Page 374 of 401 FirstFirst ... 274324364372373374375376384 ... LastLast
Results 3,731 to 3,740 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #3731
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Today (11/03/2016) 44 years completion of Gnana Oli. Vasu had a dream that our God is reprimanding him for not doing anything here. Vasu ,this is for you. I consider this as one of my best in writing. Disappointingly,so called World movie fan Ragavendra, Fine Connoissure Murali, didnt take it further. Vasu complimented a lot. Why there is no intelligence even among our Group People,I cant make it out. Atleast from Adhavan Ravi,Senthil, I expect some intelligent inputs.



    ஞான ஒளி-1972

    நான் சற்றே நேரம் எடுத்து சிலவற்றை விஸ்தாரமாய் விளக்கி விட்டு நடிகர்திலகத்தின் நடிப்பு வெள்ளத்தில் நீந்துவேன். தயவு செய்து உங்கள் புரிதல் பற்றிய உடன் வினை-எதிர்வினை இன்றியமையாதது.

    பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.

    ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.

    ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.

    Typical Behaviours of an orphan-

    1)Poor Self Regulation
    2)Emotional Volatility.
    3)Act on Impulse.
    4)Immediate Urge for self-gratification.
    5)Mixed Maturity levels.
    6)Self parenting syndromes-Taking justice in their hands.
    7)Learned Helplessness
    8)Extreme Attention seeking.
    9)Indiscriminate friendliness.
    9)Absessive compulsive Tendencies.
    10)Idiosynchrasies.


    மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .

    அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.

    தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.

    poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
    தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.

    obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?

    துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?

    இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.

    இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.

    நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.

    நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.

    அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.

    நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.

    பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.

    இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....

    மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.

    இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks uzzimah, Harrietlgy, Georgeqlj thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3732
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks Russellmai thanked for this post
    Likes uzzimah, Harrietlgy, Russellmai, Georgeqlj liked this post
  6. #3733
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Location
    Adayar, Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    This still symbolically shows, Madam is going to be crowned again as CM of Tamilnadu on May 19.

  7. #3734
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கடந்த 5 நாட்கள் சன் தொலைக்காட்சியில்
    திங்கள் இரவு 11 மணிக்கு கந்தன் கருணை
    செவ்வாய இரவு 11 மணிக்கு மூன்று தெய்வங்கள்
    புதன் இரவு 11 மணிக்கு உத்தம புத்திரன்

    வியாழன் இரவு 11 மணிக்கு பாரத விலாஸ்
    வெள்ளி இரவு 11மணிக்கு திரிசூலம்

    ஆகிய நடிகர் திலகத்தின் படங்களை ஒளிபரப்பப்பட்டது


    வரும் ஞாயிறு பகல் 2 மணிக்கு சன் தொலைக்காட்சியில்
    தில்லானா மோகனாம்பாள்

    ஒளிபரப்பாகவுள்ளது
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. Likes Georgeqlj, Harrietlgy liked this post
  9. #3735
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்புப் பேரலைகள் மோதி ஆர்ப்பரிக்கும் கடற்கரைப் பாறைகள்!

    From GG Island of bed rocks and beach waves, Senthil with Love!

    காதலின் சாட்சியாக அலையடிக்கும் மனமும் காதல் தோல்வியின் காட்சியாக புயலடிக்கும் நெஞ்சமும் !

    காதல் என்னும் மந்திரக் கோல் மனக்கதவைத் திறக்கும் போது எண்ணிரண்டு பதினாறு என்னும் அடிப்படைக் கணிதம் தத்துவமே!

    காதல் அலைகளில் நீந்தும் நடிகர் திலகமே தன்னை மறந்து பாறை மேல் ஏறுகிறார்...பாடுகிறார்...பாறையும் அலைகளும் தாளம் தட்ட....





    கடற்கரைப் பாறையில் அலையடிக்கும்... காதலில் தோல்வியுற்ற மனத்திரையிலோ புயலடிக்கும்...

    யார் சிரித்தால் என்ன ..... இங்கு யார் அழுதால் என்ன காதல் மன்னரே புலம்பலாமா ?!


    Last edited by sivajisenthil; 12th March 2016 at 11:03 PM.

  10. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  11. #3736
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Thread's fast run towards 400!

    Gap filler from Uththaman!

    Just a shot in which NT proves his prowess as to why he is regarded as the demi God of acting! Watch how his face absorbs the shock when the doctor utters 'your son has had a polio attack' and how the same is thrown to pierce into the heart of the viewer experiencing his pains!! One of the fantastic one shot facial expression and body language NT has etched in my memory forever!!

    Last edited by sivajisenthil; 13th March 2016 at 02:24 AM.

  12. Thanks Russellmai thanked for this post
  13. #3737
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Monotony breaker!Baktha Thukaaraam with ANR!

    NT's incarnation as Veera Shivaji the Warrior King!
    True to his coveted title as Shivaji!!

    Sparkling horse riding sword fight makes the viewers spellbound upon witnessing the perfection of NT's negotiations during the battle controlling the uncontrollable horse by instinct and wielding the sword!!

    This amazing original stunt without a body double is a remarkable feat parading the extra ordinary devotion and dedication of NT even as he was making his guest appearance in this ANR film!

    Last edited by sivajisenthil; 13th March 2016 at 02:41 AM.

  14. Thanks Russellmai thanked for this post
    Likes Georgeqlj, KCSHEKAR, Russellmai liked this post
  15. #3738
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Climax fight scene in Sorgam balancing on a mud sinking car to save Manohar!


  16. Thanks Russellmai thanked for this post
  17. #3739
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    James Bond based NT's Fight Scenes

    நடிகர்திலகம் நடிப்பின் இலக்கணமாகவும் நடிப்பின் இறைவனாகவும் உருவகம் கொண்டு நடிப்பின் வரலாற்றுப் பக்கங்கள் புரண்டு கொண்டு வரும் வேளையில் ரசிகர்களின் வேண்டு கோளுக்காக வணிகரீதியில் அமைந்த படங்களில் தயாரிப்பளர்களின் சொர்க்கம் என்ற சாதனை இடத்தையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டி
    சண்டைக் காட்சிகளிலும் சிறப்பிக்க எண்ணினார் தனக்கென உரித்தான சுற்றுப் புற நிகழ்வுகளைக் கவனத்தில் கவ்விக் கொண்டு ஆங்கில திரை பாணியில் இவ்வகை சண்டைக் காட்சிகளுக்கான அங்க அசைவுகளின் முக பாவனைகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு
    பெரும் பாலும் டூப் போடுவதைத் தவிர்த்து சண்டை சாகசங்களில் இணை யேதுமில்லாமல் உலக ரசிகர்களைக் கிறங்கடித்த ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரியின் சண்டை வடிவமைப்பில் ரசிகர்களைத் திருப்திப் படுத்த எண்ணினார். தங்க சுரங்கம், சிவந்த மண், ராஜா போன்ற திரைப்படங்கள் ஷான் கானரியின் சுறுசுறுப்பான ஆளுமையும் சற்று முரட்டுத்தனமும் நிறைந்த சண்டைகளின் நிழலில் அமைக்கப் பட்டு நடிகர் திலகத்துக்கு பெயர் சொன்ன சண்டைக் காட்சிகளாக இன்றளவும் வரவேற்புப் பெற்றவையாகும் !
    Slim and Sleek NT's dare devil original stunt in this unforgettable ever helicopter chase sequence in Sivandha Mann..Of course, inspired by the similar sequence in the climax of OO7 From Russia with Love!



    OO7 James Bond/Sean Connery's dash and verve!

    Last edited by sivajisenthil; 13th March 2016 at 08:47 AM.

  18. Thanks Russellmai thanked for this post
  19. #3740
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler and Monotony breaker!
    Whip wielding/lashing Zorro NT!
    துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் ஜேம்ஸ் பாண்ட் கூட பொறாமைப்படும் தமிழனின் சாகசம் பம்பரம் போல சுழலும் கதாநாயகியின் கூந்தல் மலரை சாட்டை கொண்டு நோகாமல் நொங்கெடுப்பதுதான் !
    ஜேம்ஸ் பாண்ட் கோட் சூட்டில் ஷான் கானரி கூட முயற்சிக்காத சாகசத்தை நடத்திக் காட்டும் நடிகர்திலகம் !
    தியேட்டரில் விசில் அலப்பரை அமர்க்களப் படுவதில் வியப்பென்ன !

    இதையே இன்னும் முன்னேறி அரேபியன் உடையலங்காரத்தில் சிவந்த மண்ணில் சாட்டை கொண்டு பம்பரமாக காஞ்சனாவை சுழல வைக்கிறார் நடிகர்திலகம் !
    Last edited by sivajisenthil; 15th March 2016 at 08:23 PM.

  20. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •