Page 25 of 337 FirstFirst ... 1523242526273575125 ... LastLast
Results 241 to 250 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #241
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Monotony breakers! / Gap fillers!!

    திறந்திடு சி செ! மூடிடு சி செ ! இருவரிக் கப்சாக் கதைகள்!!

    க க 1 : களத்தூர் கண்ணம்மா / வசந்த மாளிகை / ஒளிவிளக்கு !

    மது/ரம் சீசா கானங்கள்!!

    சி க சி செ விடம் விரும்பிக் கேட்டவை !( கப்சா!!)

    காதலிப்பது சுகானுபவமே! ஆனால்..... காதலியே மனைவியாகி விட்டால் சிலருக்கு அது நரகமே ! அவர் சீசாவைத் திறக்கிறார்! கா(த)லி பண்ணுகிறார்!! தள்ளாடுகிறார்!!




    இந்தப் பாடம் கற்றுக்கொள்ளாததால் இவர் காதலிக்காக வேண்டி சீசாவை மூடி விட்டு இரண்டு மனமாக காதலியை நினைக்கலாமா அல்லது தொண்டையை நனைக்கலாமா என்று மதில்மேல் பூனையாகத் திண்டாடுகிறார்!



    இவர்கள் ரெண்டுபேரும் காதல் விவகாரத்தால் நொந்து நெஸ்லே நூடுல்ஸ் ஆனதைக் கண்ணுற்று நமக்கு இந்த பாதை சரிப்படாது என்று தனி ஒருவனாக விலகி வேடிக்கை பார்க்கிறார் மக்கள்திலகம் ! களவும் கற்று மற என்ற வாக்கியத்தை பிடித்துக்கொண்டு இந்த மதுவில் என்னதான் இருக்கிறது என்று சீசா மூடியைத் திறந்து நுகர்ந்து பார்த்து அதிலேயே மட்டையாகி சீசாவை உருட்டிவிடுகிறார் ! உடனே அவரது மனசாட்சி விழித்துக்கொண்டு நால்வகை வேதங்களின் உருவங்களாய் வடிவெடுத்து அவரைத் தனித்தனி ஒருவ்ன்களாய் தனிஒருவனாக்கி வறுத்தெடுக்கிரார்கள் !! சந்தடிசாக்கில் தம்பிகளான ஜெமினிக்கும் சிவாஜிக்கும் குடியின் தீமையை முஷ்டி உயர்த்தி ஒரு வாத்தியாராக விளக்கப் பாடம் சொல்லித்தருகிறார் !!

    Last edited by sivajisenthil; 25th September 2015 at 04:42 PM.

  2. Likes chinnakkannan, Russellmai, madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #242
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post

    வாத்தியாரையா... தமிழகத்தில் ஏழரை போன பிறகுதான் டின்னர்.. ( நான் ஏழரைனு சொன்னது நேரத்தைத்தான் )
    I forgot! I am used to having dinner around 6:30 pm !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  5. #243
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    .அன்னபூர்ணாவில் சுவீட் காரம் காபிதான்!
    Sweet, kaaram,coffee? Reminds me of my Kumbakonam college days. I used to commute to college by train. After college (4 pm) I used to walk to the railway station to catch the 4:30 pm train. The college on the banks of Kaveri was connected to the town by a foot bridge. At times people used to walk slowly crossing the bridge. Still, I used to walk to the railway station hoping for the train to be late! If it arrived and left on time I went for 'sweet, kaaram,coffee' in a restaurant near the station. It was always 'wheat halwa and degree coffee' with kaaram free. It was three and a half annas. I don't know what it costs now. Fifteen rupees?
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. Likes madhu, rajeshkrv liked this post
  7. #244
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    இசையரசி இசைத்த கீதங்கள் தொடர் விரைவில்... மதுண்ணா ப்ளீஸ் வெயிட்

  8. Likes chinnakkannan, madhu liked this post
  9. #245
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu


    காற்றில் கலந்த இசை- 23: பள்ளிப் பிராயத்துக் கோடைக்காலம்


    ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில்...

    வளரிளம் பருவத்தைச் சேர்ந்த நாயக நாயகிகளை மையமாக வைத்து ஒரே காலகட்டத்தில் (1981) இரண்டு படங்கள் வெளியாகின. ஒன்று, கார்த்திக், ராதா நடிப்பில் பாரதிராஜா இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லை’. மற்றொன்று சுரேஷ், சாந்தி கிருஷ்ணா நடிப்பில் பாரதி-வாசு இயக்கிய ‘பன்னீர் புஷ்பங்கள்’. பள்ளிப் பருவத்தில் ஏற்படும் காதலைப் பற்றிப் பேசியது ‘அலைகள் ஓய்வதில்லை’. அந்த வயதில் ஏற்படும் காதலுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வியை எழுப்பியது ‘பன்னீர் புஷ்பங்கள்’.

    இரண்டு படங்களுக்கும் பொதுவான அம்சம், செறிவான இசைக்கோவைகள் அடங்கிய பாடல்களும், பின்னணி இசையும். இரண்டுக்குமே இசை, இளையராஜா. ’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் ஊட்டி கான்வென்ட் பள்ளியின் பின்னணியில், இயற்கையின் வசீகரப் பிரதேசங்களைத் தனது இசை மூலம் மேலும் அழகூட்டினார். அனைத்துப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார்.

    உமா ரமணனின் தனித்த குரலுக்குப் பொருத்தமான பல பாடல்களைத் தந்திருக்கும் இளையராஜா, இப்படத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட வெள்ளம் போன்ற இசைக் கோவை கொண்ட ‘ஆனந்த ராகம்’ பாடலைத் தந்தார். கள்ளமற்ற நட்புடன் பழகும் நாயகிக்கும், எதிர்பாலின ஈர்ப்பின் தாக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் நாயகனுக்கும் இடையில் மெலிதாக அரும்பும் அன்பின் வெளிப்பாடு இப்பாடல். ஆர்ப்பரிக்கும் அருவி நீர் பாறையில் விழுந்து தெறிக்கும்போது மேலெழும் சாரலைப் போல், இசைக் கருவிகளின் கலவைக்கு மேல் உமா ரமணனின் குரல் ஒலிக்கும்.

    நிரவல் இசையில், இருவரின் குழப்பமான மனநிலையைப் பிரதிபலிக்கும் இசைக்கோவைகளைத் தந்திருப்பார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் வயலின் தீற்றல்களுக்கு நடுவே, ஷெனாயை ஒலிக்க விட்டிருப்பார். எதிர்பாராத இசைக் கலவை அது. சந்தோஷமான மனநிலையின் பின்னணியில் ஒலிக்கும்

    இப்பாடல், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நண்பர்கள் உதவியுடன் நாயகனும் நாயகியும் ஓடிச்செல்லும்போதும் பயன்படுத்தப்பட்டிருக்கும். விடலைக் காதலுக்குப் பின்னணியாக ஒலித்த அதே பாடல், கிளைமாக்ஸ் காட்சியில் அவர்களின் எதிர்காலம் குறித்து கவலையுறும் நடுத்தர வயதினரின் பரிவுடன் ஒலிக்கும். ஒரே இசை வடிவில், அதே குரலில் ஒரு படத்தில் இரண்டு முறை ஒலித்த பாடல் என்பது இதன் தனிச்சிறப்பு. இரவில் கண்ணை மூடி இப்பாடலைக் கேட்பவர்கள் வண்ணங்கள் கரைக்கப்பட்ட நதியில் இழுத்துச் செல்லப்படுவதைப்போல் உணர்வார்கள்.

    எஸ்.பி.பி-எஸ். ஜானகி பாடிய ‘பூந்தளிராட பொன் மலர் சூட’ பாடல், அந்த ஜோடியின் மிகச் சிறந்த 10 பாடல்களில் ஒன்று. இளம் காலைப் பொழுதில் புதிதாக மலரும் மொட்டைப் போன்ற மலர்ச்சியான இசையுடன் தொடங்கும் இப்பாடலில், இசைக் கருவிகளுக்கு இணையாக, பெண்குரல்களின் ஹம்மிங்கைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. கண்ணுக்குத் தெரியாத காதல் தேவதைகள் இளம் காதலர்களை வாழ்த்துவதுபோன்ற அலாதியான கற்பனை அது.

    பொங்கி வரும் குதூகலத்தை அடக்கிக்கொண்டு அமைதியான தொனியில் பாடியிருப்பார் எஸ்பிபி. அறியாத வயதில் ஏற்படும் குறுகுறுப்பையும், தன் மீது காட்டப்படும் அன்பு ஏற்படுத்தும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் இளம் பெண்ணின் குரல் வடிவமாக ஜானகியின் குரல் ஒலிக்கும். பேஸ் கிட்டாரின் அஸ்திவாரத்தில் வயலின், புல்லாங்குழல், பியானோ என்று இசைக் கருவிகளின் சொர்க்கபுரியையே உருவாக்கியிருப்பார் இளையராஜா. பிரவாகமாகப் பொங்கும் வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையைத் தொடர்ந்து, மவுனத்தின் பின்னணியில் தொலைதூரத்துப் பறவையின் சத்தம் மென்மையாக ஒலிக்கும்.

    ‘லலலல்லல லலலல்லா’ என்று வசந்த காலத்து தேவதைக் குரல்களின் குரல் அதைப் பின்தொடரும். இந்தப் பாடலில் பங்குபெற்ற ஒவ்வொரு இசைக் கலைஞரும் தனது வசந்த கால நினைவுகளுடன் இளையராஜாவின் இசைக் குறிப்புகளை வாசித்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு பாடலில் இத்தனை இனிமை சாத்தியமேயில்லை!

    இயற்கையின் சுகந்தத்தைப் பிரதிபலிக்கும் பல பாடல்களை, மலேசியா வாசுதேவனுக்காகவே இளையராஜா உருவாக்கி யிருப்பாரோ என்று சில சமயம் தோன்றும். அந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கும் பாடல் ‘கோடைகாலக் காற்றே’. பள்ளிப் பருவத்துச் சுற்றுலாவின் குதூகலத்தை அசலாக வெளிப்படுத்தும் பாடல் இது. மவுத்-ஆர்கன் இசையுடன் தொடங்கும் இப்பாடலில், இளம்பிராயத்து நினைவுகளை மீட்டும் கிட்டார் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். மலைப்பிரதேசத்தில் வீசும் கோடை காலக் காற்றின் மிதமான குளுமையுடன் பாடலைத் தொடங்குவார் மலேசியா வாசுதேவன்.

    மாணவர்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் பிரதாப் போத்தன் பாடும் பாடல் இது. பொறுப்பும் கண்ணியமும் நிறைந்த ஆசிரியரின் குரல் மலேசியா வாசுதேவனிடம் தொனிக்கும். ஏகாந்தம் தரும் இயற்கையின் அழகைத் தானும் வியந்துகொண்டு, இளம் வயதினரிடம் ரசனையையும் அழகுணர்ச்சியையும் விதைக்கும் நடுத்தர வயது மனதின் வெளிப்பாடு இப்பாடல்.

    ‘வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ’ எனும் வரியில் அழகான சித்திரத்தைக் காட்டிவிடுவார் கங்கை அமரன். சூரிய ஒளியில் மிளிரும் விளிம்பு கொண்ட மேகங்களுக்குக் கீழே, பசுமையான குன்றுகளில், கவலையற்றுத் திரியும் மாணவப் பருவத்தை நினைவுபடுத்தும் இப்பாடல், இளையராஜா நமக்களித்த அன்புப் பரிசு!

  10. Likes Russellmai liked this post
  11. #246
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    சூழல் ஒன்று பார்வை இரண்டு: அந்நாளில் இல்லாத பொன்னான எண்ணங்களே...



    காதலர்கள் தாங்கள் சந்தித்து மகிழும் இன்பத்தைவிட, சிறிது நேரமே கிட்டும் பரவச நிகழ்வுகளை நினைத்துப் பெறும் ஆனந்தம் எல்லையற்றது. அழகான கவிதை வரிகள், இனிய குரல், இசைவான மெட்டு ஆகியவற்றுடன் அந்த உவகை திரைப் பாடல்களாக வெளிப்படும்பொழுது, அவற்றைக் கேட்கும் நாம் பெறும் இன்ப உணர்வு இரட்டிப்பாகிறது.

    காதலர்கள் சந்திப்பு என்ற ஒரே சூழலின் இரு அழகான பார்வைகளாக விரியும் இந்தி, தமிழ்ப் பாடல்களைப் பார்ப்போம். கருத்தில் மட்டுமின்றி காட்சியமைப்பிலும் ஒரே சூழலுடன் கூடிய இந்த இரண்டு பாடல்களும் காலத்தைக் கடந்து நிற்பவை.

    இந்திப் பாடல்:

    படம்: மெஹூப்கி மெஹந்தி (காதலியின் மருதாணி)

    பாடலாசிரியர்: ஆனந்தபக் ஷி

    பாடியவர்கள்: முகமது ரஃபி. லதா மங்கேஷ்கர்

    இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்

    பாடல்:

    இத்னோத் தோ யாத் ஹை முஜே கே

    உன்ஸே முலாகாத் ஹூயீ

    பாத் மே ஜானே க்யா ஹுவா

    ஓஓ பாத் மே ஜானே கியா ஹூவா

    ஹாய் நா ஜானே க்யா பாத் ஹூயீ … …

    பொருள்:

    இருவரும்:

    இத்தனைதான் என் நினைவு ஓ ஓ

    இத்தனைதான் நினைவு எனக்கு

    சத்தியமாக அந்த சந்திப்பு நடந்தது

    அப்புறம் என்ன நடந்தது அறியேன்

    பிறகு சொன்னதும் நாங்கள் அறியோம்

    காதலன்:

    அள்ளிக் கொடுத்த உறுதிமொழி அத்தனையும்

    தள்ளிவிட்டு, தவிக்கவிட்டு, எவருடைய

    உள்ளத்தையோ கவர்வதற்கு ஓடி வந்தேன்

    உன் விழிகளை சந்தித்தால் உறக்கத்தைத் தொலைத்து

    என் சிந்தையில் ஏக்கத்தை இருத்தி ஓடி வந்தேன்

    கழிந்துவிடும் எப்படியோ பகல் பொழுது

    அது முடிந்து

    எழுந்துவிடுமே இரவு, அப்பொழுது என்ன செய்வது

    காதலி:

    வீழ்த்தப்பட்ட நான், என் விழிகளைத் தாழ்த்திக்கொண்டு

    புடவைத் தலைப்பைப் பொத்திக் கொண்டு, ஓடி வந்தேன்

    உன் பரிதவிப்புக்கு இசைந்து என் அழகை

    உனக்குக் காட்டுவதற்கு வந்தேன்

    இத்தகு கள்ளத்தனம் என்னுடன் எப்போதும் இருக்கும் பொழுது

    நான் யாரைக் குற்றம் கூறுவது

    காதலன்:

    இந்த வாழ்க்கை பழங்கதையாய் இருந்தது முன்பு

    இரு கண்களால் அவளைக் கண்ட பின் ஜீவன் மீண்டது

    காதலி:

    அன்பே ஆகிவிட்டேன் ஆட்கொண்ட நாணத்தால்

    தண்ணீராக ஊற்றெடுத்த வியர்வையில் நனைந்தேன்

    எண்ணும்படியாக ஏதோ மழையில் நனைந்ததுபோல

    தமிழ்ப் பாடல்:

    படம்: காதலிக்க நேரமில்லை.

    பாடலாசிரியர்: கண்ணதாசன்

    பாடியவர்கள்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா.

    இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

    அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்

    அந்நாளில் இல்லாத பொன்னான எண்ணங்களே

    பொன்னான கைபட்டுப் புண்ணான கன்னங்களே

    தள்ளாடித் தள்ளாடி அவள் வந்தாள் ஆஹா

    சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்

    அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள் ஒன்று

    நானே தந்தேன் அது போதாதென்றாள்

    கண்ணென்ன கண்ணென்று அருகினில் அவன் வந்தான்

    பெண்ணென்ன பெண்ணென்று என்னென்ன கதை சொன்னான்

    இது போதாதென்றான் இனி கூடாதென்றான்

    இன்னும் மீதம் என்றேன் அது நாளை என்றான்

    சிங்காரத் தேர் போல அவள் வண்ணம் ஆஹா

    சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்

    அவள் எங்கே என்றாள் நான் இங்கே நின்றேன்

    அவள் அங்கே வந்தாள் நாங்கள் எங்கோ சென்றோம்

    பனி போல் குளிர்ந்தது கனி போல் இனித்ததம்மா

    மழை போல் விழுந்தது மலராய் மலர்ந்ததம்மா

    ஒரு தூக்கம் இல்லை வெறும் ஏக்கம் இல்லை பிறர்

    பார்க்கும் வரை எங்கள் பிரிவும் இல்லை

    அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்

    அந்நாளில் இல்லாத பொன்னான எண்ணங்களே

    பொன்னான கைபட்டு புண்ணான கன்னங்களே

    தள்ளாடித் தள்ளாடி அவள் வந்தாள் ஆஹா.

  12. Likes madhu, Russellmai liked this post
  13. #247
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    செந்தில்ல்ல்ல்வேஏஏஎல்...........செந்தில்வேல். ....


    செந்தில்வேல் வெரிகுட்..கீப் இட் அப்... ப்

    இன்னொரு சின்ன ரெக்வஸ்ட் ... மன்னவன், பிரபு பாடல்களைத் தவிரவும் மற்ற நாங்கள் அறியாத கானங்களை தங்கள் எழுத்துக்கள் மூலம் காட்சிப் படுத்த வேண்டும் என ஆசைப் படுகிறேன்.. சரியா..

    நன்றி நல்ல பாடல் அண்ட் ரசனை கலந்து தந்ததற்கு...

    தங்களின் பாராட்டுகளுக்கு என் நன்றி..

  14. #248
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    நினைவுகளின் சிறகுகள்: ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி!- புஷ்பவல்லி


    மூவரும் தயங்கி நின்றார்கள். மிக முக்கியமான காரியத்துக்காக வந்த பரபரப்பு முகங்களில் படர்ந்தது. தேடி வந்த நடிகை அவர்களைவிட கலைத் தொழிலில் இளையவர். ஆனால், புகழின் உச்சியில் கொடி கட்டிப் பறந்தவர். மாடியில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருப்பதாகச் சொன்னார்கள். யார் போய் அவரிடம் வந்த விஷயத்தைச் சொல்வது. நீண்ட நேரம் யோசனையில் ஓடியது. லேசான துணிச்சலுடன் காமெடி நடிகை படிகளில் வேகவேகமாக ஏறினார்.

    “அம்மா, என்.எஸ்.கேயும், எம்.ஜி.ஆரும், கீழே காத்திருக்காங்க. ரொம்பக் கூச்சப்படறாங்க. நடிகர் சங்கத்துல உங்களை ஒரு மெம்பரா சேர்க்கணுமாம். அவங்க உங்களைப் பார்க்க, கொஞ்சம் நீங்க அனுமதி தர முடியுமா...?”

    டி.ஏ. மதுரம் தனக்கே உரிய சினிமா சாமர்த்தியங்களுடன் சொல்ல, சுந்தரப் புன்னகையுடன் சம்மதித்தார். ‘ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி!’ என்று புகழப்பட்ட புஷ்பவல்லி.

    புஷ்பவல்லியின் பூர்வீகம் ஆந்திராவில் பண்டாபாடு கிராமம். ராஜமகேந்திரபுரத்தில் இயக்குநர் பி. புல்லையாவுக்குச் சொந்தமானது ‘துர்கா’ சினிமா ஸ்டுடியோ. அங்கு ஷூட்டிங் பார்க்கச் சென்ற பேபி புஷ்பவல்லியை, புல்லையாவின் பங்குதாரருக்கு முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. ‘சல்மோகனரங்கா’ என்ற சினிமா மூலம் திரைக்கு அறிமுகம் செய்தார்.

    புஷ்பவல்லி ஜெமினி ஸ்தாபனத்தில் நடிக்க ஒப்பந்தமானதும் பூமிப்பந்து அவரது காலடியில் சுழன்றது.

    ‘தாசி அபரஞ்சி’, ‘பாலநாகம்மா’, ‘சம்சாரம்’, ‘சக்ரதாரி’ என்று ஜெமினியின் தொடர் வெற்றிச் சித்திரங்களில் புஷ்பவல்லியின் இளமையும் எழிலும் ஆடை அலங்காரங்களும் அற்புதமான நடிப்பும் வசீகர நடனங்களும் சினிமா வணிகர்களுடைய கஜானாக்களின் எண்ணிக்கையைக் கூட்டின. இவையெல்லாம், எஸ்.எஸ். வாசனின் இதயத்திலும் புஷ்பவல்லிக்கு நிரந்தரமாக ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தன.

    விடுதலைக்குப் பின்னர் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற நேரம். ‘சம்சாரம்’ திரைப்படம் வெளியானது. வாக்காளர் பட்டியலை வாங்கி அனைத்து இல்லத்தரசிகளுக்கும், அதன் கதாநாயகி புஷ்பவல்லியே மடல் எழுதுவது போல் வாசன் செய்த புதுமை விளம்பரம், புஷ்பவல்லியின் அபரிதமான புகழை ரூபாய் நோட்டுகளாக மாற்றியது. உடனடியாக ‘சம்சாரம்’ இந்தியும் பேசியது.

    ஒட்டுமொத்த இந்தியாவும் புஷ்பவல்லியோடு சோகக் காட்சிகளில் சேர்ந்து அழுதது.

    “‘தாசி அபரஞ்சி’யில் நடித்தபோது கொத்தமங்கலம் சுப்பு மூலம் தமிழ் பேசக் கற்றுக்கொண்டேன். வீட்டிலிருந்து தயிர்வடைகளைச் செய்து எடுத்து வந்து சுப்புவுக்குக் கொடுத்து அவரைக் குஷிப்படுத்துவேன்.

    ஆரம்பத்தில் ஜெமினி எனக்கு மாதாமாதம் வழங்கிய ஊதியம் இரண்டாயிரம் ரூபாய். வாசன் பெயருக்குத்தான் ஒப்பந்தம் போட்டார். ‘பாலநாகம்மா’வில் என் நடிப்பைப் பார்த்து, சகல சலுகைகளும் எனக்கு நாளடைவில் கிடைத்தன. நிறையவே பணம் கொடுத்து என் நடிப்பார்வத்தை வாசன் வளர்த்துவிட்டார். ஜெமினியில் நான் நடித்த கடைசி படம் ‘மூன்று பிள்ளைகள்” - புஷ்பவல்லி.

    பி. பானுமதிக்கு 24 மணி நேரமும் புஷ்பவல்லியின் மலர்ந்த முகமே மனத்தில் நின்றது. தன் பெயரையும் கனகவல்லி என்று வைத்துக்கொள்ள முடிவு செய்தார். குடும்பத்தினர் அனுமதி தரவில்லை.

    ‘வரவிக்ரயம்’ தெலுங்கு படத்தில் தன் அபிமான நடிகை புஷ்பவல்லியோடு பி. பானுமதி, சேர்ந்து நடித்து ஜென்ம சாபல்யம் பெற்றார். ‘வரவிக்ரயம்’ பிரமாதமாக ஓடியது. அமோக வசூல்.

    பானுமதி மட்டுமல்ல. உலக நாட்டியப் பேரொளியாகப் பிரபஞ்சமெங்கும் வலம்வந்த பத்மினியும் புஷ்பவல்லியின் தீராக் காதலி!

    ஜெமினியில் ‘கல்பனா’ என்ற நாட்டியச் சித்திரம் உருவான நேரம். அதில் நடிக்கச் சென்ற பத்மினியின் அனுபவம்.

    “புஷ்பவல்லி பெரிய கார் ஒன்றில் வருவார். அக்கா லலிதாவையும் என்னையும் ஜோடியாகப் பார்ப்பதில் புஷ்பவல்லிக்கு ரொம்ப ஆசை. ‘நீங்கள் இரட்டைக் குழந்தை மாதிரி இருக்கிறீர்கள்’ என்று சொல்லி, எங்களைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், அருகில் அமர்த்திப் பேசிக்கொண்டிருப்பார். ஸ்வீட் கிடைக்கும்.”

    காண்பவர்கள் அனைவரையும் கவர்ச்சியால் கட்டிப் போட்டவர் புஷ்பவல்லி. மிகச் சாதாரண நிலையில், பணியாற்றிய ஓர் இளைஞரை விரும்பிச் சரண் அடைந்தார்.

    “ஜெமினியில் நானும் புஷ்பவல்லியும் நடித்தபோது இருவருக்கும் காதல் பிறந்தது. ஒட்டிப் பழகினோம். திருமணத்தைப் பற்றி நாங்கள் எண்ணவே இல்லை. மனம் விரும்பிப் பழகுபவர்களுக்குத் திருமணம் ஒரு தடையில்லை. அவள் என் குழந்தையைச் சுமப்பது தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றாள்.

    பிறக்கப்போகும் குழந்தைக்கு முழுமையான அப்பாவாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன். நான் எத்தனையோ எடுத்துச் சொல்லியும் புஷ்பவல்லி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பானு ரேகா பிறந்தாள். காலப்போக்கில் இருவரும் வேறு பாதையில் செல்ல வேண்டிவந்ததால் பிரிந்தோம்.

    எங்களுக்குள் திருமணமாகாததால் விவாகரத்துப் பிரச்சினையும் எழவில்லை.” - ஜெமினி கணேசன்.

    நாகையாவும் புஷ்பவல்லியும் இணைந்து நடித்த அருமையான பக்திச் சித்திரம் ‘சக்ரதாரி’. அதில் ஜெமினி கணேசனுக்கு பாண்டுரங்கர் வேடம். ஜெமினிகணேசனும் புஷ்பவல்லியும் இடம் பெற்ற இன்னொரு படம் ‘மூன்று பிள்ளைகள்’.

    புஷ்பவல்லியின் முதல் கணவர் ரங்காச்சாரி. அட்வகேட். டி.ஆர். ராஜகுமாரிக்கு முன்பு ‘சந்திரலேகா’வில் நடிக்கும் வாய்ப்பு புஷ்பவல்லியைத் தேடி வந்தது. வாசன் எத்தனை சமாதானம் சொல்லியும் ரங்காச்சாரி கேட்கவே இல்லை. சர்க்கஸ் காட்சிகளில் புஷ்பவல்லிக்குத் தைக்கப்பட்ட ஆடைகள் மிகவும் ஆபாசமாக இருந்ததாகக் குற்றம் சாட்டினார்.

    புஷ்பவல்லியை அம்மா வேடங்களில் அதிகம் பார்க்க முடியாமல் போனது. ‘சம்பூர்ண ராமாயாணம்’ படத்தில் (ராமர்-என்.டி. ராமாராவ்) கவுசல்யாவாகக் காணப்பட்டார். மற்றும் சிவாஜியின் அம்மாவாக ஓரிரு படங்களில் தோன்றினார். ‘மலேயா மாமியார்’ என்ற பெயரில் சொந்தப் படம் தயாரித்தார் புஷ்பவல்லி. லட்சக்கணக்கில் நஷ்டம். கடனை அடைப்பதற்காக மகள் ரேகாவை சினிமாவில் அறிமுகப்படுத்தும் கட்டாயம்.

    தன் மகளுக்காக வாய்ப்பு கேட்டு எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரிடமும் சென்றார் புஷ்பவல்லி. வியட்நாம் வீடு படத்தில் ரேகா நடித்துச் சில காட்சிகளும் படமாயின. “பெரும் புகழ் மிக்க ஸ்டாரான நீங்கள் உங்கள் மகளுக்காக, சான்ஸ் கேட்கும்போது அதை நிறைவேற்றுவது எனது கடமை” என்று புஷ்பவல்லிக்கு வாக்குறுதி அளித்தார் எம்.ஜி.ஆர்.

    “கேட்பதற்கு இதமாகப் பேசும் எம்.ஜி.ஆர். இன்றுவரை என் மகளுக்கு சான்ஸ் தரவில்லை” என்று புஷ்பவல்லி புலம்பிய நேரம் இந்தியில் அழைத்தார்கள்.

    ரேகா வடக்கில் வாகை சூடியது 1971-ல். ரேகா அகில இந்திய நட்சத்திரமாகப் புகழ் பெற்ற பின்னரே, அவர் தன்னுடைய கலை வாரிசு என ஜெமினி கணேசன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

  15. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  16. #249
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    நினைவுகளின் சிறகுகள்: ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி!- புஷ்பவல்லி


    மூவரும் தயங்கி நின்றார்கள். மிக முக்கியமான காரியத்துக்காக வந்த பரபரப்பு முகங்களில் படர்ந்தது. தேடி வந்த நடிகை அவர்களைவிட கலைத் தொழிலில் இளையவர். ஆனால், புகழின் உச்சியில் கொடி கட்டிப் பறந்தவர். மாடியில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருப்பதாகச் சொன்னார்கள். யார் போய் அவரிடம் வந்த விஷயத்தைச் சொல்வது. நீண்ட நேரம் யோசனையில் ஓடியது. லேசான துணிச்சலுடன் காமெடி நடிகை படிகளில் வேகவேகமாக ஏறினார்.

    அம்மா, என்.எஸ்.கேயும், எம்.ஜி.ஆரும், கீழே காத்திருக்காங்க. ரொம்பக் கூச்சப்படறாங்க. நடிகர் சங்கத்துல உங்களை ஒரு மெம்பரா சேர்க்கணுமாம். அவங்க உங்களைப் பார்க்க, கொஞ்சம் நீங்க அனுமதி தர முடியுமா...?

    டி.ஏ. மதுரம் தனக்கே உரிய சினிமா சாமர்த்தியங்களுடன் சொல்ல, சுந்தரப் புன்னகையுடன் சம்மதித்தார். ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி! என்று புகழப்பட்ட புஷ்பவல்லி.

    புஷ்பவல்லியின் பூர்வீகம் ஆந்திராவில் பண்டாபாடு கிராமம். ராஜமகேந்திரபுரத்தில் இயக்குநர் பி. புல்லையாவுக்குச் சொந்தமானது துர்கா சினிமா ஸ்டுடியோ. அங்கு ஷூட்டிங் பார்க்கச் சென்ற பேபி புஷ்பவல்லியை, புல்லையாவின் பங்குதாரருக்கு முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. சல்மோகனரங்கா என்ற சினிமா மூலம் திரைக்கு அறிமுகம் செய்தார்.

    புஷ்பவல்லி ஜெமினி ஸ்தாபனத்தில் நடிக்க ஒப்பந்தமானதும் பூமிப்பந்து அவரது காலடியில் சுழன்றது.

    தாசி அபரஞ்சி, பாலநாகம்மா, சம்சாரம், சக்ரதாரி என்று ஜெமினியின் தொடர் வெற்றிச் சித்திரங்களில் புஷ்பவல்லியின் இளமையும் எழிலும் ஆடை அலங்காரங்களும் அற்புதமான நடிப்பும் வசீகர நடனங்களும் சினிமா வணிகர்களுடைய கஜானாக்களின் எண்ணிக்கையைக் கூட்டின. இவையெல்லாம், எஸ்.எஸ். வாசனின் இதயத்திலும் புஷ்பவல்லிக்கு நிரந்தரமாக ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தன.

    விடுதலைக்குப் பின்னர் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற நேரம். சம்சாரம் திரைப்படம் வெளியானது. வாக்காளர் பட்டியலை வாங்கி அனைத்து இல்லத்தரசிகளுக்கும், அதன் கதாநாயகி புஷ்பவல்லியே மடல் எழுதுவது போல் வாசன் செய்த புதுமை விளம்பரம், புஷ்பவல்லியின் அபரிதமான புகழை ரூபாய் நோட்டுகளாக மாற்றியது. உடனடியாக சம்சாரம் இந்தியும் பேசியது.

    ஒட்டுமொத்த இந்தியாவும் புஷ்பவல்லியோடு சோகக் காட்சிகளில் சேர்ந்து அழுதது.

    தாசி அபரஞ்சியில் நடித்தபோது கொத்தமங்கலம் சுப்பு மூலம் தமிழ் பேசக் கற்றுக்கொண்டேன். வீட்டிலிருந்து தயிர்வடைகளைச் செய்து எடுத்து வந்து சுப்புவுக்குக் கொடுத்து அவரைக் குஷிப்படுத்துவேன்.

    ஆரம்பத்தில் ஜெமினி எனக்கு மாதாமாதம் வழங்கிய ஊதியம் இரண்டாயிரம் ரூபாய். வாசன் பெயருக்குத்தான் ஒப்பந்தம் போட்டார். பாலநாகம்மாவில் என் நடிப்பைப் பார்த்து, சகல சலுகைகளும் எனக்கு நாளடைவில் கிடைத்தன. நிறையவே பணம் கொடுத்து என் நடிப்பார்வத்தை வாசன் வளர்த்துவிட்டார். ஜெமினியில் நான் நடித்த கடைசி படம் மூன்று பிள்ளைகள் - புஷ்பவல்லி.

    பி. பானுமதிக்கு 24 மணி நேரமும் புஷ்பவல்லியின் மலர்ந்த முகமே மனத்தில் நின்றது. தன் பெயரையும் கனகவல்லி என்று வைத்துக்கொள்ள முடிவு செய்தார். குடும்பத்தினர் அனுமதி தரவில்லை.

    வரவிக்ரயம் தெலுங்கு படத்தில் தன் அபிமான நடிகை புஷ்பவல்லியோடு பி. பானுமதி, சேர்ந்து நடித்து ஜென்ம சாபல்யம் பெற்றார். வரவிக்ரயம் பிரமாதமாக ஓடியது. அமோக வசூல்.

    பானுமதி மட்டுமல்ல. உலக நாட்டியப் பேரொளியாகப் பிரபஞ்சமெங்கும் வலம்வந்த பத்மினியும் புஷ்பவல்லியின் தீராக் காதலி!

    ஜெமினியில் கல்பனா என்ற நாட்டியச் சித்திரம் உருவான நேரம். அதில் நடிக்கச் சென்ற பத்மினியின் அனுபவம்.

    புஷ்பவல்லி பெரிய கார் ஒன்றில் வருவார். அக்கா லலிதாவையும் என்னையும் ஜோடியாகப் பார்ப்பதில் புஷ்பவல்லிக்கு ரொம்ப ஆசை. நீங்கள் இரட்டைக் குழந்தை மாதிரி இருக்கிறீர்கள் என்று சொல்லி, எங்களைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், அருகில் அமர்த்திப் பேசிக்கொண்டிருப்பார். ஸ்வீட் கிடைக்கும்.

    காண்பவர்கள் அனைவரையும் கவர்ச்சியால் கட்டிப் போட்டவர் புஷ்பவல்லி. மிகச் சாதாரண நிலையில், பணியாற்றிய ஓர் இளைஞரை விரும்பிச் சரண் அடைந்தார்.

    ஜெமினியில் நானும் புஷ்பவல்லியும் நடித்தபோது இருவருக்கும் காதல் பிறந்தது. ஒட்டிப் பழகினோம். திருமணத்தைப் பற்றி நாங்கள் எண்ணவே இல்லை. மனம் விரும்பிப் பழகுபவர்களுக்குத் திருமணம் ஒரு தடையில்லை. அவள் என் குழந்தையைச் சுமப்பது தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றாள்.

    பிறக்கப்போகும் குழந்தைக்கு முழுமையான அப்பாவாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன். நான் எத்தனையோ எடுத்துச் சொல்லியும் புஷ்பவல்லி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பானு ரேகா பிறந்தாள். காலப்போக்கில் இருவரும் வேறு பாதையில் செல்ல வேண்டிவந்ததால் பிரிந்தோம்.

    எங்களுக்குள் திருமணமாகாததால் விவாகரத்துப் பிரச்சினையும் எழவில்லை. - ஜெமினி கணேசன்.

    நாகையாவும் புஷ்பவல்லியும் இணைந்து நடித்த அருமையான பக்திச் சித்திரம் சக்ரதாரி. அதில் ஜெமினி கணேசனுக்கு பாண்டுரங்கர் வேடம். ஜெமினிகணேசனும் புஷ்பவல்லியும் இடம் பெற்ற இன்னொரு படம் மூன்று பிள்ளைகள்.

    புஷ்பவல்லியின் முதல் கணவர் ரங்காச்சாரி. அட்வகேட். டி.ஆர். ராஜகுமாரிக்கு முன்பு சந்திரலேகாவில் நடிக்கும் வாய்ப்பு புஷ்பவல்லியைத் தேடி வந்தது. வாசன் எத்தனை சமாதானம் சொல்லியும் ரங்காச்சாரி கேட்கவே இல்லை. சர்க்கஸ் காட்சிகளில் புஷ்பவல்லிக்குத் தைக்கப்பட்ட ஆடைகள் மிகவும் ஆபாசமாக இருந்ததாகக் குற்றம் சாட்டினார்.

    புஷ்பவல்லியை அம்மா வேடங்களில் அதிகம் பார்க்க முடியாமல் போனது. சம்பூர்ண ராமாயாணம் படத்தில் (ராமர்-என்.டி. ராமாராவ்) கவுசல்யாவாகக் காணப்பட்டார். மற்றும் சிவாஜியின் அம்மாவாக ஓரிரு படங்களில் தோன்றினார். மலேயா மாமியார் என்ற பெயரில் சொந்தப் படம் தயாரித்தார் புஷ்பவல்லி. லட்சக்கணக்கில் நஷ்டம். கடனை அடைப்பதற்காக மகள் ரேகாவை சினிமாவில் அறிமுகப்படுத்தும் கட்டாயம்.

    தன் மகளுக்காக வாய்ப்பு கேட்டு எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரிடமும் சென்றார் புஷ்பவல்லி. வியட்நாம் வீடு படத்தில் ரேகா நடித்துச் சில காட்சிகளும் படமாயின. பெரும் புகழ் மிக்க ஸ்டாரான நீங்கள் உங்கள் மகளுக்காக, சான்ஸ் கேட்கும்போது அதை நிறைவேற்றுவது எனது கடமை என்று புஷ்பவல்லிக்கு வாக்குறுதி அளித்தார் எம்.ஜி.ஆர்.

    கேட்பதற்கு இதமாகப் பேசும் எம்.ஜி.ஆர். இன்றுவரை என் மகளுக்கு சான்ஸ் தரவில்லை என்று புஷ்பவல்லி புலம்பிய நேரம் இந்தியில் அழைத்தார்கள்.

    ரேகா வடக்கில் வாகை சூடியது 1971-ல். ரேகா அகில இந்திய நட்சத்திரமாகப் புகழ் பெற்ற பின்னரே, அவர் தன்னுடைய கலை வாரிசு என ஜெமினி கணேசன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

  17. Thanks eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355, eehaiupehazij liked this post
  18. #250
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    செந்தில்வேல்,
    தங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்து வன்மை எவ்வாறு வெளிப்படுகிறது பார்த்தீர்களா.. நடிகர் திலகம் உள்ளே புகுந்து விட்டால் அது தனி உதிர வகையாகி விடுகிறது. ஒவ்வொருவருக்கும் உள்ளே ஏற்படும் உத்வேகம் ஏதாவது ஒரு கலையில் அவனை அல்லது அவரை அல்லது அவளை மிகச் சிறந்த வகையில் பரிமளிக்க வைக்கிறது. அவ்வாறுள்ள போது தாங்களோ பல்துறை வித்தகராக பரிமாணம் எடுத்து வருகிறீர்கள்.


    தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

    தங்களின் உழைப்பு அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்த்து வியந்தததின் தாக்கத்தின் விளைவே இது போன்ற
    அணில் குஞ்சு முயற்சி

    நன்றி

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •