Page 115 of 400 FirstFirst ... 1565105113114115116117125165215 ... LastLast
Results 1,141 to 1,150 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1141
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1142
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Before writing articles like this on History, please try to verify the info. Navarathiri was a super duper hit and ran 100 days in six screens in Tamil Nadu.

    Chennai: Midland, Maharani, Uma & Ram, Trichy Central and Madurai Sridevi - 100 days.

    For Madras edition ad of 100 th day ad in newspaper:

    http://i1110.photobucket.com/albums/...GEDC4963-1.jpg
    The Hindu has done it again. Thalaivar's Navarathri which is a roaring success ever, has been mentioned as caught in a jinx. Why these people write such kind of comments is a misery. The above quote is a reply comment made by me in that page of the Hindu the link of which is given below:

    http://www.thehindu.com/features/cin...3.ece#comments
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1143
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நவராத்திரி திரைக்காவியம் தமிழர் சார்பில் உலகத்திரையை பெருமைப்படுத்திய காலத்தின் அழிக்க முடியாத நடிப்புக்கலைத் தந்தையின் வரலாற்றுச் சுவடு !

    நவராத்திரி திரைப்படம் வெளிவந்தபோது அது ஏற்படுத்திய தாக்கம் உலகமகா கலைஞர்கள் எவரையும் விட நடிகர்திலகத்தை Never Before and Never Again என்னும் உலகத்தர உச்சாணிக் கொம்பில் சிம்மாசனமிட வைத்தது.

    மரியாதைக்குரிய ஹிந்து நாளிதழ் யானையைப் புரிந்து கொள்ள முயலும் ஆறு அந்தகர்களில் ஒருவராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் வரலாற்று உண்மையை மறைக்க முயலாமல் நடுநிலையாக செயல்படுவது ஒன்றே அதன் தரத்தின் வெளிப்பாடாக இருக்கும் !

    ஆங்கில வார்த்தைகளை தாறுமாறு தக்காளிச் சோறாக அடுக்கிவிட்டால் நவராத்திரியின் மாபெரும் வெற்றி என்ற முழுப் பூசணிக்காய் மறைந்து விடுமா ?!


    The HINDU shall keep up its standards lest it may lose its accountability and reliability among its voracious readers who have grown up witnessing the invincible success of NT's prestigious movie NAVARATHIRI!!!

    See how a renowned Psychiatrist can easily read the mind of the person disguising herself as a mentally retarded!!....without getting caught in a jinx...of course!

    Last edited by sivajisenthil; 15th May 2016 at 08:52 PM.

  6. Thanks Russellmai thanked for this post
  7. #1144
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post

    The HINDU shall keep up its standards lest it may loose its accountability and reliability among its voracious readers who have grown up witnessing the invincible success of NT's prestigious movie NAVARATHIRI!!!

    See how a renowned Psychiatrist can easily read the mind of the person disguising herself as a mentally retarded!!....without getting caught in a jinx...of course!

    This is mot the firstoccasion THE HINDU very often publish false news in the PAST THE BLAST COLUMNS. ATLEAST LET THIS BE LAST ONE

  8. Likes Russellbzy liked this post
  9. #1145
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Written by Mr. Sudhangan,




    1968ம் ஆண்டு வந்த எல்லா படங்களுமே சிவாஜிக்கு வெற்றி படங்களாகவே இருந்தன! அந்த வருடம்தான் இயக்குநர் பி.மாதவன் தன்னுடைய அருண்பிரசாத் மூவீஸ் சார்பில் எடுத்த ‘எங்க ஊர் ராஜா‘ படம் வந்தது! அப்போதெல்லாம் அருண் பிரசாத் மூவீஸிற்கு ஆஸ்தான கதாசிரியர், பாலமுருகன்! இவர் அருண் பிரசாத் மூவீஸிற்கு எழுதிய அத்தனை படங்களுமே வெற்றிப் படங்கள்! ‘எங்க ஊர் ராஜா’ சென்னை சித்ரா தியேட்டரில் வெளியானது! இந்தப் படத்தில் சிவாஜிக்கு தந்தை– மகன் என்று இரண்டு வேடங்கள்!
    இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே ஹிட்! அதிலும் அந்த நாட்களில் இலங்கை வானொலியில் இந்தப் படத்தில் வரும் ‘ யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க! என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க’– இந்த பாடலின் சரணத்தில் ‘தென்னையைப்பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு! பெத்தவர் மனமே பித்தம்மா! பிள்ளையின் மனமே கல்லம்மா’ பாட்டு அந்த காலத்தில் பிள்ளைப் பெற்றவர்களுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று!
    நான் வீட்டில் அடாவடி வேலைகள் செய்யும்போது, என் அம்மா சொல்வார், ‘பிள்ளையப்பெத்தா கண்ணீருன்னு சும்மாவா எழுதினார் கண்ணதாசன்’? என்பார்! அதே வருடம் வந்த இன்னொரு படம் பாலாஜி தயாரித்த கறுப்பு– வெள்ளைப்படம் ‘என் தம்பி!’
    இந்தப் படத்திலும் எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்! தயாரிப்பாளரும், நடிகருமான கே. பாலாஜி படங்கள் எடுக்க ஆரம்பித்த போது இந்தியில் வெற்றியடைந்த படங்களை அப்படியே உரிமை வாங்கி தமிழில் எடுப்பார்!
    அந்தப் படங்கள் தமிழிலும் பெரிய வெற்றியடையும்! இந்தப் படம் இப்போது ஜெயப்ரதா தியேட்டராகி மூடியே கிடக்கும் அந்த நாளைய மிட்லண்ட் தியேட்டரில் வெளியானது. இந்த தியேட்டர் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு அடுத்து உள்ளது!
    பாலாஜி இப்படி இந்திப் படங்களை வாங்கி தமிழில் அதை வெற்றி படமாக்கியது அப்போது பெரிதும் பேசப்பட்டது! அதாவது பின்னால் 1980களில் இயக்குநர் மகேந்திரன் சிவசங்கரியின் ‘நண்டு’ படத்தை எடுத்தார்.
    இந்தப் படத்தில் பெரும்பாலும் இந்தி வசனங்கள் இருக்கும். காரணம், கதைக்களம் என்பது வடநாடு! அந்த படத்திற்கு குமுதம் பத்திரிகை விமர்சனம் எழுதிய போது ‘இந்தப் படத்தில் இன்னும் ஒன்றிரண்டு ரீல்கள் இந்தியில் எடுத்திருந்தால் தயாரிப்பாளர் கே. பாலாஜி அதன் உரிமையை வாங்கி தமிழில் எடுத்திருப்பார்’ என்று எழுதினார்கள்.
    அந்த அளவிற்கு கே. பாலாஜியின் படங்கள் பேசப்பட்டன! அந்த வருடம்தான் தமிழ் சினிமாவின் காலத்தால் அழிக்க முடியாத சிவாஜியின் ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் வந்தது! ‘தில்லானா மோகனாம்பாள்’ ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தது!
    ‘கலைமணி’ என்கிற பெயரில் இந்த தொடரை எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு! தொடராக வந்த போது அதை ஆர்வமாகப் படித்து வந்தவர் இயக்குநர் ஏ.பி. நாகராஜன்!
    பரதமும், நாதமும் இணைந்த சுவையான இந்தக் கதை திரைப்படத்திற்கு ஏற்ற நல்ல வலுவான கதை என்று கருதினார் இயக்குநர் ஏ.பி. நாகராஜன்! ‘நவராத்திரி’ படத்திற்குப் பிறகு இந்தக் கதையை படமாக்க விரும்பிய நாகராஜன், ஜெமினி அதிபர் வாசனை சந்தித்து தன் விருப்பத்தைச் சொன்னார்.
    அப்போதெல்லாம் பத்திரிகைகளில் தொடர் வந்தால் அந்த தொடரின் உரிமை அந்த பத்திரிகை முதலாளியிடம்தான் இருக்கும்.
    பின்னால்தான் அந்த உரிமை எழுத்தாளர்களுக்கு வந்தது!
    அதனால் அந்த நாவலின் உரிமை ஆனந்த விகடன், ஜெமினி அதிபரான வாசனிடம்தான் இருந்தது!
    ‘‘தில்லானா மோகனாம்பா’ளை நாம் இருவரும் கூட்டாக எடுப்போம்’. உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. படம் எடுக்கும்போது நான் தலையிட மாட்டேன்’ என்றார் வாசன்!
    ஆனால் உடனே நாகராஜன் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை
    இதற்கிடையில் ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ ‘திருவருட் செல்வர்’ படங்களை முடித்துவிட்டு மீண்டும் வாசனை அணுகினார் நாகராஜன்!
    இந்த முறை ஒரு முடிவோடு வரவேண்டுமென்றுதான் அங்கே போனார்! ‘திருவிளையாடல்’ படம் பார்த்துவிட்டு, வாசனுக்கு, நாகராஜன் மீது அதிக மதிப்பு ஏற்பட்டிருந்த காலம் அது! விடாமுயற்சியில் தளராத நாகராஜனைக் கண்டதும் வாசன், ஒரு விளக்கம் கேட்டார்– ‘கூட்டுத்தயாரிப்பில் உங்களுக்கென்ன தயக்கம்?’
    ‘லாபமோ, நஷ்டமோ எதுவானாலும் என்னையே சேரட்டும். வாழ்க்கையில் சில அனுபவங்களுக்கு ஆளாகி இருப்பவன் நான்!’ என்றார் நாகராஜன்!
    ‘நாகராஜன்! தில்லானாவை நீங்களே படமாக எடுத்துக்கொள்ளுங்கள். ‘திருவிளையாடல்’ படம் பார்த்த பிறகு ‘ஆனந்த விகட’னில் வந்த இந்த கதையை அதன் தரம் குறையாமல் எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’ என்று சொல்லிவிட்டார் வாசன்! மறுநாள்!
    கதைக்குக் கொடுக்க வேண்டிய தொகை என்னவென தெரிந்து கொடுத்துவிடலாம் என ஏ.பி.என். ஜெமினிக்கு வந்தார். வாசன் மிக அதிகமாக கேட்பாரோ என பயந்து கொண்டிருந்தார் ஏ.பி.என்.!
    ‘பத்தாயிரம் ரூபாய் கொடுங்கள் போதும்!’ என்று சொல்லிவிட்டார் வாசன்! உடனே ‘ செக்’ எழுதி கொடுத்துவிட்டார் ஏ.பி.என். அடுத்த தினம் மாலை, ‘தில்லானா’வைப் படைத்த அதன் ஆசிரியரான கொத்தமங்கலம் சுப்புவை எழும்பூர் கண் ஆஸ்பத்திரியில் கண்டு பேசினார் ஏ.பி.என். வாசனிடம் அவர் கதையைப் படமாக்க உரிமை பெற்ற செய்தியைச் சொல்லிவிட்டு, ‘கதை எழுதிய உங்களுக்கு என் சொந்த முறையில் ஐயாயிரம் கொடுக்க விரும்புகிறேன்’ என்றார் ஏ.பி.என்.
    ‘நீங்கள் கொடுத்த பத்தாயிரத்தை இங்கே என்னிடம் கொடுத்து, எல்லாவற்றையும் வாசன் ஏற்கனவே சொல்லிவிட்டார். அவரும் ஓர் எழுத்தாளர், அதனால் ஓர் எழுத்தாளனின் கஷ்டம் அவருக்குத் தெரியும். மேலும், அவர் அந்த உரிமைகளை வைத்திருப்பது கூட அவர் காசு சம்பாதிக்க அல்ல!! நான் நேரடியாக கொடுத்திருந்தால் ஐயாயிரம்தானே கொடுத்திருப்பீர்கள். வாசன் கேட்டதால்தானே மறுபேச்சு பேசாமல் பத்தாயிரம் கொடுத்தீர்கள்! எழுத்தாளனுக்கு அதிக பணம் கிடைக்க வேண்டுமென்பதாலேயேதான் அவர் அந்த உரிமைகளை வைத்திருக்கிறார். வாசன் என் முதலாளி மட்டுமல்ல! என் தெய்வம்’ என்று கண்கட்டுடன் சுப்பு கண்ணீர் மல்க கூறினார்.
    ஏ.பி. நாகராஜன் மெய்சிலிர்த்து போனார். இந்தத் தகவல்களை அடுத்த இரண்டு வருடங்கள் கழித்து அப்போது வந்து கொண்டிருந்த மாதம் ஒருமுறை வரும் சினிமா பத்திரிகையான பேசும்ப டம் இதழிலும் எழுதினார் நாகராஜன்!
    அடுத்து சிவாஜி எப்படி ஒரு நாதஸ்வர கலைஞனாகவே மாறினார்?

  10. #1146
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதவன் ரவி அவர்களே!


    //பணத்தைப் பெற்றுக் கொண்ட
    பின் கடன் கொடுத்தவனிடம்,
    தானே வந்து வட்டியைக் கொடுத்து விடுவதாகவும்,
    வட்டிக்காக வீட்டுக்கோ, வேலை செய்யுமிடத்துக்கோ
    வந்து விட வேண்டாம் என்றும்
    கெஞ்சிக் கேட்டுக் கொள்வார்.

    அவன் சம்மதித்த பின்னும்
    அவர் காட்டும் தயக்கமும்,
    முகக் குழப்பமும் சில விநாடிகளே என்றாலும்,
    கடன் வாங்கிப் பழக்கமில்லாத,
    பொறுப்பும்,தன்மானமுமுள்ள
    ஒரு குடும்பத் தலைவனை
    நமக்குக் காட்சிப்படுத்தியவை//

    தங்களது 'பச்சை விளக்கு' பற்றிய எழுத்துப் பயணம் வெகு நேர்த்தி. தங்களது அற்புதமான ரசனை வார்த்தைகளாய் எழுத்து வடிவில் என்னமாய் விளையாடுகிறது! ஒவ்வொரு காட்சிகளிலும் நடிகர் திலகத்தின் முத்திரைகளை தாங்கள் விளக்கும் விதம் அருமை. நானும் அந்த ரகம் என்பதால் என்னால் இன்னும் ரொம்ப ரசிக்க முடிகிறது. தங்களது எழுத்துக்களை ஒன்று விடாமல் படித்து வருகிறேன். நேரமின்மை காரணத்தால் அடிக்கடி இங்கே பகிர்ந்து கொள்ள முடியவில்லை. மனமுவந்து பாராட்டுகிறேன். தொடர்ந்து தெய்வத்தின் அற்புதங்களைப் பற்றி எழுதி மகிழ்ச்சி தாருங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks Russellmai thanked for this post
  12. #1147
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    http://newstodaynet.com/chennai/icon...re-wind-sunday

    Iconic Shanthi theatre to wind up Sunday

    Saturday, 14 May 2016 NT Bureau

    Chennai: Shanthi theatre in Anna Salai is a sanctuary for Sivaji Ganesan fans. Owned by the family of the actor, the cinema hall is known for releasing all films of him.

    These films saw silver jubilee run and they have very fond memories to the place. Interestingly, the iconic theatre will see curtains coming down Sunday as a commercial complex with a multiplex is all set to come up in its place.

    The theatre is synonymous with films associated with Sivaji Ganesan, his son Prabhu and grandson Vikram Prabhu. It even has a plaque with all of Sivaji Ganesan’s films and references to his other on-screen achievements.

    It all began in 1961 here with the screening of the movie Pava Manippu. "Fans of the legendary actor would gather from various corners of the State to watch his movies here. The special attraction would be the way screens are decked up for every release", says Thirukumaran, an ardent fan of the actor.

    He says, "my special fan moment at Shanthi theatres was watching Sivaji Ganesan’s Thirusulam, which happened to be his 200th film. It saw a continuous 150 housefull shows here".

    However fans have a grouse. They say such a theatre which is part and parcel of Sivaji Ganesan fans could have been demolished after screening one last show of the thespian’s movie.

    When iconic theatres like Liberty and Muralikrishna were closed, they screened Sivaji Ganesan’s films like 'Andavan Kattalai' and 'Saraswathy Sabatham' as last shows, he says.

    Speaking to 'News Today', K Chandrasekaran of Nadigarthilagam Sivaji Samooga Nala Peravai said, "It is sad that curtains are coming down at Shanthi Theatre without screening a Sivaji movie. We are not angry. But we are hopeful when they reopen the complex, they inaugurate it with one of his classics."
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  13. #1148
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Oneway we are worried....but in another perspective when the same SHANTHI theatre assumes a reincarnation within the new complex...we request the management to recreate all the fanfare features, award details....etc as a museum part for our nostalgic recitals!!

  14. Likes Subramaniam Ramajayam liked this post
  15. #1149
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    From Today's Times of India Chennai edition
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. #1150
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    From today's The New Indian Express Chennai Edition
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •