Page 310 of 401 FirstFirst ... 210260300308309310311312320360 ... LastLast
Results 3,091 to 3,100 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #3091
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தங்கப்பதக்கம்.
    இந்தப்படம் திரையிடும்போதெல்லாம் மனம் சந்தோசத்தில்அலை மோதும். பட போஸ்டர்கள் ஒட்டப்பட்ட செய்தி வந்ததும் சைக்கிளை மிதித்துக் கொண்டு ஊர் முழுவதும் அலைந்து எல்லா போஸ்டர்களையும் பார்த்த பின்புதான் மனம் முழு திருப்தி அடையும்.sp சௌத்ரியின் கெட்டப் நம்மை அன்றெல்லாம் ஆகாயத்தில் மிதக்கச் செய்யும்.படம் ஓடி வேறுபடம் திரையிடும்வரை அந்த நினைவுகளே சுழன்று கொண்டு இருக்கும்.
    போஸ்டர் டிசைன்களில் நடிகர்திலகத்தின் அசத்தலான போஸ்கள் ஊரையே அட்டகாசப்படுத்தும்.
    குறிப்பாக சில போஸ்கள்.
    1.புல் சூட் ஓவர்கோட்டில் குடை பிடித்துக்கொண்டு நிற்கும் ஸ்டைல்.
    2.ஹெல்மெட்டை இடுப்பில் வைத்துக் கொண்டு போலீஸ் யூனிபார்மில் கம்பீரமாக நிற்கும் போஸ்.
    3.ஸ்ரீகாந்தை அரெஸ்ட் செய்யும் போது பேசும் வசன காட்சி.
    4.போலீஸ் யூனிபார்மில் கையை பின்கட்டி நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் போஸ்.
    5.அந்தக்காலங்களில் நம்மை மிரள வைத்த ஸ்டைலான துப்பாக்கியில் புல்லட் சொருகும் ஸ்டைல்.இந்த போஸ்டர் rare.சிவாஜி ரசிகர்களின் ரத்தத்தை சூடேற்றும் ஸ்டைல் இது.
    6.மஞ்சள் கலர் காஸ்டயூமில் ட்விங்கிள் ட்விங்கிள்லிட்டில் ஸ்டார் பாடல் காட்சி.என்ன அழகான முக வெட்டு.
    7.ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு பேப்பர் படித்துக் கொண்டு இருக்கும் கம்பீரமான ஸ்டைல்.
    8.சுமைதாங்கி பாடலில் கே ஆர் விஜயாவை சக்கரவண்டியில் தள்ளி வரும் காட்சி.
    9.சோதனை மேலே சோதனை யில் கையை முறுக்கும் காட்சி.
    10."jegan i warn you"
    இந்த வசனம் பேசும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளிப்படுத்தும் கம்பீரம் இருக்கிறதே. அதை என்னவென்று சொல்வது.
    தமிழகத்தையே மிரட்டிய ஸ்டைல் இது.
    சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம்தான்.நம் ரசிப்பும் குறையப் போவதில்லை. வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.
    சின்ன வயசு சௌத்ரீ யாக வரும்
    நடிகர்திலகத்தின் நடிப்பில் தான் எத்தனை துடிப்பு.அரைக்கால் டிராயர் சர்ட்டில் விரைப்பான தோற்றத்தில் பிரமாதமாயிருக்குமே.அதே தோற்றத்தில் முழுப்படம் ஒன்று உருவாக்க ஏன் இயக்குனர்களுக்கு தோன்றவில்லை என்பது பெரும்பான்மை ரசிகர்களின் ஆதங்கங்களில் ஒன்று.அந்த தோற்றங்களில் பட போஸ்டர் களும் புகைப்படங்களும் கூட குறைவாகத்தான் வெளியாகின.

    மேற்கூறிய அனுபவங்களை பெரும்பான்மையான ரசிகர்கள் அனுபவித்திருப்பர்.அந்தக்காலங்கள்தான் தமிழ்சினிமாவின் பொற்காலங்கள்.பட போஸ்டர்களை பார்க்க வைத்தே ரசிப்பில் தன்னிறைவை தந்த ஒரே நடிகன்எங்கள்
    " ந டி க ர் தி ல க ம்"

    காவல் துறைக்கு பெருமை சேர்த்த
    அந்த மாமனிதனின்கம்பீர காவியமான
    " தங்கப்பதக்கம் "
    12.02.2016 முதல் கோவை ராயலில் திரையிடப்பட்டுள்ளது.

    நன்றி
    செந்தில்வேல்
    கோவை










  2. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3092
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Jordan
    Posts
    0
    Post Thanks / Like
    JUNE FIRST 1974 Kanchipurathil RAJA THEATRE RELEASE. MIGA MIGA ARUMAIANA PADAM. INRUM IDARKU EEDANA PADAM NAAN PARKAVILLAI

  5. Likes Harrietlgy liked this post
  6. #3093
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மலைகோட்டை. மன்னவன் கோட்டை என்பதை உணர்த்த 20-02-2016 வருகிறார்

    "ஸ்டைல் போலீஸ்" ராஜா கெய்டி திரை அரங்கில்

    தினசரி 4 காட்சிகள்


    Last edited by RavikiranSurya; 13th February 2016 at 07:24 PM.

  7. Thanks Russellmai thanked for this post
  8. #3094
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காவல் துறையா V s காதல் சிறையா : நடிகர்திலகத்தின் காவல் / காதல் குற்றப் பத்திரிக்கை பக்கங்கள்!



    காவல் துறை அதிகாரியாக கம்பீரம் காட்டி குற்றம் செய்வோரை கைது செய்து சிறையில் அடைக்கும் நடிகர்திலகமும் காதல் சிறையில் கன்னியர் மனங்களைத் திருடிய குற்றத்திற்காக அவர்களின் கண்களால் கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை பெற்றவரே!


    Valentine's Day commemorations with NT!





    Last edited by sivajisenthil; 13th February 2016 at 07:40 PM.

  9. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  10. #3095
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மலைகோட்டையில் நடிகர் திலகம் ரசிகர்கள் குழுமம் சார்பில் காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்காக நமது NTFANS அமைப்பில் திரையிடப்படுவதை போல திருச்சியிலும் ரசிகர்கள் சார்பில் புதிய பறவை திரைப்படம் திருச்சி திருமண மகாலில் திரயிடபடுகிறது



    SIDE PROFILING முறையில் எடுக்கப்பட்ட காட்சியில் செதுக்கிய சிற்ப்பத்திர்க்கு அமைந்துள்ள மூக்குபோல இப்படி ஒரு SHARP CARVED NOSE அமைந்த ஒரே நடிகர் நம்முடைய நடிகர் திலகமே !
    Last edited by RavikiranSurya; 13th February 2016 at 08:34 PM.

  11. Thanks Subramaniam Ramajayam, Russellmai thanked for this post
  12. #3096
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Sivaji senthil sir ....

    Though belated ...please accept my congratulations for the landmark achievement !

    Way to go !

    Rks

  13. Thanks eehaiupehazij thanked for this post
  14. #3097
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Dinamani.

    1955. மார்ச் 12ல் வெளியான பத்மினி பிக்சர்ஸ் ‘முதல் தேதி’, எடுத்த எடுப்பில் அதற்குக் கட்டியம் கூறியது. முழு நீள சோகச் சித்திரம்! நடிகர் திலகத்துடன் அஞ்சலி முதன் முதலாக இணைந்து நடித்தார்.

    ‘எந்தவொரு கலைஞருக்கும் நடிகர் திலகத்துடன் இணைந்த பின் நடிப்பில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும்! ’ என்பது வரலாறு. அந்தச் சரித்திரத்தில் அஞ்சலிக்கும் முதல் தேதி மூலம் இடம் கிடைத்தது.

  15. #3098
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, KCSHEKAR, Russellmai liked this post
  17. #3099
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    முகநூல் ஒன்றில் இருந்து

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  18. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
  19. #3100
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கப்பல் போய்க்
    கொண்டிருக்கிறது.

    காலை வேளை.

    உணவுப் பொழுது.

    கோபால், உணவருந்த
    உட்கார்ந்திருக்கிறார்.

    பெரியவர் ராமதுரையும்,அவர்
    மகள் லதாவும் அவருடன்
    இணைந்து கொள்கிறார்கள்.

    நட்பு இறுகிய சந்தோஷத்தோடு
    களைகட்டுகிறது சாப்பாட்டு
    மேசை.

    லதாவின் ரசனையை
    வியக்கிறார் கோபால்.

    அதை ஆமோதிப்பதோடு
    நிறுத்தி விடாமல், அவள்
    ரசனை மிகுந்தவள்தான்
    என்பதை பெருமிதமாய்
    விவரிக்கிறார்..ராமதுரை.

    கோபால், ரசனை குறித்த தனது
    கருத்தை சொல்லத்
    துவங்குகிறார்.

    "வாழ்க்கைல ரசனைங்கிறது
    ரொம்ப முக்கியம். ரசிக்கத்
    தெரிஞ்சவங்களாலதான்
    வாழ்க்கையோட அழகை
    பூரணமா அனுபவிக்க
    முடியும்.

    "நல்..ல்ல்லா இருக்கு"ன்னு
    சொல்றோம் பாருங்க.. அந்த
    வார்த்தையே ரசனைல இருந்து
    உற்பத்தி ஆனதுதான்"

    கோபாலாக மாறி எங்களுக்குள்
    கோயில் கொண்ட கலைக்
    கடவுளே..!

    நடிகர் திலகமே!

    கண்களில் கனிவு நிரப்பிக்
    கொண்டு, வார்த்தைகளில்
    மென்மை நிரப்பிக் கொண்டு,
    உயிர்ப்போடு நீங்கள் சொல்கிற
    "நல்..ல்ல்லா இருக்கு"
    வார்த்தையை உங்களைப் போல் "நல்..ல்ல்லா" யாரும்
    உச்சரிக்கப் போவதில்லை.

    ஆகவே...

    அன்பு தெய்வமே..!

    மீண்டும் நீங்கள் பிறந்து வந்தால் "நல்..ல்ல்லா"
    இருக்கும்.
    -------------------------------

    அன்பான நினைவூட்டல்...


    "சிவாஜி ஃபிலிம் கிளப்" அமைப்பின் சார்பாக இரண்டாம்
    திரைப்படமாக, வருகிற
    14.02.2016 -ஞாயிறு அன்று
    மாலை 5.00 மணிக்கு,
    திருச்சி-சங்கரன்பிள்ளை
    ரோடு- சுருதி ஹாலில்
    நடிகர் திலகத்தின் திரைக்காவியமான "புதிய பறவை" திரையிடப்படுகிறது.

    98424 66068- என்ற எண்ணில்
    முயற்சிகளோடு காத்திருக்கும்
    அகில இந்திய சிவாஜி மன்ற
    சிறப்பு அழைப்பாளர் திருச்சி
    திரு.அண்ணாதுரை அவர்களின்
    நடிகர் திலகம் புகழ் காக்கும்
    பணிகள், நம் வாழ்த்துகளால்
    சிறக்கட்டும்.

    14.02.16 அன்று குட்டித்
    திருச்சியே சுருதி ஹாலில்
    இருக்கட்டும்.

  20. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai, KCSHEKAR liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •