Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    இந்தப் பகிர்வை எழுதுவதற்கே மிகுந்த மன உறுதி வேண்டும்...பார்ப்பதற்குக் கலங்காத நெஞ்சுரம் வேண்டும்.....மணியான காட்சி....மிகையில்லாத நடிப்பு...அதை நடிப்பென்று கூட சொல்ல முடியாது....அத்தனை இயல்பு...ஒன் மேன் ஷோ என்பார்களே.....மூன்று பேர் காட்சியில் இருந்தும் இந்த ஒரு மனிதனின் ஆளுமை....அய்யா...இவர் மட்டுமே நடிக்கப் பிறந்தவரய்யா .......நடையழகில் எத்தனை வகை, குரல் உயர்த்தி,தாழ்த்தி,கண்ணாலே பேசி,கெஞ்சி,கொஞ்சி......இனிமேல் பிறந்து வரணும்...அதுவரை நான் சாகாதிருக்கணும்...ஒரு அல்ப ஆசை....காட்சியின் துவக்கத்தில் குமாரி பத்மினி ,பகவதி அண்ணாச்சி ...பணக்காரக் குடும்பம்...கணவனுக்காக வாசலில் காத்திருக்கும் மனைவி,,,,மகளிடம் மருமகனின் தொழில் பக்தி பற்றி பிரஸ்தாபிக்கும் தந்தை...கல்யாணத் தரகர் உள்ளே நுழைகிறார்....அவரிடம் பகவதி (நாடகப் பிரியர்)ராஜப்பார்ட் ரங்கதுரையைப் பற்றி நலம் விசாரிக்க...உண்மை தெரியாத தரகர் ராஜபார்ட் ரங்கதுரை நாடகம் இல்லாமல் வறுமையில் உழல்வதையும்,கஷ்டப்பட்டு படிக்க வைத்த ரங்கதுரையின் தம்பி பாஸ்கர் கூட அவருக்கு உதவ முன் வரவில்லை என்று(பாஸ்கர் அவர் மருமகன் என்பதை உணராமல் )சொல்லி விடுகிறார்.வந்த காரியம் முடிந்தது என்று மானஸ்தனாக அவர் நகர,பாஸ்காராகிய ஸ்ரீகாந்த் உள்ளே நுழைகிறார்.கோபத்தில் பகவதியும் குமாரி பத்மினியும் ரங்கதுரையைப் பற்றியும்,அவர் இவருடைய அண்ணனா என்று கோபத்துடன் விசாரிக்க,ஆடம்பர வாழ்விற்குப் பழகிப் போன ஸ்ரீகாந்த் யாரோ தவறான தகவல் தந்திருப்பதையும்,தான் ரங்கதுரையின் தம்பியல்ல,கப்பல் முதலாளி கண்ணபிரான் அவர்களின் தம்பி என்றும் நிரூபிக்கும் வரை வீடு திரும்பப் போவதில்லை என்று சூளுரைத்து அண்ணனைக் காணச் செல்கிறான்......'ராஜாமணி அம்மா தர்மச் சத்திரத்தில்,தரையில் படுத்துறங்கும் ரங்கதுரை....தட்டி எழுப்பும் ஸ்ரீகாந்த்....'வாப்பா"ஆதுரத்துடன் அழைப்பவரிடம்,"அண்ணே உங்க கிட்ட பேசணும் கொஞ்சம் வெளியே வாங்க "அழைக்க உடன் செல்கிறார்.அவரிடம் தன மாமனார் மனைவிக்கு,தான் ஏழை ரங்கதுரையின் தம்பி என்று தெரியாது என்றும்,தன மரியாதையைக் காப்பாற்ற ஒரு பெரிய தனவந்தனாக நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறான்.வெள்ளந்தியான ரங்கதுரை"அவுங்கதான் என்னைப் பார்த்திருக்கிறார்களே?என்று வினவ.....நாடகத்தில் பல வேடங்கள் போட்டிருக்கும் அவர் பெரிய கனவானாக நடிப்பது பெரிய விஷயமில்லை என்றும் சொல்கிறான்.அதிர்ந்து போன நடிகர் திலகத்தின் கண்களையும் உடல் மொழியையும் இனிமேல் பார்க்கணும் ஒவ்வொரு நொடியும் ஒரு பாடம்...நடிகன் என்று பேர் சொல்லிக் கொண்டிருக்கும் அனைவரும் பலமுறை ரீவைண்ட் செய்து செய்து பார்க்கணும்.....பாடமாகவும் நடிப்புக் கல்லூரியில் வைக்கணும்..."நான் உங்கண்ணன் மாதிரி நடிக்கணுமாப் பா??நான் மேடையில் அர்ஜுனனாக நடிச்சிருக்கேன்,அரிச்சந்திரனாக நடிச்சிருக்கேன்...சொந்த தம்பிக்கே அண்ணனாக முதன் முதல்ல வேஷம் போடப் போறேம்பா?"தோள் துண்டும்,உடல் குறுகிக் கூனும் நெகிழ்வும்...ஆஹா....உன் அண்ணனில்லைஎன்று நானே வந்து சொல்லணு மாப்பா...கேட்கும் பொழுதே நெஞ்சு வெடித்து விடும் நமக்கு...சொன்னபடியே ஒரு பெரிய தலைப்பாகை,கம்பீரமான நடை,பகட்டான உடை,கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக் அதை சுழட்டும் லாவகம்...'ஏண்டா இதுதான் உன் மாமனார் வீடா...என்னமோ பேலஸ் மாதிரின்னு சொன்னே நம்ம செர்வெண்ட்ஸ் குவாட்டர்ஸ் மாதிரி இருக்கு......தோரணை....ஸ்டைல்....கம்பீரம் என்றால் இது!பகவதியைக் காட்டி யார் இவரு உன் மேனேஜரா?எடக்கு ...என்ன நினச்சுகிட்டு இருக்காரு உன்னை....திருவாங்கூர் திவான் தில்லை நாயகத்தின் பேரனா இல்ல தோட்டக்காரனா?கப்பல் முதலாளி கண்ணபிரானின் தம்பியா இல்லை இவுங்க வீட்டுத் தோட்டக்காரனா?ராயல் பேமிலி....அவர் நிறுத்தியதும் பகவதி மன்னிக்க வேண்டுகிறார்...அவரிடம்'அய்யா நெல்லைக் கொட்டினா மணிமணியாகப் பொறுக்கிடலாம்...நெய்யைக் கொட்டினால் முடியுமா?'பேசி முடித்து தலையில் இருக்கும் தலைப் பாகையையும்,மீசையையும் கலைக்க....கலந்குவோம் நாம்...தொடருவார் அவர்....ஆமாய்யா ரங்கதுரையே தான்....இந்த லட்சாதிபதி வேஷம் பொய்,,,எல்லாம் பொய்.....அய்யா நாங்க லட்சாதிபதிக்குப் பிறக்கலை...ஆனால் தேசத்தின் விடுதலைக்காக மேடையில் நடித்த ஒரு லட்சியவாதிக்குப் பிறந்தவர்கள்...என் தம்பி நல்லவனய்யா...பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப் பட்டதன் விளைவு.....தம்பி மனைவியிடம் அம்மா என் தம்பி நல்லவன் என்று சொல்லி வெளியேறும் முன்...பகலெல்லாம் பட்னி கிடக்கிற நான் இரவில் மேடையில் ராஜாவாக நடிக்கிறேன்.....பகலெல்லாம் நல்ல வாழ்க்கைக்காக என் தம்பி நாளும் நடிக்கிறான் ஒருத்தன் பொழைப்புக்காக நடிக்கி றான்...இன்னொருத்தன் பகட்டுக்காக நடிக்கிறான்.....சொல்லி நடக்கிறார்.பகவதியும் பத்மினியும் விக்கித்து நிற்க,ஸ்ரீகாந்த் வெட்கி நிற்க நாம் சொக்கி,திக்கு முக்காடிப் போகிறோம் சோகத்தில்.....என்றும் நீரே உமக்கு நிகரானவர் நடிகர் திலகமே....காட்சி உங்களுடன்...






    Rajapart Rangadurai - Sivaji acts as rich ship business man
    Rajapart Rangadurai - Tamil Movie Sivaji Ganesan plays the lead role in this film. Sivaji and his siblings toil hard at young age to eke out a living. V.K.Ra...
    youtube.com









    (முகநூல் விசாலி ஶ்ரீராம்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •