Page 69 of 400 FirstFirst ... 1959676869707179119169 ... LastLast
Results 681 to 690 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

  1. #681
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இதிலும் புதிய சாதனை!

    மக்கள் திலகம் பிறந்த நாளை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் ஒரே நாளில் அவர் நடித்த 14 படங்கள். ஒரு நடிகருக்கு ஒரே நாளில் அவர் நடித்த 14 படங்கள் தொலைக்காட்சிகளில் காட்டியதில்லை. இதிலும் சாதனை படைத்து விட்டார் புரட்சித் தலைவர்.

    ஒரே நேரத்தில் பல படங்கள் பல சேனல்களில் ஓடியதால் எந்த படத்தை பார்ப்பது, எந்த படத்தை விடுவது என்றே எனக்கு தெரியவில்லை. ஒன்றை பார்க்கும்போது அங்கே எந்த சீன் வரும் என்று நினைத்து சேனலை திருப்புவது, இப்படியே மாற்றி, மாற்றி பார்த்தேன்.

    பல வகையான இனிப்புகள் இலையில் பரிமாறினால் ஒன்றையே தின்று தீர்த்தால் மற்ற இனிப்புகளை சாப்பிட முடியாது என்பதால், எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுவதை போல ரசித்தேன்.

    தொலைக்காட்சிகளில் திரையிட்ட படங்களில் எனக்கு பிடித்த காட்சிகள்.

    1. ஊருக்கு உழைப்பவன்: மக்கள் திலகம் மிக அழகாக தோன்றுவார். அழகெனும் ஓவியம் இங்கே... பாடலில் அழகு ஓவியமாகவே இருப்பார். குழந்தை இறந்ததை அறிந்ததும் வெறும் தூளியை அணைத்துக் கொண்டு அழும் சீன் (பின்னணியில் இரவுப் பாடகன்.. பாடல்) உள்ளத்தை உருக்கும். வாணி ஸ்ரீ பொருத்தமான ஜோடி. இதுதான் முதல் ராத்திரி பாடல் சூப்பர். வாணி ஸ்ரீ நல்ல அழகுதான். கூர்மையான மூக்கும் அகன்ற விழிகளும் கவரும். என்றாலும் வழக்கமாக அவர் மண்டைக்கு மேல் இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் கொண்டை கொஞ்சம் பயமுறுத்தும். அந்த மண்டையும் கொண்டையும் இந்தப் படத்தில் இல்லாமல் இருப்பது ஆறுதல்.

    2. நவரத்தினம்: தமிழ் படத்தில் முழு நீள இந்திப் பாடல் இடம் பெற்ற புதுமை. தான் திருடன் இல்லை என்பதை லதாவிடம் நிரூபிக்க எரியும் கொள்ளிக்கட்டையை சிரித்த முகத்தோடு பிடிக்கும் ஸ்டைல். குருவிக்கார மச்சானே... டான்ஸ். இயல்பாக வீணை வாசிக்கும் அழகு.

    3:குமரிக்கோட்டம்: அசோகனை சிரிக்க வைப்பதற்காக பல வகையான மாறு வேடம் போடும் பாடல். அசோகன் சிரிக்காமல் இருந்ததால் போட்டி நிபந்தனைப்படி பணம் கிடைக்காதே என்று அழும் உருக்கம். எங்கே அவள்? பாடலில் ஒயிட் சூட்டில் அசத்தும் ஸ்டைல்.

    4.நல்லநேரம்: குழந்தையை யானை ராமு கொல்ல முயன்றதாக கே.ஆர்.விஜயா சொன்னதைக் கேட்டு சங்கிலியால் யானையை அடித்து விட்டு பின்னர் பாசத்தால் ‘ராமு...’ என்று யானையை கட்டிப்பிடித்து அழும் காட்சி. ஓடி ஓடி உழைக்கணும்.. பாடலில் டூப் இல்லாமல் மூன்று முறை அடுத்தடுத்து அடிக்கும் பல்டி. பெண் பார்க்கப் போகும் முன் கண்ணாடியில் பார்த்தபடி நெற்றியில் சுருளும் முடியை தட்டி விட்டு அழகு பார்க்கும் ஸ்டைல். கம்பீரமாக சென்று அசோகனிடம் பெண் கேட்பதற்குள் திக்குமுக்காடும் அழகு.

    5. குடியிருந்த கோயில்: அறிமுக காட்சியில் மின்னல் வேக சண்டை. தாயின் படத்தை மிதித்த நம்பியாரை கோபத்தால் அடித்து விட்டு, அவர் தன்னை சரிகட்ட முயல்வதை புரிந்து கொண்டு, கோபத்தை அடக்கி, லேசாக சிரித்து உனக்கும் நான் அப்பன்டா என்பது போல, ‘பா......ஸ்’ என்று இழுத்து நக்கலாக கூப்பிடும் அட்டகாசம்.

    6.அடிமைப்பெண்: ஒக்கேனக்கலில் பண்டரிபாயை தன் தாய் என்று அறிந்து மலைச்சரிவில் பாய்ந்து சென்று அவரிடம் பேசியும், முகத்தை பார்க்க முடியாமல் காரணம் தெரிந்ததும் குமுறும் பரிதாபம். தாயிடம் விடைபெறும்போது ‘என்னை மறந்துடாதீங்கம்மா..’ என்று கும்பிடும்போது நாம் உருகுவோம். தாயில்லாமல் நானில்லை.... பாடலில் பறவை தன் குஞ்சுக்கு இரை ஊட்டும் பொருத்தமான இயல்பான அசத்தும் ஷாட். ஈட்டி முனை மீது கட்டப்பட்ட வலையில் ஒரு காலை கட்டியபடி அசோகனுடன் மோதும் வாள் சண்டை. கிளைமாக்ஸ் சிங்க சண்டையும் அதை மக்கள் திலகம் சிறு சிறு ஷாட்களாக பிரித்து வேகமாக படமாக்கியிருக்கும் விதம் பிரமிப்பு.

    7. இதயவீணை: விவேகானந்தர் வேடத்தில் தன் வீட்டுக்கு வந்து தந்தையாக வரும் தன் அண்ணன் சக்ரபாணி அவர்களிடம் வாக்குவாதம் செய்வது. காஷ்மீர்... பாடலின் நடனம். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, படம் வெளிவருவதற்குள் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ‘ஒரு வாலும் இல்லே..நாலு காலும் இல்லே...’ பாடலை பொருத்தமாக படத்தில் புகுத்திய சாமர்த்தியம்.

    8.விவசாயி: வயல்காட்டில் பேசிக்கொண்டே கடலையை இயல்பாக தின்னும் அழகு. உள்ளங்கையில் உள்ள கடலையின் தோலை ஊதும் ஸ்டைலே தனி. என்னம்மா..சிங்காரக்கண்ணம்மா பாடலில் சிறிய டேபிளில் ஆடும் புதுமை.

    9.உலகம் சுற்றும் வாலிபன்: கேட்கவே வேண்டாம். எதை சொல்வது. புத்தர் கோயில் சண்டை, ஜஸ்டினுடன் சண்டை, தன்னை திருமணம் செய்யலாம் என்று நினைத்து ஏமாந்த மேட்டா ரூங்ரட்டாவிடம் காட்டும் அனுதாபம் கலந்த பரிவும் எல்லாருக்கும் பொருத்தமான அறிவுரையும். பாடல்கள், எக்ஸ்போ 70யை கேமராவில் அடக்கி மக்கள் கண்முன் காட்டிய திறமை.

    10. அரசகட்டளை: சரோஜா தேவியின் இருப்பிடமான குகைக்கு வந்து நம்பியாரிடம் ‘என் நினைவா வெச்சுக்கங்க.‘ என்று கண் கட்டிய நிலையில், கத்தியை வீசிவிட்டு செல்லும் அபார ஸ்டைல். வாள் சண்டைகள். ஆடிவா... பாடலில் பாடிக் கொண்டே சண்டைக் காட்சி புதுமை. வேகமோ அருமை.

    11.பறக்கும் பாவை: கண்ணைக் கவரும் கலரில் எல்லா பாடல் காட்சிகளும். புத்தூர் நடராஜனுடன் மோதும் காட்சி அனல் பறக்கும். வீட்டை விட்டு போன சரோஜாதேவியை சர்க்கஸில் பார்த்தவுடன் மக்கள் திலகம் முகத்தில் காட்டும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கலந்த முகபாவம். முத்தமோ... பாடலில் காஞ்சனாவுடன் நடனம் சூப்பர். டிரஸ் அமர்க்களம்.

    12.நாளை நமதே: சங்கர் பாத்திரத்தின் சோகத்தையும் பழிவாங்கும் உணர்வையும் காட்டும் ஆழமான அமைதியான அழுத்தமான நடிப்பு. ‘நான் ஒரு மேடைப்பாடகன்...’ பாடலில் மக்கள் திலகத்தின் டிஸ்கோ நடனம். ‘நாளை நமதே..’ பாடலில் இரண்டு தம்பிகளும் சேர்ந்து ஆரத்தழுவிக் கொள்ளும்போது அவர்களை நாமும் அவர்களை தழுவிக் கொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாக பார்க்கும் பார்வை. இருந்த இடத்தில் இருந்தே அவர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து விட்டு வில்லன் ஆட்கள் கவனிக்கிறார்களா? என்று சட்டென திரும்பி சுதாரிக்கும் வேகம். லவிங் ஈஸ் தி கேம்... பாடலில் மியூசியத்தில் நடராஜர் சிலையை திருடச் செல்லும்போது காட்டும் சுறுசுறுப்பு. ‘என்வழி தனி வழி’ என்று அப்போதே முன்னோடியாக பேசிய பஞ்ச் டயலாக். முதன் முதலில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்தார்.

    13:ரகசிய போலீஸ்: எல்லாப் படத்திலும் மக்கள் திலகம் ஜேம்ஸ்பாண்ட் போல டிப் டாப்பாக இருப்பார். இதில் ஜேம்ஸ்பாண்டாகவே நடிக்கிறார் என்றபோது ஸ்டைலுக்கும் டிரஸ்சுக்கும் கேட்க வேண்டுமா? கண்ணில் தெரிகின்ற வானம்... பாடலுக்கு ஸ்டைல் சக்ரவர்த்தியின் நடனமும் ஸ்டெப்பும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அசோகனுடன் அறிமுகத்தின்போது பேசிவிட்டு திரும்பும் அசோகனின் கையை பிடித்து இழுத்து அவரது முகத்தை பார்த்து சிரிக்கும் அற்புதம். அசோகன் கொடுத்து வைத்தவர்.

    14:பணக்கார குடும்பம்: பறக்கும் பந்து பறக்கும்... பாடியபடியே டென்னிஸ் பந்தை அடிக்கும் லாவகம். காலை உயரே தூக்கி அந்த இடைவெளியில் பந்தை அடிக்கும் ஸ்டைலை எல்லாம் அப்போதே செய்து விட்டார் மக்கள் திலகம். கிளைமாக்சில் மனோகருடன் ஜீப் ஒட்டியபடியே போடும் சண்டை. காலாலேயே ஸ்டீரிங்கை திருப்பி ஓட்டும் கலக்கல். ‘ஒன்று எங்கள் ஜாதியே...’ கருத்துள்ள பாடலில் ‘எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே..’ என்ற முத்தாய்ப்பான தீர்க்க தரிசனம்.
    Super sir, மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரது ஒருமித்த கருத்தை உள்ளது உள்ளபடி உரைத்துவிட்டீர்கள்.மிக மிகச் சுருக்கமாக.

  2. Thanks Richardsof thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #682
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks Richardsof thanked for this post
    Likes orodizli liked this post
  6. #683
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Birthday 2016 Special Programs in Television Channels
    Author 21 hours ago Entertainment Leave a comment





    Watch MGR Birthday 2016 Special Programs in Jaya TV, Jaya Max, Raj TV, Thanthi TV, DD Podhigai on 17-1-2016. MGR 2016 birthday special program includes movies, songs, MGR speech, celebrities, peoples speak about MGR achievement. The program schedule with telecast time are listed here. This will be helpful for the MGR fans to watch it through Television channels.

    M. G. Ramachandran – MGR 99th Birthday celebrated on January 17, 2016. He was a Tamil film actor, director, producer, and politician, founder of AIADMK party and former Chief Minister of Tamil Nadu for three terms.

    Jaya Max Live Telecast MGR birthday Special chat show to telecast songs from MGR Movies

    Jaya TV MGR Birthday Special Program Schedule

    08:00 am mgr oru sagaptham
    09:00 am songs tribute to mgr
    10:00 am kumari kottam
    5:00 pm moondrezhuthu manthiram m.g.r.
    Raj TV MGR Birthday Special Movies



    12:00 pm adimai penn movie
    4:00 pm ulagam suttrum valibhan movie
    Also Check

    Kaanum Pongal 2016 Special Program in Tamil TV Channels
    MGR 99th Birthday Celebration 2016 on Jan 17, 2016
    Thanthi TV MGR 2016 Birthday Special Program

    3:00 PM MGR Special Program
    DD Podhigai MGR Special Birthday Program

    3:00 PM Special Programme on MGR’s 99th Birthday
    Apart from the mentioned above programs, some other tamil television channels, news channels also telecasting special video clippings of MGR to remember him on his birthday.

    - See more at: http://www.southupdates.in/mgr-birth....ehp39DDj.dpuf

  7. Thanks orodizli thanked for this post
  8. #684
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கிரெசன்ட் மூவீஸ் யாசின் என்னும் பெரியவர் ... மக்கள் திலகத்திற்கு திரைத் துறையில் ஆரம்ப நாட்களில் எவ்வளவோ உதவியிருந்தார் .... பின்னாட்களில் மக்கள் திலகம் முதல்வரான பொழுது , ஒரு முறை அவரை பார்க்க வந்தார் ....
    " வாங்க முதலாளி " என்று யாசினை அழைத்தார் மக்கள் திலகம் ....
    "நீங்க இப்ப முதல்வர் , நீங்க இப்பவும் என்னை இப்படி கூப்பிடனுமா ? " - என்று கேட்டார் யாசின்
    அதற்கு மக்கள் திலகம் சொன்ன பதில் :" கூப்பிட்டா என்ன ? நான் உங்க பழைய எம் ஜி ஆர் தான் சி.எம் கிற வார்த்தையை விட எம் . ஜி ஆர்க்கு ஒரு எழுத்துக் கூட ., அதுக்குள்ள மதிப்பு நிரந்தரமானது ..."

  9. Likes orodizli liked this post
  10. #685
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மொழி வேற்றுமையும் மக்கள் திலகமும் ....
    கர்நாடக மாநிலத்தில் மக்கள் திலகத்தின் படங்களை ஓட்டக் கூடாது என்று வாட்டள் நாகராஜ் தலைமையிலான கும்பல் போஸ்டர்களை கிழிப்பதும் , திரையரங்குகள் முன்னர் மறியல் செய்வதும் என்று செய்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் , அதை மக்கள் திலகம் எப்படி எதிர்கொண்டார் என்பது ஒரு சுவாரசியமான நிகழ்வு ....
    இது குறித்து தகவல் ஆர்ந்ததும் , மக்கள் திலகம் நேரே பெங்களூருக்கு புறப்பட்டார் , அந்த வாட்டள் நாகராஜ் ஒரு முரடர் , அவரிடம் நீங்கள் சென்று பேச வேண்டுமா என்று சிலர் தடுத்த பொழுதும் .
    " நான் பேசப் போகிறேன் , வாதிக்கப் போவதில்லை . அவர் மனிதர் தான் , ஒரு இயக்கத்தவர் தான் . " என்று வாட்டள் நாகராஜின் அலுவலகதிருள் சென்று விட்டார் .
    வாட்டள் நாகராஜ் , திமிருடன் அமர்ந்தப் படியே , மக்கள் திலகத்தை அமரச் சொல்லி விட்டு , " என்னை பார்க்க வந்ததன் நோக்கம் என்ன ? என்று கேட்க ...
    மக்கள் திலகம் " தமிழ் படங்களை ஓட விடக் கூடாதுன்னு நீங்க சொல்றீங்களாம் , அதுக்கு என்ன காரணம் ? யாரும் சரியா சொல்லலை , அதான் உங்க வாயாலேயே கேட்டு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன் ... "" என்றார் .
    வாட்டள் நாகராஜ் சற்று யோசித்து பின்னர் , " எங்க கன்னட படத்தை நாங்க எப்படி எடுத்தாலும் ஓடுறதில்லை , உங்க தமிழ் படங்கள் ஓடுது அதுக்குத் தான் வசூல் . அதனால் தான் என்றார்.
    " சந்தோசம் , எந்த ஒரு காரியத்துக்கும் அடிப்படையை யோசிக்கணும் , நீங்க தமிழ் படத்தை தடுத்தாலும் பாதிப்பு கன்னட காரர்களுக்குத் தான் என்று மக்கள் திலகம் சொல்ல ....
    வாட்டள் முகம் சுளித்த படி " புரியலே ..." என்று சொல்ல ...
    மக்கள் திலகம் தொடர்ந்தார் : " கொஞ்சம் பொறுமையா கேட்கணும் , நாங்க எடுக்கறது தமிழ் படமானாலும் , அதில் பணிபுரியுற பெரும்பாலானவர்கள் உங்க நாட்டுக்காரங்க தான் . "
    ஆரம்ப கால டைரக்டர் , 300 நாட்கள் ஓடிய ஹரிதாஸ் எடுத்தவர் சுந்தராவ் நட்கர்னி . அவர் கொங்கனியர் . உங்க மாநிலத்தவர் .
    பெரிய படங்கள் எடுத்த பந்துலு யார் தெரியுமா ? அவங்க மனைவி எம் . வி. ராஜம்மா யார் தெரியுமா ? உங்க நாட்டவங்க .
    அங்கேயுள்ள ஸ்டூடியோ ஓனர் விக்ரம் யார் ? அவர் உங்க நாட்டவர் . அவர் என்னையும் வைத்து படம் எடுத்தார் ... படம் - பட்டிக்காட்டு பொன்னையா .
    என்னோடு நடித்த சரோஜா தேவி யார் ? எல்லாரும் உங்க நாட்டு செல்வங்கள் .
    உங்க நாட்டு மிகப் பெரிய ஹீரோ ராஜ்குமார் யார் ? பூர்வீகம் திருச்சியாம் . அவருடைய முதல் படமே எங்க நாட்டுக் காரர் தான் எடுத்தார் .... படம் " வேடன் கண்ணப்பா " ... அவருக்கு அங்கே பெரிய வீடு இருக்கு . நான் சொன்ன எல்லோருக்கும் அங்கே பெரிய பெரிய வீடு இருக்கு .
    உங்க நாடு பெத்தது , இது தாய் நாடு ... எங்க நாடு வளர்த்தது , அது செவிலித் தாய் நாடு ,. பெத்த தாயை விட வளர்தவளுக்கும் மரியாதை கொடுக்கணும் இல்லையா ?
    எங்க நாட்டுக் காரங்களுக்கு இங்க வீடு இருக்கா ? வாசல் இருக்கா ? ஒருத்தர் இங்கே இருக்கிறார் , அவராலும் உங்களுக்கு பெரிய வருமானம் . சுவாமி ராகவேதிரர் . புவனகிரியில் பிறந்தவர் .
    தூத்துக்குடியில் தான் சங்கு விளையுது , அதில் தான் உங்க நாட்டு பிள்ளைங்களுக்கு பால் வார்பாங்க . உங்க காட்டுல தான் சந்தனம் விளையுது , அதில் தான் எங்க நாட்டு தலைவர்களை தகனம் செய்வாங்க ....
    இப்படி பிறப்புக்கும் இறப்புக்கும் இரண்டு நாடுகளும் ஒன்று படுது . இதுக்கு மேலையும் நீங்க தமிழ் படத்தை எதிர்க்க விரும்பினா . ஏன் படங்களை கன்னட ஏரியாக்களுக்கு விற்க வேண்டாம்னு சொல்லிடறேன் . அந்த நஷ்டத்தை பிரடியூசர்களுக்கு ஏன் சம்பளத்திலிருந்து கொடுத்து விடுகிறேன் . பிலிம் செம்பரிலும் சொல்லி கர்நாடகாவுக்கு விற்க வேண்டாம்னு கேட்டுக்கறேன் .
    என்றார் மக்கள் திலகம் ......
    அந்தக் கணமே தம்மையும் அறியாமல் இருக்கையிலிருந்து எழுத்த வாட்டள் நாகராஜ் , மக்கள் திலகத்தின் கைகளை பற்றிக் கொண்டு
    " இனிமே உங்க படத்துக்கு நானே பாணர் கட்டறேன் , போஸ்டரும் ஓட்டறேன் " என்றார் .....
    அது தான் மக்கள் திலகம்
    விவரிப்பு : எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ரவீந்தர் . .

  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #686
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மனசாட்சி என்பதே மிகப் பெரிய நீதிமன்றம் ...
    தற்பொழுதெல்லாம் நிறையப் படங்களின் கதைகள் குறித்து நீதி மன்றங்களுக்கு படை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது , கதையில் இனம் , சாதி , மதம் என்று எதையாவது சர்சையுள்ளதாக வைத்திருப்பதாக எதிர்ப்புக் குரல்களும் எழுகின்றன ...
    1960 களில் ... சென்னை லயோலா கல்லூரியின் முதல்வராக இருந்தவர் டிசூசா . அவர் போப் ஆண்டவருக்கு கீழுள்ள 12 கார்டினல்களில் ஒருவராக நியமிக்கப் பட்டு ரோமுக்கு போக இருந்தார் , அதை முன்னிட்டு மக்கள் திலகத்தின் நண்பரான டாக்டர் ரெக்ஸ் அவரை ராமபுரத்திற்கு அழைத்து வந்தார் .
    அவரைப் பாத்தவுடன் மக்கள் திலகம் சொன்னது " என்னைப் பார்க்க நீங்க வந்ததை விட உங்களைப் பார்க்க நான் வந்திருந்தாள் அதுவே முறையாக இருந்திருக்கும் "
    அதற்கு டிசூசா " இல்லை இல்லை , நான் ஒரு காம்பவுண்டுக்கு பெரியவர் , நீங்கள் இந்த நாட்டுக்குப் பெரியவர் . உங்களைப் பற்றி என் அருமை நண்பர் ரெக்ஸ் சொன்னார் , அதனால் பார்க்க வந்தேன் ."
    மக்கள் திலகம் - " மிக்க நன்றி , உங்களை விட நான் எந்த வகையில் பெரியவன் என்று எனக்கே தெரியலே "
    டிசூசா - " இப்போது நான் வெளியே போனால் என்னை யார் என்று தெரியாது . ஆனால் நீங்கள் வெளியே தலைகாட்டினாலும் போதும் , யார் என்று சொல்லி விடுவார்கள் . மக்களால் சூழப் படுபவன் எவனோ அவனே மகான் "
    இப்படி பேசிக் கொண்டிருக்கையில் , கிறிஸ்துவ மத பின்னணியில் பரமபிதா என்கிற படத்தை மக்கள் திலகம் எடுத்தும் நடித்தும் கொண்டிருப்பது குறித்தும் பேச்சு சென்றது ... அதன் கதையமைப்பை கேட்ட டிசூசா
    " பாதிரியார் மனதில் சலனங்கள் கூடாது , உங்கள் படத்தில் நாயகன் காதலில் ஈடுபட்டிருக்கிறான் , அவன் அப்படியான சூழ்நிலைக்கு ஆளாகி இருக்க லாகாது . அப்படிப் பட்டவன் பாதிரியாக வர முடியாது . கதையின் அடிப்படையே தவறாக இருக்கிறது " என்று சொன்னார் ...
    அதை கேட்ட மக்கள் திலகம் , அது வரை 2 ஆயிரம் அடி வரை எடுத்திருந்த பரம பிதா படத்தை கை விட்டார் ...
    படத்தை எடுக்காதீர்கள் என்று டிசூசாவும் கூறவில்லை ... செலவு செய்து விட்டேன் எடுத்தே தீருவேன் என்று மக்கள் திலகமும் யோசிக்கவில்லை ....
    மனசாட்சியை மிஞ்சிய நீதிமான் இல்லை என்று இன்று எவர் எவரோ உதார் விடுகிறார்கள் ... உண்மையில் அந்தக் காலம் எப்பொழுதோ நம்மை கடந்து விட்டது ..."
    மனசாட்சி என்பதே மிகப் பெரிய நீதிமன்றம்


    courtesy net

  13. Thanks orodizli thanked for this post
  14. #687
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    26 ஜூலை 1987 ... மக்கள் திலகத்திற்கு டெல்லியிலிருந்து அழைப்பு...இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனைக்கு அழைக்கிறார்கள் .. விடுதலை புலிகள் உட்பட்ட அணைத்து தமிழ் இயக்கங்களும் இருக்கிறார்கள்...
    டெல்லி .....தமிழ் நாடு இல்லம் .... மக்கள் திலகம் அமர்ந்திருக்க சந்திக்க வருகிறார் இலங்கைக்கான இந்தியத் தூதர் ஜே . என் தீட்சித் .ஒப்பந்தம் பற்றி விவரிக்கிறார் .. அப்பொழுது அறைக்குள் நுழைகிறார்கள் பிரபாகரன் பாலசிங்கம் , யோகரத்தினம் ஆகியோர்...
    ஒப்பந்தம் பற்றி பேச வேண்டும் என்று சொல்ல , ஜே என் தீட்சித்தை வெளியே இருக்குமாறு சொல்கிறார் மக்கள் திலகம்.... நாங்கள் தமிழர்கள் எங்களுக்குள் பேசிவிட்டு உங்களுக்கு தெரிவிக்கிறோம் என்று மக்கள் திலகம் சொல்ல திகைத்துப் போகிறார் தீட்சித் ... இதை அப்படியே ராஜீவ் காந்தியிடம் சொல்ல ... அவரோ ... பெரியவர் முடிவில் தலையிடவேண்டாம் , அங்கிருந்து கிளம்புங்கள் என்று சொல்கிறார் தீட்சித்திடம்....
    விடுதலை புலிகள் தவிர்த்து மற்ற அணைத்து இயக்கங்களும் இலங்கை இந்தியா ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தந்திருந்தநிலையில் புலிகள் நிலைப்பாடு என்ன என்றுகேட்கிறார் மக்கள் திலகம்.... பிரபாகரன் , பாலசிங்கம் ,யோகி .... மூவரும் புலிகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுப்பதற்கான காரணத்தை விவரிக்கிறார்கள் ... அமைதியாக கேட்டுக் கொள்கிறார் மக்கள் திலகம் ...
    இறுதியில் மக்கள் திலகம் பேசுகிறார் ...
    " பிரபாகரன் எடுப்பது தான் இறுதி முடிவு . என்னுடைய ஆதரவு அதற்கு உண்டு "
    இப்படி மக்கள் திலகமும் ... பெரியவர் என்று மரியாதையைத் தந்த ராஜீவ் காந்தியும் .... கொண்ட கொள்கையில் திடமாக இருந்த பிரபாகரனும் என்று அற்புதமான சூழல் சிதைந்தது தான் சாபக் கேடு

  15. Thanks orodizli thanked for this post
  16. #688
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    மக்கள் திலகத்தின் 99-ஆவது பிறந்நாள் விழா. நூற்றாண்டுவிழாவின் தொடக்கநாள்.

  17. Likes orodizli liked this post
  18. #689
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    மன்னாதி மன்னனின் நூற்றாண்டுவிழாவைப் போற்றும் வகையில் அவர்தம் பொக்கிஷ புகைப்படங்கள், ஆவணங்கள், அரும்பெரும் குணங்கள், திரைப்பட வீடியோக்கள், மேடைப் பேச்சுக்கள்,எழுத்துக்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாத்து அனைவரும் பார்த்து படித்து அறிந்து கொள்ளும் வண்ணம் ஆவணப்படுத்துவோம். வெள்ளம், புயல், நெருப்பு என்று எந்த வித பாதிப்புக்கும் உள்ளாக்காமல் வலைத்தளப் பதிவில் பாதுகாத்து அனைவரும் பயன்படச் செய்வோம்.

  19. Thanks orodizli thanked for this post
  20. #690
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ஜெய்சங்கர்
    தாங்கள் கூறியது போல் மக்கள் திலகத்தின் ஆவணங்கள், நிழற் படங்கள் மற்றும் வீடியோ தொகுப்புகள் அனைத்தும்
    தக்க முறையில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் . அதே போல் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் நெகடிவ் -எத்தனை படங்களுக்கு உள்ளது என்று தெரியவில்லை .இதையும் கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டும் .
    மக்கள் திலகத்தின் 99வது பிறந்த நாள் நேற்று முழுவதும் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது .

    2016 - நூற்றாண்டு விழா தொடக்கம் .
    2017 - நூற்றாண்டு விழா
    2018 - நூற்றாண்டு விழா நிறைவு

    தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு திருவிழா ஆணடுகளாக அமைய விருப்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •