Page 118 of 337 FirstFirst ... 1868108116117118119120128168218 ... LastLast
Results 1,171 to 1,180 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1171
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...64198676_o.jpg

    இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே தினத்தில் நான் என்ன எழுதினேன் என்று ஃபேஸ் புக் சொன்னது.. இந்த ச் சிரிக்கின்ற பெண்ணிற்கு கட்டளைக் கலித்துறை ஒரு நண்பர் எழுத நான் சில க.;க.து மற்றும் எழுசீர் விருத்தம் எழுதிப் பார்த்தேன்..பார்த்தேனா..

    கள்ளச் சிரிப்பதும் கண்பார்வை காட்டியே நின்றிருக்க
    உள்ள உவகை உதட்டில் விரிந்தே மலர்ந்திருக்க
    செல்கின்ற தென்றல சிலிர்ப்புடன் மங்கையைத் தீண்டிடவும்
    துள்ளியே பார்த்தவென் தூயநெஞ்சின் சூடும் அறியாயே

    ஓடி ஒளிய ஓரிடம் தடுக்க விழுந்ததுவும்
    வாடி முகவலியில் வண்ணம் மாற வசைந்ததுவும்
    பாடிப் பறந்தே பலவிடம் சென்ற பரவசமும்
    ஊடி வருகுமே இத்தென்றல் தீண்டிடும் வேளையிலே

    வாடி பயிரால் உருகிய வள்ளலார்தான் வந்தாலென்
    தோடியில் தேன்போல் தீந்தமிழில் பாடுபவர் வந்தாலென்
    மோடியோ மேல்யாரோ மானிலத்தில் ஜெயித்தே நின்றாலென்
    ஊடி இளமை உணர்வில் சிரிக்கின்றேன் ஏகம்பனே.

    கண்ணன் நினைப்பில் கனிவுடன் பார்த்திடும் பார்வையதோ
    கன்னச் சிவப்பின் காரணம் களிப்பெனக் காட்டுகையில்
    தென்றலும் மென்மையாய் தேவதை தோளில் வருடுகையில்
    எண்ணம் மயங்கியே எள்ளிச் சிரித்தவள் நின்றனளே

    சிரித்தவிழி ரசிப்புடனே சீராக நோக்கிவிடும்
    ..சேயிழையாள் நினைப்பினிலே யாரோ
    தரித்தகரு ந் தொப்பியிலே தயக்கமுடன் மென்தென்றல
    ..தாவித்தான் அணைப்பதுவும் ஏனோ
    விரிந்திருக்கும் செவ்விதழில் வீண்பெருமை தான்கொண்டே
    ...வெண்பற்கள் பளிச்சிடுதல் கண்டீர்..
    புரிந்திருக்கும் பாவையிவள் பாழ்மனதைப் பலவாறாய்
    ..போராட வைத்திடுவாள் என்றே...

    *

    ஆஹா அனுஷ்கா புராணம்பாடியாச்சு அவரைப் பற்றிச் சொல்லாம இருந்தா எப்படி..

    முப்பத்து நான்கு வயதான அனுஷ்கா ஷெட்டிக்கு அவர் பிறந்த போது அம்மா அப்பா வைத்த பெயர் ஷ்ஷ்ஸ்வேதா..

    தெலுங்கில் அறிமுகமாகியிருந்தும் தமிழில் உஸ்ஸரமாக மாதவனின் ஜோடியாக தனது இருபத்து ஆறாவது வயசில் (அவஸ்யம் வயஸ் சொல்லணுமா கண்ணா.. பின்ன மன்ச்சு..ஒரு ஜி.கே தானே) ரெண்டு படத்தின் மூலம் அறிமுகம்.. ஆனால் பொண்ணு உசரம்..டூயட் எடுத்தா ஹீரோவால குட்டி ஸ்டூல் போட்டுத் தான் முத்தா தரமுடியும்.. எனில்..ஒழுங்கா ப் பார்க்க முடியலை என்பதாலோ என்னவோ பைபை என தமிழ் ரசிகர்கள் டாட்டா காட்ட தெலுகு சின்னாலு..வாவா.. என அரவணைத்து ஆசிர்வதிக்க பிரபல நடிகையாய் ப் பின் தமிழில் அருந்ததியாய் டப் பிக்கப்பட்டு வர அந்தப் படம் காட் தீயாக ஓட பின் என்ன தமிழிலும் மார்க்கெட் பிக்கப் ப்தான்..வேட்டைக்காரனில் விஜய் சிங்கம் ஒன்று இரண்டு என விலாவாரியாக விலா தெரிய உலா வந்து..இப்போது ருத்ரம்மா தேவி..

    வாசு சொன்ன டெக்னிக்..அதாவது கீழான இடத்தில் ஹீரோ அதே போல் கொஞ்சம் மேலான இடத்தில் ஹீரோயின்..இதை இவருக்கு பயன் படுத்தத்தான் செய்கிறார்கள்..இல்லையேல் தள்ளித் தள்ளி லாங்க் ஷாட்..

    செல்லமாய் மாதவன் மொபைலா மொபைலா என இன்பத் தமிழில் நான் உந்தன் போஸ்ட் பெய்டா ப்ரீ பெய்டா சொல் சொல் எனக் கேட்கும் ரெண்டுபாடல்..ம்ஹூம் ரெண்டு படப் பாடல்..ஹய்யய்.யோ எனக் பயம்மா இருக்கு பாடல் மெலடி தான்..



    அம்மணி யோகா டீச்சர் என்பது அடிஷனல் தகவல்..

    என் இதயம் ஒரு முறை துடிக்கிறதே எடுத்த லொக்கேஷன் மஸ்கட்டிலிருந்து துபாய் பார்டர் போகும் வழி..



    பின்ன ஹோம் வொர்க் பண்ணிட்டு வாரேன்..
    Last edited by chinnakkannan; 30th October 2015 at 12:46 AM.

  2. Likes vasudevan31355, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1172
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!



    நான் நெனச்சேன். நீங்க சொல்லிட்டீங்க. அனுஷ்கா பத்திதான் சொல்றேன். நானே எழுதனும்னு நினைச்சேன். நீங்க அமர்க்களமா சொல்லிட்டீங்க. என்னப் (எண்ணப்)பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!

    அனுஷ்காவை 'ரெண்டு' படத்தை ரெண்டுமுறை பார்த்தபோதே இவுக பெரியா ஆளா வருவாங்கன்னு மனசுல பட்டுச்சு. நீங்க சொன்னா மாதிரி நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் ஆச்சுதான். ஆனால் அப்புறம் செம பிடி.

    அனுஷ்காவை நான் நடிகைன்னு குறிப்பிடாம அந்தப் பெண் என்றுதான் சொல்லுவேன்.

    இந்தப் பெண்ணைப் பிடித்துப் போனதற்கு வலுவான காரணம் ஒன்று உண்டு.

    நீங்க நினைப்பது போல மாதவனோட ரெண்டு படத்துல வர்ற டூ பீஸ் எல்லாம் இல்லை.

    அனுஷ்கா மட்டுமே துணிவாக சில கதாபாத்திரங்களை இப்போதைய நடிகைகளில் தேர்ந்தெடுத்தவர். சரித்திரப் படங்கள் திரும்ப வந்து வெற்றி வாகை சூடுவதற்கும் இந்தப் பெண்ணும் ஒரு காரணம்தானே! இப்போது நடக்கும் பலத்த ஹீரோயின் போட்டிகளுக்கு நடுவே அதுவும் கொஞ்சம் வயது முதிர்ந்தாலும் அவர் ஹிஸ்டாரிக்கல் கலக்கலை துணிவுடன் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றது பாராட்ட வேண்டிய அம்சம்தானே!

    விதவிதமான கேரக்டர்களை அவர் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல...அதற்காக ரொம்பவும் சிரத்தை எடுத்து மெனக்கெடுவார். எத்தனை பேரை இப்படி காட்ட முடியும்?

    'வானம்' படத்தில் விலைமாது கேரக்டரில் இவர் நடித்தது அதுவும் ஆபாசக் கலப்பில்லாமல் நடித்தது மகா துணிச்சல். மத்த நடிகையாக இருந்தால் இமேஜ் அது இது என்று புரூடா விடுவார்கள்.

    'தெய்வத் திருமகன்' படத்தில் அமர்க்களமான பெண் வக்கீல் வேடம். தூள் பண்ணியிருப்பார்.

    'இரண்டாம் உலகம்' படத்தில் ஆர்யாவை விரட்டி விரட்டிக் காதலித்து உயிர்துறக்கும் பெண்ணாக, வேற்று கிரக முரட்டு பெண்ணாக வித்தியாசம்.

    'சிங்கம்' போன்ற படங்களில் வழக்கமான கிளாமர் ஹீரோயின்

    'ருத்ரமாதேவி'யில் இளவரச ஆண் வேடம், அப்படியே இளமை பொங்கும் இளவரசியாக இரண்டு கேரகடர்களை ஒரே பாத்திரத்தில்.

    வரப்போகும் 'இஞ்சி இடுப்பழகி' படத்துக்காக மெனக்கெட்டு குண்டுப் பெண்ணாக நடிக்க இருபது கிலோ எடை கூட்டி அர்ப்பணிப்பு.

    படத்துக்குப் படம் உடல் வருத்தி உழைத்து வித்தியாசக் கேரக்டர்களை தெரிந்தெடுக்கும் வித்தியாசமான நடிகை.

    இந்த ஒரு காரணத்திற்காகவே இவரை எனக்கு நிரம்பப் பிடிக்கும்.

    உங்களுக்கும் பிடித்ததில் ரொம்ப சந்தோஷம். திறமை எங்குள்ளதோ... வித்தியாசம் எங்குள்ளதோ அங்கே நாம் சென்று பாராட்டுத் தெரிவிப்பதுதானே முறை?

    வெறும் கேட் வாக் நடந்து வந்து போகும், ரசிகர்களை முக அழகு கொண்டு மற்றுமே ஏமாற்றி கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் இவர் சேர மாட்டார். இதுவே அனுஷ்காவின் தனி சிறப்பு.
    Last edited by vasudevan31355; 30th October 2015 at 08:08 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai, chinnakkannan liked this post
  6. #1173
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு,

    அபீத குஜாம்பாள், குசலகுமாரி, கிருஷ்ண குமாரியானாலும் சரி அனுஷ்கா முதலோனார் ஆனாலும் சரி சமர்த்தாய் அழகாய் அலசுகிறீர்க்ள்..

    யெஸ்..சொன்னாற்போல அந்தப் பொண்ணை ரெண்டில் பார்த்த போது ( பிகினி ட்ரஸ் அல்ல) அழகா இருக்கு ஆனா பொண்ணு ஹைட்டு என மனதுள் ஓடியது (ரெண்டு த்ரில்லர் படமென்பது ஒரு விஷயம்..பொசுக்கென்று அந்தக் கேரக்டரை மரணிக்கவும் வைத்துவிடுவார்கள்) அப்புறம் கம்பேக் ஆனது அருந்ததி தான்..ஆனாக்க..

    நான் விக்ரமார்க்குடு (தமிழ் சிறுத்தை) டப்பண்ணப்பட்ட தமிழ் ப் படத்தைப் பார்த்தேன்.. நன்னாயிட்டு செய்திருந்தார்..கிளாமர் தான் எனினும்(டைஜஸ்ட் பண்ணக் கஷ்டமான விஷயம் ரவி தேஜா (விக்ரம் போல கொஞ்சம்வயசானதுக்கப்புறம் ஃபேமஸ் ஆன ஹீரோ) ஜிந்த்தாத்தா பாடல்

    தெ.தி யில் லாயராக..( போனால் போகிறதென்று பாக்ஸ் ஆஃபீஸிற்காக பாட்டு)

    நல்ல வேளை இரண்டாம் உலகம் பார்க்கவில்லை..

    பாகுபலியில் அவ்வளவாக உபயோகப் படுத்தாமல் ச்சும்மா கைதி ராணியாக வைத்திருந்தது கஷ்டமாக இருந்தது (தமன்னாவின் புயல் அழகில் (க்ராஃபிக்ஸூம் விளையாடியிருந்தது) மறந்தும் போயிருந்தது)

    ருத்ரம்மா தேவி பார்க்கவில்லை பார்க்க வேண்டும்..

    ஆடிட்டர்கள் வந்து திட்டுவதற்கு முன் பழைய பாட் ஏதாச்சும் போட்டுடுவோமா..

    படம் பேர் எங்கள் குடும்பம் பெரிசு.. நம் ரசனையும் கொஞ்சம் பர்ந்து விரிந்தது தானே அ.கா மட்டுமில்லாமல் இ.கா விலும் ரசிப்போமே..

    உதயகுமார் செளகார் ஜானகி..

    அதி மதுரா அனுராகா
    ஜீவிதமே சுக போகம்
    அதி மதுரா அனுராகா

    சமரசம் தான் வைபோகம்
    சந்ததமும் நலமாகும்
    சமரசம் தான் வைபோகம்
    சந்ததமும் நலமாகும்


  7. Likes rajeshkrv, Russellmai liked this post
  8. #1174
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Dinamani

    பானுமதி: 2. கைக்குட்டை காதலும்... பாவுறமா பாடலும்!

    அறிமுகப்படுத்திய சி. புல்லையாவின் இயக்கத்தில் அடுத்து ‘மாலதி மாதவம்’ பானுமதியைச் சட்டென்று கதாநாயகியாக உயர்த்தியது. தொடர்ந்து தர்மபத்தினி, கருட கர்வ பங்கம் என்று பிசியானார். புகழ் ஏணியில் ஏறிக்கொண்டிருந்தத் தருணத்தில் ‘பானுமதிக்குள்ளும்’ காதல் பூத்தது!

    பானுமதியின் காதல் கதை அவரைப் போலவே சுவாரஸ்யம் நிறைந்தது.

    ‘பட உலகிலே எனக்குக் கோபக்காரி, ரொம்ப ஸ்ட்ரிக்டுன்னு பட்டப் பேரு உண்டு. அந்தக் காலத்தில் லவ் சீன்னா ஹீரோவும் ஹீரோயினும் கையைப் புடிச்சிக்கிட்டு ஹாய்யா நடப்பாங்க. தோள்ல சாஞ்சுக்குவாங்க. இதுக்கு மேலே லவ் சீன்ஸ் எப்படி எடுக்கணும்னு அப்பத் தெரியாது.

    படத்துக்காக அக்ரிமென்ட் போடும் போதே ‘ஹீரோ என் கையைப் பிடிக்கக் கூடாது. தோள்ல சாயக் கூடாது’ன்னெல்லாம் எங்க அப்பா கண்டிஷன் போட்டாரு.

    ஆடம்பரங்களோ சினிமா ஸ்டாருங்கிற ஜிகுஜிகுவோ எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. எங்கப்பா எனக்குக் கொடுத்த ட்ரெயினிங் அந்த மாதிரி.

    என்னை நான் ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணாத்தான் நினைச்சுக்கிறேன். அதனால இன்னும் எங்க வீடு சாதாரணமாதான் இருக்கும். சினிமா ஸ்டார் மாளிகை மாதிரி ஆடம்பர அமைப்பைப் பார்க்க முடியாது. இதை நான் பெருமையாவே சொல்லிக்கிறேன்.

    1941ன்னுல மெட்ராஸூக்கு வந்தோம். பக்தி மாலான்னு ஒரு படம். வட நாட்டுக்காரர் ஒருத்தர் எடுத்தார். அதுல மீராபாய் மாதிரி ஒரு கேரக்டர். அந்தப் படத்துக்காக நான் மொதல்ல டான்ஸ் கத்துக்க வேண்டி வந்தது. அதுவரைக்கும் எனக்கு டான்ஸே தெரியாது. அதில் நான் நாட்டியம் நல்லா பண்ணல. அதனாலயே அந்தப் படத்தைப் பார்க்க எனக்கே பிடிக்காது.



    அதுக்கப்புறம் ஸ்டார் கம்பைன்ஸ் ‘கிருஷ்ண பிரேமா’ வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் வளர்ந்த நேரம்.

    அதை ராமகிருஷ்ண ப்ரேமம்னு கூடச் சொல்லலாம்.கிருஷ்ண பிரேமா படத்தை இயக்கியவர் ஹெச். வி. பாபு. அவரது உதவியாளர் பி.எஸ். ராமகிருஷ்ணராவ். எனக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. அதற்குக் காரணம்-

    ‘ராமகிருஷ்ணா ரொம்பவும் சங்கோஜி. நல்லவர். பெண் பிள்ளைகள் இருக்கும் பக்கம் கூட திரும்பிப் பார்க்க மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்.

    அப்போது எனக்கு மிகச் சரியாகப் பதினாறு வயது. இருந்தாலும் எத்தனையோ யுகங்களாக அவரை நான் இதற்கு முன்பாகவே உணர்ந்து வந்தவள் போல் ஓர் உணர்வு நெஞ்சில் ஊறிக் கொண்டு இருந்தது.

    அன்றைய படப்பிடிப்பில் நாரதர் வேடத்தில் சூர்யகுமாரி என்னுடன் நடித்தார். நிஜமாகவே ரோஜாப்படுக்கையில் என்னைப் படுக்க வைத்தார்கள். அதில் முள்ளும் இருந்தது. நன்றாக என் விரலில் குத்தி விட்டது. ரத்தம் வர ஆரம்பித்தது.

    சூர்யகுமாரி பதறிப்போனார். ‘அய்யோ பானு ரத்தம் கொட்டுது. யாராவது துணி கொண்டு வந்து சுத்தி விடுங்களேன்... ’ என்று சத்தம் போட்டார்.

    அப்போது ராமகிருஷ்ணா உடனே ஓடோடி வந்து தன் கைக்குட்டையை எடுத்துத் தயங்கியபடியே, என் விரலில் சுற்றி பேன்டேஜ் போடுவது போல கட்டி வைத்தார்.

    அவர் எங்கிருந்தாலும் எந்த வேலையில் ஈடுபட்டு இருந்தாலும் எனது பார்வை மட்டும் அவர் பக்கம் தான் இருக்கும். அன்று அவர் விரலில் வடிந்த ரத்தத்தை நிறுத்துவதற்காகக் கட்டிய கைக்குட்டையை நான் விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டேன்.

    அவர் பேசறது என்ன மொழி, என்ன ஜாதின்னு கூட சரியாத் தெரியாது. நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என் சிஸ்டர் மூலமா சொன்னேன்.

    ஐவேஜியுள்ள குடும்பத்தில் பிறந்து விட்டு போயும் போயும் ஒரு அனாதையையா மணந்து கொள்வது? ஒரு காலும் முடியாது’ என்றார் அப்பா.

    ஆனால் பானுமதி அதற்கெல்லாம் அஞ்சுவாரா என்ன? முழு பலத்தோடுத் தன் தந்தையை எதிர்த்துக் காதலரைக் கல்யாணம் செய்து கொண்டார்.

    ‘எங்கப்பா ஒரு வழியா சம்மதிச்சிட்டாரு. ஆடி மாசத்துல ஆகஸ்டு எட்டாம் தேதி 1943ல் டவுன்ல, வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்துல எங்க கல்யாணம் நடந்தது.

    அதுக்கப்புறம் சினிமாவில் நான் நடிக்கக்கூடாதுன்னு ரெண்டு பேருமா சேர்ந்து முடிவெடுத்தோம். ஆறு மாசம் வீட்டுலயே சமைச்சுக் கிட்டு இருந்தேன். பானுமதி.

    பாவம் பொம்மராஜூ வெங்கட சுப்பையா. தன் பெண் கர்நாடக இசைப் பேரரசியாக வர வேண்டும் என்று மனமாற ஆசைப்பட்டவர். பானுமதியின் அற்புதமான குரல் வளத்தின் காரணமாகவே அவரை சினிமாவில் நடிக்க அனுமதித்தவர். மகளின் காதல் கணவர் தன் பாசக்குயிலை கூண்டில் அடைத்து விட்டாரே... ’ என்று வருந்தினார்.

    கெஞ்சாத குறையாக மாப்பிள்ளையிடம் ‘பாட்டுன்னா பானுவுக்கு உசிர். அவளைத் தயவு செய்து பாடவாவது அனுப்புங்களேன். ’ என்றார்.

    ராமகிருஷ்ணாவுக்கு மனைவியை முழு நேர குடும்பஸ்திரியாகப் பார்ப்பது மட்டுமே பிடித்திருந்தது. சபை வெளிச்சங்களில் புகழின் மேடைகளில் பானுவைக் காணக் கண்கள் கூசின.



    மருமகன் பிடிவாதமாக மறுத்து விட்டார். ரோஷக்கார மாமனார் அதற்கு மேல் வேதனையைச் சகிக்க முடியாமல் நொந்து போய் சொந்த ஊருக்கே திரும்பினார்.

    நடிகை லட்சுமியின் தந்தை ஒய். வி. ராவ். சிந்தாமணி படம் மூலம் தியாகராஜ பாகவதரை சிகரத்துக்கு அழைத்துச் சென்ற சிறந்த டைரக்டர். திருமணத்துக்கு முன் சித்தூர் வி. நாகையா -பானுமதி ஜோடியாக நடித்த படம் ‘தாசில்தார்’. ஒய்.வி. ராவின் இயக்கத்தில் வெளியானது. அமோக வெற்றி பெற்றது.

    சமூக கவுரவத்துக்காக ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்து நடைப் பயிற்சி செய்யும், தாசில்தாரின் அப்பாவி மனைவியாக, பானுமதி மிக வித்தியாசமான நடிப்பில் கொடி கட்டிப் பறந்தார்.

    வித்தை உள்ள இடத்தை வியாபாரிகள் தேடி வந்தார்கள்.

    ‘பானுமதியின் திறமைகள் ஏற்கனவே நிருபிக்கப்பட்டவை. உங்களால் எத்தனை நாள்கள் அதற்குத் தடை போட முடியும்? உங்கள் காதல் மனைவி பானுமதியை நீங்கள் கொண்டாடும் விதம் அபாரம். ரொம்ப காலம் உங்கள் வைராக்கியம் நீடிக்காது.’ என்கிற ரீதியில் தயாரிப்பாளர்கள் தங்கள் கருத்துகளை ராமகிருஷ்ணாவிடம் தெரிவித்தார்கள். அதை அவர் சட்டை செய்யாமல் தொடர்ந்து பிடிவாதம் காட்டினார்.

    பட அதிபரும் இயக்குநருமான பி. என். ரெட்டி, ராமகிருஷ்ணாவைச் சந்தித்தார்.

    அடுத்து எடுக்க இருக்கும் ‘ஸ்வர்க்க ஸீமா’ தெலுங்கு படத்தில் நாட்டுப்புறத்து சுப்புலட்சுமியாகவும் நாடக நடிகை சுஜாதாவாகவும் இரட்டை வேடங்களில் பானுமதி நடிக்க வேண்டும் என்றார். அவ்விரு கதாபாத்திரங்களிலும் பானுமதியைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது, தயவு செய்து ஸ்வர்க்க ஸீமாவை மட்டும் ஒப்புக் கொள்ளுமாறும் தொடர்ந்து வற்புறுத்தினார்.

    இனம் புரியாத இயலாமையில் ராமகிருஷ்ணாவின் ரத்தம் கொதித்தது. மற்றவர்களைப் போல் இல்லாமல் பி.என். ரெட்டி மீண்டும் மீண்டும் தேடி வந்து நச்சரிப்பது எரிச்சலை உண்டாக்கியது.

    ஒரு நாள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி விட்டது.

    ‘சொன்னால் புரிந்து கொள்ளுங்கள். எல்லாரும் என் சொல் பேச்சு கேட்டு வாயை மூடிக்கொண்டு போகும் போது நீங்கள் என்ன உசத்தி?’ என்றார் ராமகிருஷ்ணா காட்டமாக.

    பொறுத்தது போதும் என்று ரெட்டி பொங்கி எழுந்து விட்டார். படைப்பாளிகளை அவமதிப்பவர்களைச் சும்மா விடுவதாவது?

    ‘பானுமதி ஒப்பற்ற நட்சத்திரமாக ஒளி வீச நான் மெனக்கெட்டு வற்புறுத்திச் சொல்கிறேன். மனைவி சினிமாவில் செல்வாக்கு பெறுவதை நிஜத்தில் சகித்துக் கொள்ள முடியாதவர் நீங்கள். எங்களிடம் தவறாக நடந்து கொள்கிறீர்கள். இது தானா உங்கள் புருஷ லட்சணம்?'

    வறட்டு கவுரவம் அப்போதும் தீரவில்லை ராமகிருஷ்ணாவுக்கு.

    ‘சரி. சரி. நீங்கள் இத்தனை கெஞ்சிக் கேட்டதால் ஸ்வர்க்க ஸீமாவில் மட்டும் பானுமதி நடிக்க அனுமதி தருகிறேன்’ என்றார்.

    ‘பி.என். ரெட்டி வந்து ஸ்வர்க்க ஸீமாவில் நடிக்கக் கூப்பிட்டாரு. என் கணவர் அனுப்ப மாட்டேன்னு சொன்ன பிறகும் அவரை கம்பல் பண்ணி, சம்மதிக்க வெச்சு, என்னை நடிக்க வெச்சாரு.’- பானுமதி.

    பானுமதியை பிறவி நடிகை எனலாம். அவர் ஏற்றுக் கொண்ட வேடங்கள் இன்றளவும் பேசப்படுவதற்கு அவரது கூடுதலான ஈடுபாடு முக்கிய காரணம். கதாபாத்திரங்களை மெருகேற்றுவதில் அவர் காட்டிய கடின உழைப்பும் கற்பனையும் அலாதியனவை. தொடக்கக் காலத்திலிருந்தே மிகச் சுதந்தரமான நடிகையாக பானுமதி தன்னை அடையாளம் காட்டியதால் அவருக்கு எதுவும் கை கூடியது.

    ப்ளான்ட் அன்ட் சான்ட் ஆங்கில சினிமாவைத் தழுவி உருவானது ஸ்வர்க்க ஸீமா. அதில் மாறுபட்ட இரு பெண்களைத் தன் மனக்கண்ணில் கொண்டு வர பானுமதிக்கு உதவியது அதன் நாயகி ரீடாஹேவர்த். பானுமதியின் அபிமான ஹாலிவுட் ஸ்டார்.

    ஏறக்குறைய ரீடாவின் பாதிப்பு பானுமதியின் அனைத்துப் படங்களிலும் பட்டுப் புடைவையின் ஜரிகையாக ஜொலித்தது. அதற்குப் பிள்ளையார் சுழி போட்ட முதல் வெற்றிச் சித்திரம் ஸ்வர்க்க ஸீமா.

    பச்சையாகச் சொன்னால் ரீடாஹேவர்த்தை அப்பட்டமாக காபி அடித்தவர் பானுமதி. அதை அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

    ‘ஸ்வர்க்க ஸீமாவில் நான் சிறப்பாக நடிக்கக் காரணம் ரீடா ஹேவரின் ப்ளான்ட் அன்ட் சான்ட் நடிப்புதான். உத்தம் குமாரைப் பார்த்து ஏ. நாகேஸ்வர ராவ் எனது கானல் நீர் படத்தில் நடிக்கவில்லையா...? ’ -பானுமதி.

    ரீடா ஹேவர்த் ப்ளான்ட் அன்ட் சாண்டில் பாடிய பாடலைத் தன் இஷ்டத்துக்குப் படப்பிடிப்புத் தளத்தில் மெல்ல ஹம் செய்து கொண்டிருந்தார் பானுமதி.

    ‘ஒஹ்ஹோ... பாவுறமா’

    ஒலித்த நொடிகளிலிருந்து ஸ்வர்க்க ஸீமாவின் ஹீரோ மற்றும் இசை அமைப்பாளர், பாடகரான சித்தூர் வி. நாகையாவுக்கு கேட்கத் திகட்டாத கானமாக தேனிசை பொழிந்தது. லவ் டூயட்டுக்கானப் பல்லவி கிடைத்து விட்டது என்றார்.

    ஏராளமானப் பாடல்களைத் தன் சொந்தக்குரலில் பாடி சூப்பர் ஹிட் ஆக்கிய ஒரே நாயகி பானுமதி. அவை அத்தனையிலும் அவரது பங்களிப்பு இசை அமைப்பாளருக்குச் சமமாகவே இருக்கும். அதற்கான பூர்வாங்க வேலைகள் ஸ்வர்க்க ஸீமாவிலேயே தொடங்கி விட்டன.

    பாவுறமா பாடலில் நாகையாவுடன் சேர்ந்து சரணங்களுக்கான மெட்டமைத்தவர் பானுமதி.

    ‘எனக்குப் பிடித்த இசையைப் பாடி நான் ஆரம்பிச்சு விடுவேன். மியூசிக் டைரக்டரை இன்ஸ்பைர் பண்ணுவேன். அவங்க வேறே ரூட்டுக்குப் போயிடாம என் ரூட்டுக்குத் திருப்பி விடுவேன். என்னோட வழி எப்பவும் சாஸ்திரீய இசை. ’ - பானுமதி.

    அந்நாளில் பாவுறமாவைக் கேட்டுப் பைத்தியம் பிடித்தவர்கள் போல் அலைந்து திரிந்து, அந்த ஒரு பாடலுக்காகவே ஸ்வர்க்க ஸீமாவை தினமும் கண்டு களித்தவர்கள் சாட்சாத் தமிழர்கள். ஆந்திராவை விடத் தமிழ் நாட்டில் தான் ஸ்வர்க்க ஸீமாவுக்கு அமோக வசூல் என்று குறிப்பிட்டார் பி.என். ரெட்டி.



    பி.என். ரெட்டியின் கருத்துக்கு வலிமை சேர்த்தது ‘குண்டூசி’ சினிமா பத்திரிகை ஆசிரியர் கோபாலின் ஸ்வர்க்க ஸீமா பட விமர்சனம்.

    ‘சுப்புலட்சுமி-சுஜாதா இருவருக்கும் தோற்றம். பேச்சு. நடை. உடை. பாவனைகள் ஆகியவற்றில் என்ன நேர்மாறான மாறுதல்!

    இருவருமே பானுமதி என்றால் யாரும் நம்பக் கூட மாட்டார்கள். புறா நடனத்தை என்னவென்று வர்ணிப்பது!

    பாவுறமா என்று புறாவைத் தடவிக் கொடுக்கும் போது குரலில் என்ன கொஞ்சல்! என்ன இனிமை! மற்ற எல்லா அம்சங்களையும் விட பாவுறமா பாட்டும் நாட்டியமும் தான் வெற்றி அளித்தது என்பது உண்மை.’

    வாலிப இதயங்களில் பானுமதியைப் பச்சை குத்திக் கொண்டத் தமிழர்கள் அவரைத் தங்கள் தோள்களில் வைத்துக் கூத்தாடாத குறை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!

    இலட்சக்கணக்கான வாலிபர்களின் ஆசை வெள்ளம் முரட்டுத்தனத்தால் உருவான ராமகிருஷ்ணா என்கிற முள்வேலியை அடித்துச் சென்றது.

    உச்சக்கட்டப் புகழில் இருந்தாலும் பானுமதிக்கு எப்போதும் சினிமாவை விட குடும்பம் மிக முக்கியம். காதல் கணவருடன் கனிவோடு இல்லறம் நடத்தி ஆண் குழந்தையைப் பெற்றார். பரணி என்று பெயர் சூட்டினார்கள்.

    பானுமதி புத்திசாலி. தென்னகமெங்கும் அவருக்காக ஸ்டுடியோ அதிபர்கள் காத்திருந்தார்கள். தன்னை வைத்து மற்றவர்கள் காசு பண்ணுவதற்கு முன்பாக, நாமே ஒரு படக் கம்பெனி தொடங்கினால் என்ன என்று தோன்றியது. உடனடியாக பரணி பிக்சர்ஸ் உருவானது.

    பிள்ளையும் பிறந்தாயிற்று. அவன் அப்பாவுக்கு உத்தியோகம் வேண்டாமா? ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். வீட்டில் புட்டிப் பால் கலக்கிக் கொண்டிருந்த ராமகிருஷ்ணாவை சினிமா டைரக்டர் ஆக்கினார்.

    புருஷனும் பெண்டாட்டியும் சேர்ந்து பாடுபட்டதில் பரணி பிக்சர்ஸ் தெலுங்கில் நன்கு கால் பதித்தது. அதற்கு அவர்களது முதல் தயாரிப்பான ‘மதன மாலா’ படம் உதவியது. பானுமதி நடித்துத் தமிழகத்திலும் நன்றாக ஓடி வசூல் செய்தது.

    தனக்குத் தமிழிலும் நல்ல வரவேற்பு இருப்பதை உணர்ந்தவர் பானுமதி. பரணி பிக்சர்ஸ் மூலம் நேரடியாக அறிமுகமாக விரும்பினார்.

    1944 ஹரிதாஸில் பாகவதர் பெற்ற வெற்றிக்கு அடுத்து 1945ல் ஏவி.எம்.மின் ஸ்ரீவள்ளி தென்னாட்டை வசூலில் புரட்டிப் போட்டது. அதில் ஹீரோ டி.ஆர். மகாலிங்கம்.

    பாகவதர், சின்னப்பாவை விட இளங்காளையான மகாலிங்கம் தனக்குக் கட்டுப்பட்டு நிற்பார் என்பது பானுமதியின் தீர்க்கமான முடிவு. 1952ல் ‘பராசக்தி’ சிவாஜி வரும் வரையில் தமிழ் சினிமாவை தன் பாடல்களால் நிரப்பியவர் டி.ஆர். மகாலிங்கம். அவருக்கு நல்ல கிராக்கி இருந்ததால் பரணி பிக்சர்ஸின் முதல் தமிழ்ப் படத்தில் அவரை நாயகனாக்கினார் பானுமதி.

    பி.பானுமதி - டி.ஆர். மகாலிங்கம்

    நடிக்கும்

    பரணி பிக்சர்ஸ்

    புலந்திரன்



    அப்படியோர் விளம்பரத்தைப் பார்த்ததும் கோடம்பாக்கம் பரபரப்பானது.

  9. Likes Russellmai liked this post
  10. #1175
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எஸ் வாசு தேவன் சார்.. தினமணி டாட் காமில் அந்தக் கனவுக் கன்னிகள் தொடரே நல்லாத் தான் இருக்கு.. இது மூன்றாவது நடிகை..பானுமதி.. முதல் இருவர் 1. பத்மினி 2. சாவித்ரி ( நிறைய தகவல்கள் கிடைக்கின்றன)

  11. Likes JamesFague liked this post
  12. #1176
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    S.vasudevan உங்களுக்காக ...ஓஹோ பவுரமா...




    ஹச்சோ..இது ஒஹ்ஹோ புள்ளி பாவுரமா ந்னு வருதே..ராஜேந்திரப் பிரசாத், ரம்யா கிருஷ்ணன்.. பட் பாட் நல்லா இருக்கே எனக்குத் தெரிந்து கவர்ச்சியே இலலாத நளினமான கலர் தெலுங்குப் பாட்டே இது தான் ( கண்ணா யூ ஆர் ஓப்பனிங்க் த பண்டோரா’ஸ் பாக்ஸ் )

  13. Thanks JamesFague thanked for this post
  14. #1177
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பானுமதி இன்னிக்கு நைட்ல கனவுல வந்து சபிக்கறதுக்கு முன்னாடி..ஒரிஜினல் ஒஹ்ஹொ பவுரமா வும் போட்டுடலாம்.. ராஜ் ராஜ் சார்..இ படம் பார்த்திருக்கேளா..



  15. Likes Russellmai liked this post
  16. #1178
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

    (நெடுந்தொடர்)

    46

    ' அன்பு வந்தது என்னை ஆள வந்தது'





    'சுடரும் சூறாவளியும்'

    இன்றைய பாலாவின் தொடரில் அன்பான ஒரு பாடல். ஆழமான ஒரு பாடல். நம்மை என்றுமே ஆள வந்த பாடல். தெய்வ சொர்க்கமான பாடல்.

    1971-ல் வெளிவந்த 'சுடரும் சூறாவளியும்' திரைப்படத்தில் இருந்து பாலா பாடிய பாசப் பாடல். இது வரை காதல் ரசம் சொட்டும் கலக்கல் பாடல்களை தனியாகவும், ஜோடியுடனும் பாடி வந்த பாலா 'ஸோலோ'வாக தனித்து, ஒரு தந்தையின் தன்னிகரில்லா பாசத்தை குழந்தைகளிடம் பாடிக் காட்டும் பாலாவாக வித்தியாசமான திறமையில் பரிமளித்தார். சிகரங்கள் தொட்டார்.

    எஸ்.ஆர் புட்டண்ணா கனகல் என்ற கன்னடப் பட இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் 'சுடரும் சூறாவளியும்'. (இந்த இயக்குனர்தான் 'இருளும் ஒளியும்' படத்தின் இயக்குனர். சிறந்த கன்னடப் படங்களின் ஒன்றான 'நாகரஹாவு' படத்தின் இயக்குனர்.) வி.சி.குகநாதன் 'சித்ரமாலா' கம்பைன்ஸ் என்ற பெயரில் ஏ.வி.எம்.பேனர் உதவியுடன் தயாரித்த இப்படத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெயா, 'வெண்ணிற ஆடை' நிர்மலா, எம்.ஆர் .ஆர்.வாசு, மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர்.

    இந்தப் படத்தின் பெயரைக் கேட்டாலே பல பேர் நடுங்குவார்கள். ஏன்? ஹாரர் மூவியா? இல்லை..இது ஒரு அதீத சோகம் ததும்பும் படம் 'துலாபாரம்' போல. இவ்வளவு சோகத்தை அப்போது ஜனங்களிடம் தாங்கக் கூடிய மனப்பக்குவம் இல்லை என்பதால் இந்தப் படம் நல்ல எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி எதிர்பாராவிதமாக தோல்வியடைந்தது. ஆனால் படத்திற்கு நல்ல பெயர் கிடைத்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    சரி! அப்படி இந்தப் படத்தின் சோகம் கொப்புளிக்கும் கதைதான் என்ன? என் நினைவுக்குத் தெரிந்தவரை சொல்ல முயற்சிக்கிறேன்.


    'சுடரும் சூறாவளியும்' கதை.

    தாயில்லாத தன் இரண்டு பிள்ளைகளை (ஒரு ஆண், ஒரு பெண்) தந்தை ஜெமினி பாசத்துடன் வளர்க்கிறார். தன் பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்க அவர் சட்ட விரோதமான சமூகக் குற்றங்களை செய்ய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் போலீஸ் விரட்டி ஜெயிலுக்குப் போக, பின் வில்லன் எம்.ஆர்.ஆர் வாசுவால் பெங்களூரில் அடைக்கலம் தரப்பட்டு அவராலேயே மதுவுக்கு முழு அடிமை ஆகிறார். எம்.ஆர்.ஆர்.வாசு ஆட்டுவித்தபடி ஆடி சமூகக் குற்றங்களை புரிகிறார். எம்.ஆர்.ஆர்.வாசு கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலுக்குத் தலைவன். அதை பேங்கில் கேஷியரைக் கைக்குள் போட்டுக் கொண்டு நல்ல நோட்டாக மாற்றித் தருவது ஜெமினியின் வேலை.

    அனாதையான பிள்ளைகளை எஸ்.எஸ்.லட்சுமி பாட்டி வளர்க்கிறார். இப்போது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகின்றனர். அண்ணன் முத்துராமன். தங்கை ஜெயா. பாட்டி இப்போது இல்லை. முத்துராமன் தன் தங்கை ஜெயா மேல் உயிரையே வைத்திருக்கிறார். அந்த கிராமத்தில் தன் தாயின் பெயரில் ஒரு மாவுமில் தொடங்கி நடத்தி அந்த வருமானம் மூலம் ஜீவனம். போஜனம். வாழ்க்கை. தங்கை ஜெயா படிக்காத ஒரு அப்பாவி.



    முத்துராமன் படிக்க வைக்கும் அவர் நண்பன் சந்திரமோகன் பட்டணத்தில் படிப்பு முடித்துவிட்டு கிராமம் வருகிறார். சிறுவயது முதலே பழகி வந்த நண்பனின் தங்கை ஜெயாவை அவர் காதலிக்கிறார். இது முத்துவுக்குத் தெரியவர அவர் மனம் மகிழ்கிறார். தன் தங்கையை சந்தோஷமாக சந்திரமோகனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

    அதே கிராமத்தில் ஒரு ஹாஸ்பிடல் வைத்து நடத்தும் டாக்டர் நிர்மலா முத்துராமனைக் காதலிக்கிறார்.

    சந்திர மோகன் பேங்கில் கேஷியர் வேலை கிடைத்து பெங்களூர் பயணிக்கிறார். அங்கு வசதிகள் செய்து கொண்டு பின் ஜெயாவை அங்கு அழைத்துச் செல்வதாக கூறிச் செல்கிறார். பேங்க்கில் கேஷியராகவும் வேலைக்குச் சேர்ந்து வீடு தேடுகிறார். இதை அறிந்து சந்தோஷப்படும் முத்து தங்கையை தீர்க்க சுமங்கலியாய் வாழ வாழ்த்தி ஆசீர்வதிக்கிறார்.

    இப்போது பேங்கில் புது கேஷியராக சந்திரமோகன் இருப்பதால் அவரிடம் கள்ள நோட்டுக்களை நல்ல நோட்டுக்களாக மாற்ற முடியாது என்பதால் எம்.ஆர்.ஆர்.வாசு ஜெமினியிடம் எப்படியாவது சந்திரமோகனுடன் தந்திரமாகப் பேசி அவரை தன் இருப்பிடத்திற்கு வரவழைக்கும்படி பணிக்கிறார். ஜெமினியும் சந்திரமோகன் தன் மருமகன் என்ற விவரம் தெரியாமல் வீடு காட்டுவதாக கூறி அவரை வாசுவின் இருப்பிடத்திற்கு அழைத்து வந்து விடுகிறார். அங்கு கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுக்களாய் மாற்றித் தரும்படி வாசு சந்திரமோகனை வற்புறுத்த, அதற்கு மோகன் மறுக்க, இருவருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. சண்டையில் மோகன் வாசுவின் கழுத்தை நெரிக்க, அதைப் பார்க்கும் குடிகார ஜெமினி தன் பாஸை சந்திர மோகன் கழுத்தை நெரிப்பதைப் பார்த்து எஜமான விசுவாசத்தில், கோபத்தில் மது பாட்டிலால் அவர் தலையில் 'அடிஅடி'யென்று அடித்து விடுகிறார். அடியால் ரத்த வெள்ளத்தில் சந்திரமோகன் குற்றுயிரும், கொலையுயிருமாய் விழ, அவரைத் தூக்கிப் தெருவில் போட்டு விடச் சொல்கிறார் வாசு. யாரோ எடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்க, அங்கே சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து விடுகிறார் சந்திர மோகன்.

    கோபத்தில் குடிவெறியில் தான் சந்திரமோகனைக் கொலை செய்து விட்டதை, அவர் இறந்து விட்டதை அறிந்து எண்ணித் துடிக்கிறார் ஜெமினி. குடியால்தானே இந்த நிலைமை என்று குடியை ஒதுக்குகிறார்.

    சந்திரமோகன் இறந்ததை முத்துராமனிடமும், ஜெயாவிடமும் தெரிவித்தால் அவர்கள் மிக அதிர்ச்சியடையக் கூடும் என்பதால் பேங்க் மேனேஜர் மகாலிங்கம் அவசரத் தந்தி ஒன்றை முத்துவிற்கு அனுப்ப, முத்து என்ன ஏது என்று புரியாமல் பெங்களூர் வந்து சந்திர மோகன் இறந்ததை அறிந்து பேரதிர்ச்சியாகிறார். கணவன் இறந்ததைச் சொன்னால் தங்கை ஜெயா உயிரை விட்டு விடக் கூடும் என்பதால் கிராமம் திரும்பி தங்கையிடம் எதுவும் சொல்லாமல் மறைத்துவிடுகிறார். 'அதிக வேலையிருப்பதால் மோகன் கிராமம் வர இயலவில்லை' என்று தங்கையிடம் பொய் சொல்லி மோகன் போடுவது போல அடிக்கடி தங்கைக்கு லெட்டெர் போட்டு அவளைச் சமாளிக்கிறார். தீர்க்க சுமங்கலியாய் வாழ வாழ்த்திய தங்கையை அமங்கலியாய் பார்க்க மனமிலாமல், உண்மையைச் சொல்ல முடியாமல் நெருப்பில் அகப்பட்ட புழுவாகத் துடிக்கிறார் முத்துராமன்.

    இதற்கிடையில் வாசுவின் பிடியிலிருந்து தப்பி முத்துவின் கிராமத்தில் வந்து மயங்கி விழும் ஜெமினியை ஜெயா காப்பாற்றி வீட்டில் தங்க வைக்க, அங்கிருக்கும் தன் மனைவி போட்டாவைப் பார்த்த ஜெமினி ஜெயா தன் மகள் என்று தெரிந்து தான் யாரென்பதை சிறுவயதில் குழந்தைகளிடம் பாடிக் காட்டிய 'அன்பு வந்தது... என்னை ஆள வந்தது' பாடலைப் பாடிக்காட்ட, ஜெயா ஜெமினி தன் தந்தை என்று தெரிந்து கொண்டு மிகவும் சந்தோஷப் படுகிறார். தன் அண்ணன் முத்துவிடம் ஓடிச் சென்று ஜெயா விஷயத்தைச் சொல்ல, முத்துவும் மனம் மகிழ்ந்து தந்தையிடம் ஓடிவருகிறார். பிரிந்த குடும்பம் இப்போது ஒன்று சேர்ந்து இருக்கிறது. ஆனால் சந்தோஷம்?!...

    ஜெமினிக்கு தன் மகள் ஜெயாவுக்கு திருமணம் நடந்திருப்பது தெரிய வர, தன் கணவன் யாரென்று காட்ட சந்திர மோகன் போட்டவை கொண்டு வந்து தந்தை ஜெமினியிடம் காட்ட, ஜெமினி அதைப் பார்த்து பெரிய அதிர்ச்சியை மேலும் அடைகிறார். ஏனென்றால் தன் மகளின் தாலியைப் பறித்தது தந்தை அவரே அல்லவா? தன் மருமகனையே தன் கையால் கொன்றதை எண்ணி நரகவேதனை அடைகிறார் ஜெமினி. மேலும் அவள் கணவன் இறந்தது அவளுக்குத் தெரியாமல் முத்துராமன் மறைத்த விஷயத்தையும் அவர் மூலமாகவே அறிந்தும் கொள்கிறார். ஆனால் முத்துராமனுக்கு தன் தந்தைதான் கொலையாளி என்பது தெரியாது.

    ஜெயா கர்ப்பமாய் வேறு இருக்கிறார். முத்து சந்திரமோகன் பெயரில் அடிக்கடி தங்கைக்கு கடிதம் எழுதும் விஷயத்தை நிர்மலா கண்டு பிடித்து விட்டு முத்துவிடம் காரணம் கேட்க முத்து எல்லா உண்மைகளையும் நிர்மலாவிடம் கூறுகிறார்.

    இப்போது சந்திர மோகன் கொலையுண்ட விஷயம் முத்துராமன், ஜெமினி, நிர்மலா மூவருக்கும், பெங்களூர் போலீஸுக்கும் மட்டுமே தெரியும். ஆனால் கொலையாளி ஜெமினி என்பது வாசுவுக்கு மட்டுமே தெரியும். போலீஸ் துப்பு துலக்கி வாசுவை விசாரிக்க, வாசு கொலையாளி ஜெமினி என்று காட்டிக் கொடுத்துவிடுகிறார்.
    தானும் கைதாகிறார்.

    'எத்தனை நாளுக்கு தங்கையிடம் அவள் கணவன் இறந்த விஷயத்தை ஒளித்து வைக்க முடியும்?' என்று முத்துராமன் புலம்ப, நிர்மலா அதற்கு ஒரு வழி சொல்கிறார். 'ஜெயா பிரசவம் ஆகி குழந்தை பெறும்வரை இந்த விஷயத்தை மறைத்துவைத்து பின் சொல்லலாம்...அப்போது குழந்தைக்காகவாவது வேண்டி ஜெயா உயிருடன் இருந்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமல்லவா?' என்ற நிர்மலாவின் திட்டத்தை முத்து ஒப்புக் கொள்கிறார்.

    இதற்கிடையில் போலீஸ் ஜெமினியை குறி வைத்து அந்த கிராமத்திற்கு வருகிறது. அந்த நேரத்தில் ஜெயாவிற்கு பிரசவ வேதனை வர, டாக்டரான நிர்மலா ஜெயாவுக்கு பிரசவம் பார்க்க, பிரசவத்தில் தன் எண்ணம் போலவே... தன் அண்ணன் முத்துவின் ஆசீர்வாதம் போலவே... கணவன் இறந்தது இறுதி வரை தெரியாமல் சுமங்கலியாகவே உயிரை விடுகிறார் ஜெயா. ஜெயா இறந்த அதிர்ச்சி செய்து கேட்டு மகளின் கால்களைப் பிடித்து மன்னிப்புக் கேட்டபடி அதிர்ச்சியில் தன் உயிரையும் விடுகிறார் ஜெமினி.

    போலீஸ் முத்துராமனை விசாரித்து சந்திரமோகனைக் கொன்றது அவர் தந்தை ஜெமினி தான் என்ற உண்மையை உடைக்க, இதைக் கேட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்த முத்துராமன் நிர்மலா மூலம் தங்கையும் இறந்து விட்ட அதிர்ச்சியையும் கேட்டு மனம் சுக்குநூறாகிப் போகிறார். கோபத்துடன் மைத்துனன் சாவுக்கான காரணத்தை தன் தந்தையைக் கேள்வி கேட்கப் போனவருக்கு இன்னுமோர் அதிர்ச்சி தந்தை ஜெமினியின் மரணம்.

    தாயை இழந்து, தந்தையையும் இழந்து, ஆசையாய் வளர்த்த தங்கையையும் இழந்து தங்கை பெற்ற குழந்தையோடு முத்துராமன் உறைந்து நிற்க, அவருக்கு ஆதரவாய் இனி 'வெண்ணிற ஆடை' நிர்மலா ஒருவரே!

    அப்பாடா! போதுமா கதை?!


    சோகம்..சோகம்..சோகம்...அதிர்ச்சி..அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... அதிர்ச்சி மேல் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

    இப்படி இருந்தால் எப்படி படம் ஓடும்? ம்.

    ஜெமினி தாடியும், மீசையும் வைத்து குடிகாரனாய் மருமகனை கொலை செய்து மனவலியால் துடிப்பது என்று நடிப்பு அருமை. குடிகார அடிமைத்தனத்தை அப்பட்டமாகக் காட்டுகிறார். முத்துவும் ஒரே வரியில் சொல்வதென்றால் பாவப்பட்ட நடிப்பு. ஜெயா வரும் காட்சிகள் ஆறுதல். அழகாக குடும்பப் பெண்ணாக அப்பாவியாக பாசத்தை அண்ணன் மீதும், கணவன் மீதும் பொழிகிறார்.

    தெலுங்கு சந்திர மோகன் ஜெயாவின் கணவராக பாந்தம் பிளஸ் அழகு. மாமனாரிடமே பரிதாப உயிர்விடல். சுருளி, தேங்காய், மனோரமா, 'டைப்பிஸ்ட்' கோபு இருந்தும் முழு நீள சோகச் சித்திரம். (சோகம், அதிர்ச்சி என்று எத்தனை முறை டைப் அடித்தேன் என்று சின்னாதான் எண்ணிச் சொல்லவேண்டும்) கண்ணீர் துடைக்க கர்சிப் பத்தாது. டவல்தான் வேண்டும்.


    பாடல்கள் குறிப்பாக தொடரின் பாடல் மிக மிக அருமை. ஜெமினி தந்தை தன் சிறுவயது மகன், மகளுடன் ஊர் சுற்றியபடி பாடும்,

    'அன்பு வந்தது...என்னை ஆள வந்தது' பாடல்.

    இதே பாடலை முத்துராமன், ஜெயா இருவரும் வளர்ந்து பெரியவர்களான பின் பாடும் பாடல்

    அடடா! பாடகர் திலகமும் தன் பங்கிற்கு பட்டை கிளப்புவார். முத்துவும் ஜெயாவும் அண்ணன் தங்கையாக வயல்வெளிகளில் என்ன சுறுசுறுப்பு. அற்புதமான பாடலாக்கல். குழந்தைக் குரல் அப்படியே மாறி டி.எம்.எஸ்ஸுக்கு மாறியவுடன் மனிதர் கம்பீரமாக 'ஆ....என்று ஹம்மிங் தந்து ஆரம்பிப்பாரே! ஆஹா!

    'கண்ணிரண்டு கடவுள் தந்தான் தங்கையைக் காண'

    'தெய்வம் பார்த்த பிள்ளை போல தங்கையைப் பார்ப்பேன்
    செல்வம் பார்த்த ஏழை போல நிம்மதி காண்பேன்'

    என்று பாவங்களைக் கொட்டி சுறுசுறுவென அவர் பாடும் போது... அடடா! என்ன சொல்வது? அவர் அவர்தான்... அவருக்குப் பின்னாடி தான் எவரும்.

    அப்புறம்,



    முத்து, நிர்மலாவின் அற்புத டூயட்டான

    'அனுபவம் தானே வர வேண்டும்' (டி.எம்.எஸ், ஈஸ்வரி குரலில். டி.எம்.எஸ் நடிகர் திலகத்திற்கான குரலில் பாடியிருப்பார்).



    ஜெயா கர்ப்பமாய் இருக்கும் போது குழந்தை பொம்மையுடன் ஜானகி குரலில் பாடும்,

    'முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு' சூப்பர்.

    (இந்தப் பாடலைக் கேட்கும் போது 'ரகசிய போலீஸ் 115' படத்தின் 'உன்னை எண்ணி என்னை மறந்தேன்' சுசீலா பாடல் ஞாபகத்திற்கு வரும். ஆனால் காரணம் தெரியாது).


    இசை 'மெல்லிசை மன்னர்'. கேட்கவா வேண்டும்? குடும்பப் பாடல் பின்னலோ பின்னல். இருதரம். இரண்டும் அமர்க்களம்தான்.

    தொடரின் பாடல் பாலா ஜெமினிக்குப் பாடுவது. குழந்தைகளுடன் 'எங்க மாமா' ரயிலில், படகில் ஜெமினி அருமையான நடிப்பைத் தந்திருப்பார். அப்பா ஜெமினிக்கு இளம் பாலா குரலையும், அதே பாடலை பின்னால் பிள்ளை முத்துராமனுக்கு சீனியர் டி.எம்.எஸ்ஸையும் மாற்றிப் பாட வைத்து ரிஸ்க் எடுத்து அதில் பெருவெற்றியும் பெற்றிருப்பார் 'மெல்லிசை மன்னர்'. ரசிக்கவேண்டிய துணிச்சல்தான்.

    'ஹஹ்ஹஹ்ஹா' என்ற ஜெமினியின் சிரிப்புடன், பாலா ஒரு அருமையான தந்தையாகவே மாறி பாச உணர்ச்சிகளைக் கொட்டியிருப்பார் இந்தப் பாடலில். 'காதல் பாடல்களில் மட்டுமல்ல ... பாசப் பிணைப்புள்ள பாடல்களிலும் பட்டை கிளப்புவேன்' என்பது போல அவ்வளவு அழகாக, அம்சமாக பாடி நெஞ்சில் நிறைவார் பாலா.

    பாடல் உங்க வீட்டு ஹிட்அல்ல... எங்க வீட்டு ஹிட் அல்ல....அப்படி ஒரு பயங்கர ஹிட். தாய், தந்தை, அண்ணன், தங்கை குடும்பம் என்று தமிழகத்தின் ஒட்டு மொத்தக் குடும்பங்களும் கேட்டு கேட்டு, பாடிப் பாடி, ரசித்தது ரசித்து மகிழ்ந்த பாடல். வானொலிகள் அத்தனையையும் ஆக்கிரமிப்பு செய்த பாடல்.

    ஏனோ இந்தப் பாடலை அவ்வளவாக இப்போதெல்லாம் தொலைக்காட்சி சேனல்கள் கண்டு கொள்வதே இல்லை. இந்தப் படமும் அபூர்வமான ஒரு படமாகவே ஆகி விட்டது. சூப்பர் சிங்கர் போன்ற பிரபல இசை நிகழ்ச்சிகளிலும் கூட இந்தப் பாடல்கள் எல்லாம் வரவே வராது.


    ஈஸ்வரி நடுவராக உட்கார்ந்தால் ஆதிராம் சார் சொல்வது போல் 'அவளுக்கென்ன...அழகிய முகம் மட்டுமே' பாடப் படும். பாலா அமர்ந்தால் 'தங்கத் தாமரை மகளே' இப்படி பாடப்படும். வெளிச்சத்திற்கு வராத வைடூரியங்களை இவர்கள் எடுக்கவே மாட்டார்கள். சே! எரிச்சலும், கோபமும்தான் மிஞ்சுகிறது.

    தாயை இழந்த பிள்ளைகளுக்கு தந்தை தரும் ஆறுதல், தெம்பு, அரவணைப்பு அனைத்தும் இந்தப் பாடலில் மொத்தமாகத் தெரியும். அதை பரிபூர்ணமாக அப்படியே உணரலாம்.

    பிள்ளைகளை நல்லபடியாய் வளர்க்க, தகப்பன் நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைக்கும் வரிகள்.

    'நாலு பேர்கள் வாழும் வாழ்வும் நாமும் வாழலாம்
    தினம் நல்லாடை நகைகளோடு மலர்கள் சூடலாம்'

    அதே போல்

    'தாயில்லாவிட்டால் என்ன? தாய்க்குத் தாயாக தகப்பனுக்குத் தகப்பனாக இருந்து உங்களை நான் காப்பாற்றுவேன். கைவிட மாட்டேன். அப்படியே நான் இல்லாமல் போனாலும் கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்'

    என்று கதைக்குத் தகுந்த அருமையான வரிகள்.

    (ஜெமினி பின்னால் பிள்ளைகளை விட்டு பிரியப் போகிறார் என்பதை முன் கூட்டியே பாடல் வரிகள் சொல்லி விடும்)

    வெண்ணையை எடுத்து உருக்குவது போல பாலா குரல் பாசத்தில் உருகும். 'தெய்வ சொர்..க்கம் வந்தது' என்று 'கேப்' விட்டு பாடும் போது சொர்க்கமே தெரியும்.

    'மன்னர் குலப் பிள்ளைகள் போல் மகுடம் சூட்டுவேன்' வரிகளில் நிஜமாகவே மகுடம் சூடுவார் பாலா.

    'அண்ணனோடும் தங்கையோடும் தந்தை வாழுவேன்'

    எனும் போது நம் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகிடச் செய்திடுவார் நம் அருமை பாலா.

    கேட்க கேட்கத் திகாட்டாத தெள்ளமுது இந்த அமிர்தப் பாடல் என்றால் அது எள்ளளவும் மிகையில்லை.




    அன்பு வந்தது
    என்னை ஆள வந்தது
    சொந்தம் வந்தது
    தெய்வ சொர்க்கம் வந்தது

    அன்பு வந்தது
    என்னை ஆள வந்தது
    சொந்தம் வந்தது
    தெய்வ சொர்க்கம் வந்தது
    சொந்தம் வந்தது
    தெய்வ சொர்..க்கம் வந்தது

    நாலு பேர்கள் வாழும் வாழ்வும் நாமும் வாழலாம்
    தினம் நல்லாடை நகைகளோடு மலர்கள் சூடலாம்
    நாலு பேர்கள் வாழும் வாழ்வும் நாமும் வாழலாம்
    தினம் நல்லாடை நகைகளோடு மலர்கள் சூடலாம்

    கண்ணிரெண்டில் கலக்கமின்றி அமைதி காணலாம்
    கண்ணிரெண்டில் கலக்கமின்றி அமைதி காணலாம்
    காலம் வெல்லும் வெல்லும் என்று உறுதி கொள்ளலாம்
    உறவு கொள்ளலாம்

    தாயில்லாத பிள்ளை தன்னை நான் விட மாட்டேன்
    நானில்லாத போது தேவன் கைவிட மாட்டான்

    அன்பு வந்தது
    என்னை ஆள வந்தது
    சொந்தம் வந்தது
    தெய்வ சொர்க்கம் வந்தது

    வாழ்ந்தால் எந்நாளும் உமக்கென வாழ்வேன்
    வாடா மலர் போலே உங்களைக் காப்பேன்
    வாழ்ந்தால் எந்நாளும் உமக்கென வாழ்வேன்
    வாடா மலர் போலே உங்களைக் காப்பேன்
    மன்னர் குலப் பிள்ளைகள் போல் மகுடம் சூட்டுவேன்
    நீ மங்கையாகும் போது கையில் வளையல் போடுவேன்
    வாழ்த்துப் பாடுவேன்
    மஞ்சளோடும் மலர்களோடும் வாழ்ந்திடச் செய்வேன்
    அண்ணனோடும் தங்கையோடும் தந்தை வாழுவேன்

    அன்பு வந்தது
    என்னை ஆள வந்தது
    சொந்தம் வந்தது
    தெய்வ சொர்க்கம் வந்தது
    சொந்தம் வந்தது
    தெய்வ சொர்க்கம் வந்தது

    லாலலாலலா
    லால லாலலாலலா
    ம்ஹூம் ம்ஹூஹூம்
    ம்ஹூம் ம்ஹூம்ஹூம் ஹூம்


    Last edited by vasudevan31355; 30th October 2015 at 01:29 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. #1179
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பேஸ் புக் மூலம் 10 வருடங்களுக்குப் பின் இணைந்த, மலேஷியாவின் நிஜ சகோதர சகோதரி பாடும் 'அன்பு வந்தது'.

    தம்பி பாடலில் பரவாயில்லை. அக்கா பாடலில் ரொம்ப சுமாரோ சுமார்.

    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes Russellmai liked this post
  19. #1180
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆடலுடன் பாடலைக் கேட்டு (பார்த்து) ரசிப்பதிலே ஒரு சுகம் சுகம் சுகம்..ப்ஹா...


    நன்றி: ராஸேஸ்குமார் ( நம்ம ராஜேஷ் தாங்க) முக நூல் பக்கத்திலிருந்து..


    https://www.facebook.com/43328478677...9423955826200/

  20. Likes rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •