Page 41 of 401 FirstFirst ... 3139404142435191141 ... LastLast
Results 401 to 410 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #401
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-88

    "பாலும் பழமும்".

    "போனால் போகட்டும்" பாடல்.

    வழக்கத்தை விடக் கூடுதலான
    வேகங் கொண்ட நடையில்
    சென்று கொண்டிருப்பவர்,
    "மரணம் என்பது செலவாகும்"
    என்கிற வரி வருகையில்,
    இன்னும் வேகத்தை அதிகமாக்கி, அதிர அதிர
    நடப்பது.

  2. Likes Harrietlgy, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #402
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-89

    "ஞான ஒளி."

    'அருண் எனும் பெரிய மனிதராக வந்திருக்கும் நான்தான் உன் தகப்பன் ஆண்டனி'- என்று தன் மகளுக்கு தன்னை அடையாளம் காட்ட முயற்சிக்கையில், தந்தைக்குப்
    பின்னால் அவரைப் பிடிக்க
    அலையும் மேஜர் வருவதைப்
    பார்த்த அவரது மகள் அவருக்கு
    உணர்த்த...

    சமாளித்துக் கொண்டு அவர்
    இருமும் செயற்கை இருமல்.

  5. Likes Harrietlgy, Russellmai liked this post
  6. #403
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மாணிக்கத்தின் முன் நிற்கும் பெரிய சவால் இது.மாணிக்கம் என்ன செய்யப்போகிறார்?

    சவாலே சமாளி தொடர்ச்சி

    எத்தனையோ தேர்தல் காட்சிகள் தமிழ்சினிமாவில்
    காட்டப்பட்டிருக்கின்றன.ஆனால் இப்படத்தில் வருவது போல்,தேர்தலுக்கு முன்னும், ,தேர்தலுக்கு பின்னும் வரும் காட்சிகள் போன்று விறுவிறுப்பைத்தரும் காட்சிகள் வேறு எதிலும் இல்லை.கையில் தாலியுடன் ,அதை சுழற்றிக்கொண்டே
    வாக்கு சாவடியை சுற்றி சுற்றிநடிகர்திலகம் அங்குமிங்கும் நடை போடுவது ரகளையான சீன்.

    மாணிக்கம் வெற்றி பெற்றதாக வேலையாள் ஓடிவந்து சின்னப்பண்ணையிடம் கூற,அது அவருக்கு அதிர்ச்சியடையாமல் ஆனந்தக்கூத்தாடுகிறார்.மாணிக்கம் ஜெயிக்க வைத்ததே நான்தான் என்று பேச திரைக்குப்பின்னால் சகுனி ஆட்டம் அவர் ஆடியிருப்பது புலனாகிறது.

    சின்னப்பண்ணை சிங்காரமாக நாகேஷ்:
    தருமி,வைத்தி,வரிசையில் சின்னப்பண்ணையையும் சேர்க்கலாம்.
    டயலாக் டெலிவரியை டைமிங்காக வெளிப்படுத்துவதில் நாகேஷ் கில்லாடி.அது எந்த சீனாக இருந்தாலும்.நாகேஷின் சிறந்த படங்களில் நடிகர்திலகத்துடன் இணைந்த படங்களே அதிகமிருக்கும்.
    பத்திரத்தை வைத்து நான்என்ன செய்யப்போகிறேன் என்று டி.கே.பகவதி கேட்க,நாகேஷ் கையை ஓங்கியவாறு"பெரிய பண்ணையாச்சேன்னு பார்க்கிறேன்,இல்லேன்னா பொளேர்னு அறைஞ்சிடுவேன்"ன்னு சொல்லும் சீனிலும்சரி, பகவதியை தேர்தலில் நிற்க வைக்க அவர் முயற்சி செய்யும் காட்சியிலும் சரி நாகேஷின்
    பங்கு பாராட்டுதலுக்குரியது.

    அந்த தேர்தல் வெற்றி ஊர்வலகாட்சி அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கும்.
    நடிகர்திலகத்தை தோளில் உட்கார வைத்து தூக்கிக்கொண்டு வரும் வரவேற்புக்காட்சி ஏக அமர்க்களம்.,
    ஆட்டம் பாட்டம்,தாரை தப்பட்டை,கரகாட்டம்,புலிவேஷம்
    என்று கிராமியகலைகள் எல்லாம் சேர்ந்து கூத்து கட்டும்.பகவதியை கொம்பைக்காட்டி மிரட்டும் ஷாட் பிரமாதம்.
    படையப்பா படத்தில் கடைசி காட்சியில் வரிசையாக நிற்கும் மக்கள் கூட்டத்தை காட்டுவார்கள். காமிரா
    வளைந்துநெளிந்து சுற்றிக்காட்டும் ஷாட்டாக இடம் பெற்றிருக்கும்.இந்த மாதிரியான காட்சி சவாலே சமாளிபடத்தில் இந்த இடத்தில் இடம்பெற்றிருக்கும். அது போன்ற ஷாட்தான் பில்டப்புடன் படையப்பாவில் காட்டப்படுகிறது..சவாலே சமாளியில் உண்மையாக இருப்பது போல் இருக்கும் .நடிகர்திலகம் மட்டுமல்ல அவரின் திரைப்பட காட்சிகளும் கூட
    மற்ற திரைப்படங்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது என்பதையல்லவா இது காட்டுகிறது.









    காரில் சகுந்தலாவை வெளியூருக்கே திருப்பி அனுப்பபெரிய பண்ணை முயற்சிக்கிறார்.வெற்றி பவனி வந்து கொண்டிருக்கும் மாணக்கத்தின் தோழர்கள் அதைப் பார்த்துகாரை தடுத்து நிறுத்தி பெரியபண்ணையின்
    வீட்டுக்கேதள்ளிக்கொண்டு வந்து விடுகின்றனர்.
    அங்கேயே பஞ்சாயத்து நடக்கிறது.
    எல்லா பணக்காரக்குடும்பங்களும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நியாயம்தான் பண்ணையாரின் வீட்டிலும் இப்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
    ஆனால் ஊர் விடுமா?
    ராஜவேலுவும் வந்து பண்ணையாரை விமர்சிக்க, துக்கம் தாளாமல்பண்ணைக்கு நெஞ்சை அடைக்கபதறும் மனைவி தாலியைக்காட்டி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
    "
    (இந்தக் காட்சியில்ஊரார் முன்னிலையில் நம்பியார் நடிகர்திலகத்தைஅடிக்க கை ஓங்க,
    "உனக்கு ரெண்டு கைதான். எனக்கு பின்னால் பார் எத்தனை கையென்று"
    என்று சொல்லும் வசனம் கூட படையப்பாவில் 'இந்த தனி மனுஷனுக்கு பின்னால் பாருங்க.எத்தனை பேர்னு தெரியும் என்று வரும்)

    மாணிக்கம் சகுந்தலா திருமணம் கிராம மக்களலால் எளிமையாக நடத்தி வைக்கப்பட்டது.

    படிப்பும் பணக்காரத்திமிறும் கொண்ட சகுந்தலா,ஏழ்மை வர்க்கத்தைச் சேர்ந்த மாணிக்கத்தை ஏற்றுக்கொள்வாளா?
    தொடரும்
    Last edited by senthilvel; 8th November 2015 at 08:02 PM.

  7. Likes Harrietlgy, Russellmai liked this post
  8. #404
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்
    மணமகன் தேவை பட பாடல் அலசல் வெகு சுவராஸ்யம்.
    தலைவரின் கெட்அப் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது.அந்த கெட்அப்பில் இங்கிலீஷ் படங்களில் நடித்திருக்கலாம் என்ற நினைவுகளை தவிர்க்க முடிவதில்லை.

    வாழ்த்துக்கள்

  9. Likes Russellmai liked this post
  10. #405
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-90

    "பாகப் பிரிவினை."

    "ஏன் பிறந்தாய்" பாடல்.

    "நான் பிறந்த காரணத்தை
    நானே அறியும் முன்னே
    நீயும் வந்து ஏன் பிறந்தாய்?"
    -எனப் பாடும் போது, 'ஏன்
    பிறக்கக் கூடாது?' என்று
    விளக்குவதைப் போல் தனது
    இயக்கமில்லாத,வளைந்த
    இடது கையை மெல்ல தடவிக்
    காட்டுவது.

  11. Likes Harrietlgy, Russellmai liked this post
  12. #406
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Aathavan Ravi View Post
    நினைப்போம்.மகிழ்வோம்-89

    "ஞான ஒளி."

    'அருண் எனும் பெரிய மனிதராக வந்திருக்கும் நான்தான் உன் தகப்பன் ஆண்டனி'- என்று தன் மகளுக்கு தன்னை அடையாளம் காட்ட முயற்சிக்கையில், தந்தைக்குப்
    பின்னால் அவரைப் பிடிக்க
    அலையும் மேஜர் வருவதைப்
    பார்த்த அவரது மகள் அவருக்கு
    உணர்த்த...

    சமாளித்துக் கொண்டு அவர்
    இருமும் செயற்கை இருமல்.

  13. Likes Harrietlgy, Russellmai liked this post
  14. #407
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-91

    "அவன்தான் மனிதன்."

    "மனிதன் நினைப்பதுண்டு"
    பாடல்.

    கல்லறைகள் நிரம்பிய பகுதியொன்றில் நடந்து வரும்
    போது, அங்கிருக்கும் ஒரு
    சிலையைப் போலவே,
    கழுத்தினடியில் கைகள் கொடுத்து, மெலிதாய் வாய்
    பிளந்து, கவலை காட்டி அண்ணாந்திருக்கும் அதே
    பாவனையில் தானும் செய்து
    காட்டி நகர்வது.

  15. Likes Harrietlgy, Russellmai liked this post
  16. #408
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-92

    "வசந்த மாளிகை."

    "இரண்டு மனம் வேண்டும்"
    பாடல்.

    மாடிப்படியில் நின்று கொண்டு
    உறிஞ்சிய சிகரெட் புகையை
    "இரவும் பகலும் இரண்டானால்"
    என்று பாடப் பாட கசிய விடுவது.

  17. Likes Harrietlgy, Russellmai liked this post
  18. #409
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  19. #410
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •