Page 292 of 337 FirstFirst ... 192242282290291292293294302 ... LastLast
Results 2,911 to 2,920 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2911
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    madhu,
    Thanks for 'maalai mayngugindra neram....' from Maragatham. May be, you can post 'kunguma poove' also !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2912
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2913
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மாலையும் கழுத்துமாக காதல் மன்னரைக் கல்யாண மன்னராக !!!




  5. Likes Russellmai liked this post
  6. #2914
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    நம்ம வாத்தியாரையாவுக்காக வடுவூராரின் கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலின் திரை வடிவத்திலிருந்து நாட்டியப் பேரொளி

    Uploader?.....
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2915
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    19 videos in one page?! Wow!

    The winner is our Sivaji senthil sir. (13 videos)
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Thanks eehaiupehazij thanked for this post
  9. #2916
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல் காட்சிகளிலும் டூப் சமாளிபிகேஷன்ஸ் !

    Enjoy the partial substitution with body doubles even in song sequences like this involving risky skating scenes!! Muthuraman-Vaanishree Vs Hemamalini-Sanjeev Kumar in Vaani Raanidooped from Seethaa aur Geethaa dooped from.......?



    Last edited by sivajisenthil; 4th June 2016 at 09:49 AM.

  10. Likes Russellmai liked this post
  11. #2917
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மாலை ப் பாடல்கள் ஜோர்..காலைல கேட்க நல்லா இருக்கு\

    என் பங்குக்கு
    மாலைப் பொன் மாலை நான் போகின்ற சாலை எல்லாம்
    மகரந்தம் பூ சூடுதே



    ஒரு மாலை இளவெயில் நேரம்..அவள் முகம் பார்த்தேன் அன்றே தொலைந்தவனானேன்

    இது ஒரு பொன் மாலைப் பொழுது

    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே (ஓ இது பூமாலை)
    மாலை வண்ண மாலை இந்த உலகத்தில் ஆயிரம் மாலை ( இதுவும் பூ தான் குண்டுப் பூ மாலை தொடுக்கும் பூ மாலை) (ஜெய்யா)

    நிலவும் மாலைப் பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே ந்னு இந்தப் பொண்ணு காலையில் பாடுது..\\

    பூத்திருந்த பாவையவள் பொங்கியே பாட்டினிலே
    காத்திருந்த தன்மை கவிநெய்தே – வார்த்துவிட்டாள்\
    வண்ணமிகு உள்ளத்தின் வாகான ஏக்கமதை
    எண்ணத்தில் ஏந்தினா ளே..

    கண்ணன் வரும் வேளை அந்தி மாலை நான் காத்திருந்தேன்..(அழகிய தெற்றுப்பல் பாவனா..)


    மாலையை அந்தின்னும் சொல்வாங்க..முன்னாலேயே எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன்

    வானத்துச் சூரியன்
    வர்ணங்களின் தலைவன்
    அதனால் தான
    அந்திப்பொழுதில்
    அவன் சிதையின் அருகே
    அத்தனை நிறங்களின்\
    அனுதாபக் கூட்டம்

    என கவிக்கோ அப்துல் ரகுமானின் மறக்க இயலாத கவிதை ஒன்று உண்டு..

    அந்தில்ல நிறைய இருக்கு
    அந்திமழை பொழிகிறது
    அந்திப் பொழுதில் வந்துவிடு..
    அந்தி மயங்குற நேரத்துல ஆத்தங்கரை ஓரத்திலே
    அத்தை மக ஏக்கத்தில காத்திருப்பேன்..

    ம்ம்

  12. Thanks eehaiupehazij thanked for this post
  13. #2918
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஒருசொல் இருபொருள் தேன்மகரந்தங்கள்!

    கவலையும் கவலையும் !!
    வருத்தத்தில் மூழ்குவதும் நீரிறைப்பதும் !

    கவலையில் மூழ்கி நடிகர்திலகத்தின் ஆறுதல் அரவணைப்பில் சோக முத்தெடுக்கும் க(ட)வலை மன்னர் !



    பேலன்ஸ் தவறாமல் கவலையோட்டி நீரிறைக்கும் காதல் விவசாய விஞ்ஞானி ஜெமினி கணேசன் !



    ஜேம்சுபாண்டு பெட்டியுடன் இயற்கையை எதிர்கொண்டு கவலை நீரேற்றத்தையும் கண்டு களிக்கும் சிபிஐ ராஜன் !

    Last edited by sivajisenthil; 4th June 2016 at 03:14 PM.

  14. Likes Russellmai liked this post
  15. #2919
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நாலு நாள் ல பர்த்டே வருதுங்க.. யாருக்கு யாருக்கோ

    அதனால் கவுண்ட் டவுன் பண்ணி கொண்டாட ஆரம்பிக்கலாமா..

    எல்லா நண்பர்களும் ஒரு ரெண்டுவரி நாலுவரி ஆறுவரி இல்லைன்னா நல்ல நீளமான ரைட் அப் (மீள் பதிவெல்லாம் நாட் அலெளட்) எழுதி கொண்டாட்டத்தை ஆரம்பிக்கலாமா...\\

    *

    இப்போ என்ன பண்ணலாம்.. லஞ்ச் டைம் கடந்துட்டுது..லேட்டா ஒரே ஒரு ஃபிலாஃபில் எனப்படும் சில வடைகளை மைதா மாவு குப்பூஸ் எனச்சொல்லப்படும் சப்பாத்திக்குள் வெஜிடபிள்கள் சீஸ் எல்லாம் வைத்து லெபானீஸ் ஃபிலாபில் உண்டாயிற்று..அதனால் பரவாயில்லை கொஞ்சம் வயிறு திம் என்று தான் இருக்கிறது

    இந்த உண்டாயிற்று என்ற் சொற்றொடர் பார்த்தால் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது இல்லியோ

    குண்டாய் உடம்பிருந்தால் கூடும் களைப்பதுவும்
    நன்றாக உண்டதால் தான்..

    கன்னா பின்னா எனச் சாப்பிட்டால் பொசுக்குனு எடைகூடும்..அட.. உண்பது சாப்பிடுவது என்றும் வரும்.. பின் என்ன சொல் வரும்..

    *

    அந்தப் பெண் அழகி என்று சொன்னால் அழகுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்மிடம் வந்து “யோவ் கண்ணாடி மாத்திக்கோய்யா.. அவ சாதாரண அழகில்லை..பேரழகியாக்கும்” எனக் கோபித்துக் கொண்டு வக்கணை காட்டிவிடும்

    அப்பேர்க்கொத்த அழகு நங்கை அவள்.. கூடவே நல்ல படிப்பாளி..யெஸ்..டாக்டருக்குப் படிப்பவள்.. அவள் வீட்டில் குடியிருக்கும் வாலிபன் அவளுடன் சினேகமாகவே பழகுகிறான்..அவளும் அப்படியே எனத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்..

    ஆனால் அந்த வாலிபன் அவளீடம் வந்து “யோவ் ஜூனியர் டாக்டர்.. நான் இந்தபஸ்ஸில் வரும் பெண்ணை க் காதல் பண்ணுகிறேன்..அஸ் எ ஃப்ரெண்ட் நீ என்ன நினைக்கிறே” எனும் போது அவள் அடிமனத்தில் வேதனை சுருள்கிறது..இது என்ன என யோசித்தால்..அட இந்தாள நாம் லவ் பண்ணுவது மாதிரி இருக்கே இவன் என்னடான்னா இன்னொருத்தியைக் காதலிப்பதாகச் சொல்கிறானே என நினைத்து சதுரங்கம் ஆட ஆரம்பிக்கிறாள்..

    கடைசியில் அவனிடம் சொல்லியும் விடுகிறாள்.. கண்ணா நீ எனக்குத் தான் ..அந்த பஸ் பொம்மனாட்டியை மறந்துடு.. பாரு ஒங்க அப்பா அம்மா கிட்ட கூட நீ என்னைக் காதலிக்கிறேன்னு சொல்லி சம்மதம் வாங்கியாச்சு..ஸோ.. யூ ஹேவ் டு மேரி மி..

    வாலிபன் பார்க்கிறான்.. தான் நண்பி என நினைத்தவள் காதலியா.. கொஞ்சம் உற்றும் நோக்குகிறான்..ஓ.. வாவ்..வாட் எ பியூட்டி..ஆனால் இவள் இத்தனை அருகிருந்தும் அது என்ன எனக்கு இவள் மேல் ஒரு ஈர்ப்பு தமிழில் அட்ராக்*ஷன் வரவில்லையே.. மனதுக்குள் உட்கார்ந்து இவளொன்றும் மணி அடிக்கவில்லையே.. கண்கள் சிரித்தபடி வாய் பேசாமல் இருந்த பஸ்ஸில் சென்ற நங்கை தானே எனக்குப் பிடித்திருக்கிறது..இவள் என்னடாவென்றால் இப்படிக் கூறுகிறாளே எனயோசித்து யோசித்து மண்டைகாய்ந்ததில் அவனுக்குப் பாடல் வருகிறது..

    தின்னாதே என்னை தின்னாதே
    சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே (ஹப்பாடி சாப்பிடறது உண்பது தின்பது எல்லாம் ஒன்று தானே! )

    பாட்டின் வரிகளும் நன்றாகவே இருக்கின்றன..


    நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே
    ஜோடி கண்ணில் என்னை கொத்தி
    ஜோடி மார்பில் என்னை குத்தி கொன்றவளே
    தின்னாதே என்னை தின்னாதே


    எனச்சொல்ல அவளா சளைத்தவள்..என்னவாக்கும் சொல்கிறாள்


    சீ .. சீண்டாதே என்னை சீண்டாதே
    தின்னுவதை விடவும் இங்கு தின்னபடுதல்
    இன்னும் இன்பம் அல்லவா ..அல்லவா .

    எனச் சொல்ல பாடல் மூலம் உரையாடலில் தீப் பிடிக்கிறது...

    பெண் வாடை அறியாத முனியாக நானிருந்தேன்
    முந்தானை பூவாசம் காட்டி விட்டாயே

    ஒரு பாவம் அறியாத பூவாக நான் இருந்தேன்
    பூ மீது பெட்ரோலை ஊற்றிவிட்டாயே
    பூவுக்குள்ளே தீ பிடித்தால் கொதிக்க கொதிக்க தேன் கிடைக்கும்
    சுட சுட குடித்து விடு தீர்ந்த பிறகும் தேன் சுரக்கும்

    பார்வை என்னும் ஈட்டி போட்டு
    கொன்று என்னை கூறு போட்டு
    உதட்டு மீது அடுப்பு மூட்டி சமைப்பவளே

    ஒரு நூறு பேராறு உள்நாட்டில் ஓடுகையில்
    உன் தாகம் தீர என் குருதி கேட்டாயே

    (இப்படிச் செய்யலாமாம்மா நீ.. நான் லவ் பண்றது இன்னொரு பெண்.. நீ இல்லையேம்மா)

    சுவையாறு என்பார்கள் சுவை ஏழு என்பேன் நான்
    இதழ் கொண்ட சுவை சொல்ல மறந்து விட்டாரே
    அ… குடலுக்கு பசி எடுத்தால் உணவு கொடுக்க அடங்கிவிடும்
    உடலுக்கு பசி எடுத்தால் கொடுக்க கொடுக்க வளர்ந்துவிடும்

    (சும்மா புலம்பாதய்யா.. அவள விட நான் எல்லாவிதத்திலும் பெட்டர்..படிப்பு அழகு கண் அப்புறம் அதான் நீயே பார்க்கறேல்ல)

    வண்டு விழியில் என்னை கொன்று
    சுண்டு விரலில் துண்டு செய்து
    மார்பு சூட்டில் என்னை சுட்டு சமைத்தவளே


    சீண்டாதே என்னை சீண்டாதே எனப் பாடலில் சொல்பவர் சிம்ரன்.. தின்னாதே எனப் புலம்புவ்து பிரஷாந்த.. பார்த்தேன் ரசித்தேன் படம்..

    சிம்ரன் க்ளாமர் என்ச் சொன்னவர்களைப் பேச்சற்றுப் போகும் படி செய்த ஒரு படம்..இன்னொருபடமும் இருக்கிறது..அது அப்புறம்..

    இப்போ பாட்டுக் கேட்கலாம்..



    லிரிக்ஸ் வாலி என நினைத்திருந்தேன்.இல்லை வைர முத்துவாம்..இசை பரத்வாஜ்..

    பின்ன வாரேன்...

  16. #2920
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    We get ready to celebrate the World Environment Day scheduled on June 5th!

    This song from GG starrer Shanthi Nilayam stands number one in representing synergistic features of our environment by all means! flora,fauna, air and water ambiance...and what not!

    Last edited by sivajisenthil; 5th June 2016 at 04:40 AM.

  17. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •