Page 178 of 401 FirstFirst ... 78128168176177178179180188228278 ... LastLast
Results 1,771 to 1,780 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #1771
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1772
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Today's Dinamani Kanavu kannigal.
    1963ல் பானுமதி நாயகியாக நடித்து மூன்று தமிழ்ப்படங்கள் வெளிவந்தன. அவை நீண்ட காலத் தயாரிப்பில் இருந்தவை.

    மக்கள் திலகத்துடன் கலை அரசி, காஞ்சித் தலைவன், நடிகர் திலகத்துடன் அறிவாளி. தொடக்கத்தில் எதிர்பார்த்த பெரிய வெற்றி அமையாது போனது. ஆயினும் கே. டிவி வருகிற வரையில் மறு வெளியீடுகளில் தொடர்ந்து வசூலித்தன.

    ‘அறிவாளி’ சிவாஜி - பானுமதி நடித்த மற்றுமொரு சிரிப்புப் படம். ஆங்கில சினிமாவின் தழுவல். கணேசனும் பானுமதியும் போட்டி போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள். குறிப்பாக அவர்களது திருமணக் காட்சியில் வயிறு சிரித்து சிரித்துப் புண்ணாகி விடும். ஆபாசமற்ற அக்மார்க் ஹாஸ்ய அமர்க்களம்!

    ஆண் ஆதிக்கத்தை வெறுக்கும் பானுமதியின் இயல்பான குணத்தையொட்டிய கதாபாத்திரம் நாயகி மனோரமா. அதனால் பானுமதியின் நடிப்பு முழு வீச்சில் கொடி கட்டிப் பறந்தது.



    அறிவாளியின் சிறப்புக்கு குமுதம் எழுதிய விமர்சனம் கட்டியம் கூறியது.

    ‘நிமிஷத்துக்கொரு சிரிப்பு. நடிப்பில் சிவாஜியும் பானுமதியும் மோதிக்கொள்ள வேண்டும் என்ற நம் விருப்பம் நிறைவேறியது. மோதலின் முடிவு ட்ரா.

    பானுமதியின் வெளிப்படையான ஆர்ப்பாட்டத்துக்கும் கணேசனின் உள்ளடங்கிய தன்னம்பிக்கைக்கும் - வெறுப்பில் பிறந்த பானுமதியின் பரபரப்புக்கும், அன்பில் உதித்த சிவாஜியின் சூழ்ச்சிக்கும் நல்ல பொருத்தம்.

    மூன்று சண்டைப் படங்களால் கலைக்கு நேரக் கூடிய சேதத்தை, ஒரே ஓர் ‘அறிவாளி’யால் ஈடு செய்ய முடியும்.’

    குமுதம் ஓஹோவென்று அறிவாளியைப் பாராட்டி விமர்சித்த விதத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் நொந்து போனார்கள்.



    966 குடியரசு தினத்தில் பானுமதிக்கும் சிவாஜிக்கும் ஒரே சமயத்தில் பத்மஸ்ரீ பட்டம் கிடைத்தது. அதையொட்டி நடிகர் திலகமும், பானுமதியும் ஒருவரை ஒருவர் பாராட்டி, கட்டுரை எழுதினர். தமிழ் சினிமாவின் மிக அபூர்வ நிகழ்வு அது!

    பானுமதி பற்றி சிவாஜிகணேசன் -





    ‘இரவு மணி ஒன்பதுக்கு மேலிருக்கும். நாடகம் சில நிமிஷங்களுக்கு முன்பு முடிந்திருந்தது. நடித்து முடித்த களைப்பு உடலெங்கும் நிரவியிருந்தாலும் உள்ளத்திலே ஏதோ ஒரு வகை பரபரப்பு. அதையொட்டி உடலிலே ஒரு சுறுசுறுப்பு.

    அவசர அவசரமாக மேக் அப்பைக் கலைத்து விட்டு, சாப்பிட உட்கார்ந்தேன். என்னைப் போலவே என் நண்பர்களும் பறந்தார்கள். சிறிது நேரத்தில் நாங்கள் அனைவரும் கிளம்பத் தயாராகி விட்டோம்.

    எங்கே? ஸ்வர்க்க சீமா படத்தைப் பார்க்க. அதுவும் இரண்டாவது தடவையாகப் பார்க்க!

    ‘பத்மஸ்ரீ பானுமதி ’பாவுரமா’ பானுமதியாக இதில் வந்து, தனக்கென ஒரு புதிய சகாப்தத்தை வகுத்துக் கொண்டு, புகழ் ஏணியின் முதல் படியில் காலை வைத்துக் கொண்டிருந்த நேரம்.

    அதே சமயத்தில் பெங்களூரில் அப்போது சக்தி நாடக சபாவினர் முகாமிட்டு, நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

    கம்பெனியில் நானும் ஒரு நடிகன். கவியின் கனவு, ஜீவன், விதி, ராம பக்தி, மனோகரா போன்ற நாடகங்களை அப்போது அங்கு நடத்திக் கொண்டிருந்தோம். மாலையில் நாடகம் நடக்கும். இரவு ஒன்பது மணி சுமாருக்கு முடியும்.

    பெங்களூரில் அப்போது ‘ஸ்வர்க்க சீமா’ படம் திரையிடப்பட்டிருந்தது. பானுமதி இதில் பிரமாதமாக நடித்திருப்பதாகக் கேள்விப்படவே, ஒரு நாள் நாடகம் முடிந்ததும், இரவு ஒன்பது மணிக் காட்சிக்கு நண்பர்களுடன் படம் பார்க்கப் புறப்பட்டேன்.

    ஒன்றும் தெரியாத பட்டிக்காட்டுப் பெண் சுப்புலு, பெரிய நடிகையாகி, நாகரிக மங்கை சுஜாதாவாக மாறி விடுகிறாள்.

    பட்டிக்காட்டு சுப்புலுவாகவும், நாகரீக மங்கை சுஜாதாவாகவும் ஒன்றுக் கொன்று முற்றிலும் இரு மாறுபட்ட வேஷங்களில் பானுமதி சிறப்பாக நடித்திருந்தார்.

    அன்றுதான் நான் அவர் நடித்த படத்தை முதன் முதலாகப் பார்த்து, அன்றைய தினமே, அவர் ஒரு சிறந்த நடிகை என்ற மதிப்பையும் என் உள்ளத்தில் இடம் பெற வைத்து விட்டேன்.

    அப்போது நான் பெண் வேஷங்களில் நடிப்பதும் உண்டு. குறிப்பாக மனோகராவில் பத்மாவதியாக நடிப்பேன். ஆகவே ஸ்திரி பார்ட் போட்டு நடித்ததனால், ஒரு பெண் எப்படியெல்லாம் நடிக்க வேண்டும் என்பதையும் கற்பனை செய்து நடித்து வந்தேன்.

    பானுமதியை திரையில் கண்ட போது, அந்த அனுபவத்தின் அடிப்படையில் அவரது நடிப்பைக் கூர்ந்து கவனித்தேன். பெண் வேஷம் ஏற்று நடிப்பவர், பெண்ணாகவே இருந்தாலும் அதன் நெளிவு சுளிவுகளில் ஒரு தனி குணத்தையே பானுமதியின் நடிப்பில் காண முடிந்தது.

    பானுமதி நடித்திருந்த பாணி என்னைக் கவர்ந்து விட்டது. இரண்டு முறைகள் பார்த்திருக்கிறேனே... அவரது நடிப்புக்காக!

    படம் பார்த்து விட்டுத் திரும்பும் நாங்கள் உடனே படுக்கப் போய் விட மாட்டோம். அதைப் பற்றி வாயாரப் பேசுவோம். விவாதிப்போம்.

    ‘ரத்ன குமாரில்’ ஒரு காட்சி. குழந்தைகள் கையில் வைத்துக்கொண்டு விளையாடும் கிலுகிலுப்பை போன்ற ஒரு பொருள். கம்பின் கீழே ஒரு குரங்கு பொம்மை. மேலே ஒரு கிளி. கீழே உள்ள விசையை அழுத்தினால் இந்தக் குரங்கு உடனே தாவி, மேலே உள்ள கிளியைத் தொட்டு விட்டு வரும்.

    அதைத் தன் கையில் வைத்துக் கொண்டு, ஒரு பாட்டுப் பாடியவாறு ரத்னகுமாரில் வருவார். பானுமதி பாடி, நடித்துள்ள அக்காட்சியை எவ்வளவு ரசித்திருக்கிறேன் தெரியுமா?

    பாட்டும், நடிப்பும் பிரமாதமாக இருக்கும்.

    அடுத்து நான் பார்த்தது ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படம்! ஏன், அதன் பின்னர் வெளி வந்த பானுமதியின் படங்கள் ஒவ்வொன்றையும் பார்க்கத் தவறியதே இல்லை!

    ஒவ்வொரு படத்திலும் அவர் நடிப்புத் திறமையில் தனித்து நின்று, பிரகாசிப்பதைக் காண முடிந்தது.

    பானுமதியுடன் நடிக்கும் போது, நமக்கு அனுசரணையாக அவரது உதவியும் கிடைக்கும். உதாரணமாக உணர்ச்சிமிக்கக் கட்டமொன்றில் நடிக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னுடன் நடிப்பவரும், நான் எந்த அளவில் உணர்ச்சியைக் கொட்டி நடிக்கிறேனோ, அதே அளவில் தன்னுடைய நடிப்பிலும் பிரதிபலித்துக் காட்டினால் தானே, நடிப்பவர்களுக்கு உற்சாகமாக இருக்கும்.

    இந்த உதவி எதிர்த்தரப்பில் நடிப்பவர்களிடமிருந்தும் கிடைக்க வேண்டும். பானுமதியுடன் நடிக்கும் போது அது தாரளமாகக் கிடைக்கும்.

    காட்சியின் அமைப்பைச் சொல்லி விட்டால் போதும்! அவரும் சரி, நானும் சரி அதைப் புரிந்து கொண்டு நடிக்க ஆரம்பித்து விடுவோம்!

    பரஸ்பரம் அந்த உதவி இருந்தால் தான் காட்சியில் சோபிக்க முடியும். அதை அவரும் புரிந்து கொண்டவர்; நானும் புரிந்து வைத்திருக்கிறேன்.

    ‘மக்களைப் பெற்ற மகராசி’ படம் ஆரம்பமாகியது. நானும், அதன் கதாசிரியர் ஏ.பி. நாகராஜனும், இதில் வரும் நாயகனும், நாயகியும் கொங்கு நாட்டுத் தமிழில் பேசி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அபிப்ராயப்பட்டோம். அதை எல்லாரும் ஆமோதித்தார்கள்.

    பானுமதி தெலுங்கு நடிகை. தமிழில் பேசி நடிக்கக் கூடியவர். ஆயினும் கொங்கு நாட்டுத் தமிழைப் பேசி நடிக்க வேண்டுமே!

    அவர் எப்படிப் பேசி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன். பானுமதிக்கு சொல்லிக் கொடுப்பதில் யாருக்கும் கஷ்டமே இருக்காது.அவர் நொடியில் எதையும் புரிந்து கொண்டு விடுவார்!

    கொங்கு நாட்டுத் தமிழும் சில விநாடிகளிலேயே அவருக்குக் கை வந்த கலையாகி விட்டது. அதை நானும், அவரும் பேசி நடிக்கும் போது ஒரே தமாஷாக இருக்கும்!’



    தமிழகத்தில் விரைவில் பொன் விழா கொண்டாட இருக்கிறது திராவிடக் கட்சிகளின் ஆட்சி! ஆரம்பத்தில் அதற்கு நங்கூரம் பாய்ச்சியது நடிகர் திலகத்தின் மிகக் கடுமையான உழைப்பு. மறந்தும் கூட யாராலும் அதை மூடி மறைக்க இயலாது.

    ‘கணேசனுக்கு அவர் வாழ்நாளின் கடைசி நொடி வரையில், சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்காமல் செய்ததே, நம்மை ஆண்டவர்கள் காட்டிய நன்றிக்கடன்!’

    தெலுங்கு நடிகையாகப் பிறந்தாலும் மிக்கப் போராட்ட உணர்வோடு, தமிழ் நடிகர் சிவாஜி கணேசனுக்காகத் துணிச்சலாக வாதாடியவர் பானுமதி. அவர் வழங்கிய வாக்குமூலம் அதற்கு சத்திய சாட்சி!

    நடந்தது என்ன?

    தமிழக அரசின் திரைப்பட விருது தேர்வுக் குழுவில் பானுமதி பங்கு பெற்றார். சிவாஜி நடித்த படங்களும் போட்டிக்கு வந்திருந்தன.

    பரிசளிப்பில் நடிகர் திலகத்தைத் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் அவார்டு கமிட்டியினர்.

    சிறந்த நடிகராக வேறொருவரை அறிவிக்கச் சொல்லி, ஆணை பிறப்பிக்கவில்லையே தவிர பலத்த சிபாரிசு வந்தது.



    ஆற்றலுக்கொரு கலைஞன் கணேசனுக்கு நடந்த அசிங்கம் கண்டு சிலிர்த்து எழுந்தது பெண் சிங்கம். உடனடியாகப் பதவி விலகியது. தன் உறுமலை உரத்த குரலில் அரசாங்கத்தில் எதிரொலித்தது.

    ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறந்த நடிகர் விருது அளிக்க அரசுக்கு விருப்பம் இல்லையென்றால், பேசாமல், நாகரிகமாக தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களையோ, அல்லது அவரது தயாரிப்பாளர்களையோ இனிமேல், ‘திரைப்பட விருதுக்கான தேர்வு கமிட்டிக்கு உங்கள் திரைப்படங்களை அனுப்பாதீர்கள்’ என்று கேட்டுக் கொள்ளட்டும். அதை விட்டுவிட்டு, மறைமுகமாக சிவாஜியை மறைக்கப் பார்க்க வேண்டாம்.

    என்னைப் பொறுத்த வரையில் எத்தனை முறை நான் தேர்வு கமிட்டியில் இருந்தாலும், அங்கே சிவாஜி கணேசன் அவர்களின் படங்கள் தேர்வுக்கு வந்தால், நடிகர் திலகத்தைத் தான் சிறந்த கலைஞராகத் தேர்வு செய்வேன். ஏனெனில் நடிப்புக் கலையில் அவரே சிறந்தவர்!’

  4. #1773
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    http://www.zeetamizh.com/shows/laksh...tml#vuukle_div

    சில சமயங்களில் சீரியல்களைப் பாார்க்காமல் விடுவதும் தவறோ எனத் தோன்றுகிறது. அதற்கு இந்த காணொளி ஓர் உதாரணம்.
    ஒரு கதாபாத்திரத்தையே நடிகர் திலகத்திற்காக ஒதுக்கி வைத்து விட்ட அற்புதமான அர்பணிப்பிற்காக இந்த சீரியல் இயக்குநருக்கு உளமார்ந்த நன்றி. நடிகர் திலகம் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு முக்கியமான கதாபாத்திரமாக அமைத்து அவருக்கு குணமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை கதையின் முக்கிய அம்சமாக வைத்துள்ளார்கள்.
    தொலைக்காட்சியில் வாழ்க்கை படம் பார்த்துக்கொண்டிருக்கிறார் அந்தப் பாட்டி. அப்போது வீட்டிற்கு வரும் விருந்தாளி ஒருவர் சிவாஜி செத்து விட்டதாக சொல்ல அவரிடம் பாய்ந்து பாய்ந்து அடிக்க முனைகிறார் அந்தப் பாட்டி.
    பக்கத்தில் இருக்கும் பாட்டியின் சொந்தக்காரர்கள் ஓடி வந்து தடுத்து வந்திருப்பவரிடம் விஷயத்தைச் சொல்கிறார்கள். சிவாஜி உயிரோடு இருப்பதாக அவர்கள் சொன்ன பிறகு தான் அந்தப் பாட்டி சகஜ நிலைக்குத் திரும்புகிறார்.
    தலைவா... இது கதையல்ல நிஜம்... இன்று பல வீட்டில் இப்படிப்பட்ட் பாட்டிகளைப் பார்க்கலாம்.
    இந்த சீரியலுக்காக இந்தப் பாத்திரத்திற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு உளமார்ந்த நன்றி.
    தகவலுக்கு நன்றி டாக்டர் கோவை ரமேஷ் பாபு அவர்கள்.
    இதில் இன்னொரு சுவாரஸ்யம். இதற்கு முந்தைய காட்சியில் ஒரு தம்பதி ஒரு பாட்டுக்கு ஆட ஒத்திகை பார்க்கிறார்கள்.
    அந்தப் பாடல்.. எம்.ஜி.ஆர். கே.ஆர். விஜயா நடித்த விவசாயி படத்திலிருந்து இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே பாடல்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1774
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  7. #1775
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  8. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  9. #1776
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


  10. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA, Harrietlgy, Russellmai liked this post
  11. #1777
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    நடிகர் திலகத்திற்கு நடந்த மற்ரோர் துரோகம் இது

    இரத்தம் கொதிக்கிறது


    தமிழகத்தில் விரைவில் பொன் விழா கொண்டாட இருக்கிறது திராவிடக் கட்சிகளின் ஆட்சி! ஆரம்பத்தில் அதற்கு நங்கூரம் பாய்ச்சியது நடிகர் திலகத்தின் மிகக் கடுமையான உழைப்பு. மறந்தும் கூட யாராலும் அதை மூடி மறைக்க இயலாது.

    ‘கணேசனுக்கு அவர் வாழ்நாளின் கடைசி நொடி வரையில், சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்காமல் செய்ததே, நம்மை ஆண்டவர்கள் காட்டிய நன்றிக்கடன்!’

    தெலுங்கு நடிகையாகப் பிறந்தாலும் மிக்கப் போராட்ட உணர்வோடு, தமிழ் நடிகர் சிவாஜி கணேசனுக்காகத் துணிச்சலாக வாதாடியவர் பானுமதி. அவர் வழங்கிய வாக்குமூலம் அதற்கு சத்திய சாட்சி!

    நடந்தது என்ன?

    தமிழக அரசின் திரைப்பட விருது தேர்வுக் குழுவில் பானுமதி பங்கு பெற்றார். சிவாஜி நடித்த படங்களும் போட்டிக்கு வந்திருந்தன.


    பரிசளிப்பில் நடிகர் திலகத்தைத் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் அவார்டு கமிட்டியினர்.

    சிறந்த நடிகராக வேறொருவரை அறிவிக்கச் சொல்லி, ஆணை பிறப்பிக்கவில்லையே தவிர பலத்த சிபாரிசு வந்தது.



    ஆற்றலுக்கொரு கலைஞன் கணேசனுக்கு நடந்த அசிங்கம் கண்டு சிலிர்த்து எழுந்தது பெண் சிங்கம். உடனடியாகப் பதவி விலகியது. தன் உறுமலை உரத்த குரலில் அரசாங்கத்தில் எதிரொலித்தது.


    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறந்த நடிகர் விருது அளிக்க அரசுக்கு விருப்பம் இல்லையென்றால், பேசாமல், நாகரிகமாக தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களையோ, அல்லது அவரது தயாரிப்பாளர்களையோ இனிமேல், ‘திரைப்பட விருதுக்கான தேர்வு கமிட்டிக்கு உங்கள் திரைப்படங்களை அனுப்பாதீர்கள்’ என்று கேட்டுக் கொள்ளட்டும். அதை விட்டுவிட்டு, மறைமுகமாக சிவாஜியை மறைக்கப் பார்க்க வேண்டாம்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  13. #1778
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks Russellmai thanked for this post
  15. #1779
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் சிறந்த நடிப்பில் 1952 ல் பராசக்தி வெளிவந்து
    வெள்ளிவிழா கண்டு சாதனை படைத்ததோ அன்றே
    நடிகர் திலகத்தின்மீது பொறாமை, கோபம் ,குரோதம், வன்மம்,
    வஞ்சகம், களுத்தறுப்பு, கால்வாரல்,துரோகம், எல்லாம் அரங்கேற ஆரம்பித்துவிட்டன
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  16. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai liked this post
  17. #1780
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    பத்திரிகைகள், புத்தகங்களில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் பற்றி
    மட்டமான விமர்சனம் எழுதவைத்தல், அவரது நடிப்பை திரித்து எழுததூண்டுதல்
    அவரது படங்களின் சுவரொட்டிகளை கிழித்தெறிதல், சாணி அடித்தல்
    என்பன நடிகர் திலகத்தை போட்டியாக, எதிரியாக நினைத்தவர்களால்
    அரங்கேற தொடங்கின.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  18. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •