Page 61 of 401 FirstFirst ... 1151596061626371111161 ... LastLast
Results 601 to 610 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #601
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes KCSHEKAR, sivaa, Russellmai, Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #602
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #603
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு,

    மணமகன் தேவை பாடல் காட்சி பற்றிய உங்கள் பதிவை மீண்டுமொரு முறை படித்தேன். அந்த காட்சியமைப்பை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். இந்த பாடலை ஒரு முறை ராகவேந்தர் சார்தான் அவர் வீட்டில் எனக்கு போட்டுக் காட்டினார் என்று நினைவு. அன்று பார்த்தபோது தோன்றிய உணர்வுகளை இப்போது உங்கள் எழுத்தில் பார்க்க முடிந்தது.

    ராகவேந்தர் சார்,

    Surprise தீபாவளி தொடருக்கு வாழ்த்துகள். பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். ஒரே ஒரு request. 1970-லிருந்து தொடங்காமல் 1966 -லிருந்து ஆரம்பித்தால் இன்னும் பல சுவையான விஷயங்கள் பலருக்கும் தெரியாத விஷயங்களை உங்களால சொல்ல முடியும் என நினைக்கிறேன்.

    அன்புடன்

  6. #604
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    முரளி சார் சொன்னது போல் மணமகன் தேவை படத்தைப் பற்றிய தங்களின் பதிவு, குறிப்பாக வெண்ணிலா ஜோதியை வீசுதே பாடலைப் பற்றி நாம் அடிக்கடி சிலாகிப்பது போல, தங்கள் எழுத்தில் அற்புதமாக கொண்டு வந்து விட்டீர்கள். உளமார்ந்த பாராட்டுக்கள்.

    இதில் கே.ராணி பாடிய பாடல் ஒன்றில் தலைவர் கூலிங் கிளாஸுடன் அட்டகாசமான நடனமாடும் காட்சி மறக்க முடியாது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தப் பாடலைப் பற்றியும் தாங்கள் எழுத வேண்டும் என விரும்புகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #605
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அடியேனுடைய தீபாவளி சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் குறுந்தொடருக்கு விருப்பும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்த அத்தனை உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #606
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தீபாவளி சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் - தொடர்ச்சி

    முரளி சார்

    1966ல் தான் நான் என் முதல் பதிவில் தொடங்கியுள்ளேன். என்றாலும் உங்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் சற்றே விரிவாக...



    அப்போது பள்ளிப் பருவமாகையால் அவ்வளவாக தனியாக வெளியே அனுப்ப மாட்டார்கள். அந்தக் காலத்துக் கெடுபிடிகள் எல்லோர் வீட்டிலும் அதிகம். நான் மட்டும் தப்ப முடியுமா என்ன. என்றாலும் நண்பர்களுடன் சென்றால் ஆட்சேபணை இல்லை. அந்த மாதிரி போன நாட்கள் சந்தித்த அனுபவங்கள் சற்றுக் குறைவு தான். இருந்தாலும் நினைவில் உள்ள வரை, சந்தித்த வரையில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    செல்வம் படம் நன்றாக நினைவிருக்கிறது. காலையில் தீபாவளி அன்று தினத்தந்தி பேப்பர் வாங்கி விளம்பரத்தைக் கத்தரித்து வைத்துக் கொண்டது ஞாபகம் உள்ளது. முழுப்பக்க விளம்பரம். வி.கே.ஆர். பிக்சர்ஸ் அளிக்கும் என்ற தயாரிப்பாளர் நிறுவனம் பெயரும் மனதில் ஊறிவிடும். நண்பனிடம் நச்சரித்து மாலையில் சித்ரா தியேட்டருக்குச் சென்றோம். கெயிட்டி தியேட்டரில் இறங்கி நடப்போம். சித்ரா தியேட்டர் அருகிலேயே ஸ்டாப்பிங் உண்டு என்றாலும் கட்டணம் அடுத்த ஸ்டேஜுக்கு ஏற்ப வாங்கி விடுவார்கள். ஸ்டாப்பிங் இறங்கி பாலத்தில் நுழையும் போதே மக்கள் வெள்ளம் மொய்த்து விடும். அப்போது பாலம் சற்றே குறுகியிருக்கும். போக்குவரத்து நெரிசல் இருக்காது என்றாலும் தியேட்டர் கூட்டம் அதிகம் வரும் போது வண்டிகள் சாலையில் ஊர்ந்து தான் செல்லும். கூவம் கரையோரம் சாலையில் பிளாட்பாரத்தை யொட்டி நான்கு அல்லது ஐந்து அடி உயரத்தில் மதில் சுவர் இருக்கும். அதில் ரசிகர்கள் அமர்ந்திருப்பார்கள். என்னுடைய ஞாபகம் சரியாக இருக்குமானால் அந்த கூலிங் கிளாஸ் போஸ் தான் கட்அவுட்டாக வைத்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் சித்ரா தியேட்டரில் 51 பைசா, 84 பைசா, ரூ 1.25 பைசா, ரூ 1.66 பைசா மற்றும் ரூ 2.50 பைசா. பெரும்பாலான தியேட்டர்களில் கட்டண விகிதம் 84 பைசா, 1.25 பைசா, 1.66 பைசா மற்றும் 2.50 பைசாவாகத் தான் இருக்கும். அதற்குக் கீழுள்ள வகுப்புக் கட்டணங்கள் மட்டும் சற்றே மாறு படும் ஒரு சில தியேட்டர்களில் 46 பைசா - உதாரணம் கெயிட்டி, பிளாசா, ஒரு சில தியேட்டர்களில் 51 பைசா, உதாரணம் சித்ரா, ஸ்டார், பாரகனில் 61 பைசா என வேறுபடும். குளோப், காசினோ, ஓடியன். ஆனந்த், மிட்லண்ட், வெலிங்டனில் குறைந்த பட்சம் 84 பைசா.என டிக்கெட் கட்டணமிருக்கும்.

    அப்படி சித்ரா தியேட்டரைப் பொறுத்த மட்டில் 51 பைசா டிக்கெட்டுக்கான கவுண்டர் பின்புறம் இருக்கும் கேட் அருகில் இருக்கும். அதற்கான வாயிலும் பின்புறம் தான் இருக்கும். மற்ற டிக்கெட் கட்டணத்திற்கெல்லாம் தியேட்டர் பக்கத்தில் கார் பார்க் அருகில் இருக்கும்.

    சித்ரா தியேட்டரில் மெயின் கேட்டும் தியேட்டரின் நுழைவாயிலும் அருகருகே இருக்குமாகையால் அங்கே நெரிசல் மிகவும் இருக்கும். மேனேஜர் அறையும் பரொஜக்டர் அறை அருகில் இருக்கும்.

    2.50 டிக்கெட் மாடியில் பால்கனி வகுப்பாக இருக்கும். மாலைக் காட்சிகளில் நல்ல காற்றோட்டத்துடன் படம் பார்ப்பது சுகானுபவமாக இருக்கும்.

    அப்படி ஒரு சூழலில் படம் பார்க்கும் ஆவலோடு தியேட்டருக்குச் சென்றோம். டிக்கெட் ஏதுமில்லை. கிடைத்தால் அதிர்ஷ்டம் என்ற வகையில் தான் சென்றோம். பள்ளியில் காலை ஷிப்ட். மதியம் 12.30 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடுவோம். சாப்பிட்டு விட்டு ஹோம் ஒர்க் முடித்து விட்டு கடற்கரையில் விளையாடப் போய் விட்டு மாலை வீட்டுக்கு வரும் பழக்கமுண்டு. ஆனால் அன்றைக்கு தீபாவளி, படம் வேறு ரிலீஸ். அதனால் கடற்கரை பள்ளி சமாச்சாரங்கள் இல்லை. டிக்கெட் கிடைத்தால் போகிறோம் என வீட்டில் சொல்லித் தான் கிளம்பியிருந்தோம். அதனால் சற்று வீட்டைப் பற்றிய கவலையை விட்டு டிக்கெட் கவனத்தில் லயித்தோம்.

    பாலத்தில் தியேட்டரை நோக்கிச் செல்லும் போதே ஒரு பெண்மணி மறித்தாள், செல்வம் டிக்கெட் 84 பைசா 5 ரூபாய் என எங்களிடம் டிக்கெட் வேண்டுமா என்று கேட்டார். ஆனால் எங்களிடம் அவ்வளவு பணம் கிடையாதே. 84 பைசா டிக்கெட்டை ஒரு ரூபாய் கொடுத்தே வாங்க முடியாத நிலையில் அல்லவா அப்போதெல்லாம் இருந்தோம்.

    அப்போதே தீர்மானித்து விட்டோம், இன்றைக்கு நம்மால் படம் பார்க்க முடியாது என்று. அந்த பைசாவை செலவு செய்யாமல் ஓரிரு நாட்களுக்கு இன்னும் சேரும் பைசாவை வைத்து ரூ 2.50 ரிசர்வ் செய்து கொள்ளலாம் அல்லது 84 பைசா கிடைத்தால் பார்க்கலாம் என்று தீர்மானித்து விட்டோம்.

    அதற்கேற்ப சில நாட்களுக்குப் பிறகு ரிசர்வ் செய்யப் போனோம். அப்போதெல்லாம் டிக்கெட் ரிசர்வ் செய்து பார்த்தால் பெரிய தோரணை வந்து விடும். காலரைத் தூக்கி விட்டு நாங்கள் ரிசர்வேஷன் டிக்கெட்டாக்கும் என்று சொல்வது ஒரு பெரிய கர்வமாக இருந்தது. எனவே மிதப்பு கனவுடன் கவுண்டருக்குப் போனால் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பகல் மற்றும் மாலைக் காட்சி நிறைந்து விட்டது. இரவுக் காட்சிக்கு மட்டும் ரிசர்வேஷன் இருந்தது. எங்களால் இரவுக்காட்சிக்கெல்லாம் போக முடியாது. யோசனை பண்ணும் போதே ரிசர்வேஷன் நேரம் முடிந்து விட்டது. 12 மணியாகி விட்டது. அப்போது ஒரு பெண்மணி சொன்னார். 84 பைசா கவுண்டர் இன்னும் கொஞ்ச நேரத்தில் கியூவை அனுமதித்து விடுவார்கள். 84 முடிந்த பின் 51 பைசா கொடுப்பார்கள் எனவே இப்போதே 84 பைசாவுக்கு நின்று விடுங்கள் என்றார். அதைக் கேட்டு ஜம்பமாக கியூவில் போய் நின்றோம். 10வது அல்லது 15வது ஆளாக நின்றோம். நேரம் ஆக ஆக க்யூ நெருக்கமாகிக் கொண்டே இருந்தது. 10, 15 பேருக்குள் இருந்த நாங்கள் நெருக்கலில் சிக்கி 50 பேருக்குப் பின்னால் போய் விட்டோம். டிக்கெட்டும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் ஒரு வழியாக முட்டி மோதி நூறாவது ஆளாக இருக்கும் டிக்கெட் வாங்கி விட்டோம். கொஞ்ச பேருக்குப் பிறகு டிக்கெட் ஃபுல்.

    ஆனால் உடம்போ நசுங்கி விட்டது. வேர்த்து விறுவிறுத்து தொப்பலாக நனைந்து உள்ளே போய் அமர்ந்து சட்டையைப் பார்த்தால் தண்ணீரில் முக்கி எடுத்தது போல் நனைந்து விட்டது. மற்றவர்களோ இன்னும் பாவம். பலர் சட்டை நனைந்தது மட்டுமின்றி சிராய்ப்பு காயங்களுடன் மல்லாடிக் கொண்டிருந்தனர்.

    உள்ளே சீட் போட்டு விட்டு வெளியே வந்து பார்த்தால் ... ஆஹா... திருவிழா கூட்டம் போல் தியேட்டர் ஜேஜே என ரொம்பி வழிய மனசெல்லாம் குதூகலித்தது.

    ஹவுஸ் புல் போர்டு மாட்டி விட்டார்கள்.

    மெயின் கேட்டை மூடி விட்டார்கள்.

    மணி அடித்து விட்டார்கள்.

    உள்ளே சென்று அமர்ந்தோம்.. விளம்பரங்கள் ஓடி முடிந்தன. நியூஸ் ரீலும் ஓடி முடிந்தது. அதில் வரும் கிரிக்கெட் நியூஸில் மனம் லயித்து சிறிது நேரம் அந்த டெஸ்ட் மாட்சைப் பற்றி சுற்றி வந்தது.

    எல்லாம் முடிந்து செல்வம் சென்ஸார் சர்டிபிகேட் வந்தது தான் தாமதம்..

    காது ஜவ்வே கிழிந்து விடும் அளவிற்கு உள்ளே ஆரவாரம்.

    சிறிது நேரத்தில் தலைவரின் தரிசனம்...

    அங்கே தொடங்கிய அளப்பரை படம் முடியும் வரை ஓயவில்லை. இதுவும் ஞாபகம் இருக்கிறது. நான் சின்னப் பையனாக இருந்தாலும் மனதில் அன்றே பதிந்து விட்டது. ஒன்றா இரண்ட பாட்டில் கையைக் கடித்தவாறே ஒரு பார்வை பார்ப்பார், அப்போது, ஏர்போர்ட்டில் கூலிங் கிளாஸுடன் இறங்கி நடக்கும் போது, என பல காட்சிகளில்... அப்போது இடி விழுந்தது போல் ஆரவாரம்.. இத்தனைக்கு கைதட்டும் ஓசைதான். குரல் கூட தரமாட்டார்கள். விசில்.. ம்ஹூம்.. சுத்தம் யாரும் அடிக்க மாட்டார்கள். யாராவது விசில் தப்பித்தவறி அடித்தால் போதும் மற்ற ரசிகர்கள் அவரைக் கூப்பிட்டுத் திட்டி விடுவார்கள், சிவாஜி படத்திற்கு வந்து விசிலடிக்காதே... என்று.. அவர்கள் அந்த மாதிரி கண்டித்தது, எங்களைப் போன்ற அடுத்த தலைமுறையில் உருவான புதிய தலைமுறை ரசிகர்களுக்கு ஒரு ஆசிரியர் பாடம் எடுப்பது போல இருந்தது. அதற்கேற்ப உள்ள கைதட்டலே இடி இடிக்கும் ஓசையை மிஞ்சி விடும்.

    சொர்க்கம் என்றால் அதுவல்லவோ சொர்க்கம்...

    இப்படி அல்லவோ வாழ்க்கை அமைய வேண்டும்..

    அந்த மதிமுகம் புன்னகை தவழ பவனி வரும் போது உலகில் நமக்கு வேறேது வேண்டும்..

    படம் முடிந்து படத்தில் தலைவரின் நடிப்பைப் பற்றி அசை போட்ட படியே வந்தோம்..

    சில நாட்கள் கழித்துப் பார்த்தால் படத்தின் ரிப்போர்ட் சரியில்லை .. சீக்கிரம் எடுத்து விடப் போகிறார்கள் என்று நண்பன் சொன்னான்..

    எனக்கோ ஒன்றும் புரியவில்லை. நன்றாகத்தானே இருந்தது ... ஏன் மக்களிடம் வரவேற்பை பெற வேண்டிய அளவிற்குப் பெறவில்லை..

    மண்டை குழம்பியது...

    அன்று மட்டுமா..

    இன்றும் தானே ..

    ... தொடரும்....
    Last edited by RAGHAVENDRA; 11th November 2015 at 11:30 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #607
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    "இதுதான்..!
    இதுவே தான்..!
    என் மனம் விரும்புவது
    இதுவேதான்..!"

    -வெகுகாலமாக எதற்காகக்
    காத்திருந்தோமோ.. அது
    நமக்குக் கிடைத்து, அதை
    அனுபவிக்கிற நிமிஷத்தில்,
    மனம் இப்படித்தான் ஆனந்தக்
    கூத்தாடும்.

    அது, வெற்று ஆர்ப்பாட்டமில்லை.

    வீண் கூச்சலில்லை.

    அர்த்தமுள்ள சந்தோஷம்.

    தேவையைத் தீர்த்துக் கொண்ட
    இதயத்தின் இன்ப வெளிப்பாடு.

    எழுத்துக்குள் அடங்காத அந்த
    இன்பத்தை , எனக்கு நடிகர் திலகத்தின் படங்களே தந்திருக்கின்றன.

    படம் முடிந்து, அவசர அவசரமாய் வீட்டுக்கு ஓடி வந்து, நுழைந்த மாத்திரத்திலேயே "அமிர்தாஞ்சன்" புட்டியைத்
    தேட வைத்த படங்களுக்கு
    மத்தியில், படம் பார்த்து விட்டு
    வெளியே வருகிறவனின்
    முகத்தில் ஒரு நிறைவையும்,
    நடையில் ஒரு கம்பீரத்தையும்,
    உள்ளத்தில் ஒரு மகிழ்வையும்
    தந்த படங்கள் நடிகர் திலகத்தின் படங்களாகவே
    இருந்தன. இருக்கின்றன.
    இருக்கும்.

    என் மட்டில், நடிகர் திலகத்தின்
    படங்களை நான் காண நேர்ந்ததை நிகழ்வுகளாகக்
    கருதவில்லை. காலமும்,
    கடவுளும் எனக்குக் காட்டிய
    கருணையென்றே கருதுகிறேன்.

    அகன்ற வெண்திரையின்
    முன்னால் அமர்ந்திருக்கும்
    எனக்கு, நடிகர் திலகம் தருவது
    வெறும் சினிமாக் காட்சியல்ல.
    தன்னைக் கடவுளாக்கிக்
    கொண்டவர், கவலை தீர்த்து
    எனக்குத் தரும் "தரிசனம்."
    -------------
    நடிகர் திலகத்தின் படங்களில்
    ஒவ்வொன்றாய் எடுத்துக்
    கொண்டு, முழுப்படத்தையும்
    அணு அணுவாய் ரசித்து
    எழுத வேண்டும் என்கிற என்
    ஆவலை அதிகப்படுத்திய
    அன்பு நண்பர்
    திரு. செந்தில்வேல் அவர்களுக்கும், திரியில்
    இல்லாவிட்டாலும் தினமும்
    திரியைப் பார்த்து விட்டு,
    என் பதிவுகளை மெச்சி என்னை வாழ்த்தி மகிழும்
    பெரியவர்.அய்யா. திரு.நடராஜன் அவர்களுக்கும்
    அன்பின் திரு.பொன்.இரவிச்சந்திரன் அவர்களுக்கும்
    எனது இதயப்பூர்வமான
    நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

    இதய தெய்வம் நடிகர் திலகம் "இரு மலர்கள்" கொண்டு
    என் "தரிசனத்தை "துவக்கி
    வைக்கிறார்.

    இதயக் கோயிலில் வீற்றிருப்பவர்...
    என்னையும், என் எழுத்துகளையும் ஆசீர்வதிக்கிறார்.

  11. #608
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தரிசனம்-1
    ------------
    'இரு மலர்கள்'
    ---------------



    "இரு மலர்கள்."

    நாற்பத்தெட்டு வருடங்களுக்கு
    முன்பு, நான் பிறப்பதற்கும்
    ஐந்து மாதங்களுக்கு முன்பு,
    இதே போல் ஒரு தீபாவளி
    அன்றைக்குத்தான் வந்தது
    என்றறிகிறேன்.

    இன்னும் பல நூறு வருஷங்களுக்குப் பிறகு வரும்
    ஒரு தீபாவளியன்றும் என்னைப் போல் யாரையேனும் "இரு மலர்கள்"
    எழுத வைக்குமென்பது நிஜம்.
    -------------
    எண்பதுகளின் துவக்கத்தில்,
    எங்கள் ஊரில் ஏதோ ஒரு
    கோவில் திருவிழாவை
    முன்னிட்டு, தெருவில் திரை
    கட்டி இரண்டு படங்கள் காட்டினார்கள்.

    ஒன்று-'இரு மலர்கள்.'

    இன்னொன்று, 'தம்பதிகள்'
    என்ற படம்.

    சரளைக் கற்கள் உறுத்த, மண்
    தரையில் உட்கார்ந்து பார்த்த
    'இரு மலர்கள்' தந்த மயக்கம்
    இன்னும் தீரவில்லை.
    ---------------

    அழகும், அறிவும் நிறைந்த
    இளைஞன் சுந்தர். கல்லூரி
    மாணவன்.உடன் பயிலும் உமா என்கிற பெண்ணுக்கும், சுந்தருக்கும் காதல் உருவாகிறது. உருவானது, வளர்கிறது. வளர்ந்தது, செழிக்கிறது.

    சுந்தரின் தந்தை பண்பாளர்
    சிவக்கொழுந்து. அவரின்
    சகோதரி மகள் சாந்தி. அன்பும்,
    பண்பும் நிறைந்த குணவதியான
    சாந்தியை, தன் மகன் சுந்தருக்கு மணமுடித்து வைக்க பெரிதும் விரும்புகிறார் ..சிவக்கொழுந்து.

    தான் வேறொருத்தியை விரும்புவதாய் சுந்தர் சொல்லி
    விட கலங்கிப் போகிறார்.

    தனக்கு சகலமுமான, ராணுவத்தில் மேஜராகக் கடமையாற்றும் தன் அண்ணனிடம், தனக்கும் சுந்தருக்குமான காதலைத்
    தெரிவித்து, அதைத் திருமணமாக ஆக்க அனுமதி
    பெறும் பொருட்டு ஊருக்குப் புறப்பட்டுச் செல்கிறாள்,உமா.
    அண்ணனிடம் சம்மதம் பெற்றவுடன் கடிதம் எழுதுவதாக தேதி குறிப்பிட்டு
    உறுதி சொல்லிப் போகிறாள்.

    போன இடத்தில் அன்பான அண்ணனும், அண்ணியும்
    விபத்தில் இறந்து விட, உமா
    அண்ணனின் மூன்று குழந்தைகளையும் கவனித்துப்
    பராமரிக்கும் கடமையை
    நினைத்து காதலைத் தியாகம்
    செய்கிறாள். தனக்கு வேறொரு
    வாலிபனுடன் திருமணம்
    நடக்கவிருப்பதாகவும், தன்னை
    மறந்து விடும்படியும் கடிதம்
    எழுதுகிறாள்.

    கடிதம் கண்டு அதிர்ந்து கலங்கிப் போகும் சுந்தர் உடல்
    நலம் குன்றிப் போகிறான். உயிர் வாழவே விருப்பமின்றி
    உயிர்ப் பிணமாகி விடும் சுந்தருக்கு சாந்தியின் தூய்மையான அன்பு புத்துயிர்
    ஊட்டுகிறது.

    தன் தந்தையின் எண்ணப்படி
    சாந்தியையே மணந்து கொண்டு, உழைத்துப் பெரிய
    மனிதனாகி, ஒரு அழகான
    பெண் குழந்தைக்கும் தகப்பனாகி இன்ப வாழ்க்கை
    வாழ்கிறான்.

    விதி, மீண்டும் உமாவை சுந்தரின் வாழ்க்கையில்
    செருகிச் சிரிக்கிறது. சுந்தரின்
    மகள் பயிலும் பள்ளிக்கே
    ஆசிரியையாக வருகிறாள்..
    உமா.

    உண்மையறியாத சுந்தரின்
    மனதில் துன்பப் புயல் வீசி
    நிம்மதியைக் காணாமலடிக்கிறது.

    கணவனின் நிம்மதியின்மை
    கண்டு துடித்துப் போகும் சாந்தி,
    உமாவோடு வாழட்டும் என்று
    சுந்தரைப் பிரிந்து தன் உயிரை
    மாய்த்துக் கொள்ள விழைகிறாள்.

    இன்பம் தவழும் சுந்தர்-சாந்தி
    வாழ்வுக்குத் தான் இடையூறில்லை.. மூன்று பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டியது தன்
    பொறுப்பென்று உணர்த்தி விட்டு, சுந்தரையும், சாந்தியையும் மீண்டும்
    இணைத்து விட்டு, தியாகத்தின்
    பெண் உருவமாய் கையசைத்து
    விடைபெறுகிறாள், உமா.

    -இது, "இரு மலர்கள்" படத்தின்,
    நம் இதயம் வாழும் கதை.
    ---------------
    காதலுக்கும், கடமைக்கும்
    ஊடே உணர்வுகளோடு
    அல்லாடும் ஒரு இளம்பெண்.

    மாமன் மகன்தான் உலகமென்றும், அவன் பருகத்
    தருவது நஞ்செனினும் அதுவே
    தனக்கு அமிழ்தென்றும் திரியும்
    ஒரு பெண்.

    படத்தின் தலைப்பு மட்டுமல்ல..
    படத்தின் கதையும் கூட இந்த
    இரண்டு பெண்களைத்தான்
    பேசுகிறது.

    இந்த 'இரு மலர்களையும்'
    முந்திக் கொள்கிறது.. நம்
    நடிகர் திலகமெனும் கலை
    மலரின் வாசம்.

    இந்த "சுந்தர் "கதாபாத்திரத்தில்
    நடிகர் திலகம் தவிர வேறு
    யார் நடித்திருந்தாலும், அது
    ஒரு தவிர்க்க முடியாத பாத்திரமாக மட்டுமே இருந்திருக்கும்.

    நடிகர் திலகம் "சுந்தர்" வேடம்
    தாங்கினார். அது, மறக்க
    முடியாத பாத்திரமாயிற்று.
    --------------
    காலம் கொண்டாடும் நம்
    காவிய நாயகரை அகிலத்திற்கு
    பெருமையோடு அறிமுகம்
    செய்வித்தது போன்றதொரு நாடக மேடையோடுதான்
    "இரு மலர்கள்" படமும்
    ஆரம்பமாகிறது.

    சென்னைக் கல்லூரியில் பயிலும் சுந்தரும்-உமாவும்,
    கோவலனும்-மாதவியுமாக
    நடிப்பார்கள் என்று அறிவிக்கப்
    பட்டவுடன், தலையோடு,தலை
    மோதிக் கொண்டு சண்டை
    போடுவதாய் நடிகர் திலகமும்,
    பத்மினியும் காட்டப்படுகிறார்கள்.

    குறும்பு கொப்பளிக்கும் நடிகர்
    திலகத்தின் அந்த முகம் தான்
    போகப் போக ஆயிரம் உணர்வுகளைப் பூசிக் கொண்டு
    நம்மை மயக்கப் போகிறது
    என்பது அப்போது நமக்குத்
    தெரியாது.

    "மாறுபட்ட இரண்டு துருவங்கள் நாம். நாம் ஒன்று
    சேர முடியாது."-என்று வாதிடும் பத்மினியிடம்,
    "மாறுபட்ட இரண்டு விஷயங்கள்தான் ஒன்றை
    ஒன்று ஆகர்ஷிக்கும். வசீகரம்
    செய்யும். "-என எதிர்வாதம்
    செய்கையில் நடிகர் திலகத்தின்
    அந்த கிண்டலான தொனியில்
    வரும் உச்சரிப்பு, சுவாரஸ்யமான வியப்பு.

    இருவரும் மல்லுக்கட்டும்
    போதே மணியடித்து நாடகம்
    துவங்க, திரை விலக, மயிலென
    நாட்டியப் பேரொளி ஆட,
    படுக்கவும் இல்லாத,
    உட்காரவும் இல்லாத ஒரு
    ஒய்யார இருப்பில், ஒளியற்ற
    இருட்டகற்றி ஒளி வந்து பாய,
    அந்த ஒளியையும் மிஞ்சும் தன்
    ஒளி முகத்தை நம்மை நோக்கித் திருப்பி, "மாதவிப்
    பொன்மயிலாளை" வர்ணிக்கும்
    கோவலனாக நடிக்க, நடிகர்
    திலகத்தைத் தவிர வேறொருவரைச் சிந்திப்பவன்
    கேவலன்.



    ( தொடரும்...)
    Last edited by Aathavan Ravi; 22nd November 2015 at 10:31 AM.

  12. #609
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    "மாதவிப்
    பொன்மயிலாளை" வர்ணிக்கும்
    கோவலனாக நடிக்க, நடிகர்
    திலகத்தைத் தவிர வேறொருவரைச் சிந்திப்பவன்
    கேவலன்.
    "சூப்பர்...."
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Subramaniam Ramajayam liked this post
  14. #610
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நிகழ்வுகளோடும் நினைவுகளோடும் காலமெனும் நதியில் நீந்தியோடும் கற்பனை ஓடம், மெல்ல மெல்லத் தன் பயணிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போகிறது... வாசு, முரளி, ஆதவன் ரவி என பயணிகள் ஒவ்வொருவரும் ஓடத்தை சீராக அலையோட்டத்தோடு கொண்டு செல்கிறார்கள். பயணிகளாக மட்டுமின்றி துடுப்புக்காரனாகவும் அவர்கள் செயல்படுகிறார்கள்.

    ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். பயணிகள் எண்ணிக்கை கூட வேண்டும் எனவும் விரும்புகிறது மனம்.

    இந்த நினைவுகளில் மூழ்கி விட்ட என் மனது, மற்றொரு முக்கியமான பயணியை மறந்து விட்டது. சக பயணிகளின் மனம் சோர்வடையாமல் ஊக்குவித்து, அவர்கள் ஒவ்வொருவரின் சிறப்பையும் மற்றவரிடத்து எடுத்துரைத்து, தன் சிறப்பையும் மற்றவர்கள் அறியும் வண்ணம் எடுத்துரைத்து பயணத்தை சிறப்பாக்கும் அந்த பயணி, கடந்த 7ம் தேதி தன் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளது.

    ஏனோ மனம் மறந்து விட்டது.. என்றாலும் அதில் தவறுமில்லை. காரணம் அந்த பிறந்த நாளில் அந்தப் பயணியோடு இன்னோர் கலைஞனும் தன் பிறந்த நாளைக் கொண்டாடினான்றோ.. இவருவரும் ஒன்றெனத்தானே மனம் நினைக்கிறது.. ஒருவரை வாழ்த்தினால் அது இன்னொருவரை சேரும் அளவிற்கு ஆத்மார்த்தமான பிணைப்பன்றோ..

    இருந்தாலும் தாமதமாக வாழ்த்துவதில் குறை ஒன்றுமில்லையே..

    கோபால்,
    தங்களுக்கு என் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். எங்களைப் பொறுத்த மட்டில் எல்லா நாளும் நவம்பர் 7 அன்றோ..

    கலை"வாணி" யின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் பெற்ற தாங்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
    Last edited by RAGHAVENDRA; 12th November 2015 at 02:13 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Subramaniam Ramajayam liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •