Page 150 of 400 FirstFirst ... 50100140148149150151152160200250 ... LastLast
Results 1,491 to 1,500 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1491
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பைலட் பிரேம்நாத் பத்திரிகைகளின் தொகுப்பு தொடரும்...........
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1492
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டு பத்திரிகைகள்
    விபரமாக செய்திகளை பிரசுரிக்கவில்லையா?
    தாங்கள் அளித்திருக்கும் பதிவுகள் மற்றும் அதிலுள்ள விவரங்கள் இங்கு நமக்கு புதுமையாக இருப்பதிலேயே தங்கள் கேள்விக்கு பதில் உள்ளது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Likes Harrietlgy liked this post
  5. #1493
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மனத்தைக் கவரும் மதுர கானங்கள் திரியிலிருந்து......மனமாற்றிகள்!

    Mood and Mind Moderators!

    நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே!

    மனிதனின் இறப்பிடம்....தத்துவங்களின் பிறப்பிடம்...சமரசத்தின் உறைவிடம் நமக்கு உணர்த்திட்ட அறிவுக்கண் திறந்திட்ட ஞான கானங்களின் உலா!!

    போனால் போகட்டும் போடா....இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!

    (கண்கெட்ட பின்) ஞானோதயம் No.3 பாலும் பழமும் ......வந்தவரெல்லாம் தங்கி விட்டால்...இந்த மண்ணில் நமக்கே இடமேது!



    NT at his best....!

    நடிகர்திலகத்தின் சமரச சாம்ராஜ்ஜியம்....முடி சூடிய மன்னரும் முடிவில் ஒருபிடி சாம்பலே!!



    Last edited by sivajisenthil; 15th June 2016 at 01:24 PM.

  6. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai, KCSHEKAR liked this post
  7. #1494
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    மனித வாழ்வில் மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்றாலும் அதைத் தாங்கும் வலிமையையும் நாம் இறைவனிடம் தான் கேட்டுப் பெற வேண்டியுள்ளது. இதை நாம் இன்று இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் மறைவில் உணர்கிறோம். நடிகர் திலகமும் திருலோக்கும் பிரிக்க முடியாத இரு பெயர்கள். திருலோக் என்றில்லை, பல இயக்குநர்கள் தங்கள் வாழ்வில் நடிகர் திலகத்தை ஒரு படம் இயக்கினால் கூட புளகாங்கிதம் அடைந்து ஜென்ம சாபல்யம் பெற்று விட்டதாக கருதுவார்கள். அப்படி ஒரு பேற்றினைப் பலமுறை பெற்று நடிகர் திலகத்தின் மனதில் மட்டுமின்றி அவருடைய ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் வகிப்பவர் திருலோக் சந்தர். எத்தனை படங்கள்... இவர்கள் இணையில்... நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றில் திருப்புமுனை படம் தந்தவர்களில் திருலோக்கின் பங்கு முக்கியமானது. அதுவரை குடும்பக்கதைகளிலும் புராண இதிகாச இலக்கியப் பாத்திரங்களிலும் நடித்து வந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் அதுவரை இல்லாத புதிய பரிமாணத்தை வெளிக்கொணர்ந்த பெருமை திருலோக் அவர்களுக்கே சாரும். அவருடைய தங்கை திரைப்படம் ஏராளமான புதிய ரசிகர்களை நடிகர் திலகத்திற்குப் பெற்றுத் தந்தது. அதற்குப் பிறகு இவர்கள் இணையில் வெளிவந்த அத்தனை படங்களுமே ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவையாகும்.

    நடிகர் திலகத்தோடு திரையுலக வாழ்வில் மட்டுமின்றி இப்போது மேலுலகிலும் இரண்டறக் கலந்து விட்ட அவரின் பிரிவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு எல்லா சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நமது ஆழ்ந்த இரங்கலையும் இத்துயரைத்தாங்கும் வலிமையை அவர்களுக்கு இறைவன் வழங்கவேண்டும் என்கிற பிரார்த்தனையும் தெரிவித்துக் கொள்வோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks Russellmai, Subramaniam Ramajayam thanked for this post
    Likes Harrietlgy, sankara1970 liked this post
  9. #1495
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    நன்றி அய்யா!

    மரண வாகனமேறிக் கொண்டு
    எங்களிடமிருந்து தாங்கள்
    விடைபெறுகிற இந்த நிமிஷம்..
    இந்த நன்றியை நாங்கள் சொல்ல வேண்டியது கடமை.

    ஒரு ரசிகனுக்குத் தேவையான
    அத்தனையையும் தந்து வளமாக்க எங்களுக்கோர்
    நடிகர் திலகம் கிடைத்தார்.

    அந்த அற்புதக் கலைஞன்
    தன்னை முழுசாய் வெளிப்படுத்தத் தேவையான
    அத்தனையும் தருவதற்கு
    அவருக்கு நீங்கள் கிடைத்தீர்கள்.

    அய்யா நடிகர் திலகத்தின்
    படங்களைப் பார்ப்பதற்காக
    டூரிங் திரையரங்கில்
    மணல் குவித்து அமர்ந்ததில்
    எனக்குக் கிடைத்த உயரத்தை,
    என் வாழ்வின் உயர்வுகள்
    என்றே சொல்வேன்.

    அதில் பெரும்பாலான உயர்வுகள்- அய்யா...தங்களால்
    கிடைத்தவையே.

    காதல், கோபம், அழகு, அருவருப்பு, லட்சியம், அழுகை, ஆர்ப்பரிப்பு, புன்னகை, சிரிப்பு,
    சிலிர்ப்பு... எல்லாம் பார்த்து விட்டோம் உங்கள் படங்களில்.
    எதுவும் பாக்கி வைக்கவில்லை நீங்கள்.

    அணிந்திருக்கும் கோட்டில்
    படிந்த தூசியை, நூறு ரூபாய்
    நோட்டினால் தட்டி விடுகிற
    செல்வந்தனுக்கும் உங்கள்
    படம் பிடிக்கும்.

    பைசா பைசாவாய் சேர்த்து வைத்து பல மாதங்களுக்கு
    ஒரு முறை படம் பார்க்கிறவனுக்கும் உங்கள்
    படம் பிடிக்கும்.

    நிறைவான நிறைவும், முழுமையும் தந்து எங்களிடமிருந்து விடை பெறும் தங்களுக்குப் பணிந்து
    தருவதற்கு என்ன இருக்கிறது..
    என்னிடம்?

    தேடுகிறேன்..

    முப்பத்தைந்து ஆண்டுகளாக
    என் இதய வீட்டுக்குள்
    என் சொந்தங்களாய் உலவுகிற
    சுந்தர், உமா, சாந்தி... ஆகியோரை அணு அணுவாய்
    வியந்து நான் "தரிசனம்"
    என்கிற தலைப்பில் "இரு மலர்கள்" பற்றி எழுதியதைப்
    படித்து விட்டு, இன்றளவும்
    ஏராளமானோர் என்னைப்
    பாராட்டும் போது.. என்னுள்
    ஊற்றெடுக்கிறதே.. நன்றிக்
    கண்ணீர்...?

    அதைத் தந்து விடைகொடுப்பேன்.

  10. Thanks Russellmai, Subramaniam Ramajayam thanked for this post
  11. #1496
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    ACT KNOWN AS AC DIRECTOR THOSEDAYS, His brother happened to be an iobian he comes to the bank VERY OFTEN that time we used to chat with him about films morso about NT and he as a simple man with no reservation.
    MAY HIS SOUL REST IN PEACE,

  12. #1497
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஏசி திருலோக்சந்த்ர் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்து வெளிவந்த படங்கள்:

    தங்கை
    2. இரு மலர்கள்
    3. என் தம்பி
    4. திருடன்
    5. தெய்வமகன்
    6. எங்கிருந்தோ வந்தாள்
    7. எங்க மாமா
    8. பாபு
    9. தர்மம் எங்கே
    10. பாரத விலாஸ்
    11. அவன் தான் மனிதன்
    12. அன்பே ஆருயிரே
    13. டாக்டர் சிவா
    14. பைலட் பிரேம்நாத்
    15. விஸ்வரூபம்
    16. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
    17. வசந்தத்தில் ஓர் நாள்
    18. குடும்பம் ஒரு கோயில்
    19. அன்புள்ள அப்பா

    20. அன்பளிப்பு.
    Last edited by RAGHAVENDRA; 15th June 2016 at 11:00 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Harrietlgy, Russellmai liked this post
  14. #1498
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இவற்றில் மெல்லிசை மன்னர் இசையமைத்த படங்கள் 18. அவற்றின் பட்டியல்

    1. தங்கை
    2. இரு மலர்கள்
    3. என் தம்பி
    4. திருடன்
    5. தெய்வமகன்
    6. எங்கிருந்தோ வந்தாள்
    7. எங்க மாமா
    8. பாபு
    9. தர்மம் எங்கே
    10. பாரத விலாஸ்
    11. அவன் தான் மனிதன்
    12. அன்பே ஆருயிரே
    13. டாக்டர் சிவா
    14. பைலட் பிரேம்நாத்
    15. விஸ்வரூபம்
    16. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
    17. வசந்தத்தில் ஓர் நாள்
    18. அன்பளிப்பு

    குடும்பம் ஒரு கோயில் படத்திற்கு எம். ரங்கா ராவ் அவர்களும், அன்புள்ள அப்பா படத்திற்கு சங்கர் கணேஷ் அவர்களும் இசையமைத்திருந்தார்கள்.
    Last edited by RAGHAVENDRA; 15th June 2016 at 11:00 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Harrietlgy, Russellmai liked this post
  16. #1499
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Hearty condolences to the bereaved family of Ace Director of NT Mr ACT on his sudden demise
    senthil

  17. #1500
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    அவன் தான் மனிதன் சிங்கப்பூரில் படப்பிடிப்பு. பாடல் காட்சி படமாக்கப் படவேண்டும். படப்பிடிப்பிற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் திலகம் உட்பட அனைத்துக் கலைஞர்களும் படப்பிடிப்பு துவங்குவதற்காக காத்திருக்கின்றனர்.

    திடீரென பரபரப்பு.. உதவியாளர் ஒருவர் பதைபதைப்புடன் இயக்குநர் ஏசிடியிடம் ஓடி வந்து ஏதோ சொல்கிறார். இதைக் கேட்ட திருலோக் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். இதற்குள் படப்பிடிப்புக்குழுவைச் சேர்ந்த பலருக்கும் தகவல் தெரிய வர, அனைவரும் என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறுகின்றனர்.

    இங்கோ கடல் கடந்து வந்து நாயகன் நடிகர் திலகத்தின் படப்படிப்பில் ஒரு நிமிடம் கூட வீணாகக் கூடாது என நினைத்திருந்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் கவலை தொற்றிக்கொள்கிறது. இதை எப்படி நடிகர் திலகத்திடம் சொல்வது, எப்படி சமாளிப்பது, என்ன செய்வது என்று முழிக்கின்றனர். ஒரு வழியாக நடிகர் திலகத்திடம் விஷயத்தை சொல்கின்றனர்.

    என்ன திருலோக் ஏன் தடுமாறுகின்றாய். ஷூட்டிங் ஆரம்பி. எல்லோரும் போய் அவங்க அவங்க வேலையை தொடருங்கள் என நம்பிக்கையூட்டுகிறார்.

    இயக்குநர் மற்றும் படப்பிடிப்புக்குழுவைச் சார்ந்த அனைவருக்கும் தடுமாற்றம் ஏற்படக் காரணம்.

    மற்ற பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் மீதமிருக்கும் ஒரு பாடல் மட்டும் அன்று படமாக்கப்பட வேண்டும். இந்த நிலையில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிநாடாவில் கொண்டு வரப்பட்டிருந்த பெட்டிகளில் அன்று ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டிய பாடலின் ஒலி நாடா...
    ம்ஹீம்... வரவில்லை. அதற்கு பதில் ஏற்கெனவே படமாக்கப்பட்டிருந்த ஒரு பாடல் இரண்டு பெட்டிகளில்..

    இந்த இக்கட்டான சூழலை எப்படி சமாளித்தார் நடிகர் திலகம்...

    சென்னையில் பாடல் பதிவு நடைபெற்ற போது படத்தின் அனைத்துப் பாடல்களையும் நடிகர் திலகம் கேட்டிருந்தார். அதன் காரணமாக கிட்டத்தட்ட அனைத்துப் பாடல்களும் அவருக்கு மனப்பாடம் ஆகி விட்டிருந்தன. அவருடைய அபாரமான நினைவாற்றல் எப்போதுமே அவருக்கு மட்டுமின்றி படப்பிடிப்புக்குழுவினருக்கும் எண்ணற்ற சமயங்களில் பயன்பட்டு வந்துள்ளன.

    இந்த ஆற்றலின் துணையோடு அன்றும் படப்பிடிப்பிற்கு தயாரானார் நடிகர் திலகம். ஒலி நாடாவின் துணையின்றி, தன் இசை ஞானத்தாலும் நினைவாற்றலாலும் பாடல் வரிகளை மனதில் தானே அந்த வரிகளுக்கேற்றவாறு முணுமுணுத்தவாறே ஒரு மாத்திரை ஒரு இம்மி அளவு கூட பிறவாமல் த்த்ரூபமாக நடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம். அந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

    அந்த இயக்குநர் தான் மறைந்த திரு ஏ.சி. திருலோக்சந்தர் அவர்கள்.
    அந்தப் பாடல் காட்சி. அவன் தான் மனிதன் படத்தில் இடம் பெற்ற மனிதன் நினைப்பதுண்டு பாடல்.
    பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடு சிங்கப்பூர்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •