Page 238 of 400 FirstFirst ... 138188228236237238239240248288338 ... LastLast
Results 2,371 to 2,380 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #2371
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2372
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    இந்தப் படத்தைப் பார்த்ததும் தங்கத்தில் குழைத்தெடுத்த சிரிக்கும் ரோஜா மலர் என்று ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன். என்ன எழுதினாலும் புரட்சித் தலைவரின் அழகு சிரிப்புக்கு ஈடாகாது என்பதால் விட்டு விட்டேன்.

    ஆயிரத்தில் ஒருவன் படம் இருக்கட்டும் இந்தப் படத்தையே மூன்று மணி நேரம் பார்த்தாலும் இன்னும் பார்க்க வேண்டும் போல தோன்றுகிறது.

  4. #2373
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    20.9.2016

    20.9.1968

    மக்கள் திலகத்தின் 100 வது திரைப்படம் ''ஒளிவிளக்கு '' இன்று 49வது ஆண்டு விழா துவக்கம் .

    மெல்லிசை மன்னரின் இசை .

    இந்தி பட கதையின் தழுவல் .

    மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த படம் .

    எம்ஜிஆரின் ஸ்டைல்

    எம்ஜிஆரின் உடை அலங்காரம்

    எம்ஜிஆரின் உன்னதமான நடிப்பு

    எம்ஜிஆரின் சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் .

    எம்ஜிஆரின் இளமையான எழில் தோற்றம் .

    தத்துவங்கள் - கொள்கைகள் - இனிய பாடல்கள் .

    விறுவிறுப்பான படம் .

    மொத்தத்தில் எம்ஜிஆரின் ''ஒளிவிளக்கு '' -1968ல் கொடுத்த ஒளி வட்டம் - 48 ஆண்டுகளாக ஜெக ஜோதியாக

    அணையா விளக்காக பிரகாசத்துடன் அகிலமெங்கும் கோடானுகோடி ரசிகர்களின் உள்ளங்களில் ஜொலித்து

    கொண்டு இருக்கிறார் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

  5. #2374
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1968-
    1968 ஆண்டில் மக்கள் திலகத்தின் ரசிகர்களை தீவிர எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றிய படங்கள்.

    ரகசிய போலீஸ் 115

    குடியிருந்த கோயில்

    ஒளிவிளக்கு
    ***************************
    ரகசிய போலீஸ் 115
    --------------------------------
    பறக்கும் பாவை -1966 படத்திற்கு பின் வந்த படம் பந்துலுவின் ரகசிய போலீஸ் 115 வண்ணப்படம் . எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்து வைத்த படம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் .புதுமையான சண்டை காட்சிகள் - இனிமையான பாடல்கள் என்று வந்த படம் .எம்ஜிஆரின்
    ஸ்டைல் , உடைகள் , சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் மக்கள் திலகத்தின் ரசிகர்களை மேலும்தீவிர ரசிகர்களாக மாற்றியது .11/1/1968ல் வந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் .


    குடியிருந்த கோயில் - 15.3.1968
    .................................................. .........
    மக்கள் திலகம் இரட்டை வேடங்களில் அசத்திய மாபெரும் வெற்றி படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .எம்ஜிஆரின்
    மாறுபட்ட நடிப்பு படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி . திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் திருவிழா கோலம்.
    மக்கள் திலகத்தின் பெருமைகளுக்கு பெருமை சேர்த்த படம் . ரசிகர்கள் தீவிர பக்தர்களாக மாற்றிய படம் .வசூலில் புதிய வரலாற்றை உருவாக்கிய படம் .


    ஒளிவிளக்கு - 20.9.1968
    *********************************
    ஜெமினியின் முதல் வண்ணப்படம் .மக்கள் திலகத்தின் 100 வது படம் .பிரமாண்ட படைப்பு .மக்கள் திலகத்தின் சிறந்த
    நடிப்பில் , பிரகாசித்த படம். ஜெமினி தயாரித்த படங்களில் அதிக வசூல் , அதிக நாட்கள் என்று பல சாதனைகள் புரிந்த படம் .மறு வெளியீட்டில் இலங்கையில் மீண்டும் 100 நாட்கள் ஓடிய படம் . மதுரை நகரில் 21 வாரங்கள் ஓடிய படம்

    1968ல் மக்கள் திலகத்தின் மூன்று வண்ணப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ் கடித்தன என்றால் மற்ற 5 படங்கள் ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்டது .


    தேர்த்திருவிழா - பொழுது போக்கு நிறைந்த படம் .

    கண்ணன் என் காதலன் - இன்னிசை சித்திரம் .

    புதிய பூமி - ரசிகர்களை ஆண்டார் .

    கணவன் - புதுமையான படம்

    காதல் வாகனம்- ரசிகர்கள் விரும்பிய வாகனம் ..

  6. #2375
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2376
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R. முதல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.

    எம்.ஜி.ஆரின் 100-வது படம் ஜெமினியின் ‘ஒளிவிளக்கு’. எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘சதிலீலாவதி' கதையை எழுதியவர் வாசன். ஜெமினி பேனரில் அவர் தயாரித்த படமே எம்.ஜி.ஆரின் 100வது படமாகவும் அமைந்தது சிறப்பு. இந்தியில் நடிகர் தர்மேந்திரா நடித்த ‘பூல் அவுர் பத்தர்’ என்ற படமே தமிழில் ‘ஒளிவிளக்கு’ ஆக மாறியது.

    படத்தில் ஒரு காட்சியில் தீ பிடித்து எரியும் வீட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கும் குழந்தையை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை யில், அவரை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி சவுகார் ஜானகி பாடும்

    ‘ஆண்டவனே உன் பாதங் களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...’

    பாடல் 1984-ல் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

    ‘ஒளிவிளக்கு' படத்தில் இன்னொரு விசேஷம். எம்.ஜி.ஆர். மது குடிப்பது போன்ற காட்சி அமைப்பு. படங்களில் கூட சிகரெட், மதுவை தொடாத எம்.ஜி.ஆர். குடியின் தீமையை உணர்த்துவதற் காக, தானே குடிப்பது போல நடித்த ஒரே படம். குடியின் தீமையை உணர்த்தும் வகையில்

    ‘தைரிய மாக சொல் நீ மனிதன்தானா? நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்...’

    பாடலில் எம்.ஜி.ஆரின் மனசாட்சி அவர் வடிவில் மேலும் 4 பேராக; மொத்தம் 5 எம்.ஜி.ஆர்கள் பல வண்ண உடைகளில் திரையில் தோன்றும் காட்சியில் தியேட்டர் இரண்டுபடும்.

    இப்போது போல எல்லாம் அப்போது சினிமாவில் தொழில்நுட்பம் முன்னேறவில்லை. ‘மாஸ்க்' முறையில் ஒவ்வொரு எம்.ஜி.ஆராக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, காலையில் இருந்து இரவு முதல் பல நாட்கள் இந்தப் பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர். மெனக்கெட்டார்.

    பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவிலேயே ரஷ் போட்டு பார்க்க வேண்டும். படத்தின் தயாரிப்பு வேலை களை எஸ்.எஸ்.வாசனின் மகனும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியராக இருந்தவரும் ஊழியர்களால் மரியாதையாக ‘எம்.டி’ என்று அழைக்கப்பட்டவரு மான எஸ்.பாலசுப்ரமணியன் கவனித்து வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்' படத்தையும் இவர்தான் இயக்கினார்.

    பாடல் காட்சிக்காக காலையில் இருந்து இரவு வெகு நேரமாகியும் நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். களைப்பு காரணமாக, பாடல் காட்சியின் ரஷ் பார்க்காமலேயே நள்ளிரவில் வீட்டுக்குப் புறப்பட்டார். ‘‘ரஷ் பார்த்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.

    சிறிய அரங்கில் ரஷ் பார்த்தபோது ‘தைரியமாக சொல் நீ... ’

    பாடல் காட்சி சிறப்பாக வந்திருந்தது. உடனே, ‘‘எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நல்லா வந்திருக்குன்னு சொல்லிடுப்பா..’’ என்று உதவியாளரிடம் கூறினார் பாலசுப்ரமணியன். அப்போது, பின்னாலிருந்து அவரது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தபோது புன்னகையுடன் நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.

    விஷயம் என்னவென்றால், களைப்பால் வீட்டுக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆருக்கும் பாடல் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆசை. அதனால், களைப்பை உதறிவிட்டு ரஷ் திரையிடும் அரங்குக்குள் வந்து, படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக பின்னால் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு ஆர்வம். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு!

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’ சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம். ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’. தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’. இந்த எல்லா படங்களிலும் கதாநாயகன் வண்ணமிகு நாயகன் எம்.ஜி.ஆர்.

    courtesy - the hindu tamil.

  8. #2377
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ''ஒளி விளக்கு '' ஒரு சிறப்பு பதிவு .

    1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
    படம் ''ஒளிவிளக்கு ''

    பிரம்மாண்ட வண்ணப்படம்

    மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .

    குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .

    திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
    மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .

    1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
    கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .

    மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .

    ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .

    சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .

    நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்

    மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி

    சோ வின் சந்திப்பு

    ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்

    அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை

    கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி

    சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்

    வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
    மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
    பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .

    சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .

    கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி

    மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை

    ''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்

    பாடல் காட்சி - புதுமை

    திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .

    தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -

    மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .

    இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை

    மக்கள் திலகம் - அசோகன் சண்டை என்று 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் என்று ''ஒளிவிளக்கு '' படம்
    ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .

    மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -

    உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''

  9. #2378
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் திரைபடப்பட வசனங்களும் & பாடல்களும்

    சினிமாவில் லாபம் மட்டுமே நினைப்பவர்களுக்கு மத்தியில், தரமான சிந்தனைகளையும், ஒழுக்கம் தரும் பண்புகளையும் தமது படங்களின் கதாபாத்திரங்களின் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவ்ர் எம்.ஜி.ஆர். அநாகரீக வார்த்தைகளை பேசுதல். புகைபிடித்தல், குடிபழக்கம் போன்றவறை தமது படங்களில் முற்றார் தவிர்த்த இவர் நடிகர் என்பதையும் மீறி, சமுதாய பற்றாளராகவும் பரிணாமித்தார். எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கருத்துக்களை வசனமாக இடம் பெற செய்வார். அவை மக்கள் மனதில் மிகவும் பிரபலமடைந்தன.

    நாடோடி: படிக்கிறவங்க புத்திசாலியாகலாம் எல்லோரும் அறிவாளி ஆக முடியாது. அனுபவந்தான் அத தர முடியும்.

    நம்நாடு: எனக்குள்ள மூலதனம் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும், என்னுடைய நாணயமுந்தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.

    தாயைக் காத்த தனயன்:பிள்ளைகளின் ஆசையை தீர்த்து வைக்கும் பெற்றோர்கள் இருந்து விட்டால் நாட்டில் தற்கொலை என்ற சொல்லுக்கு இடம் இருக்காது.

    ஆயிரத்தில் ஒருவன்: யாரோட தாகமாக இருந்தாலும் தாகத்தை தீர்ப்பதுதான் தண்ணீரின் கடமை.

    விவசாயி: நாம் பிறர் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர கெடுவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.

    கணவன்: சத்தியம் சில நேரம் தூங்கும். ஆனால் என்றுமே சாகாது.









    சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. இப்படி, சினிமாவின் மூலம் எவ்வளவு கருத்துக்களையும் நல்ல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ. அத்தனையயும் தமது திரைப்படங்களின் வழி கொண்டு போர் சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அதே வேளையில் தமது திரைப்படங்களின் இடம் பெறும் பாடல்களும் குழந்தைகள், பெண்கள், உழைப்பாளிகள், பாட்டளிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் நன்மையையும், தன்முனைப்பான விஷயங்களை எடுத்துணர்த்தும் வகையிலேயே எழுத செய்திருப்பார். தமது பாடல்களின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலம் தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது என்று நம்புகிறவர் எம்.ஜி.ஆர்..

    வேட்டைக்காரன் - உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்

    நாளை நமதே - நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி
    சென்றால் நாளை நமதே

    நம்நாடு - அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.

    உலகம் சுற்றும் வாலிபன் - சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.

    திருடாதே - திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!

    மன்னாதி மன்னன் : அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..

    படகோட்டி : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.

    இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்.. எல்லாமே சமுதாய பற்றோடு மக்களுக்காக கொடுக்கப்பட்ட பாடல்கள். அன்று எழுதப்பட்ட இந்த கருத்தாழமிக்க பாடல்கள் இன்றைய நவீன காலத்திலும் நம் இதயங்களில் இளையோடுகிறது. சமுதாய பாடல்களைத் தவிர்த்து எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களை பற்றி சொன்னால் அது தித்திக்கும் தேன் போல் இருக்கும். அத்தனையும் முத்தான காதல் பாடல்கள். இந்த வெற்றிக்கெல்லாம் மிக முக்கியானவர்கள் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், வாலி, பாடகர்கள் டி.எம்.எஸ். செளந்தராஜன், பி.சுசீலா கூட்டணி. இந்த கூட்டணிக்காகவே எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்களை பார்க்க திரையரங்கம் சென்ற கூட்டம் உண்டு.
    எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். கவிஞர் வாலி, பாபநாசம் சிவன், கலைஞர் கருணாநிதி, உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, அ.மருதகாசி, ஆலஙகுடி சோமு ஆகியோர் எம்.ஜி.ஆரின் பாடகளில் மூலம் மக்களைக் கவர்ந்தவர்களாவர்.

    courtesy - net

  10. #2379
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like


    புரட்சித் தலைவர், வலது ஓரத்தில் வருபவர் என்.டி.ராமராவ். நடுவில் சி.சுப்பிரமணியம். அபூர்வ படம்.

  11. #2380
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    அபூர்வமான புகைப்படம். நன்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி திரு.சிவா.




    புரட்சித் தலைவர் அமர்ந்திருக்கும் வரிசையில் முதலில் இருந்து…. நாகிரெட்டி, பட்சிராஜா ஸ்டூடியோ மோதி ஸ்ரீ ராமுலு நாயுடு போல தெரிகிறது.உறுதியாக தெரியவில்லை, கண்ணதாசன் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இயக்குநர் கே.சுப்பிரமணியம்,

    திரு.சிவாஜி கணேசன் அமர்ந்திருக்கும் வரிசையில் முதலில் இருந்து…. ஏ.வி.மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன், சி.சுப்பிரமணியம், சிவாஜி கணேசன்,

    திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அமைச்சர் சி.சுப்பிரமணியம் கலந்து கொண்டிருப்பதால் அரசு சார்பில் திரைப்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் என்று தெரிகிறது. விவரங்கள் தெரியவில்லை.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •