Page 197 of 401 FirstFirst ... 97147187195196197198199207247297 ... LastLast
Results 1,961 to 1,970 of 4001

Thread: Makkal Thilagam MGR PART 18

  1. #1961
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks Scottkaz thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1962
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks Scottkaz thanked for this post
    Likes ainefal liked this post
  6. #1963
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    MGR KOLGAI IYAKKAM, MALAYSIA - INAUGURATION FUNCTION PHOTO


  7. Thanks Scottkaz thanked for this post
    Likes Scottkaz, Richardsof liked this post
  8. #1964
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. Likes mgrbaskaran liked this post
  10. #1965
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மையம் இணையத்தளத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ஓராண்டு நினைவலைகள் .

    30.12,2014- 29.12.2015


    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 13
    இனிய நண்பர் திரு முத்தயன் அவர்கள் 30.12.2014 அன்று துவக்கினார் 2.2.2015ல் 4000 பதிவுகள் நிறைவு பெற்று பின்னர்
    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 14- திரு தெனாலி ராஜன்
    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 15- திரு வரதகுமார் சுந்தராமன்
    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 16 திரு சத்யா
    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 17- திரு சுகராம் ஆகியோர்களின் 5 பாகங்கள் 20,000, பதிவுகளுடன் நிறைவு பெற்றது . இந்த ஆண்டின் நிறைவாக
    12.12.2015 அன்று இனிய நண்பர் திரு கலியபெருமாள் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 18 இன்று 1965 பதிவுகளுடன் மிக சிறப்பாக
    செல்கிறது .
    ஓராண்டில் 21,965 பதிவுகளில் மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரைகள் , நிழற் படங்கள் , வீடியோ க்கள் , ஒருப்பட ஆல்பங்கள் , திரைப்பட விளம்பரங்கள் , மறு வெளியீடு விளம்பரங்கள் மற்றும் தவல்கள் , மக்கள் திலகத்தின் பிறந்த நாள் நிழற்படங்கள் , பதாகைகள் கவிதைகள் , கடந்த கால பத்திரிகை ஆவணங்கள் ,என்று ஏராளமான பதிவுகளை அருமை நண்பர்கள் மையம் திரியில் வழங்கி பெருமை படுத்தினார்கள் .மக்கள் திலகத்திற்கு பெருமை சேர்த்தார்கள் .உண்மையிலேயே மக்கள் திலகம் நண்பர்கள் தங்களுடய பொன்னான நேரத்தை மக்கள் திலகம் புகழ் பாடும்
    இந்த திரியில் தங்களுடைய பங்களிப்பை மிக சிறப்பாக செய்தார்கள் .நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

    2016ல் நம்முடைய நண்பர்களின் தொடர் பங்களிப்பு இன்னும் வேகத்துடன் இருக்கும் என்று நம்புகிறேன் .

    1956ல் - மதுரை வீரன் - அலிபாபாவும் 40 திருடர்களும் - தாய்க்கு பின தாரம் - ஹாட்ரிக் ஹிட் படங்கள் .

    1966ல் அன்பே வா - பிரமாண்ட வெற்றி படம் .

    1976ல் நீதிக்கு தலை வணங்கு - உழைக்கும் கரங்கள் - ஊருக்கு உழைப்பவன் .

    1986ல் முப்பிறவி கண்ட வரின் பொற்கால ஆட்சி

    2016ல் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா தொடக்கம் - உலகம் சுற்றும் வாலிபன் - டிஜிடல் மறுவெளியீடு - தமிழக தேர்தல் களம் - மக்கள் திலகம்

    உலகம் சுற்றும் வாலிபன் சிறப்பு ஆல்பம் - - என்று எராளமான விருந்து நமக்கு கிடைக்க உள்ளது .

    2016ல் பல வெற்றிகளை வரவேற்க காத்திருப்போம் .

    இந்த ஓராண்டில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியை [பாகம் 13- பாகம்18] இன்று வரை பார்வையிட்டோர்களின் எண்ணிக்கை 4,50,000.
    இந்த அரிய வாய்ப்பினை வழங்கிய மையம் நிறுவனத்திற்கும் , நம்முடைய திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும்
    பதிவாளர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

    Last edited by esvee; 29th December 2015 at 03:59 PM.

  11. Thanks Scottkaz thanked for this post
  12. #1966
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இறந்தும் புலிகளுக்கு உதவிய எம்ஜிஆர்

    1987 ஆம் ஆண்டு புலிகளுக்கும் இந்திய அமைதிப்படையினருக்கும் தீவிரமாக சண்டை நடந்துக்கொண்டிருந்த நேரம். பாதுகாப்புக்காக புலிகள் ஒவ்வொரு நாளும் தங்களது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டிருந்தனர்.

    download (19)

    ஆனால் புலிகள் எவ்வளவோ ரகசியமாக எங்கெல்லாம் இடம் மாறுகிறார்களோ அங்கெல்லாம் உடனுக்குடன் இந்திய இராணுவத்தினர் மோப்பம் பிடித்துக்கொண்டு வந்து பெரும் நெருக்கடியை எர்ப்படுத்தினர் காரணம் அடேல் பாலசிங்கம். அடேல் பாலசிங்கம் வெள்ளையின பெண்மணி என்பதால் அவர்கள் எங்கு இடம் மாறினாலும் சுலபமாக ராணுவத்தினர் அடையாளம் கண்டுகொண்டனர்.

    download (18)
    இதனால் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்புக்கு பெரும் சிக்கலாக இருந்தது. எனவே அடேல் அவர்களை எப்படியாவது வெளிநாட்டிற்கு அனுப்பிவிட வேண்டும் என்று புலிகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் இந்திய அமைதிப்படையினரின் கடுமையான பாதுகாப்பால் பலனளிக்கவில்லை.
    இந்த சூழலில் தான் தமிழக முதல்வர் எம்ஜிஆர் மரணமடைந்தார். எம்ஜிஆர்ரின் மறைவினால் இந்திய அமைதிப்படையினருக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த ஒரு நாளை பயன்படுத்தி தான் அடேல் பாலசிங்கம் அவர்கள் ஈழத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
    வாழும் போது மட்டுமல்ல இறந்தபின்னும் எம்ஜிஆர் புலிகளுக்கு தன்னுடைய உதவியை செய்து கொடுத்தார்..

    courtesy eelamalar

  13. Thanks Scottkaz thanked for this post
  14. #1967
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வங்கக் கடல் தாலாட்ட
    தங்கத் தமிழ் பாராட்ட
    மங்காப் புகழுடனே
    சிங்கமென உறங்குகிறான்
    சத்தியத்தாய் கோபாலன் ஈன்ற
    நித்திய பூபாளம்_ இவன் போல்
    சத்தியமாய் கண்டதில்லை
    இந்திய பூகோளம்
    தோட்டாவும் உன்னிடம் தோற்றதுண்டு
    தோற்றப்பொலிவில் உன்போல் எவருண்டு
    ராமாவரம் வாழ்ந்த சாகாவரம் நீ
    சாமான்ய மக்களின் சாம்ராஜ்யராஜன் நீ
    சூரியனையே சுருட்டி வீசிய சந்திரன் நீ
    சுயம்புவாய் ஜொலித்து வந்த இந்திரன் நீ
    கொழும்புவை மிரள வைத்ந ராஜதந்திரன் நீ
    படுத்துக்கொண்டே படை வென்ற மன்னன் நீ
    கொடுத்துச் சென்றே பெயர் பெற்ற கர்ணன் நீ
    ஊனுடல் நீங்கலாம் தமிழகம் விட்டு உன்
    மானுடம் நீங்காது தமிழர் அகம் விட்டு
    நித்திரையில் நீங்கினாய் இம்மண்ணை விட்டு
    இத்தரையில் வாழும் வரை
    வணங்குவோம் தலைவா
    உன் பாதம் தொட்டு!!



    courtesy net

  15. Thanks Scottkaz thanked for this post
    Likes Scottkaz liked this post
  16. #1968
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று மக்கள் திலகத்தின் நினைவு நாள்..
    .
    1968 ல், கீழே இருக்கும் பேட்டியை எடுத்தவர் இன்றைய முதல்வர் ஜெயலலிதா..பேட்டி கொடுத்தவர் எம்.ஜி.ஆர்..
    .
    சினிமாவுலகில் நீங்கள், யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்கு போய்விட்டீர்கள்? நீங்கள் விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?
    எந்த மனிதனும் அவனுடைய வாழ்க்கையில் உச்ச நிலைக்குப் போய்விட்டதாக நினைப்பது, தோல்வியான ஒரு சூழ்நிலையில் தோன்றும் திகைப்பேயாகும்.
    பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை 'நியூ எல்பின்ஸ்டன்' தியேட்டரில் 'இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக 'இந்த மேடைப் புலி' என்று பட்டம் பெற்ற கே.பி.கேசவன் அவர்கள் நடித்திருந்தார். நாடக மேடையிலும் சினிமாவிலும் நடித்து பெரும் புகழ்ப் பெற்றிருந்தார். அவருடன் நானும் வேறு சிலரும் இந்தப் படத்தைப் பார்க்க சென்றிருந்தோம்.
    இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக எழுந்து நின்று அவர் பெயரைக் கூறிக் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான் இதைக் கண்டு திகைத்து கே.பி. கேசவன் அவர்களையே பார்த்துக் கொண் டிருந்தேன். இத்தனை ஆதரவும், செல்வாக்கும் பெற்றிருக்கும் அவருக்கு அருகில் நாம் அமர்ந்திருக் கிறோமே என்ற பெருமை கூட உண்டாயிற்று.
    படம் முடிவதற்குள் வெளியே வந்துவிட வேண்டும் என்று நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்களும் வெளியே வந்துவிட்டனர். நாங்கள் மேலே இருந்து படி இறங்கி கீழே வருவதற்குக்கூட சிரமமாகிவிட்டது. நான் மற்றவர்களை பிடித்துத் தள்ளி, கே.பி.கே. அவர்களை பாதுகாப்பாகக் காப்பாற்றி காருக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தேன்.
    அன்று மக்களுக்கு என்னை யார் என்று தெரியாது. அதற்குப் பல ஆண்டுகளுக்கு பின், சென்னை 'நியூ குளோப்' தியேட்டருக்கு நானும் கே.பி.கே. அவர்களும் ஓர் ஆங்கிலப் படம் பார்க்கப் போனோம். அப்போது நான் நடித்த 'மர்மயோகி' திரைப்படம் வெளிவந்து சில மாதங்களே ஆகி இருந்தன.
    இடைவேளையின் போது நான் வந்திருந்ததை அறிந்த ரசிகர்கள் எழுந்து கூச்சல் போட்டார்கள். எனக்கு அருகில் அதே கே.பி.கே. அவர்கள்தான் அமர்ந்திருந்தார் கள். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.
    படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் எங்களை சூழ்ந்தது. கே.பி.கே. அவர்கள் அந்த ரசிகர் களிடமிருந்து என்னைக் காப்பாற்றி ஒரு டாக்ஸியில் ஏற்றி அனுப்பினார். நான் புறப்படும் போது அவரும் அந்த மக்கள் கூட்டத்தில் ஒருவராக நின்றிருந்தார். அவரது நடிப்பாற்றல் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை.
    கலைஞர்களுக்கு உச்சநிலை, தாழ்ந்தநிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. அவ்வளவுதான். கலைஞனைப் பொறுத்தவரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும்; தாழ்த்தும். அது மக்களின் மனதில் தோன்றும் முடிவு!

  17. #1969
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தை வைத்து இவர் தயாரித்த படங்கள், ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, நாடோடி, தேடிவந்த மாப்பிள்ளை, போன்ற படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடியது. புரட்சித் தலைவியை கன்னடத்தில் " சின்னாட கோம்பே" என்ற படத்தில் அறிமுகம் செய்து வைத்தவரும் பந்துலுதான்.
    பி.ஆர். பந்துலு தயாரித்து இயக்கி கொண்டிருந்த படமான மதுரை மீட்ட சுந்தர பாண்டியன், துவக்க நாளின் போது, நடைபெற்ற ஒரு உருக்கமான நிகழ்வு இது, மக்கள் திலகத்திடம் காணப்பட்ட மனிதாபிமானத்தையும், அவர் எத்தகைய தாராள மனம் படைத்தவர் , கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர் என்பதை நிருபணமாக்கும் சம்பவமிது .
    எம். ஜி.ஆர் மேக்கப் அறையில் இருந்த போது, பந்துலு உள்ளே வருகிறார், பொதுவாகவே பந்துலு வந்தாலே தலைவர் எழுந்து மரியாதை அளிப்பது வழக்கம், காரணம் எம். ஜி.ஆர் விட ஏழு வயது மூத்தவர், அன்றும் அவ்வாறே எழுந்து நிற்க, பந்துலு அவரை அமரச்சொல்லி சைகை காட்டுகிறார்.
    தம்பி, உங்களை வச்சி படம் எடுக்கிறேன், இதுவரை உங்களை வச்சி நஷ்டமேதுமில்லாமல் மூணு, நாலு படம் எடுத்திட்டேன், இந்த மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் என் இலட்சிய படம், இந்த படத்தின் வெற்றியை நான் பார்த்திட்டேனா நிம்மதியா கண்ணை மூடிடுவேன் அதுக்கு நீங்க தான் ஒத்துழைப்பு கொடுக்கணும் என்று உருக்கமாக கூறினார் . உணர்ச்சிவசப்பட்ட மக்கள் திலகம், மேக்கப் நாற்காலியில் இருந்து இறங்கி வந்து பந்துலுவை கட்டி பிடித்து கொண்டார்.
    அண்ணே, இந்த மாதிரி அபச குணமான வார்த்தை உங்க வாயில் வரக்கூடாது. என்னமோ தம்பி நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன் என்று என் உள் மனது சொல்லுது என்றார் பந்துலு, அப்படில்லாம் சொல்லாதீங்கண்ணே நீங்க நீண்ட காலம் வாழணும் எத்தனை படம் வேண்டுமானாலும் எடுங்க , என்னால முடிஞ்ச உதவியை செய்றேன். இந்த படத்திற்கு எத்தனை நாள் கால்ஷீட் வேண்டுமானாலும் தருகிறேன். மற்ற படங்களை நிறுத்தி விட்டு இந்த படத்தை முடித்து தருகிறேன் போதுமா? என்றார் ஊருக்கு உழைத்த வள்ளல். இந்த படம் என் கடைசி படமாக இருந்தாலும் இருக்கும், அதனாலே பிரம்மாண்டமாக அமையணும் .மக்கள் திலகத்தின் கையை பிடித்து கொண்டு கண்ணீர் மல்க கூறினார் பந்துலு, நீங்க கவலை படாதீங்க இந்த படத்தை மாபெரும் வெற்றி படமாக்குவது என் பொறுப்பு கவலைபடாமல் போங்க என அவரை தேற்றினார். (‪#‎இந்தபடம்தான்_இருவருக்கும்_கடைசிபடம்என_காலம்முட ிவுசெய்து_இருப்பதைஇருவரும்அறியவில்லை‬. பந்துலு சொன்னது போலவே அவர் வாக்கு பலித்து விட்டது. ஆம், படத்தை முடிக்க பணம் புரட்டப்போன பந்துலு பெங்களூரில் காலமாகி விட்டார். படம் பாதியில் நின்றது. இந்த படம் வெளிவராது என மொத்த யூனிட்டும் முடிவுசெய்துவிட்டது.
    கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் விடுவாரா நமது புரட்சித் தலைவர், இந்த படத்தின் டைரக்ஷன் பொறுப்பேற்று கொண்டார், தன் சொந்த செலவில் மீதம் இருந்த படத்தை மிகபிரம்மாண்டமாக , மிக பெரிய வெற்றி படமாக ‪#‎மதுரைமீட்டசுந்தரபாண்டியன்‬ எடுத்த கையோடு இப்படத்தை பந்துலுவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றினார். இப்படத்திற்கு பிறகு தமிழகத்தின் முதல்வரானார் என்பது வரலாறு. இப்படம் புரட்சித் தலைவருக்கு கடைசிபடமாக அமைந்தது என்பதும் சரித்திரகால நிகழ்வானது .

  18. Thanks Scottkaz thanked for this post
  19. #1970
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்.

    1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில் நாடக நடிகராக கலைத்துறையுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

    நாடகங்களில் நடித்து வந்த அவர், 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த அவர் சினிமாவில் தனக்கெனி தனி பாணியை வகுத்துக்கொண்டார்.

    மக்கள் திலகத்தின் திரைத்துறை வெற்றிக்கு பிரபல தயாரிப்பாளர் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரும் வசனர்த்தா ஆரூர்தாசும் முக்கிய காரணம் ஆவார்கள். அவரது உடன் பிறந்த சகோதரர் எம்.ஜி சக்கரபாணி என்றாலும், தேவர் அவர்களுக்கு உடன் பிறவா சகோதரர் என்ற அந்தஸ்தை கொடுத்திருந்தார் என்று கூறிப்படுகிறது.

    குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தேவரண்ணன் வந்தால் மட்டும் உள்ளே அனுப்புங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியதாக அண்ணன் ஆரூர்தாஸ் அவர்கள் தனது தினத்தந்தி கட்டுரையில் கூறியிருப்பதன் மூலம் தேவரின் மீது எம்.ஜி.ஆர் விலை உயர்ந்த பற்று கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.

    சக கலைஞர்கள் நலனிலும் மக்கள் திலகம் பெருமளவு அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு ஆரூர்தாஸ் அவர்களே முக்கிய சாட்சி. எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பின் இடைவேளையின் போது அவருக்கருகே உட்கார்ந்திருந்த ஆரூர்தாஸ், பெருமளவு வேலைப்பளு காரணமாக, அப்படியே எம்.ஜி.ஆரின் மடியில் சாய்ந்து உறங்கிய போது அவர் கண்விழிக்கும் வரை அவரை எழுப்பாமல் அன்போடு பார்த்துக்கொண்டது அவரின் உயர்வான குணத்தை காட்டுகிறது.

    நாடக குழுவிலிருந்து திரைத்துறைக்கு வந்த பின் அவருக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்துக்கொண்டேயிருந்தது. இந்நிலையில் அண்ணாவின் எழுத்தால் கவரப்பட்ட மக்கள் திலகம் அவர்கள் திராவிட முன்னேற்ற கட்சியில் இணைந்தார்.

    அண்ணாவின் மறைவிற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் 1973 ஆம் ஆண்டு நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அரசியலில் தனது சாதனை ஓட்டத்தை துவக்கினார்.

    1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க 130 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் அவர்கள் 43065 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்தார்.

    இத்தேர்தலில் கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்குகளை அ.தி.மு.க அறுவடை செய்தது அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய சாதனை. அக்கட்சியை சேர்ந்த ஆனூர் ஜெகதீசன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.செம்மலை, பி.தனபால், சி. பொன்னையன், கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் கா.காளிமுத்து ஆகியோர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டினர்.

    1980ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிமுக-ஜனதா கூட்டணியை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து புரட்சித்தலைவரின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் ஆட்சியை கலைத்த பின் நடந்த தேர்தலில் முன்னை காட்டிலும் அதிக வெற்றியை எம்.ஜி.ஆர் பெற்றார். அப்போது 177 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 129 இடங்களில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இத்தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் 21066 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் பொன்.முத்துராமலிங்கத்தை தோற்கடித்தார்.

    தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.

    1983 ஆம் ஆண்டு அதிமுக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ஜெயலலிதா அவர்கள் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவின் தீவிர பிரச்சாரத்தால் அதிமுக அமோக வெற்றி பெற்றது.

    இத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர்., 60510 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சரான பெருமை புரட்சித்தலைவருக்கு கிடைத்தது.

    தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றுவதற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருந்தங்களை கொண்டு வந்தார். 1982 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். மகளிருக்கு சிறப்பு பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

    தமிழக அரசியல் வரலாற்றில் மது விற்பனையை தடை செய்த மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் ஆவார். பழமையான கோவில்களுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றை புனரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தார். சுற்றுலாத் துறையில் தமிழகம் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுத்தார்.

    குறிப்பாக ஈழத்தமிழர் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார். பல்வேறு வகைளில் அவர்களுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் தந்த "வள்ளல்" அவர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ந்தேதி இப்பூவுலகை விட்டு மறையும் வரை ஏழைகளின் நலனுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்த இந்த பொன்மனச் செம்மலை மனிதாபிமானத்தின் மகாத்மா என்று குறிப்பிடுவது சாலச்சிறந்தது.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •