Page 83 of 401 FirstFirst ... 3373818283848593133183 ... LastLast
Results 821 to 830 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #821
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சற்று முன் கிடைத்த செய்தி.

    மதுரையில் இயங்கி வரும் புகழ் பெற்ற கல்விக்கூடங்களில் ஒன்றான மகாத்மா பள்ளி தனது மாணவர்கள் 450 பேரை இன்று காலைக் காட்சிக்கு சினிபிரியா திரையரங்கிற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. இதன் மூலம் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தேச பக்தியையும் சுதந்திரத்திற்காக போராடிய விடுதலை வீரர்களின் தியாக வரலாற்றையும் கற்றுக் கொடுக்க செயல்படும் மகாத்மா பள்ளி நிறுவனத்தை மனமார பாராட்டுகிறோம். இது போல் அனைத்து பள்ளி நிர்வாகமும் முடிவெடுத்தால் இளம் தலைமுறையினர் தேசப்பற்றோடு வளர்வர்.

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #822
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வீடியோ 6

    மாலைகள், ஆராதனை, அன்பின் உச்சம்... வாழ்க கூக்குரல்கள். பாசத் தலைவனுக்கு எதையும் எதிர்பாராத, தன் நிலை மறந்த ரசிகர்களின் வெறித்தனமான அன்பு

    Last edited by vasudevan31355; 25th August 2015 at 07:13 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Thanks RAGHAVENDRA, eehaiupehazij thanked for this post
  5. #823
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

    ஒரு வேளை என் பெயரை சொல்ல உங்களுக்கு விருப்பமில்லையோ என்னவோ!

    அன்புடன்
    அருமை நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

    தாமதத்துக்கு மன்னிக்கவும். தங்கள் பெயரை சொல்ல எனக்கு விருப்பம் இல்லாமலோ, வெறுப்போ இல்லை.

    முரளி ஸ்ரீனிவாஸ்,முரளி ஸ்ரீனிவாஸ்,முரளி ஸ்ரீனிவாஸ்,முரளி ஸ்ரீனிவாஸ்......

    பார்த்தீர்களா? என்னோடு ஒத்த கருத்து கொண்டவர்களை மட்டுமல்ல, உடன்படாதவர்களையும் நண்பர்களாகவே மதிக்கிறேன். உடன்படாதவர்களை மாற்றுக் கருத்து கொண்ட நண்பர்கள் என்று கருதுவேன். அவ்வளவுதான். மற்றபடி, எல்லாரும் எனக்கு நண்பர்களே, நீங்கள் உட்பட. நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  6. #824
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவரின் வேண்டுகோளை ஏற்று பெருந்தன்மையுடன் மீண்டும் திரியில் பங்கேற்றுள்ள அன்புநிறை பண்பாளர் திரு.ராகவேந்திரா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    உயிர் பிரியும் நேரத்தை விட உறவு பிரியும் நேரம் துயரமானது என்று சொல்வார்கள். நண்பர் திருச்சி பாஸ்கர் அவர்கள் ஆர்வத்தோடு வந்து கலந்து கொண்டு திடீரென இனி வரமாட்டேன் என்று சென்றதும் வருத்தமளிக்கிறது. அவரும் மீண்டும் வரவேண்டும். எல்லாரும் மகிழத்தக்க பதிவுகளை இட வேண்டும் என்று அன்புடன் கோருகிறேன். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  7. #825
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    எம்.ஜி.ஆர் ரசிக நண்பர்களுக்கு,

    மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இன்று நம்மிடம் உடலால் இல்லை .. அவர்களின் புதிய திரைப்படங்களும் இனிமேல் வரப்போவதில்லை ..எனவே நாம் ஒன்றும் அஜித்-விஜய் ரசிகர்கள் அல்ல . இங்கிருக்கும் பலர் நான் உட்பட விவரம் தெரியும் போது மக்க்ள் திலகம் திரைத்துறையில் இல்லை .

    நானெல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் புடை சூழ வளர்ந்தவன் .. நான் பிறந்து வளர்ந்த மீனவகிராமம் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை .. அதிலே விதிவிலககாக சிவாஜி ரசிகனாக வளர்ந்தவகளில் நானும் ஒருவன் .. சிறு வயதில் சிவாஜி ரசிகனென்றால் எம்.ஜி.ஆரை பிடிக்காது , எம்.ஜி.ஆர் ரசிகனென்றால் சிவாஜியை பிடிக்காது என்ற வளமைக்கேற்ப எனக்கும் எம்.ஜி.ஆர் பிடிக்காது ..ஆனாலும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் நிறைந்த நண்பர் குழாமிடையே என்னால் எம்.ஜி.ஆரை தவிர்க்க முடியவில்லை .. நாளெல்லாம் ஒலிக்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள் நெஞசிலே ஆணி போல பதிந்து விட்டது .

    காலப்போக்கில் எம்.ஜி.ஆர் வெறுப்பு என்பது மாறி அவர் மேல் இனம் புரியாத மதிப்பு ..அர்சியல் ரீதியாக கூட நான் எதிர்நிலையில் உள்ளவன் தான் என்றாலும் , இன்றும் மூன்றாம் வகையினர் எம்.ஜி.ஆரை ஏளனமாக பேசினால் விட்டுக்கொடுக்காதவன் நான் .

    இந்த மன்றத்தில் கூட பல ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது இருப்பது போல எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வந்து சேரவில்லை ..இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் திரிக்கு பங்களிக்கக் கூட ஆளில்லா சமயத்தில் அதை விடாப்பிடியாக பங்களித்து தொடங்கி வைத்தவர்களில் நானும் ஒருவன்

    http://www.mayyam.com/talk/showthrea...M-MGR-(Part-2)

    கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியோடு அணுகுவோம் .. நல்லிணக்கம் காப்போம்.


    -------------------------------------


    நண்பர் திரு.ஜோ அவர்களுக்கு,

    நியாயமான பேச்சு. இதைத்தான் நானும் விரும்புகிறேன். பலமுறை வலியுறுத்தியும் இருக்கிறேன். தங்களது கருத்து எனக்கு மேலும் நம்பிக்கையூட்டுகிறது.

    ‘கை நீட்டி பேச உனக்கு உரிமை உண்டு. ஆனால், உன் விரல் என் மூக்கை தொடக்கூடாது’ என்று ஒரு முதுமொழி உண்டு. அதுதான் உரிமையின் எல்லை. நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் சாதனைகளை சொல்வதை தடுக்கவோ, குறை கூறவோ யாருக்கும் உரிமை கிடையாது. குறுகிய காலத்தில் அவர் அதிக படங்களில் நடித்தார் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.

    ஆனால், இந்த எண்ணிக்கையை கடைசிவரை மக்கள் திலகம் எம்ஜிஆரால் வெல்ல முடியவில்லை என்று கூறும்போதுதான், நண்பர்களையும் மனதில் கொண்டு தர்மசங்கடத்துடன் பதிலளிக்க வேண்டிய துரதிர்ஷ்டமான சூழல் ஏற்படுகிறது. நல்லெண்ணத்துடன் கூடிய தங்களின் ஆலோசனையை நடிகர் திலகம் திரியிலும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

    திருவாரூர் அருகே வடபாதிமங்கலம் என்று ஒரு ஊர். அந்த ஊரைச் சேர்ந்தவர் வடபாதிமங்கலத்தார் என்று அழைக்கப்பட்ட திரு.வி.எஸ்.தியாகராஜ முதலியார். பெருநிலக்கிழார். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தக்காராக இருந்தவர்.

    1940-களின் இறுதியில் அந்தக் கோயிலில் ஒரு பவுராணிகர் உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் கோயிலுக்கு வந்து, திராவிட இயக்க கருத்துக்களை வலியுறுத்தும் துண்டறிக்கைகளை பக்தர்களுக்கு விநியோகித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    உபந்யாசகர், ‘கோயிலுக்குள் ஆண்கள் சட்டை இல்லாமல் வரவேண்டும். அப்போதுதான் அவர்களின் உடலில் சில விசேஷ கதிர்கள் பாயும்’ என்று கூறியபோது அந்த இளைஞர் குறுக்கிட்டு, ‘அப்படியானால், பெண்களும் அப்படி வரலாமா?’ என்று அதிரடியாய் கேட்க, உபந்யாசகர் தனது கையில் அணிந்திருந்த தோடாவை திருகி விட்டுக் கொண்டு பதில் சொல்லாமல், மேற்கொண்டு பிரவசனத்தை தொடர்ந்தார்.

    ‘மாமிச உணவு கூடாது. உயிர் கொலை பாவம். தாவரங்களில் கிடைக்கும் காய்கறி நமது நகங்கள் போன்றது. அவற்றை பறித்து உண்பது அவற்றைக் கொல்வதாகாது...’ என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘‘கீரையை வேரோடு பறித்து உண்கிறோமே? தாவரங்களுக்கும் உயிர் உண்டே? அது கொலைதானே?’ என்று இளைஞர் மடக்க, அருகே உள்ள வெள்ளிச் சொம்பில் இருந்த பாலை எடுத்து மிடறு விழுங்கினார், உபந்யாசகர்.

    நிலைமை மோசமடைவதைப் பார்த்ததும், தக்கார் தியாகராஜ முதலியார் தனது ஆட்கள் மூலம் அந்த இளைஞரையும் அவரது நண்பர்களையும் வெளியே அனுப்பினார். காலச் சக்கரம் சுழன்றது. அந்த சுழற்சியில் தமிழக முதல்வராகி விட்ட அந்த இளைஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

    பொறுப்பும் பதவியும் வந்து சேர, தீ விபத்து காரணமாக பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த அதே திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தேரை புதுப்பித்து, ஓடாத தேரை ஓடச் செய்தவர் கலைஞர் கருணாநிதி.

    உபந்யாசகரை மடக்கி கேள்விகளால் திணறடித்தார் என்றேனே. அந்த உபந்யாசகர் யார் தெரியுமா? நாளை கூட அவரது பிறந்த தின விழா. புரட்சித் தலைவருக்கு பொன்மனச் செம்மல் என்று பட்டம் வழங்கிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்தான் அவர்.

    2000-ம் ஆண்டில் முதல்வராக இருந்தபோது, ஒரு காலத்தில் தான் கேள்வி கேட்டு மடக்கிய மடக்கிய வாரியார் சுவாமிகளின் சிலையை காங்கேய நல்லூரில் திறந்து வைத்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

    கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் கூட பக்குவமும் முதிர்ச்சியும் நிறைந்த இந்த அணுகுமுறைதான் நான் விரும்புவது. அதைத்தான் நீங்களும் வலியுறுத்தியுள்ளீர்கள்.

    இதை ஏன் சொன்னேன் என்றால், நீங்கள் திமுக ஆதரவாளர், கலைஞரைப் பிடிக்கும் என்று தெரியும். கலைஞரை மட்டுமல்ல, தேங்காய் போட்டு உங்கள் தாயார் சமைக்கும் வெறும் குழம்பும் பிடிக்கும் என்று கடற்புறத்தான் கருத்துக்களில் படித்த நினைவு.

    அரசியல் ரீதியாக அவருடைய செயல்பாடுகளில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் கலைஞரின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், கடும் உழைப்பு, தோல்வியில் துவளாமை, நகைச்சுவை உணர்வு போன்ற பன்முக ஆற்றல்கள் எனக்கும் பிடிக்கும். இதை பல பதிவுகளில் தெரிவித்தும் இருக்கிறேன்.

    அரசியல் ரீதியாக எதிர்நிலையில் உள்ளவன் நான் என்று கூறியிருக்கிறீர்கள். ஏன் பிரித்து பேசுகிறீர்கள்? நீங்கள் திமுகவாக இருந்தாலும் கூட, அய்யா பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் வந்தவர்கள், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் நாமெல்லாம் ஒரே நிலையில் உள்ளவர்கள்தான்.

    இங்கே உள்ள எல்லா நண்பர்களையும் வேண்டுகிறேன்.

    அவரவர் அபிமானத்துக்குரியவர்களின் புகழை பாடுவது நமது கடமை, அதில் கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நடப்போம்.

    பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  8. Thanks joe thanked for this post
    Likes joe, Harrietlgy liked this post
  9. #826
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    5. VEERAPANDIYA KATTABOMMAN
    Previous
    Movie
    Veerapandiya Kattabomman
    Next
    Movie
    Ranking based on Chennai Box Office Collections from Aug 17th 2015 to Aug 23rd 2015
    Week : 1
    Total collections in Chennai : Rs. 5,53,905
    Chennai city verdict: Average Opening
    No. Shows in Chennai (Weekend): 39
    Collection in Chennai (Weekend): Rs. 5,53,905

    Sivaji sir has mesmerized the audiences yet again with the remastered version of Veerapandiya Kattabomman. The opening has been low-key though.
    CAST AND CREW
    1 of 2
    Production: B. R. Panthulu
    Cast: Gemini Ganesan, Padmini, S. Varalakshmi, Sivaji Ganesan, V. K. Ramasamy
    Direction: B. R. Panthulu
    Screenplay: Ma. Po. Sivagnanam
    Story: Sakthi T. K. Krishnasamy
    Music: G. Ramanathan
    Background score: G. Ramanathan
    Cinematography: W. R. Subbarao Karnan
    Editing: R. Devarajan

    Veerapandiya Kattabomman Review

    From January 2014's releases, the rankings will be based on box-office collections only from theaters in the Chennai City trade area:
    Theaters which fall under the Chennai City trade area are - Udhayam complex, Kamala complex, PVR Multiplex, Inox Multiplex Mylapore, Escape Cinemas, Sathyam Cinemas, Devi Cineplex, Shanti complex, Anna, Pilot, Woodlands complex, Casino, Albert complex, Abirami Mega Mall, Motcham complex, Sangam Cinemas, Ega Cinemas, Bharath, Maharani, Agasthya, IDream, AVM Rajeswari, Sri Brindha, S2 Perambur, Ganapathyram and MM
    Box office collection is calculated taking into account the number of shows and theater occupancy in theaters falling under the Chennai City trade area. These are details not shared by the producers, distributors or theater owners who cannot be held responsible for the collection figures listed. There might be variations from the exact collection details.


    courtesy behindwoods




    Quote Originally Posted by Murali Srinivas View Post
    இன்று தமிழகமெங்கும் கட்டபொம்மனுக்கு படு உற்சாக வரவேற்பு. சென்னையில்

    எஸ்கேப் - 2 காட்சிகள் (ஒரு சிறப்பு காலைக்காட்சி உள்பட) ஹவுஸ் புல்

    சத்யம் - மதியம் 3 மணிக் காட்சி ஹவுஸ் புல்

    சாந்தி - மாலைக்காட்சி ஹவுஸ் புல்

    PVR , AGS வில்லிவாக்கம், S 2 பெரம்பூர் அனைத்தும் புல் என்றே தகவல்கள் வந்திருக்கின்றன.

    பேபி ஆல்பட் மற்றும் சக்தி அபிராமி ஆகியவையும் கூட அதே status இருக்கலாம் என்று அந்த திரையரங்களிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

    மதுரை

    Inox - புல் - மாலை

    அண்ணாமலை - 520 டிக்கெட் மாலை

    சினிப்ரியா - 280 [மதியம்]

    சோலைமலை - 210 - மாலை

    மதுரை மாநகரின் புறநகர் பகுதி என்று சொல்லப்படக்கூடிய திருநகர் கலைவாணியில் வெள்ளி முதல் ஒரு ஒரு புதிய படம் வெளியாகி இரண்டு நாட்களில் தூக்கப்பட்டு எந்த விளம்பரமும் இல்லாமல் இன்று முதல் கட்டபொம்மன் திரையிடப்பட்டு இன்றைய மாலைக்காட்சிக்கு மிக கணிசமான அளவில் மக்கள் வந்திருக்கின்றனர்

    கோவை

    சத்யம் - புல்

    பல்லவி - புல்

    கர்நாடிக் - 750 டிக்கெட் - ரோடு ப்ளாக், band இசை, வாண வேடிக்கை, போலீஸ் விரட்டல் எல்லாம் நடந்திருக்கிறது.

    சேலம்

    முதலில் ARAS (?) மல்டிப் ப்ளெக்ஸ் -ல் மட்டும் வெளியான படம் இன்று முதல் சுப்ரகீத் திரையரங்கிலும் திரையிடப்பட்டு இரண்டிலும் மாலைக்காட்சி ஹவுஸ் புல். அது தவிர இன்று முதல் நாமக்கல் K .S அரங்கிலும் திரையிடப்பட்டிருக்கிறது.

    திருச்சி, நெல்லை மற்றும் நாஞ்சில் மாநகரிலும் நல்ல response என்று கேள்வி.

    கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது அதை பகிர்ந்து கொள்கிறேன்

    அன்புடன்

  10. #827
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    why murali sir abirami mall reduced the shows

    Veera Pandiya Kattabomman - Tamil Online Booking
    Date

    24 Mon
    25 Tue
    26 Wed
    27 Thu

    Seats
    Abirami Mega Mall

    3:30 PM

    courtesy behindwoods

  11. #828
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    S 2 பெரம்பூர் அனைத்தும் புல் என்றே தகவல்கள் வந்திருக்கின்றன.

    tomorrow onwards s2 cinemas, sathyam and escape screened one show only


    Tickets
    2
    Date

    Mon 24 Tue 25 Wed 26 Thu 27 Fri 28 Sat 29 Sun 30 Mon 31 Tue 01 Wed 02

    Cinema
    Experience
    ShowTime
    Sathyam STUDIO-5

    3:00 PM

    Escape KITES

    12:30 PM

    S2 Perambur SCREEN-3

    12:45 PM

  12. #829
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பேபி ஆல்பட் மற்றும் சக்தி அபிராமி ஆகியவையும் கூட அதே status இருக்கலாம் என்று அந்த திரையரங்களிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.


    yesterday i am watching vaalu movie in albert theater in baby albert 70 50 tikets available both shows

  13. #830
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வீடியோ 7

    தொடரும் உற்சாகம்

    Last edited by vasudevan31355; 25th August 2015 at 07:13 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •