Page 182 of 401 FirstFirst ... 82132172180181182183184192232282 ... LastLast
Results 1,811 to 1,820 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #1811
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    கோடிக் கணக்கான
    கண்களைத்
    தம்மை நோக்கித் திருப்பிய
    இரண்டு கண்கள்.

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1812
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று காலை பழனி கோவிலுக்கு சென்றேன். வழக்கம்போல அடிவாரத்தில் இறைவன் கணபதியையும் கலை தெய்வம் சிவாஜி அவர்களை சித்தநாதன் விபூதி ஸ்டோரில் பார்த்தவுடன் செல் போனில் படம் பிடித்து விட்டு பின்பு முருகனை மலையேறி தரிசித்து வந்தேன்



  5. Thanks RAGHAVENDRA, Russellmai thanked for this post
  6. #1813
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தரிசனம்-2.
    ------------
    தாவணிக் கனவுகள்.
    ---------------------
    தொடர்கிறது.
    ---------------
    ( 9 )
    -------

    படித்த படிப்புக்கு வேலையில்லை...

    சமூகத்தில் தனக்கென்று
    ஒரு அடையாளமில்லை...

    நாலு பேருக்கு நடுவே ( சொந்த
    வீட்டில் கூட) தனக்கு
    மரியாதையில்லை...

    வெறுத்துப் போகிறான்..
    சுப்ரமணியம்.

    நம்பிக்கை தளர்ந்த உடலோடு
    நீண்ட கால்கள், மீண்டும்
    சாராயக்கடை நோக்கி
    பயணிக்கின்றன.
    ---------------

    நான் சிறுவனாயிருந்த போது,
    வீட்டில் தேங்காய் உடைத்தால்,
    பாத்திரத்தில் தேங்காய்த் தண்ணீரைப் பிடித்து வைத்துக்
    கொண்டு என் அம்மா "தண்ணி..
    நல்ல இனிப்பு. யாருக்கு வேணும்?" என்பாள். எனக்கு,
    எனக்கு என்று ஏழெட்டுக்
    கைகள் நீளும். அடித்துப்பிடித்து
    அத்தனை பேரும் குடித்த பிறகு
    எனக்கு ஒரே ஒரு சொட்டு
    எஞ்சும்.

    ஆனால்... நேர்கீழாய்ப் பாத்திரத்தைக் கவிழ்த்து
    நாவில் நான் சொட்டிக் கொள்ளும் அந்த ஒரு துளி
    தேங்காய்த் தண்ணீரின் இனிப்பு,
    தேனையும் மிஞ்சும்.

    இந்தக் காட்சி தேங்காய் தண்ணீர் போல. சிறியதாயினும் இனியது.

    "டேய்.. சுப்ரமணி.. நில்லுடா"
    என்று கூவிக் கொண்டே
    சைக்கிளில் விரைந்து வரும்
    கேப்டன், வேகம் குறைத்து
    சுப்ரமணியத்தின் அருகில் வந்து நிறுத்துகிறார்.

    "எங்கடா போறே?"

    "நீங்க போங்க கேப்டன்..நான்
    வர்றேன்."

    " நீ எங்கே போறேன்னு எனக்குத் தெரியும். சாராயக்
    கடைக்குப் போய்க் குடிச்சிட்டா
    பிரச்சினைல்லாம் தீர்ந்துருமா?
    டேய்.. நீ ஆம்பளைடா.. ரோஷமா வெளில வந்துட்டே.
    அங்கே பொட்டப் புள்ளைங்க
    என்ன செய்யும்? பாவம்.. வீட்டைப் பூட்டிக்கிட்டு ஓன்னு
    அழுதுட்டிருக்குங்க. வா.. வந்து
    அவங்களுக்கு தைரியம்
    சொல்லு." என்று கை பற்றி
    அழைக்கிறார்.

    சுப்பிரமணியம் தழுதழுத்த
    குரலில் சொல்கிறான்...
    "ஏன் கேப்டன்.. நடந்ததெல்லாம் நீங்களும் பாத்துக்கிட்டுதானே இருந்தீங்க? நான் என்னன்னு
    அவர்களுக்கு தைரியம் சொல்றது?"

    பெரிய மனிதர்களுக்கே உரித்தான அந்த அனுபவ
    தொனியில் கேப்டன் சொல்கிறார்... "என்னத்தே
    செய்யிறது? வீட்டுக்கு வீடு
    வாசப்படிதான்.வா.. அவங்களை சமாதானப்படுத்தி
    ஏதாவது சினிமாவுக்குக்
    கூட்டிட்டுப் போ."

    "கேப்டன் சிதம்பரம்" என்கிற
    பெரியவர் கதாபாத்திரம் ஏற்று,
    பக்கம், பக்கமாய் வசனம்
    பேசாமல், நமக்கு மிக மிகப்
    பழகிய நடைமுறை பேச்சு வழக்குத் தமிழில், "என்னத்தே
    செய்யிறது?" என்று நம் நடிகர்
    திலகம் நீட்டி முழக்கிப் பேசும் எளிமையைப் பார்க்கும் போது, கையடக்க மலிவுப் பதிப்பில் ஈடு இணையிலா திருக்குறள்
    படிப்பது போல் திருப்தி.

    இதம்.

    மகிழ்வு.


    ( ... தொடரும்... )

  7. Thanks Russellmai thanked for this post
  8. #1814
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    தாளம் போட வைக்கும்.
    எழுந்து ஆடத் தோன்றும்.
    சோர்ந்து போனவர்களைக் கூட உற்சாகம் கொள்ள வைக்கும்.
    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்.

    அந்தப்பாடல்
    கேட்டவரெல்லாம் பாடலாம்
    பாடல்தான்.
    டக்டக் டடகடக் ம்ம்ம் உகூம் ம்ம்ம்உகூம்டக் டக் டக் டடக ஹோஹோஹோஹோ ஹோய்
    என கம்மிங்கை முடிக்கும் போது,
    இடது காதை இடது கையால் தடவிக்கொண்டே
    இசைக்குழுவைப் பார்த்து வலது
    கையால் இசையைஆரம்பியுங்கள் என்று கையயால் ஒரு சிக்னல் கொடுப்பார்.
    அ ந்த விரல் ஸ்டைல் படு பிரமாதமாயிருக்கும்.அது
    எல்லோருக்குமே பிடிக்கும் அதிலிருந்து தான் ஆரம்பிக்கும் அவருடைய ஸ்டைல்களின் அட்டகாசம்.
    25 வருடங்களுக்கு முன் கல்லூரி வகுப்பறையில் நடந்த நிகழ்ச்சி என் நெஞ்சில் வந்துநிற்கிறது.பிரிவை எண்ணி வருந்திக்கொண்டிருந்த கல்லூரிக்காலகட்டத்தின் கடைசி நேரங்களில் ஒன்று .பேராசிரியர் மற்றும் நாங்கள் மௌனமாக அந்த பொழுதை ஓட்டிய நேரம் அது.அந்த நிசப்தம் பேராசரியரையே வதைத்ததோ என்னமோ திடீரென்று
    அவரே வகுப்பை கலகலப்பாக்க
    எல்லோரும் ஒரு பாடல்,அவரவர்களுக்கு பிடித்த ஒரு பாடலை பாடலாம் என்று கூறி வகுப்பை உற்சாகமாக்க ஐடியா சொன்னார்.யாரும் பாடும் மனநிலையில் இல்லை.பார்த்தார் பேராசிரியர்.அவரே பாட ஆரம்பித்து விட்டார்.அன்று அவர் பாடிக் காண்பித்த பாடல்தான் இது.மேற்கொண்டு அந்தப் பாடலின் தனித்துவத்தையும் விளக்க ஆரம்பித்துவிட்டார்.ஒரு பாடலைக் கேட்டாலஅந்தப்பாடல் பாடலைக் கேட்பவர்களையும்தன்னிச்சையாக பாடத் தூண்டுவதோடு உற்சாகத்தையும் அளிப்பதாக இருக்கவேண்டும்.அந்த சக்தி இந்தப்பாடலுக்கு இருக்கிறது.இது போன்ற தருணங்களில் இது மாதிரியான பாடல்கள் ஆரம்பத்திலேயே பாடும்போது அது இன்னும் நம்மை மறந்து அந்த
    இசை க்கு மனம் சுலபத்தில் மாறிவிடும்.மேடைப்பாடல்களின் ஈர்ப்புக்கு இந்த பாடல் சரியான தேர்வு,
    என்று ஒரு நீண்ட விளக்கமும் அளித்தார்.இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் என்னால் அந்த நிகழ்வை மறக்க முடியாது.

    ம்ம்க்ககும் மம்ம்க்க்கும்ஹஹூக்கும்
    (ஹம்மிங்)
    வாய் திறக்காமலே ஹம்மிங்.
    இந்த இடத்தில் அந்த பாடி லாங்வேஜ்ஜை என்னவென்று எழுதுவது என்றே தெரியவில்லை.அதை வர்ணிக்க பொருத்தமான வார்த்தைகள் தேடினால் வார்த்தைகளுக்கே பஞ்சமா?என்று தோன்ற வைக்கிறது.வாயைத் திறக்காமலேயே வயிற்றில் உள்ள காற்றை நெஞ்சுக்கூட்டுக்குகொண்டு வந்தும்
    வாயிலுள்ள காற்றை குரலிலே பாடகர் கொண்டு வந்ததை இம்மி பிசகாமல் நடிப்பிலே காட்டுவதற்கு எத்தனை சிரமம்.ஆனால் நடிகர்திலகத்திற்கு அது ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது என்பது அந்தக் காட்சியைப் பார்த்தால் நன்றாகவே தெரியும்.



    கேட்டவரெல்லாம் பாடலாம்
    என் பாட்டுக்குத் தாளம் போடலாம்
    கமான் கிளாப்ஸ்..
    கேட்டவரெல்லாம் பாடலாம்
    என் பாட்டுக்குத்தாளம் போடலாம்.
    பாட்டினிலே பொருளிருக்கும்.
    பாவையரின் கதையிருக்கும்.
    மனமும் குளிரும்
    முகமும் மலரும்
    ஒஹொஹொஹோஹோஹோஹோஹோ.

    சீட்டுக் கட்டு ராணி மாப்பிள்ளைத் தேடி ஊர்வலம் போனாள் ஒரு நாளில்..
    கூட்டத்தோடு நானும் பார்த்துக் கொண்டு நின்றேன் கூட வந்த தோழி என்னைப் பார்த்தாள்
    கண்ணாலே ஜாடை செய்து கையோடு என்னைக்கொண்டு போனாள்
    தோழியின் வயதோ அறுபதுக்கு மேலே
    பாடலிலே நடித்தவர்கள் மட்டுமல்ல
    அரங்கமே அதிரும் அல்லவா இந்தகாட்சிக்கு.முதல் இரண்டு வரிகளில் தேடலைச் சொல்லி பின் ஈர்ப்பதைச் சொல்லி அது காதலாக மாறியதைச் சொல்லி கடைவரியில் சஸ்பென்ஸ் வைத்து அது காமெடியாய் முடித்திருப்பாரே கவிகளுக்கு அரசர்.பிற்காலத்தில் புகழ்பெற்ற ஹைக்கூ கவிதை அமைப்பில் இந்த வரிகள் அமைந்திருக்கும்.
    சீட்டுக்கட்டு ராணி என்று பாடும்போது இடது கை விரல்களை சுண்டிக்கொண்டே உடம்பை முறுக்கி வளைத்து ,விழிகளை விரித்து...
    அருமை அருமை அருமை.
    கூட்டத்தோடு நானும் என்பதில் அந்த கை சைகை,
    பாலாஜி மேல் மோதி அதற்குமன்னிப்பு கோரும் பாவனை,
    வயது அறுபதுக்கும் மேலே என்பதற்கு வயதான பெண்ணின் நிலையை காட்டும் தோரணை என்று தொடர்ச்சியான சின்ன சின்ன அசைவுகளில் கூட உஷாரான நடிப்பு.ஸ்வீட் சிக்ஸ்ட்டி என்று கண்ணடிப்பதும் அந்த உதட்டசைவும்
    புருவமேற்றுவதும் பார்க்கும் அனைவரையும் அவர் நடிப்பை போற்ற வைக்கும்.பின்னால் கையைக்கட்டி கொண்டு மெல்ல ஆடிச் செல்லும் நடனம் என்று ரசிப்புகளை கூட்டிக்கொண்டே செல்வார்.

    என் உறவினர் ஒருவர் வேறு நடிகரின் அபிமானி.என் சிறு வயதில் அவர் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் அடிக்கடி இந்த பாடலை பாடிக்கொண்டேயிருப்பார்.நீங்கள் எப்படி இந்த பாடலை? என்று நானும் கேட்பேன்.எல்லா அம்சங்களும் நிறைந்த இந்த துள்ளலானபாடல் எனக்கு மட்டுமல்ல,திரைப்பட பாட்டை யார் விரும்பிக் கேட்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் பிடிக்கும்.ஆயிரம் இருந்தாலும் என் மனதில் இருந்து சொல்கிறேன்,கணேசனின் இந்த நடிப்பை யாராலும் செய்யமுடியாது.
    நான் நினைத்துக் கொண்டேன்.
    "யாரையும் கட்டிப் போடும் நடிப்பு
    நடிகர்திலகத்தின் நடிப்பு".

    ..கேட்டவரெல்லாம் பாடலாம்.,
    படிகளில் ஏறி நின்றுடான்ஸ் ஆடும் ஸ்டைலில் பட்டையைக் கிளப்புவார்.
    உடலசைவுகளில் துள்ளல்கள் துள்ளி விளையாடும்.காண்போர் தம் கண்ணில்பரவசம் வந்து குடி கொள்ளும்.

    அந்தப்புரம் போனேன் ராணி முகம் பார்த்தேன்
    அச்சம் கொண்டு நின்றாள் அழகோடு
    அழகோடு அழகோடு அழகோடுஎன
    கே.ஆர்.விஜயாவைபார்த்து மெய் மறந்து மெல்ல சுதியைக் குறைத்துபின் இயல்பாகி,
    ஒரு நடை நடந்து வருவாரே பாருங்கள்.நடனமும் நடையும் கலந்த அந்த நடையில் சொக்கி விடுவோம்.
    அள்ளி வைத்த கூந்தல் துள்ளி விளையாட கள்ள நகை செய்தாள் கனிவோடு
    கே ஆர் விஜயா இங்கே புன்னகைக்க,
    நெஞ்சைப் பிடித்து அந்த திருப்தியை வெளிப்படுத்தும் பாங்கு இருக்கிறதே. பிரமாதத்திலும்பிரமாதம்.
    அது போதும் போதுமென்று பலகாலம் வாழ்க வென்று இசை பாட நானும் வந்தேன் சுவையோடு....


    கடைசியில் அந்த
    பப்பரபப்பா பப்பரபப்பாப்பாபா
    பப்பரபப்பாபா பப்பாராப்பா பப்பாவில்
    ஆடும் ஆட்டம் எல்லாவற்றிக்கும் மேலான உச்சம்.அவர் போடும் ஸ்டெப்என்ன,கை தூக்கி ஆடும் அந்த டைல் என்ன,அந்த உற்சாகம் என்ன
    லோக்கல் பாஷையில் சொல்வதென்றால்
    "பட்டைய கிளப்பியிருப்பார்."


    KETTAVARELLAM PADALAM.MOVIE: THANGAI.TMS:

  9. Thanks RAGHAVENDRA, Russellmai thanked for this post
  10. #1815
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முன்அட்டை

  11. Thanks RAGHAVENDRA thanked for this post
  12. #1816
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks RAGHAVENDRA, Russellmai thanked for this post
  14. #1817
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  15. Thanks RAGHAVENDRA, Russellmai thanked for this post
  16. #1818
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  17. Thanks RAGHAVENDRA, Russellmai thanked for this post
  18. #1819
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  19. Thanks RAGHAVENDRA, Russellmai thanked for this post
  20. #1820
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அதே புத்தகத்திலிருந்து
    Last edited by senthilvel; 23rd December 2015 at 07:56 PM.

  21. Thanks RAGHAVENDRA, Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •