Page 74 of 401 FirstFirst ... 2464727374757684124174 ... LastLast
Results 731 to 740 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #731
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #732
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை கர்னாடிகிலிருந்து.....சிவாஜிசெந்தில்
    காலை 11 மணி காட்சி!

    முதல் நாள் முதல் ஷோவிலேயே ஹிட் அடித்து விட்டது நடிகர்திலகத்தின் மகுடப் படமான VPKB!
    பால்கனியில் சுமாரான கூட்டமே நாங்கள் ஒரு பதினைந்து பேர்தான். கீழே முதல் வகுப்பில் ஆரம்பித்து அனைத்து வகுப்புக்களும் 70 சதவீதத்துக்கு மேல் நிறைந்து விட்டது!


    படத்தின் டிஜிட்டல் சினிமாஸ்கோப் பிரதி தொண்ணூறு சதவீதம் பிரமாதம் காட்சிகளின் க்ளாரிட்டி அள்ளுகிறது! காட்சிக்கு காட்சி வசனங்களின் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டல் மழையே !

    காமெடி நடிகர்களின் பாடல் காட்சி சற்று திருஷ்டிப் பொட்டான தொய்வே !சுயபுத்தி அல்லது சொல்புத்தி நிச்சயம் தேவை!!

    பாத்திரமறிந்து அனைத்து குணசித்திர நடிக நடிகையரும் திருப்திகரமான நடிப்பை நல்கியிருந்தாலும் இப்படம் பிரேமுக்கு பிரேம் நடிகர்திலகத்தின் யானைப் பசிக்கு திறந்து விடப்பட்ட கரும்புத் தோட்டமே !

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காத வசனப் பொழிவுகளில் நடிகர்திலகத்தின் பிரம்மிக்க வைக்கும் உலகத் தர நடிப்பு தமிழ் மண்ணின் நிரந்தரப் பெருமையே !!

    சிறார்கள் மாணவ மணிகள் தவற விடக் கூடாத தவப்புதல்வனின் தேசபக்திக் காவியம்! 56 வருடங்கள் கடந்தும் கிராபிக்ஸ் கலப்பற்ற பிரம்மாண்டம்!
    கர்ணனின் வெற்றிப் பாதையை அடியொற்றி.... பெருமைப்படுகிறோம்....நடிகர் திலகத்தின் முரட்டு பக்தர்களாக!!


    Hats off to Kovai Sivaji Fans' excellent flex arrays...as per Arima Senthil's postings!!
    Last edited by sivajisenthil; 21st August 2015 at 06:04 PM.

  4. Likes Georgeqlj, Russellmai liked this post
  5. #733
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    நண்பர்களே,
    பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. தோல்வியை வைத்து நமது மக்கள் தலைவரை முட்டாள் என்றும் அதிமேதாவி என்றும் நண்பர் பாஸ்கர் எழுதியிருப்பது என் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. ஒரு மாடரேட்டர் இல்லாமலேயே எம்.ஜி.ஆர்.திரி நண்பர்கள் பல பாகங்களை அருமையாக நடத்திச் செல்கிறார்கள். இங்கோ தலைவனையே மிகவும் கேவலமாக விமர்சிப்பது நடைபெறுகிறது. இதற்கு மற்ற நண்பர்கள் சிலர் லைக் போட்டு ஆதரவு வேறு. என்னை தனிப்பட்ட முறையில் பலமுறை விமர்சித்த போது கூட நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தலைவரின் புகழைப் பாடி வந்திருக்கிறேன். இங்கோ நம் ஒப்பற்ற தெய்வப்பிறவியை, அரசியலிலும் நேர்மையும் தர்மமும் நியாயமும் கடைப்பிடித்த மக்கள் தலைவனை, தலைவன் என்று சொல்வதைக் கூட கேலி செய்யும் பதிவுகள் வருகின்றன.

    ஒரு சாராருக்கு ஒரே தீர்மானம் தான். நடிகர் திலகம் புகழ் பாடுகிறோமோ இல்லையோ மாற்று முகாமுக்கு மறுப்பு பதிவு போட வேண்டும் அவர்களை எதிரிகளாக பாவிக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த விதமான பதிவுகளும் வருவதில்லை.

    இன்னொரு சாராருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அவரைப் பாராட்டக் கூடாது. ஏனென்றால் ஒரு மனிதன் Instalmentல் தான் நல்லவனாக இருப்பான். உலகம் இவ்வளவு தான் படத்தில் நாகேஷ் ஆறு மாதத்திற்கு நல்லவனாகவும் ஆறு மாதத்திற்கு கெட்டவனாகவும் இருக்கும் பாத்திரம். இவர்களுக்கு ஒரு காலகட்டத்திற்கு மேல் நடிகர் திலகத்தின் நடிப்பில் நேர்மையில்லை, தொழிலுக்கு விசுவாசமாயில்லை, கண்ட மேனிக்கு கத்துகிறார், என்று எழுத வேண்டும்.

    இன்னொரு சாராருக்கு அவர் ஒரு கால கட்டம் வரையிலும் நல்லவர். அதற்கப்புறம் அவர் சுயநலவாதி. அவர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார் என்று எழுத வேண்டும்.

    கடைசி வரையில் தன்னுடைய தொழிலிலும் தன் சமுதாயப் பணியிலும் தான் மேற்கொண்ட அரசியலிலும் நேர்மையாகவும் நியாயமாகவும் தர்மத்தைக் கடைப்பிடித்தும் வாழ்ந்து மறைந்து எல்லா விதத்திலும் ஓர் உதாரண புருஷராக விளங்கிய அந்த ஒப்பற்ற தலைவனுடன் காலம் கழித்த ஒரு பெருமையே எனக்குப் போதும். இதற்கு மேல் இங்கிருக்க எனக்கு மனம் வரவில்லை. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அவரவர்க்கு தோன்றியதை எழுதிக் கொள்ளுங்கள்.

    இதற்கு மேலும் இங்கு பங்கேற்பதில் எனக்கு துளியும் விருப்பமில்லை.
    அன்பார்ந்த திரு.ராகவேந்திரா சார்,

    தங்களின் வலியையும் வேதனையையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

    நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல சிலர் எங்களை எதிரிகளாக பாவித்தாலும் கூட, நீங்கள், வாசு சார், ரவி சார், கிருஷ்ணா சார், திரு.ஆர்.கே.எஸ்., திரு.சிவாஜி செந்தில், திரு.சிவா, திரு.சுந்தரராஜன், மரியாதைக்குரிய பெரியவர் திரு.சுப்ரமணியம் ராமஜெயம், திரு.ராமச்சந்திரன் (செளத்ரி ராம்), திரு.ஹரீஷ், திரு.செந்தில்வேல் சிவராஜ் போன்ற மேலும் பல பெரும்பாலான நண்பர்கள் மோதல் போக்கு இருக்கக் கூடாது என்று கருதுவதால்தான் நமது இரு திரிகளிடையே இணக்கமான போக்கும் நட்புறவும் நிலவி வருகிறது. அது என்றும் தொடர வேண்டும்.

    உங்களைப் போன்றவர் திரியில் இருந்து வெளியேறுவது வருத்தமளிக்கிறது. திரு.சைலேஷ் சார், திரு.யுகேஷ் பாபு ஆகியோரும் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று கோரியுள்ளனர். உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து திரியில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  6. Thanks eehaiupehazij, Russellbpw thanked for this post
  7. #734
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று நமது கலை தெய்வத்தின், அவதார புருஷரின் வீரபாண்டிய கட்டபொம்மன் மறு வெளியீடு கண்டது டிஜிட்டல் வடிவில் நமது இதய தெய்வத்தின் ஐந்தாவது திரைப்படம் !

    ஆவணி மாத முதல் முஹூர்த்தம் இன்று. தமிழகம் முழுதும் ஏராளமான திருமணங்கள், திருமண நிச்சயதார்த்தங்கள், நடைபெற்ற நாள். ரயில் மற்றும் பஸ் முன்பதிவை பார்த்தவர்கள் புரிந்துகொள்ளலாம் ! இது வரை காய்ந்த சூரியன் கூட விடுமுறை கொடுத்து, மழை நாடு இரவில் இருந்து எல்லா இடங்களில் பரவலாக பெய்துள்ளது மிகவும் வரவேற்க தகுந்த விஷயம். ஓரளவு பூமி குளிரும் அல்லவா ?

    விஷயத்துக்கு வருவோம்..! பாசமலர் டிஜிட்டல் சறுக்கலுக்கு பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் தமிழ் திரை உலகமே வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை எதிர் பார்த்து கொண்டிருந்த நிலையில் பல மாதங்கள் பல காரணங்களால் மறுவெளியீடு குறித்த நேரத்தில் வராத நிலையில் இன்று ஆடி மாதம் முடிந்து முதல் முஹூர்த்த நாளில் வெளிவந்துள்ளது !

    கர்ணன் திரை காவியத்தை உடனே ஒரு சிலர் ஒப்பீடு செய்ய கூடும் என்பதால் கர்ணன் வெளியான நாள் வேறு...இன்றைய நாள் வேறு என்பதையும் இங்கு நினைவு படுத்த கடமை பட்டுள்ளோம். கடந்த ஒன்றரை நாளாக ஆன்லைன் புக்கிங் வசதி கிட்டத்தட்ட 70% இன்டர்நெட் பழுதடைந்த நிலையில் நமது படம் வெளியாகிறது !

    இதனையும் மீறி காலை காட்சி, தமிழகம் முழுதும் முஹூர்த்த நாள் என்பதையும் மீறி திரளாக கணிசமான அளவில் மக்கள் வந்து கண்டுகளித்துள்ளனர். கிடைத்த தகவல்படி பெரிய திரை அரங்குகளில் உதாரணமாக கோவை, சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் 250 உக்கும் கூடுதலாக காலை காட்சி மக்கள் கண்டுகளித்துள்ளனர். சேலம், திருச்சி , தஞ்சாவூர் மற்றும் இதர ஊர் தகவல் வர வர இதில் பதிவு செய்யப்படும்.

    சென்னையில், கோவையில் சத்யம், எஸ்கேப், பரூக் பீல்ட் இன்று அரங்கு நிறைவு கண்டுள்ளது !

    நாளை 22-08-2015 சனிகிழமை சத்யம் திரை வளாகம் ஸ்டுடியோ 5 திரை மதிய காட்சி அரங்கு நிறைவு ( HOUSEFULL) இன்றே கண்டுள்ளது.



    மற்றும் இதர காட்சிகள் இதர திரை அரங்கில் துரித கதியில் புக்கிங் செய்தவண்ணம் உள்ளது !

    மற்ற விபரங்கள் உயர் திரு. ராகவேந்தர் சார், முரளி சார், சுந்தர்ராஜன் சார் பகிர்ந்துகொள்வார்கள் என்று நம்புவோம் !

    மீண்டும் சந்திப்போம் !
    Last edited by RavikiranSurya; 21st August 2015 at 07:07 PM.

  8. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, Russellmai liked this post
  9. #735
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    NTR's admiration for NT!!

    நடிகர் திலகத்தின் உற்ற நண்பரும் தீவிர ரசிகருமான
    என் டி ராமாராவ் அவர்கள் தெலுங்கில் நிகரற்ற சூப்பர்ஸ்டாராக வலம் வந்த போதும் நடிகர்திலகத்தின் விருப்பத்திற்கிணங்க கர்ணன் திரைப்படத்தில் விசுவரூப கிருஷ்ண பரமாத்மாவாக சிறப்புத் தோற்றமளித்து பெருமைப்படுத்தினார்.

    அவ்வண்ணமே நடிகர்திலகமும் நட்பின் புரிதலாக
    என் டி ஆரின் சாணக்கிய சந்திரகுப்தா திரைப்படத்தில் மாவீரர் அலெக்சாண்டராக சிறப்புத் தோற்றம் ஏற்று கௌரவப்படுத்தினார் !!

    நடிகர்திலகத்தின் பிரிக்க முடியாத பாத்திரப் படைப்பின் திரைத் தோற்றங்களான வீரசிவாஜி மற்றும் கட்டபொம்மன் கெட்டப்புகளில் அப்படியே பொருந்தி நடிகர் திலகத்துக்கு பெருமை சேர்த்தார் என் டி ஆர் தனது மேஜர் சந்திரகாந்த் படம் வாயிலாக ..
    நடிகர்திலகத்தின் வீர பாண்டிய கட்டபொம்மன் அதிரடிக் கலக்கலாக டிஜிடலில் மறு வெளியீடு கண்டுள்ள இவ்வேளையில் NTR அவர்களின் அசத்தலான இப்பாடல் காட்சியும் நடிகர் திலகத்துக்கான சிறந்த நினைவஞ்சலியே !!


    Last edited by sivajisenthil; 21st August 2015 at 06:57 PM.

  10. Likes Georgeqlj liked this post
  11. #736
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்

    எதுக்கு சார் இந்த முடிவு..?

    நீங்களும் குழந்தையும் ஒன்று சார் !
    சடார் ..சடார் என்று கோபித்துகொள்கிரீர்கள் !
    திருச்சி சார் அவர்கள் அவருடைய அனுபவத்தை அவர் கேட்டதை, கண்டதை ( கண்ணால் ) வைத்து எழுதியுள்ளார் !
    ஐந்து விரல்கள் ஒன்றாக உள்ளாதா கூறுங்கள் !
    நம்மை பற்றி யார் யாரோ எப்படியெல்லாமோ உண்மைக்கு புறம்பான செய்தியினை, தவறான கோணத்தில் பல வருடங்களாக எழுதிகொண்டிருக்கிறார்கள் ! எல்லாரையும் நாம் தடுக்க முடியுமா ? அவர்கள் உரிமை என்று நினைத்து எழுதுகிறார்கள்.

    பாஸ்கர் சார் அவர்கள் அரசியல் இப்படி செய்திருந்தால் வெற்றிக்கனி நடிகர் திலகம் பறித்திருக்கலாம் என்று அவர் எண்ணத்தை எழுதியுள்ளார். அவ்வளவுதான் ! நடிகர் திலகம் அவர்கள் ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால் அவரை சிறந்த "ராஜதந்திரி" என்று பல வாய்கள் போற்றி பாடியிருக்கும். இப்போதும், பதவி ஆசை பிடித்து அவர் திருமதி ஜானகி அவர்களுடன் கூட்டு சேரவில்லை என்பது அவர்களுக்கே தெரியும். பதவி ஆசை கண்டு தேர்தலில் வந்திருந்தால் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து குறைந்தது 35இல் 30 ஆவது ஜெயித்திருப்பார். அப்படி அவர் செய்யவும் இல்லை. முதலமைச்சர் கனவு கண்டவராக இருந்திருந்தால் திருமதி ஜானகி அவர்களுடன் கூட்டணியே அமைத்திருக்க மாட்டார்...! தனியே நின்று ஜெயித்திருப்பார்..! அவர் மேற்கோள் காட்டியபடி நடக்காததே அவரின் அரசியல் நன்னடத்தைக்கு சான்று சார் !

    அரசியலில் அவர் என்றுமே தோற்கவில்லை !
    தேர்தலில் தான் அவர் தோற்கடிக்கபட்டார் !

    மக்கள் அவரை ஒரு அரசியல்வாதியாக பார்கவில்லை. தங்களுடைய குடும்பத்தில் ஒரு தகப்பனாக, தந்தையாக, அண்ணனாக, தம்பியாக இப்படி தங்கள் குடும்பத்தில் ஒருவனாகதான் பார்த்தார்கள் ! அதுதான் உண்மை !

    ஆகவே...விடுங்கள்...! இதையெல்லாம் பெரிதுபடுத்தி...விலகுகிறேன்..என்று கூறினால் என்ன அர்த்தம் ? அப்படி பார்த்தால் என்னை என்னவெல்லாம் கூறுகிறார்கள் ...அதயெல்லாம சீரியஸ்ஆக எடுத்துகொள்வது !

    ஆறுவது சினம்...கூறுவது தமிழ்...அறியாத சிறுவனா நீங்கள் ...மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத ராகவ் ஆ நீங்கள் ....! ஏற்றுகொள்வார்...கூட்டி செல்வன் ..என்னுடன் ஓடிவா நீங்கள் ....என்னுடன் ஓடிவா நீங்கள் .....!

    மேற்கண்ட பாடலுடைய அடுத்த வரியை நீங்கள் கூறாதீர்கள்...! அதாவது, ஆயிரம் முறை நீ ஆறுதல் கூறினாலும் அவைகளை கேட்க நான் தயாராக இல்லை என்று !

    வாருங்கள் சார் ! திரி உங்களை அன்புடன் அழைக்கிறது !

  12. #737
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை யமுனாவில் காலை 10.00மணி வரை தியேட்டர் ப்ளக்ஸ் வைக்கப்படவில்லை.10.30 மணிக்குத்தான் ப்ளக்ஸ் ஏற்றப்பட்டது.அதற்குப் பின்னர் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்த்தவர்கள் 250 நபர்களுக்கு மேல் .
    தகவல்:
    நண்பர் கோவை ரவி
    .

  13. Thanks eehaiupehazij thanked for this post
  14. #738
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    22 -08-2015 ( SATURDAY )- SATHYAM CINEPLEX - STUDIO 5 - VEERAPANDIYA KATTABOMMAN - 3.00PM - FULL HOUSE

    [/URL]"]


    23 -08-2015 ( SUNDAY )- SATHYAM CINEPLEX - STUDIO 5 - VEERAPANDIYA KATTABOMMAN - 3.00PM - FULL HOUSE



    Last edited by RavikiranSurya; 21st August 2015 at 09:12 PM.

  15. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  16. #739
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    LIKE ANY NEW MOVIE , BEHINDWOODS.COM HAS COME OUT WITH A REVIEW ON VEERAPANDIYA KATTABOMMAN !!



    THANKS BEHINDWOODS FOR MENTIONING NADIGAR THILAGAM AS GODFATHER OF ALL MASS HEROS !!!



    VERDICT : AN IMMORTAL ALL TIME CLASSIC


  17. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, Russellmai liked this post
  18. #740
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    audience consists of younger generation crowd? how do they react and what do they say?

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •