Page 300 of 400 FirstFirst ... 200250290298299300301302310350 ... LastLast
Results 2,991 to 3,000 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

  1. #2991
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு காலத்தில் பள்ளியில் வாழ்வியல், சூழ்நிலையியல் என்றொரு பாடம் இருந்தது. நல்லொழுக்கம், நன்னடத்தை கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய பரபரப்பான காலத்தில் மதிப்பெண் முக்கியமில்லாத இந்த படிப்புகள் பள்ளியில் இருந்தே எடுக்கப்பட்டு விட்டன.

    இன்றைய தலைமுறைக்கு வீட்டில் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டிய தாத்தா, பாட்டிகளோ முதியோர் இல்லத்திலும் பரம்பரை வீட்டில் தனிமையிலும் இருக்கின்றனர். பகிர்ந்து கொள்ள சகோதரர்கள் கிடையாது. பிறகு சுயநலம் இல்லாமல் வேறென்ன இருக்கும்.

    இன்று முரட்டுத்தனம் தான் ஹீரோவுக்கு உரிய இலக்கணமாக மாறி விட்டது. ஒரே அடியில் வீழ்த்துவதே ஹீரோயிசம் என்று குழந்தைகளுக்கு ஊட்டப்பட்டு விட்டது. நல்லவனாக மட்டுமே வாழக் கற்றுக் கொடுத்த காந்தியிசம் நகைப்புக்குரிய ஒன்றாகி விட்டது.

    எம்ஜிஆரின் பாத்திரப்படைப்பு பெரும்பாலும் நல்லவர்களாகவே காட்டப்பட்டு வந்தன. சிறுவர்களும், வாலிபர்களும் அதைப் போன்று வளரவே பெற்றோர்களால் ஊக்குவிக்கப்பட்டனர். ஆனால் இன்று மசாலா சினிமா என்ற பெயரில் முரட்டுத்தனம் சிறுவர்களின் மனதில் விதைக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன.

    courtesy - net

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2992
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    உயிர்தெழிந்து 52 வயதில் சாதனை படைத்த MGR.

    1967ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று மாலை 5 மணிக்கு நடந்த துப்பாக்கி சூடு. ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆரின் வீட்டுக்கு வந்த எம்.ஆர்.ராதா, எதிர்பாராத நேரத்தில் தன்னை மறந்து துப்பாக்கியை எடுத்தார். எம்ஜிஆரை சுட்டார். சீறிய தோட்டா, எம்ஜிஆரின் கழுத்தில் பாய்ந்தது.
    மொத்த திரையுலகமும் இந்த சம்பவத்தை அறிந்ததும் அதிர்ந்தது. அனைவரது மனதிலும் எழுந்த கேள்வி-முடியுமா?அப்படியே நடித்தாலும் அவரால் சொந்தக் குரலில் பேச முடியுமா?

    இதற்கான விடை ஒருவரிடமும் இல்லை. சொல்லப்போனால் யாருக்கும் நம்பிக்கையும் இல்லை. எம்ஜிஆர் எழுந்திருக்க மாட்டார் என்றே நினைத்தார்கள். எண்ணியதை வாய்விட்டு சொல்ல அஞ்சினார்கள். ஆனால் கற்பனைக்கு எட்டாதவர் எம்ஜிஆர் என்பதை ஒருவரும் உணரவில்லை.

    எல்;லாம் நல்லபடியாக சென்ற தருணத்தில் இந்த துப்பாக்கி சூடு. எம்ஜிஆர் பிழைத்து விட்டார். ஆனால்- கழுத்தில் பாய்ந்த குண்டால் அவரது குரல் வளம் பாதிக்கப்பட்டது.

    எந்த திiயுலகில் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை அமைக்க அரும்பாடு பட்டாரோ- அதே சினிமாவில் அவரது எதிர்காலம் கேள்விக்குறியானது.

    50 வயதில்-மீண்டும் ஆரம்ப நிலைக்கு வந்து நின்றார். மனிதர் பின் வாங்கவேயில்லை. பழைய நிலையை அல்ல–அதற்கும் மேம்பட்ட இடத்தை பிடிக்க தனக்குள் சபதம் செய்தார். அதற்கான வேலைகளில் இறங்கினார்.
    பாதிக்கப்பட்ட குரல் மட்டும் இடைஞ்சலாக இருந்தது. ரசிகர்கள் ஏற்பார்களா?அறிந்த கொள்ள உடல்நலம் தேறியதும் காவல்காரன் படத்தில் நடித்தார்.

    சத்யா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தின் ஹ_ட்டிங். முன்பே முடிந்து விட்டது. பேட்ச் ஒர்க் மட்டுமே பாக்கி. நடித்து முடித்தார்.

    ஒரேயொரு இடத்தில் மட்டும்- புதிதாக டப்பிங் பேசினார். ரிஸ்க் வேண்டாம். டப்பிங் கலைஞர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என நண்பர்கள் கருத்து தெரிவித்தார்கள்.மறுத்து விட்டார். ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. குண்டடிபட்ட குரலுடன் தன்னை அவர்கள் ஏற்றால்,தொடர்ந்து நடிக்கிறேன். இல்லாவிட்டால் திரையுலகிலிருந்த விடைபெறுகிறேன் என்று தீர்மானமாக சொன்னார்.


    1967 செப்டம்பர் 7 அன்று வெளியான காவல்காரன் மகத்தான வெற்றியை அடைந்தது.பிசிறு தட்டிய எம்ஜிஆரின் குரலை- முகம் சுளிக்காமல் ரசிகர்கள் ஏற்றார்கள். . அடுத்ததாக ரிலீசான தேவரின் விவசாயியும் வசூலில் பட்டையை கிளப்பியது.
    மறுவருடம் 1968ல் எட்டு படங்களில் நடித்தார்.ரகசிய போலீஸ் 115. தேர்த் திருவிழா, குடியிருந்த கோயில், கண்ணன்என் காதலன், புதிய பூமி, கணவன், ஒளிவிளக்கு , காதல் வாகனம்.

    எல்லாமே வெற்றிப்படங்கள் தான் என்றாலும் குடியிருந்தகோயில் ப்ளாக் பஸ்டர் இவை அனைத்திலும் ஜெயலலிதாதான் அவருக்கு ஜோடி. அத்துடன் ஒளி விளக்கு அவருக்கு நூறாவது படமும் கூட.


    1936ம் வருடம் சதி லீலாவதி படத்தில் அறிமுகமானார். இப்படத்துக்கு கதை எழுதியவர் எஸ்.எஸ்.வாசன். அதே வாசனின் ஜெமினி பிக்சர்ஸ் ஒளிவிளக்கு அவரது நூறாவது படத்தை தயாரித்தது! எம்ஜிஆர் நெகிழ்ந்து விட்டார்.
    இக்கட்டான சமயங்களில் எல்லாம் எந்த பிரதிபலனும் பாராமல் இப்படி ரசிகர்கள் தோள் கொடுக்கிறார்களே. கை கொடுத்து தன்னை உயர்த்துகிறார்களே.. அவர்களுக்கு என்ன கைமாறு செய்வது? ஆறஅமர யோசித்தார்.அதுவரை அவர்கள் பார்க்காத ரசிக்காத பொழுது போக்கு படம் ஒன்றில் நடிப்பது தான் ஒரே வழி என்று முடிவெடுத்தார்.


    களத்தில் இறங்கினார்.


    வரலாறு தான் எவ்வளவு சுவாரஸ்யமானது. நாடோடி மன்னன் படத்தில் பானுமதி திடீரென்று காணாமல் போவார். சரோஜா தேவி சட்டென்று தோன்றுவார்.அதே சம்பவங்கள் இம்மி பிசகாமல் அரச கட்டளையில் அரங்கேறின.
    இதன் பிறகு தான் எம்ஜிஆரின் திரையுலக வாழ்வில் ஜெயலலிதா நீங்காத இடத்தை பிடித்தார்.


    குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய தருணத்திலும்- அதிலிருந்து மீண்டு நடிக்க வந்த நேரத்திலும்- தனக்கு உறுதுணையாக நின்ற ஜெயலிதாவை இறுதி வரை அவர் மறக்கவேயில்லை. மட்டுமல்ல. ரசிகர்களுக்கு பெரும் விருந்து கொடுக்கப் போகும் படத்தில் இவரது அத்தனை திறமைகளும் வெளிப்படும் வகையில் இரு கதாபாத்திரங்களை உருவாக்கினார். அதில் ஒன்று வில்லி வேடம்!இப்படி தயாரானது தான் அடிமைப்பெண்!


    1969ஆம் ஆண்டு எம்ஜிஆர் பிக்சர்ஸ{ம்,இயக்குனர் கே.சங்கரும் அசாத்தியமான காரியத்தை தங்களுக்கு கிடைத்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டு அப்படியொரு பிரம்மாண்டமான அடிமைப்பெண் படத்தை தமிழில் எடுத்தது வியப்புக்குரிய விஷயம்.

    இதற்கு முன் ராஜா வேடம் ஏற்று எம்ஜிஆர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால்- இதில் தான் முதன் முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்திருப்பார். கட்டுமஸ்தான அவரது புஜங்களும், புடைத்த மார்புகளும், உருண்டு திரண்ட தொடைகளும் அப்பட்டமாக தெரியும். அதன் வழியாக ஐம்பத்திரண்டு வயதிலும், தன் உடல் வலு குன்றவில்லை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.

    அடிமைப்பெண்ணில் அதிக டுவிஸ்டுகளும் கமர்ஷியல் அம்சங்களும் கொண்டது. ஜெயப்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக படமாக்கி இருப்பார்கள். பாலைவன ஒட்டக சண்டையும், க்ளைமாக்ஸில் சிங்கத்துடன் எம்ஜிஆர் நேருக்கு நேர் மோதும் காட்சியும் மெய்சலிர்க்க வைக்கும்.

    எம்ஜிஆர் சிங்கத்துடன் போடும் சண்டை மிகவும்பிரசித்தம். சிங்கத்துடன் சண்டை போடும் காட்சிக்காக, எம்ஜிஆர் நிறைய சிரத்தை எடுத்துக் கொண்டார். பாம்பே சர்க்கசில் இருந்து நன்றாக வளர்ந்த, ராஜா என்ற ஆண் சிங்கத்தை விலைக்கு வாங்கி, தன் சத்யா ஸ்டூயோவில் தனி இடத்தில் வைத்து பிரத்யேக பயிற்சியாளர் வைத்து, ஆறு மாதங்கள் பயிற்சி கொடுத்தார்.
    அடிமைப்பெண் படத்தில் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு என்ற பாடலை ஜெயலலிதா பாடினார். ஆனால் டி.எம்.சௌந்தரராஜனையும் இதே பாடலை பாட வைத்து முதலில் ரிக்கார்டிங் செய்து விட்டனர்.கதைப்படி எம்ஜிஆர் பேச முடியாத சூழ்நிலை என்பதால் இந்தப் பாட்டிற்கு வாயசைத்து நடித்தால் சரி வராது அதனால் ஜெயலலிதாவை பாட வைத்து பாட்டை பதிவு செய்து விடுங்கள் என்று எம்ஜிஆர் சொல்லி விட்டார். எனவே முதன் முதலாக ஜெயலலிதாவை பாட வைத்தவர் இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள். டி.எம்.எஸ் அவர்களுக்கு இன்னொரு அம்மா பாட்டைக் கொடுத் தார்கள் அது தான் தாய் இல்லாமல் நானில்லை என்ற கம்பீரமான பாட்டாக எம்ஜிஆருக்கு அமைந்த பாடல்.
    இப்படி பார்த்துப் பார்த்துப் செதுக்கப்பட்ட படம்
    COURTESY - NET
    Last edited by esvee; 31st March 2016 at 05:35 AM.

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #2993
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தை பற்றி பாடகர் திலகம் .

  7. Likes orodizli liked this post
  8. #2994
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. Likes orodizli liked this post
  10. #2995
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks orodizli thanked for this post
  12. #2996
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks orodizli, Richardsof thanked for this post
  14. #2997
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like





  15. Thanks orodizli, Richardsof thanked for this post
    Likes orodizli liked this post
  16. #2998
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  17. Thanks orodizli thanked for this post
  18. #2999
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1984 - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரும் படமும் சந்தித்த தேர்தல் களம் .

    மக்கள் திலகத்தின் கோட்டை மதுரை மாநகரம்

  19. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  20. #3000
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  21. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •