ஜூலை மாதத்தில் நாம் இருக்கிறோம், நடிகர்திலகத்தின் நினைவு மாதம்,
நினைவு சிறப்பு பதிவு.
ஒரு காலத்தில் அயல்நாட்டினர்
தமிழகத்தை 'சிவாஜி கணேசன் தேசம்' என்றுதான் குறிப்பிடுவார்களாம் , அந்த அளவிற்கு நடிகர்திலகத்தின் நடிப்பானது கடல் கடந்த புகழினை எட்டியிருந்தது, ...
என்பது வருட தமிழ் சினிமாவில்
ஐம்பது வருடங்களுக்கு மேலும் நடிகர்திலகத்தின் ஆளுகைக்குள் இருந்து வந்தது.
பராசக்தி- - குணசேகரன்,
பாகப்பிரிவினை- - கன்னையா,
வீரபாண்டிய கட்டபொம்மன்,
கப்பலோட்டிய தமிழன்-- வ.உ.சி,
சேரன் செங்குட்டுவன்,
சாக்ரடீஸ்,
ஒத்தெல்லோ,
அசோக சக்கரவர்த்தி,
வீர சிவாஜி,
வாஞ்சி நாதன்,
திருப்பூர் குமரன்,
பாசமலர் ராஜ சேகர்,
அப்பர்,
சிக்கல் சண்முக சுந்தரம்,
பாரிஸ்டர் ரஜினிகாந்த்,
டி.எஸ்.பி.சௌத்ரி,
பிரிஸ்டீஜ் பத்மனாபன்,
பாவமன்னிப்பு ரஹீம்,
ஞானஒளி ஆன்டனி,
இத்தனை நீண்ட நடிப்புப் பட்டியல் கொண்ட உலகத்து நடிகர் ஒருவரும் இல்லை,
காலம் அந்தக் கலைப்பெட்டகத்தை கைப்பற்றிக் கொண்டது, கண்ணாடி பெட்டகத்துக்குள் கண் மூடிக்கிடந்த நடிகர்திலகத்தைப் பார்த்து கவிஞர் வைரமுத்து சொன்னது,
ஒரு மனிதன் இறந்து போகும் போது நான்கு பேர் இறந்து போகின்றனர்,
ஒரு கணவன் இறந்து போகிறான்,
ஒரு தகப்பன் இறந்து போகிறான்,
ஒரு மாமன் இறந்து போகிறான்,
ஒரு மைத்துனன் இறந்து போகிறான்,
ஆனால் மாபெரும் நடிகர்திலகத்தை இழந்து பார்க்கும் போது
சாக்ரடீஸ் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
சேரன் செங்குட்டுவன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
கட்டபொம்மன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
ராஜ ராஜ சோழன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்.
ஒரு எழுபது வருட மனித வாழ்க்கையில் மூவாயிரம் வருடம் வாழ்ந்த ஒரே நடிகன்" நடிகர் திலகம்"
மட்டுமே.
ஒரு முகத்தில் ஓராயிரம் பாவங்கள் காட்டிய ஒப்பற்ற கலைஞர்,
ராமனின் பாதம் பட்ட கல் அகலிசை ஆனது போல் நடிகர்திலகம் பேசிய வசனங்களால் தமிழ் மேலும் இனிமையானது.
நாளைக்கும் சேர்த்து உணவைத் தேடுகிற எறும்பு போல,
பாலைவனப் பயணத்தில் தன்னீரை சேமித்து வைத்துக் கொள்ளும் ஒட்டகம் போல இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கானப் புகழை சேர்த்து சென்றிருக்கிறார் நம் நடிகர்திலகம்
நன்றி :- பிலிம் காட்டியவர்கள் என்ற நூலிலிருந்து





(முகநூலில் இருந்து)