Page 240 of 400 FirstFirst ... 140190230238239240241242250290340 ... LastLast
Results 2,391 to 2,400 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #2391
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    ஒருவரை பாராட்டி ...
    அடையாளம் காட்ட - அழைக்க ...
    நாம் எப்படி சொல்வோம் ...?!

    ஒருவனை மிரட்டி ...
    அவனை சுட்டிக்காட்ட - கண்டிக்க ...
    நாம் எப்படி சொல்வோம் ... ?!

    முன்னதில் நம் அனைத்து விரல்களும் நீளும்...





    பின்னதில் ஒருவிரல் மட்டுமே நீளும்...






    அந்த விரல் சுட்டு விரல்...
    ஆம்...!
    ஆளை சுட்டி காட்டும் சுட்டு விரல்...
    ஆள் காட்டி விரல்...

    இந்த உலகில் நாம் எதற்கும் பயப்பட தேவை இல்லை...
    ஒன்றே ஒன்றை தவிர... ஆம்...
    இந்த ஆட்காட்டி விரல் தவிர...

    "எவரது விரலும் என்னை சுட்டிக் காட்டி விடக்கூடாது..."
    - இந்த நினைவு மட்டும் நம் ஆழ் மனதில் இருந்து விட்டால்...

    தப்பில்லை... தவறே செய்யமாட்டோம்...

    இது என் அனுபவம்...

    - மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்

    நன்றி - மயில்ராஜ் முகநூல் பக்கம்
    Last edited by SUNDARA PANDIYAN; 22nd September 2016 at 01:46 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2392
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    புரட்சித் தலைவருடன் எச்.வி. அண்டே, நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.எஸ்.

    புரட்சித் தலைவருக்கு இடது பக்கம் நி்ற்பவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த டி.கே. பரூவா. இவர்தான் நெருக்கடி நிலையின்போது ‘இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா’ என்று வாசகத்தை தந்தவர்.

  4. #2393
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like




  5. #2394
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    திமுக தலைவர் கருணாநிதிக்கும் புரட்சித் தலைவருக்கும் ஒரு முறை அறிக்கை மூலம் வாக்குவாதம். அந்த சமயத்தில் நிருபர்களை புரட்சித் தலைவர் சந்தித்தார். அவரிடம் கருணாநிதியின் அறிக்கைகள் பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு புரட்சித் தலைவர் சொன்னார்.

    ‘‘கலைஞர் கதை வசனகர்த்தா இது எனக்கும் தெரியும். நான் நடிகன், படங்களில் நடிப்பவன். இது கலைஞருக்கும் தெரியும். ஆனால் நானும் கதை வசனம் எழுதுவேன். இது கலைஞருக்குத் தெரியாது’’

    புரட்சித் தலைவர் எழுதிய கதை வசனத்தின் தொடர்ச்சியாகத்தான் திமுக தலைவர் முதல்வராக இருந்தபோது 1974-ம் ஆண்டு விட்டுக் கொடுத்து தமிழகத்துக்கு துரோகம் செய்த காவிரி உரிமையை இப்போது சுப்ரீம் கோர்ட் மூலம் புரட்சித் தலைவி மீட்டுள்ளார். காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் செவ்வாய்கிழமை (நேற்றைக்கு முன்தினம்) உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு நீதி கிடைத்துள்ளது. புரட்சித் தலைவிக்கு நன்றி.

    காவிரி தந்த கலைச்செல்வியைப் பார்த்துத்தான் புரட்சித் தலைவர் அன்றே பாடினாரோ?

    திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ?


  6. #2395
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like




  7. #2396
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் -22/09/2016

  8. #2397
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (22/09/2016) இரவு 7 மணி முதல் சன் லைப் சானலில் மக்கள் திலகம்
    எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி " ஒளிபரப்பாகியது .

  9. #2398
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like



    "என்னால் இதுபோல் நடிக்கமுடியாது ஜி...இந்த முயற்சியைக் கைவிட்டுவிடுங்கள்"...

    இந்திநடிகர் திலிப்குமார் திரு நாகிரெட்டியிடம் கூறியது... விஷயம் என்னவெனில் திரு ரெட்டிக்கு "எங்க வீட்டுப்பிள்ளை" படத்தை இந்தியில் திலீப்குமாரை நடிக்கவைத்து தயாரிக்க விருப்பம். தலைவருக்கும் இதில் சம்மதம். ரெட்டி அப்படத்தை போட்டுக்காண்பித்தார். உடன் மக்கள்திலகமும் இருந்தார். படம் முழுவதையும் பார்த்துவிட்டு திலீப் சொன்னதாவது....

    "எம்ஜிஆர் அளவிற்கு இந்த படத்தில் என்னால் நடிக்கமுடியாது. முக்கியமாக 'நான் ஆணையிட்டால்' பாடல் காட்சியில் எம்ஜிஆர் சாட்டையை சுழற்றியபடி வேலைக்காரர்கள் ஆரவாரம் சூழ ஆடிப்பாடி நடிப்பது எனக்கு சிறிது கஷ்டமான விஷயமே. அந்த ஷாட்ல அந்த வேலைக்காரர்களுக்கும் எம்ஜிஆர் க்கும் இடையில் என்ன ஒரு அன்னியோன்னியம், உற்சாகம். அவர்போல என்னால் அப்படி நெருங்கி நடிக்கமுடியாது. எங்கள் (இந்தி) படங்களில் நாங்கள் வீட்டு வேலைக்காரர்களை இப்படிக் காண்பிக்கமாட்டோம். எங்க மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் வேலைசெய்யறவங்க கிட்ட Distance keep up பண்ணுவோம்"...

    இதற்கு மக்கள்திலகம் கூறியதாவது... " நான் கஷ்டப்பட்ட போது அதை என்னுடன் பங்கு கொண்டது இவர்கள் போன்ற தொழிலாள சகோதரர்கள்தான். இவர்களின் கஷ்டநஷ்டங்களை நான் நன்கு அறிவேன். இவர்களின் மேல் நான் வைத்திருக்கும் பாசத்தையும் நன்றியையும் வெளிப்படுத்த நான் தான் இக்காட்சியை படத்தில் சேர்க்கச்சொன்னேன். உங்களுக்கு தேவையில்லையெனில் வேறு மாதிரி அமைத்துக்கொள்ளுங்கள் " ... இதைக்கேட்ட திலீப்குமார் மெய்சிலிர்த்துவிட்டார்.

    இது தான் மக்கள்திலகம். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொழிலாளர்களின் மீதான தன் பாசத்தையும் நன்றியையும் தனது படங்களில் காட்சிகளை வைக்கத் தவறியதே இல்லை.

    "மாண்பு என்பதற்கு பொருளே மக்கள்திலகம் தான்" என அடியேன் சொல்லித்தெரியவேண்டுமோ...???

    நன்றி - திரு. பாலசுப்பிரமணியன் முகநூல் பக்கம்

  10. #2399
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like



    எங்கவீட்டுப்பிள்ளை-------ரீல்7:--

    தலைவர் இளங்கோ லீலா சரோவின் தூண்டுதலால் குளித்து விட்டு அமர்க்களமான உடை அணிந்து சாப்பாட்டு மேஜையை ஆக்ரமிக்கிறார். தலவரும் ரெங்காராவும் அமர சரோ பரிமாறுகிறார்.

    இதில் ஒரு விஷயம்.தலைவரும் ஒர் நடிகர். ரெங்காராவும் ஒரு நடிகர். இருவரும் சாப்பிடும் காட்சி. இதில் கவனித்தீர்களானால் தன் ரசிகர்களை கவர தலைவர் எவ்வளவு ஈடுபாட்டுடன் சாப்பாட்டுக் காட்சியில் நடித்துள்ளார் என்பதை பார்க்கலாம். தனது தட்டில் பரிமாறப்பட்ட உணவுகளை அழகாகாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டு ஒரு மென்று கடித்து வாயை அரைப்பார் பாருங்கள். குறிப்பாக கோழிக்கறியை சாப்பிடும் அழகு தனி! நான் சைவம்.இதுக்கு மேல் வர்ணிக்கமுடியாது.

    பணியாள் கொண்டு வைக்கும் உணவை தன் இரு கைகளால் தட்டில் போட்டுக் கொண்டு அதகளம் செய்வார். இப்போது ராவ் கேட்பார். ‘மாப்பிள்ள வேறு என்ன வேண்டும்’ என்று. தலைவர் ‘எனக்கு சினிமா சூட்டிங் பார்க்கனும்னு ஆசை’ என்பார். ‘ஓ சினிமால எனக்கு நண்பர்கள் அதிகம் போகலாமே’ என்பார்.

    எனவே தலைவர் லீலா/ ரெங்காராவ் சகிதம் சினிமா ஸ்டுடியோ வருகிறார். வாசலில் உளறு வாயன் நாகேஷ் சான்ஸ் கேட்டுக் கொண்டிருக்க, விரட்டுகிறார்கள். தலைவர் இருவரிடமும் தமது நண்பர் ராமன் என அறிமுகப் படுத்த நாகேஷ் காதில் ‘யாரு புளியங்கொம்பா புடிச்சிருக்கே’ என்பார்!

    தலைவர் ‘உஷ் ஒன்ன மாதிரி தான் எனக்கும் புரியல அமைதியா வா’ என அணைத்து இழுத்து செல்ல உள்ளே பாடல் காட்சிக்கு டைரக்டர் கே.கே.சௌந்தர் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார். வாசலிலேயே வந்து இவர்களை வரவேற்பார் சௌந்தர்.அவர் ராவிடம் ‘இவர்!’ என இழுக்க ‘நம்ம மருமகப்பிள்ள’ என்பார்.

    தலைவர் ‘சார் எனக்கு ஒரு சான்ஸ்’ என காதை கடிக்க, ‘சார் ஒங்களுக்கு எதுக்கு நீங்க கோடீஸ்வரன்!’ என்பார். நாகேஷ் ‘நான் பிச்சக்காரன் எனக்கு சான்ஸ் கொடுங்க’ யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது. உடனே ராவ் தலைவரிடம் மாப்ள எனக்கு சினிமா சூட்டிங் பார்த்து போரடித்து விட்டது. நீங்க பாருங்க! நான் நண்பரை பார்த்து வருகிறேன் என கிளம்பி விட நாற்காலிகள் போடப்பட்டு தலைவர் இளங்கோவும் சரோவும் அமர நாகேஷ் நிற்கிறார்.

    ஒரு பாடல்காட்சி குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் யாரோ பிண்ணணி பாட நாயகன் நாயகி பாவனை செய்ய இந்த காட்சியின் போது கண்ணால் சரோவை பார்ப்பதும் மனதுக்குள் பாடலை முணுமுணுத்தவாறு தலையை இன்றைய ரஜினி ஸ்டைலை அன்றே முடியுடன் அசைத்தவாறு விழியாலே சரோ தன்னை கவனிக்கிறாறா? என தலைவர் பார்த்தவாறு பாடலில் ஆழ்வதும் வர்ணிக்க கோடி கவிஞர்கள் வேண்டும்!

    இந்த சேஷ்டையை எல்லாம் சரோவும் கவனித்து மகிழும் காட்சி அமர்க்களம்! நாகேஷும் இதனை கவனித்து முகபாவனையில் அட்டகாசம் செய்வார்! தலைவர் பாடலில் அமிழ்ந்து ஐக்கியமாகி கனவு போல் ஆரம்பித்து வீட்டில் குட்நைட் சொல்வதாக முடித்திருப்பர்!

    டடன் டன்டடடாடன் டன்டடடாடன் டடன் டடன் டன்டடடாடன் டன்டடடாடன் டன் டிடிங் டிங்.. திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம் கன்னி ஊர்வலம் வருவாள்! அவள் உன்னை கண்டு உயிர்காதல் கொண்டு தன் உள்ளம் தன்னையே தருவாள்! நான் அள்ளி கொள்ள அவள் பள்ளி கொள்ள சுகம் மெல்ல மெல்லவே புரியும்! கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ துணையை தேடி நீ வரலாம்!

    இந்த பாடலில் தலைவரின் உடையமைப்பும் இடக்கையால் சரோவை லாவகமாக அணைக்கும் ஸ்டைலும் சரோ தன் வெண்ணிற மேலாடையை ஒவ்வொன்றாக காற்றில் தலைவர் மீது வந்து விழுமாறு பறக்க விடும் ஸ்டைலும் படமாக்கப்பட்டது டைரக்டரின்/ தலைவரின் சாணக்யத்தனமா? யாருக்கு தெரியும்?

    பாடலில் தலைவர் காட்டும் நான் அள்ளி கொள்ள என்ற ஸ்டில் தான் இன்றைய காட்சி புகைப்படம்!



    நன்றி - திரு.சுந்தரராஜன் முகநூல் பக்கம்

  11. #2400
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    மாலை நாறலையே:::

    எம்ஜிஆர் இருக்கிறார்(19)::::

    ஊட்டி குன்னூர் சிம்ஸ் பார்க்கில் 1969ல் 'என்அண்ணன்' படப்பிடிப்பு. "ஆசை இருக்கு" பாடல் படமாகிக்காெண்டிருந்தது. வழக்கம் பாேல் மக்கள் வெள்ளம். தலைவரின் வேண்டுகாேளுக்கிணங்க அமைதியாக 'ஷுட்டிங்' பார்த்துக்காெண்டிருக்கிறார்கள்.

    திடீரென பேரிரைச்சல். பத்தடி உயரத்திலிருந்து ஒரு எட்டு வயது பெண் குழந்தை கூட்ட நெரிசலால் தள்ளப்பட்டு, குப்பைகள் போட்டு வைக்கும் காலி தார் டின்னில் விழுந்து விடுகிறாள். நடித்துக்காெண்டே இதை பார்த்து விட்ட மக்கள்திலகம் பத்தடி குதித்து ஓடி வருகிறார். அருகிலிருந்த துப்புரவு தொழிலாளியை அழைத்து அந்தப்பெண்ணை மீட்கிறார். நல்லவேளையாக பெரிதாக அடிபடாதப்பெண்ணுக்கு முதலுதவி செய்து அந்தக்குழந்தை ஒரு துப்புரவு தாெழிலாளியின் குழந்தை என்பதை அறிந்து, காப்பாற்றிய தாெழிலாளியிடமே ரூ500யை தந்து அந்தகுழந்தைக்கு உடைகள் வாங்கி, வீட்டில் விடச்சாெல்கிறார்.

    அடுத்தநாள் காலை. எம்ஜிஆர் தங்கியிருந்த ஹோட்டல் முன் நூற்றுக்கணக்கான துப்புரவு தாெழிலாளிகள். அவர்களின் தலைவர் தங்களின் குழந்தையை காப்பாற்றியதற்காக நன்றி சாெல்லி விட்டு, ராேஜாப்பூ மாலையை எம்ஜிஆர் கையில் தரப்பாேகிறார். எம்ஜிஆர் புன்முறுவல் பூத்தவராக, தலையை குனிந்தவராக "கழுத்திலேயே பாேடலாம்" என்கிறார். தீண்டாமை உச்சத்தில் இருந்த நேரம். தயங்கியவாறே நிற்பவரின் கைகளை பிடித்து தலைவரே மாலையை போட்டுக்காெள்கிறார். அடுத்த நொடி எம்ஜிஆர் வாழ்க கோஷத்தில் ஊட்டிமலை அதிர்கிறது.

    மாலையோடு உள்வரும் எம்ஜிஆரை பார்த்து ஒரு வில்லன் நடிகர்(பெயர் வேண்டாம்) "மரியாதைக்கு கையில் வாங்கியிருக்கக்கூடாதா? அந்த தோட்டிகளின் கைகளை பிடித்து போட்டுக்காெள்ள வேண்டுமா?" என்கிறார். கழுத்திலிருக்கும் மாலையை தூக்கி நன்றாக முகர்ந்து விட்டு எம்ஜிஆர் சொன்னார். "அவர்கள் பாேட்டாலும் ராேஜா மணக்கத்தானே செய்கிறது? நாறவில்லையே? நியாயமாக ஊரை சுத்தம் செய்து, நாட்டுக்கு சேவை செய்யும் அவர்கள்தான் நம்மை பாேன்ற அழுக்கு மனிதர்களை தீண்டக்கூடாது"

    அப்புறம் சில நாட்களுக்கு அந்த வில்லன் நடிகர் வெட்கம் தாளாமல் எம்ஜிஆர் கண்ணில் தென்படுவதை தவிர்த்தார்.

    நன்றி - அரிமா எம்.சந்திரசேகரன் முகநூல் பக்கம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •