Page 84 of 401 FirstFirst ... 3474828384858694134184 ... LastLast
Results 831 to 840 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #831
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கோவையில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரையிடப்பட்டிருக்கும் கர்நாடிக் தியேட்டர் மாலைக்காட்சிக்கு சிவாஜி ரசிகர்படை3.30 மணியில் இருந்தே திரள ஆரம்பித்தது.நேரம் செல்லச்செல்ல கூட்டம் பிரமாண்டம் ஆனது.பாலாபிசேகம்,பட்டாசு,ஜமாப்(மேளம்)அமர்களமா க நடந்தன.ரசிகர்கள்போட்ட ஆட்டத்தை பார்த்து பொதுமக்கள் பிரமித்துப்போயினர். தெருவில் சென்ற இளைஞர்கள் பலர்,அங்கு நடந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு இப்பொழுது இருக்கும் பெரியநடிகர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்களின் ரசிகர்கள் கூட இப்படி இருக்க முடியுமா?என்று கூறினர்.
    நடிகர்திலகம் தோன்றும்போதெல்லாம் அரங்கம் அதிர்ந்தது.சுருங்கக்கூறின்,நேற்றைய அலப்பரை பிரமாண்டம்.

    கர்நாடிக் 6.30மணிக்காட்சி ஹவுஸ்புல்.
    கே.ஜி.சினிமாஸ் 3.30மணிக்காட்சி மதியம் 1மணிக்கே புல்.
    புருக்பீல்ட்ஸ் ஹவுஸ்புல்.

  2. Thanks vasudevan31355, RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #832
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை கொண்டாட்டங்கள்


    [/URL]

















    Last edited by senthilvel; 25th August 2015 at 06:11 PM. Reason: கோவை கொண்டாட்டங்கள்

  5. Thanks vasudevan31355, RAGHAVENDRA, eehaiupehazij thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  6. #833
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



















  7. #834
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    யுகேஷ்,

    பதிவுகளுக்கு நன்றி.

    சக்தி அபிராமி அரங்கம் பற்றி கேட்டிருக்கிறீர்கள். நானே அதை பற்றி மட்டுமல்லாமல் வேறு சில விஷயங்களை பற்றியும் எழுத நினைத்திருந்தேன். அதை பற்றி பிறகு எழுதுகிறேன். இப்போது நீங்கள் கேட்ட சக்தி அபிராமி பற்றி.

    கட்டபொம்மன் வெளியிடுவதற்கு அணுகியபோது உடன் ஒப்புக் கொண்டு விளம்பரங்களில் தங்கள் அரங்கத்தின் பெயரையும் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளித்தார் திரு அபிராமி ராமநாதன். இரண்டு மூன்று முறை வெளியீடு தேதி மாறியபோது கூட அரங்கம் தருகிறேன் என்று சொன்னதில் இருந்து அவர் மாறவில்லை. ஆனால் முதலில் சொன்ன இரண்டு ஷோக்களை ஒன்றாக குறைத்தார்.

    இந்த நேரத்தில் சங்கம் சினிமாஸ் நிர்வாகத்தினர் விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு எங்கள் திரையரங்கில் வெளியிட்டுக் கொள்கிறோம் என்று கேட்டார்கள். 2012-ல் கர்ணன் வெளியானபோது அபிராமியில் திரையிட்டார்கள். படம் வெளியாவதற்கு முதல் நாள் இதே போல் சங்கம் நிர்வாகம் கேட்க திரு சொக்கலிங்கம் சங்கத்திலும் படத்தை வெளியிட்டார். ஆனால் அபிராமி மெகாமால் நிர்வாகம் தங்களை கேட்காமல் சங்கத்தில் வெளியிட்டது தங்களுக்கு ஏற்புடையதாய் இலை என்ற காரணத்தை சொல்லி கர்ணன் படத்தை அவர்கள் ஒரே வாரத்தில் எடுத்து விட்டார்கள்.

    இந்த பின்னணி தெரிந்த காரணத்தினால் கட்டபொம்மன் விநியோகஸ்தர் இந்த விஷயத்தை திரு ராமநாதன் அவர்களிடம் கொண்டு செல்ல அவர் சங்கத்தில் வெளியிடக் கூடாது என்று சொல்லி அதை ஈடு செய்யும் வண்ணம் அவர் திரையரங்கில் 3 காட்சிகள் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொடுத்தார். ஆகையால் சங்கத்தில் வெளியாகவில்லை.

    ஆனால் இப்போது 3 நாட்களுக்கு பிறகு ஒரு ஷோ ஆக்குவதன் காரணம் கடந்த வெள்ளியன்று [ஆகஸ்ட் 21] வெளியாகியிருக்கும் ஜிகினா என்ற திரைப்படத்தை சென்னை மற்றும் nsc ஏரியாவில் அபிராமி மெகாமால் நிறுவனம்தான் வெளியிட்டுருக்கின்றனர். அதை மீதம் உள்ள இரண்டு காட்சிகளில் வெளியிடுவதற்காக கட்டபொம்மன் படத்தின் இரண்டு காட்சிகளை குறைத்திருக்கிறார்கள்.

    இது போன்ற புதுப் படங்களுக்கு ஒரு காட்சிக்கு 20 பேர் கூட வருவதில்லை. ஆனாலும் இது போன்ற படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் அரங்க உரிமையாளர்கள் நல்ல கூட்டம் வரும் கட்டபொம்மன் போன்ற பழைய படங்களுக்கு தியேட்டர் கொடுக்க தயங்குகிறார்கள்.

    முதல் மூன்று நாட்கள் கணிசமான ஆட்கள் வந்து விட்டனர். அது ஒரு லாபம். சங்கத்திலும் போட விடவில்லை. இப்போது தங்கள் விநியோகிக்கும் படத்தையும் திரையிடுகிறார்கள்.

    என்ன செய்வது இப்போது அதிகாரம் எல்லாம் அரங்க உரிமையாளர்கள் கையில்.

    அன்புடன்

  8. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  9. #835
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    பேபி ஆல்பட் மற்றும் சக்தி அபிராமி ஆகியவையும் கூட அதே status இருக்கலாம் என்று அந்த திரையரங்களிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.


    yesterday i am watching vaalu movie in albert theater in baby albert 70 50 tikets available both shows

    Dear Yukesh,

    NT movie success has always been unique and unmatched; plus, it cannot be replicated. It is unanimous VPKB is a massive success across the state. This is a victory for NT and TN people. This is a natural victory, achieved by die-hard fans with their hard earned money, sweat and blood. NT's fan base is trust worthy and it shows here that the re-release is successful without any strings of politics attached.

    As this is VPKB season, we would like to enjoy these moments. So, do not interrupt. I hope you understand.

    Regards.
    Last edited by tacinema; 24th August 2015 at 07:50 PM.

  10. #836
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Dear murali sir,
    weekend collection data includes sunday or not?
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  11. #837
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    நேற்று ஞாயிறு மதியம் எஸ்கேப் திரை அரங்கம் ... நிரம்பி வழிகிறது...
    ஆபிசில் வேறு வேலை போய்க்கொண்டுள்ளது (ஞாயிறு எல்லாம் எங்களுக்கு ஏது ... ??)

    காலையில் தலையைக் காட்டி விட்டு காரை பார்க் செய்து உள்ளே செல்லும் போது வெற்றி வடிவேலனே ... குரல் கேட்கிறது ... எட்டு நிமிடம் லேட் ..
    முழுவதும் இளைஞர் பட்டாளம் ஆண் பெண் என குடும்பத்துடன் ... மிக ஆச்சரியம் ..
    சாந்தி மாதிரி ஆரவாரமில்லை... அமைதியாக ரசித்தனர்

    ஜாக்சன் காட்சியில், இறுதியில் ஜாவர் சீதாராமன் உடன் வீர வசனம், தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை என கூறி விட்டு நடுக்கும் வீர நடை.... கைதட்டல் .... ஒரு விசில் சத்தம்...

    கண்ணை விட்டு அகலாத தூக்கு கயிறு முத்தம்.... கண்களில் கண்ணீர் மொத்தம்...

    டிஜிட்டல் துல்லியம்... முக பாவங்கள் அற்புதம்... அவ்வளவு உணர்ச்சிகளையும் நேரில் பார்த்த அனுபவம்...
    சிலிர்ப்பு அடங்க வெகுநேரமானது ... மீண்டும் ஆபீஸ் ... இரவில் வீடு....

    நேற்று சாந்தியில் பார்க்க கொடுத்து வைக்க வில்லை ..... மற்றும் ஒரு சந்தர்ப்பம் வரும்

    உலகில் ஆதவன் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் என வரலட்சுமி பேசும் வசனம் நிஜம்...

  12. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
  13. #838
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    கட்டபொம்மனின் வசூல் சாதனை பாரீர்: Top 5 from Aug 21-23, as per sify report.

    http://www.sify.com/movies/boxoffice...6&cid=13525926

    Aug 21 வெள்ளி வெளியான புது தமிழ் படங்களை ஓரம் கட்டி விட்டார் எங்கள் கட்டபொம்மன். தமிழ் திரை உலகின் நிரந்தர வசூல் மன்னர் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

    regards
    Last edited by tacinema; 24th August 2015 at 09:05 PM.

  14. Likes RAGHAVENDRA, J.Radhakrishnan liked this post
  15. #839
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கோவைகலக்கல்














  16. Thanks vasudevan31355, RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA, J.Radhakrishnan liked this post
  17. #840
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் - செம்மீன் - Veerapandiya Kattabomman -Chemmeen.
    _______________________________________________



    சில நாட்களாக ஏடுகளில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் செம்மீன் திரைப்படங்கள் பற்றிய செய்திப் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த இரண்டு திரைப்படங்களும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத வெள்ளித்திரை படைப்புகள் ஆகும்.

    துரோகங்கள் நிகழ்த்தப்படும்போதும், சோதனைகளும், தோல்விகளும் வந்தடையும் போதும், சோர்வடையாமலிருக்க நான் பார்த்து ரசிப்பது வீரபாண்டிய கட்டபொம்மனைத் தான்.

    போர் குணத்தை அள்ளித் தெளிக்கின்ற எங்கள் தெற்குச் சீமையின் வீரத்தையும் பராக்கிரமத்தையும் பகிர்கின்ற இத்திரைப்படத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா? என்ன வசனங்கள்!

    அன்றைய தொழில்நுட்பத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக அமைந்த வண்ணத் திரைப்படம். மறைந்த சிவாஜிகணேசன் கட்டபொம்மனாகவே மாறிவிட்டார்!

    வீரபாண்டிய கட்டபொம்மன்
    _______________________________


    வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் 1959ம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் வெளியானது. இயக்குநர் பி.ஆர்.பந்துலு இயக்கிய இத்திரைப்படத்தில், சிவாஜியோடு, ஜெமினி கணேசன், பத்மினி, குலதெய்வம் ராஜகோபால், ஜாவர் சீதாரமன், வி.கே. ராமசாமி,
    எஸ். வரலட்சுமி, ஓ.ஏ.கே. தேவர் போன்றோர் சிறப்பாக நடித்திருப்பார்கள்.

    இத்திரைப்படத்தை சிவாஜி நாடக மன்றம் மூலமாக 116 தடவைக்கும் மேலாக நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவ மனைகளுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நன்கொடையாக அளித்தார்.

    இந்தத் திரைப்படம் தென்மண்டலமெங்கும் திரையிடப்படுவதற்கு 6 நாட்கள் முன்பே இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டனில் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது. இச்சிறப்புக் காட்சியில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள். அந்த விழாவில் பண்டிதர் ஜவஹர்லால் நேருவும், அவரது சகோதரி விஜயலட்சுமி பண்டிட் ஆகியோர் பங்கேற்றார்கள்.

    1960 ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படவிழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் இப்படத்தின் மூலம் பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்.

    இரண்டு பெரிய கண்டங்கள் (ஆசியா, ஆப்ரிக்கா) கலந்துகொள்ளும் இவ்விழாவில் விருது வாங்கிய முதல் ஆசியத்திரைப்படமாகவும், முதல் இந்தியப்படமாகவும், முதல் தமிழ் திரைப்படமாகவும், வீரபாண்டிய கட்டபொம்மன் முத்திரை பதித்தது.

    அன்றைக்கு கெய்ரோவில் நடைபெற்ற உலகத்திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால் கெய்ரோ மாநகராட்சி நடிகர் திலகத்தை அந்நகருக்கு வரவேற்றுக் கொண்டாடியது மட்டுமில்லாமல் அந்நகர மேயர் நகரத்தின் “சாவியை” சிவாஜி கணேசன் அவர்களிடம் வழங்கி சிறப்பித்தார் என்பது பெருமையான செய்தி.

    பின்னர் எகிப்து அதிபர் நாசர் இந்தியா வந்தபோது, பிரதமர் நேருவின் அனுமதியோடு, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் (அப்போது பாலர் அரங்கம்) அவரை வரவழைத்து மிகப் பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார்.

    அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர் எகிப்து அதிபர் நாசரை சென்னைக்கு அழைத்து சிறப்பித்ததோடு தன் வீட்டிலே விருந்தும் அளித்தார். இந்தப்பெருமை பெருமை இந்தியதிரைப்பட வரலாற்றில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனையே சேரும்.

    தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு, அவர் தூக்கிலிடப்பட்ட பகுதியான ஒருங்கிணைந்த நெல்லைமாவட்டம் கயத்தாரில் 1971ம் ஆண்டு 47 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். அந்தச் சிலையை குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி திறந்துவைத்தார்.

    வீரபாண்டியனின் வாரிசான குருசாமி நாயக்கர் தூக்குதண்டனையிலிருந்து சஞ்சீவரெட்டி அவருடைய கருணை மனுவை பரிசீலித்து இடைக்கால தடையும் வை.கோ அவர்கள் முயற்சியால் வழங்கியதும் பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரை தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றிய வழக்கை நடத்தியவன் என்ற பெருமையோடு நினைவு கொள்கிறேன்.

    1999 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை முறைப்படி தமிழக அரசிடம் ஒப்படைத்தார் சிவாஜி கணேசன். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் புதுபொலிவுடன், புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்தது.

    செம்மீன்.
    _____________

    1965ம் ஆண்டு செம்மீன் திரைப்படம் வெளியானது. நாவலாசிரியர் தகழி சிவசங்கரன் எழுதிய “செம்மீன்” நாவலை ராமு காரியாட் என்ற இயக்குனர் திரைப்படமாக்கியிருந்தார். பல நல்ல நாவல்கள் நல்ல திரைப்படங்களாக அமைவதில்லை. அப்படியான நிலையில் மலையாளத்தின் முதல் வண்ணப்படமாக செம்மீன் வெளியாகி இருந்தது. அதன் 50வது ஆண்டு நிறைவு விழாவை கேரள மாநிலமே கொண்டாடி வருகின்றது.

    உலகின் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட செம்மீன் நாவலின் ஆசிரியர், படத்தில் நடித்த நட்சத்திரங்கள், இயக்குனர் என்று தனி இதழே வெளியிட்டது கேரளாவின் மாத்ருபூமி நாளிதழ்.

    அந்த காலகட்டத்தில் சிறந்த படத்துக்கான விருதுகள் பெரும்பாலும் வங்கத் திரைப்படங்களுக்கே கொடுக்கப்பட்டுவந்தது. சிறந்த படங்களுக்கான தேர்வில் இடம்பெற்ற இருபது படங்களுக்குள் செம்மீன் முதலில் இடம்பெறவில்லை. தென் இந்தியாவிலிருந்து சிறந்த படம் செம்மீன் என்று பரிந்து பேச யாரும் இல்லாத சூழலில் அன்றைக்கு தேர்வுக்குழுவில் இருந்த பாரதி மணி பரிந்துரையின் பேரில் முதல்முறையாக தங்கத் தாமரை விருது தென்னிந்திய சினிமாவுக்கு செம்மீன் திரைப்படம் மூலம் கிடைத்தது.

    மார்க்ஸ் பார்தலே ஒளிப்பதிவு அற்புதமாக அமைந்தது. அவர் ஒரு ஜெர்மானியர். இருந்தும், கடற்புரத்து மக்களின் அன்றாட வாழ்வின் வியத்தகு கோணங்களை அவர் தம் ஒளிப்பதிவில் காட்டியதும் செம்மீனின் வெற்றிக்கு இன்றியமையாத இன்னொரு காரணம். மேஜர் சத்யன் அப்பாவி பளனியாகவே மாறியிருப்பார்.

    சத்யனும் ஷீலாவும் நடிப்பில் ஒருவரை ஒருவர் போட்டிபோட்டு மிஞ்சியிருப்பார்கள். பரீக்குட்டியாக வரும் மது கதாப்பாத்திரம் மனதைக் கரைக்கும். செம்பன் குஞ்ஞுவாக வரும் கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், சக்கியாக நடித்த அடூர் பவானி, பஞ்சமியாக வரும் லலா, சி. ஆர். ராஜகுமாரி, அடூர் பங்கஜம், கோட்டயம் செல்லப்பன், பறவூர் பரதன், பிலோமின, ஜெ.எ.ஆர். ஆனந்த் , கோதமங்கலம் அலி ஆகியோர் தாங்கள் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் மூலம் கேரள மக்களின் வாழ்வியலை கண்முன் காட்சியாகக் கொண்டுவந்திருப்பார்கள்.

    இத்திரைப்படத்தினை பாபு இஸ்மயில் சேட்டு தயாரிக்க, மார்கஸ் பார்ட்லி, யு. ராஜகோபால் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்தனர். இசை சலில் சௌத்ரி. இயக்குனர் ராமு காரியாட் நடிகர்களுக்கு ஈடாகக் கடலலைகளையும் நடிக்க வைத்திருந்தார்.
    கடல் அலைகளின் சீற்றம், கோபம், சிரிப்பு, புன்முறுவல், முணுமுணுப்பு, நாணம், கெஞ்சல், கொஞ்சல், பிடிவாதம் எல்லாம் காட்சியமைப்பில் ரசிக்கும்படியாகக் கையாண்டிருப்பார்.

    இன்றைய தலைமுறையினர் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் வீரபாண்டிய கட்டபொம்மனும், செம்மீனும்.

    -கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
    23-08-2015.
    https://www.facebook.com/ksradhakrish

  18. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •