Page 88 of 401 FirstFirst ... 3878868788899098138188 ... LastLast
Results 871 to 880 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #871
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    Wonderful song.Thanks for your coverage.Whenever I see this song I listen as if I am hearing for the first time."Money " was such powerful in 1952 means what to mention in 2015?
    Quote Originally Posted by senthilvel View Post
    சரித்திரத்தை மாற்றிய பாடல்

    தமிழ் சினிமா சரித்திரத்தை,அது சென்று கொண்டிருந்த பாதையை,
    அது தமிழ் மக்களுக்கு அளித்துக்கொண்டிருந்த பங்களிப்பை அதனினும் உயர்ந்த,ஏன் உலகமே திரும்பிப்பார்த்து வியக்க வைத்த பெருமை இந்தப் பாடலில் நடித்த இளைஞரையே சாரும்.தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களிலும் எதிரொலித்த பெருமை இந்தப் பாடலுக்குண்டு.அந்த இளைஞரின் கண் அசைவும் காலசைவும் கூட கூர்ந்து கவனிக்கப்பட்டன.பெரும் பேரிகைகள் கூட ஏற்படுத்த முடியாத கிளர்ச்சியை அந்த இளைஞரின் ஒரு விரலசைவு ஏற்படுத்தியது.அவருடைய கண்களின் தீட்சண்யத்தை தாங்கும் சக்திகள் கூட அவர் எதிரில் நின்றுபேச தயக்கம் காட்டியது .ஒரு மனிதனின் மூலம் இத்தனை கலை நுட்பங்களை சகல அவயங்களிலும் வெளிப்படுத்தமுடியுமா?என்று வியப்புண்டாயிற்று.அந்த வியப்பு பிரமையாய் மாறி அந்த பிரமையிலிருந்து மக்கள் விடுபடும் முன்னரே அந்த இளைஞனின் அடுத்தடுத்த நடிப்புக்கணைகளால்
    தாக்குண்டு அந்த பிரமையிலிருந்து விடுபட இயலாத நிலைமை இன்று வரை தொடர்கிறது.
    அது எந்த திரைப்படம் என்பதையும் அந்த நடிகர் யார் என்பதையும் தமிழ்நாட்டில் கேட்டால்அதற்கான பதிலை கோடி உதடுகள் உரக்கச்சொல்லும்.
    அந்த இளைஞரை தான் நடிப்புலக மகானாக பின்னாட்களில் தமிழ்மக்கள் தம்நெஞ்சங்களில்
    ஏற்றிக்கொண்டனர்.
    அவரின்சிறுசிறு அசைவுகள் கூட ஒரு பிரளயத்தையே திரையரங்குகளில் ஏற்படுத்தியது.

    குணசேகரனாக அவதாரம் எடுத்த
    அந்தக் காவியத்தில் ,தீப்பிளம்பு போல் வந்து
    நின்று தாண்டவமாடிய அந்தப் பாடலை பார்த்தோமானால் நம்மை
    மீறிய ஒரு உணர்ச்சி உடலிலே பரவுவதை உணரலாம்.

    சின்ன அசைவுகள்தான்.
    இசைக்குத் தகுந்தபடி தலையாட்டலிலும் உடலசைவிலும்காட்டப்படும் அந்த புது விதமான நடிப்பு , இப்பொழுது கூட சிந்தையிலபெரும் வியப்பை விதைக்கின்றது என்றால் அன்று வந்த காலகட்டத்தில் அது எத்தனை பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
    முழங்கால் அளவுக்கு சுருட்டிய பேன்ட்,இன் செய்யப்பட்டும்,முன் நெற்றிக்கு சற்று மேலே அணிந்த தொப்பியும்,முழங்கை அளவுக்கு மடித்த சர்ட்டும் அணிந்த அந்த உருவம்தானே உலகத்தரம் வாய்ந்த முத்திரையாக மாறிய கதையை அப்பொழுதல்லவா அரங்கேற்றியது.
    உடம்பை திருப்பி கால்களை விந்திவிந்தி நடந்து ஆடியபடி ஆரம்பிக்கும் அந்த வித்தியாசமான நடையுடன் ஆடும் ஆட்டத்தை திரையுலகம் இன்றுவரை வியப்புடன்தானே பார்த்துக்கொண்டிருக்கிறது.
    அப்படியே சென்று தண்ணீர் பைப் திட்டை பச்சைக்குதிரை தாண்டி அதே குதூகலத்துடன்

    திட்டின் மேல்நின்று,

    "தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
    காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
    காசு முன் செல்லாதடி."

    பொதுஜனப் பார்வையாளர்கள் அதிகம பேர் ஒரு நடிகருக்கு ரசிகர்களாக மாறியது இந்தப்பாடலுக்காகத்தான் தான் இருக்கும்.
    காசு எனும் போது சுண்டிக்காட்டுவது,
    தொப்பியை சரி செய்வது
    இது போன்ற மின்னலாய் வந்து போகும் அந்த சின்னஞ்சிறு ஷாட்களில கூட நடிப்பின் வீச்சு கூர்மையாக இருக்கும்.

    ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
    காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
    காசுக்குப் பின்னாலே.

    சாட்சியான பணம் கைவிட்டுப்
    (இமைக்காமல் உற்று கவனித்தால் மட்டுமே இந்த இடத்தில் அவர் போடும் அசத்தலான ஸ்டெப்பை பார்க்கமுடியும்.)

    அது போனபின்
    சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
    சாட்சி கோர்ட்டு ஏறாதடி.

    நாடக சபாக்களில் இருந்தபோது எல்லோருக்கும் கிடைத்த அனுபவமும் பயிற்சியும்தானே இவருக்கும் கிடைத்திருக்கும்? ஆனால் அதையெல்லாம்
    மீறிய அதிசய நடிப்பை முதல் படத்திலேயே எப்படி வெளிப்படுத்தினார்? என்பதுதான் அப்போதைய கலைஞர்களின் கேள்வியாக இருந்திருக்கும் என்பது திண்ணம்.

    பைபையாய் பொன் கொண்டோர்
    பொய் பொய்யாய் சொன்னாலும்
    மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
    மெய் மெய்யாய் போகுமடி.

    பெருமாள் முதலியாரின் இலட்சியம் எவரெஸ்ட் தொட்டதும்,
    கணேசனை தவறாக எடை போட்டவர்களின் கணிப்பு தரைமட்டமும் ஆகியிருக்கும் இப்பொழுது.

    கைகளை பக்கவாட்டில் மேலே தூக்கி,விரல்களை விரித்தும், சுழற்றிக்கொண்டும் சுற்றி சுற்றி ஆடும் அந்த ஆட்டத்தை,கடும் நடன பயிற்சி பெற்றவர்கள் கூட அவ்வளவு அழகாக வெளிப்படுத்தமுடியுமா?




    நல்லவரானாலும் இல்லாதவரை
    நாடு மதிக்காது - குதம்பாய்
    நாடு மதிக்காது.

    கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
    வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
    வெள்ளிப் பணமடியே
    பாடிக்கொண்டே சூதாடிகளிடமிருந்து பணத்தை தூக்கிக்கொண்டு

    சடாரென்று திரும்பி கைககளை ஆட்டிக்கொண்டே கால்களை மாற்றி மாற்றி குத்தாட்டத்தில் கலக்கியெடுப்பார்.
    ஆர்ப்பாட்டமில்லாத ஆட்டம் தான்.ஆனாலும் அது விளைவித்த பாதிப்பு? அதை நாடே அறியும்.

    ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
    காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

    தெருக்கூத்தாட்டத்தை ஏளனமாக பார்க்கும் எண்ணத்தை கொண்டவர்கள் யாராவது இந்த ஆட்டத்தை பார்த்தால் அவர்கள் தங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள்.அந்த தெருக்கூத்தைஅவர் பார்த்ததால்தானே நமக்கு இந்த சிவாஜிகணேசன் கிடைத்தார்.அதற்கு பிரதியுபகாரமாக இந்த காட்சியின் மூலம்அதற்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்து விட்டாரல்லவா!

    உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
    உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

    முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
    முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

    கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே -

    தாண்டவக்கோனேவை இழுக்கும்போது பெரியவரின் மேல் சாய்ந்திருப்பார்.அப்போது பின் முதுகு குலுக்கலில் எதிரொலிப்பார் தாண்டவக்கோனே என்பதில் 'னேனேனேனேனே 'என்பதை. உடல்மொழி நடிப்பை உலகிற்கு காட்டிய அவதார புருஷனல்லவோ அவர்.
    மூக்கைச்சிந்தி பெரியவரின் மேல் துடைத்துவிட்டு ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்.யப்பா.என்ன பார்வை அது?என்ன ஒரு தீட்சண்யமான பார்வை.மின்னல் மின்னி விட்டுப் போவது போலே.

    பிணத்தைக்
    கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
    பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

    பாடலின் முடிவில் நடக்கும் நடை,தொப்பி வீசும் ஸ்டைல்,அந்த கையசைப்பு,நடந்து செல்லும் கம்பீரம்
    எல்லாம்,
    மற்ற இந்திய சினிமாக்களையெல்லாம் புறந்தள்ளி வரலாறானது தனிக்கதை.


  2. Thanks Georgeqlj thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #872
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    Thank you so much for your encouragement Sir. i will definitely share as much I can without boring1
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Pon Ravichandran
    It is happy and great to note that NT has proved he is beyond generations with you as a typical example.
    Eager to know your experiences as a Sivaji fan.

  5. #873
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    UNCOMMON GOD&a common man

    What was the environment?
    My parents were elementary school teachers.Naturally as a working women,in bringing me up,my mother was depended fully on her sisters and mother who were living in the next street.Infact I was fully brought up by mother"s sisters who were in their teens.They were already fans of Nadigar Thilagam and almost my parents,her parents,brothers everyone was NT fans.Only difference was how they exposed it.I have been taken to the theatres by all to watch NT movies and made me to listen only NT songs in radio?!
    All this environment were the reason for me to become a disciple of NT.
    To the best of my knowledge"IRU DHRUVAM "was the first movie which I remember.Upto my first 10years,Ihad been to the films with someone in the family.Generally in the outskirts of the city,new movies released in city will come after 6months or 1year or in any big festival."Without anybody I saw needhi in tharaiticket,the opening song Naalai mudhal is evergreen on my mind.It was a matinee in touring theatre and cursed everytime someone came inside or came out.Because they lift the cloth tied to cover the sunlight and everytime they lifted ,the screen will be dull.But exactly when ,what made to become a disciple?
    (to be continued)

  6. #874
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Gopal Sir,Kappalotiya thamilan" article is excellent as usual.Many times I think it is very difficult to be a NT fan and it needs blessings.Why I am saying this is CINEMA is always a source of entertainment only as many people think.But we alone,the NT fans go beyond that or NT makes us to go beyond that and we forget the entertainment value and emotions capture us.I once again feel blessed to be a NT fan.

  7. #875
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    Screen Shot 2015-11-17 at 2.46.06 pm.jpg

    காதல் மன்னன் ஜெமினி கணேசன் உடன் நடிகர் திலகம் சிவாஜி

    ஜெமினி யின் பேரன் பேட்டியில் கிடைத்தது
    Vazga Sivaji pugaz

  8. Likes Russellmai liked this post
  9. #876
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    நடிகர் திலகம் காலமான போது "இருந்த ஒரு நடிகனையும் கொன்னுடீங்களேடா" என்று ஒரு ரசிக வெறியன் சொன்னதை வடிவேலு அவர் பாணி சொல்லும் யூ டீயூப்...

    Last edited by sss; 19th November 2015 at 04:16 PM.

  10. #877
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    என்றைக்கும் தன் நெஞ்சில் நடிகர் திலகத்திற்குத் தனியிடம் கொடுத்து, அவருடைய மேன்மையைப் புரிந்து வைத்திருந்த அன்னை இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு நமது இதயபூர்வமான அஞ்சலியுடன் தொடர்ந்து அவர் நினைவைப் போற்றுவோம்..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Georgeqlj, Russellmai, vasudevan31355 liked this post
  12. #878
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    உலகில் கண்களை உதாரணம் காட்டுவதற்கென்றே பிரம்மன் படைத்த அவதார புருஷன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. #879
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தரிசனம்-1. இரு மலர்கள்.
    ----------------------------
    தொடர்கிறது...
    ---------------

    கவலை அகன்று சந்தோஷம்
    புகுந்து விட்ட இதயத்திற்கு
    சொந்தக்காரன் ஆனான் சுந்தர்.

    அந்த மகிழ்வோடு, தன் கையில்
    இருக்கும் மலர்ப் பந்தை
    சாந்தியிடம் கொடுக்கிறான்.

    உமாவுக்காக வாங்கிய பூ
    தனக்குச் சேர்வதா என சாந்தி
    தயங்குகிறாள்.

    மங்கலப் பொருட்களை
    பெண்கள் மறுக்கக் கூடாதென
    அறிவுறுத்தி சுந்தர், சாந்தியிடம்
    பூவைக் கொடுக்கிறான்.

    அத்தான் கையால் பூ வாங்கும்
    சாந்தி, தானும் ஒரு பூவாய்
    மலர்ந்து சிரிக்கிறாள்.

    அந்தப் பூப்பந்தும், விளையாடும் ரப்பர் பந்து
    போல்...

    கைக்குக் கை மாறுகிறது.
    ----------------

    உமாவின் வீடு அவளை உவகையுடன் வரவேற்கிறது.
    தந்தையும்,தாயுமாகவே மாறி
    விட்ட அவளது அண்ணனும்.
    அண்ணியும் பொழியும் அன்பு
    மழையில் கூச்சக் குடையெல்லாம் பிடிக்காமல்
    ஆனந்தமாய் நனைகிறாள்..
    உமா.

    வேலைப் பரபரப்பிலிருக்கும்
    அண்ணனிடம், தன் காதலை
    வெளிப்படையாகப் போட்டு
    உடைக்காவிட்டாலும், ஏதோ
    சுற்றி வளைத்துச் சொல்லி
    இருக்கிறாள்.

    அவசர அலுவல்களை எல்லாம்
    முடித்து விட்டு இரவு வீடு
    திரும்பினதும் அவளிடம்
    விரிவாகப் பேசுவதாகக் கூறி
    விடைபெறுகிறார் அண்ணன்.
    உடன் கிளம்புகிறாள் அண்ணியும்.

    இராணுவ கம்பீரத்துடன் கையசைக்கும் அண்ணனுக்கு
    பதிலுக்குக் கையசைத்து விடை
    கொடுக்கும் உமா, அந்த நிமிஷத்திலிருந்து இரவு
    வரைக்கும் தன்னை விட்டுப்
    பிரிந்து செல்லும் அண்ணனுக்கும், அண்ணிக்கும்
    கொடுக்கும் சந்தோஷமான,
    சம்பிரதாயமான விடையளிப்பு
    என்றுதான் அதை நினைத்திருப்பாள்.

    விதி, அவளைப் போல் நல்லவிதமாய் நினைக்கவில்லை.

    அது, கொஞ்ச நேரப் பிரிவில்லை.. நிரந்தரமானது
    என்றும், அவள் கையசைப்பு,
    அந்த அன்புயிர்கள் இரண்டுக்குமான கடைசி
    வழியனுப்புதலுக்குரிய ஒத்திகை என்றும் அது
    எக்காளமாய்ச் சிரித்தது.

    அண்ணனின் மூன்று குழந்தைகளும் அவளன்பில்
    மகிழ்ந்து அவளைச் சூழ்ந்திருக்க, அண்ணனிடம்
    அவர்களது காதல் குறித்து பேசத் துவங்கி விட்டதையும்,
    இரவு அண்ணன் வந்ததும்
    விரிவாகப் பேசி சம்மதம்
    பெற்று விடப் போகும் தனது
    நம்பிக்கையையும், உமா தன்
    சந்தோஷ மையில் தோய்த்து
    சுந்தருக்கு கடிதமாக வரைகிறாள்.

    அவளது காதலைச் சிதைப்பதென்றே கங்கணம்
    கட்டிக் கொண்ட காலம், தனது
    அழித்தல் வேலை ஆரம்பமாகி
    விட்டதற்கான அறிகுறிகளாக..

    அண்ணனும், அண்ணியும்
    சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தை அவர்களின்
    குழந்தையைக் கொண்டே
    கோரமாய் உடைக்க வைக்கிறது.

    தொடரப் போகும் மரண ஓலத்தின் எதிரொலி போல்
    தொலைபேசி மணியை
    சப்திக்க வைக்கிறது.

    தொலைபேசி வழியே சொல்லப்படவிருக்கிற செய்தி
    அதிநிச்சயமாய் நல்லசெய்தி
    இல்லை என்பதைத் தெரியப்படுத்த, அண்ணனின்
    சின்னஞ்சிறிய பெண்குழந்தையை வீறிட்டு
    அழச் செய்கிறது.

    நல்லவற்றைக் காலம் தாழ்த்திக் கூடச் செய்யாத
    காலத்திற்கு, கெடுதலை உடனே செய்து விடுகிற தீர்க்கம் இருக்கிறது.

    உமாவின் அண்ணனுக்கும்,
    அண்ணிக்கும் ஏற்பட்ட விபத்தில், அண்ணி சம்பவ
    இடத்திலேயே இறந்து விடுகிறாள். அண்ணன் உயிரைக் கையில் பிடித்துக்
    கொண்டு அவள் முகம் காணத்
    துடிக்கும் கடைசித் தருணத்தில்
    இருக்கிறாள்.

    உமா அவரிடம் சொல்ல யத்தனித்த அந்த விஷயம்
    என்னவென்று கேட்க, உமா
    எதுவுமில்லை என கண்ணீரோடு பொய் சொல்கிறாள்.

    அவளுக்காகவே உலகில் வாழ்ந்த அந்த உயிர், அவளுக்கு
    நம்பிக்கை கொடுத்து, அன்பான
    குழந்தைகளுக்கு முத்தங்கள்
    கொடுத்து...

    அத்தனை நாள் தங்கியிருந்த
    உடல் நீங்கிப் பறக்கிறது.

    உமா கனவு கண்ட இன்பமான
    காதல் வாழ்க்கை, எங்கோ
    எட்டாத உயரத்தில் நின்று
    கொண்டு, அவளைப் பார்த்து
    கேலியாய்ச் சிரிக்கிறது.

    உமா சிந்திக்கிறாள்.

    தனக்குள் மலர்ந்து சிரிக்கும்
    காதலைக் காட்டிலும், தன்னை
    நம்பி ஒப்படைக்கப்பட்ட
    மூன்று அரும்புகளின் எதிர்காலத்திற்காகத் தன்
    வாழ்வையே தருவதுதான் உயர்வென்று கருதுகிறாள்.

    சற்று முன் சுந்தருக்குத் தன்
    காதலையும், நம்பிக்கையையும்
    தெரிவித்தெழுதிய கடிதத்தில்,
    அவளது கண்ணீர் எரிபொருளாய்ச் சிந்துகிறது.

    குளிர்காய மூட்டப்பட்ட அடுப்பில் எரிபொருள் தடவிய
    கடிதத்தை வருத்தமாக
    வீசுகிறாள்..உமா.

    "நீயாப் போட்டு உடைச்சாலே
    ஒழிய, என் இதயம்ங்கிற
    கண்ணாடியில உன் உருவம்தான் தெரியும்."

    காதலன் கூறிய வார்த்தைகள்
    அவளது செய்கையைப்
    பழிக்கிறது.

    உமா அடுப்பில் வீசிய
    சுந்தரின் கடிதத்தை, விரைந்து
    உள்வாங்கிக் கொண்டு
    எரித்தழித்தது... நெருப்பு.

    நெருப்பு-

    இதயமற்றது.

    இங்கிதமில்லாதது.

    எதை அழிக்கிறோம்
    என்கிற விபரமறியாதது.

    கோடி இதயங்களில்
    காலம் எழுதிய
    நடிகர் திலகமெனும்
    கவிதையையே
    தன் செந்நாவால்
    தீண்டிப் பார்த்த
    திமிர் பிடித்த நெருப்புக்கு...
    சுந்தர் எழுதிய
    கடிதக் காகிதம்
    எம்மாத்திரம்?


    (...தொடரும்...)
    Last edited by Aathavan Ravi; 19th November 2015 at 08:09 PM.

  14. Thanks anasiuvawoeh thanked for this post
  15. #880
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Doha bank CEO Dr. Seetharaman Interview in Sun TV




  16. Likes sivaa, Georgeqlj, KCSHEKAR, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •