Page 350 of 401 FirstFirst ... 250300340348349350351352360400 ... LastLast
Results 3,491 to 3,500 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #3491
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3492
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3493
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3494
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3495
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    "பிடித்தவரைப் பார்த்ததும் வரும்
    புன்னகை போல்
    தவிர்க்க முடியாதவள்...
    பெண்."

    உன்னதமான பெண் குலத்தைப்
    போற்றும் "உலக மகளிர் தினம்" சமீபித்துக் கொண்டிருக்கிற சமயத்தில்
    "பெண்ணின் பெருமை"
    பார்த்தேன்.. முதல் தடவையாக.

    "பார்த்தேன் " என்ற சொல்லுக்குக் கீழே பல நூறு
    "டிட்டோ"க்கள் இனிவரும்
    காலங்களில் கண்டிப்பாகப்
    போட வேண்டிய வருமென்பது
    உறுதி.
    -------------------------------

    குடித்து விட்டுக் கூத்தாடுகிறவனை...

    மட்டு மரியாதையில்லாமல்
    முகத்தில் சிகரெட் புகை
    ஊதுகிறவனை..

    சக மனித உயிர்களின் மீது
    அன்பு பாராட்டுகிற குணம்
    என்பது கொஞ்சமும் இல்லாதவனை...

    யாருக்குமே பிடிப்பதில்லை.

    யாருக்குமே பிடிக்காத ஒரு
    மனிதனின் வேடமேற்று,
    தீயவனாகத் திறம்பட நடிக்கிற
    தைரியம்..

    நடிகர் திலகம் தவிர யாருக்கும்
    வராது.
    ------------------------------

    மனநிலை சரியில்லாத அண்ணனின் கூச்சல் பொறுக்காத சிடுசிடுப்புடன்
    மாடிப்படியிலிருந்து இறங்கி
    வருவதில் அறிமுகம்.

    ஆடிய ஆட்டத்தின் கோர விளைவாய், தன் அன்னையே
    கையில் துப்பாக்கி எடுக்க..
    தவறுணர்ந்து திருந்துவதில்
    முடிவு.

    திருந்துகிற கடைசிக் காட்சி தவிர்த்த எந்தக் காட்சியிலும்
    பார்வையாளனின் நன்மதிப்பைப் பெறவியலாத
    ஒரு கதாபாத்திரத்தை வைத்துக்
    கொண்டு, தன்னை நிரூபிக்கிற
    சாமர்த்தியம் நடிகர் திலகத்தினுடையது.

    புரிதல் வந்து திருந்தும் வரைக்கும் ஒரு மனிதனை
    ஆட்டி வைக்கும் புரியாத்தனங்களைக் கொஞ்சமும் மிகையில்லாமல்
    செய்திருப்பது வியப்பு.

    ஒரு வில்லனுக்கான அலட்டல்கள் எதுவுமில்லாமல்,
    வெகு அலட்சியமான அந்தப்
    பேச்சு, அந்த அலட்சியத்துடன்
    கைகோர்க்கும் வேகம்..
    இவற்றைக் கொண்டே ஒரு
    மகாவில்லனைக் காட்சிப்படுத்துவது சிறப்பு.
    ----------------------------

    சத்தியபுரத்தில் நிலத்தை ஆர்ஜிதப்படுத்தும் துவக்கக்
    காட்சியில் வெளிப்படுத்தும்
    அந்த மிடுக்கை,

    அண்ணனை அடிக்க, அண்ணியை முறைத்தபடி
    நடந்து வரும் அந்த நடை வேகத்தை,

    ஆட்டக்காரக் காதலியின்
    உறவுக்காரர்களையும் தன்
    கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்
    கம்பீரத்தை,

    தன்னை நம்பாத தந்தையிடம்
    காட்டும் அலட்சியத்தை,

    தன்னை மிக நம்பும் அன்னையிடம் பணம் வாங்க
    செய்கிற நைச்சியத்தை,

    தன் சுயரூபம் புரிந்து கொண்ட
    தாயாரிடம், பணப் பெட்டியின்
    சாவியை வாங்குவதற்காக,
    கெஞ்சுதலாகத் துவக்குகிற
    சம்பாஷணையை கொஞ்சங்
    கொஞ்சமாக கோபமாக
    மாற்றுகிற பாவனையை...

    பார்த்து முடித்த நள்ளிரவில்,
    என் கண்களில் தூக்கத்திற்குப்
    பதிலாக மிரட்சியிருந்தது.

    அற்புதத்தை உள்வாங்கிய
    ஆனந்த மிரட்சி.
    -----------------------------

    "அழுவதா..இல்லை சிரிப்பதா?"
    என்று இந்தப் படத்தில் ஒரு பாடல் வருகிறது.

    காதலையும், காமத்தையும்
    குறித்த தங்களது கருத்துகளைக்
    கொண்டு, ஒரு ஆணும், பெண்ணும் சமூகத்தைக் கிண்டலாய்ச் சாடுகிற பாட்டு.

    ஆர்மோனியம் வாசித்துக்
    கொண்டு,புன்னகை மாறாமல்
    பாடுகிற தலைவர் அத்தனை
    கோணங்களிலும் அழகாயிருக்கிறார்.

    அதுவும்,

    "காமத்தைப் புயலென்றும்,
    காதலைத் தென்றலென்றும்"
    என்கிற வரி வரும் போது
    செய்யும் பாவனையையும்,

    "உங்கம்மாளைப் போல பழுத்து
    விட்டா அதுக்கும் ஒரு மதிப்புத்
    தாங்க" என்று பாடும் போது
    வீட்டின் உட்புறமாய் ஒரு
    குறும்புப் பார்வை பார்க்கும்
    பாவனையையும் பார்த்த
    பின்பும், நடிகர் திலகத்தை
    மிகை நடிப்பென்று சொல்வோரைப் பார்த்து...

    அழுவதா... இல்லை.. சிரிப்பதா?



  7. #3496
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    மதுரையில் சரித்திரம் படைத்த சிவகாமியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழா
    சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவானாலும் அனைவரும் சென்னையை நோக்கியே படையெடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்சார்பில் மக்கள்தலைவரின் மகத்தான காவியம் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவினை மதுரையில் நடத்துவோம் என நவீன தொழில்நுட்பத்தில் வடிவில் உருவாகியுள்ள மதுரை சிவா மூவீஸார் முடிவு செய்தனர்.
    டிரைலர் வெளியீட்டு விழவிற்கான தேதி 28.02.2016 ஞாயிறு என 9.02.16 அன்று முடிவு செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு இருந்த இடைவெளி 19 நாட்கள், இதற்குள் விழாவினை திட்டமிட்டு நடத்திட முடியுமா என அனைவருக்கும் சிறு சந்தேகம்.
    நமது மக்கள்தலைவரை மனதில் நினைத்துக் கொண்டு நானும் ( சுந்தராஜன்) பிரபு வெங்கடேசும் களமிறங்கினோம்.
    டிரைலர் வெளியீட்டு விழாவினை மதுரை மினிப்பிரியா திரையரங்கில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. விழாவிற்கான அழைப்பிதழ் மற்றும் நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டது, இப்பொழுது விழாவிற்கான இடைவெளி 10 நாட்களே இருந்தன. மக்கள்தலைவரின் படத்திற்கு வேலை செய்யவேண்டும் என்றால் நாங்கள் அழைக்கும் எந்த நேரமும் முகம் சுளிக்காமல் எப்பொழுது எங்கு வரவேண்டும் என்று கேட்கும் அருமை தளபதிகள் அண்ணாநகர் பழனிச்சாமி. ஆபீஸ் பாண்டி ஆகியோர் தங்களது பணிகளையும் ஒத்தி வைத்து விட்டு விழா சிறக்க தங்களது பங்கினை அளித்தது எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.
    அனைவருக்கும் மதுரையில் உள்ள சூர்யா மூவீஸ் அலுவலகத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டது. நாங்கள் நினைத்தை விட ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது. முதலில் 750 நுழைவுச் சீட்டும் அழைப்பிதழ் 300ம் தயாரிக்கப்பட்டது, அதிகம் தேவைப்படும் என்பதால் மேலும் 200 அழைப்பிதழும் 300 நுழைவுச்சீட்டும் தயார் செய்யப்பட்டது.
    திரு.வி.சி.எஸ் அவர்கள் சென்னையில் தளபதி திரு.ராம்குமார் அவர்கள், திரு ஒய்.ஜி.அவர்கள், திரு.இயக்குநர் சேரன் அவர்கள் மேலும் சிவாஜி மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்.டி.ஃபேன்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பதழ் கொடுத்தார். வெளியூருக்கு ஏற்கனவே முகவரி வாங்கி வைத்திருந்து அனைவருக்கும் அழைப்பிதழ் கொரியர் மூலம் அனுப்பப்பட்டது. திருச்சி திரு.அண்ணாதுரை அவர்கள், கோவை சக்திவேல் அவர்கள், சிவகாசி சக்திவேல் அவர்கள், திண்டுக்கல் நவரத்தினம் அவர்கள், சுமார் 100 அழைப்பிதழ்கள் கொரியரில் அனுப்பப்பட்டது.
    மதுரையில் நானும் பிரபுவெங்கடேசும் ரசிகர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் மற்றும் நுழைவுச் சீட்டை விநியோகித்தோம். அனைவருமே பணியில் இருந்த காரணத்தினால் மதியம் உணவு இடைவேளையில் சிலருக்கும் மற்றவர்களுக்கு மாலையில் என பிரித்து ரயில் சக்கரத்தின் வேகத்தைவிட வேகமாக பணியைச் செய்தோம். அனைத்து விநியோகஸ்தர்களுக்கும், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் அழைப்பிதழ் நேரடியாக வழங்கப்பட்டது. விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் போது சூர்யா மூவீஸ் திரு.குணசேகரன் அவர்கள் உடன் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
    நான் எனது வலைதளத்திலும். முகநுால் பக்கத்திலும், திரியிலும் அழைப்பிதழ் இல்லாவிட்டாலும் தாங்கள் அவசியம் கலந்து கொள்ளவேண்டும் என்றும் தங்களுக்கு உரிய வசதி செய்து தரப்படும் என்று வேண்டுகோள் விடுத்தேன். எனது வேண்டுகோளை ஏற்று முகநுால் நண்பர்கள், திரி நண்பர்கள் ஏராளமான நமது மக்கள்தலைவரின் ரசிகர்கள் வந்திருந்து விழாவினை சிறப்பித்தனர். அனைவருக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நானும் ரமேஷ்பாபு அவர்களும் நேரில் சென்று அழைப்பிதழைக் கொடுத்தோம்.
    அனைவரும் அழைப்பிதழைப் பார்த்தவுடன் மிகவும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். காரணம் சினிமா சம்பந்தப்பட்ட விழா ஆனால் சினிமா பிரபலங்கள் யாரும் இல்லாமல் நாட்டுக்காக தன் உயிர் நீத்த விமானப்படை வீரர் திரு.பிரவீண் அவர்களின் தாயார் அவர்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள், எப்படி இப்படியெல்லாம் உங்களுக்கு சிந்திக்கத் தோன்றுகிறோ என எங்களிடம் வினா எழுப்பினர். நாட்டுக்காக உழைத்தவர்களையும், திறமையுள்ளவர்களையும் சிவாஜி ரசிகர்கள் என்றும் மதிப்பார்கள். அவர்களுக்கு மரியாைதையும் செலுத்துவார்கள் என்று கூறி விடைபெற்றோம்.
    விழாவிற்கு முதல் நாள் காலையிலேயே சென்னையைச் சேர்ந்த ஜெயக்குமார் அவர்கள் வந்தார். அத்துடன் இல்லாமல் எங்களுக்கு உதவியாக சில பணிகளையும் தானே முன்வந்து செய்தார். மாலையில் திரு. முரளி, ராகவேந்திரா, ராமஜெயம், சுப்பிரமணியன் மற்றும் பலர் வந்திருந்தனர். அவர்களும் வந்தது முதலே நிகழ்ச்சிக்கான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இரவிலேயே அருகில் உள்ள லாட்ஜ்களில் வெளியூ்ரில் இருந்து வந்தவர்கள் ரூம் போட்டு விட்டனர். லாட்ஜ் நிர்வாகிகள் சினிப்பிரியா திரையரங்கில் சிவாஜி ரசிகர்களின் மாநாடு ஏதும் நடைபெறுகிறதா என்று கேட்கக் கூடிய அளவிற்கு சினிப்பிரியா தியேட்டர் வளாகம் மாபெரும் அலங்காரத்துடன் மறுநாள் விழாவிற்குத் தயராகிக் கொண்டிருந்தது. மதுரையில் உள்ள அனைத்து ரசிகர்களும் மாலையில் இருந்தே தியேட்டரை வந்து பாா்த்து விட்டுச் சென்று கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கே இப்படியென்றால் நமது மக்கள்தலைவரின் அன்பு இதயங்களுக்குச் சொல்லவா வேண்டும்.
    மூத்த ரசிகர் ஒருவர் நாங்கள் சினிப்பிரியா தியேட்டரில் படம் வரும்போது முதல்நாள் இப்படித்தான் கூடுவோம். அதுபோல் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு விழாவினை மதுரையில் நடத்த ஏற்பாடு செய்த சிவா மூவீஸூக்கு நன்றி என கண்கலங்கினார்.
    அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பிலும், மதுரை புறநகர் சிவாஜி மன்றத்தின் சார்பிலும், ஜெயக்குமார் மற்றும் ராஜா அவர்கள் சார்பிலும், மதுரை சிவா மூவீஸ் சார்பிலும் தியேட்டரில் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டது. அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் நமது தலைவரின் ஆளுயர பேனர் 15 வைக்கபட்டது. மேலும் கோவை சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் பேனர் வைக்கப்பட்டது.
    எங்கள் சார்பில் இரண்டு வகையான சுவரொட்டி, மதுரை நகர் சிவாஜி மன்றத்தின் சார்பிலும், மதுரை சிவாஜி சமூகநலப் பேரவை சார்பிலும், தெற்கு தொகுதி சிவாஜி சமூகநலப்பேரவை சார்பிலும், கோவை சக்திவேல் அவர்கள் சார்பிலும், கோவை ரமேஷ்பாபு அவர்களின் சார்பிலும், சென்னை ராமஜெயம் சார்பிலும் விழாவிற்கான சுவரொட்டிகள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டன. அதிகாலை சுப்பு, நாஞ்சில் இன்பா ஆகியோர் வந்தனர்.
    காலை 7 மணிக்கே சினிப்பிரியா திரையரங்கம் விழாக்கோலம் காணத் துவங்கி விட்டது. தியேட்டர் வளாகத்தில் ரசிகர்களின் கூட்டம் காலை 8 மணிக்கே கூடிவிட்டது. தியேட்டர் நிர்வாகம் காலை 9.30 மணிக்கு மேல் அரங்கிற்குள் அனைவரையும் அனுப்பிவும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 9 மணிக்கெல்லாம் மக்கள்தலைவரின் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடிக் கொண்டே இருந்தது. தியேட்டர் ஊழியர்களிடம் கூறி முக்கிய நபர்களை மட்டும் அரங்கிற்குள் அனுமதியுங்கள் என அனுமதி வாங்கி சிறப்பு விருந்தினர்கள் அரங்கிற்குள் அமர வைக்கப்பட்டனர். 9.15 மணிக்கெல்லாம் தியேட்டர் வளாகத்திற்குள் நிற்பதற்கு கூட இடமில்லாமல்
    ரசிகர்கள் கூட்டம் ரோடுகளில் கூடி விட்டது.
    மேலும் கூட்டம் சாரை சாரையாக ஆண்களும் பெண்களுமாய் வந்து காெண்டிருந்ததைப் பார்த்து விட்டு தியேட்டர் நிர்வாகம் கால் மணி நேரத்திற்கு முன்னதாகவே அரங்கிற்குள் செல்ல அனுமதித்து விட்டது. கீழே இடம் பற்றாத காரணத்தினால் மாடியிலும் பின் மாடியும் பின் அங்கேயும் இடம் இல்லாத காரணத்தினால் பால்கனியும் திறந்து விடப்பட்டது. பள்ளி மாணவர்கள்150 பேர் வந்திருந்தனர் என்பது மேலும் சிறப்பான செய்தி.
    சினமா பிரபலங்கள் யாருமே இல்லையே விழாவிற்கு கூட்டம் வருமா
    ஞாயிற்றுக் கிழமை காலையில் விழா வைக்கிறார்களே எப்படி கூட்டம் வரும்
    மதுரையில் டிரைலர் விழா வைத்தால் கூட்டம் வராது
    இப்படி பல கேள்விகள்
    ஆனால் அனைத்திற்கும் நாங்கள் சொன்ன ஒரே பதில் இது சிவாஜி விழா. விண்ணில் சிவாஜி விழா நடத்தினாலும் அங்கும் கூட்டம் வரும், அந்த நம்பிக்கை எங்களுக்கு உண்டு என்று கூறினோம்.
    இதோ இன்று அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஆம் அன்பு இதயங்களே, அனைத்துக் கேள்விகளையும் தவிடு பொடியாக்கி விட்டு இன்று அரங்கு நிறைந்து உட்கார இடமில்லாமல் சுமார் 200 போ் நின்று கொண்டே நிகழ்ச்சியைப் பார்த்தனர்.
    சென்னையில் இருந்து விழாவிற்கு வந்திருந்தவர்கள் கூட்டத்தைப் பார்த்து அதிசியத்தனர். ஞாயிற்றுக்கிழமை இப்படி ஒரு கூட்டம் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, என்று கூறனர். கோவையில் இருந்து சக்திவேல் அவர்களும் திருச்சியில் இருந்து அண்ணாதுரை அவர்களும் வேனில் வந்திருந்தனர்.
    19 நாட்களில் நாங்கள் பட்ட உழைப்பிற்கெல்லாம் நல்ல பலன் கிடைத்தது. உலகிலேயே பெரிய வலி என்றால் அது பெண்களின் பிரசவ வலி என்பார்கள், அதே நேரத்தில் குழந்தை பிறந்தவுடன் அந்தப் பெண் அடையும் இன்பத்திற்து முன் தான் பட்ட வலி தெரியாது. அதுபோல் பெண்ணின் பிரசவ வலியைவிட அதிகமான வலியைச் சந்தித்தோம். அவை அனைத்தும் நமது மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கூட்டத்தைப் பார்த்தவுடன் அந்த வலி பறந்து போனது. எங்களது வலிக்கு மருந்து போட்ட நமது தலைவரின் அன்பு இதயங்களுக்கு எங்களது ஆனந்தக்கண்ணீரால் நன்றி நவில்கிறோம்.
    விழா சிறக்க எனக்கும (சுந்தராஜன்) பிரபு வெங்கடேஷ் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்து நாங்கள் எந்த வேலை சொன்னாலும் முகம் சுளிக்காமல் செய்த ரமேஷ்பாபு, அண்ணாநகர் பழனிச்சாமி, பாண்டி, பச்சைமணி, சிவாஜிசெல்வம் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.
    வெளியே நடந்த நிகழ்வே இப்படியென்றால் அரங்கினுள்....

    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  8. #3497
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    எந்தத் தலைமுறையானால் என்ன.. தலைவர் Rocks...டிஸ்கோ யுகத்திலும் ஸ்டைல் கொடியைப் பறக்க விட்ட சூப்பர் சூப்பர் ஹீரோ...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai, KCSHEKAR, sivaa liked this post
  10. #3498
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sundararajan,
    superb coverage. Thank you so much.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #3499
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    திரிசூலம் தமிழ்நாட்டில் 8 தியேட்டர்களில் வெள்ளிவிழா ஓடி சாதனை செய்யதது
    இன்றுவரை இச்சாதனை முறியடிக்கப்படவில்லை




    திரிசூலம்

    சென்னை..............................சாந்தி... ..... ...........175 ..நாட்கள்
    சென்னை..............................கிரவுண்....... ..........175...நாட்கள்
    சென்னை..............................புவனேஸ்வரி.... .....175...நாட்கள்


    கோவை.................................கீதாலயா...... .........175...நாட்கள்
    மதுரை....................................சிந் தாமணி ..........200....நாட்கள்
    திரிச்சி.....................................பிரபா த்.................175...நாட்கள்
    சேலம்.....................................ஒரியண்டல ்..........195...நாட்கள்
    வேலூர்....................................அப்சரா.. ...............175...நாட்கள்

    (சிவகவி எத்தனை தியேட்டர்களில் வெள்ளிவிழா ஓடியது
    யாராவது சரியான விபரம் தரமுடியுமா?)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #3500
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by Aathavan Ravi View Post



    "உங்கம்மாளைப் போல பழுத்து
    விட்டா அதுக்கும் ஒரு மதிப்புத்
    தாங்க" என்று பாடும் போது
    வீட்டின் உட்புறமாய் ஒரு
    குறும்புப் பார்வை பார்க்கும்
    பாவனையையும் பார்த்த
    பின்பும், நடிகர் திலகத்தை
    மிகை நடிப்பென்று சொல்வோரைப் பார்த்து...

    அழுவதா... இல்லை.. சிரிப்பதா?

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. Likes Harrietlgy, Russellmai, KCSHEKAR liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •