Page 160 of 400 FirstFirst ... 60110150158159160161162170210260 ... LastLast
Results 1,591 to 1,600 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1591
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1592
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Written by Mr. Sudhangan,




    சிவாஜி 20 மணி நேரம் வேலை செய்துவிட்டு 4 மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுக்கும் வகையில் அவ்வளவு கடுமையாக உழைப்பார்!
    தொழிலிலேயே ஊறிப்போய் கிடந்தார் என்று சொல்லலாம்! அந்த காலத்தில் தொழில் கிடைப்பதே கஷ்டம்! கிடைத்தாலும் ஆசைகளுக்கு ஆட்பட்டு அழிந்தவர்களே அதிகம்!
    அத்தகைய காலத்தில் அகலக் கால் விரிக்காமல் சீராக நடந்து வெற்றி பெற்றவர் சிவாஜி! சகல பாக்கியங்களும் பெற்ற ஒரே நடிகர் அவராகத்தான் இருக்க முடியும்! பற்பல ஆண்டுகளாக கதாநாயகனாக நடிக்கும் ஒரே ஆள் உலக சரித்திரத்திலேயே சிவாஜியாகத்தான் இருக்க முடியும்”! இப்படிச் சொன்னார் வி.கே. ராமசாமி! இவருடைய நடிப்புத்திறமைக்கே ஒரு தொடர் எழுதலாம்!
    அதைவிட எம்.ஜி.ஆர். நடித்த சுமார் 140 படங்களில் அதிக படங்களில் நடித்தவர் சரோஜாதேவி! அதற்கடுத்து, ஜெயலலிதா! ஆனால், இவர்களையெல்லாம் மிஞ்சியவர் எம்.என். நம்பியார்! சுமார் 80 படங்களில் எம்.ஜி.ஆர். படத்தில் இவர்தான் வில்லன்! ஆனால் வாழ்க்கையில் ராமன்! ராமாயண ராமன்! ஏகபத்தினி விரதன்! தூய்மையான நடத்தைக்கு எடுத்துக்காட்டு!
    இவர் சிவாஜி பற்றி என்ன சொல்கிறார்?
    “நடிப்பதற்காகவே பிறந்தவர் நடிகர் திலகம்! வசனங்களைப் பேசாமல் நடிப்பின் மூலமே தாம் நினைப்பதை வெளிப்படுத்தக்கூடிய நடிகர் அவர் ஒருவர்தான்! நமது முன்னோராலும், மூதாதையர்களாலும், அறிஞர்களாலும் நூற்றுக்கணக்கான வருடங்களாக கூறப்பட்ட கருத்துக்களைத்தான் கவிஞர் கண்ணதாசன் சொன்னார்!
    அதாவது கவிஞர் சொன்னது எளிமையாகவும், சுலபமாக புரிந்து கொள்ளும் வகையிலும் இருந்ததால் நம்மால் கண்ணதாசனை மறக்க முடியவில்லை! நமது நடிகர் திலகத்தின் அணுகுமுறையும் அதே போலத்தான்! ஓர் அசைவால், பார்வையால் எவ்வளவோ நமக்கு உணர்த்தக்கூடியவர்! நடிப்புக் களஞ்சியமான அவர் ‘நடிப்பை இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்வது வியப்பாக இல்லை!
    நல்லது எதுவானாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர் அவர்! நடிப்பிற்கு எல்லையில்லை என்பது அவர் கருத்து! அவருடன் நான் நடித்த வேடங்களை நான் நினைவுகூர்ந்து பார்க்கிறேன்!
    ‘பாகப்பிரிவினை’யில் தம்பியாக, ‘பாதுகாப்பு’வில் அண்ணனாக, ‘பாசமல’ரிலும் ‘மக்களைப் பெற்ற மகராசி’யிலும் மைத்துனனாக, ‘உத்தம புத்திர’னில் மாமாவாக, சில படங்களில் தோழனாக, பல படங்களில் எப்போதும் போல் எதிரியாக, அவருடன் நடித்த நாட்கள், நினைத்தாலே இனிக்கும் நல்ல நாட்கள். முப்பத்தி நான்கு ஆண்டுகள் தொடர்ந்தாற்போல், படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்திற்கு வரும் ஒரே நடிகர் நடிகர் திலகம்தான்! அவரது இந்தப் பழக்கத்தை மற்றவர்கள் பின்பற்றினால் தயாரிப்பாளர்களுக்கு பல லட்சங்கள் வீணாகாது!”
    இப்படி பொம்மை சினிமா இதழுக்கு 1986ம் வருடம் நம்பியார் பேட்டியளித்தார்! அதே சமயம் சிவாஜிக்கு மூத்தவரான நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமம் என்ன சொன்னார்? அவர் சொல்வதில் முக்கியத்துவம் உண்டு! அவருடைய நாடகக் குழுவில் நடித்தவர் சிவாஜி! அவருடைய நாடகக் குழுவிற்கு பெயர் சேவா ஸ்டேஜ்!
    “சிவாஜி கணேசன் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை கம்பெனியில் இருக்கும் போதிலிருந்து எனக்கு பரிச்சயமானவர்! ‘மனோகரா’ படத்தில் வீர முழக்கம் செய்த சிவாஜி மேடையில் செய்த வேடம் என்ன தெரியுமா? மனோகரனின் தாயார் பத்மாவதி வேடம்!
    எத்தனை சிறப்பான நடிப்பு!
    எத்தனை படங்களில் நடித்தாலும் நாடகத்தில் நடிப்பதில்தான் அவருக்கு விருப்பம் அதிகம்!
    எங்களுடைய சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் ‘கண்கள்’, ‘வானவில்’, ‘இருளும் ஒளியும்’, ‘பம்பாய் மெயில்’ போன்ற நாடகங்களில் நடித்தார்! 1956க்குப் பிறகு அவருக்கு படங்கள் அதிகமாகிவிட்டன! அதனால் எங்கள் சேவா ஸ்டேஜ் நாடகத்தில் அவரால் நடிக்க முடியவில்லை! அடுத்து அவரே சிவாஜி நாடக மன்றத்தினைத் துவக்கினார்! அவரது நாடகங்களைப் பார்க்க சொல்லியனுப்புவார்! நான் போய் பார்ப்பேன்!
    கட்டபொம்மன் நாடகத்தை ஏராளமான பொருட்செலவில் மேடையேற்றிய பெருமை அவருக்கே உண்டு! நாடகத்தன்று 2 மணி வரையில் படப்பிடிப்பில் இருப்பார்! பிறகு நாடகத்திற்கு தயாராகிவிடுவார். அவருடன் ‘படித்தால் மட்டும் போதுமா’? ‘நீலவானம்’, ‘பொன்னூஞ்சல்’ இன்னும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்துள்ளேன்.
    தன்னுடன் நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்!” இப்படிச் சொன்னார் எஸ்.வி. சகஸ்ரநாமம்! டி.கே. சண்முகம் பல திரைப்படக்காரர்களின் காட்பாதர்! கமல்ஹாசன் சின்ன வயதிலே இவர் நாடக அரங்கில்தான் பயின்றார்!
    கே.பி. சுந்தராம்பாளுக்கு முன்பாக ஓர் ஆணாக இருந்தும் அவ்வை வேடம் போட்டவர் டி.கே. சண்முகம்! அதனாலேயே அவர் அவ்வை டி.கே. சண்முகம் என்றழைக்கப்பட்டார்! அவரால் பயிற்சி கொடுத்து வளர்க்கப்பட்ட கமல்ஹாசன் அதனாலேயே தன் ஒரு படத்திற்கு ‘அவ்வை சண்முகி’ என்று தலைப்பு வைத்தார்! அப்படிப்பட்ட டி.கே. சண்முகம் சிவாஜி பற்றி என்ன சொல்கிறார்? “நடிகர் திலகம் சிவாஜி பாரத தவப்புதல்வர்களில் ஒருவர்! அவர் தமிழராக பிறந்தது தமிழகத்தின் நற்பேறு! பாரதத்தின் கலைத்தூதராக அமெரிக்கா அவரை தேர்ந்தெடுத்தது பாராட்டுதலுக்குரியது!” இப்படி சொன்னார் டி.கே. சண்முகம்!
    “நெற்றியின் ஏற்ற இறக்கத்திலே நடிப்பு! புருவத்தின் தெறிப்பிலே நடிப்பு! கண்களின் சுழற்சியிலே நடிப்பு! இமைகளின் படபடப்பிலே நடிப்பு! உதடுகளின் துடிப்பிலே நடிப்பு! கன்னத்தின் அசைவிலே நடிப்பு! புயங்களின் புடைப்பிலே நடிப்பு! தோளின் விம்மலிலே நடிப்பு! கைகளை உயர்த்துவதிலே நடிப்பு! சாதாரணமாக நடப்பதில் கூட நடிப்பு! என்று அங்கத்தின் ஒவ்வொரு அசைவிலும் நடிப்பைக் காட்டி அசத்தியவர் நம் நடிகர் திலகம்! சுருங்கச் சொல்ல வேண்டுமானால் நடிப்பின் கருவூலமே சிவாஜிதான்! அமெரிக்கா கண்ட இந்தியாவின் கிளார்க் கேபிள்! சிறந்த ஒரு நடிகரை நம் நாட்டு விருந்தினராக அழைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் நினைத்தபோது– கன்னியாகுமரிக்கும், காஷ்மீரத்திற்கும், கத்தியாவாருக்கும், வங்காளத்திற்கும் என்று பல மாநிலங்களிலே அமெரிக்கா தம் பார்வையைச் செலுத்தியது!
    நகர்ந்து கொண்டே சென்ற அதன் பார்வை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் குத்திட்டு நின்றது!
    நடிகர் திலத்தை கண்ட பின் அதன் பார்வை வேறு பக்கம் திரும்பவில்லை! உடனே அனுப்பியது விமானத்தை! அழைத்துச் சென்றது நம் நடிகர் திலகத்தை! உலக அரங்கில் அவர் கவுரவிக்கப்பட்டார்! அது இந்தியாவிற்கே கிடைத்த கவுரவம்!” இப்படிச் சொன்னார் நடிகர் எஸ்.ஏ. அசோகன்!
    தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அற்புதமான பொக்கிஷன் நடிகர் முத்துராமன்! ஆங்கிலத்தில் ‘SUBTLE ACTING’ என்பார்கள்! அதற்கு ஓர் உதாரண புருஷன்! இன்றைய தலைமுறைக்கு சொல்ல வேண்டுமானால் நடிகர் கார்த்திக்! நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி அல்ல! அந்த முத்துராமன் சிவாஜியைப் பற்றி என்ன சொன்னார்?
    (தொடரும்)
    Last edited by Barani; 20th June 2016 at 06:47 PM.

  5. Thanks eehaiupehazij thanked for this post
  6. #1593
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. Likes KCSHEKAR, Russellmai liked this post
  8. #1594
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Last edited by RAGHAVENDRA; 20th June 2016 at 11:19 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Harrietlgy, Russellmai liked this post
  10. #1595
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் ரவிகிரண் சார்

    வணக்கம்!

    எல்லா சிவாஜி ரசிக நண்பர்களும் நலமா? அனைவருக்கும் என் வணக்கங்கள்!

    நடிகர்திலகம் என்றும் performance actor ஆக இருக்கவேண்டுமென்று தான் விரும்பினாரே தவிர ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று நடித்ததில்லை!

    எல்லா நடிகர்களுடனும் நடித்தாலும் தன் நடிப்பு திறமையினால் எவரையும் வென்றுவிடலாம் என்ற அசாத்திய தன் நம்பிக்கை அவருக்கு இருந்தது!

    அவர் உடல்வாகு எப்படி இருந்தாலும் மக்கள் அவரை மிகவும் ரசித்தார்கள்! அந்த கொடுப்பினை அவருக்கு மட்டுமே உரியது!

    நன்றி ! வணக்கம்!
    Last edited by Murali Srinivas; 22nd June 2016 at 05:18 PM.

  11. #1596
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Nethiyadi

  12. Thanks Russellbzy thanked for this post
  13. #1597
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அருமைச் சகோதரர் திரு.சுந்தரராஜன் (மதுரை) அவர்களுக்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (21-06-2016)
    Last edited by KCSHEKAR; 21st June 2016 at 11:21 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  14. #1598
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு சுந்தரராஜ் அவர்களே
    வாழிய பல்லாண்டு
    Last edited by senthilvel; 21st June 2016 at 12:22 PM.

  15. #1599
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Vaigai Sundar,


    Many More happy returns of the day.

  16. #1600
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    செந்தில்வேல் சார்...
    வேட்டிக்குப் போட்டி.


    நாமெல்லாம் கட்டிக் கொண்டு
    படுத்தால், நள்ளிரவில் நமீதா
    போல் ஆக்கி விடுகிற அபாயம்
    தருகிற வேட்டி, நடிகர் திலகத்திற்கு எப்படிக் கட்டினாலும் பொருந்தி விடுவது மகா ஆச்சரியம்.

    "வியட்நாம் வீடு" படத்தில்
    "சாவித்ரீ" என்று இரவில்
    அழைக்கும் போது வயிறு வரைக்கும் கட்டியிருக்கும்
    வேட்டிக் கட்டல்...

    சவாலே சமாளியில் அழகுக்
    கட்டல்...

    பொன்னூஞ்சலில் தழையத்
    தழைய கண்ணியக் கட்டல்...

    ஆனந்தம் விளையாடும் வீடு-
    சந்திப்பு பாடலில் நிஜமாகவே
    நிறையப் பேரை கையெடுத்துக்
    கும்பிட வைக்கும் வேட்டிக்
    கட்டல்...

    பழநியின் விவசாயிக் கட்டல்...

    தில்லானாவில் வித்வான்
    கட்டல்...

    கல்தூணின் கோபக் கட்டல்...

    முதல் மரியாதைக்குரிய
    நேர்த்திக் கட்டல்...

    வேட்டியைக் கட்டிக் கட்டியே
    நம்மைக் கட்டிப் போட்டவர்.

  17. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •