Page 172 of 401 FirstFirst ... 72122162170171172173174182222272 ... LastLast
Results 1,711 to 1,720 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #1711
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    செந்தில்வேல்,
    இது பெங்களூர் அல்சூர் நிதி சிவாஜி கணேசன் கலைக்குழு நண்பர் ஜெயகுமாரின் கையெழுத்து.. நன்றாக நினைவிருக்கிறது...

    நடராஜிடம் என் கடிதங்களும் இருக்கலாம். ஏனென்றால் அவருக்கும் நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.

    அவருக்கு என் உளப்பூர்வமான பாராட்டுக்களையும் நன்றியையும் கூறவும்.
    ராகவேந்திரா சார்
    அந்தக்கால சிகர மன்றங்களின் இணைப்புகள் ஆச்சரியப்படுத்துகின்றது.
    கோவைஅன்பு ரசிகர் மன்ற தகவல்கள் ஏதேனும் தங்களுக்கு தெரியுமா?.தெரிந்தால் பகிரவும்.
    நன்றி.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1712
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #1713
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, Harrietlgy liked this post
  8. #1714
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Deleted

  9. #1715
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  11. #1716
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை யில் சென்றவாரம் நமது ரசிகர் மன்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் இல்லத் திருமணத்திற்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவு.
    இடம்:வெரைட்டி ஹால் ரோடு.

  12. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy liked this post
  13. #1717
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Face book



  14. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  15. #1718
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    (இந்த அதிஅற்புத ஓவியத்தைத்
    தீட்டியதற்கும், இதனை நான்
    பயன்படுத்திக் கொள்ள
    மகிழ்வோடு அனுமதி
    தந்ததற்கும் பல கோடி
    நன்றிகள்...
    ஓவியர்.திரு.கௌஷிகன்
    ராமையா அவர்களுக்கு)


    தரிசனம்-2.
    -------------
    தாவணிக் கனவுகள்.
    ----------------------
    தொடர்கிறது...
    ----------------
    ( 7 )

    வேடிக்கைக் கதைகளும்,
    ஆசிரியர்-மாணவர் இடையிலான சம்பிரதாய
    உறவு தாண்டிய சுவாரஸ்யமான உரையாடல்களுமாய்
    விளையாட்டாய் நடந்து கொண்டிருக்கிற வகுப்பறை,
    திடீரென்று ஒரு விநாடியில்
    மாறிப் போகும்.

    ஆசிரியர், தீவிரமாக பாடம்
    நடத்தத் துவங்குவார்.

    மாணவர்களும் அத்தனை
    நேரம் தாங்கள் போட்ட
    ஆட்டமெல்லாம் மறந்து
    பொறுப்பாகப் படிக்கத் துவங்குவர்.

    பள்ளிப் பருவத்தில் நாமெல்லாம் பார்த்திருக்கிறோம்...

    அனுபவித்திருக்கிறோம்...

    மனங்களின் தோட்டங்களில்
    புரிதல் பூக்கள் மலர்ந்து,
    மணத்த அற்புதத் தருணங்கள்
    அவை.

    பள்ளிப் பருவத்தில் நான்
    பார்த்த "தாவணிக் கனவுகள்"
    திரைப்படமும் எனக்கு ஒரு
    பாடம் போலவே இருந்தது.

    அதிலும், இந்தக் காட்சியைப்
    பார்த்த போது நான் இருந்தது
    ஒரு வகுப்பறை போலவும்,
    இந்தக் காட்சியின் மேன்மையை நமக்குப் பிட்டுப்
    பிட்டு வைக்கிற நடிகர் திலகம்,
    ஒரு ஆசிரியர் போலவும்
    நான் உணர்ந்திருக்கிறேன்.
    ------------------

    சிலர், சிரித்தால் அழகாக
    இருக்கும்.

    சிலர், நடந்தால் அழகாக
    இருக்கும்.

    நம் நடிகர் திலகம் படுத்திருந்தால் கூட அழகு.

    தலையணையில் ஒரு கையூன்றி, அந்தக் கையில் தன்
    தலை சாய்த்து, மறு கையில்
    தடிமனான ஒரு புத்தகத்தை
    வைத்துக் கொண்டு படுத்தபடியே படிக்கும் போதும்
    ஒரு ராணுவ கம்பீரம்.

    இன்னொரு வியப்பான அழகு...

    ராணுவச் சீருடையில் மேல்
    சட்டையும், சாதாரண வெள்ளை
    வேட்டியும் பொருத்தமே
    இல்லாத உடைகள். பொருத்தமற்ற உடைகளிலும்
    நம்மவர் அழகாகத்தான் இருக்கிறார்.
    ------------------

    கேப்டனின் அறைக்குள்ளே
    சுப்ரமணியம் தன் இரண்டு
    தங்கைகளை கொண்டு வந்து
    தள்ளுகிறான்.

    பதறி எழும் கேப்டன் என்னவென்று வினவ, "நீங்க
    வெளியே வாங்க கேப்டன்.
    சொல்றேன்" என்கிறான்.

    "எதுக்குடா வெளியே கூப்பிடுறே..? இங்கேயே
    சொல்லேன்."

    "இல்ல.. நீங்க வெளியே வாங்க
    கேப்டன்.. சொல்றேன்."

    முன்னே செல்லும் பாக்யராஜைப் பின்தொடரும்
    நடிகர் திலகத்தின் மிக இயல்பான நடை வேகம்,
    படுத்திருந்ததால் நெகிழ்ந்திருந்த வேட்டியை
    இறுக்கிச் செருகிக் கொள்ளும்
    இயல்பு, 'எதற்கு அழைக்கிறான்'
    என்பது புரியாமல் முகத்தில்
    காட்டும் கேள்விக்குறி...

    இவையெல்லாம், ஏகப்பட்ட
    சினிமா நபர்கள் படப்பிடிப்புச்
    சாதனங்களுடன் சூழ்ந்திருக்க
    வெளிப்படுத்தும் நடிப்பென்று
    நம்புவது கஷ்டம்.

    அண்ணன் ஏன் தங்களிருவரையும்
    கேப்டனின் அறைக்குள் தள்ளினான் என்பது புரியாமல்
    மலங்க மலங்க விழிக்கும்
    தங்கைகள் ஜன்னல் வழியே
    வெளியே பார்க்கிறார்கள்.

    கேப்டனை அழைத்துக் கொண்டு வெளியே வந்த
    சுப்ரமணியத்தை என்னவென்று
    கேப்டன் அதட்டிக் கேட்க..
    பதில் சொல்வதற்கு சுப்ரமணியத்தை முந்திக்
    கொள்கிறது.. அவனது கண்ணீர்.

    பொறுப்பற்றவனாகவும்,
    தனது அவநம்பிக்கைக்கு
    உரியவனாகவுமே பார்த்த
    சுப்ரமணியத்தை முதன்முறையாக வேறு மாதிரிப் பார்க்கிறார்..கேப்டன்.

    " கேப்டன்.. பெரிய தங்கச்சியப்
    பொண்ணு பார்க்க வந்திருக்காங்க. அவளுக்கு 20
    வயசாகுது.இவங்கள்ல
    ஒருத்திக்கு 15 வயசு. இன்னொருத்திக்கு 16 வயசு.
    இவங்க ரெண்டு பேரும் அங்கே
    இருந்து, வந்தவங்க, பெரியவ
    வேண்டாம்.. இவங்க ரெண்டு
    பேர்ல யாராவது ஒருத்தியைக்
    கட்டிக் குடுங்கன்னு கேட்டா..
    நான் யாருக்குன்னு......?

    கவலை, அவன் தொண்டையை
    அடைக்கிறது. குரலோடு அழுகை கலக்கிறது.

    "நீங்க வாங்க..கேப்டன்." என்று
    கூறி நடக்கும் சுப்ரமணியம்
    கேப்டன் உடன் வராதது கண்டு
    திரும்பிப் பார்க்க...

    அங்கே கேப்டன் கண்கலங்கி,
    அசையாத சிலையாய், தலை
    குனிந்து நின்றிருக்கிறார்.

    சுப்ரமணியம் திகைக்கிறான்.
    ஒரு கம்பீர மாமலை கண்ணீர்
    உதிர்க்கும் காட்சி..

    அவனுக்குப் புதுசு.

    "சாரி கேப்டன். உங்களையும்
    டிஸ்டர்ப் பண்ணிட்டேன்."

    இந்த இடத்திலிருந்து நடிகர்
    திலகத்தின் திறமை ராஜ்யம்
    மிகப் பெரிதாய் விரிகிறது.

    "சுப்ரமணி.. நான் சின்னப் புள்ளையா இருக்கும் போது,
    மிலிட்டரில சேர்ந்த புதுசு..
    எங்க அதிகாரி என்ன பண்ணுவான்..? ஃபைவ் ஹண்ட்ரர்ட் எக்ஸ்பிரஸ்னு ஒரு துப்பாக்கி இருக்கு. அதை என்கையில குடுத்து சுடுடா அப்படிம்பான்.. தமாஷா.
    அது எப்படி தெரியுமோ..?
    கொஞ்சம் அசந்தாலும் தோள்பட்டையைக் கழட்டிடும்.
    எப்பேர்ப்பட்ட ஆளாயிருந்தாலும் சரி.
    ஆடிடுவான். ஆனா நான்,
    ஆடாம அசையாம நின்னு
    தைரியமா ஷூட் பண்ணுவேன். எல்லாரும்
    கை தட்டிச் சந்தோஷப்படுவாங்க.

    ஆனா நீ... இவ்வளவு சின்ன
    வயசில, அஞ்சு தங்கச்சிகளுக்கு அண்ணனாப் பொறந்து..
    ஒவ்வொரு நிமிஷமும்,
    ஒவ்வொரு தோட்டாவை
    உன் நெஞ்சில தாங்கிக்கிட்டிருக்கியே..!?
    உன் குடும்ப பாரத்துக்கு முன்னாடி என் மிலிட்டரி
    சர்வீஸ் எல்லாம்... தூசுய்யா..!"

    எத்தனை அருமையான உவமையுடன் கூடிய வசனம்?
    எவ்வளவு உணர்வுப்பூர்வமான
    காட்சியமைப்பு?

    நெல்லிக்காயைத் தின்ற பின் தண்ணீர் அருந்த..இனிக்கிற நிச்சயமாய், நடிகர் திலகத்தின் திறம் பார்த்து நாம் சந்தோஷிக்கிற நிச்சயத்தை மெய்ப்பிக்கிறது
    இந்தக் காட்சி.

    பாக்யராஜின் தோள்களில்
    தட்டிக் கொடுத்து நடிகர் திலகம்
    பூர்த்தி செய்யும் இந்தக்
    காட்சியைப் பார்த்த பிறகு..
    நம் கண்களிலே மளமளவென
    நிறையும் கண்ணீரில்...

    கண்ணோடு கலந்து விட்ட
    அந்த மகத்தான கலைஞனின்
    பிம்பத்திற்கு...

    அபிஷேகம் நடக்கிறது.


    (...தொடரும்...)
    Last edited by Aathavan Ravi; 17th December 2015 at 12:23 PM.

  16. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  17. #1719
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    இந்த அருமையான ஓவியத்தைத் தீட்டியுள்ள
    திரு.கௌஷிகன் ராமையா
    அவர்கள், "சிவாஜி அவர்கள்
    கையில் துப்பாக்கி இல்லை.
    ஆனால், அந்த முகம் "ஐ வில்
    ஷூட் யூ" என்கிறதாய்..
    எவ்வளவு அழகாக
    வெளிப்படுத்தியிருக்கிறார்..?
    ஒப்பற்ற மகா கலைஞர்." என்று
    எனக்கு எழுதி வியந்திருக்கிறார்.

    நடிகர் திலகத்தை மிக நேசிக்கும் அவரது ஆழ்ந்த
    ரசனையும், திறமையும் நம்மை
    அசத்துவதில் வியப்பில்லைதானே..?

  18. Thanks Russellmai thanked for this post
  19. #1720
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆதவன்
    தாவணிகனவுகளில் நீங்கள் பதிவிட்ட அந்த ஸ்டில் அப்பொழுது பெரும் ஆர்வத்தை தூண்டி விட்ட ஸ்டில்.அந்த ஸ்டில் தான் நான் பார்த்த அந்தப்படத்தின் முதல் ஸ்டில்.
    உங்களின் பட ஆய்வு நன்றாக உள்ளது.


    (இவையெல்லாம், ஏகப்பட்ட
    சினிமா நபர்கள் படப்பிடிப்புச்
    சாதனங்களுடன் சூழ்ந்திருக்க
    வெளிப்படுத்தும் நடிப்பென்று
    நம்புவது கஷ்டம்.)



    வாழ்த்துக்கள்.
    Last edited by senthilvel; 16th December 2015 at 10:32 PM.

  20. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •