Page 214 of 401 FirstFirst ... 114164204212213214215216224264314 ... LastLast
Results 2,131 to 2,140 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #2131
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்
    படித்தேன்
    ரசித்தேன்
    சுவைத்தேன்
    எல்லாம் தேன்
    நன்றி

    தீனதயாளன் வாசுவின்
    உடம்பிற்குள் புகுந்து
    மிரட்டி விட்டார்.

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2132
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Reproduced from the FB page of Shri Nagarajan
    Last edited by RAGHAVENDRA; 28th September 2015 at 06:07 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2133
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    திரு பாஸ்கர் சார்
    நான் முகநூளில் பழைய வசூல் விபரங்களை வங்கி வட்டி வீதம் கணக்கிட்டு இன்றைய மதிப்பாக வெளியிட்டிருக்கிறேன் .அதைகண்டு நிறைய நண்பர்கள் நமது திலகத்தின் மீது மதிப்பும் பற்றும் கூடுதலாக வைத்துள்ளதாக கூறும்போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்

  6. Thanks eehaiupehazij, Russellbzy thanked for this post
  7. #2134
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    முத்தையன் சார்,

    நடிகர் திலகம் திரியில் நடிகர் திலகத்தின் படங்களை பதிவு செய்வதற்கு நீங்கள் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. இங்கே அனைவருக்கும் இடம் உண்டு. நண்பர் வாசுவிற்காக நீங்கள் முன்னரே சொன்னது போல் உங்களுக்கு பிடித்த ஞான ஒளி படத்தின் ஸ்டில்களை பதிவு செய்யுங்கள்.

    நன்றி!

    அன்புடன்

  8. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, ifohadroziza liked this post
  9. #2135
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by vcs2107 View Post
    திரு பாஸ்கர் சார்
    நான் முகநூளில் பழைய வசூல் விபரங்களை வங்கி வட்டி வீதம் கணக்கிட்டு இன்றைய மதிப்பாக வெளியிட்டிருக்கிறேன் .அதைகண்டு நிறைய நண்பர்கள் நமது திலகத்தின் மீது மதிப்பும் பற்றும் கூடுதலாக வைத்துள்ளதாக கூறும்போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்
    எனது தனிமடல் பாருங்கள் நன்றி
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. Likes Russellbzy liked this post
  11. #2136
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவலைகள்

    பார்ட் 3 நடிகர்திலகத்தின் கம்பீர உச்சரிப்பால் பெருமை பெற்ற ஆங்கில வார்த்தைகள் !!

    Never ...I don't care....No peace of Mind....To be or Not to be ..You too Brutus ....Twinkle Twinkle Little Star .....I am a little tea pot ....Get Out!!

    முறையான பள்ளிவழி ஆங்கிலக் கல்வி கற்றவறல்ல என்றாலும் தனது உச்சரிப்புத் தனித் தன்மையாலும் அபார ஞாபகசக்தி திறனாலும் பகுத்தறியும் தன்மையாலும் ஆங்கிலத்தையும் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தவர் நடிகர் திலகம் !



    கௌரவம் திரைப்படத்தில் ஒரு MGM சிங்கம் போல அவர் கர்ஜிக்கும் NEVER என்னும் வார்த்தையும், சாந்தி திரைப்படத்தில் தனது தர்ம சங்கடமான சூழலில் அந்தக் கால ராமராஜனான எஸ் எஸ் ஆர் திரும்பி வந்து தன்னுடன் வாக்குவாதம் முற்றும் பொது உறுமும் I don't care வார்த்தைகளின் ஏற்ற இறக்க Modulation ...ஞான ஒளி திரைப்படத்தில் போலீஸ் நண்பனால் இம்சிக்கப் படும் போது மனம் வெறுத்து பாடும் No peace of Mind..... உதட்டசைவு...பிரஸ்டிஜ் பத்மநாபனின் மணிப் பிரவாள ஆங்கில வசன நடை ...புதிய பறவையின் Pleasure is mine சௌகாரிடம் வெளிப்படுத்தும் மிடுக்கு......தங்கப் பதக்கத்தின் Twinkle Twinkle Little Star........என்னைப் போல ஒருவனில் I am a Little Tea Pot....ராஜபார்ட் ரங்கதுரையின் To be or Not to be.....சொர்க்கம் திரைப் படத்தில் இறுதிக் கட்ட ஜூலியஸ் சீசரின் You too Brutus.....விளையாட்டுப் பிள்ளையில் திடீர் ஆங்கில சொற்பொழிவு ....!

    இதற்கெல்லாம் சிகரம் பாசமலரில் பல்லைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தையும் கோபத்தையும் பென்சில் சீவுவதில் வெளிப்படுத்தி காதல் மன்னரை Get Out என்று விரல் சுட்டி விழியால் வெளியே வழிகாட்டும் காட்சியே !



    என்னதான் மேஜர் சுந்தரராஜனும் வி எஸ் ராகவனும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி பீட்டரடித்தாலும் நடிகர்திலகத்தின் தனித் தன்மையான தன்னம்பிக்கை நிறைந்த ஆங்கில உச்சரிப்பு பாராட்டுதலுக்குரியதே!!

    மறக்க முடியாத நினைவலைகள் தலைவா!! RIP (Rest in Peace but Return If Possible)

    செந்தில்
    Last edited by sivajisenthil; 28th September 2015 at 10:59 PM.

  12. #2137
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் ரவி கிரன் சார்
    நீங்கள் அன்பு நண்பர் ஆதிராம் பதிவுக்கு அளித்த பதில் நியாயமான பதிலாக இல்லை!
    ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்! நமக்கு மிகவும் பிடித்தவர்கள் தவறு செய்யும் போது தான் நமக்கு கோபம் வரும்! அதாவது உரிமை உள்ள இடத்தில்
    தான் கோபதாபம் இருக்கும்! நான் அவரின் சினிமா மட்டும் பார்த்து ரசித்த ரசிகன் அல்ல! சிவாஜி சொந்த கட்சி tmm 1989 சட்டமன்ற தேர்தலில் திருச்சி 1 ம்
    தொகுதியில் போட்டியிட்டபோது என் அலுவலகத்தில் 15 நாட்கள் விடுப்பு எடுத்து தேர்தல் வேலை பார்த்தவன்! அப்போதே 10000 ரூபாய்க்கு மேல் என் சொந்த
    பணத்தை செலவு செய்தவன்! திருச்சியில் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு எங்கள் மாரிஸ்குரூப் சிவாஜி பக்தர்கள் எங்களால் முடிந்த நிதியினை
    இன்று வரை செலவு செய்கிறோம்! சிவாஜி மீது எனக்கு முழு உரிமை உள்ளது! நீங்கள் திருச்சிக்கு வந்து செல்பவர் தானே? என்னை பற்றி நான் சிவாஜிக்கு
    செய்யும் தொண்டு பற்றி ரசிகர்களிடம் கேட்டு பாருங்களேன்!
    இன்றைக்கு காலையில் மதுரை ரசிகர் ஒருவர் என்னிடம் பேசினார்! அவர் என்ன சொன்னார் தெரியுமா? பாஸ்கர் நீங்கள் சிவாஜியின் அரசியல் பற்றி எழுதுவது
    எல்லாம் அவரின் 99% ரசிகர்கள் ஏற்று கொள்ளும் உண்மைதான்! ஆனாலும் நீங்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்வது எங்களுக்கு வருத்ததை
    கொடுக்கிறது! எல்லோருக்கும் எல்லாமும் நல்லபடி அமைந்து விடாது! நம் தலைவருக்கு அரசியலில் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!
    எனவே அதை கெட்ட கனவாக மறந்து விட்டு அவரின் சிறப்புக்களை பதிவிடுங்கள்! இனிமேல் அவரின் அரசியலை கடுமையாக விமர்சித்தால் உன்னிடம்
    நான் பேச மாட்டேன் என்று கூறினார்! நானும் அவரிடம் சிவாஜியின் உண்மையான ரசிகர்கள் வருத்தப்படும்படி இனி பதிவிட மாட்டேன் என்று கூறி
    விட்டேன்! ரவிகிரன் சார் மதுரை ரசிக நண்பர் சொல்வது ஏற்று கொள்ளக்கூடியது! ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று விதண்டா
    வாதம் செய்வது யாரென்று திரியின் பார்வையாளர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் !
    இன்னொரு விஷயம் சொல்கிறேன் சார்! சிவாஜி ஆரம்பகாலம் முதல் அரசியலில் திட்டமிடவில்லை! அவருக்கு பெரிய குடும்பம்! சினிமாவில் ரொம்ப பிஸி! அதனால் அரசியலில் வெற்றிகாண முடியவில்லை என்று சொல்கிறீர்கள்! ஓகே! ஆந்திராவில் nt ராமாராவ் கட்சி ஆரம்பித்து ஆறே மாதங்களில்
    ஆட்சியை பிடித்தார் ! அதற்கு முன்பு அவர் அரசியலில் ஈடுபடவே இல்லை! அவர் சினிமாவிலும் பிஸி தான்! சிவாஜியை விட பெரிய குடும்பம் உடையவர்!
    இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்ல போகிறீர்கள்? நாமெல்லாம் படித்தவர்கள்! உண்மை என்றும் உண்மை தான்!
    இனி மதுரை நண்பருக்கு கொடுத்த வாக்கின்படி நடிகர்திலகத்தின் அரசியல் குறித்த விமர்சனம் என்னிடமிருந்து வராது!
    நன்றி
    ரவி சார் !

  13. #2138
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy Mr. Sudhangan's Face book

    செலுலாய்ட் சோழன் – 90
    சிவாஜி கணேசனுக்கு மணி விழா அரசே கட்டுவதாக தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
    இது சிவாஜி ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சீயை கொடுத்திருக்கிறது!
    நடிப்பு என்பதற்கு சிவாஜி என்பதுதான் பொருள்.
    அவர் நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக பல படங்கள் இருந்தாலும், அதில் ஒரு மிகச் சிறந்த உதாரணம் தான் ` திருவிளையாடல்’ படம்!.
    தமிழ் உச்சரிப்பு எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு சிறந்த உதாரணம் இந்த படம் தான்.
    நாரதன் பழத்தை கொண்டு வந்து கொடுத்துவுடன் சிவன்னான் சிவாஜி, தன் உமையவளான சாவித்திரியைப் பார்த்து, ` உமா, சக்தி இல்லையேல் சிவம் இல்லை. இதை நானும் ஏற்றுக்கொண்டுவிட்டேன். உலகத்தார் அம்மையப்பன் என்று தானே சொல்கிறார்கள். அப்பன்ம்மை என்று சொல்வதில்லையே! அதனால் இதை நான் சாப்பிடுவதை விட நீ சாப்பிடுவதுதான் சாலச் சிறந்தது’ என்று உமையவளிடம் கொடுத்துவிடுவார்.
    பழத்தை வாங்கிய உமையவள் அதிலிருக்கும் நாடகத்தை புரிந்து கொண்டு ஈசனை பார்த்து சிரிப்பாள்!
    `சுவாமி, நீங்களே சொல்லிவிட்டீர்கள் அம்மையப்பன் என்று அப்படியிருக்கும்போது இந்த படம் நமக்கெதற்கு!. மேலும் இனி எதிர்காலம் என்பது பிள்ளைகளின் கையில் அதனால் இதை அவர்களிடமே கொடுத்துவிடலாம்’ என்பார்.
    இந்த காட்சியின் சூட்சமத்தை ரசிகர்களும் ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு கைதட்டி ஆராவாரித்தார்கள்,.
    ஒரு புராணப் படத்தின் சுவாரஸ்யத்தை எப்படி கூட்ட வேண்டும் என்பதற்கு இந்த படத்தை உதாரணமாக சொல்லலாம்!
    இப்போது பிள்ளைகளான வினாயகனும் முருகனும் வருவார்கள்!
    இருவருமே பழம் தங்களுக்குத்தான் வேண்டுமென்பார்கள்.
    `பழத்தை இருவருக்குமே பிரித்து கொடுத்து விடலாம்’ என்பார் உமையவள்!
    `இல்லை இது ஞானப்பழம்! முழுவதுமாக சாப்பிட்டால்தான் பலனிருக்கும், இல்லையா நாரதா !’ என்பார் ஈசன்.
    சொல்லிவிட்டு அவரே, ` இது சாதாரண பழமல்ல!~ இது ஞானப் பழம்! இதை சாப்பிடும் தகுதி நம் பிள்ளைகளுக்கு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஒரு சோதனை வைத்துப் பார்க்கலாமே’ என்பார் சிவன்!
    `சோதிப்பதிலும் சோதனை செய்வதிலும் நீங்கள் தான் வல்லவர். அதனால் அதையும் நீங்களே செய்துவிடுங்களேன்’ என்பாள் உமையவள்.
    ஈசனின் திருவிளையாடல் அங்கே துவங்கும்!
    `வினாயகா, முருகா உங்கள் இருவரின் யார் முதலில் உலகத்தை சுற்றி வருகிறீர்களோ அவர்களுக்குத்தான் இந்த ஞானப் பழம்’ என்பார் ஈசன்.
    கதையின் விறுவிறுப்பு கூடும்.
    உடனே முருகன் ` இதோ ஒரு நொடியில் உலகத்தை சுற்றி வருகிறேன்’ என்று கிளம்புவார்.
    வினாயகன் உடனே நாரதரைப் பார்த்து, ` நாரதரே உலகம் என்றால் என்ன? அம்மையப்பன் என்றால் என்ன ? ‘ அம்மையப்பன் தானே உலகம்? ‘ என்று கேட்பார்.
    உடனே நாரதனும் ` அதிலென்ன சந்தேகம் என்ன!’ என்பார்
    வினாயகர் அம்மையப்பனை சுற்றி வந்து பழத்தை பெற்றுக்கொள்வா.
    முருகன் மயில் மீதேறி உலகத்தை வானுலகில் வலம் வருவார்.
    முருகன் மயிலில் அமர்ந்து வானுலகில் மிதந்து போகும் போது, அரங்கமே கைதட்டல்லால் அதிரும்.!
    காரணம் அந்த நாட்களில், அதாவது 1965ம் வருடங்களில் இன்றிறுக்கும் தொழில் நுட்ப வசதிகள் கிடையாது.
    அதனால் முருகன் வான் மீது பறந்து செல்லுவது ரசிகர்களுக்கு ஒரு பிரமிப்பான காட்சியாக இருக்கும்.
    முருகன் திரும்பி வந்தவுடன், விஷயத்தை தெரிந்து கோபப்படுவான்.
    `பலே! பெரியவர்களெல்லோரும் சேர்ந்து நடத்திய நாடகம்’, மிக்க மகிழ்ச்சி! நான் வருகிறேன்’என்று கோவித்துக்கொண்டு கிளம்புவார்,
    `முருகா எங்கே போகிறாய்?’கேட்பார் உமையவள்.
    `எங்கோ போகிறேன்! என்னை ஏன் தடுக்கிறீர்கள் ? அம்மட்டும் இந்த சிறு பழ விஷயத்தில் உங்கள் குணத்தை காட்டியதற்கு நன்றி. வருகிறேன்’
    `குமரா! பதட்டத்தில் தவறான முடிவிற்குப் போகாதே தாய் சொல்லைக் கேள்‘ என்பார் ஈசன்.
    `தலைப்பிள்ளைதான் செல்லப்பிள்ளை. இளையபிள்ளை எடுப்பார் கைபிள்ளை என்று காட்டிய உங்களுடன் இனி ஒரு கணமும் இருக்க மாட்டேன்.’
    `எங்களை விட்டு எங்கே போகிறாய்’ பதறுவாள் உமையவள்.
    `எனக்கென்று ஒரு உலகம்! என் நாடு! என் மக்கள் என்று ஏற்படுத்திக்கொண்டு தனிமையில் இருக்கப்போகிறேன்/ முடிந்தால் எல்லோரும் என்னை அங்கு வந்து பாருங்கள்’
    முருகா! குமரா! வேலவா’ என்று எழுந்து பிள்ளையை தடுக்க முயலுவாள் உமையவள்,
    `நாரதா! நி நினைத்து வந்த காரியம் சுலபமாக முடிந்து விட்டதல்லவா! என்பார் ஈசன்.
    உடனே உமையவளிடம் வந்த ஈசன், ` பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்பதற்கு உதாரணம் காட்டிவிட்டு போகிறான் உன் மகன்.;
    `அவனை இப்படியே விட்டுவிடுவதா !’ என்று கேட்பார் உமையவள்.
    உடனே ஈசன் அங்கிருந்து மறைந்து முருகன் போகும் வழியில் நின்று, ` முருகா! தமிழ்வேலே! போகாதே நில்! இதுவும் எம் விளையாட்டுகளில் ஒன்று’ என்பார்
    கேட்காமல் முருகன் போய்க் கொண்டேயிருப்பான்,
    அடுத்து என்ன ஆகும் என்கிற விறுவிறுப்பு படத்தின் ஆரம்பத்திலிருந்தே கூடிக்கொண்டே போகும்.
    அடுத்து உமையவள் முருகனை வழிமறித்து, ` குமரா! நீ கோபப்படுமளவிற்கு தவறொன்றும் நடந்துவிடவில்லை. சினத்தை விடு! தனித்து செல்லாதே ’ என்று சொல்லி பார்ப்பாள்.
    அடுத்து வினாயகன் வழியில் சென்று, ` தம்பி! பழத்தை வேண்டுமானால் நீயே வைத்துக் கொள் போகாதே என்பார்!
    இவர்கள் பேச்சுக்கெல்லாம் செவி மடுக்காத முருகன், அடுத்து ஒரு குரல் கேட்டு அப்படியே நிற்பான்.
    `முருகா! என்று ஒரு குரல் கேட்கும்,
    முருகன் அப்படி நின்று திரும்பி, ` யாரது ?’ என்பான்
    அதாவது பெற்றோர், சகோதரனுக்குக் கூட செவி மடுக்காத முருகன் `தமிழுக்கு செவி மடுப்பான்’ என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பார் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்.
    இந்த படத்தில் தான் எத்தனை இதிகாச புராண சம்பவங்களை சுவாரஸ்யமாக சின்ன சின்ன விஷயங்கள் இழைத்துக் காட்டியிருப்பார் இயக்குனர்.
    இப்போது படத்தை பார்த்தாலும் ஒரு வினாடி கூட சலிக்காமல் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டேயிருக்கும்.
    `முருகா! ஞான பண்டிதா!’ என்று அந்த பெண் குரல் கேட்டதும், முருகன் திரும்பி, `ஒ! ஒளவையா ?’ என்று கனிவோடு கேட்பான்.
    அந்த தமிழ்த்த்யாக வருவார் கே.பி சுந்தராம்பாள்.
    அப்போதுதான் ஒளவை ` ஞானப்பழந்த்தைப் பிசைந்து’ என்று பாடத்துவங்குவார் ஒளவை.
    அந்த கணீர் குரல் எழும்பும்போதே அரங்கம் அதிரும்.!
    படத்தின் சுவாரஸ்யத்தை விட ரசிகர்களின் மேம்பட்ட ரசனை மெய்சிலிர்க்க வைக்கும்.
    சும்மாவா படம் 250 நாட்களுக்கு மேல் ஒடியது.!
    (தொடரும்)

  14. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellbzy, eehaiupehazij liked this post
  15. #2139
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆமாம். இவர் ஒருவர் தான் நடிகர் திலகத்தின் ரசிகர். மற்றவர்களெல்லாம் அவர் வீட்டு எடுபிடிகள்.

    கன்ஸ்யூமர் கோர்ட்டில் தான், ஒருவர்,தான் செலவழித்த பொருளின் மேல் உரிமை கொண்டாடுவார். கடையில் காசு கொடுத்து ஒரு பொருளை வாங்குபவர் தான், நான் இவ்வளவு செலவழித்தேன், அதற்கான பலனில்லை எனக் கேட்பார். பிரதிபலன் பாராமல் செலவு செய்பவர் அதை சொல்லிக் காட்டமாட்டார். எத்தனையோ ரசிகர்கள் தங்கள் சொந்த காசில் தான் நடிகர் திலகத்திற்கு இன்று வரை எந்த பிரதிபலனும் பாராமல் செய்து வருகிறார்கள். எல்லோருக்குமே அவருடைய அரசியல் தோல்வியில் வருத்தமுள்ளது என்றாலும் அதற்காக எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு அதி மேதாவி போல அவரை விமர்சிப்பது இல்லை. அவர் செய்வது செய்தது எல்லாம் சரி என எத்தனையோ பேர் இன்றும் முழுமையாகத் தங்களை நடிகர் திலகத்தின் பால் அர்ப்பணிப்பு உணர்வுடன் அவருக்குப் பணியாற்றுகிறார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருளுமாம். அதைப் போல தான் சொல்வது தான் சரி என விதண்டாவாதம் செய்வது, எந்த வகையிலாவது பூதக்கண்ணாடி வைத்து நடிகர் திலகத்தை தப்பு சொல்ல ஏதாவது துப்பு கிடைக்காதா எனத் தேடித் தேடி மீண்டும் மீண்டும் அவர் மேல் தவறு இருப்பதாக சித்தரித்து மாபெரும் சாதனையாளராகத் தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்கிற சுயநலமே ஓங்கி நிற்கிறதே தவிர வேறேதும் இல்லை. 99 சதம் பேர் இவரிடம் வந்து ஒத்துக் கொண்டார்களாம். ஏன் அந்த ஒரு சதவீதத்தை விட்டு விட்டீர்கள். 0.0001 சதவீதம் மட்டும் எனக்காக விட்டு விட்டு மற்ற அத்தனை சதவீதமும் உங்கள் பக்கமே வைத்துக்கொள்ளுங்களேன். யார் வேண்டாம் என்றது. உங்களுக்குத் தான் இங்கு அனைவருமே ஆதரவிருக்கிறார்களே. ஏன் ஒரு சதவீதம் கூட பாக்கி வைக்கிறீர்கள்.

    கையில் எந்த ஆவணமும் இல்லாமல் ஒரு வாக்குவாதத்தை ஆரம்பித்து விட வேண்டியது. அதற்கப்புறம் நீ அவல் கொண்டா நான் உமி கொண்டு வருகிறேன் என எல்லோரிடமும் கேட்க வேண்டியது.

    த.மு.மு.திருச்சியில மட்டும் நடத்தப்பட வில்லை. தமிழகமெங்கும் நடத்தப்பட்டது. எல்லா ஊர்களிலும் ரசிகர்கள் இருந்தார்கள். எல்லா ஊர்களிலும் தொண்டாற்றினார்கள். ஐம்பது வேட்பாளர்கள் தேர்தலில் இறங்கினார்கள். எல்லாருமே நடிகர் திலகத்தை வசை பாடிக்கொண்டிருக்கவில்லை.

    த.மு.மு. வெற்றி பெற்றிருந்தால் ... என்பதை விட அப்படிக் கிடைக்கக்கூடிய வெற்றியில் ஒரு தர்மம், நியாயம் இருக்க வேண்டும் எனத் தான் நடிகர் திலகம் விரும்பினார். அந்த வரையில் வரலாற்றில் ஒரே நேர்மையாளராக, ஒரே தர்மசீலனாக, ஒரே சத்தியசீலனாக, நெஞ்சு நிமிர்த்தி நம்மை பெருமைப் பட்டுப் போற்றும் வகையில் தான் அரசியல் நடத்தியிருக்கிறார் நடிகர் திலகம். இது இந்திய அரசியல் வரலாற்றில இது வரை எந்த தலைவனும் செய்யாத சாதனை. தோல்வியிலும் கர்வத்தைக் கொடுத்த ஒரே தலைவன் நடிகர் திலகம் மட்டுமே. சதித்திட்டங்கள் தீட்டி பெரும் வெற்றியை விட நேர்மையான தோல்வி என்றுமே நல்ல பெயரைத் தரவல்லது. அந்த வகையில் எந்தத் தவறும் தன் வாழ்நாளில் இழைக்காத ஒரே தலைவன் மக்கள் தலைவன் நடிகர் திலகம் மட்டுமே.

    இங்குள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட எதிர்காலம் நிச்சயம் இதை அங்கீகரிக்கும். இங்கும் மனசாட்சியுள்ளவர்கள் என் கருத்தில் நிச்சயம் உடன்படுவார்கள். அவர்கள் வெளிப்படையாக ஆதரிக்க மனமில்லாவிட்டாலும் கூட.

    முரளி சார், நடிகர் திலகம் தன் அரசியல் வாழ்க்கையில் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நிலைநிறுத்துவது எனது கடமை, உரிமையும் கூட. எனவே எப்போது யார் எந்த வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நடிகர் திலகத்தின் அரசியலைக் குறை சொன்னாலும் நான் பதில் சொல்லிக்கொண்டு தானிருப்பேன். எனவே நடிகர் திலகத்தின் அரசியலைக் குறை கூறுவது நிற்கும் வரை என்னுடைய பதில் பதிவுகளும் நிற்காது. இதற்காக தாங்கள் நெறியாளர் என்கின்ற முறையில் என்னுடைய பயனாளர் இணைப்பை ரத்து செய்தாலும் கவலைப்பட மாட்டேன்.
    Last edited by RAGHAVENDRA; 29th September 2015 at 12:12 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. #2140
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by baskar trichi View Post
    அன்பு நண்பர் ரவி கிரன் சார்
    நீங்கள் அன்பு நண்பர் ஆதிராம் பதிவுக்கு அளித்த பதில் நியாயமான பதிலாக இல்லை!
    ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்! நமக்கு மிகவும் பிடித்தவர்கள் தவறு செய்யும் போது தான் நமக்கு கோபம் வரும்! அதாவது உரிமை உள்ள இடத்தில்
    தான் கோபதாபம் இருக்கும்! நான் அவரின் சினிமா மட்டும் பார்த்து ரசித்த ரசிகன் அல்ல! சிவாஜி சொந்த கட்சி tmm 1989 சட்டமன்ற தேர்தலில் திருச்சி 1 ம்
    தொகுதியில் போட்டியிட்டபோது என் அலுவலகத்தில் 15 நாட்கள் விடுப்பு எடுத்து தேர்தல் வேலை பார்த்தவன்! அப்போதே 10000 ரூபாய்க்கு மேல் என் சொந்த
    பணத்தை செலவு செய்தவன்! திருச்சியில் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு எங்கள் மாரிஸ்குரூப் சிவாஜி பக்தர்கள் எங்களால் முடிந்த நிதியினை
    இன்று வரை செலவு செய்கிறோம்! சிவாஜி மீது எனக்கு முழு உரிமை உள்ளது! நீங்கள் திருச்சிக்கு வந்து செல்பவர் தானே? என்னை பற்றி நான் சிவாஜிக்கு
    செய்யும் தொண்டு பற்றி ரசிகர்களிடம் கேட்டு பாருங்களேன்!
    இன்றைக்கு காலையில் மதுரை ரசிகர் ஒருவர் என்னிடம் பேசினார்! அவர் என்ன சொன்னார் தெரியுமா? பாஸ்கர் நீங்கள் சிவாஜியின் அரசியல் பற்றி எழுதுவது
    எல்லாம் அவரின் 99% ரசிகர்கள் ஏற்று கொள்ளும் உண்மைதான்! ஆனாலும் நீங்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்வது எங்களுக்கு வருத்ததை
    கொடுக்கிறது! எல்லோருக்கும் எல்லாமும் நல்லபடி அமைந்து விடாது! நம் தலைவருக்கு அரசியலில் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!
    எனவே அதை கெட்ட கனவாக மறந்து விட்டு அவரின் சிறப்புக்களை பதிவிடுங்கள்! இனிமேல் அவரின் அரசியலை கடுமையாக விமர்சித்தால் உன்னிடம்
    நான் பேச மாட்டேன் என்று கூறினார்! நானும் அவரிடம் சிவாஜியின் உண்மையான ரசிகர்கள் வருத்தப்படும்படி இனி பதிவிட மாட்டேன் என்று கூறி
    விட்டேன்! ரவிகிரன் சார் மதுரை ரசிக நண்பர் சொல்வது ஏற்று கொள்ளக்கூடியது! ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று விதண்டா
    வாதம் செய்வது யாரென்று திரியின் பார்வையாளர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் !
    இன்னொரு விஷயம் சொல்கிறேன் சார்! சிவாஜி ஆரம்பகாலம் முதல் அரசியலில் திட்டமிடவில்லை! அவருக்கு பெரிய குடும்பம்! சினிமாவில் ரொம்ப பிஸி! அதனால் அரசியலில் வெற்றிகாண முடியவில்லை என்று சொல்கிறீர்கள்! ஓகே! ஆந்திராவில் nt ராமாராவ் கட்சி ஆரம்பித்து ஆறே மாதங்களில்
    ஆட்சியை பிடித்தார் ! அதற்கு முன்பு அவர் அரசியலில் ஈடுபடவே இல்லை! அவர் சினிமாவிலும் பிஸி தான்! சிவாஜியை விட பெரிய குடும்பம் உடையவர்!
    இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்ல போகிறீர்கள்? நாமெல்லாம் படித்தவர்கள்! உண்மை என்றும் உண்மை தான்!
    இனி மதுரை நண்பருக்கு கொடுத்த வாக்கின்படி நடிகர்திலகத்தின் அரசியல் குறித்த விமர்சனம் என்னிடமிருந்து வராது!
    நன்றி
    ரவி சார் !
    இனிய நண்பர் திரு பாஸ்கர் அவர்களுக்கு

    திரு ஆதிரம் அவர்கள் சந்தர்பவாத அரசியல் யார் தான் பண்ணவில்லை இவர் பண்ணினால் என்ன என்ற பொருள் புதைந்த ஒரு கேள்வி எழுப்பினார்...அதற்க்கு நான் அதே போல பொருள் பொதிந்த ஒரு கேள்வியை அவர் முன் வைத்தேன் ...இதில் ஏன் ஞாயம் இல்லை என்கிறீர்கள் பாஸ்கர் சார் ?

    சிவாஜிக்கு ஒரு சட்டம் ..திரு ஆதிராம் அவர்களுக்கு ஒரு சட்டமா ?

    நான் கூறுவதை மற்றவர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் எப்போதும் எதிர்பார்ப்பது கிடையாது. மேலும் நடிகர் திலகம் அவர்கள் அரசியல் மற்றும் அவரது நிலைபாடுகள் இவை இருந்த காலத்தில் எனக்கு வயது 1 வயது முதல் 17 வயது இருக்கும்.

    இப்போதுதான் நான் அவற்றை நினைத்துபார்த்து ஒரு மெச்சூரிட்டி வரும்போது அதன் அடிபடையில் என்னுடைய என்னத்தை பதிவிட்டேன். நீங்கள் 10,000 செலவு செய்தீர்கள் என்கிறீர்கள். அவர் அரசியல் நிலைப்பாடு தெரிந்தும் ஏன் நீங்கள் செலவு செய்தீர்கள் என்ற ஒரு கேள்வி கூடவே எழாதா சார் ?

    நீங்கள் மட்டும் அல்ல பல நடிகர் திலகம் ரசிகர்கள் ....அபிமானிகள்...திரு mgr அவர்களுடைய மட்டுமே ரசிகர்கள் அபிமானிகள் கூட செலவு செய்திருப்பார்கள்..செய்துள்ளார்கள்...பணம் செலவு செய்ய இயலாதவர்கள் தங்கள் உடல் உழைப்பை தந்துள்ளார்கள்....இவ்வளவு ஏன்...நம்முடைய மக்கள் திலகம் திரியில் உள்ள பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் அந்த சமயத்தில் எவ்வளவோ உழைப்பை இந்த கூட்டணிக்காக இதன் வெற்றிக்காக கொடுத்துள்ளார் என்பது எனக்குமே தெரியும்....ஒரு மக்கள் திலகம் அவர்களுடைய ஆழ்ந்த முரட்டு பக்தர் என்ற நிலையிலும் அவர் நம் நடிகர் திலகம் மக்கள் திலகம் அவர்களுடைய துணைவியாருக்கு மற்றவர்கள் கைவிட்டும் சந்தர்ப்பவாதம் காட்டியும் இவர் மட்டும் அதுபோல செய்யாமல் சொந்த காசை செலவு செய்து அவருடனே இருந்தார். அப்படி பட்டவர், தொழில் முறையில் போட்டியாளராக இருந்தும் இவ்வளவு செய்கிறார் என்றபோது, திரு செல்வகுமார் போன்ற பல மக்கள் திலக பக்தர்கள் அவர்களால் இயன்ற அளவிற்கு பணியாற்றினார்கள்.....! ஆனால் என்ன செய்ய ? கவர்ச்சி கடமையையும் மிஞ்சியது பெருத்த ஏமாற்றமே ...! அததற்கு நேரம் என்ற ஒன்று சரியாக அமையவேண்டும் சார் !

    Ntr குடும்பமும் நடிகர் திலகம் குடும்பமும் ஒன்றா ?

    NTR அவர்கள் மேற்றிகுலஷியன் படித்தபிறகு குண்டூரில் உள்ள ஆந்திரா க்ரிச்டிஎன் கல்லூரியில் படித்தவர்...படித்த பிறகு மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் இல் சப் ரேஜிச்டார் ஆக வேலை பார்த்தவர் ..பிறகு 1949 இல் சினிமாவில் நுழைந்தவர் ...இவர் ஏழ்மயானவரா அல்லது 3வது வரை மட்டுமே படிக்க முடிந்த நடிகர் திலகம் ஏழ்மை பாரம்பரியம் உள்ளவரா ?

    சும்மா ஏதாவது சொல்லவேண்டுமே என்று சொல்லாதீர்கள் சார்

    Ntr குடும்பத்தின் சொத்து அவர் திரைக்கு வரும்போது என்ன என்று தெரியுமா ?

    நடிகர் திலகத்திடம் என்ன இருந்தது என்று தெரியுமா?

    Ntr அவர் தம் தம்பிமார்கள், தமக்கையர் பற்றி இதுவரை ஒரு கூட்டுக்குடும்பமாக எந்த பத்திரிகையிலும் நான் படித்ததும் இல்லை...கேள்விபட்டதும் இல்லை.

    Ntr அவர்கள் ஏழ்மயிலா இருந்தார் நடிகர் திலகம் போல ?

    அட போங்க சார்.....சும்மா ஏதாவது ஒரு தமாஷ் பண்ணிட்டு !


    சாகவேண்டும் என்று ஒருவன் கடலில் குதிக்க ....பை நிறைய முத்தெடுத்து கரை சேர்ந்தானாம்....

    முத்தேடுக்கவேண்டும் என்று கடலில் குதித்தவன் ..மூச்சு திணறி இறந்தே போனானாம் என்ற பழமொழி தாங்கள் கேட்டதுண்டு என்று நினைக்கிறன்.

    நடிகர் திலகம் - அரசியல் - மறக்கவேண்டிய காலம் !

    நடிகர் திலகம் - திரைபடம் - வசந்தம் என்றும் வீசும் காலம் !
    Last edited by RavikiranSurya; 29th September 2015 at 12:03 AM.

  17. Likes RAGHAVENDRA, Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •