Page 7 of 7 FirstFirst ... 567
Results 61 to 67 of 67

Thread: கலியுக கர்ணன் வள்ளல் கணேசன்

  1. #61
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
    நடிகர் திலகம் அள்ளித் தந்த கொடைகளை பற்றி தினம் ஒரு தகவலில் இன்று........
    நடிகர் திலகம் தனக்கு கிடைக்காத கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர்........
    அதன் விளைவாகவே அன்னை இல்லத்தின் முகப்பில் ஒரு சிறுவன் அமர்ந்து புத்தகம் படிப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்....
    இதே போல் சூரக் கோட்டை பண்ணை வீட்டின் நுழைவு வாயிலிலும் அமைக்கப்பட்டிருக்கும்...
    நினைத்ததை நிறைவேற்றும் வகையில் தனது உடன் பிறந்த தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்......
    குடும்ப உறவுகள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்தார்.......
    கல்விக்கென நிதி கேட்டு யார் வந்தாலும் வாரி வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்....
    வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றி அதில் வந்த வருமானம் ₹ 32 லட்சரூபாயை பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு கொடையாக அளித்தார்....
    அதில் ஒன்று தான் போடி தொழிற்பயிற்சி கல்லூரி......
    கல்லூரி தொடங்க ₹ 2 லட்சத்தை அன்றைய அரசிடம் அளித்தார்.......
    இன்றும் ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிவாஜி--பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் மூலமாக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது......
    விளம்பரமில்லாமல்....
    அன்றைய 24 கேரட் தங்கம் 1 கிராம்
    விலை # 9.30 பைசா.....
    இன்றைய 24 கேரட் தங்கத்தின் 1 கிராம்
    விலை ₹ 5471/--
    இன்று இரண்டு லட்சத்திற்கான மதிப்பை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.......
    கர்ணன் என்றும் கர்ணன்தான்.......��
    இன்றைய மதிப்பு ₹ 11,76,55,914/--
    பதினோரு கோடியே எழுபத்தியாறு லட்சத்து
    ஐம்பத்தைந்தாயிரத்து தொள்ளாயிரத்து பதினாங்கு ரூபாய் ....

    siva-235.jpg

    thanks G.Laksman (நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #62
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ��
    நடிகர் திலகம் வழங்கிய கொடைகளை பற்றி தினம் ஒரு தகவல்*....
    வேடிக்கை பார்க்க சென்ற இடத்தில்
    தனது ஒரு மாத சம்பள பணத்தை
    வழங்கிய நடிகர் திலகம்........
    நடிகர் திலகம் தனது முதல் படமான பராசக்தி படத்தில் 1952ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடித்துக் கொண்டிருந்த போது, அருகில் உள்ள டென்னிஸ் கோர்ட்டுக்கு வேடிக்கை பார்க்க சகஸ்ரநாமம் அவர்களோடு செல்வார்......
    அங்கு பிரபல டென்னிஸ் வீரர் ராமனாதன் அவர்கள் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருப்பார்......
    ஒரு நாள் விளையாடி முடித்த பிறகு தன் நண்பர்களிடம் ராமனாதன் அவர்கள் தன்னுடைய மகனை (ரமேஷ்) டென்னிஸ் பயிற்சிக்காகவும், டென்னிஸ் தொடர்களில் விளையாடுவதற்காகவும் வெளிநாட்டுக்கு அனுப்ப இருப்பதாகவும் அதற்கு அனைவரும் பண உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.......
    அருகில் இருந்து இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர் திலகம் தனது சட்டை பையில் இருந்த ₹ 250/- ஐ எடுத்து ராமனாதன் கைகளில் தருகிறார்.........
    ராமனாதனும் அவருடைய நண்பர்களும் திகைக்க, சகஸ்ரநாமம் அவர்கள் நடிகர் திலகத்தை அறிமுகம் செய்ய ராமனாதன் அவர்கள் நடிகர் திலகத்தை கட்டிப் பிடித்து நன்றி சொல்கிறார்...
    அவருடைய நண்பர்களும் நடிகர் திலகத்தை பாராட்டுகின்றனர்.... ...
    ராமனாதன் அவர்களிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தவுடன், சகஸ்ரநாமம் , கணேஷ் நேற்று தான் சம்பளம் வாங்கினாய்..... அதனைத் அப்படியே கொடுத்து விட்டாயே....
    மாதம் முழுவதும் செலவுக்கு என்ன போகிறாய் என கேட்கிறார்.....
    அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்
    என்ற நடிகர் திலகம்....
    அடுத்த சில வருடங்களில் டென்னிஸ் உலகில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்ட போகும் வீரனுக்கு என்னால் முடிந்த சிறு உதவி என்று சொல்லி விட்டு நகர்கிறார்........
    பராசக்தி படத்தில் நடிக்க நடிகர் திலகம் வாங்கிய மாத சம்பளம் ₹ 250/- மட்டும்
    அந்த ஒரு மாத சம்பளத்தைத்தான் ராமனாதன் அவர்கள் வசம் கொடுத்தார்........
    1952ல் ₹250/- ன் இன்றைய மதிப்பு......
    24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை
    1952ல் ₹ 7.60 பைசா......
    2022ல் ₹ 5471/---
    இன்றைய மதிப்பு ₹ 1,80000/--
    நாடக மேடைகளிலும், திரைப்படங்களிலும்
    நன்றாக வேஷம் போட்டு நடித்த நடிகர் திலகம்
    ஒரு நாளும் வாழ்க்கையில் வேஷம் போடாதவர்.......
    வைரத்தை எத்தனை ஆண்டுகள் மண்ணுக்குள் புதைத்து வைத்தாலும்
    வைரம் வைரம் தான்....
    நாளாக நாளாக வைரத்தின் மதிப்பு கூடுமே தவிர என்றும் குறையாது...

    siva-242.jpg

    Thanks G Laksmanan (Muktha films 60)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #63
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
    நடிகர் திலகத்தின் கஜ தானம்...........
    நடிகர் திலகம் 6 க்கும் மேற்பட்ட யானைகளை கஜ தானம் செய்துள்ளார் தனது சொந்த செலவில்........
    சென்னை அமெரிக்க தூதரகத்தின் மூலமாக நடிகர் திலகத்தின் நண்பருக்கு அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்கு யானை ஒன்று வேண்டும்.
    எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை . அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமா எனக் கேட்டு வேண்டுகோள் வருகிறது........
    நண்பருக்கு முந்தைய ஆண்டு புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு யானை வழங்கிய நடிகர் திலகத்தின் நினைவு வர, அது பற்றிய விவரங்களை அறிய நடிகர் திலகத்தை அணுகுகிறார்.......
    நடிகர் திலகத்திடம் விவரங்களை சொல்ல,
    குழந்தைகளுக்கு தானே நானே வாங்கித் தருகிறேன்.....
    என சொல்ல நண்பர் திகைக்கிறார்...
    சொன்னது போலவே அடுத்த சில நாட்களில் யானைக்குட்டி ஒன்றை வாங்கி அதற்கு தனது மூத்த மகள் சாந்தியின் பெயரை சூட்டி அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் வழங்குகிறார்.........
    சிறப்பு விமானம் மூலம் சாந்தி இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.....
    சாந்தி அங்கு சென்றவுடன் அந்த குழந்தைகள் பூங்காவின் புகழ் அமெரிக்கா முழுவதும் பரவி குழந்தைகளுடன் மக்கள் சாரை சாரையாக படையெடுத்தனர்......
    .சாந்தியின் புகழும் நடிகர் திலகத்தின் புகழும் வெள்ளை மாளிகையில் எதிரொலித்தது......
    காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களே நடிகர் திலகத்தின் கஜதானத்தை பற்றி பேசி, நடிகர் திலகத்திற்கு அருளாசி வழங்கியுள்ளார்.......
    தெரிந்தது சில...தெரியாதவைகள் பல......
    மண்ணும் விண்ணும் இருக்கும் வரை நடிகர் திலகத்தின் புகழ் இருக்கும்....������

    siva-271.jpg
    Thanks G ,Laksmanan(நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #64
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
    நடிகர் திலகம் எல்லோருக்கும் உதவி செய்தவர் கட்சி வேறுபாடு பார்க்காமல்......
    சென்னை போக் ரோட்டில் அமைந்துள்ள தோழர் ஜீவா நினைவகத்தை திறந்து வைக்க வரும் போது தான் மேற்கு வந்த முதல்வர் ஜோதிபாசு அவர்கள் புரோட்டா கால் எனப்படும் சம்பிரதாயங்களை மீறி
    அன்னை இல்லம் சென்று நடிகர் திலகத்தை சந்தித்து அளவளாவினார்.......
    பேசிக் கொண்டிருக்கும் போது இப்போது தாங்கள் திறந்து வைக்க வந்திருக்கும் தோழர் ஜீவா நினைவகம் அமைக்க நடிகர் திலகம் ஒரு கணிசமான தொகையை தந்து உதவியதாக தோழர்கள் ஜோதிபாசு அவர்களிடம் சொல்ல, .......
    ஜோதிபாசு அவர்கள் நடிகர் திலகத்தை பாராட்டியதோடு விழாவுக்கு தன்னோடு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்....
    அழைப்பை ஏற்றுக் கொண்ட நடிகர் திலகம்
    நான் விழாவுக்கு வருகிறேன்...
    விழா முடிந்து போகும் போது அன்னை இல்லம் வந்து உணவருந்தி செல்லுமாறு அன்புடன் சொல்ல ஜோதிபாசு அவர்கள் புன்னகையுடன் சம்மதம் தெரிவிக்கிறார்....
    அதே போல் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்களோடு விழாவுக்கு சென்றார் நடிகர் திலகம்.....
    கம்யூனிஸ்ட் தோழர்கள் நடிகர் திலகத்தை சிறப்பாக வரவேற்றார்கள்....
    விழா முடிந்து அன்னை இல்லம் சென்று தோழர் ஜோதிபாசு அவர்கள் உணவருந்தி சென்றது வரலாறு.....
    அந்தப்பகுதியில் உள்ள மூத்த கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு இந்த நிகழ்ச்சியைப் பற்றி
    நன்கு தெரியும்.........
    என்றும் நடிகர் திலகம் புகழ் பேசுவோம்..........
    siva-267.jpg

    siva-268.jpg


    Thanks G.Laksmanan (நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #65
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
    நடிகர் திலகம் அவர்கள் நாட்டு மக்களுக்கு
    துயரம் ஏற்படும் போதெல்லாம் தன்னால் முடிந்தளவு உதவிகளை செய்தவர்....
    நாட்டின் முதுகெலும்பு எனப்படும் #விவசாயிகளுக்கு துன்பம் வந்த போது அவர்களுக்காக பலமுறை கட்டபொம்மன் நாடகத்தை நடத்தி அப்போது ,1961ல் விவசாயிகளுக்காக நிதி திரட்டிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களிடம்
    ₹ 5 லட்சத்தை வழங்கி, தோழர் ப.ஜீவானந்தம் அவர்களை பிரமிக்க வைத்தார்.....��
    1961ல் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9.90 பைசா.....
    இன்று 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 5513/--
    நடிகர் திலகம் 1961ல் வழங்கிய ₹ 5 லட்சத்தின் இன்றைய மதிப்பு ₹ 27,84,34,343/-
    இருபத்தியேழு கோடியே எண்பத்திநான்கு லட்சத்து முப்பத்தி நாலாயிரத்து முன்னூற்றி நாற்பத்தி மூன்று.......❤️❤️❤️

    siva-276.jpg

    Thanks G.Laksmanan. (Nadigarthilakam Fans)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #66
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
    நடிகர் திலகம் வழங்கிய தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்கான இடம்.....தகவல்....
    1965ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கோரிக்கையை ஏற்று தேன் கூடு என்ற நாடகத்தை நடத்தி, காரைக்குடி கீழ ஊரணியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகள் கட்டிக் கொள்வதற்காக ஏவி மெய்யப்ப செட்டியார் அவர்களின் புதல்வர் ஏவிஎம் பழனி செட்டியாரிடம் இருந்து 2.55 ஏக்கர் நிலத்தை வாங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கினார்...
    தாழ்த்தபட்ட மக்கள்அந்த இடத்திற்கு
    "சிவாஜி காலனி' என்று பெயரிட்டனர்....
    ஏழை மக்களுக்கு இடத்தை பிரித்து கொடுப்பதற்காக நடிகர் திலகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் நடிகர் திலகத்திற்கும்
    தாழ்த்தப்பட்டோருக்கும் செய்த துரோகத்தால்
    இன்று வரை அந்த இடம் தாழ்த்தபட்டோருக்கு வழங்கப்படவில்லை...
    அதனை அனுபவித்து வருபவர்களுக்கு எதிராக அம்மக்கள் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்ட பிறகும் .,....,...
    அவர்களிடம் இடத்தை ஒப்படைக்காமல் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்களின் துணையோடு இன்று வரை அனுபவித்து வருபவர்களுக்கு எதிராக அரசோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சிகளோ எந்த வித முன்னெடுப்பும் எடுக்கவில்லை.....
    சுமார் 57 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நடிகர் திலகத்தால் வழங்கப்பட்ட , .......
    இன்றைய தினத்தில் பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்தை ஆக்ரமிப்பு செய்து அதில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அரசு துறையை சேர்ந்தவர்களும் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனை தரும் செய்தியாகும்........
    இது பற்றிய தகவல்களை அளித்த அன்புத் தம்பி காரைக்குடி சுந்தரம் அவர்களுக்கு
    எனது மனமார்ந்த நன்றி......

    gift-58.jpg

    gift-59.jpg

    Thanks G.Laksmanan. (Nadigarthilakam Fans)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #67
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி என்ற சொல்லுக்கு ஒரு ஆகர்ஷண சக்தி உண்டு. அவரை பலமுறை சந்தித்து இருந்தாலும் எனது தந்தையுடன் சென்று சந்தித்த அந்த நினைவு மட்டும் பசுமரத்து ஆணி போல மனதில் என்றும் நிலைத்து இருக்கிறது.
    அப்போது எனக்கு வயது 16 என்று நினைக்கிறேன். சில சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் காந்தீய சிந்தனை கொண்டவர்கள் திரு சோமையாஜுலு தலைமையில் சிவாஜியை சந்தித்து அவர் கண்டிப்பாக திப்புவின் கதையில் நடித்து அவருடைய பெருமையை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நிர்பந்திக்க அவருடைய இல்லத்துக்கு சென்றனர். எனது தந்தையுடன் நானும்.
    ( அந்த "கஞ்ச" நடிகர் வீட்டில் குளிர்பானம் கொடுத்து அனைவரையும் உபசரித்தார்கள்.)
    சிவாஜி வந்ததும் பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்தது. அவருடைய இயலாமையை எடுத்து கூறினார். உடன் வந்த முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் தானே அதை தயாரிக்க போவதாக கூறியும் அன்றைய அவருடைய அரசியல் நிலைப்பாடு அவரை செய்யவிடவில்லை.
    அனைவருக்கும் சூடாக உப்புமாவும் இனிப்பும் பரிமாறப்பட்டது. ( கஞ்சன் வீட்டில் சுமார் முப்பது பேருக்கு உணவு ) கிளம்பும் நேரத்தில் அந்த மாபெரும் நடிகர் எனது தந்தையிடம் இருந்து கதையை பெற்றுக்கொண்டார். "தநாயக்கன் கோட்டை" என்று பெயரிடப்பட்டு இருந்த அந்த கதை பலரால் தொகுக்கப்பட்டு இருந்தது.
    வேண்டாம் என்று கூறியவர் கதையை படித்து பார்ப்பதாக சொல்லி வாங்கிக்கொண்டது பலருக்கு ஆச்சர்யம்.
    இரண்டு வாரங்கள் கழித்து அவரிடம் இருந்து எனது தந்தைக்கு அழைப்பு. நானும் ஒட்டிக்கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் கதையை பற்றி பேசிவிட்டு அன்றைய சூழலில் அவரால் ஏன் அந்த கதையில் நடிக்க இயலாது என்பதையும் விளக்கமாக கூறி எங்களை திருப்பி அனுப்பினார். என் தந்தையின் கையின் ஒரு துணிப்பை திணிக்கப்பட்டது. இதை உங்களுடைய காத்தீய சிந்தனை இயக்கத்துக்காக வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து காந்தி அண்ணலின் புகழ் பரப்ப ஆவன செய்யுங்கள். என்னுடைய உதவி எப்போது தேவைப்பட்டாலும் தயங்காமல் வந்து என்னை சந்தியுங்கள் என்று கூறி வழியனுப்பினார்.
    அந்த ஒரு நடிகனை பற்றி எத்தனை விமர்சனங்கள். ஒட்டு மொத்த ஊடகங்களும் ( இன்று போல் ) ஒரு சாராருக்கே சரணம் போட்டு வந்த நிலை அன்று. சிவாஜியின் வெற்றி இத்தகைய அனைத்து இன்னல்களையும் தாண்டித்தான் என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது. சுமார் நாற்பதாயிரம் நன்கொடை வழங்கியதை ( சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் ) எனது தந்தை அவருடைய கடைசி காலங்களிலும் சொல்லி சிலாகித்தார்.நன்றி திரு Belge Ravi

    siva-004.jpg

    Thanks Udha Kumar (நடிகர்திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள் One and only sivaji)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 7 of 7 FirstFirst ... 567

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •