Page 35 of 401 FirstFirst ... 2533343536374585135 ... LastLast
Results 341 to 350 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #341
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-76

    "வசந்த மாளிகை".

    "மயக்கமென்ன" பாடல்.

    "வள்ளி மலைத்தேன்"என்பது
    பாடி முடிக்கப்பட்ட பின், மீண்டும் "மயக்கமென்ன"
    எனப் பாடப்படுகையில், கைகள் இரண்டையும் உயரத்
    தூக்கிக் கொண்டு, கொஞ்சம்
    உடல் சாய்த்து, சின்னதாய்
    ஒரு குதி குதிப்பாரே?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #342
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-77

    "திரிசூலம்".

    தன் உடம்பில் விழும் ஒவ்வொரு சாட்டையடிக்கும்
    ஒவ்வொரு விதமாய் தன்
    தலைமுடியின் முன் கற்றை
    வந்து விழுமாறு அழகாய்ச்
    சிலுப்புவது.

  4. Likes Harrietlgy, RAGHAVENDRA, KCSHEKAR liked this post
  5. #343
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-78

    "ஆலயமணி."

    "கல்லெல்லாம்" பாடல்.

    பாடிக் கொண்டே ஓவியம்
    வரைந்து முடித்த பிற்பாடு,
    ஓவியர்களுக்கே உரித்தான
    பாணியில்.. சற்றே பின் தள்ளி
    ஓவியத்தை மேற்பார்வையிடல்.

  6. #344
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-79

    "சரஸ்வதி சபதம்".

    நாரதராக எத்தனையோ சிறந்த
    நடிகர்கள் நடித்துள்ளனர். அந்த
    நாரதரின் குணாதிசயங்களை
    உடல் மொழியாலும், குரல்
    ஏற்ற, இறக்கத்தாலுமே
    காட்டியிருப்பார்.

    ஒரு வம்புக்காரரின், கலகம்
    விளைவிக்கத்தக்க, கிண்டலான
    பேச்சுத் தொனிக்கு உதாரணம்: "ஆம் தேவி ".

  7. Likes Harrietlgy, RAGHAVENDRA, KCSHEKAR liked this post
  8. #345
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-80

    "பலே பாண்டியா".

    "வாழ நினைத்தால் வாழலாம்"
    பாடல்.

    "துடித்து நிற்கும் இளமை சாட்சி" எனும் வரி வரும் போது, பக்கவாட்டில் நமக்கு
    முகம் காட்டி, சற்றே உடலை
    நேராய் நிமிர்த்தி, கழுத்தை
    எக்கிப் பாடி வாயசைப்பது.

  9. #346
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-81

    "எங்கிருந்தோ வந்தாள்".

    தலைசிறந்த கவிஞர்கள்
    போல அவர் ஒருவரே நடித்துக்
    காட்டும் காட்சி.

    அதில், பாவேந்தராய் நடிக்கும்
    போது, அவர் காட்டும் இயல்பு.
    அந்த கம்பீரம். அந்த வேகம்.
    அந்த அடி வயிற்றிலிருந்து
    வரும் "ஆங்...ஆங்."

  10. Likes Harrietlgy, RAGHAVENDRA, KCSHEKAR liked this post
  11. #347
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-82

    "படித்தால் மட்டும் போதுமா?"

    "பொன் ஒன்று கண்டேன்"
    பாடல்.

    விரிந்தும்,சுருங்கியும், சிமிட்டியும் திரை முழுதும்
    மிகப் பெரிதாய் வியாபிக்கும்
    அவரது அற்புத விழிகள்.

    அவரது உதடுகள் சிரிப்பதை
    நமக்கு உதாரணம் காட்டும்
    அவற்றின் சிரிப்பு.

  12. #348
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-83

    "பாபு".

    "வரதப்பா" பாடல்.

    "மேரியம்மா கேரியரில் எறா
    இருக்குது"-என்று பாடும் போது
    "எறா"வுக்கு அவர் கை பிடிக்கும் வளைவான அபிநயம்.

  13. #349
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-84

    "தில்லானா மோகனாம்பாள்."

    தானும்,மோகனாவும் கலந்து
    கொள்ளும் போட்டியில் தான்
    வெற்றி பெற ஆசி வேண்டி
    தனது ஆசான் வீட்டுக்குச்
    செல்வார்.

    அங்கே, தனது ஆசான் மெய்
    மறந்து நாதஸ்வரம் வாசித்துக்
    கொண்டிருக்க...

    பணிவுடன் தனது துண்டை
    இடுப்பில் கட்டிக் கொண்டு,
    ஆசானுக்குப் பின்னே நிற்கிற
    பவ்யம்.

  14. #350
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-85

    "தாவணிக் கனவுகள்."

    தேசியக் கொடி ஏற்றி வைத்த
    பிறகு, கம்பீரமாய் "ஜெய்ஹிந்த்" சொல்லி..

    விரைப்பாய் நின்று அடிக்கும்
    'சல்யூட்.'

    ( 'ரத்தத் திலகம்', 'தங்கப் பதக்கம்'... "தாவணிக் கனவுகள்"...
    கம்பீரம், கூடிக்கொண்டேதான்
    போகிறது. )

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •