Page 152 of 394 FirstFirst ... 52102142150151152153154162202252 ... LastLast
Results 1,511 to 1,520 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Hybrid View

  1. #1
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    1971 ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் பற்றிய தொகுப்பு

    திரை உலகம் , முரசொலி ,மலைமுரசு , தினத்தந்தி - ரிக்ஷாக்காரன் சிறப்பு மலர்களை வெளியிட்டார்கள் .

    அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் சார்பாக சென்னை -தேவி பாரடைஸ் அரங்கில் சிறப்பு காட்சி நடை பெற்றது .மக்கள் திலகம் மற்றும் அன்றைய தமிழக முதல்வர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .

    தமிழகமெங்கும் முதல் நாள் முதல் காட்சியில் படம் மாபெரும் வெற்றி என்பதை அன்றைய ரசிகர்கள் எழுப்பிய மகிழ்ச்சி குரல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது .
    மக்கள் முன்னிலையில் மக்கள் திலகத்தின் ரிக் ஷா வண்டி ரேஸில் அவர் காட்டிய வேகம் , விறுவிறுப்பு ,சுறுசுறுப்பு -
    எல்லோரையும் பிரமிக்க வைத்தது . மக்கள் திலகத்தின் வயது அப்போது 54.
    ரிக் ஷா வண்டியில் அமர்ந்தவாறே எதிரிகளிடம் மக்கள் திலகம் மோதும் சண்டை காட்சி
    மனோகருடன் மோதும் சுருள் பட்டா சண்டை காட்சி
    ஜஸ்டினிடம் மோதும் ஆகரோஷமான சண்டை காட்சி
    சுருள் பட்டா வை வேகமாக சுழற்றும் பிரமிக்க வைத்த காட்சி
    கண்ணைக்கவரும் இனிய கனவு பாடல் காட்சி
    கிளைமாக்ஸ் காட்சியில் மக்கள் திலகத்தின் அட்டகாசமான நடனப்பாடல்
    தான் யார் என்பதையும் , தவறு செய்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அங்கே சிரிப்பவர்கள் பாடல்
    கோர்ட் காட்சிகளில் பேசும் அருமையான நடிப்பு
    இப்படி படம் முழுவதும் மக்கள் திலகத்தின் நடிப்பை ரசித்தவர்கள் இன்று வரை இப்படத்தை காலங்கள் மாறினாலும்
    ரசனை மாறாது என்று மீண்டும் டிஜிட்டல் ரிக் ஷாக்காரனை வரவேற்க தயாராகி விட்டார்கள் .

  4. #3
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ரிக்ஷாக்காரன் முதல் நாள். சிறப்பு காட்சி 29.5.1971.

    சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் அன்றைய தமிழக முதல்வர் திரு கருணாநிதி மற்றும் அவருடைய அமைச்சர்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள் .தமிழ் திரை உலக பிரமுகர்கள் பலரும்
    மக்கள் திலகத்தின் எம்ஜிஆர் மன்றங்கள் - ரசிகர்கள் மற்றும் மக்கள் வெள்ளம் சூழ திருவிழா போல் அண்ணா சாலை திக்கு முக்காடியது .


    முதல் முறையாக மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் படத்தை ஸ்டீரியோ ஒலியுடன் , இந்த அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .டைட்டில் மியூசிக் - சைக்கிள் ரிக்ஷா ரேஸ் - பாடல்கள் பின்னனி இசை - சைக்கிள் ரிக்ஷா சண்டை - மனோகருடன் மோதும் சண்டை - கிளைமாக்ஸ் சண்டை - காட்சிகளில் மெல்லிசை மன்னரின் பிரமாண்ட இசை யின் தாக்கம் தேவிபாரடைசில் காண முடிந்தது . அவ்வளவு அருமையாக இருந்தது .


    முதல் காட்சியிலே ரிக்ஷாக்காரன் வெற்றியை அறிய முடிந்தது .எம்ஜிஆர் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நினைவானது .எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , இந்திய திரை உலகத்திற்கும் , பல பெருமைகள் இந்த ரிக்ஷாக்காரன் தருவார் என்று எதிர்பார்த்தோம் .

    1972ல் எங்கள் கனவு நிறைவேறியது . 1971ல் வந்த ரிக்ஷாக்காரன் - சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்தது .

    1971ல் வசூலில் இமாலய வெற்றி அடைந்தது .

    உலகமெங்கும் பரவியிருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மீண்டும் 1972ல் ஒரு கனவு . அதை மக்கள் திலகம் 1977ல் நிறைவேற்றிவிட்டார் . மீண்டும் எங்கள் கனவு பலித்தது .

    ரசிகர்களை திருப்தி படுத்துவதில் மக்கள் திலகம் என்றுமே முதல்வர் .

    பல சாதனைகளை உருவாக்கிய ரிக்ஷாக்காரன் - 46 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த படத்தின் தாக்கம் இன்னும் தொடர்கிறது .

  5. #4
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    From facebook

    ஒரு மாமனிதர் இருந்தார்!

    கோடை காலம் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜூலை மாதம் அது…

    கல்லூரியின் இளங்கலை வகுப்பில் அப்போதுதான் அடியெடுத்து வைக்கிறார்கள் அந்த மாணவர்கள்.

    கல்லூரியைப் பற்றியோ அந்த கடற்கரைச் சாலை பற்றியோ எந்த விவரமும் தெரியாத கிராமத்து மாணவர்கள்…

    கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தப் போனபோது, திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்.

    அழைப்புக் கடிதத்தில் சொன்னதைவிட 400 ரூபாய் அதிகம். அது ஒரு பெரிய தொகைதான். ஊருக்குப் போய் வாங்கி வந்தால்தான் உண்டு. மணியார்டர் அனுப்பச் சொல்லாம் என்றாலும், முகவரி கிடையாது.

    கலங்கி நின்ற அனைவரையும் ஒன்று திரட்டினர் சிலர். ‘முதல்வரைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்’ எனப் புறப்பட்டனர். கல்லூரி முதல்வரையல்ல… கருணையின் அடையாளமான தமிழக முதல்வர் எம்ஜிஆரை!

    20 மாணவர்கள் சென்றார்கள் தலைமைச் செயலகத்துக்கு. வாயிலில் இருந்த இரு காவலர்கள்தான் முதல்வர் அறையைக் காட்டினர். மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் கிடையாது. மனித நேயத்தின் உணர்வுகள் தெரியாத கருவிகளின் பாதுகாப்பு தேவை இருக்கவில்லை அப்போது.

    அட, ‘முன் அனுமதி வாங்கினீர்களா?’ என்றுகூட மாணவ்ரகளிடம் யாரும் கேட்கவில்லை.

    முதல்வரின் உதவியாளர் அந்த மாணவர்களில் நால்வரை மட்டும் முதல்வரின் அறைக்குள் அனுமதித்தார்.

    எதிரியையும் தன் வசப்படுத்தும் அசாத்தியப் புன்னகையோடு அந்த மாமனிதர், மாணவர்களை வரவேற்றார். அவரால் சரியாக பேச முடியாத காலகட்டம் அது. பக்தர்களிடம் என்ன மொழியில் பேசுகிறார் கடவுள்… அந்த மாமனிதரும் அப்படித்தான். எத்தனையோ லட்சம் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த ஆண் சரஸ்வதி அவர்.

    மாணவர்கள் கண்ணீருடன் சொன்னதைக் கருணையுடன் கேட்டவர்… சற்று தடுமாறியபடி சொன்ன வார்த்தை, ‘நல்லா படிக்கணும்… வகுப்புக்குப் போங்க. நான் பார்த்துக்கறேன்..!’

    எழுந்து வந்து தோளில் கையை வைத்து, தேவ ஆசி மாதிரி கூறினார்.

    அந்த வார்த்தைகள் இப்போதும், காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றன… நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வில் கண்களை நீர் முத்துகள் மறைக்கின்றன.

    அந்த அறையை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் முதல்வரின் உதவியாளர் மீண்டும் வந்தார்.

    ‘போகும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரைப் பார்த்துவிட்டுப் போங்கப்பா… முதல்வர் உத்தரவு போட்டுட்டார்… கவலைப்படாம பத்திரமா கல்லூரிக்கு போகச் சொன்னார்…’ என்றார்.

    தலைமைச் செயலகத்திலிருந்து எழிலகம் செல்வதற்குள் உத்தரவு தயாராக இருந்தது.

    ‘அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் ரத்து… முதல்வர் எம்ஜிஆர் உத்தரவு!!’

    நம்பினால் நம்புங்கள்… இந்த உத்தரவுக்குப் பின் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கட்டிய தொகை வெறும் ரூ.65 மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கட்டியது ரூ.15!!

    அந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தி படிப்புச் செலவு குறித்த கவலையின்றி படிக்கும் வகை செய்தார்…

    பொதுவாகவே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களையும் படிப்புகளையும் சுமந்து கொண்டே திரியும் வழக்கம் பிடிக்காதவன் நான். எம்ஜிஆர் பார்க்காத பட்டமா…

    ஆனால் இப்போது நிச்சயம் அவற்றை என் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்…

    ஏன் தெரியுமா?

    இந்த நாட்டின் அடையாளம் காணப்படாத ஒரு குக்கிராமத்தில், ஏழ்மையில் பிறந்தவனும்கூட, சர்வதேச பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் வாங்குமளவுக்கு படிக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தாலேயே செய்து தர முடியும் என்ற நிலையினை முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான்!

    இன்றைய உயர் அதிகாரிகளில் பலர் அப்படிப் படித்து ஐஏஎஸ் ஆனவர்கள்தான்… மருத்துவர்களில் பலர் வெறும் 1200 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் படித்தவர்கள்தான்… முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் பல பேராசிரியர்களுக்கும் கல்விக் கண் திறந்த வள்ளல், இரண்டாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதைதான்… நிஜமாகவே பாரதத்தின் ஒப்பற்ற ரத்தினம் அவர்.

    வாழ்க நீ எம்மான்…!

    டாக்டர் எஸ்.சங்கர் M.A., M.Phil., Ph.D.

  6. #5
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    HINDUSTAN TIMES

    MGR, and, his countless fans will cry out in joy. An extremely popular matinee idol and once the chief minister of Tamil Nadu, he used the moving medium with flawless ease to propagate the ideology of Dravidian parties -- first the Dravida Munnetra Kazhagam and later his own, All-India Anna Dravida Munnetra Kazhagam, which now rules Tamil Nadu.
    Two of his fans -- P Mani and Krishnakumar -- with no connection whatsoever to cinema, except being ardent lovers of all those films that MGR was celebrated for -- are digitally restoring his 1971 blockbuster, Rickshawkaran.
    A trailer of digitally enhanced Rickshawkaran will be released on August 21 at Devi Paradise, a theatre on Chennai’s busy commercial Mount Road -- or Anna Salai as it is now called. Why Devi Paradise? It was here that the movie was first shown 45 years ago-- hitting the screen on May 29, 1971.
    While Devi Paradise, despite being a multi-screen complex, , Mani and Krishnakumar feel that films like Rickshawkaran must be kept alive and up-to-date through restoration.


    However, it will be a moment of travelling back in time -- to the good old days when a movie ran for weeks and weeks and when competition was not as punishing as it is today -- when the trailer will be screened.
    The film is scheduled for a September opening, and one may well see a re-run of fan craze that all of us in Tamil Nadu are now familiar with.
    Rickshawkaran -- which was remade in Hindi as Rickshawala (with Neetu Singh debuting in it and playing along with Mala Sinha and Randhir Kapoor) in 1973 -- had all the ingredients that went with an MGR adventure. As a former military officer, Selvam, he witnesses the killing of a rickshaw-puller, and in trying to unearth the mystery behind the murder, he chances upon a prostitution ring and judicial corruption. In the end, Selvam saves the girlfriend, Soussi, of the slain rickshaw-puller, (actress Manjula was first seen in a lead role here), from a ruinous future.

    A typically swashbuckling MGR portrays the good guy in Rickshawkaran (directed by Krishnan Nair) -- which was in line with the actor’s innumerable other works, where he had invariably presented a cocktail of entertainment and “jan seva”, helping the downtrodden win their rights and offering solace to wronged women.
    The re-mastering of Rickshawkaran, which has some lilting numbers by MS Viswanathan, must have been inspired by the successes of films like MGR’s Ayirathil Oruvan (whose restored version played for 175 days when it was released a couple of years ago)

  7. #6
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -10/08/2016

  8. #7
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் ஞாயிறு (14/08/2016) அன்று பிற்பகல் 2.30 மணியளவில், சென்னை ராஜா
    அண்ணாமலை மன்றத்தில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த
    நாள் விழா கொண்டாட்டம் - வண்ண மலர் வெளியீடு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு , ஆகியன நடைபெற உள்ளது குறித்த சுவரொட்டிகள்,
    பேனர் -நண்பர்களின் பார்வைக்கு .


  9. #8
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #9
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #10
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •