Page 237 of 400 FirstFirst ... 137187227235236237238239247287337 ... LastLast
Results 2,361 to 2,370 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #2361
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2362
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2363
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2364
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2365
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    வெளியே தெரியாமல்_____

    எம்ஜிஆர் இருக்கிறார்(17)::::

    தலைவரின் எதிரிகள் அடிக்கடி சாென்ன குற்றச்சாட்டு எம்ஜிஆர் விளம்பரத்துக்காக உதவிகள் செய்கிறார் என்பதாக. பாவம், இவர்களுக்கென்றே "சாே" மிக அழகாக பதில் சாென்னார். "சாெல்பவர்கள் கிடக்கிறார்கள். அடுப்பில் உலையை வைத்து விட்டு, அரிசிக்கான பணம் கிடைக்குமென்று நம்பிக்கையாேடு உலகத்திலேயே எம்ஜிஆர் ஒருவரிடம்தான் செல்ல முடியும். அவர் செய்த தர்மங்கள், ஊருக்கு தெரிந்தது சிறு துளிதான், தெரியாதது ஆயிரக்கணக்கில். அந்த தர்மங்கள்தான் அவரது நிலைத்த புகழுக்கு காரணம்"

    நடிகர்திலகம் இதைப்பற்றி சாென்னதை இன்னாெரு பதிவில் பதிகிறேன். அதற்கு முன்பாக சங்கரய்யாவை பார்ப்போம்.

    சங்கரய்யா பெரியாரின் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.

    எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை. தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும். அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள். சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே அவரை சந்தித்து உதவி கேட்பதா எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.

    அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
    காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.

    மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார். தலைவருக்கு ஆச்சரியம். இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?" அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.

    உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ50,000 யை சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.

    மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரிடம் கெஞ்சி, கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது. 300ரூபாய் சம்பளத்துக்கு முக்கிக்காெண்டிருந்த சங்கரய்யாவிற்கு தலைவர் தந்த மாதசம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூபாய்15,000.

    குசேலன் கூட கண்ணனுக்கு அவல் தந்து, அதை அவன் தின்றதற்கு பின்னாலே கஷ்டம் நீங்கினான். ஆனால் என் இதய தெய்வத்தின் கடைக்கண் பார்வை பட்டதும், சங்கரய்யா சங்கடம் போய் சந்தாேஷஅய்யா ஆகி விட்டார்!

    பெரியார் மீதான பாசம்:::

    எம்ஜிஆர் இருக்கிறார்(16):::

    தந்தை பெரியாருக்கு திரையுலகின் பேரிலும்,நடிகர்கள் பேரிலும் எப்பாேதுமே நல்அபிப்ராயம் இருந்ததில்லை. இத்தணைக்கும் எல்லா திராவிட கட்சி மாநாடுகளிலும் நாடகம் நடத்தும் பாணி பெரியாராலே உருவாக்கப்பட்டிருந்தும்.

    விதிவிலக்காக M.R.ராதா மேல் பெரியாருக்கு ஒரு அபிமானம் இருந்தது. அது நடிகர் என்பதற்காக அல்ல, தனது கட்சிக்கான பெரும்செலவுகளை ராதா ஏற்று வந்தார் என்பதற்காக. அப்படியிருந்தும் 1967யில் எம்ஜிஆரை ராதா துப்பாக்கியால் சுட்டு நாடெங்கும் அமளி ஏற்பட்ட நேரத்தில் கூட "இரண்டு கூத்தாடிப்பசங்கள் அடித்துக்காெண்டதற்கு இவ்வளவு பெரிய அமளியா?" என்றே கண்டித்தார்.

    சந்தர்ப்பம் கிட்டும் பாேதெல்லாம் எம்ஜிஆரையும், சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களையும் கூத்தாடிப்பசங்கள் என்று தாக்க அவர் தவறுவதில்லை. இத்தனைக்கும் "சிவாஜி"கணேசன் என்று பட்டமளித்தவரே அவர்தான்.

    ஆனால் புரட்சித்தலைவருக்கு ஐயா மீது மாறாதப்பற்றும், மரியாதையுமிருந்தது. ஊரில் இருந்தால் ஐயாவிடம் அனுமதி பெற்று, பெரியாரின் பிறந்த நாட்களில் அதிகாலையிலேயே பாேய் அவரிடம் கணிசமான நன்கொடை தந்து ஆசி பெற்று வருவார்.

    72 ல் தலைவரை கட்சியை விட்டு நீக்கிய பாேது, இரவு11மணிக்கு எம்ஜிஆரை நேரில் சந்திக்க வருவதாக சாென்ன பெரியாரை தடுத்து, ஐயாவை தானே வந்து சந்திப்பதே முறை என்று சாெல்லி காலை 10மணிக்கு சென்று நேரில் சந்தித்தார். .ஐயா "கழகம் பிளவுபட்டால் திராவிடஇயக்கம் பாழ்பட்டு விடும், எனவே தன்னிலை விளக்கம் தந்து விட்டு மீண்டும் தி.மு.கவில் இணைய வேண்டும்" என்றதும், தலைவர் தன் தரப்பு நியாயங்களை விளக்கி ,மன்னிப்புக்கடிதம் தருதல் சாத்தியமில்லை என்பதை விரிவாக உரைத்து வந்தார். அதிலே ஐயாவுக்கு எம்ஜிஆர் மேல் வருத்தம்தான். மேடைகளில் பகிரங்கமாகவே தலைவரையும், அஇஅண்ணாதி.மு.கவையும் தாக்கி பேசினார்.

    ஆனால் எம்ஜிஆர் அதையெல்லாம் மனதில் காெள்ளவில்லை. கடுமையான வார்த்தையால் ஒருமுறை ஐயா திட்டியதைப்பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, எங்கள் தந்தைக்கு எங்களை திட்டவும் உரிமையுண்டு என்று சொன்னார்.

    ஐயாவின் மரணத்தின் பாேது மரியாதை செலுத்தவும்,இறுதிஊர்வலத்தில் கலந்து கொள்ளவும் அவர் தவறவில்லை.

    எல்லாவற்றிற்கும் மேலாய் ஆட்சிக்கு வந்ததும், பெரியார் எழுத்து சீர்திருத்தத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தார். 1979யில் வந்த பெரியார் நூற்றாண்டு விழாவிற்கு நாவலர் நெடுஞ்செழியனை தலைவராக்கி, ஒவ்வாெரு மாவட்டத்திலும் நினைவுத்தூண்கள், நூற்றாண்டு விழாக்கள் என்று ஆண்டு முழுக்க விழாக்காேலம் கண்டார். அண்ணாசாலையில் பிரம்மாண்ட சிலை அமைத்து தலித்துகளின் இந்திய அடையாளமாக காணப்பட்ட மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் அவர்களை, மணியம்மையாரின் தலைமையில் திறக்க வைத்தார்.

    எம்ஜிஆர் வாய் சாெல் வீரரல்ல, தந்தை பெரியாரை போலவே சுத்த செயல் வீரர்!

    நன்றி அரிமா சந்திரசேகரன் எம். முகநூல் பக்கம்.

  7. #2366
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like



    வெளியே தெரியாமல்_____

    எம்ஜிஆர் இருக்கிறார்(17)::::

    தலைவரின் எதிரிகள் அடிக்கடி சாென்ன குற்றச்சாட்டு எம்ஜிஆர் விளம்பரத்துக்காக உதவிகள் செய்கிறார் என்பதாக. பாவம், இவர்களுக்கென்றே "சாே" மிக அழகாக பதில் சாென்னார். "சாெல்பவர்கள் கிடக்கிறார்கள். அடுப்பில் உலையை வைத்து விட்டு, அரிசிக்கான பணம் கிடைக்குமென்று நம்பிக்கையாேடு உலகத்திலேயே எம்ஜிஆர் ஒருவரிடம்தான் செல்ல முடியும். அவர் செய்த தர்மங்கள், ஊருக்கு தெரிந்தது சிறு துளிதான், தெரியாதது ஆயிரக்கணக்கில். அந்த தர்மங்கள்தான் அவரது நிலைத்த புகழுக்கு காரணம்"

    சங்கரய்யா பெரியாரின் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.

    எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை. தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும். அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள். சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே அவரை சந்தித்து உதவி கேட்பதா எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.

    அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
    காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.

    மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார். தலைவருக்கு ஆச்சரியம். இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?" அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.

    உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ50,000 யை சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.

    மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரிடம் கெஞ்சி, கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது. 300ரூபாய் சம்பளத்துக்கு முக்கிக்காெண்டிருந்த சங்கரய்யாவிற்கு தலைவர் தந்த மாதசம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூபாய்15,000.

    குசேலன் கூட கண்ணனுக்கு அவல் தந்து, அதை அவன் தின்றதற்கு பின்னாலே கஷ்டம் நீங்கினான். ஆனால் என் இதய தெய்வத்தின் கடைக்கண் பார்வை பட்டதும், சங்கரய்யா சங்கடம் போய் சந்தாேஷஅய்யா ஆகி விட்டார்!


    நன்றி அரிமா சந்திரசேகரன் எம். முகநூல் பக்கம்

  8. #2367
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like




    திரு ஜெமினிகணேசன் அவர்கள் புரட்சித்தலைரஐ பற்றி சொல்லிய மிகுந்த நெகிழ்ச்சியான செய்தி.

    "அண்ணன் எம்ஜிஆர் அவர்களின் கொடைத்தன்மை குறித்து நான் சொல்லித்தான் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இருப்பினும் இந்த முக்கியமான நிகழ்வு மக்களுக்கு அவசியம் தெரியவேண்டிய ஒன்று... "

    "நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதில் அண்ணன் எம்ஜிஆர் க்கு ஒப்பாக ஒருவரையும் சொல்ல இயலாது. செய்திருக்கிறார். செய்கிறார். செய்வார். இதை யாரும் மறுக்கவே முடியாது.

    ஒரு முக்கிய நிகழ்ச்சி...!

    " என் அத்தை டாக்டர் முத்துலட்சுமி பொறுப்பில் சென்னை அடையாறில் அவ்வை ஹோம் பள்ளி நடத்திவந்தார். அந்தப்பள்ளிக்கு அண்ணன் எம்ஜிஆர் அவர்களிடம் நிதியுதவி கேட்டிருந்தார். அவரும் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் குறித்த நேரத்திற்கு அவரால் பணம் கொடுக்க இயலவில்லை. ஆனால் தான் வாக்குறுதி கொடுத்துவிட்டோமே என்று சிறிதளவும் கவலைப்படாமல் ஒருவரிடம் கடன் வாங்கித்தான் அந்த நிதியுதவியை செய்தார் என்று என் அத்தை கண்கலங்கியபடி கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தேன். இப்படி கையில் பணமில்லாமல் கொடுத்த வாக்குறுதிக்காக கடன் வாங்கி ரூபாய் முப்பதாயிரத்தை சர்வசாதாரணமாக நிதியாக கொடுத்த அண்ணன் எம்ஜிஆர் ஐ நான் என்னென்று சொல்ல ".

    ஆம்.....எவ்வளவு உண்மை...!!!

    இப்படியெல்லாம் கூட ஒருவர் தர்மத்தையும் வள்ளல் தன்மையையும் நிலைநாட்ட முடியுமா ? என்று கடவுள் கூட பொறாமை கொள்ளும் அளவிற்கு இருந்தது அன்னாரின் ஒவ்வொரு செயலும்... என்று மிகையாக சொன்னாலும் அது நம் தலைவரைப் பற்றிய மிகக் குறைவான மதிப்பீடாகத் தெரிகிறது.

    l

    நன்றி - திரு. பாலசுப்ரமணியன் (Bala Subramanian) முகநூல் பக்கம்.

  9. #2368
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like



    சென்னையை அடுத்திருக்கும் ஒரு பகுதியில் புரட்சித்தலைவர் நடித்த உதயம் புரொடக்ஷன்ஸாரின் "பல்லாண்டு வாழ்க" படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது...

    அந்த இடம் சரியான குடிநீர் வசதி, மின்வசதி, சாலை வசதி எதுவுமே இல்லாத இடம். அங்கிருந்து சென்னை க்கு போனில் தொடர்பு கொள்ள முயன்றால் இரவில் தான் பேசமுடியும். அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எப்படி தான் வந்தார்களோ தெரியவில்லை.

    தலைவரை சந்திக்க காலை 9 மணியளவில் அடிக்கும் வெயிலில் வரிசையாக நின்று கொண்டிருந்த அத்தனை குழந்தைகளையும் மேக்கப்போடு வியர்க்க வியர்க்க சந்தித்து தழுவி தட்டிக்கொடுத்து முத்தம் தந்து பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கொடுத்ததை கண்ட அனைவரின் கண்களும் கலங்கின.

    அதுமட்டுமில்லாமல் அங்கிருந்த தயாரிப்பாளருக்கும் மற்றவர்களுக்கும் மிக ஆச்சரியம் தந்த விஷயம்,..!!

    "அருகில் கடைகள் எதுவும் இல்லாத இடத்திற்கு எப்போது யாரை அனுப்பி இவ்வளவு விலையுயர்ந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை வரவழைத்தார்? " என்பது தான்...!!

    இதுபற்றி கேட்டதற்கு...

    அனைவருக்கும் ஒரு புன்னகையை மட்டும் பரிசாகத் தந்தார்.

    "ஒருவருக்கு உதவி செய்வதில் கூட மற்றவர்களுக்கு தெரியாமல் அந்த உதவியை செய்யவேண்டும்" என்ற உயர்ந்த குணம் மக்கள்திலகம் அவர்கள். அவரால் மட்டுமே தான் இப்படி மனிதநேயத்தோடு நடந்துகொள்ளமுடியும் என்பதை அடியேன் சொல்லித்தான் விளக்கவேண்டுமா...!!!???


    நன்றி - திரு. பாலசுப்ரமணியன் (Bala Subramanian) முகநூல் பக்கம்.

  10. #2369
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like



    புரட்சித்தலைவரின் "இதயக்கனி" [ நான் சொல்லுவது இதயக்கனி திரைப்படத்தை பற்றி மட்டுமே] மாபெரும் வெற்றி படம் அதில் என்றும் அனைவரின் கவனத்தை கவரும் பாடல் "நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற" என்ற பாடல்.

    இந்த பாடலில் புரட்சித்தலைவர் சொல்லித்தான் கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் "பஞ்ச பூதங்களை" பற்றி எழுதினார் என்பது எவ்வளவு நபர்களுக்கு தெரியும்?

    காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது

    மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது


    நன்றி = திரு. சைலேஸ் பாசு அவர்கள் முகநூல் பக்கம்.

  11. #2370
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like




    K Sankar‎
    to
    அ.இ.அ.தி.மு.கழகம்-சென்னை
    September 17 at 9:19am ·


    எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள்-II

    # ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி திட்டத்தின்
    கீழ் ரூபாய் 10000 வழங்க உத்தரவிட்டார்.

    # விதவை மறுமணத்திட்டத்தின் கீழ் தம்பதியர்களுக்கு ரூ.5300 வழங்க உத்தரவிட்டார்.

    # கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தாழ்த்தப்பட்டோரை மற்ற இனத்தவர்கள் மணம் புரிந்து கொண்டால் தலா ரூ.4300 வழங்க உத்தரவிடப்பட்டது.

    # 10000 ஏழை தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டது.

    # மதுரை மாநகரில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழறிஞர்களை கவுரவப்படுத்தினார்.

    # நக்சலைட்டுகளை அறவே ஒழித்து தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழச்செய்தார்.

    # Encounters இல்லாமல் தமிழகத்தில் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டினார்.

    # புதிய தொழிற்கொள்கையை ஏற்படுத்தி அன்னிய முதலீடுகளுக்கு அடிகோலினார்.

    # தமிழறிஞர்கள் திரைப்பட கலைஞர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு கலைமாமணி விருது தொடர்ந்து வழங்கிடச்செய்தார்.

    # ஆஸ்தான அரசவைக் கவிஞர் பதவி நாமக்கல் கவிஞருக்குப் பிறகு நீண்ட காலம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது. கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தகுதியான ஒருவருக்கு அப்பதவி வழங்கப்பட வேண்டும் என கருதி கவிஞர் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் பதவி வழங்கி ஒரு அமைச்சருக்குரிய சலுகைகளையும் அளித்து அழகு பார்த்தார்.

    # சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் wholesale steel market ஐ மிகப்பெரிய அளவில் திருவொற்றியூரை அடுத்துள்ள சாத்தங்காடு என்ற இடத்தில் நிறுவினார்.

    # ஆசியாவிலேயே பெரிய அங்காடி கோயம்பேட்டில நிறுவிட திட்டம் தீட்டி செயல்படுத்த முனைந்தார்.

    # சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நவீன கருவிகளுடன் புதிய கட்டிடம் கட்டிட ஏற்பாடு செய்தார்.

    # தமிழகமெங்கும் கிராம மக்களின் வசதிக்காக அதிக எண்ணிக்கையில் சுகாதார மையங்கள் அமைத்தார்.

    # சென்னை கோட்டுர்புரத்தில் வெள்ளம் சூழ்ந்தபோது முழங்கால் அளவு நீரில் அதிகாரிகளுடன் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்ய உத்தரவிட்டார்.

    # சென்னை திருவல்லிக்கேணியில் அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின் குளத்தை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந் தேரோட்டத்தை நடைபெறச்செய்தார்.

    # முறையான நிர்வாகமில்லாமல் நன்கு பராமரிக்கப்படாமல் பாழடைந்த புராதன கோயில்களை இந்து அறநிலையத்துறையின்
    கீழ் கொண்டுவந்து அவைகளை சீரமைத்தார்.

    # நாட்டின் முன்னேற்றத்திற்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடைமுறைபடுத்திய இருபது அம்ச திட்டத்தின் கீழ் ஒரு அம்சமான கொத்தடிமை ஒழிப்புத் திட்டத்தை முழுயைாக செயல்படுத்தினார்.

    # அறிஞர் அண்ணாவன் பவள விழா மூதறிஞர் இராஜாஜி எழுச்சி
    கவிஞர் பாரதியார் மற்றும்
    புரட்சி கவிஞர் பாரதிதாசன் பகுத்தறிவுப்பகவலன் பெரியார் ஆகியோரின் நூற்றாண்டு விழாவினை தமிழக அரசு சார்பில் கொண்டாடி சிறப்பு செய்தார்.

    # அரசு விழாக்களில் ஆடம்பரத்தை தவீர்த்து சிக்கனத்தைக் கடைபிடித்தார்.

    # தமிழக அரசின் சார்பில் அளித்த முதல்வருக்குரிய வாகன வசதியை தவிர்த்து சொந்த காரிலேயே பயணித்து அனைவருக்கும் முன்னோடியாய் விளங்கினார்.

    # 1977 முதல் 1983 வரைபெரிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் 449 தமிழகத்தில் அமைக்கப்பட்டன.இவற்றின் மொத்த மூலதனம் ரூ.850 கோடி ஆகும்.

    # தொழிலாளர் நலவாரியம் மூலம் தொழிறசாலைகளில் தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து கிளர்ச்சி வேலை நிறுத்தங்கள் இன்றி உற்பத்தி திறன் பாதிக்கப்படாவண்ணம் செயலாற்றினார்.

    # சென்னை புறநகரில் TAMIN என்றழைக்கப்படும் தமிழ்நாடு மினரல்ஸ் தொழிற்சாலையை நிறுவினார். 1979-ல் தமிழகத்தின தொழில் வளர்ச்சி 5.2% சதவீதத்திலிருந்து 1982-ல் 12.1% சதவீதமாய் உயர்ந்தது.

    # இது தவிர மத்திய அரசின் நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3-ஆவது இடத்தைப பிடித்தது.

    # 1977-78ல் தமிழகத்தில் 2124 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி 1983-84 ஆம் வருடத்தில்
    3344 மெகாவாட்டாக உயர்ந்தது.

    # 20,000 இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார்.

    # கடுமையான வெள்ளத்தின்போது ரேஷன் கடைகளில் அரிசி விலையை ரூ1.75-ஆக குறைக்க உத்தரவிட்டார்.

    # அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவேட்டில் தமிழில் கையொப்பமிட ஆணை பிறப்பித்தார்.

    # பெயர் பலகை விளம்பர பலகைகளில் முதலில் தமிழில் எழுதப்படவேண்டும் என உத்தரவிட்டார்.

    # தமிழ் சான்றோரகளின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழாக்கள் சிறப்பாக கொண்டாட வழிவகுத்தார்.

    # வறுமையில் வாடும் தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கிட ஏற்பாடு செய்தார்.

    # திருக்குறள் நெறி பரப்பிடும் வகையில் குறள் நெறி பரப்பு மையத்தை உருவாக்கினார். அதற்கு திருக்குறள் முனுசாமி என்ற அறிஞரை தலைவராக நியமித்தார். திருவள்ளுவர்
    திருநாளன்று சிறந்த அறிஞர்களுக்கு திருக்குறள் விருது வழங்க ஏற்பாடு செய்தார்.

    # தமிழகத்தின் பழங்கலைகளைப் பாதுகாக்க பழங்கலை இயக்ககம் ஒன்றை உருவாக்கினார்.

    # சிறந்த எழுத்தாளருக்கு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் திரு.வி.க. விருது வழங்க ஏற்பாடு செய்தார்.

    # மதுரையில் சங்கப் புலவர்களை கௌரவிக்க நினைவுத்தூண் ஒன்று நிறுவினார்.

    # மேலும் அதே மதுரை மாநகரில் தமிழன்னை சிலையையும் நிறுவினார்.

    # காவலர்கள் சீருடையில மாற்றங்கள் கொண்டு வந்தார்.

    # சென்னை வெப்பேரியில் கால்நடை மருத்துவ பல்கலை கழகம் நிறுவ அடித்தளமிட்டார்.

    # பல்வேறு புதிய அரசுக் கட்டிடங்களை தானே திறக்காமல் தன் தலைமையில் நடைபெற்ற விழாக்களில் எளிய மேஸ்திரிகளைக் கொண்டு திறக்கச் செய்து எளியவர்களையும் கௌரவித்தார்.

    # திருச்சிக்கும் தஞ்சைக்கும் இடையே புதிய தலைநகரை உருவாக்க தீர்மானித்து அதற்கான வேலைகளை தொடங்குமுன்னர் எப்போதும் முட்டுகட்டை போடும் சில தலைவர்களின் போராட்டம் காரணமாக அவருடைய மனதுக்குகந்த முடிவை தள்ளி போடவேண்டியதாயிற்று. பின்னர் அவரின் உடல்நலக்குறைவால் திட்டம் நடைபெறவில்லை. இன்றும் பல கருத்தாய்வளர்களால் அத்திட்டம் மட்டு்ம் நிறைவேவறியிருந்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.

    # மற்றொரு அவரது முடிவாக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கிடு அமுல்படுத்தப்பட்டது. இதுவும் அவரது எதிர்ப்பாளர்களால் முடக்கப்பட்டது. அதன் காரணமாக இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களில் பொருளாதாரத்தில் மிக பின்தங்கிய மக்களுக்கு கடைக்க வேண்டிய சலுகைகள் பெற முடியாமற போயிற்று.

    # சத்துணவுத்திட்டம் இந்தியாவுக்கும் முன்னோடடி திட்டமாக இன்று உள்ளது. ஐ.நா.வின் நிறுவனங்கள் சத்துணவால் குழந்தைகளுக்கு பல பிணிகள் நீங்கியுள்ளதை ஆவணப்படுத்தி உள்ளன.

    # பூரண மது விலக்கு 1977 முதல் 1980 வரைஅமுல்படுத்தினார். அதன் பிறகு அமுல் படுத்த முடியாமைக்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன.

    # பெண்களுக்கென பேரூந்துகள் அவரது ஆட்சியில்தான் முதன்முதலாக இயக்கப்பட்டன.

    # சுற்றுலாத்துறை மேம்பட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

    # குடிசைகளுக்கு வீட்டுக்கொரு மின்விளக்கு திட்டத்தினை அமுல்படுத்தினார்.

    # மின்சாரத்தேவையை மனதில் கொண்டு குந்தா போன்ற நீர் மின்நிலையங்களை அமைத்தார். காற்றாலைகள் அமைத்திட அரசு உதவி அளித்தார்.

    # தமிழக மக்களின் நலனை மனதிற்கொண்டு மத்தியில் அமையும் மாற்று கட்சி அரசுடனும் சுமுக உறவு கொண்டு தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை கொண்டு வர ஏற்பாடு செய்தார்.

    # பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்கிட அன்றைய பிரதமர் ராஜிவிடம் உதவி வேண்டினார். முதலில் மறுத்த ராஜிவ் பின்னர் எம்.ஜி.ஆரின் மீதுள்ள அன்பின் காரணமாக சம்மதித்தார். இத்திட்டங்களையெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லவில்லை.

    எம்.ஜி.ஆர் சொன்னதை செய்தார்.சொல்லாததையும் செய்தார். முக்கியமாக செய்ததை சொல்ல மாட்டார் வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
    அவரது மனித நேயத்தைப் போற்றுவோம்.

    நன்றி = திரு. கே.சங்கர் அவர்கள் முகநூல் பக்கம்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •