Page 97 of 400 FirstFirst ... 47879596979899107147197 ... LastLast
Results 961 to 970 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #961
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Thanks eehaiupehazij, adiram thanked for this post
    Likes Harrietlgy, adiram, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #962
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. Likes Harrietlgy, adiram, Russellmai liked this post
  6. #963
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    "சிவாஜி கணேசன்" எனும் காலத்தால் அழிக்கமுடியாத கலைஞன்..
    உலகில் எவரோடும் ஒப்பிடமுடியாத நடிப்புத்திறமையோடு தமிழ் திரையுலகில் நடிகர் திலகமாக கோலோச்சிய மாபெரும் கலை...ப்பொக்கிசம்...
    இவரின் நடிப்புத்திறமையை சாதாரண ரசிகனாக அமர்ந்து கைதட்டி ரசித்ததைவிட,
    திரைப்பட இயக்குநர் ஆனபின் அவர் படங்களைப்பார்க்கும்போது அவரின் நடிப்பின் பரிமாணம் அதற்கு அந்த கலைஞன் எடுத்திருக்கும் சிரத்தை
    (நவீன வசதிகள் எதுவுமே இல்லாத காலகட்டத்தில்) ஒரு பெரிய பிரமிப்பை உருவாக்குகிறது...

    ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர் தனித்தனி பாவனைகளை, வசன உச்சரிப்புகளை,
    உடல்மொழியை பயன்படுத்தியிருக்கும் இந்த கலைஞன் எந்த உலகபயிற்சி வகுப்பிலும் தயார் செய்துகொண்டவர் அல்ல..
    தன்னைத்தானே செதுக்கி கொண்டு தன் திறமையை மட்டுமே நம்பி
    கடைசிவரை எந்த அங்கீகாரங்களையும் எதிர்பார்க்காமல்
    இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால்
    அதற்கு அந்த கலைஞனின் தொழில் பக்தியும் திறமையும் நேர்மையும் மட்டுமே காரணம்..

    இன்று கூட சென்னை ஶ்ரீனிவாசா திரையரங்கில் "சிவகாமியின் செல்வன்" 25வது நாள்...
    நானும் என் பால்ய நினைவுகளை எண்ணிக்கொண்டு சென்றேன்..
    அங்கே கண்ட காட்சி என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது...
    வரும் வழியெல்லாம் அதைப்பற்றியே நினைவு...
    ஆம்.. ஒரு கலைஞன் மறைவுக்கு பின் ஒரு நடிகரை நம் தேசம் என்றல்ல
    எந்த தேசத்திலும் ஓரிரு வருடங்கள் மட்டுமே நினைவு வைத்துக்கொள்வதும் கொண்டாடுவதும்....
    ஆனால் சிவாஜி அவர்கள் மறைந்து 15 வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த கலைஞனை நினைத்து வாழும்
    அந்த ரசிகர் கூட்டம்...
    மாலைக்காட்சி கிட்டதட்ட அரங்கம் full...
    சிவாஜி திரையில் வந்ததும் விசில், கைதட்டல், ஆரவாரம், ஆரத்தி.... அய்யோ அப்படியே 70,80களுக்கு போனது போல...
    சரி முதல் காட்சிக்குத்தான்னா இல்லங்க படம் முழுவதும்.... இன்னும் அதே ரசனை... அதே பக்தி...
    படமும் எதோ இன்னைக்கி எடுத்தது போல இருக்கு... இன்னிக்கிம் அவர் நடிப்பு போர் அடிக்கல...
    இன்னும் அவரை தெய்வமாக நினைத்து இன்னும் அவர் தங்களோடுதான் வாழ்கிறார் என்று நினைத்து வாழும்
    அந்த ரசிகர்களே உலகின் மிகச்சிறந்த ரசிகர்கள் என தோன்றியது...
    அவரால் வளர்க்கப்பட்ட அந்த கண்ணியம் தெரிந்தது அவர்களிடம்..
    திறமை என்னதான் வலிமை என்றாலும்
    இங்கே பணமும் பகட்டும் திறமையை ஏறி அமுக்குகிறது என்பதற்கு சிவாஜி அவர்களின் வாழ்க்கை ஒரு பெரிய உதாரணம்...
    ஆனால் காலத்தின் முன் அந்த பணம் பகட்டு தோற்றுப்போகிறது என்பதற்கு இன்று கண்ட காட்சி உதாரணம்...

    (சேரன் பாண்டியன் அவர்களின் முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #964
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post



    சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
    Sivakamiyinselvan celebrations very nice to see NT PROVES HIS MIGHTY AGAIN. and thanks to siva
    RAMAJAYAM LOSANGELES

  8. Thanks eehaiupehazij thanked for this post
  9. #965
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Last edited by RAGHAVENDRA; 25th April 2016 at 03:17 PM. Reason: corrected with dark background for clear visibility of letters.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks Russellmai, sss thanked for this post
    Likes Harrietlgy, Russellmai, sss liked this post
  11. #966
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Yesterday Srinivasa Theatre never seen this tremendous crowd and Only NT can do wonders even after his death which

    no other actor can imagine. SADAHANAIGALAKKU SONTHAKKARAR NAM NT MATTUME.

  12. Likes Harrietlgy, Russellmai liked this post
  13. #967
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    சிவகாமியின் செல்வன்.

    இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும், நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மறு மற்றும் மறு வெளியீட்டிலும் சாதனை புரியும், நம் ரசிகனின் ரசனை என்றும் மாறாது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டுதான் "சிவகாமியின் செல்வன்" மறு வெளியீட்டில் 25வது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருப்பது.

    24-04-2016, ஞாயிறன்று சென்னை சீனிவாசா திரையரங்கில் நடைபெற்ற 25-வது நாள் விழாவில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    விழாவில் கலந்துகொண்டு நமது ரசிகர்கள் அனைவரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. இயக்குனர் சேரன் அவர்களோடு அமர்ந்து திரைப்படத்தை ரசித்தபோது, சேரன் அவர்கள் குதூகலத்துடன் திரைப்படத்தை ஆரவாரம் செய்து ரசித்ததைக் கண்டேன்.


    தென்சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் திரு.P .ஜெயக்குமார் அவர்களின் ஏற்பாட்டில் சீனிவாசா திரையரங்க ஊழியர்களுக்கு உடைகள் வழங்கப்பட்டன.


    இந்தத் திரைப்படத்தை மறுவெளியீடு செய்த மதுரை சிவா மூவீஸ் திரு.சந்திரசேகர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.


    இதுபோல நடிகர்திலகத்தின் பல திரைப்படங்கள் வெளிவந்து, வெற்றிவிழாக்கள் காணவேண்டும் என்பதே என்னுடைய நம் ரசிகர்கள் எல்லோருடைய ஆவல், விருப்பம்.

    நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  14. #968
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகம் என்னும் கதிரவனின் ஒளிக்கிரணங்களை பிரதிபலித்த குளிர்நிலவாக வலம் வந்த தேவிகா அவர்களின் பிறந்தநாள் நினைவுகள் !


    இரவும் நிலவும் மலரட்டுமே ....கர்ணனின் வண்ணக்கனவுகளின் தாரகையாக!


    வாழ நினைத்தால் வாழலாம் .....பலே பாண்டியனின் தன்னம்பிக்கை தடாகமாக!!



    நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது .....ஸ்டைலாக நடப்பதென்னவோ நடிகர்திலகமே!



    பதிலுக்கு பதில் கனகாம்பரம் சூடி தேவிகா கலாய்க்கும் ..

    உங்க அழகென்ன அறிவென்ன கோபம் வரலாமா ........கொஞ்சும் கிளியாக அன்புக்கரங்களை அடைக்கலம் தேடுகிறாரோ!



    அமைதியான நதியின் (ந.தி.யின்) ஓடம் தேவிகாவோ ?!


    Last edited by sivajisenthil; 25th April 2016 at 10:16 PM.

  15. Thanks Russellmai thanked for this post
  16. #969
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Lion's roaring share !!



    Our NT Lion roared once!!



  17. Likes Harrietlgy, Russellmai liked this post
  18. #970
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முப்பது ஆண்டுகளுக்கு முன்
    எங்கள் ஊர் நூலகத்தில் வெகு நேரம் தேடி, ஒரு புத்தகம் எடுத்தேன். நல்ல கவிதை நூல்.

    "கல்யாண்ஜி கவிதைகள்."

    எதுகை- மோனை மிரட்டல்கள்,
    "ஓ, அட, என்னே, பெண்ணே"
    போன்ற அநாவசிய விலாசங்கள், வார்த்தை விளையாட்டுகள், சொற் சிலம்பங்கள்... இவையெல்லாம் இருந்தால்தான் கவிதை என்று
    நான் அந்நாள் வரை கொண்டிருந்த நம்பிக்கைக்கு
    மரண அடி விழுந்த தினம் அது.

    மிகச் சரிவான, எவ்விதமான
    போக்குவரத்து இடையூறுமற்ற
    தெளிவான சாலையில் இறங்குகிற ஒரு மிதிவண்டியின் வேகத்தில் அந்த கவிதைகளைப் படித்தேன்.

    ஒரு கவிதை இன்னமும்
    படுத்துகிறது என்னை.

    "மிக இயல்பாய், தானே உருவாகும் ஒரு விஷயம்...
    நமக்குத் தரும் வியப்பையும்,
    இன்பத்தையும் செயற்கையான வேறொன்றால் ஒருபோதும் தர முடியாது."
    - என்கிற கருத்தைச் சொல்ல
    வரும் கவிஞர், எழுதுகிறார்..

    " 'மொறுக்' கென்று ஒடித்த
    வெள்ளரிப் பிஞ்சின்
    விதை வரிசையை
    எந்த இயந்திரமும்
    அடுக்கித் தராது."

    நேற்று முன் தினம் ஞாயிறன்று, சென்னையில்
    "நடிகர் திலகம் திரைப்பட
    திறனாய்வு அமைப்பு" சார்பில்
    திரையிடப்பட்ட "தெய்வப்பிறவி" யை ஆழ்ந்து
    ரசித்துப் பார்த்து வியந்த
    நிமிஷங்களில் இந்தக் கவிதை
    பளீரென்று நினைவுக்கு வந்தது.

    நான் யோசிக்கத் துவங்கினேன்.

    'இயல்பான ஒரு விஷயத்தைப்
    பார்த்து நமக்கு வருகிற வியப்புக்கு ஈடு இணையில்லை'- இதற்கு
    "மொறுக்கென்று ஒடித்த
    வெள்ளரிப் பிஞ்சின் விதை
    வரிசை" மட்டும் தான் உதாரணமா?

    "நறுக்கென்று நடித்து நம் மனம்
    பதிந்த நடிகர் திலகத்தின் திரை
    வரிசை"யும் உதாரணந்தானே?
    -------------------------------

    கீழே இணைத்திருக்கிற இணைப்பைச் சொடுக்குங்கள்.
    அந்த உண்மை புரியும்.. ஆறே
    நிமிஷத்தில்.

    பள்ளிப் பருவத்தில் அப்பாவின்
    முறைப்புக்குப் பயந்து, திண்ணையில் போய் அமர்ந்து,
    வரலாற்றுப் புத்தகம் விரித்து
    'மொகஞ்சதாரோ, ஹரப்பா'வை
    வெறுப்போடு வாசிப்பேன்.
    உள்ள கொடுமை போதாதென்று பாட்டியைத்
    தேடி வரும் பாட்டிகள் கூட்டம்
    பேசும் ஊர்வம்பு பெருத்த
    இம்சை.

    சாதாரணமாய் உரத்த குரலில்
    பேசுபவர்கள், சில விசேஷ
    வம்புகளுக்கு குரல் அமிழ்த்தி
    மென்மையாக்கி, அதையும்
    கொஞ்ச நேரத்தில் கிசுகிசுப்பாய்
    மாற்றுவதைக் கவனித்திருக்கிறேன்.

    வம்பு பேசுவோரும், வம்பு கேட்போரும் குரலை கிசுகிசுவென மாற்றி விட்டால், வம்பு பேசுபவரையும், வம்பையும் மற்றவர்கள்
    முழுமையாக நம்பத் துவங்கி
    விட்டார்கள் என்று பொருள்.

    இந்தக் காட்சியில் பாருங்கள்.

    உடம்பெல்லாம் கெட்ட எண்ணத்தில் தடித்தவளாய்
    ஒரு தங்கை வாய்ப்பாள்..
    நம்மவருக்கு.

    துவக்கத்தில் கம்பீரமாக இருப்பவர் கொஞ்ச நேரத்தில்
    தங்கைக்காரி நிஜம் போலச்
    சொல்லும் பொய்களை நம்பத்
    துவங்கியதின் அடையாளமாய்
    குரலைக் கிசுகிசுப்பாய்
    மாற்றுவார்.
    -------------------------------

    நேசித்து மணந்து கொண்ட தன்
    பிரியமான மனைவியைப்
    பற்றி தங்கைக்காரி தன்னிடமே
    "அண்ணியைப் பத்தி என்ன
    நினைக்கிறீங்க?" என்று கேட்கிறாள். தன் மனதின் ஒரு பூஜைக்குரிய இடத்திலிருக்கும்
    மனைவியை கண்களின் மலர்வில் நிறுத்தி சிரிக்கும்
    அந்த கள்ளமில்லாச் சிரிப்பு..
    காலம் நமக்களித்த கலைப் பரிசு.

    "அவ பேரும் தங்கம். அவ பேருக்கேத்த மாதிரி அவ
    மனசும் தங்கம்..." என்று இதழ்
    மலர, முகம் மலரச் சொல்லி
    விட்டு "தங்கம்...தங்கம்" என்று
    உருகுகிறாரே... அங்கே ஜொலிக்கிறது... நடிகர் திலகமெனும் தங்கம்.

    தன் மனைவியையும், சமையல்காரரையும் சம்மந்தப்
    படுத்தி தங்கை வத்தி வைக்க,
    கோபத்திற்குக் கை முளைத்தாற்போல் அவளைத்
    தாக்குவதற்கு திடீரென்று ஒரு கை நீண்டு வருமே..? அது
    நம் இரு கைகளுக்கும் வேலை
    வைக்கும் ஒரு கை.

    "தெய்வப்பிறவி"-

    கதைப்படி தலைப்பு கதாநாயகியைத்தான்
    குறிக்கிறது.

    ஒழுக்கமாய்,பண்பாய், உழைத்து
    வாழும் ஒரு நல்லவனுக்குள்
    சந்தேகப் பேய் புகுந்து ஆட்டு
    ஆட்டென்று ஆட்ட, அதன்
    ஆக்ரோஷப் பிடியிலிருந்து
    நழுவத் தெரியாத, மக்கள்
    மத்தியில் எந்த விதத்திலும்
    நல்ல பெயர் பெற்றுத் தர முடியாத கதாபாத்திரம்..
    அந்த "மாதவன்" கதாபாத்திரம்.

    அந்த பாத்திரத்தில் நடித்து,
    ஐம்பத்தாறு ஆண்டுகளுக்குப்
    பிறகும் தனக்கான சீழ்க்கைகளையும், கைதட்டல்களையும் மறக்காமல் வாங்கிக் கொள்கிற
    திறமையும், சாதுர்யமும்
    சாதாரண மனிதப் பிறவிகளுக்குக் கிடையாது.
    நடிகர் திலகம் என்கிற
    "தெய்வப்பிறவி"க்கே உண்டு.

    ஆகவே...

    "தெய்வப்பிறவி" என்னும்
    தலைப்பு, இங்கே நம் நாயகனுக்கும் பொருந்தும்.


  19. Likes KCSHEKAR, Harrietlgy, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •