Page 114 of 400 FirstFirst ... 1464104112113114115116124164214 ... LastLast
Results 1,131 to 1,140 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1131
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பதிவு எண் - 12.

    சின்னப்பா கந்தன்.(Dr )


    சட்டை என்பது மனிதனுக்கு மிக அவசியம். வெயிலுக்கும் ,மழைக்கும் மனிதன் சட்டையணிந்தே ஆக வேண்டும். சமயங்களில் வேர்வையால் சட்டை நனைந்திருக்கும் போதும்,மழையால் நனையும் போதும் ,நாமே தோய்க்கலாம் .மனைவியிடமோ ,வேலைக்காரியிடமோ கொடுக்கலாம். சோப்பு போட்டால் நல்லது. மகாலிங்கம் சட்டையணியும் வழக்கம் உள்ளவர். சிறு வயதில் மகாலிங்கம் சட்டையணிவதை பார்த்தே நானும் சட்டை போட ஆரம்பித்தேனாம்.

    The Shirt gives suvve Debonaire look to our Moron king Mahalingam .

    Stills of Trinities wearing shirts T.R.Mahalingam,M.K.T, P.U.Chinnappa .
    Last edited by Gopal.s; 14th May 2016 at 02:43 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes KCSHEKAR, Harrietlgy, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1132
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Muthaiyan Ammu,

    We know what we are doing and probably you lack higher sense of Humour . Our fans love it and they take it well. I appreciate your postings in our Thread but this is not called for.

    முத்தையன்,

    நான் மதிப்பு வைத்திருக்கும் பதிவர்கள் பாணியில் spoof .இது ஒரு விதமான இளக்கத்தை ஏற்படுத்தி நட்பை இறுக்கமாக்கும்.இதில் எல்லோருமே,அவர்களாக விரும்பி கேட்டே இந்த பதிவுகளை நான் போட்டேன். சில திரிகள் போன்று ,ஒரே விஷயத்தை, பொய்களை கூறி ,அளவு மீறி கொடுப்பது எங்களால் இயலாது.


    எங்களுக்குள் இருக்கும் நட்பை உங்களால் அளவிடவும் முடியாது.

    நான் உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கும் உங்கள் ரசிகன்(எங்கள் திரியில் போடும் ஸ்டில்களுக்கு மட்டுமே)என்ற விதத்தில், எதையும் புரிந்து செய்யுமாறு வேண்டுகிறேன்.
    Last edited by Gopal.s; 13th May 2016 at 02:52 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #1133
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Gopal
    Enjoyed your spoof and parody in a healthy way! You could have added a relevant video too!!
    senthil

    வ(ச)ம்பு சோ(ப்)பாலின் தழும்பு தரும் அ(ழு)ம்பு தாங்காமல் திகைத்து திண்டாடி திடுக்கிட்டு திகிலடித்து வெதும்பி கலங்கி குழம்பி தயங்கி மயங்கி பயந்து நயந்து ஏறி இறங்கி கண்கள் இருண்டு தொண்டை வறண்டு சிந்தை மிரண்டு வெருண்டு மருண்டு உருண்டு புரண்டு வெறித்து தெறித்து ஓடி ஒளிந்து வளைந்து நெளிந்து ஒதுங்கி பதுங்கி சுருங்கி விரிந்து குனிந்து நிமிர்ந்து தாவி குதித்து ஏறி மிதித்து வேர்த்து விறுவிறுத்து பதறி உதறி கத்திக் கதறி துடித்து துவண்டு வெந்து புழுங்கி நொந்து நூலாகி நடுங்கி ஒடுங்கும் புதியபறவை கோ(ப்)பால் !!
    கட்டம் கட்டப்பட்ட இத்தனை முக பாவ வர்ண ஜாலங்களையும் கட்டுக்கடங்காமல் வெளிப்படுத்தி பின்னிப் பெடலெடுத்து வட்டமடித்திட நடிகர்திலகத்தினால் மட்டுமே முடியும்!

    Last edited by sivajisenthil; 15th May 2016 at 07:15 PM.

  6. Likes Gopal.s, KCSHEKAR liked this post
  7. #1134
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    எழுச்சிமிகு 7வது வாரம் சிவகாமியின் செல்வன்

    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, நமது தலைவர் இருவேடங்களில் நடித்து டிஜிட்டலில் வெளிவந்த சிவகாமியின் செல்வன் திரைப்படம் 7 வாரங்களை கடந்து 50 நாளை நோக்கி வெற்றி நடை போடுகிறது. பல இடையூறுகளைச் சந்தித்து தொடர்ந்து மக்களின் பேராதரவோடு வெற்றிநடை போடும் சிவகாமியின் செல்வன் வெற்றியைத் தடுக்க பலர் முயற்சித்து அவர்கள் தோல்வியைச் சந்தித்தனர் என்பது தான் உண்மை.
    நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகி வருவதைப் பார்த்தால் படம் 50 நாளையும் தாண்டி ஓடும் என்று தெரிகிறது.
    வினை விதைத்தவன் வினை அறுத்தே ஆவான் என்ற பழமொழிக்கேற்ப நமது தலைவர் படத்தின் வெற்றியைத் தடுக்க முயற்சிப்பவன் யாராக இருந்தாலும் நமது கலைக் கடவுள் தண்டனைக் கொடுப்பார் என்பதில் ஐயமில்லை.



    (முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. Thanks Russellbzy, Gopal.s, Russellmai, eehaiupehazij thanked for this post
  9. #1135
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்றைய நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள்,
    தொலைக்காட்சி களில்
    * ஆலயமணி*
    பிற்பகல் 1 pm க்கு ஜெயா மூவி யில்
    ... * கந்தன் கருணை*
    இரவு 7 மணிக்கு சன் லைப்
    * நான் பெற்ற செல்வம்*
    இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
    கண்டு மகிழ்வோம்

















    (முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. Thanks Russellbzy, Gopal.s, Russellmai thanked for this post
  11. #1136
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பச்சை விளக்கு-
    எழுத்துப் பயணம் -3


    "பச்சை விளக்கு" படத்தில்
    நான் இமைக்கவும் மறந்து ரசித்துப் பார்த்த மேலும்
    சில காட்சிகள்...


    உயிருக்குயிரான தங்கையை
    கெட்ட எண்ணத்தோடு நெருங்கியவனை வெட்டிச்
    சாய்த்து விடும் கோபத்துடன்
    நம் தலைவர் கிளம்புகிறார்.

    வாழ்வில் பக்குவப்பட்ட தந்தை
    தடுக்கிறார். அவனை அழிக்கும் எண்ணத்தை மறந்து,மகளின்
    படிப்பை நிறுத்தி விட்டு
    திருமணம் செய்து வைப்பதே
    சரியென்கிறார்..தந்தை.

    "தப்பு செய்தவன் வேறொருவன். தண்டனை
    தங்கைக்கா..?" என்று அடக்க
    முடியாத கோபமும், வேதனையும் அழுகையாய்
    மாற... "தவறு செஞ்சவன் பாலுப்பா..பாலு" என்பார்.

    "ஆமா" என்று ஒத்துக் கொள்வார்..தந்தை.

    "உம்ம்..." - என்பார்.

    அதில்-
    "சரிதானே..?
    எனது கோபம் நியாயமானது
    தானே..?"- என்கிற கேள்வியும்
    இருக்கும்.

    தப்பு ஒரு பக்கம்..தண்டனை ஒரு பக்கம் என்று நியாயம்
    பேசும் தந்தையைக் குறித்த
    கேலியும் இருக்கும்.

    இன்னொன்று...

    அந்த அழுகை கலந்த கோபத்தில் ஒரு குழந்தைத்தனம் பளிச்சென்று
    தெரியும்.

    நல்லவிதமாய் வளர்க்கப்பட்டு,
    நல்லவனாயிருப்பவன் எந்த
    வயசிலும் குழந்தையாகவே இருப்பான்.

    அந்த கோபம்-

    நல்லவனின் கோபம்.
    ---------------------

    "சுமதி விஷயமாகப் பேச வேண்டும்.உடனே கிளம்பி வா"
    என்று அக்காள் எழுதிய கடிதம்
    பார்த்து, சுமதிக்கும், தனக்கும்
    திருமணமென்று புரிந்து கொண்டு, ஆள்,அம்பு,பரிவாரத்துடன் கிளம்பி வந்து
    விடுகிறான்.. பசுபதி. மனைவியின் தம்பி தங்கையை
    மணக்கப் போவதாய்ச் சொல்ல
    சுள்ளென்று கோபம் காட்டும்
    காட்சி.

    அக்காள்தான் கடிதம் எழுதி
    வரச் சொன்னாள் என்றதும்,
    கடிதத்தைப் பிடுங்கிக் கொண்டு, "பார்வதி" என்று அழைத்தபடியே கடுங்கோபத்துடன் அவர் உள்ளே போகும் வேகம், ஒரு
    பெரிய பிரளயத்தையே உண்டு
    பண்ணப் போகிறார் என்று
    எண்ண வைப்பதாயிருக்கும்.

    ஆனால் மனைவி அமைதியாக
    உண்மையைப் புரிய வைத்த
    பின் அந்தக் கொதிப்பு அடங்குகிற கோபம்...

    நடுத்தரக் குடும்பங்களில்
    ஆவேசமாய் எழுந்து, எதுவும்
    நடவாதது போலே அடங்கிப்
    போகும் பல்லாயிரம் கோபங்களில் ஒன்று.
    ----------------------

    திடீர் கல்யாணத்திற்காக பழக்கமேயில்லாமல் பட்டாணியிடம் கடன் வாங்குவார்.

    பணத்தைப் பெற்றுக் கொண்ட
    பின் கடன் கொடுத்தவனிடம்,
    தானே வந்து வட்டியைக் கொடுத்து விடுவதாகவும்,
    வட்டிக்காக வீட்டுக்கோ, வேலை செய்யுமிடத்துக்கோ
    வந்து விட வேண்டாம் என்றும்
    கெஞ்சிக் கேட்டுக் கொள்வார்.

    அவன் சம்மதித்த பின்னும்
    அவர் காட்டும் தயக்கமும்,
    முகக் குழப்பமும் சில விநாடிகளே என்றாலும்,
    கடன் வாங்கிப் பழக்கமில்லாத,
    பொறுப்பும்,தன்மானமுமுள்ள
    ஒரு குடும்பத் தலைவனை
    நமக்குக் காட்சிப்படுத்தியவை.
    -----------------

    தங்கையை மணக்கவிருந்தவன், தங்கை
    நடத்தை கெட்டவளென்று
    குற்றஞ்சாட்டி வெளியேற,
    திருமணம் நின்று போகிறது.
    வேதனையில் விம்மி அழுபவர்
    தந்தை வந்து தோள் தொட்டதும்
    அழுகையைப் பெரிதாக்குவார்.
    வெகு இயல்பானது..அந்த
    சத்தமான அழுகை. முன்னர்
    வந்த ரயில் காட்சியிலும்,
    இந்தக் காட்சியிலும்தான்
    அவரது உரத்த குரலைக்
    கேட்கலாம்.

    (...தொடரும்...)

  12. Thanks Russellmai thanked for this post
  13. #1137
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,

    பதிவுகள் ( ராகவேந்தர், வாசுதேவன், சின்னக்கண்ணன், சிவாஜிசெந்தில்) மிக மிக அருமை. படித்து, ரசித்து சிரித்து மகிழ்ந்தேன்.

    ஒரு பக்கம் பயமும், நம்மை எப்போது வாருவாரோ என்று. இன்னொரு பக்கம் நிம்மதி. வாரும் அளவுக்கு பெரிய பதிவுகள் எதுவும் இட்டு விடவில்லை. நாமிட்ட பதிவிகள் நாலு வரிகளுக்கு மிகாமல்தானே இருக்கும் என்று.

    முத்தையன் சாருக்கு அளித்த பதில் நன்று. அதிசயம் என்னவென்றால் 'சாந்தகோபாலாக' பதில் அளித்திருப்பதுதான்.

    நடிகர்திலகம் போலவே நீங்களும் அந்தந்த பாத்திரமாகவே மாறி விடுகிறீர்கள்.

  14. Thanks Gopal.s thanked for this post
  15. #1138
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    திரையுலக வரலாற்றில் மறு,மறுவெளியீட்டிலும்
    மாபேரும் உலக சாதனை


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  16. Thanks Russellbzy, Gopal.s, Russellmai thanked for this post
    Likes Russellbzy, Harrietlgy, Russellmai liked this post
  17. #1139
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    "சிவாஜி ஃபிலிம் கிளப்"
    ஏற்றி வைக்கும் "தீபம்".
    நமக்குக் காட்சி தருகின்ற
    நான்காம் கலை" தீபம்".

    29.05.2016 ஞாயிறன்று
    ஒளிரவிருக்கும் "தீபம்".
    திருச்சியின் சுருதி மஹாலை
    வெளிச்சமாக்கும் "தீபம்".

    முன்போலே அய்யன் படம்
    திரையரங்கில் வருவதில்லை.
    அய்யன் முகம் காணும் வாய்ப்பு நாம் அடிக்கடிதான்
    பெறுவதில்லை.

    ஆசை தீர நாம் காண
    ஓர் அன்புருவம் வைத்தது
    நம் முன்னே அகலத் திரை.
    அதில் அய்யனைக் காட்டிய
    அந்த அன்புருவத்தின் பெயர்
    அண்ணாதுரை.

    முதன்முதலாய் அத்திரையில்
    "கௌரவ"த்தைக் காட்டினார்.
    பின் வந்த ஒரு தினத்தில்
    "புதிய பறவை" காட்டினார்.
    திருச்சியே திரண்டு வர
    "தியாக"த்தையும் காட்டினார்.

    இதோ...

    "சிவாஜி ஃபிலிம் கிளப்" எனும்
    கோயிலிலே
    "தீப"த்தை அவரே ஏற்றுகிறார்.
    நம் ஆசை மனமெனும்
    விளக்கினிலே
    ஆனந்த நெய்யை ஊற்றுகிறார்.

    "தீபம் " கண்டு
    மகிழ்வில் மனம் உருக...
    நல்லவர்கள் எல்லோரும்
    திருச்சி நோக்கி வருக!

    இது-

    ஒளி தந்து வழிகாட்டி
    ஒளிர்ந்திருக்கும் "தீபம்".
    நம் நடிப்பரசர் திறமையிலே
    எரிந்திருக்கும் "தீபம்".

    ஈடு இணை இல்லாத
    இனியதொரு "தீபம்".
    எல்லோரும் கைகூப்பி
    வணங்குகின்ற "தீபம்".

    அய்யன் புகழ்ப் பாதை சூழ்ந்த
    இருளகற்றும் "தீபம்".
    புனிதர் நடிகர் திலகம் நடந்த
    திசை காட்டும் "தீபம்".

    "தீபம்" கண்டு
    மகிழ்வில் மனம் உருக...
    நல்லவர்கள் எல்லோரும்
    திருச்சி நோக்கி வருக.

  18. Thanks Russellmai thanked for this post
  19. #1140
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    ஒரே நேரத்தில் நடிகர்திலகத்தின் இரண்டு படங்கள் வெற்றி பவனி

    64-ல் வெளியான 'கர்ணன்' 6-வது வாரம்

    74-ல் வெளியான 'சிவகாமியின் செல்வன்' 7-வது வாரம்

    சாதனை என்றால் இது சாதனை.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •