Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    நிச்சயம் இது பட விமர்சனம் அல்ல. ஏனெனில் 1974ல் வெளியான ‘சிவகாமியின் செல்வன்‘ குறித்து் அனைவருக்குமே தெரியும். இப்படம் ராஜேஷ் கண்ணா நடிப்பில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘ஆராதனா‘ இந்திப் படத்தின் ரீமேக் என்பது உட்பட.
    சொல்ல வந்தது வேறு ஒன்று.
    சமீபத்தில் இப்படம் ரீ ரிலீஸ் ஆனது. சென்றோம். ஆச்சர்யப்பட்டோம்.
    காரணம், படம் வெளியாகி நான்கு நாட்கள் கழித்தே நாங்கள் திரையரங்கு சென்றோம். அப்படியும் 30% நிரம்பியிருந்தது.
    நம்ப முடியவில்லை. முந்தைய நாள்தான் புதுப் படம் ஒன்றுக்கு சென்றிருந்தோம். மொத்தம் ஏழே பேர்தான். திரையிடுவதா வேண்டாமா என பல கட்ட ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கும்போதே -
    qube ஒளிர்ந்தது.
    எனவே 50 பேர் ‘சி செ‘ பார்க்க வந்திருந்தது புருவத்தை உயர வைத்தது.
    அதை அதிசயமாக மாற்றியது பார்வையாளர்களின் வயது.
    எங்கள் இருவரை தவிர்த்து வந்திருந்தவர்களுக்கு குறைந்தது 60, 70 வயதிருக்கும்.
    ஒவ்வொரு காட்சிக்கும், வசனத்துக்கும் இளவட்டங்கள் போல் கைதட்டி ஆராவாரம் செய்தார்கள். பாடல் காட்சிகளின்போது உடன் சேர்ந்து உதட்டை அசைத்தார்கள்.
    இடைவேளை சமயத்தில் மூன்று ஜோடிகளை பார்த்தோம். ஆறு பேருமே பேரன், பேத்தி எடுத்தவர்கள். இயற்கை உபாதைகளை வெளியேற்றக் கூட அவர்கள் எழுந்திருக்கவில்லை.
    கைகளை கோர்த்தபடி, ஓரக் கண்ணால் ஒருவரையொருவர் பார்த்தபடி அருகருகில் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.
    உதட்டோரம் கசிந்த வெட்கமும், கண்களில் வழிந்த காதலும் இருக்கிறதே... ஏ... அப்பா...
    அவர்களை கடந்து செல்ல முடியவில்லை.
    அந்தளவுக்கு காதலால் கனிந்த ஜோடிகளை இதற்கு முன் பார்க்காதது காரணமாக இருக்கலாம்.
    உண்மைதான்.
    சினிமா என்பது தமிழகத்தில் வெறும் பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமே அல்ல.
    அது பல நினைவுகளை, உணர்வுகளை, காதலை, ஏக்கங்களை, லட்சியங்களை அவரவர் மனதில் அடைகாத்து வரும் கருவியும் கூட...

    (கே.என்.சிவராமன் - முகநூலில்)
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  2. Thanks Russellmai, Gopal.s thanked for this post
    Likes Harrietlgy, Russellmai, KCSHEKAR, Gopal.s liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •