Page 76 of 401 FirstFirst ... 2666747576777886126176 ... LastLast
Results 751 to 760 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #751
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் மறுவெளியீடு குறித்த ஒரு அருமையான கவிதை.
    (திரு.ஆதவன் ரவி அவர்களின் முகநூலிலிருந்து)



    புதுசாக்கப்பட்டதா..?

    இல்லை..இல்லை.

    வீரபாண்டிய கட்டபொம்மன்
    புதுசுதான் எப்பவும்.
    -----------------
    ஆடம்பரத்திற்கென இல்லாமல்
    அர்த்தமுள்ளதாய் நாமுணரும்
    இந்தப் படத்தின்
    பிரம்மாண்டம் புதுசு.

    சராசரி மனிதர்களால்
    செய்யவியலாத சாகசங்களை
    செய்து காட்டும் நாயகர்களையே
    காட்டிப் பழகிய
    நம்மூர்த் திரைகளுக்கு
    இந்த சரித்திர நாயகனின்
    வேக வாழ்க்கை
    காட்டுதல் புதுசு.

    புகழ்,சம்பாத்தியம்,கௌரவம்
    இவற்றோடு மட்டுமே
    தன்னைப் பொருத்திக் கொள்ளும்
    நடிகர்களுக்கு மத்தியில்..
    சிவாஜி என்கிற கலைஞன்
    தன்னை
    இலட்சியத்தோடு
    பொருத்திக் கொண்டது புதுசு.

    எதிர் நின்று பார்க்கையிலே
    நம்மைப் போலவே
    இயல்புத் தோற்றம் காட்டுகிற
    ஒரு நடிப்புக் கலைஞன்,
    வேஷங்கட்டிய விநாடியே
    வீரபாண்டிய கட்டபொம்மனாக
    மாறிப் போனது புதுசு.

    நம்மில் எவரும் பார்த்திராத
    அந்த மாவீரனை,
    தன் வடிவில்
    எல்லோரையும்
    பார்க்க வைத்தது புதுசு.

    உருவிப் பிடித்த
    வாளின் வீச்சை
    கண்களினாலும்..
    வெடித்துப் பயங்காட்டும்
    பீரங்கிச் சத்தத்தை
    குரலினாலும்
    அந்த மகாகலைஞன்
    காட்டியது புதுசு.

    "இருந்தோம்..போனோம்"
    என்றிருந்த சாதாரணர்களுக்கிடையே
    சுள்ளென்று
    தன்னை நிரூபித்துப் போன
    கட்டபொம்மன் மட்டுமல்ல..
    திரையில்
    வந்து போனவர்களுக்கிடையே
    வாழ்ந்து போன
    நடிகர் திலகமும் புதுசு.

    சினிமாதானே என்று
    தன் நடிப்புக் கடமையினின்று
    தப்பிக்காமல்..

    வாய் பேசும் வசனந்தானே என
    மனப்பாடம் பண்ணி
    ஒப்பிக்காமல்..

    ஒட்டுதலாய்,
    உணர்வுப்பூர்வமாய்,
    உண்மையாய்...
    ஓர் வீரபுருஷனின்
    சரித்திரத்தை
    ஒரு திரைக் கலைஞன்
    விளங்க வைத்தது புதுசு.

    இதுவரை
    எவரும், எதிலும்
    தொடாத உயரங்களை
    எங்கள் சிவாஜி
    தொட்டது புதுசு.

    தன் திறமை நெருப்பெடுத்து
    நம் கவலைப் பொழுதுகளை
    சுட்டது புதுசு.

    அரை நூற்றாண்டு காலம்
    தாண்டின பிறகும்
    அரங்கங்கள் நிரப்புகிற
    அதிசயம் புதுசு.

    ஆகாயம், நீலம் தவிர்த்து
    நிறம் மாறிக் கொண்டாலும்,
    ஆதவன், கிழக்கிற்கு
    முதுகு காட்டி உதித்தாலும்,
    மாறி விடாத
    அய்யா நடிகர் திலகம் மீதான
    அன்புள்ளங்களின் பாசம்...
    எல்லாக் காலங்களிலும்
    புதுசு.
    ---------------
    வீரபாண்டிய கட்டபொம்மன்
    புதுசுதான் எப்பவும்.
    ---------------
    புதுப்படம் பார்போம்.. எல்லோரும்.
    ---------------
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, sss, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #752
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    INDIAN EXPRESS - 22-08-2015


    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, Russellmai, eehaiupehazij liked this post
  6. #753
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    TIMES OF INDIA - 22-08-2015

    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, Russellmai, eehaiupehazij liked this post
  8. #754
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    சந்திரசேகர் சார்,
    வீரபாண்டிய கட்டபொம்மன் மறுவெளியீடு நிலை குறித்த பல்வேறு தகவல்களுக்கு நன்றி ..நீங்களாவது தொடர்ந்து இந்த செய்திகளை கொடுத்து வாருங்கள்.
    நம் மண்ணில் இல்லாமையால் பங்குக்கொள்ள முடியாத என் போன்றவர்களுக்கு இவை மிகுந்த மகிழ்ச்சியளிக்கும்.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  9. Thanks KCSHEKAR thanked for this post
  10. #755
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    திரு வீயார் சார்

    தங்கள் மன கவலையை மறக்கடிக்கும் சக்தி நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாரிடமும் இல்லை என்பது கண்கூடு.
    இருப்பினும் உங்கள் பங்களிப்பில் என்றும் ஒரு மாய சக்தி உண்டு அதை மிகவும் ரசித்து... ரசிகன் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என நிறைய முறை எண்ணி வியந்துள்ளேன்...

    தற்போது விஜயம் செய்து நம்மை மகிழ்விக்கும் கட்டபொம்மன் உங்களை மீண்டும் இங்கு கொண்டு வந்து உங்கள் பங்களிப்பைத் தர ஆவன செய்வார் என நம்பி காத்திருக்கும்...

    சகோதரன் சுந்தர பாண்டியன்

  11. Thanks RAGHAVENDRA thanked for this post
  12. #756
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    வீர பாண்டிய கட்டபொம்மன் ஹிந்தி வடிவம் :



  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  14. #757
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மலைக்கோட்டை பாஸ்கரின் பதிவுகளை படிக்கும் போது இரும்பு கோட்டை கார்த்திக் அவர்களின் சாயலில் கருத்து பதிவுகள் இருப்பது தெரிகிறது .ஒரு வேளை ஏற்கனவே பலரும் தெரிந்திட்ட ஒரே நபர் கல்நாயக் , ஆதிராம் , , இன்னும் பல பெயர்களில் வந்து உண்டாக்கிய குழப்பங்கள் பற்றி
    திரியின் நண்பர்கள் அறிவார்கள் . எதற்கு இந்த முகமூடி ? திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு
    நன்கு தெரிந்திருந்தும் ஒன்றும் தெரியாதது போல் இருப்பது வியப்பாக உள்ளது .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ஒற்றனாக வந்து பதிவிட்டேன் என்று ஆதி ராம் ஒப்புதல் கூறியுள்ளார் .எனவே
    கார்த்திக் என்பவர் பல பெயர்களில் உலா வருவதை அப்பட்டமாக தெரிவிக்கலாமே ? ஏன் இந்த நாடகம் ? திரு முரளி ஸ்ரீனிவாசன் தான் உலகிற்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் .

  15. #758
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    22 -08-2015 ( SATURDAY )- SATHYAM CINEPLEX - STUDIO 5 - VEERAPANDIYA KATTABOMMAN - 3.00PM - FULL HOUSE

    [/URL]"]


    23 -08-2015 ( SUNDAY )- SATHYAM CINEPLEX - STUDIO 5 - VEERAPANDIYA KATTABOMMAN - 3.00PM - FULL HOUSE





    22 -08-2015 ( SATURDAY )- ESCAPE CINEPLEX - VEERAPANDIYA KATTABOMMAN - 12.30PM - FULL HOUSE



  16. Thanks joe thanked for this post
    Likes Georgeqlj, Russellmai, joe liked this post
  17. #759
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    From Face Book



    மிகவும் உணர்வு பூர்வமான சோகப்பாடல் அது!

    நடிகர் சிவாஜி கணேசன் பாடுவதாக வரும் அப்பாடலை வழக்கம் போல் டி.எம்.சவுந்தர்ராஜனைப் பாட வைக்காமல், வேறொரு பாடகரை பாட வைத்தார் எம்.எஸ்.விஸ்நாதன்.
    அதை ஏற்றுக் கொண்டார் சிவாஜி.
    பாடல் காட்சி படமாக்கப்பட்ட பின், அதை திரையில் போட்டு பார்த்த போது, பாடகரின் குரல் மற்றும் சிவாஜியின் நடிப்பு இரண்டுமே நன்றாக இருந்தும், ஏதோ ஒன்று குறைவது போல தோன்றியது. அதனால், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அப்பாடல் காட்சியை போட்டு காட்டினர். அதை பார்த்த எம்.எஸ்.வி., ‘சிவாஜியின் செழுமையான நடிப்போடு, அக்குரல் ஒட்டவில்லை...’ என்றார்.
    ‘பாடல் காட்சியை படமாக்கி முடித்து விட்டோமே... இனி என்ன செய்வது...’ என்று எல்லாருக்கும் குழப்பம். திடீரென, எம்.எஸ்.வி.,க்கு ஒரு எண்ணம் தோன்றியது.
    உடனே, டி.எம்.சவுந்திரராஜனை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்தார். சிவாஜி நடித்த காட்சியை திரையில் ஓட விடச் சொன்னவர், சிவாஜியின் வாய் அசைவிற்கு ஏற்ப, அப்பாடலை பாடும்படி டி.எம்.எஸ்.,சிடம் வேண்டுகோள் விடுத்தார். மிகவும் சவாலான வேலை இது.
    அக்காலத்தில், இன்றைக்கு இருப்பதை போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இருப்பினும், சிவாஜியின் வாய் அசைவையும், முக பாவங்களையும் நன்கு கவனித்து, அப்பாடலை பாடி முடித்தார் டி.எம்.எஸ்.,
    டி.எம்.எஸ்.,சை கை கொடுத்து பாராட்டினார் எம்.எஸ்.வி., அப்பாடல், அவர்கள் இருவருக்கும் ஒரு சவாலான அனுபவம் மட்டுமல்ல, வித்தியாசமான அனுபவமும் கூட!
    வழக்கமாக, டி.எம்.எஸ்., பாடிய பாடலுக்கு ஏற்ப, வாய் அசைப்பார் சிவாஜி. ஆனால், இதில் அப்படியே தலைகீழாகி, சிவாஜியின் வாய் அசைவிற்கு ஏற்ப, டி.எம்.எஸ்., பாடினார்.
    டிஜிட்டல், ஸ்டீரியோ, நவீன டிராக் சிஸ்டம் போன்ற அதிநவீன வசதிகள் இல்லாத அக்காலத்தில், திறமையையும், தன்னம்பிக்கையையும் மட்டும் நம்பி, இச்சாதனையை படைத்த இவ்விருவரும், தமிழ்த்திரை இசையின் அதிசயங்கள். இந்த இசை அதிசயங்களின் கூட்டணியில் பதிவான அப்பாடல் எது என்று கேட்கிறீர்களா?
    கவுரவம் படத்தில் இடம் பெற்ற, பாலுாட்டி வளர்த்த கிளி... என்ற பாடல் தான்!
    ‘நீங்காத நினைவுகள்’ நுாலிலிருந்து:

  18. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, Russellmai, eehaiupehazij liked this post
  19. #760
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    To day's Tamil The Hindu,



    திரைப்பட நடிகர் மறைந்த சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு, தமிழகம் முழுவதும் நேற்று திரையிடப்பட்டது. இதனால் சிவாஜி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

    இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களை எதிர்த்துப் போரிட்டவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றவர் வீரபாண்டிய கட்டபொம்மன். நடிகர் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் 1959-ம் ஆண்டு வெளியானது. அப்போது தமிழகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு, பெரும் வெற்றியைப் பெற்றது.

    திரைப்படத் துறையில் தொழில்நுட்பங்கள் பிரபலமாகாத காலத்திலேயே மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

    திருச்சி கலையரங்கம் திரையரங்கில் நேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி சிவாஜி கணேசனின் ரசிகர்கள் ஏராளமானோர், திரையங்க வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஃஃபிளக்ஸ் பேனரில் உள்ள சிவாஜி கணேசனின் படத்துக்கு மலர்கள் தூவியும், பால் அபிஷேகம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

    இதுகுறித்து அகில இந்திய சிவாஜி மன்ற சிறப்பு அழைப்பாளர் எஸ்.அண்ணாதுரை ‘தி இந்து’விடம் கூறியது: ஏற்கெனவே வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்க்கும்போது, அதில் வரும் சப்தங்களும், வசன உச்சரிப்புகளும் தெளிவாக உள்ளன. ஃபிலிமில் படம் பார்க்கும்போது இடையிடையே கோடுகள் வரும். ஆனால், புதிய தொழில்நுட்பத்தால் தற்போது காட்சிகள் தெளிவாக உள்ளன. இது வித்தியாசமான அனுபவமாக உள்ளதால் சிவாஜி ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.



    நாம் இன்று சுதந்திர இந்தியாவில் வசித்து வருகிறோம். நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரத்துடனும், தீரத்துடன் போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சிவாஜி கணேசன் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி, கட்டபொம்மனாகவே மாறி நடித்திருந்தார்.

    இந்த திரைப்படத்தை மாணவ, மாணவிகளும், இளைஞர்களும் கட்டாயம் பார்க்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் மீது பற்றுதல் அதிகமாகும் என்றார்.
    Attached Images Attached Images

  20. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, Russellmai, eehaiupehazij, joe liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •