Page 139 of 400 FirstFirst ... 3989129137138139140141149189239 ... LastLast
Results 1,381 to 1,390 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #1381
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நீண்ட நாட்களுக்கு பிறகு மய்யம் திரியில் கடந்த ஓரிரு நாட்களில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள்

    திரு தேவசேனாதிபதிராஜராஜன்
    திரு சுந்தரபாண்டியன்
    Ms ஆரத்தி கிரிஜா
    திரு மகாலிங்கம்
    மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது .

    நண்பர்களே
    மக்கள் திலகத்தின் திரை உலகம் , அரசியல் , மனிதநேயம் சார்ந்த பல்வேறு தகவல்கள் மற்றும் உங்கள் அனுபவங்களை திரியில் பகிர்ந்து கொள்ளவும் .
    இனிய நண்பர்கள்
    திரு எம்ஜிஆர் பாஸ்கரன்
    திரு கலியபெருமாள்
    திரு ஜெய்சங்கர்
    திரு தெனாலி ராஜன்
    திரு சத்யா
    திரு யுகேஷ் பாபு
    திரு ராமமூர்த்தி
    திரு ரூப்குமார்
    திரு கலைவேந்தன்
    திரு சி.எஸ்..குமார்

    நீங்கள் நீண்ட நாட்களாக திரியில் பதிவுகள் வழங்காதது வியப்பை தருகிறது .மக்கள் திலகத்தின் நூற்றாண்டு முன்னிட்டாவது மீண்டும் திரியில் கலந்து கொண்டு உங்கள் பதிவுகளை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் .

  2. Thanks orodizli thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1382
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் '' தலைவன் ''

    24.7. 1970 அன்று வெளியான மக்கள் திலகத்தின் படம் .

    துப்பறியும் அதிகாரியாக மக்கள் திலகம் நடித்த படம்

    படத்தின் ஆரம்ப காட்சிகளில் மக்கள் திலகத்தின் யோகா மற்றும்
    மூச்சு பயிற்சி பற்றிய காட்சிகள் அற்புதம் .


    அறிவுக்கு வேலை கொடு ....


    பாய் விரித்தது பருவம் ....

    ஓடையிலே ஒரு தாமரைபூ

    நீராழி மண்டபத்தில் .. தென்றல் ....

    பல மொழி கலவை பாடல் ....


    மக்கள் திலகத்தின் பொழுது போக்கு படங்களில் ஒன்று .

    இனிமையான பாடல்கள் - சண்டை காட்சிகள் என்று

    ரசிகர்களுக்கு விருந்து தந்த படம் .


  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #1383
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like


    CHENNAI - ANNA SALAI

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #1384
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  10. #1385
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like



    எனக்கு நல்வரவு சொன்ன திருவாளர்கள் செல்வகுமார், ரவிச்சந்திரன், எஸ்வி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

    புரட்சித் தலைவர் என்னைத் தொடக்கூடிய பேறு பெற்றவன் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். அதுவும் விபத்தில் இருந்து என்னை காப்பாற்றினார். எனக்கு மாலையும் போட்டார். அவர் முதல் அமைச்சர் ஆவதற்கு முன்பு ஒரு முறை மாயவரம் வந்திருந்தார். அவருக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோடில் மக்கள் வெள்ளம். காதைக் கிழிக்கும் வாழ்த்து கோஷம் போட்டபடி வரவேற்றது. ரோஜாப்பூ போல திறந்த ஜீப்பில் வந்தார். காளியாகுடி காப்பி ஓட்டல் அருகே திருப்பத்தில் நானும் நண்பர்களும் நின்று காத்துக் கொண்டிருந்தோம்.

    எங்கள் அருகில் வந்ததும் நெரிசலில் முன்டியடித்து அவர் அருகே சென்றோம். மாலையை புரட்சித் தலைவருக்கு அணிவித்து கும்பிட்டேன். அவரும் சிரித்தபடி கும்பிட்டார். அவர் சிரிப்பதில் என்னை மறந்து அவரையே பார்த்து கொண்டிருந்தேன். வேன் மெதுவாக ஊர்ந்து வந்தது. வேனை ஒட்டியபடி நின்று கொண்டிருந்தேன். திடீரென்று என் நெஞ்சில் கையை வைத்து புரட்சித் தலைவர் தள்ளிவிட்டார். மூன்று நான்கு அடிகள் தடுமாறிக் கொண்டே பின்னால் போனேன். அவரது கையின் பலத்தை நேரடியாக அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன். என் பின்னால் நின்று கொண்டிருந்தவர்களும் தள்ளாடியபடியே பின்னால் போனார்கள். என் பின்னால் யாரும் இல்லாமல் இருந்தால் நான் கீழே விழுந்து இருப்பேன்.

    எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. என்ன இப்படி தள்ளுகிறாரே என்ன தப்பு செய்தேன் என்று அதிர்ச்சி அடைந்தேன். வேன் டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டார். புரட்சித் தலைவர் என்னைப் பார்த்து, ‘இன்னும் கொஞ்சம் இருந்தால் வேனின் பின் சக்கரம் உங்கள் காலில் ஏறி இருக்கும். கவனமாக நிற்கக் கூடாதா’ என்று சத்தமாக கேட்டார். அப்போதுதான் என்னை விபத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக தள்ளிவிட்டார் என்பதை புரிந்து கொண்டேன். என் மனசு கோணக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ, தன் கழுத்தில் உள்ள மாலையை கழற்றி லாவகமாக என்னை பார்த்து வீசினார். அது என் கழுத்தில் சரியாக விழுந்தது. சுற்றியிருந்த ஜனங்கள் ஒரே ஆரவாரம் செய்தனர். என் நெஞ்சில் புரட்சித் தலைவர் கைபட்டது. நான் பாக்கியசாலி. அவரது ஆசியால் இன்று நன்றாக இருக்கிறேன்.

    புரட்சித் தலைவர் சாதாரணமான மனிதப் பிறவியே இல்லை. பூமியில் மனிதராக அவதரித்த கடவுள்.

  11. Thanks orodizli, Richardsof thanked for this post
    Likes orodizli, Richardsof liked this post
  12. #1386
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sathya VP View Post
    super

  13. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  14. #1387
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    நான் யாரையும் குறை கூறவில்லை. பொதுவாக சொல்கிறேன். நான் சொல்வது தப்பு என்று யாராவது நினைத்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

    சமீபத்தில் ஒரு புதிய திரைப்படம் வெளியாகியுள்ளது. அதற்கு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட விளம்பரம். அதன் விளைவுகளாக டிக்கட்டுகள் வெளிப்படையாகவே அநியாய விலைக்கு விற்கப்படுகிறது. கடைசியில் படத்துக்கும் நல்ல ரிசல்ட் இல்லை. அதனால் என்ன? படத்தைப் பற்றி மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியும் முன்பே மக்களிடம் இருந்து காசைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். சாதாரண மக்களால் அநியாய விலை கொடுத்து படத்தை பார்க்க முடியாது. (ஒவ்வொருவரின் மொபைலிலும் படம் இருக்கிறது என்பது வேறு விஷயம்). அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? எல்லாரும் சேர்ந்து மக்களிடம் பணம் பறிக்கிறார்கள்.



    படத்திலும் நல்ல நீதி இல்லை. புரட்சித் தலைவர் படங்களில் வில்லன் செய்ததை இப்போது கதாநாயகர்களே செய்கிறார்கள். மக்கள் திலகம் என்னதான் அநியாயத்தை எதிர்த்துப் போராடினாலும் கூட அநீதி வழியில் வெல்லமாட்டார். தர்ம நியாயமாக சட்டப்படிதான் சமூக விரோதிகளை ஜெயிப்பார்.
    அவரது படங்களில் பாடல்கள் கூட டூரிங் கொட்டகையிலும் உள்ளவர்களுக்கும் நன்றாக கேட்க வேண்டும் என்று அக்கறை எடுத்துக் கொண்டார். நாடோடி மன்னன் படத்தை ரத்தத்தை தானம் செய்து பணம் வாங்கி ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு அதைத் தடுத்தார். பணம் வேண்டும் என்றால் எனக்கு கடிதம் எழுதுங்கள் என்று கூறி எத்தனையோ ரசிகர்கள் அவரது விலாஸத்துக்கு கடிதம் எழுதி மணியார்டர் மூலம் பணம் பெற்றுக் கொண்டனர். தன் படம் மூலம் கிடைக்கும் லாபம் எல்லாருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்று மக்கள் திலகம் நினைத்தார். ரசிகர்களிடமும் அக்கறை கொண்டிருந்தார்.

    இப்பவெல்லாம் மக்களை பற்றியோ ரசிகர்களை பற்றியோ யாரு கவலைப்படுகிறார்கள். தனக்கு பணம் வந்தால் சரி. எல்லாம் கெட்டு குட்டிச்சுவரா போச்சு. மனது தாங்கவில்லை. மக்கள் திலகத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை.


  15. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  16. #1388
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Makkalthilagam- Emperor of Cinema Field, World... In time, Every time... Presents "Rickshawkaaran". Digital Format Releasing Soon, It's Advertisement Published Today Dhina Thanthi News paper...

  17. #1389
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    A Warm Welcome to the New Hubbers Thiruvaalarhal Shri Deva we athipathi Rajarajan, Sundarapandiyan, Ahirtha Girija, Mahalingam... You rselves kindly register Our MGR's Mass & Fame also...

  18. #1390
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்திலகம் - இணையே இல்லா, ஒப்பாரும், மிக்காரும் இல்லா திரையுலக சக்கரவர்த்தி அவர்களின் மங்காத புகழையும், மாண்புகளையும் பறை சாற்றிட புதியதாய் இங்கு வந்திருக்கும் பதிவாளர்கள் தகுந்த ஆவணங்கள் வழியாக பகிர்ந்து கொள்ள திருவாளர்கள் தேவ சேனாபதி ராஜராஜன், சுந்தர பாண்டியன், ஆர்த்தி கிரிஜா, மஹாலிங்கம் வருக என வரவேற்று வேண்டுகிறோம்...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •