Page 153 of 401 FirstFirst ... 53103143151152153154155163203253 ... LastLast
Results 1,521 to 1,530 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #1521
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலத்தின் பிறந்தநாள் விழா இணைப்புடன் வசந்தமாளிகை

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1522
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தங்கப்பதக்கம் நாடக விளம்பரம்
    முழுப்பக்கம்
    தினத்தந்தி

  4. #1523
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks JamesFague, RAGHAVENDRA thanked for this post
  6. #1524
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Vikram Prabhu on his own has till today given 5000 to 7000 needed people food packets & 2000 people with packets of milk ...

  7. #1525
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அந்த நாள் ஞாபகம்

    1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்


    கடந்த பதிவின் இறுதி பகுதி

    பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழாவிற்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் விஜயம் செய்கிறார் என்ற செய்தி வந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

    இங்கிருந்து பதிவு தொடர்கிறது

    மறு நாள் அக்டோபர் 29 நடிகர் திலகம் வரப் போகிறார் என்று தெரிந்ததும் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க ஆராம்பித்தது அதற்கு முன்பு அவரை நேரில் பார்த்த அனுபவங்கள் மனதில் நிழலாட தொடங்கின.

    நினைவு தெரிந்த பிறகு 1966-ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது மதுரையின் நான்கு மாசி வீதிகளில் ஊரவலமாக அழைத்து வரப்பட்டார் அப்போதுதான் அவரை முதன் முறையாக பார்த்தேன்.

    1970- நவம்பரில் ராமன் எத்தனை ராமனடி 100-வது நாள் விழாவிற்கு நியூசினிமா வந்தபோது அந்த காட்சிக்கு போய் அவரைப் பார்த்தது இரண்டாம் முறை

    1971- பொது தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது பார்த்தது மூன்றாம் முறை.

    அதன் பிறகு அவர் பலமுறை மதுரை வந்திருந்தாலும் இப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு அமைகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் பல முறை அவர் வந்தபோதும் அவர் தங்கியிருந்த இடமோ அல்லது அவர் கலந்து கொள்ளும் நிகழ்வோ நடைபெற்றது நகரின் வேறு இடத்தில. ஆனால் இப்போது எங்கள் வீட்டிற்கு வெகு அருகே அமைந்திருக்கக் கூடிய சென்ட்ரல் சினிமாவிற்கு வருகிறார். ஆகவே வாய்ப்பு கூடுதல்
    ஆனால் மனதில் ஒரு சந்தேகம். அவர் மதியக் காட்சிக்கு மட்டும் வருகிறாரா அல்லது மூன்று காட்சிகளுக்கும் வருகிறாரா என்பது குழப்பமாக இருந்தது பலரிடம் கேட்டும் யாருக்கும் சரியாக தெரியவில்லை. மாட்னி ஷோவிற்கு உறுதியாக வருகிறார் என்பது மட்டுமே சொன்னார்கள்.

    எப்படி போவது? எப்படி டிக்கெட் வாங்குவது போன்ற கேள்விகள் மனதில் வட்டமிட ஆரம்பித்தன. கஸினிடம் கேட்டதற்கு பார்ப்போம் என்று சொன்னான். அதைப் பற்றியே நினைத்து நினைத்து பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டருகே குடியிருந்த சக வயது நண்பன் ஒருவனும் [வசந்த மாளிகை 100-வது காட்சி பார்க்க என்னுடன் வந்தவன்] தானும் வருவதாக சொன்னான்.

    மறுநாள் விடிந்தது. காலை தினத்தந்தி விளம்பரத்தில் மதியக் காட்சிக்கு சென்ட்ரல் திரையரங்கிற்கு விஜயம் செய்கிறார் நடிகர் திலகம் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள். நடிகர் திலகத்தோடு மற்ற நட்சத்திரங்களும் மேடையில் தோன்றும் அந்த வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வசந்த மாளிகையின் மதுரை விநியோகஸ்தரும் விளம்பரம் கொடுத்திருந்தார். மட்டுமல்ல, முதல் நாள் இரவு வரை நடைபெற்ற 103 காட்சிகளும் அரங்கு நிறைந்ததையும் குறிப்பிட்டு வெள்ளிவிழாவை நோக்கி வெற்றி நடை போடுகிறது என்ற வாக்கியத்தையும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான 31-வது நாளன்றே வெள்ளி விழா என்று கொடுக்கபப்ட்டது என்று சொன்னால் படத்தின் வெற்றி பற்றி எந்தளவிற்கு நம்பிக்கையாக இருந்தார்கள் என்பது புரியும்.

    அன்றைய நாட்களில் நகரில் ஓடும் அனைத்துப் படங்களின் விளம்பரமும் தினசரி தினத்தந்தியில் வெளியாகும். மதுரை பதிப்பில் வெளியாகும் விளம்பரம் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் படங்கள் ஓடும் பட்டியலை கொண்டிருக்கும். இந்த விளம்பர செலவு அந்தந்த ஏரியா விநியோகஸ்தரை சார்ந்தது.

    இரண்டு மூன்று முறை தியேட்டர் பக்கம் போய் வந்தாகி விட்டது. தியேட்டர் வாசலில் பரபரப்பான சூழலும் ரசிகர்கள் கூடி நிற்பதையும் பார்க்க முடிந்தது. டிக்கெட் பற்றி கஸினிடம் கேட்டால் சொல்லியிருக்கேன். இன்னும் கிடைக்கலை என்றான். காலை முடிந்து பகல் வந்தது. ஆனாலும் ஒன்றும் தெரியவில்லை. தியேட்டர் பக்கம் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி சென்ற கஸினையும் காணவில்லை.

    பகல் காட்சி ஆரம்பிக்கும் நேரம் கடந்து சென்றவுடன் புரிந்து விட்டது டிக்கெட் கிடைக்கவில்லை என்று. மூன்று மூன்றரை மணி சுமார் நானும் பக்கத்து வீட்டு நண்பனும் அப்படியே சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போகிறோம். ஹவுஸ் புல் போர்டு மாட்டப்பட்டிருக்கிறது. தியேட்டர் வாசலில் பெருங்கூட்டம். இன்னமும் நடிகர் திலகமும் ஏனைய நட்சத்திரங்களும் வரவில்லை என்பது புரிந்தது. ரேஸ் கோர்ஸ் அருகே அமைந்திருக்க கூடிய பாண்டியன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் திலகமும் மற்றவர்களும் தியேட்டரின் முன்புற வாசல் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்பதால் அப்போது பார்த்து விடலாம் என்று பெரும்பாலானோர் அங்கே நிற்பது தெரிந்தது.

    10,15 நிமிடம் அங்கேயே உலாத்தினோம். திடீரென்று பயங்கரமான கைதட்டலும் வாழ்க கோஷங்களும் கேட்க மேல மாசி வீதியிலிருந்து தியேட்டர் அமைந்திருக்கூடிய டவுன் ஹால் ரோடில் இடது பக்கமாக திரும்பி கார்கள் வருவது தெரிந்தது. ஆனால் அந்த கார்களை பார்த்தவுடன் கூட்டம் முன்னோக்கி பாய்ந்ததில் சிறுவர்களான நாங்கள் நிலைகுலைந்து போனோம். எங்களுக்கு முன்னால் எங்களை விட உயரம் கூடிய மனிதர்கள் நிற்க எத்தனை எம்பி எம்பி குதித்தும் யாரையும் பார்க்க முடியவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமாய் போனது.

    அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவர் தன் அருகில் இருந்தவரிடம் நாம் மேல மாசி வீதி போய் விடலாம். காரணம் இந்த விழா முடிந்து திரும்ப நடிகர் திலகம் பாண்டியன் ஹோட்டல் போகும்போது மேல மாசி வீதி வழியாகத்தானே போக வேண்டும். அப்போது பார்த்து விடலாம் என சொல்லிக் கொண்டிருந்ததை கேட்ட நாங்கள் இருவரும் தியேட்டர் எதிரே அமைந்திருக்க கூடிய கோபால கொத்தன் தெரு தட்டார சந்து வழியாக மேல மாசி வீதி சென்றடைந்தோம்.

    (தொடரும்)

    அன்புடன்

  8. #1526
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    ஏற்கனவே ரொம்ப நேந்து பொய்தான் பதிவுகளை செய்கிறேன்..காத்திருந்து பதிவகள் செய்ய எனது பதிவுகள் முக்கியமானதல்ல..நான் இந்த திரிக்கு வந்ததே தப்பு சார்..இத்தோடு என் பதிவுகளை நிறுத்திகொள்கிறேன்..செருப்பு..வெளக்குமாறு..இருந்தா ல் என்னை அடியுங்கள்..நன்றி .. என்னை கட்டுபடுத்த யாருக்கும் உரிமை கிடையாது .உங்களுடைய திரட் 17 வந்ததிற்கு நானும் ஒரு காரணம்..எந்த காலத்திலும் என் தலைவன் திர்டிரிக்கு உங்களால் வரமுடியாது.. இவன் இருந்ததால் வந்து உளீர்கள்.. இனிமேல் வரமிடியது சிவாஜியால் நீங்கள் கேட்டீர்கள்.

    Dear Muthayyan Sir

    Request enbadhan porul kattalai endru ungalukku yaaro thavaraaga koori irukkiraargal endru ninaikiren.

    Request endraal vaendugol endru artham.
    Neenga arumayaana padangal padhivituleergal. Adharkku nandrigal. Adharkaaga thiriyai savaalukku azhaikaadheergal sir.

    Ungalukku ulla gowravam engalidamum ulladhu. Edharkku ippadi oru Ego ?

    Ungalaipola alladhu adhaivida kaarasaaramaaga padhivu padhilaaga kodukka enakku 2 vinaadi kooda thevaipadaadhu.

    Enadhu noakkam adhu alla . naavadakkam nanmai payakkum.

    Rks
    Last edited by Murali Srinivas; 10th December 2015 at 12:04 AM.

  9. Likes Russelldvt liked this post
  10. #1527
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    "செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
    உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
    நேர்மை - அது மாறாமல்
    தர்மம் - அதை மீறாமல்
    நாளும் நடை போடுங்கள்
    ஞானம் பெறலாம்"


    - சத்திய வாக்கு.. தீர்க்க தரிசனமான வரிகள்... தலைவரின் பாடல்கள் என்றும் எப்பொழுதும் பொருந்தக் கூடியவை, நல்வழி காட்டக்கூடியவை என்பதற்கு மற்றுமோர் சான்று.. கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் இன்று என்னமாய்ப் பொருந்துகின்றன...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Georgeqlj, Russelldvt, Russellmai liked this post
  12. #1528
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முத்தையன் சார்
    தங்களுடைய பதிவுகளை மிகவும் விரும்பும் பலரில் அடியேனும் ஒருவன். தங்கள் விருப்பம் போல தங்கள் பதிவுகளை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். அதை இங்கு ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். ஒரு கோர்வையாக இருக்கட்டுமே என்கிற எண்ணத்தில் தான் ரவி கிரண் சூர்யா கூறியிருக்கிறார். ஒருவரின் தொகுப்பு முடிந்த பிறகு இன்னொருவரின் தொகுப்பு இருந்தால் சேமித்துக் கொள்ளவும் பார்த்து ரசிக்கவும் அதில் முழுமையாக ஈடுபட்டு லயிக்கவும் ஏதுவாக இருக்கும்.

    தங்களுடைய நல்ல மனதில் கோபத்திற்கு இடம் தர வேண்டாம்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Georgeqlj, Russellmai liked this post
  14. #1529
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    நமது அருமை நண்பர்கள், வாசு சாராகட்டும், செந்தில்வேலாகட்டும், முத்தையன் ஆகட்டும், மிகவும் சிரமப்பட்டு, தங்களுடைய முழு அர்ப்பணி்ப்பினையும் கொடுத்து அபூர்வமான நிழற்படங்களையும் ஆவணங்களையும் நமக்களித்து வருகிறார்கள். அதற்கு நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

    இதற்கு பிரதியுபகாரமாக குறைந்த பட்சம் நாம் நன்றியை வெளிக்காட்டும் விதமாக நன்றிக்கான பட்டனை சொடுக்கி தெரிவிக்கலாமே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிவிற்கும் வெறும் லைக் பட்டனோடு நிற்காமல் நன்றியை வெளிக்காட்டும் Thanks பட்டனைச் சொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இதை ஒரு விதமான கட்டளையாகக் கூட கொள்க. இனி வரும் இது போன்ற ஆவண மற்றும் நிழற்படப்பதிவுகளுக்கு, அதுவும் நமக்காக தரவேற்றித் தரும் பதிவுகளுக்கு, நமது நன்றியை பட்டன் மூலமாக சொடுக்க வேண்டும் என்பதை நாம் கட்டாயமாகக்கிக் கொள்வோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Georgeqlj, sankara1970, Russellmai liked this post
  16. #1530
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தவப்புதல்வன்

  17. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •