Page 30 of 401 FirstFirst ... 2028293031324080130 ... LastLast
Results 291 to 300 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #291
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-65

    "படிக்காத மேதை".

    தன்னை வீட்டை விட்டுப் போகச் சொல்லும் பெரியவரோடு அப்பாவித்தனமாய் வாக்குவாதம் செய்யும் காட்சி.

    "உன்னால தனியாப் போய்
    வாழ முடியாது..?"-என்று கோபமாய் பெரியவர் கேட்க...

    "முடியாது...முடியாது"என்கிற
    வார்த்தையை ஒரு பதிலாக
    சொல்லிக் கொண்டு வருபவர்,
    அப்படியே அந்த "முடியாது"
    என்கிற வார்த்தையை, தனது
    இயலாமையைக் குறிப்பிடும்
    வார்த்தையாக மாற்றும்
    லாவகம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #292
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    காற்றில் கலந்த இசை 29: அக உலகின் கணணீர் தேசம்



    கடந்த காலத் தவறுகளின் நிழல்கள் பின்தொடர, கனத்த மனதுடன் வளையவரும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது. பழைய நினைவின் ஏதோ ஒரு கீற்றின் ஸ்பரிசமும் கனத்த மனதை உடைந்து வெடிக்கச் செய்துவிடும். அப்படியான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் தமிழில் நிறைய உண்டு. அவற்றில் முக்கியமான சில பாடல்கள் இடம்பெற்ற திரைப்படம் ‘தியாகம்’(1978). வங்காள மொழியிலும் இந்தியிலும் ‘அமானுஷ்’ எனும் பெயரில் வெளியான திரைப்படத்தின் தமிழ் வடிவம் இப்படம். பிரதான பாத்திரங்களில் சிவாஜி, லட்சுமி. பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    கடல்சார் வாழ்விடத்தில் நடக்கும் கதை இது. பணக்கார நாயகன், சூழ்ச்சி வலையொன்றில் சிக்கி, குடிகாரனாக மாறிவிட, அவனைக் காதலித்த பெண் கலங்கி நிற்கும் கண்ணீர்க் காவியம். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. ஐந்து மொழிகளிலும் அந்தந்த நிலங்களின் தன்மைக்கேற்ற இசையை வழங்கியிருந்தார்கள் இசையமைப்பாளர்கள். தமிழ் வடிவத்துக்கு இசை இளையராஜா. பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

    இளையராஜாவின் இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அவரது குரலுக்கு மதிப்பளிக்கும் அற்புதமான பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். எஸ்.பி.பி., ஜேசுதாஸ் போன்றவர்களுக்காக இளையராஜா உருவாக்கிய பாடல்களின் நவீனத் தன்மையை, டி.எம்.எஸ்.ஸுக்காக அவர் தந்த பாடல்களில் காண முடியாது. மாறாக, எம்.எஸ்.வி. இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் நீட்சியாகவே அப்பாடல்களை இளையராஜா உருவாக்கினார் என்று சொல்லலாம். எனினும், பாடல்களின் மெட்டிலும், நிரவல் இசையிலும் பழமையும் புதுமையும் கலந்த இனிமையைத் தந்தார்.

    இப்படத்தில் இடம்பெறும் ‘தேன்மல்லிப் பூவே’ பாடல் ஒரு உதாரணம். டி.எம்.எஸ். ஜானகி பாடியது. கடற்கரையோரத் தென்றலின் ஸ்பரிசத்துடன் தொடங்கும் இப்பாடலின் முகப்பு இசையில் பூவை மொய்க்கும் வண்டின் ரீங்காரத்தைப் போன்ற புல்லாங்குழலை ஒலிக்க விடுவார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் ‘செல்லோ’ இசை, பிரம்மாண்டமான புல்வெளிப் பரப்பின் மீது திரட்சியான கருமேகங்களின் நகர்வைக் கண்முன் நிறுத்தும். தொடர்ந்து வீணை, வயலின் இசைக் கலவையின் சாம்ராஜ்யம் என்று அற்புதமான இசைக் கோவைகளைக் கொண்ட பாடல் இது.

    ‘வருக எங்கள் தெய்வங்களே’ எனும் குழுப் பாடலில் டி.எம்.எஸ்.ஸுடன் நாகூர் யூசுப், கெளசல்யா போன்றவர்கள் பாடியிருப்பார்கள். டி.எம்.எஸ். பாடிய மற்றொரு முக்கியமான பாடல் இப்படத்தில் உண்டு. அது, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ பாடல். செய்யாத குற்றத்துக்காக வாழ்க்கையை இழந்து நிற்கும் நாயகன் தன் மனதின் குமுறல்களை வேதனையுடன் வெளிப்படுத்தும் பாடல் இது. கடல் மேற்பரப்பின் சிற்றலைகளில் மிதந்தபடி செல்லும் படகின் மேல் தளத்தில் நின்றுகொண்டு சிவாஜி பாடுவதாக அமைக்கப்பட்ட காட்சியமைப்பு. மனதின் துயரங்களைக் கடல் காற்றுடன் கரையவிடும் பாடல். டி.எம்.எஸ்.ஸின் மெலிதான் ஹம்மிங்கைத் தொடர்ந்து ஒலிக்கும் குழலோசை, ரணத்தின் மீது வருடிக்கொடுக்கும் மயிலிறகின் மென்மையுடன் ஒலிக்கும்.

    சுயஇரக்கமும் தத்துவார்த்த மனநிலையும் கலந்த குரலில் அற்புதமாகப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். மனதை நெகிழச் செய்யும் வயலின், ஆழ்மனதின் விம்மல்களை வெளிப்படுத்தும் கிட்டார், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்லும் துயர நினைவுகளின் தொகுப்பாக ஒலிக்கும் புல்லாங்குழல் என்று எளிமையான இந்தப் பாடலில் பல நுட்பங்கள் பொதிந்திருக்கும். இரண்டாவது நிரவல் இசையில், வயலின் இசைக் கோவைக்கு நடுவே ஒலிக்கும் சாரங்கி ஒரு கணமேனும் கண்ணீரை வரவழைத்துவிடும்.

    இப்பாடலின் மிகப் பெரிய பலம் கண்ணதாசன். ‘பறவைகளே பதில் சொல்லுங்கள்.. மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்’, ‘தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே… தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே’ போன்ற வரிகளை கண்ணதாசனைப் போன்ற ஞானிகளாலன்றி வேறு யாராலும் எழுத முடியாது.

    இப்படத்தின் மிக முக்கியமான பாடல், ஜானகி பாடிய ‘வசந்தகால கோலங்கள்’. இளையராஜா ஜானகி இணை தந்த மிக நுட்பமான கலைப் படைப்புகளில் ஒன்று இப்பாடல். அலைகளினூடே மின்னும் ஒளித் துணுக்குகளைப் போன்ற கிட்டார் இசையுடன் இப்பாடல் தொடங்கும். வார்த்தைகளினூடே குறுக்கிடும் வலி நிறைந்த குரலில் கண்ணீரின் இசை வடிவமாகப் பாடியிருப்பார் ஜானகி. ‘கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்’ எனும் ஒற்றை வரி, எங்கோ ஒரு கடலோர கிராமத்தில், கைவிட்டுப் போன வாழ்க்கையின் நினைவுகளுடன் தவிக்கும் பெண்ணை உருவகப்படுத்தும்.

    முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் சாக்ஸபோன், துயரத்தை வசதியாக வெளிப்படுத்தும் அளவுக்குப் பரந்த தனிமையைக் கொண்ட வெளியை மனதுக்குள் விரிக்கும். இரண்டாவது நிரவல் இசையில் பகிர்ந்துகொள்ள முடியாத துயர நினைவுகளின் முணுமுணுப்பைப் போன்ற மர்மத்துடன் புல்லாங்குழலை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மனதின் ரகசிய அடுக்குகளைத் துழாவும் இசைக்கோவை அது. ‘நன்றி நன்றி தேவா… உன்னை மறக்க முடியுமா?’ எனும் வரியில் ஜானகி காட்டும் பாவம்... அதை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை!

  4. #293
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Dinamani


    UNFORTUNATE FLASH NEWS


    சிவாஜி சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜியின் சிலை எப்போது அகற்றப்படும் என்று இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றக் கோரிய வழக்கில், 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    சிவாஜி சிலையை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சிலையை உடனடியாக அகற்ற தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், விரைவில் சிவாஜி மணிமண்டபம் கட்டப்பட உள்ளதாகவும், அதை கட்டிய பிறகு இந்த சிலையை அகற்றி அங்கு வைக்க இருப்பதாகவும், எனவே சிவாஜி சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க மறுத்ததோடு, சிவாஜி சிலை எப்போது அகற்றப்படும் என்பதை இன்னும் ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

  5. #294
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்து

  6. #295
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks RAGHAVENDRA thanked for this post
  8. #296
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    இன்று பிறந்த நாள் காணும் அன்புச் சகோதரர் கமலஹாசனுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks Russellpei thanked for this post
  10. #297
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Dinamani,

    சேலத்தில் அதன் படப்பிடிப்பில் பானுமதிக்கு கிடைத்த இன்னொரு அற்புத இணை நடிகர் திலகம்!

    முதன் முதலாக சிவாஜியைச் சந்தித்தது பற்றி பானுமதி விவரமாக கூறியுள்ளார்.

    ‘நெப்டியூன் ஸ்டுடியோவில் ஜூபிடர் பிக்சர்ஸ் ராணி படத்தில் நடித்த சமயம். ஒருநாள் அவர்களது ‘மனோகரா’ படக் காட்சிகளைப் பார்த்து விட்டு செட்டுக்குத் திரும்பினேன்.

    அவரது நடிப்பு என்னைக் கவர்ந்து விட்டிருந்தது. அன்றைய தினம் அரங்கில் என்னுடன் நடித்தவர்களிடமெல்லாம், கணேசனின் திறமையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

    சிவாஜிகணேசன் நடித்து நான் பார்த்த முதல் படம் இதுவே. பின்னர் நான் பார்த்த சினிமாக்களில் அவரது ஆற்றல் மேலும் மேலும் பெருகியது.

    தவிர, ஒரு சிறந்த நடிகர் என்கிற முறையில் அவர் மீதுள்ள மதிப்பும் நம்பிக்கையும் என்னிடம் வளர்ந்தன. மனோகரா பார்த்துச் சில மாதங்கள் சென்றிருக்கும்.

    சேலம் பக்கம் ஏதோ வேலையாக வந்த சிவாஜி, அன்றைக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் அலிபாபா ஷூட்டிங்கில் இருந்தார். அங்கே தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன்.

    சிறிது நேரம் காமிராமேன் டபிள்யூ. ஆர். சுப்பாராவ் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு கணேசன் கிளம்பிச் சென்றார்.

    அந்த சில நிமிஷங்களில்

    என்ன அருமையாக நடிக்கிறார் இவர்! இவருடன் எப்படியாவது நான் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். என்ற தன் விருப்பத்தை சுப்பாராவிடம் சொன்னாராம்.

    சிவாஜி போன பிறகு, அதை என்னிடம் கூறிய சுப்பாராவ், ‘என்னம்மா உங்களுடன் நடிக்கணும்னு இவர் இப்படித் துடிக்கிறாரே!’ என்றார்.

    சென்னைக்குத் திரும்பி வந்த சில நாள்களிலேயே அதற்குப் புதிய சந்தர்ப்பம் கிடைத்தது.

    கல்கியின் ‘கள்வனின் காதலி’ கதையைப் படமாக்க என்னைத் தேடி வந்தார் ரேவதி ஸ்டுடியோ அதிபர், டைரக்டர் வி.எஸ். ராகவன்.

    ‘இந்தப் படத்தில் கதாநாயகி கல்யாணியாக நீங்கள் நடிக்க வேண்டும். முத்தையனாக சிவாஜி நடிக்கப் போகிறார்... உங்களுக்குச் சம்மதமா?’ என்றார்.

    ‘நான் என்ன சொல்வது...? கணேசன் மிகச் சிறந்த நடிகர். அவருடன் நடிப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே...! என உடனடியாக ஒத்துக் கொண்டேன்.- பானுமதி.

    ‘கள்வனின் காதலி’ 1955 தீபாவளி வெளியீடு. சென்னையில் கெயிட்டி, மகாலட்சுமி, சயானி, ராஜகுமாரி, பிரபாத் என ஐந்து தியேட்டர்களில் ரிலிசானது. அந்நாளில் அது ஓர் அபூர்வ நிகழ்வு. பிரம்மாண்டமான ஜெமினி சித்திரங்கள் கூட மூன்று அரங்குகளில் மட்டுமே நடைபெறும்.

    அதே நாளில் சிவாஜியின் இன்னொரு படமான கோட்டீஸ்வரனும் வெளியானது. அதில் அவரது ராசியான பத்மினி ஜோடி. கோட்டீஸ்வரன் முழு நீள நகைச்சுவைச் சித்திரம். வீணை எஸ். பாலச்சந்தர் கூட சிரிப்பு காட்டினார்.

    திரையிட்ட ஐந்திலும் கள்வனின் காதலி 80 நாள்களைக் கடந்து ஓடி நன்கு வசூலித்தது.



    மூன்று தீபாவளிகளைக் கண்ட ஹரிதாஸ் பட இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்ணியின், சொந்தத் தயாரிப்பு இயக்கத்தில் கோட்டீஸ்வரன் உருவானது. இருந்தும் கள்வனின் காதலி பிரமாதமாக ஓடியது. காரணம் சிவாஜி- பானுமதி இருவருமே விட்டுக் கொடுக்காமல் நடித்திருந்தார்கள்.

    நூறாவது நாள் விழா எடுத்தால் ஐந்து தியேட்டர் ஊழியர்களுக்கும் போனஸ் தர வேண்டியிருக்கும். அதனால் கிடைத்த வசூலோடு ரேவதி ஸ்டுடியோ திருப்தி அடைந்தது. கள்வனின் காதலியில் பானுமதி பாடியதில் ‘வெயிலுக்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு’ சூப்பர் ஹிட்.

    1955 தீபாவளி தொடங்கி தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான நடிப்புப் போட்டி முதன் முதலாக உருவானது.

    ‘கள்வனின் காதலியில்’ நடித்தது பற்றி நடிகர் திலகம்:

    ‘கள்வனின் காதலி’யில் பானுமதி ஹீரோயின் என்று டைரக்டர் ராகவன் சொன்னதும் எனக்குப் பெருமையாக இருந்தது. படப்பிடிப்புக்காகச் சென்றேன்.

    ராகவன் என்னை பானுமதிக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு பெரிய நடிகை, நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே, நடித்துப் பிரபலமாக விளங்கி வரும் சிறந்த நடிகை என்ற உணர்வோடு வணக்கம் என்றேன்.

    அன்றைய தினம் நான் பெண் மாதிரியும், அவர் ஆண் பிள்ளை போலவும் பேசி கிண்டல் செய்யும் தமாஷான காட்சி ஒன்றை எடுத்ததாக நினைவு.

    முந்நூறு படங்களில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நாயகிகளுடன் நடித்தவர் சிவாஜிகணேசன். 1970ல் ராமன் எத்தனை ராமனடியோடு விரைந்து 140 படங்களை முடித்தத் திருப்தி !

    சற்றே விரும்பித் தனது படப்பட்டியலை வாசித்து, அதில் ஒவ்வொன்றைப் பற்றியும் தன் எண்ணங்களை வரைந்தார்.

    கள்வனின் காதலி பற்றிக் குறிப்பிடுகையில், ‘தலை சிறந்த நடிகையான பானுமதியுடன் இணைந்து எப்படி நடிக்கப் போகிறோம், என்று நான் பயந்து நடித்த படம்’ என்று எழுதினார். வேறு எந்த நடிகைக்கும் வழங்காத மதிப்பை பானுமதிக்குத் தந்தார்.

    கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலம்(1955 -1970) கடந்திருந்தும், அதே பழைய பணிவை, வி.சி. கணேசன் போன்ற யுகக் கலைஞரிடம் பெற பானுமதியால் மட்டுமே முடிந்தது!

  11. Thanks vasudevan31355 thanked for this post
  12. #298
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //சற்றே விரும்பித் தனது படப்பட்டியலை வாசித்து, அதில் ஒவ்வொன்றைப் பற்றியும் தன் எண்ணங்களை வரைந்தார்.//

    அதைத்தான் அருமைத்தம்பி செந்தில்வேல் இப்போது ஆவணமாக 'சிவாஜி ரசிகன்' இதழ் மூலம் நமக்கெல்லாம் அளித்துக் கொண்டிருக்கிறார். முன்பு நானும், பம்மலாரும் கொஞ்சம் தந்தோம். இப்போது செந்திவேல் மூலம் முழுமை பெறும் என்று நினைக்கிறன்.

    //கள்வனின் காதலி பற்றிக் குறிப்பிடுகையில், ‘தலை சிறந்த நடிகையான பானுமதியுடன் இணைந்து எப்படி நடிக்கப் போகிறோம், என்று நான் பயந்து நடித்த படம்’ என்று எழுதினார். வேறு எந்த நடிகைக்கும் வழங்காத மதிப்பை பானுமதிக்குத் தந்தார்.//

    நடிகர் திலகத்தினுடனான முதல் நாள் படப்பிடிப்பில் பானுமதி இயக்குனர் ராகவனிடம் 'பையன் எப்படி? நல்லா நடிப்பானா? எனக்கு நிகராகா நடிக்கணுமே!' என்றாராம்.

    அதே பானுமதி 'கள்வனின் காதலி'க்காக சில நாட்கள் 'நடிகர்திலக'த்துடன் நடித்து முடித்த பின் இயக்குனரிடம் ரகசியமாய் சொன்னது.

    'பையனை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்க. என்னையே காணாம அடிச்சிடுவான் போலிருக்கு'

    பானுமதி முதல் பார் போற்றும் நடிகர்கள் வரை அவரிடம் நடிப்பில் யாருடைய பாச்சாவும் பலிக்காது.

    அதுதான் ஒன்லி ஒன் 'நடிகர் திலகம்.

    இந்த சம்பவத்தை அப்படியே பிற்பாடு நாகேஷ், மனோரமா மூலம் 'சர்வர் சுந்தரம்' படத்தில் சேர்த்திருந்தார்கள்.

    Last edited by vasudevan31355; 7th November 2015 at 06:03 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  14. #299
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  15. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  16. #300
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  17. Likes RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •