சிகரெட் இல்லாமல் முகத்தை அப்பாவியாக வைத்திருப்பார்.

    'காட்பாதர்' தீனதயாளுவாக வரும்போது உதடுகளைக் குவித்து சிகரெட்டை கை விரல்களுக்கிடையில் வைத்துக் கொண்டு, கண்கள் சிவக்க, ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து ஒரு சொடுக்கு போடுவார் பாருங்கள். தியேட்டர் கூரை ரசிகர்களின் கைத்தட்டலில் பிய்த்துக் கொண்டு போகும்.

    மீண்டும் 2-ஆம் பாகத்தில் சந்திப்போம்.

    அன்புடன்,

    நெய்வேலி வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 28th September 2015 at 04:18 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks Georgeqlj thanked for this post
    Likes Russellmai, sivaa, Georgeqlj liked this post
  6. #2124
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'கருடா சௌக்கியமா' இரண்டாம் பாகம் ஆய்வுக் கட்டுரை.





    அன்பு நண்பர்களே!

    'கருடா சௌக்கியமா' ஆய்வுக் கட்டுரை இரண்டாம் பாகத்தில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். முதல் பாகத்திற்கு நீங்கள் அனைவரும் வழங்கிய ஆதரவுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இரண்டாம் பாகத்தை தொடர்கிறேன்.

    இனி இரண்டாம் பாகம்.

    நடிக வேந்தனின் நடிப்பு முத்திரைகள்.

    படம் ஆரம்பித்த உடனேயே நடிகர் திலகத்தின் ஆர்ப்பரிக்க வைக்கும் நடிப்பு வித்தைகள் விளையாடத் தொடங்கி விடும்.

    சிறுவன் முத்துக் கிருஷ்ணன் பள்ளிகூடத்திற்குக் கட்ட பணமில்லை என்று தீனா (N.T) விடம் பொய் சொல்லி அழ, N.T யும் அதை நம்பி அவனுக்குப் பணம் கிடைப்பதற்காக அவனை ரோட்டில் வரும் காரின் முன்பு விழச் சொல்லுவார். சிறுவன் முத்துக் கிருஷ்ணனும் விழுந்து அடிபட்டது போல நடிப்பான். கார் நின்றவுடன் காரின் சொந்தக்காரரிடம் பணம் வாங்கி சிறுவனிடம் N.T. கொடுப்பார். பையனோ .,"வாத்தியாரே! இதே போல செட்-அப்ப அடுத்த வாரம் மைலாப்பூர்ல வச்சுக்கலாமா?..கிடைக்கும் பணத்துல ஆளுக்கு 50...50...என்ன சொல்ற?'.. என்று N.T.க்கு அதிர்ச்சி கொடுப்பான்.

    உடன் N.T.,"நமக்கெல்லாம் 20 வயசுக்கு மேல தான் புத்தி வந்துது...இந்தக் காலத்து பசங்க பொறக்கும் போதே பிரசவம் பாக்குற நர்ஸோட மோதிரத்த புடுங்கிகிறானுங்க... என்று இரு கைகளையும் சற்று அகல விரித்தபடியே audience- ஆன நம்மைப் பார்த்து கேலியாக நகைச்சுவை ததும்பச் சொல்ல அரங்கமே அதிரும். ஆரம்பமே அமர்க்களம் தான்.

    தன்னை சிறுவயதில் வளர்த்த மேரியம்மாவின் (பண்டரிபாய்) பிறந்த நாளுக்கு அவரை வாழ்த்த வருவார் N.T. பண்டரிபாய் N.T.யிடம்,"தீனா...நீ போற போக்கே சரியில்ல..எப்படியோ போ"... என்று கோபித்துக் கொள்வார். அதற்கு N.T.

    "ஆங்...அப்படியெல்லாம் நீ என்ன விட்டுக் கொடுத்திடுவியா?... மேரியம்மா...நீ சொல்லுறபடி வாழுறதா இருந்தா ஒண்ணு முற்றும் துறந்த ரமண மகரிஷியா இருக்கணும். என்னால அப்படியெல்லாம் வாழ முடியாது... என் பொறப்புக்கு நான் இப்படிதான் இருக்க முடியும்... என் பொறப்பப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே"...

    என்ற வித்தியாசமான dialogue delivery-யைக் கொடுப்பார். இது வரை நடிகர் திலகத்திடம் நாம் கேட்டிராத டயலாக் டெலிவிரி அது. (இந்தப் படத்தில் அவர் வசனங்களை உச்சரிக்கும் பாணியே தனி. வசனங்களை சற்றே நீட்டி முழக்கி வார்த்தைகளை சிறிது கடித்தாற் போன்று வல்லின அழுத்தங்களை அதிகம் கலந்து கொடுத்து, அழுத்தம் திருத்தமாக அவர் உச்சரிக்கும் விதமே அலாதியாய் இருக்கும். N.T யின் வேறு எந்தப் படங்களிலும் அவர் கையாளாத புதிய முறை பாணி அது. அந்தப் புதுமை ஒன்றிற்காகவே இந்தப் படம் அவருடைய மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது).

    நடிகர் திலகத்திற்கு இந்தப் படம் வெளியாகும் போது கிட்டத்தட்ட 54 வயது. அவருடைய அனுபவம் என்ன! நடிப்பின் முதிர்ச்சி என்ன!..அந்த வயதிலேயும் தன்னை,தன் பாணியை வித்தியாசப் படுத்திக் காட்ட வேண்டும் என்ற நடிப்பின் மேல் உள்ள அவருக்கிருந்த ஈடுபாடும், புதிதாய் வந்த நடிகரைப் போல் அவருக்கிருந்த ஆர்வமும் நம்மை மலைக்க வைக்கிறது. காலங்களை வென்ற காவிய புருஷரல்லவா அவர்!

    தன்னை கடத்தல் தொழிலில் ஈடுபட வைக்க முயற்சி செய்யும் கயவர்களை N.T.பந்தாடிவிட்டு,"நீங்க எனக்குச் சொல்லிக் கொடுத்த வித்தைகளை உங்களுக்கே சொல்லிக் கொடுக்கிறேன்டா ..உங்களுக்கு மட்டுமில்லே... இந்த உலகத்துக்கே கத்துக் கொடுக்கிறேன்டா" ... என்று கர்ஜிப்பார். அப்போது சிறுவன் முத்துக்கிருஷ்ணன் அங்கு வருவான். N.T. அவனிடம்,"நீ பள்ளிக்கூடம் போகலையா?..என்பார். அதற்கு சிறுவன் N.T.யிடம்,"நீங்கதான் என் பள்ளிக்கூடம்..நீங்க தான் என் வாத்தியார்... நீங்கதான் நான் படிக்க வேண்டிய புத்தகமே"... என்று பதில் சொல்வான். (படத்தில் வரும் இந்த வசனம் நிஜத்தில் எவ்வளவு உண்மை! 'நடிப்பு' என்ற பள்ளிக் கூடத்திற்கு N.T.யைத் தவிர சிறந்த 'வாத்தியார்' எவர் இருக்க முடியும்?. அந்தக்கால நடிகர்கள் முதல் இந்தக் கால நடிகர்கள் ஏன் வருங்கால நடிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய 'நடிப்புப் புத்தகம்' அல்லவா அவர்!).வியட்நாம் வீடு சுந்தரத்திற்கு ஒரு 'ஷொட்டு'.

    டைட்டிலுக்குப் பிறகு வயதான கெட்டப்பில் நடிகர் திலகம். நடு வகிடு எடுக்கப்பட்ட, முன்னால் இரண்டு புறமும் மேலருந்து கீழாக கொக்கி போல் வளைந்த அடர்த்தியான முடி..கையின் விரல்களுக்கிடையே விளையாடிக் கொண்டிருக்கும் சிகரெட்...உள்ளே தெளிவாகத் தெரியும் கட்-பனியன்... மெலிதான முழுக்கை ஜிப்பா...மடித்துக் கட்டப்பட்ட வேட்டி...இடுப்பில் அணிந்துள்ள பட்டையான பச்சை நிற பெல்ட்..ஜிப்பாவின் மேலாக கையில் கட்டப்படுள்ள வாட்ச். தீனதயாளு தாதாவாக அற்புதமான,வித்தியாசமான மேக்-அப்பில் வலம் வருவார் N.T.

    ஏழைகளான டீ எஸ்டேட் தொழிலாளிகளுக்கு போனஸ் வழங்க மாட்டார் எஸ்டேட் முதலாளி சண்முக சுந்தரம். தொழிலாளிகள் ஸ்டிரைக் செய்வார்கள். தீன தயாளுவான N.T.யிடம் உதவி கேட்டு வருவார் சண்முக சுந்தரம். N.T.யிடம் அவர்

    "திடீர்னு கை கழுவிட்டாங்க... பேச்சு வார்த்தைக்குக் கூட வரமாட்டேன்கிறாங்க ... நீங்க சொன்னாதான் ஸ்டிரைக்க வாபஸ் வாங்குவோம்னு சொல்றாங்க...நாங்க ஒன்னுமே செய்யலீங்க..
    என்பார்.

    அதற்கு N.T.

    "நீங்க ஒன்னுமே செய்யலீயா?... எனக்குத் தெரியும்யா ..பக்கத்து எஸ்டேட்ல டீ இலைய திருடிட்டு வாங்கன்னு உங்க தொழிலாளிக்கு நீங்க பணம் கொடுத்து அனுப்பல?..

    ஏழைகளுக்குத் திண்டாட்டம்...பணக்கரானுக்குக் கொண்டாட்டம்..

    ஏழைகள என்னைக்குமே கோழைகளா நெனச்சுடாதீங்க..

    தொழிலாளி முதுகு வளைஞ்சி வேலை செய்யணும்னா அவன் வயிறு நிமிரணும்",

    என்று மடித்துக் கட்டிய வேட்டியுடன் வலது கையை இடுப்பில் ஊன்றி, சற்றே குனிந்தபடி, முதுகை முன்னால் ஒரு வளை வளைத்து பின் உடனே வயிறறுப் பகுதியை ஒரு நிமிர்த்து நிமிர்த்துவார் பாருங்கள்... அடடா..என்ன ஒரு உடல் மொழி அது!....அற்புதத்திலும் அற்புதம் இந்தக் குறிப்பிட்ட காட்சி.

    அதே போல தன் வக்கீல் குமாஸ்தா தேங்காய் சீனிவாசனிடம் N.T,பேசுவதாக வரும் சில வசனங்களும், அவருடைய வசன modulation களும் மிக அருமையாக இருக்கும்.

    தேங்காய்: யார் யாரை ஏமாத்தினா உங்களுக்கு என்ன? சட்டம்ன்னு ஒண்ணு இருக்கு... கோர்ட்டுக்கு போய்க்கிறாங்க...

    N.T: மடையா! இந்த விஷயமெல்லாம் கோர்ட்டுக்கு போனா என்னாகும்?...வாதிக்கு நஷ்டம்...பிரதிவாதிக்குக் கஷ்டம்...வக்கீலுக்கு அதிர்ஷ்டம்...ஜட்ஜுக்கு அவரு இஷ்டம்...

    என்று அவர் பாணியில் உச்சரிக்கும் போது தியேட்டரே அல்லோலகல்லோலப்படும்.

    கட்டுரை தொடர்கிறது...
    Last edited by vasudevan31355; 28th September 2015 at 03:05 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks Georgeqlj thanked for this post
    Likes Russellmai, sivaa, Georgeqlj, Harrietlgy liked this post
  8. #2125
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தொடர்ச்சியாக...

    தேங்காய்: உங்களைப் பத்தி என்னவெல்லாம் பேசிக்கிறாங்க தெரியுங்களா?

    N.T: கடவுளே இருக்காரா இல்லையான்னுதான் பேசிக்கிறான்... என்னப் பத்தி பேசனா என்ன. I don't care. குற்றம் எங்கெல்லாம் நடக்குதோ அங்கெல்லாம் இந்த தீனதயாளு இருப்பான்.. சட்டம் வக்கீலோட பண பலத்துக்கும், வக்கீலோட வாதத் திறமைக்கும் வளைஞ்சி கொடுத்திடும்..அப்ப பாதிக்கப் பட்டவன் என்ன செய்வான்?.. அந்த ஆண்டவன்தான்டா உன்ன கேக்கனும்னு கண்ணீர் வடிப்பான். அப்பிடி கேக்க வந்த ஆண்டவனே நான்தான்னு வச்சுக்கடா... போடா"...

    என்று படு அலட்சியமான அசத்தலான 'மூவ்' களைக் கொடுப்பார் N.T.

    "இப்படியெல்லாம் செஞ்சா சமுதாயம் உங்களை மதிக்கவா போகுது?" என்று தேங்காய் கேட்டவுடன், சிகரெட்டை ஸ்டைலாக வாயில் வைத்துப்
    புகைத்துவிட்டு,லேசாக தலையை வலதும் இடதுமாய் ஆட்டி சிரித்தபடியே நடிகர் திலகம்,

    "நானு.. உன் வீட்டுக்கு வரும் போது பாண்டி பஜார் பிளாட்பாரத்துல ஒருத்தன் போட்டோவெல்லாம் போட்டு வித்துகிட்டு இருந்தான்..அவன் சொன்னான்...

    காந்தி நாலணா..

    நேருஜி நாலணா...

    காமராஜி நாலணா..ன்னான்...

    அப்பேற்பட்ட மகான்களுக்கே நாலணாதாண்டா விலை. உலகம் நம்மள மதிச்சா என்ன..மிதிச்சா என்ன,"...

    என்று கலாய்க்கும் போது,

    கரகோஷம் காதுகளைக் கிழிக்கும்.(எப்பேர்ப்பட்ட வசனங்கள்! கால சூழ்நிலைகளுக்குத் தக்கபடி, எக்காலங்களுக்கும் ஏற்ற வசனங்கள். மகான்களும், மாபெரும் தலைவர்களும் N.T. அவர்கள் கூறுவது போல் நாலணா ஏன் காலணாவுக்குக் கூட இப்போதெல்லாம் மதிக்கப் படுவதில்லை).

    அதே போல் தன்னை வளர்த்த பண்டரிபாயைப் பார்க்க வருவார் N.T. பண்டரிபாயின் கன்னங்களில் தன் இரண்டு கைகளையும் வைத்து கண்கள் மேலிறங்க,கீழிறங்க பாசத்துடனும்,வாஞ்சையுடனும் ,சற்று வருத்தப் பட்ட வேதனையுடனும் அவர் முகத்தைப் பார்ப்பார் பாருங்கள்...ஒரு வினாடியே ஆனாலும் அந்தக் காட்சியில் அவர் காட்டும் முக பாவம் இருக்கிறதே..தனக்காக, தன் வாழ்வைத் தியாகம் செய்த அந்த வளர்ப்புத்தாய் வயது முதிர்ந்த கோலத்தில் இப்படி உருக்குலைந்து காட்சி தருகிறாளே.. என்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவார். உடன் பண்டரிபாயிடம்,

    "அய்யோ மேரியம்மா! எனக்காக கஷ்டப்பட்டே நீ பழுத்துப் போயிட்ட.. வாழ்க்கையில அடிபட்டே நான் பழுத்துப் போயிட்டேன், "என்று வேதனையாகக் கூறுவார். உடனே பண்டரிபாய்,"நல்லா இருக்கியாப்பா ? என்று நலன் விசாரித்தவுடன்,

    "நல்லா இருக்கேன்... நல்லா இருக்கேன்", என்று இரு முறை அவர் ஸ்டைலில் அசத்துவது அருமை. "இன்னைக்கு ஒண்ணாந்தேதி இல்லையா?..எல்லாருக்கும் கொடுத்துக்கிட்டே வந்தேன்..உனக்குக் கொடுக்குற பாக்கியத்தைத்தான் நீ எனக்குக் கொடுக்கல..அதனால உன்கிட்ட வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்", என்று சொன்னவுடன் பண்டரிபாய் "என்னப்பா?",என்று கேட்பார். அதற்கு நம்மவர் சற்று உரத்த குரலில்,

    "ஆசீர்வாதந்தான்...ஆசீர்வாதந்தான்,"...என்று ஏற்ற இறக்கமுடன் கூறுவது அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று...

    மற்றொரு சூப்பரான காட்சி...

    நடிகர் திலகத்தின் ஏழை பால்ய நண்பனாக வரும் V.S.ராகவன் தன் மகளின் திருமணத்திற்காக உதவி கேட்டு நடிகர் திலகத்தைச் சந்திக்க அவர் வீட்டுக்கு வருவார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் இருவரும் சந்திப்பது போன்ற காட்சி அது. V.S.ராகவன் வந்தவுடன் வீட்டில் அமர்ந்திருக்கும் N.T. அவர்கள் ,

    "ஏய் படுவா...பலராமா...வாடா...வாடா,"

    என்று எழுந்து வந்து கட்டித் தழுவி பின்,

    "ஒன்னப் பாத்து ரொம்ப நாளாச்சு...நான் ரெண்டாங் கிளாசாவது பள்ளிக்கூடத்திலே படிச்சேன்கிறதுக்கு சாட்சியே இந்த உலகத்தில நீ ஒருத்தன் தான். (நடிகர் திலகம் தான் சிறுவயதில் உண்மையிலேயே இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததை நினைவு கூர்வதைப் போல் அமைந்திருக்கும் இந்தக் காட்சி). நல்லா இருக்கியா?.. குடும்பமெல்லாம் நல்லா இருக்கா?"

    என்று நலம் விசாரித்து விட்டு V.S.ராகவனின் நரைத்த தலையைப் பிடித்து சற்றே கீழே அழுத்தி,"என்னடா கெழவன் மாதிரி ஆயிட்டே...என்ன சமாச்சாரம்?", என்று நட்பை வெளிப்படுத்துவது படு இயல்பு.

    மனைவி சுஜாதாவுடன் கோவிலுக்குப் போகும்போது தன் மனைவியின் மாமனும், அடியாளுமான கபாலி எதிர்பாராமல் அங்கு வந்து விட, சுஜாதா கண்களை மூடிக்கொண்டு சாமி கும்பிடும் அந்த இடைவெளி நேரத்தில், தனக்கு கபாலியிடம் இருக்கும் தொடர்பு தன் மனைவிக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவனை அவசர அவசரமாக பேசி அனுப்பி வைக்கும் அந்த தருணத்தில், சுஜாதா சட்டென்று அதைக் கவனித்துவிட,அதை சமாளிக்கும் விதமாக தன் உடலை 'ஜகா' வாங்குவது போல ஒரு இழுப்பு இழுத்து, பின் ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு நடையைக் கட்டுவது நம்மை பரவசப் படுத்தும் நடிப்புக் காட்சி.

    பின் வீட்டில் சுஜாதா தன் கணவர் N.T.க்கு தன் மாமன் கபாலியுடன் என்ன தொடர்பு?..என்று கோபிக்க, அதற்கு N.T. வேண்டுமென்றே சுஜாதாவை வெறுப்பேற்ற மைலாப்பூர் கடவுள் கபாலீஸ்வரரைப் போற்றுவது போல, அருகில் இருக்கும் தேங்காய் சீனிவாசனிடம்,

    கபாலி 'உயர்ந்த மனிதன்'

    கபாலி 'கை கொடுத்த தெய்வம்'

    கபாலி 'தெய்வப் பிறவி'

    என்று ஜாலியாக கோஷம் போடுவது அவருக்கே கை வந்த கலை. (இந்தக் காட்சியில் நடிகர் திலகம் அவர்கள் திருவாயாலேயே அவர் நடித்த படங்களின் பெயர்கள் உச்ச்சரிகப்படுவதை நாம் கேட்கும் போது நம் காதுகளில் தேனும் பாலும் கலந்து வந்து பாய்வது போல அவ்வளவு இனிமை).

    சமீப காலமாக 'சாந்தி' தியேட்டரில் நம் இதய தெய்வத்தின் காவியங்கள் வெளியீடுகளின் போது நம் ரசிகக் கண்மணிகள் பெரும்பாலும் மேலே நடிகர் திலகம் கூறிய படங்களின் பெயர்களையே அவருக்கு புகழாரமாய் சூட்டி,

    'உயர்ந்த மனிதன்' சிவாஜி

    'கை கொடுத்த தெய்வம்' சிவாஜி

    'தெய்வப் பிறவி' சிவாஜி

    என்று விண்ணை எட்டிய கோஷங்களை எழுப்பியது நினைவுக்கு வந்து கண்களைப் பனிக்கச் செய்தது.

    (நடிப்பு முத்திரைகள் மூன்றாம் பாகத்தில் தொடரும்).

    அன்புடன்,

    நெய்வேலி வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 28th September 2015 at 03:08 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks Georgeqlj thanked for this post
    Likes Russellmai, sivaa, Georgeqlj, Harrietlgy liked this post
  10. #2126
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    "கருடா சௌக்கியமா?" ஆய்வுக் கட்டுரை. (மூன்றாம் பாகம்).



    நடிகர் திலகத்தின் நடிப்பு முத்திரைகள்.

    தன்னை அன்புடன் வளர்த்த மேரியம்மாவின் மீது (பண்டரிபாய்) தொழிலதிபர் சத்தியநாதன் ('சங்கிலி' முருகன்) ரோட்டில் குடிபோதையில் காரை ஏற்றி விட, குற்றுயிரும்,கொலையுயிருமாக தன் தாய் மரணப்படுக்கையில் கிடக்க, பதைபதைத்து பதறி ஓடி வருவார் N.T. அவர் கண்ணெதிரிலேயே மேரியம்மா உயிரை விட, அவளை மடியில் சாய்த்துக் கொண்டு கதறும்போது டாக்டர்கள் சற்று தாமதமாக அங்கு வர, தன் தாயைக் கட்டிலில் கிடத்திவிட்டு, இருகைகளையும் தலையின் பின்பக்கமாக சேர்த்து கோர்த்து வைத்துக் கொண்டு உடலை லேசாக வளைத்து நின்றபடி டாக்டர்களிடம் "too late"என்று மூக்கை உறிஞ்சுவது போல உதடுகளைக் குவித்து மூச்சை வாயால் உறிஞ்சுவது(!) லேசுப்பட்ட உடல்மொழி அல்ல. அப்படி ஒரு உன்னதமான N.T. யின் போஸுக்கு சொந்தம் கொண்டாடிவிட்ட பெருமை இந்த அற்புதப் படத்திற்கு மட்டுமே உண்டு.

    அந்த அற்புத போஸ்



    மேரியம்மாவை மடியில் கிடத்தி கதறும் காட்சி




    "மேரியம்மா! உன் கண்ணுக்குள்ளேயே என்ன வச்சுக் காப்பாத்துன... இப்ப நான் உன்ன மண்ணுக்குள்ள வச்சு எப்படிப் புதைப்பேன்?"

    என்று தன் தாய் அநியாயமாக சாகடிக்கப்பட்டு விட்டாளே என்ற ஆத்திரம், கோபம், தாயை இழந்த சோகம், தாங்க முடியாத வேதனை, வஞ்சம், தன் தாய் இறக்கக் காரணமானவனை பழிவாங்கத் துடிக்கும் வெறி என்ற அத்தனை உணர்ச்சிகளையும் ஒருசேரக் கொட்டி கண்களை மேல்நோக்கிய வெறியோடு அந்த ஒரு சில நிமிடங்களில் ஓராயிரம் வித்தைகளை உணர்ச்சிப்பிழம்பாய் அள்ளி வழங்கியிருப்பார் N.T.

    தன் அன்புத் தாய் கொலை செய்யப்பட்டு விட்டாளே என்ற ஆத்திரம்

    தாயின் மரணத்திற்கு காரணமாய் இருந்த சத்தியநாதன் அதற்கு ஈடாக ரூபாய் பத்தாயிரத்தை முத்துக் கிருஷ்ணனிடம் (தியாகராஜன்) கொடுத்தனுப்ப, அவனும் அதை வாங்கிக்கொண்டுவந்து N.T. யிடம் கொடுக்க, கோபத்தின் ஆரம்பத்தில் இருக்கும் நடிகர் திலகம்,

    "என் மேரியம்மவுடைய வில கேவலம் பத்தாயிரம் ரூபாயா? மேரியம்மா யார் தெரியுமில்ல... என்னோட தெய்வம்... எவனோ பெத்துப் போட்ட என்ன எடுத்து வளர்த்து தன்னுடைய வாழ்க்கையை பாழாக்கிகிட்டவ ... அவளுடைய உயிருக்கு பத்தாயிரம் ரூபா விலையா?... இதெல்லாம் உனக்குத் தெரியாதா?... தெரிஞ்சிருந்தும் ஏன் வாங்கிகிட்டு வந்த?...கொண்டு போய் அவன் மூஞ்சில விட்டெறி"...

    என்று கூற அதற்கு முத்துகிருஷ்ணன்

    "இந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துட்டா மட்டும் செத்துப் போன மேரி மம்மி திரும்பி வந்துடப் போறாங்களா"

    என்று எதிர்வாதம் பேச தன்னை நம்பி தன் கழுத்தில் சுற்றிகொண்டிருக்கும் பாம்பே தனக்கு எதிராகத் திரும்ப ஆரம்பிப்பதைக் கண்டு சற்று திகைத்து, பின் சடாலென வலது காலை வேகமாக தரையில் ஒரு உதை உதைத்து,வேட்டியை மடித்துக் கட்டி சற்றே காட்டமாக

    "முத்துக்கிருஷ்ணா! ஐயாவுக்கே அட்வைஸ் பண்றியா? இது என்னுடைய பெர்சனல் மேட்டர். இத எப்படி டீல் பண்ணனும்கிறது எனக்குத் தெரியும்.நீ போ" என்று தெனாவட்டாகக் கூறியபடி சிகரெட்டை வாயில் வைத்து போடுவாரே ஒரு சொடுக்கு! அந்த சொடுக்கில் சொக்கிப் போகும் நம் அனைவரின் மனங்களும்.

    அதிர வைக்கும் ஆங்கார சொடுக்கு



    ஐயாவுக்கே அட்வைஸ் பண்றியா?...




    சொன்னது போலவே நேரிடையாக சங்கிலி முருகனைப் பழிவாங்கக் களத்தில் இறங்குவார் N.T. சங்கிலி முருகனின் பார்ட்னரை அவர்மீது நம்பிக்கை இல்லாமல் தன் பாகத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி கேட்கச் செய்தும், சங்கிலி முருகனுடைய கம்பெனியில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடத்தச் செய்தும்,சங்கிலி முருகனின் கார் டிரைவரை வேலையே விட்டு விலகச் செய்தும் இப்படி பல இன்னல்களை அவருக்குத் தெரியாமலேயே தன் தாதா செல்வாக்கால் உருவாக்கி தன்னிடமே நேரிடையாக உதவி கேட்டு வரும் நிலைக்கு சங்கிலி முருகனை ஆளாக்கி விடுவார் N.T. இவ்வளவு இன்னல்களுக்கும் காரணம் N.T தான் என்று தெரியாமல் அவரிடமே பிரச்சனைகளுக்கு உதவ வழி கேட்டு வருவார் சங்கிலி முருகன்.ஒவ்வொரு பிரச்னையாக சங்கிலி முருகன் சொல்லிக் கொண்டே வர, N.T யும் பிரச்னைகளைத் தீர்ப்பதாக ஒத்துக் கொண்டு சங்கிலி முருகனின் வீட்டிற்கு செல்வார் .செல்வதற்கு முன் N.T..யை வரவேற்பதற்காக மாலையுடன் காத்திருக்கும் சங்கிலி முருகன் தன் உதவியாளரிடம் ,"என்ன மேனேஜர்! இன்னும் அவரு வரலியே"என்பார். அதற்கு அந்த மேனேஜர்,"பெரியவர் சொன்னா சொன்ன டயத்துக்கு வந்துடுவாருங்க....கடிகாரம் தப்பினாலும் தப்பும்...அவரு மாத்திரம் கரெக்டா டயத்துக்கு வந்துடுவாரு...என்று புகழாரம் சூட்டுவது நடிகர்திலகத்தின் நேரந்தவறாமையையும்,காலந்தவறாமையையும் குறிப்பிடுவதற்கென்றே எழுதப்பட்ட சத்தியமான வசனம். (சபாஷ்! வியட்நாம் சார்...)

    பின் N.T சங்கிலி முருகன் வீட்டிற்கே வந்து மறைமுகமாக தன் பழிவாங்கும் படலத்தைத் தொடங்குவார். சங்கிலி முருகன் வீட்டிலேயே அவர் மனைவியிடமும்,மகளிடமும் அவரை வசமாக மாட்டி வைக்கும் காட்சிகள் படுசுவாரஸ்யமானவை. சங்கிலி முருகன் மனைவி முன்னாலேயே "சத்தியநாதா, இது எத்தனையாவது wife?" என்று அவரை அவர் மனைவியிடம் மாட்டிவிட்டு மிரள வைப்பதும், சங்கிலி முருகன் மகளிடம்,"உன் வயசென்ன டார்லிங்?" என்று N.T கேட்க அதற்கு அந்தப் பெண் "பதினாறு"என்று பதில் கூற, "சகுந்தலாவுக்கும் அதே வயசுதான்" என்று கலாய்த்து சங்கிலி முருகனின் லீலைகளை மறைமுகமாக உணர்த்தி அலற வைப்பதும், இதையெல்லாம் சமாளிக்க சங்கிலி முருகன் N.T யிடம்,"வாங்க டிபன் சாப்பிட்டுகிட்டே பேசலாம்"என்று பேச்சை திசைதிருப்ப முயற்சிக்க, நடிகர் திலகம் அதற்கு,"ஆங்...(இந்த இடத்தில் ஒரு ஜகா வாங்குவார் பாருங்கள்)...நான் உன் கையால் டிபன் சாப்பிட மாட்டேன்ப்பா...நீதானே சொன்ன...சொத்துக்காக மாமனாரை உப்புமாவுல விஷம் வச்சுக் கொன்னேன்னு" என்று அவர் மனைவி முன்னேயே அவரை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும், சங்கிலி முருகனின் ஆபீஸ் மெம்பர்ஸ் மீட்டிங் நடக்கும் போது அவருடைய பார்ட்னரைக் காட்டி அத்தனை பேர் முன்னிலையில்,"ஒ...இவனதான் நீ கொலை பண்ணச் சொன்னியா?"என்று காலை வாருவதுமாக பழிவாங்கும் படலத்தைப் பக்காவாக நகைச்சுவையுடன் பண்ணியிருப்பார் N.T.


    சங்கிலி முருகனிடம் "ஜகா"வாங்குவது போன்று கலாய்க்கும் காட்சி

    Last edited by vasudevan31355; 28th September 2015 at 04:09 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks Georgeqlj thanked for this post
    Likes Russellmai, sivaa, Georgeqlj, Harrietlgy liked this post
  12. #2127
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    இதனை இப்போது பேசி பயன் யாருக்கும் இல்லை நமது ரத்தகொதிப்பு தான் அதிகரிக்கும் என்பதே எனது நிலைப்பாடு...நடிகர் திலகம் அவர்களின் அரசியல் பற்றி பேச்சை தொடங்கினால் ..!

    திரு MGR அவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்ததாக நினைக்க எனக்கு உடன்பாடு இல்லை. அவருடைய அரசியலில் ஒரு PLANNING 1953 முதலே இருந்தது ...ஒரு குறிக்கோள் இருந்தது ..அதாவது OBJECTIVE ..என்றாவது ஒரு நாள் நாமும்.....என்ற ஒரு PLANNING .....ஒரு DECISION ...இருந்தது..!

    நமது நடிகர் திலகம் அவர்களிடம் அப்படி ஒன்றும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. காரணம் 24 மணிநேரத்தில் 20 மணி நேரம் அவர் தமது தொழிலில் மிக கெட்டியாக ..மற்ற எவரை காட்டிலும் PLANNED ஆக...OBJECTIVE ஆக ...SUBJECTIVE ஆக இருந்துள்ளார்....பிறகு எப்படி அரசியலில் அந்த PLANNING OBJECTIVE SUBJECTIVE இருக்க முடியும் ?

    1952 டிசம்பர் முதல் 1987 வரை திரைப்பட தயாரிப்பாளர்கள் அவரை விட்டபாடில்லை...வருடத்திற்கு 8 படங்கள் என்று இருந்தவரை ...அவரது திரைப்படங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தும் லாபம் மற்றும் வியாபாரம் காரணமாக வருடத்தில் 10 படம்.....13 படங்கள் ....இப்படி ஒரு GRAPH உயர்ந்துகொண்டே எப்போதும் இருந்துள்ளது....இதில் எங்கிருந்து அரசியலில் யோசிக்க நேரம் இருக்கும் ?

    இத்துனை BUSY க்கு நடுவே பெற்ற இந்த TOTAL VOTES அதுவே மிக பெரிய இமாலய சாதனை சார் !

    திரு MGR அவர்கள் அரசியல் வேறு...அவர் நிறைய நேரம் செலவுசெய்தார் அதற்காக...IMAGE என்ற ஒன்று கச்சிதமாக மக்கள் முன் நிறுவினார்....!

    அவரை சுற்றி தம்பி, தமக்கை, அண்ணன் இப்படி ஒரே வீட்டில் 30 முதல் 40 பேர் வரை இருந்தார்களா அவர்களுக்கும் சேர்த்து சம்பாதிக்க...அவர்கள் வாழ்கையும் வளப்படுத்த...?

    அப்படி இருந்திருந்தால் திரு MGR அவர்களும் நடிகர் திலகம் போல திரையுலகில் CONCENTRATE செய்திருப்பார் ...!

    அவருக்கும் நடிகர் திலகம் போல நிகழ்வுகள் நடந்திருக்கும்...! முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள் !

    Rks
    Good point

  13. #2128
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    "கருடா சௌக்கியமா?" ஆய்வுக் கட்டுரை. (மூன்றாம் பாகம்). (தொடர்கிறது)....

    N.T. ஏதோ ஒரு காரணத்திற்காக தன்னைப் பழிவாங்கத் துடிப்பதைப் புரிந்து கொள்ளும் சங்கிலி முருகன் N.T.யைக் கொல்ல ஒரு அடியாளை ஏற்பாடு செய்வார். வீட்டில் N.T யிடம் நைசாகப் பேசிக்கொண்டே சங்கிலி முருகன் N.T யின் பின்னல் ஒளிந்து நிற்கும் அந்த அடியாளிடம் N.T.யைக் கொலை செய்யச் சொல்லி சைகை செய்ய, N.T விஷயம் தெரியாதவாறு வேறொரு பக்கம் பார்த்தபடி நின்று கொண்டிருப்பார். அந்த அடியாள் பின்னாலிருந்து N.T. யை அடிக்க நெருங்குகையில் N.T. சற்றும் எதிர்பாரவிதமாக அந்த அடியாளைப் பார்க்காமலேயே

    "டேய்! கபாலிக் கய்தே! வந்து அடியேண்டா...எவ்வளவு நாழி காத்துகிட்டு இருக்கிறது?"

    என்பாரே பார்க்கலாம்! அந்த அடியாள் N.T யின் அடியாள் கபாலிதான் என்பது தெரியாமல் அவனையே N.T. யைக் கொலை செய்யக் கூட்டி வந்து பேந்தப் பேந்த முழிக்கும் சங்கிலி முருகனைப் பார்த்து,

    "ஹஹ்ஹா"....என்ற கேலியோடு கூடிய வெறித்தன சிரிப்பை சிதற விட்டுவிட்டு N.T

    "என் ஆளை வச்சே என்னை மடக்கப் பார்த்தியா?
    நீ என்ன பெரிய புத்திசாலின்னு நெனப்பா?
    நான் யாரு தெரியுமா? உங்க தாத்தா" என்று எகத்தாளம் புரிவது எக்ஸலன்ட்.

    பின் தொடர்ந்து சங்கிலி முருகனிடம்,

    "உன்னை income tax-இல் காட்டி கொடுத்ததும் நான்தான்...
    உன் கம்பெனியெல்லாம் ஸ்ட்ரைக் பண்ணச் சொன்னது நான்தான்...
    உன் பார்ட்னரை உன்னை விட்டு விலகச் சொன்னது நான்தான்...(இந்த இடத்தில் கீழே தரையில் இருக்கும் சின்னஞ்சிறு வட்டத் திண்டு ஒன்றின் மேல் திமிர்த்தனமான வெறியோடு வலது காலைத் தூக்கி வைப்பார்)
    உன் மேனேஜரை விட்டே என்னை இங்கு கூட்டிட்டு வரச் சொன்னதும் நான்தான்"...

    என்று படிப்படியாகத் பழி உணர்வைத் தன் குரலில் உயர்த்தி,

    "சகலமும் நானே! காரியமும் நானே! எப்படி என்னுடய கீதாபதேசம்" என்றபடி கையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை படு ஸ்டைலாக சுண்டிவிட்டு,பார்வையில் அனல் கக்க வைத்து விஸ்வரூபம் எடுத்த கிருஷ்ண பரமாத்வாக சங்கிலி முருகனை கதிகலங்க வைப்பார். (நம்மையுந்தான்)


    "எப்படி என்னுடய கீதாபதேசம்" சிகரெட்டை ஸ்டைலாக சுண்டிவிடும் காட்சி



    உடன் சங்கிலி முருகன் N.T யின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க, N.T அவரைத் தூக்கி நிறுத்தி,

    "இப்ப கால்ல விழுந்தா உன்னை நான் மன்னிச்சிடுவேன்னு நெனச்சியா?...அன்னைக்கு உன் கார்ல அடிபட்டு குத்துயிரும், கொலையுயிருமா கிடந்தாளே மேரியம்மா...அவள என்னா ஏதுன்னு கூடப் பார்க்கம நாயை அடிக்கிற மாதிரி அடிச்சுப் போட்டுட்டு குடிவெறியில காருல பறந்துட்ட இல்ல...அவ யார் தெரியுமா... என் தாய்...என் தாயாருங்கிறதுக்காக மட்டும் நான் சொல்லல..எதிரியாய் இருந்தாலும் மனிதாபிமானத்தோடு நடந்துக்கணும்... நீ செய்தியா?...இல்ல...ஏன்?"

    என்று சங்கிலி முருகனின் தோள்களைத் திருப்பி அவர் நெஞ்சில் வலது கைவிரல்களை மடக்கி முஷ்டியால் மூன்று முறை குத்தியபடியே,

    "பணக்காரன்ற திமிர்...நீ செஞ்ச குத்தத்த மறைக்கணும்கிறதுக்காக கேவலம் பிச்சக் காசு பத்தாயிரம் கொடுத்தனுப்பிச்சே இல்லே...
    எங்க அம்மாவோட விலை கேவலம் பத்தாயிரம் ரூபா இல்ல...
    உன் கேசுல நானே பெர்சனலா ஏன் interfere ஆகி இருக்கேன் தெரியுமா?
    என் ஆட்களை அனுப்ச்சா உன்னை ஒரேயடியா"

    என்று நிறுத்தி

    தன் கரத்தை பக்கவாட்டில் வலதும் இடதுமாக அசைத்து தீர்த்துக் கட்டுவது போன்ற பாவனையில் "விஷ்" என்று சற்று நிறுத்திவிட்டு (கையால் வெட்டுவது போன்ற படு அலட்சியமான ஒரு மூவ்மென்ட்டைக் கொடுப்பார். இந்த குறிப்பிட்ட ஒரு செய்கைக்காகவே இந்தப் படத்தை ஓராயிரம் முறை பார்க்கலாம்)

    "விஷ்"....என்ற வெட்டுவது போன்ற பாவனை



    "குளோஸ் பண்ணிடுவாங்க"...என்று தொடருவார்.(இந்த மூன்று நிமிடக் காட்சியில் நடிகர் திலகத்தின் அற்புதமான டயலாக் டெலிவரியுடன் கூடிய அனாயாசமான அந்த சூறாவளி நடிப்புப் பரிமாணம் மற்ற அவர் படங்களிலிருந்து இந்தப் படத்தை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டும்)

    பின் தொடர்ந்து,

    "நீ அப்படி சாகக் கூடாது...உன் உயிர் இருக்கிற வரைக்கும் அணு அணுவா... (நிறுத்தி திரும்ப ஒருமுறை உச்சரிப்பார்) அணு அணுவா...துடிச்சி சாகணும்... (இந்த இடத்தில் வலது கை விரல்களை ஒன்று சேர்த்துக் குவித்து, விரித்து பின் மறுபடியும் குவித்து விரித்து அணு அணுவாக என்ற வார்த்தைக்கேற்ப அற்புதமான அசைவை அசால்ட்டாக பிரதிபலிப்பார்) நான் சொல்றது உனக்கு மட்டுமில்லே!... பணத்த வச்சுகிட்டு செஞ்ச குற்றத்த மறைக்கப் பார்க்குறானுங்களே...அத்தனை பணக்காரப் பசங்களுக்கும் இந்த தீனதயாள் விடுற எச்சரிக்கைடா டாய்"

    என்றபடி தன் வலது பக்க மீசையை அத்தனை விரல்களாலும் தடவியபடியே கம்பீரமான எச்சரிக்கை விடுவது தமிழ் சினிமாவிற்கு புது இலக்கணம். பின் அவரது பாணியில் "bastard" என்று மிரட்டிவிட்டு செய்வாரே ஒரு அமர்க்களம்...

    "அணு அணுவா" அற்புத ஆக்ஷன்




    மீசையை கம்பீரமாகத் தடவும் காட்சி



    கீழே விழுந்து கிடக்கும் அவரது துண்டை சங்கிலி முருகனிடம் எடுக்கச் சொல்லும் அந்தத் திமிரும் தெனாவட்டும் இருக்கிறதே! அடேயப்பா...அதுதான் ஹைலைட்..

    "எட்றா துண்டை" என்று மிரட்டும் பயங்கரம்,
    அந்த வார்த்தையை உச்சரிக்கும் தொனி,
    துண்டை சங்கிலி முருகன் எடுத்துக் கொடுத்தவுடன் அதை ஸ்டைலாக கழுத்தில் போட்டுக் கொள்ளும் லாவகம்,
    "be careful" என்று எச்சரித்துவிட்டு ஒரு ஸ்டெப் முன்னால் சென்று மறுபடி அதே ஸ்டெப்பை திரும்ப பின்னால் வைத்து "ம்" என்று ஆங்காரத்துடன் முறைத்துவிட்டுப் போகும் பயங்கரம்... (அந்த மனிதரைத் தவிர யாராவது இனியொருவர் பிறக்க முடியுமா?) சும்மா நெத்தியடி..

    "எட்றா துண்டை" மிரட்டி மிரள வைக்கும் காட்சி



    துண்டை லாவகமாக அணியும் காட்சி



    "be careful" சங்கிலி முருகனை எச்சரிக்கும் காட்சி



    போதை மருந்து கடத்தச் சொல்லி N.T யிடம் பணம் தந்து பேரம் பேசுவார்கள் சிலர். அதை மறுத்து ஒதுக்கிவிட்டு,மாறாக அவர்களை அந்தத் தொழிலைச் செய்யக்கூடாது என்று மிரட்டி அனுப்பி வைப்பார் N.T. ஏற்கனவே பணத்துக்கு ஆசைப்பட்ட தியாகராஜன் N.T. பணம் வாங்க மறுத்ததைக் கண்டு பணம் தர வந்த கும்பலிடம் தன்னிடம் பணத்தைத் தருமாறும், தான் N.T யிடம் சொல்லி போதை மருந்து கடத்த சம்மதம் வாங்கித் தருவதாக N.T. முன்னிலையிலேயே சொல்ல,அதைக் கேட்டு ஆத்திரமுறுவார் N.T. தியாகராஜன் N.T யிடம்,"உட்கார்ந்த எடத்துல பணம் வந்தா நோகுதா?...உங்களால முடியலைனா பேசாம ஒரு மூலையில் போய் உட்காருங்க...நான் பாத்துக்கிறேன்" என்று கூற, தான் வளர்த்த கடா தன் பேச்சுக்குக் கட்டுப்படாமல் தன் மீதே பாய்கிறதே என்று கோபத்தில் கொதித்து வெகுண்டெழுவார் N.T.

    தன் தன்மானத்துக்கு கேடு விளைவித்ததோடு மட்டுமில்லாமல், தன் தாதா பதவிக்கே ஆசைப்பட்டுவிட்டானே என்று கண்மண் தெரியாமல் தியாகராஜனை போட்டிப் புரட்டி எடுத்து விடுவார் N.T. இந்த இடத்தில் இன்னொரு பிரளயத்தை நடத்திக் காட்டுவார் N.T. தியாகராஜனை விளாசிவிட்டு தரையில் அமர்ந்து கொண்டு சிகரெட்டைப் பற்றவைப்பார்.

    தியாகராஜனைப் பின்னி எடுத்துவிட்டு "தம்" போடும் காட்சி



    "சே! சொறிநாயை விடகேவலமா போயிட்டடா நீ! நானும் பாத்துகிட்டே வரேன்...அன்னைக்கு என்னாடான்னா மம்மி செத்ததுக்கு பணம் கொண்டாந்து கொடுத்தே!...இன்னைக்கு என்னாடான்னா பணம் கொடுங்க! செய்வாருன்னு சொல்ற...இங்க ரெண்டு opinion க்கு இடம் கிடையாது...ஒரே opinion தான்... (இந்த இடத்தில் சிகரெட் புகையை ஒரு இழு இழுத்துவிட்டு நிறுத்தி பின்) அதுவும் அய்யாவோட opinion தான்... என் மூஞ்சியிலேயே முழிக்காதே"...என்ற ஆத்திரம் கலந்த வேதனையை வெளிப்படுத்துவார்.

    பின்னால் அடிபட்டு நிலைகுலைந்து கீழே விழுந்து கிடக்கும் தியாகராஜன் தட்டுத் தடுமாறி எழுந்திருக்க முயல உடனே N.T தியாகராஜனைப் பார்க்காமலேயே கன்னத்தில் ஒரு கையை வைத்தபடி, "அப்படியே போடான்னா அப்படியே போகணும்" என அழுத்தம் திருத்தமாகக் கட்டளையிட, எழ முயற்சித்த தியாகராஜன் படுத்த வாக்கில் குழந்தை போல தவழ்ந்து செல்லும் போது தியேட்டரில் கரகோஷம் காதுகளை கிழித்தது இன்னும் நன்றாக எனக்கு நினைவிருக்கிறது. தான் வளர்த்தவனே தனக்கு எதிராகத் திரும்பி விட்டானே என்ற வேதனை ஒருபுறம்... சிறுவயது முதற்கொண்டே பாசத்துடன் வளர்த்தவனை முதன் முதலாக அடித்துத் துவைத்து விட்டோமே என்ற சோகம் ஒருபுறம் என இருவேறுபட்ட உணர்வுகளையும் கண்களின் மூலமாகவே மாறி மாறிப் பிரதிபலித்து பிய்த்து உதறி விடுவார் நம்மவர்.

    தியாகராஜனை அடித்துவிட்டு மனம் வெதும்பும் அற்புத உணர்வுப் பிரதிபலிப்புகள்





    (ஆடம்பர செட்டுகள் இல்லை...படாடோப உடைகள் இல்லை...வெளிநாட்டு படப் பிடிப்புகள் இல்லை...கவர்ச்சி அம்சங்கள் எதுவும் இல்லை...டிஷ்யூம் டிஷ்யூம் என்று காது கிழியும் சமாச்சாரங்களும் இல்லை. கார் சேசிங்குகள் இல்லை... மசாலாத் தூவல்கள் இல்லை...கண்களைப் பிசைய வைக்கும் சோகக் காட்சிகள் கூட இல்லை...'வியட்நாம் வீடு' சுந்தரத்தின் அறிவார்ந்த வசனங்கள் துணையோடு ஜாலியான,புத்திசாலித்தனமான, குறும்பு கொப்பளிக்கும், எதைக் கண்டும் அஞ்சாத, எதையும் வெற்றி கொண்டு பவனி வரும் தீனதயாளு தாதாவாக அட்டகாசமாய் ஒன்லி இதுவரை காணாத நம் இதய தெய்வம் நடிகர் திலகம்.... நடிகர் திலகம்... நடிகர் திலகம் மட்டுமே இப்படத்தில்)

    (தீனதயாளுவின் அட்டகாசங்கள் தொடரும்).... .


    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 28th September 2015 at 04:22 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks Georgeqlj, JamesFague thanked for this post
  15. #2129
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Padikka Padikka thevitatha pathivu. Only NT can do this type of role with ease.

  16. #2130
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    வாசு சார்
    கருடா சௌக்கியமா ...
    தங்களுடைய பதிவுகளை எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை.
    அதுவும் கருடா சௌக்கியமா தங்களுடைய மாஸ்டர் பீஸ் எனலாம்.

    இறந்து கிடக்கும் மேரியம்மாவை நோக்கி துயரத்தை வெளிப்படுத்தும் காட்சி படத்தின் மிகச் சிறந்த காட்சிகளில் ஒன்று.

    தன் கடைசி படம் வரையிலும் முத்திரை பதித்த கடமை வீரனைப் போற்றும் பணியில் தங்கள் பதிவுகள் தலையாயதாய் நிற்கின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    Last edited by RAGHAVENDRA; 28th September 2015 at 05:25 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, sivaa liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •