Page 139 of 400 FirstFirst ... 3989129137138139140141149189239 ... LastLast
Results 1,381 to 1,390 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1381
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Palaniappan Subbu




    பாசமலர் வெற்றி விழாவில்....






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1382
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sukumar Shan

    1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் பிரதமர் சி.ராஜகோபாலாச்சாரிக்குத் ‘தமிழன்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து நாளிடப்படாத கடிதம் ஒன்று வந்தது. கவனமாகத் தேர்வு செய்யப்பட்ட ‘தமிழன்” என்னும் புனை பெயரில், கடிதம் எழுதியவர் தன் நிஜ உலக அடையாளத்தை மறைத்துத் தமிழினத்தின் பிரதிநிதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
    அக்கடிதம் அக்டோபர் 17, 1952 தீபாவளி தினத்தன்று தி.மு.க கொள்கைகளின் உந்துதலில் உருவாகி வெளியாகியிருந்த ‘பராசக்தி” திரையிடப்பட்டிருந்த அசோக் திரையரங்கில் அரங்கேறிய காட்சிகளை விவரித்திருந்தது: ‘மனிதர்கள் மிருகங்களைப் போல் ஒரு குறுகிய வாசல்படியில் தங்களை நுழைத்துக்கொள்ளப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தனர். இவ்வளவும் போலீஸ் அடிதடியில்தான். பகீரதர் பூமிக்குக் கங்கையைக் கொண்டு வரக்கூட இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டார்” ‘திரைப் படங்களுக்குச் செல்லும் அடித்தட்டு மக்கள் குறித்த வெறுப்பு இக்கடிதத்தில் வெளிப்படையாக இருந்தாலும், பராசக்தி திரைப்படம் வெகு மக்களிடையே உருவாக்கியிருந்த ஈர்ப்புக்குத் ‘தமிழனின்” விவரணை சாட்சியமானது. அந்த நாள்களில் ஆசியக்கண்டத்திலேயே மிகப்பெரிய திரையரங்கம் என்று பெருமை பெற்ற மதுரைத் தங்கம் உள்ளிட்ட திரையரங்குகளில் நூறு நாள்களுக்கு மேலாக அரங்கு நிறைந்த காட்சிகளாக இத்திரைப்படம்ஓடியது.இழையோடும்அரசியல் அங்கதமும், உணர்ச்சிப்பெருக்கும் கொண்ட அத்திரைப்படத்தின் வசனங்கள், அடித்தள மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. சென்னையின் மூர்மார்க்கெட் பகுதியில் தெருவோரக் கலைஞர்கள் அத்திரைப்படத்தின் வசனத்தை மீண்டும் மீண்டும் ஒப்புவித்தனர். பதிலுக்கு வழிப்போக்கர்கள் அவர்களுக்குப் பணம் கொடுத்தனர். மேடைப்பேச்சுக்கான புதுமையான வசனங்களைப் பராசக்தி வழங்கியது. அரசியல் முனைவோர் அவற்றை மனனம் செய்து தங்களை எதிர்காலத்துக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டனர்.--தமிழன் தனது கடிதத்தில் பார்வை யாளர் களிடம் கரகோஷத்தை எழுப்பிய காட்சிகளைப் கவனமாகப் பட்டியலிடுகிறார்.
    பராசக்தியில் அரசைக் கிண்டலடித்த காட்கிகளும், வசனங்களும் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தன. தமிழனின் கடிதத்தின் சில பகுதிகளை நாம் இப்போது பார்ப்போம்.
    ‘பணத்தைப் பறிகொடுத்த இளைஞன் தாய்நாடான தமிழ்நாட்டையே நிந்திக்கின்றான்.
    ‘கொச்சி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கொச்சி மாகாணத்தின் முன்னாள் அமைச்சர், கோயம்புத்தூர் இந்தியக் கத்தோலிக்கர் சங்கத்தின் தலைவர், சென்னை மற்றும் கொச்சி மாகாண உயர்நீதிமன்றங்களின் வழக்கறிஞர்” எனத் தன்னை அறிமுகம் செய்துகொண்ட பரம்பிலோனப்பன், பராசக்தி திரைப்படம் வெளியானதும், சென்னை மாகாண முதல்வர் ராஜகோபாலாச்சாரிக்கு ‘முற்றிலும் ரகசியம்” என்ற குறிப்பிட்ட கடிதமொன்றை அனுப்பினார்:
    தமிழர்கள் எல்லோரும் திருடுர்களாம்.” இதற்கு அரங்கில் கரவொலி கரகோஷம்.
    ‘தெருவில் ஒரு குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், கார்ப்பரேஷன் ஒரு தூங்குமூஞ்சி மடம். மேயர் ஒரு உதவாக்கரை. கலெக்டர் ஒரு மடையன்”என்று காண்பிக்கிறார்கள். இதற்கு ஒரு கரவொலி.
    ‘இன்னுமோரிடத்தில் சென்னை மாகாணத்தில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்களுடைள குழந்தைகளை வளர்க்கமுடியாமல் தாங்களாகவே எடைக்குத் தகுந்தாற்கோல் விற்றவிடுகிறார்கள் என்று காட்டுகிறார்கள்.” இதற்குக் கரகோஷம்.
    ‘அப்பெண் மேலும் சொல்லுகிறாள் ‘நான் விபச்சாரியாக மாறியிருந்தால், மந்திரிகளும் போலீஸ் அதிகாரிகளும் இப்போது என் மடிமீது இருப்பார்கள். ஆனால் நான் அதற்கு விரும்ப வில்லை. தியேட்டரே அதிரும்படி கரவொலி.”
    ‘இந்த எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து'' அண்ணா ''அவர்கள் சிருஷ்டிக்கப்போகிறார் என்ற சொன்னதும் கரவொலி கொட்டகையே பிளந்துவிடும் போலிருந்தது.”
    பார்வையாளர்களை ஆர்வம்கொள்ளவைத்தப் பராசக்தியின் பிற காட்சிகளும் வசனங்களும், மதவிமர்சனம் தொடர்பானவை. தமிழன் எழுதுகிறார். ‘ஒரு குழந்தையுடன் அனாதையாகக் கதறியழும் ஒரு பெண். இரவில் கோயிலுக்குப் போகிறாள். அம்மன் சந்நிதியிலேயே அந்தக் கிழபூசாரி விபசாரம் செய்யத் துணிகின்றான். இதற்கு ஒரே கரகோஷம்.” பார்வையாளர்களின் இந்த நடவடிக்கை தமிழனை வருத்தமுறச் செய்கின்றது. மேலும் அவர் எழுதுகின்றார்.
    அந்தப்பெண் கதறியழும்போது, ஒரு பையன் முதலில் கும்பகர்ணன் போல் காட்டப்பட்டவன், திடீரென விழித்து மணி அடித்து அவளை விடுவிக்கிறான். அப்போது யாரும் கைத் தட்டவில்லை. ஆனால், அந்தப்பெண்ணின் அண்ணன் பிறகு வந்து, ‘இந்தத் தேவி வெறும் கல் ; ஒன்னுக்கும் உதவாத கல் ; தெய்வம் ஒன்று உண்டென்றால் ஏன் அப்போது வந்து அந்தக் கிழ பூசாரியைக் கொல்லவில்லை ; ஆகையால், தெய்வம் இல்லை ; அது ஒரு மூடக்கொள்கை ; எல்லாக் கோவில்களும் தேவடியா மடங்கள் என்று கத்துகின்றான். இதற்குக் கரவொலி ஒருவருக்காவது அந்தப் பையன் மணியடித்துக் காப்பாற்றியது தெய்வச்செயல் என்று படவில்லை.
    இவ்வாறாக, பராசக்தி தி.மு.க.வின் அரசியல் கொள்கைகளைப் பரப்புவதில் வெற்றி கண்டது. மேலும் அதன் காங்கிரஸ் எதிர்ப்பு மற்றும் மத எதிர்ப்பு நிலைப்பாடுகளும் பார்வையாளர்களால் உற்சாகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
    விமர்சனங்கள்
    பராசக்தி திரைப்படம் வெளிவந்தவுடன், கடும் எதிர்ப்பையும், தடை செய்யப்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்கொண்டது. அத்திரைப்படத்திற்கு எதிரான கண்டனக் கடிதங்கள், சென்னைக் காங்கிரஸ் அரசாங் கத்திடம் குவிந்தன.
    பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பத்திரிகைகள், பராசக்தியைக் கடுமையாக விமர்சித்தன. பராசக்தி படத்தைத் திரையிட அனுமதித்த திரைப்பட தணிக்கைக் குழுவம், தாக்குதலுக்கு இலக்கானது. நன்றி - ஆச்சாரியார் அரசுக்கு குவிந்த புகார் மனுக்கள் கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல்! எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (தமிழில் வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1383
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sekar Parasuram

    ஞாயிறு தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற
    நடிகர் திலகத்தின் திரைப்படங்கள்

    SUNDAY. TREAT,


    இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாக இருக்கும் நடிகர் திலகம் super hit movies,
    பிற்பகல் 1:30 - வானவில் சேனல்-- "பந்தம்"
    பிற்பகல் 2:00க்கு -- வசந்த் டிவி-- "இமையம்"...
    மாலை 4 மனிக்கு-- மெகா டிவி-- "அந்தமான் காதலி "
    மாலை 5 மணிக்கு-- ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்-- * சந்திப்பு*
    இரவு 10:30 க்கு -- ராஜ் டிவி-- " கருடா சௌக்கியமா"
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1384
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ‎sivaji palanikumar


    இந்தமூதாட்டி யாராவது
    தலைவனைசிவாஜி
    என்றுபெயர்சொன்னால்.அவர்உனக்கென்ன
    தம்பியா?எனதிட்டி
    தீர்த்துவிடும்....
    அப்படிமுன்னோர்
    முதல்மூதாட்டிவரை
    இவரைகடவுளாகத்தான்.பார்த்தார்கள்.
    அவர்களிடம்ஆசி
    வாங்கும்நடிகர்திலகம்.








    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1385
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sekar Parasuram




    1977-78 ஆம் ஆண்டுகளில் பிரபல பொம்மை மாத இதழில் அதன் வாசகர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தார் நம் நடிகர் திலகம்,
    அதிலிருந்து ஒரு கேள்வி மட்டும்,
    எஸ்.சீனிவாச கோபாலன், BA..குடந்தை
    * அரசியலை ஒரு கருவியாக வைத்துக் கொண்டும், சினிமா உலக செல்வாக்கை சேர்த்துக் கொண்டும், " பிழைக்கத் தெரியவில்லை " என்று உங்களைச் சிலர் குறை கூறுகிறார்கள். அதற்கு பதில் என்ன சொல்லப் போகிறீர்கள்?*


    ... நடிகர்திலகம் பதில்:


    " என் திறமையையும் புகழையும் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்த எனக்குத் தேவையுமில்லை, அதற்கு அவசியமும் இல்லை "









    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Likes Harrietlgy liked this post
  8. #1386
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர் திலகம் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    248 வது வெற்றிச்சித்திரம்


    வம்சவிளக்கு வெளியான நாள் இன்று

    வம்சவிளக்கு 23 அக்டோபர் 1957

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1387
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Manikandan Masanaduri






    தமிழ்த்திரையுலகின் மாபெரும் சகாப்தம், கலைஞரின் கைவண்னத்தில், நடிகா் திலகத்தின் மாபெரும் .,
    வெற்றிக்காவியம் "பராசக்தி" திரைப்படத்தின் உருவாக்கம் குறித்து, கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூாியில், விசுவல் கம்யூனிக்கேஷன் பயிலும் மாணவா்களுக்கு விளக்கும் விதமாக, கோவை திரைப்பட இயக்கம் சாா்பில், இன்று மாலை 5.30 மணிக்கு கல்லூாி அரங்கில் திரையிடப்படுகிறது.
    அனைவருக்கும் அனுமதி இலவசம்.

    திரையில் இப்படத...்தை கானாதோருக்கு அறிய வாய்ப்பு....



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1388
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    [COLOR=rgba(181, 25, 224, 1)]

    இன்று மதியம் 1.30 மணிக்கு கலைஞர் டிவியில் பராசக்தி





    [/COLOR]
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1389
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Abdul Razack




    நீயா? நானா? பாகம் 4..................... உணவு இடைவேளையில் அனைவரும் படபிடிப்பு அரங்கை விட்டு வெளியே வந்தோம் எங்களது முகங்களில் இனம் புரியாத மகிழ்ச்சியும் சோகமும் காரணம் நன்றாக செய்தோமா இல்லை சொதப்பி விட்டோமா என்று இதே குழப்பங்கள் எதிர் அணியிலும் இருந்தது எங்களுக்குள்ளே அப்போதுதான் தெளிவாக கருத்துக்கள் பரிமாறிக்கொண்டோம் அது வரையிலும் எங்களைவிட எதிர்அணியினர் சிறப்பாகசெய்ததது என்ன என்றால் மைக்கை அனைவரும் கேட்காமல் அந்த குறிப்பிட்ட நபர்கள் மட்டும் வாங்கி பேசினார்கள் அதேபோல்தான் நாமும் செய்யவேண்டும் யாரும் யாரிடமும் மைக்கை தாருங்கள் என்று போட்டிபோடக்கூடாது அதேப்போல் தன் கருத்தை சொன்னவர்கள் அதிக நேரம் மைக்கை வைத்துக்கொள்ளாமல் அடுத்தவரிடம் உடனே கொடுத்து விட வேண்டும் என்று பேசிமுடிவெடுத்துக்கொண்டோம் எங்கள் அனைவருக்கும் மதிய உணவு அங்கே கொடுத்தார்கள் அங்கு சமைக்கவில்லை வேறு இடத்தில் சமைத்து பாத்திரங்களில் வேனில் வைத்து கொண்டு வந்து பரிமாறினார்கள் காலையில் டிபனும் அது போல்தான் சாப்பாட்டுவேலையை முடித்து விட்டு மீண்டும் உள்ளே சென்று அவரவர் இருக்கையில் அமர்ந்தோம் எதிர் முகாமில் பார்த்தால் சுமார் 7 பேர் புதுமுகங்களாக அதாவது இடைவேளை விடுவதற்கு முன்பு இருந்த ஆட்கள் மாறி வேறுநபர்கள் அமர்ந்து இருந்தனர் எங்கள் அணியில் ஒரு இருக்கை காலியாக இருந்தது இதன் காரணங்கள் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கே வெளிச்சம் எங்கள் அணியில் அமர்ந்து இருந்தவர்களில் இன்று பரபரப்பாக அரசியல் களத்தில் ஒரு சொல் அடிக்கடி இடம் பெறுகிறது ஸ்லீப்பர்செல் என்று அதுபோல் ஒன்று எங்கள் பக்கமும் இருந்தது அடுத்த சில வினாடிகளில் கோபிநாத் அரங்கு நடுவில் வந்து உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய பாடல் அதாவது நான் இப்படி இருந்தேன் இந்த பாடலை கேட்டதால் இப்படி ஆனேன் நடிகர் விவேக் பாணியில் சொன்னால் "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்,, அது மாதிரியான பாடல்கள் வேண்டும் காரணம் சுருக்கமாக சொல்லி முடிந்தஅளவு பாடலை நீங்களே பாடுங்கள் என்று சொன்னார் எதிர் அணியில் ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்லி பாடலைபாடினார்கள் விளக்கம் கொடுக்க அதிக நேரம் எடுத்ததால் போதும் பாடலுக்கு வாங்க பாடலை பாடுங்கள் என்று அதிக தடவை சொல்லியும் அவர்கள் விடுவதாக இல்லை ஒருவர் சொன்னார் இதை சொல்லத்தான் நான் வந்தேன் எவ்வளவு நேரம் ஆனாலும் அனுமதிக்கனும் இல்லையென்றால் நான் வெளியே போய்விடுகிறேன் என்று சொன்னவுடன் கோபிநாத் எங்கள் பக்கம் ஒரு பார்வை பார்த்தார்நாங்கள் கோபமாக அவரை பார்த்தோம் அதன் பிறகு மனிதர் எங்களை திரும்பி பார்க்கவே இல்லை அந்த நண்பர் தன் கதையை சொன்னார் சிறுவயதில் நான் கஷ்டபட்டேன் இனி திருடித்தான் வாழனும் என்று முடிவு எடுத்தேன் அதற்கு பயிற்சியாக ஹோட்டலில் சாப்பிட்டு காசு கொடுக்காமல் வரனும் என்று நினைத்து சேரில் போய் உட்கார்ந்தேன் மதிய சாப்பாடு கொண்டு வைத்தார்கள் நான் சோறை தின்றுக்கொண்டே யோசிக்கிறேன் எனக்கு உடம்பெல்லாம் வேறுத்துவிட்டது பக்கத்தில் இருந்தவர்கள் என்னை பார்த்து என்ன என்று கேட்டார்கள் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு எப்படி நாம் வெளியே போவது என்று யோசித்தேன் என்று அவர் சொல்லும் போது (என் மனதில் தோன்றிய எண்ணம் உங்களைப்போன்றே உருவ ஒற்றுமை உள்ளவரை உள்ளே வரவழைத்து நீங்கள் வெளியே போய் இருக்கலாமே என்று நினைத்தேன் இந்த இடத்தில் எந்த படமாவது உங்கள் மனதில் தோன்றினால் நான் காரணம் இல்லை) அவர் மேலும் சொன்னது அந்த நேரத்தில் கரண்ட் போய்விட்டது நான் பயந்துகொண்டே சாப்பிட்டேன் போன கரண்ட் திரும்பி வந்தவுடன் வாத்தியார் பாடினார் அந்த பாட்டு என் காதில் விழுந்தது என்ன பாட்டு திருடாதே பாப்பா திருடாதே என்ற பாடல் உடனே காசை கொடுத்து நேர் வழிக்கு திரும்பி விட்டேன் என்றார் இந்த இடத்தில் நான் நினைத்தது நாமும் தான் மதிய சாப்பாடு சாப்பிட ஹோட்டலுக்கு போனால் முன்னாடி பணம் கொடுத்து டோக்கன் வாங்கிய பிறகுதானே அந்த டோக்கனை சர்வர் வாங்கி கொண்டு சாப்பாடு தருவார்கள் அவர்க்கு மட்டும் எப்படி என்று சிறிது யோசித்தேன் அங்கு வேறு சில பாடலும் பாடியபின்பு நம் பக்கமும் நல்லபாடல்கள் நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கும்,.,,,எங்களுக்கும் காலம் வரும் ,,..ஒளிமையமான எதிர் காலம் என்று சிறந்த பாடல்கள் வந்து அந்த சுற்று முடிந்தது அதன் பிறகு எம் ஜி ஆர் சிவாஜி படத்தின் சிறப்பை ஒரு வரியில் சொல்லுங்கள் என்றார் எதிர் அணியில் ஜாலியாக இருக்கும் சோகம் இருக்காது என்றார்கள் நம் பக்கம் திரும்பினார் இது முக்கியமான இடம் இந்த நிகழ்ச்சியின் பெயர் நீயா? நானா? அதாவது ஒருவனுக்கு ஒருவன் எங்கள் பக்கம் ஒண்டிக்கு ஒண்டி ஒத்தைக்கு ஒத்தை என்பார்கள் அந்த ஒத்தைக்கு ஒத்தை லுத்திபுல்லா கானா? கோபிநாத்தா? நம் கான் அவர்கள் சொன்ன சிறப்பு என்ன அதற்கு கோபிநாத் சொன்ன பதில் என்ன அடுத்து நடந்த நிகழ்வுகள் என்ன ....தொடரும்.,,,, நாளை இந்தபதிவு முடிந்து விடும்,,,,





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #1390
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Murali Srinivas





    எங்க ஊர் ராஜா

    21.10.1968 அன்று வெளியாகி இன்றைக்கு 49 வருடங்களை கடந்து பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்க ஊர் ராஜா பற்றி சில நினைவுகள்.


    சிவலிங்கபுரம் கிராமத்தில் வாழும் விஜயரகுநாத சேதுபதி என்ற மிகப் பெரிய ஜமீன்தாருக்கு ஏற்படும் சோதனைகளும் அவற்றிலிருந்து அவர் மீண்டு வெற்றி பெறுவதும்தான் படத்தின் கதை.
    தமிழ் திரையுலக இயக்குனர்கள் வரிசையில் பி.மாதவனுக்கு ஒரு தனியிடம் உண்டு. இயக்குனர் T.R. ராம்நாத் அவர்களிடமும் பின்பு ஸ்ரீதரிடமும் உதவியாளாராக இருந்து மணி ஓசை மூலம் இயக்குனரானவர் மாதவன். அந்த படம் சரியாக போகவில்லை என்ற நிலையில் சற்று சோர்ந்து போயிருந்த போது அவரை அழைத்து அன்னை இல்லம் படத்தை டைரக்ட் செய்ய சொன்னார் நடிகர் திலகம். அந்த படம் 100 நாட்கள் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்த படத்திற்காக மாற்று முகாமிற்கு மாதவன் சென்றாலும் அங்கே உறவு நீடிக்கவில்லை. மீண்டும் நீலவானம் மூலமாக நடிகர் திலகம் காம்பிற்கே திரும்பி வந்தார். அதன் பிறகு ஜெய்சங்கரை வைத்து சில படங்கள் இயக்கினார்.


    அந்த நேரத்தில் சொந்தமாக படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பி அவர் ஆரம்பித்த நிறுவனம்தான் அருண் பிரசாத் மூவீஸ். இந்த பானரில் முதலில் ஜெய்சங்கரை வைத்து முகூர்த்த நாள் என்ற படத்தை தயாரித்தார் மாதவன். அடுத்து நடிகர் திலகத்திடம் கால் ஷீட் வாங்கி தானே தயாரிப்பளார் இயக்குனர் வேலைகளை ஏற்றுக் கொண்டு அவர் செய்த படம்தான் எங்க ஊர் ராஜா. மாதவனின் ஆஸ்தான கதை வசனகர்த்தா பாலமுருகன். நடிகர் திலகம் பி மாதவன் பாலமுருகன் கூட்டணி பல வெற்றிப்படங்களை தந்துள்ளது, அந்த கூட்டணியின் முதல் படம் எங்க ஊர் ராஜா.


    நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை சேதுபதி, பூபதி என்ற இரண்டு வேடங்கள் என்றபோதிலும் சேதுபதிதான் எல்லோர் மனங்களிலும் இடம் பிடிப்பவர். இதில் சேதுபதி ரோலில் இரண்டு கெட் அப். முதலில் நடுத்தர வயதை தொட்டுக் கொண்டிருக்கும் இளமை பின் வயது வந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தை என்ற முதுமை.[படம் வெளி வருவதற்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் மூன்று கெட்-அப்களில் நடிகர் திலகத்தை சித்தரிக்கப்பட்டிருந்தார். எனவே படத்தில் நடிகர் திலகம் மூன்று வேடங்களை ஏற்கிறாரோ என்று வரை ஒரு சந்தேகம் ரசிகர்களிடையே இருந்தது].


    முதல் காட்சியில் பூஜையறையில் தெய்வத்தை வழிப்படும் சேதுபதி முதல் இறுதிக்காட்சியில் தன் லட்சியத்தில் வெற்றிக் கொண்டு ஆர்ப்பரிக்கும் சேதுபதி வரை நடிகர் திலகம் பிச்சு உதறியிருப்பார். முதலில் அவருக்கே உரித்தான அந்த மிடுக்கு, ஊர் மக்களிடம் காட்டும் அன்பு, கல்யாண நிச்சயத்தின்போது தன் நிலை தெரியாமல் ஊர்காரர்கள் வரதட்சனை வாக்குறுதிகளை அள்ளி வீச அதை தடுக்க முடியாமலும் அதே நேரத்தில் தன் ஜமீனின் அந்தஸ்து மற்றவர்கள் முன்னில் குறைந்து போய் விடக்கூடாது என்ற தவிப்பும் கல்யாணத்தன்று சொன்ன ரொக்க பணம் தரவில்லையென்று தன்னை அவமானப்படுத்தும் நம்பியாரிடம் தன் நிலைமையை சொல்லும் போது கூட ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை தாழ்த்திக் கொள்ளாமல் பேசும் அந்த தோரணை, ஊர் தெருக்களில் மதிப்போடு சாரட் வண்டியில் வந்த போது தன்னை கைகுவித்து வணங்கிய மக்கள் கல்யாணத்தன்று நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதே தெருவில் தன்னை பரிகாசம் செய்யும் போது மனதுக்குள் மருகும் அந்த பார்வை, அந்த கஷ்டத்தோடு அருமை மனைவி இறந்து போகும் போது காட்டும் அந்த முகபாவம் [அதிகப்படியாக செய்வார் சிவாஜி என்பது எப்படி காலம் காலமாக பரப்பப்பட்டு வந்த அவதூறு என்பது இந்த காட்சியை பார்பவர்களுக்கு புரியும்], தன் மனைவி இறந்ததை தங்கையிடம் சொல்ல போக அவள் உங்கள் வீட்டிற்கு வர மாட்டேன் என சொல்லிவிட அந்த பதிலால் தளர்ந்து போய் திரும்புவது, சென்னைக்கு வந்து அச்சகத்தில் வேலை செய்யும் போது அந்த உடல் மொழியை அப்படியே பவ்யமாக மாற்றுவது, சம்பள பணம் மொத்ததையும் புதிய உடை வாங்குவதற்கு செலவழித்து விட்டான் மகன் என்றதும் வரும் கோபம், அப்பாவின் திட்டை கேட்டு மகன் முகம் வாடி உள்ளே போக தனக்கு தானே பேசிக் கொள்ளும் அந்த உணர்வுகள் [சின்ன பையன், நீ அவனுக்கு டிரஸ் வாங்கி தரணும் ஆன நீ செய்யலை, சரி அவனே வாங்கிகிட்டான்.அதிலே என்ன தப்பு?], தன் பிள்ளைகள் தன் 60 வது பிறந்த நாளை கொண்டாட அதில் மீசையை முறுக்கியபடி அமர்ந்திருக்கும் கம்பீரம், கிழவன் என்று மகன் சொன்னதும் பீறிட்டு வரும் கோபம், பழைய வேலைக்காரன் தன் வெள்ளிப்பூண் கைதடியை கொண்டுவர அதை ஆசையோடு தடவிப் பார்க்கும் அந்த குழந்தைத்தனம், அச்சகத்தில் தன்னை தற்செயலாக பார்க்கும் நம்பியார் தன் சவாலை குறிப்பிட்டு கேலி செய்ய பதில் சொல்லாமல் காறி உமிழும் அந்த உக்கிரம், பணம் கைக்கு வரப்போகிறது என்றதும் வரும் அந்த பரபரப்பு, பணம் தருவதாக சொல்லி தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று தெரிந்தவுடன் வரும் அந்த இயலாமை கலந்த கோபம், மகன்கள் தன்னை விட்டுப் போகிறார்கள் என்றதும் வரும் விரக்தி, பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன் கொண்டு சேர்க்க அவர் காட்டும் அந்த வேகம், சேட்டை ஏமாற்றி விட்டோம் என்ற குற்ற உணர்வு மனதை உறுத்த, சேட்டிடம் தயக்கதோடு பேசும் அந்த முகம், தான் தவறு செய்யவில்லை என்றதும் வரும் அந்த வெற்றிக் களிப்பு, இப்படி காட்சிவாரியாக சொல்லிக் கொண்டே போகலாம்! அப்படி ஒரு பவர்புல் performance படம் முழுக்க பார்க்கலாம் நடிகர் திலகத்திடம்.


    படத்தின் முத்தாய்ப்பான காட்சி. மகன்கள் இருவரும் கோபித்துக் கொண்டு சென்று விட இரண்டு கை தட்டினா சத்தம்னு சொன்னேன். ஆனா இப்போ சொல்றேன் ஒரு கை தட்டினாலும் சத்தம் வரும் என்று சொல்லி விட்டு ஒரு கையால் மற்றொரு கையை தட்டுவது, தொடையை தட்டுவது, தோளை தட்டுவது என்று தன் மன உறுதியை வலிமையை வெளிக்காட்டும் அந்த காட்சி, எந்த சூழ்நிலையிலும் தன் லட்சியத்தை அடைய வேறு யார் தயவும் தேவையில்லை என்பதை பொங்கி வரும் வெள்ளமாக யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்று சீறி பாய்வாரே அது படத்திற்கே சிகரமான காட்சி.

    இப்படிப்பட்ட சேதுபதி பாத்திரத்திற்கு முன்பு பூபதி எடுபடுவது கடினமான காரியம்தான். ஆனால் அதுவும் நடிகர் திலகம் ஆயிற்றே! விட்டுக் கொடுத்து விடுவாரா என்ன? இளமை ததும்பும் அந்த பாத்திரத்தை நளினமாக கையாண்டிருப்பார். இந்த பாத்திரப் படைப்பு இந்த படம் வெளி வந்த ஒரு வருடத்திற்கு பின் வெளி வந்து சரித்திரம் படைத்த தெய்வ மகன் விஜய் பாத்திரத்திற்கு ஒரு ஒத்திகை என்றே சொல்லலாம். அதிலும் சிவாஜி-ஜெயலலிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் அந்த எண்ணத்தை வலுப்படுத்தும். இந்த பாத்திரத்தில் அவர் ஸ்கோர் செய்யும் நான்கு காட்சிகளை குறிப்பிட வேண்டும். ஜெஜெ வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது உங்க அப்பா இப்போ வரமாட்டாரே இப்போ வரமாட்டாரே என்று சொல்லிக் கொண்டே நெருங்கி சென்று விட்டு காப்பி கிடைக்குமா என்று வழிவது, கோட் சூட் உடைக்காக சம்பள பணத்தை செலவு செய்ததை தந்தை கண்டித்தவுடன் உடையை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று மன்னிப்பு கேட்பது, தந்தையின் 60-வது பிறந்த நாளன்று கிராமிய பாணியில் வேட்டி கட்டிக் கொண்டு கழுத்தில் புலி நக செயினை அணிந்துக் கொண்டு ஆடுவது [அந்தக் காட்சியில் அவ்வளவு handsome -ஆக இருப்பார்], தந்தை ஏமாந்து விட்டாரே என்ற கோபத்தில் கிழவன் என்ற வார்த்தையை சொல்லுவது, இவை அந்த பாத்திரத்திற்கு வலு சேர்க்கும். அதை தவிர ராணியின் சொத்து வரப் போகிறது என்று கனவு காணும் நாகேஷிடம் டி.கே.பட்டம்மாள் பாட்டு ஒண்ணு இருக்கு தெரியுமா என்று அவருக்கே உரித்தான subtle நகைச்சுவையை வெளிப்படுத்துவது, கிளைமாக்ஸ்-ல் நம்பியாரிடம் எங்க அப்பா கிட்டே உனக்கெல்லாம் எதுக்கு வல்லவெட்டி-னு கேட்டீங்களாமே என்று சீறுவது, இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.


    படத்தில் ஒரு சிவாஜி இருந்தாலே மற்றவர்கள் பாடு திண்டாட்டம். இங்கே இரண்டு சிவாஜி. அனைவருமே also ran வகைதான். இதில் சற்று வித்தியாசம் காட்டுபவர் நம்பியார் மட்டுமே. சாதாரணமாக வரும் கையை பிசையும் முகத்தை உருட்டும் மானரிசங்கள் இல்லாமல் செய்திருப்பார். சவால் காட்சியில் கூட இயல்பான தன்மை இருக்கும் ["இந்த வீராப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. வாக்கு மாற மாட்டான் இந்த சேதுபதி-னு சொன்னியேயா"].


    அந்தக் காலக் கட்டத்தில் ஜெயலலிதா நடித்த படங்களை பார்த்தோம் என்றால் பெரும்பாலான படங்களில் அவர் பணக்கார வீட்டு பெண்ணாக, திமிர் பிடித்தவராக ஆண்களை மட்டம் தட்டுபவராகவே சித்தரிக்கப்பட்டிருப்பார். ஆரம்பக் கட்டங்களில் இந்த படத்திலும் அப்படித்தான் என்ற போதிலும் சேதுபதியின் தங்கை மகள்தான் அவர் என்ற ட்விஸ்ட் வந்ததும் பாத்திர தன்மை மாறும். ஆனால் அதற்கு பின் படத்தில் அவருக்கு வாய்ப்பு குறைந்து விடும்.


    நாகேஷ் மனோரமா காமடி படத்திற்கு எந்த வகையிலும் உதவி செய்யாதது மட்டுமல்ல சில காட்சிகள் படத்திற்கு ஒரு சின்ன தொய்வை ஏற்படுத்தி விடும். ரகுபதி பவனத்தை மீட்க பணம் கேட்கும் நாகேஷிடம் தருகிறேன் என்பதை கை அசைவிலேயே மனோரமா ஒத்துக் கொள்ள பின்னர் அவர் ராணி அல்ல என்று சூழல் வந்தவுடன் நாகேஷ் புலம்பும் ஒரு காட்சி மட்டுமே சற்று ஆறுதல் [பணம் வேணும்னு கேட்டதற்கு எப்படி கையை அசைச்சே? பெரிய சிவாஜி கணேசன்-னு நினைப்பு]. சிறப்பு தோற்றமாக இருந்தாலும் சௌகார் படம் முழுக்க வருவது போல ஒரே பீலிங். காரணம் அவரின் போட்டோ அநேகமாக அனைத்துக் காட்சிகளிலும் பிரேமில் இடம் பெறுவதால் இருக்கலாம். இரவும் பகலும் வசந்தா சேதுபதியின் தங்கை கௌரி நாச்சியாராக மெயின் ரோலில் வருகிறார்.


    முதலில் சொன்னது போல் கதை வசனம் பாலமுருகன். கிராமத்து பின்னணியில் திரைக்கதை அமைப்பதில்தான் தன் பலம் அடங்கியிருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருந்த பாலமுருகன் அந்த பார்முலாவை இங்கே நன்றாக பயன்படுத்தியிருப்பார். அது போல உணர்ச்சிமிக்க கதை சந்தர்ப்பங்களை உருவாக்கி அதை கிளைமாக்ஸ்-ல் உணர்ச்சி குவியலாக முடிப்பதன் மூலமாக மக்களை கவர முடியும் என்பதனை நடிகர் திலகத்தை வைத்து இதற்கு முன்னால் எடுத்த அன்னை இல்லம், நீலவானம் படங்களின் மூலமாக தெரிந்துக் கொண்ட மாதவன் இந்தப்படத்திலும் அதையே கையாண்டிருந்தார். படத்தை நடிகர் திலகம் single handed ஆக முன்னெடுத்து செல்ல மாதவனின் வேலை எளிதானது.

    கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணியில் பாடல்கள் எல்லாம் பிரபலம்.

    1. அத்தைக்கு மீசை வச்சு - எல்.ஆர்.ஈஸ்வரி.

    ஜெயலலிதா தன் தோழியருடன் சேர்ந்து பாடும் பாடல். இந்தப் பாடலின் முடிவில்தான் நடிகர் திலகத்துடன் ஜெஜெ மோதுவது ஆரம்பிக்கும்.

    2. என்னடி பாப்பா சௌக்கியமா - டி.எம்.எஸ்.

    தன்னை அவமானப்படுத்திய ஜெஜெவிற்கு ஒரு பாடம் கற்று கொடுப்பதற்காக அவரை ஆசை வார்த்தை பேசி அழைத்து நீச்சல் குளத்தில் நீந்த வைத்து அவர் அணிந்து வந்த உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு தரமாட்டேன் என பாடும் பாடல். தற்போதைய அரசியல் சூழலை எல்லாம் விட்டு விடுங்கள். அப்போதே [1968-ல்] இந்தப் பாடலில் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் வரும் நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை வென்றவர் யாரடியோ என்ற வரிக்கு தியேட்டரில் கைதட்டல் விசில் பறக்கும்.

    3. பரமேஸ்வரி ராஜேஸ்வரி, ஜகதீஸ்வரி -- டி.எம்.எஸ் சுசிலா.

    எம்.எஸ்.வி சில நேரங்களில் ஒரே பாடலில் slow beats மற்றும் fast tune களை பயன்படுத்தி இசையமைத்திருப்பார். அந்த வகையை சேர்ந்தது இந்தப் பாடல். (மய்யம் இணையத்தளத்தில் பங்கு பெற்றிருந்த சகோதரி) சாரதா அடிக்கடி குறிப்பிடுவது போல ஒரு படத்தில் extraordinaryயாக ஒரு பாடல் அமைந்து விட்டால் அதே படத்தில் வேறு சில நல்ல பாடல்கள் கூட பெற வேண்டிய புகழை பெறாமல் போய் விடும். பரமேஸ்வரி பாடலை அந்த வகையிலும் சேர்க்கலாம். ஈஸ்வரியின் ரேஞ்சு பாடலை சுசிலா அனாயசமாக பாடியிருப்பார். பூபதி என்ற பாத்திரத்தின் குழந்தைத்தனமான காதல் தவிப்பை நடிகர் திலகம் அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். அதிலும் பீச்சிலே போய் பீச்சிலே போய் என்ற வரி பாடும் போது அது தூக்கலாய் தெரிய பதிலுக்கு சுசிலா பாச்சிலர் பாய் பாச்சிலர் பாய் என்று பதிலுக்கு பாடும் போது ரசிக்க முடியும்.

    4. ஏழுகடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை - டி.எம்.எஸ் - சுசிலா

    சேதுபதியின் 60-வது பிறந்த நாளன்று பாடும் பாடல். ஏற்கனவே சொன்னது போல நடிகர் திலகம் இளமையாக சிக்கென்று இருப்பார். இதிலும் சுசிலா பின்னியிருப்பார். அதிலும் ரெண்டு வெள்ளி கொலுசுகள் துள்ளி குதிக்குது பொறந்த நாளையிலே என்ற வரியில் பொறந்த நாளையிலே என்பதை ஒரு folk பாணியில் அவர் உச்சரிக்கும் இடம் பிரமாதமாக இருக்கும். பாடல் முடிவில் விழா நாயகன் சேதுபதியே எழுந்து ஆட ரசிகர்களின் உற்சாகத்திற்கு கேட்க வேண்டுமா!

    5. யாரை நம்பி நான் பொறந்தேன் - டி.எம்.எஸ்.

    படத்தின் உயிர் நாடியான பாடல். கவியரசர்- மெல்லிசை மன்னர் - டி.எம்.எஸ். நடிகர் திலகம் கூட்டணியில் வெளி வந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களில் ஒரு தனியிடம் இந்த பாடலுக்கும் உண்டு. நடிகர் திலகத்தின் பங்களிப்பு பற்றி ஏற்கனவே பார்த்தோம். கண்ணதாசன் அற்புதமாக எழுதியிருப்பார். அதிலும் தேவையான நேரங்களில் உறவுகள் உதவி செய்யாமல் கைவிடுவது பற்றிய சூழல் என்றால் கவியரசரின் பேனா மடை திறந்த வெள்ளம் போல் சீறி பாயும். குறிப்பாக

    தென்னையை பெத்தா இளநீரு
    பிள்ளையைப் பெத்தா கண்ணீரு
    பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா
    சோதனையை பங்கு வெச்சா சொந்தமில்லே பந்தமில்லே

    போன்ற வரிகள் சாகவரம் பெற்றவை. இந்தப்படம் இந்தியில் தில் கா ராஜா என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போது மாதவனே இந்தியிலும் இயக்கினார். பாடல் எழுத வந்த ஆனந்த் பக் ஷி தென்னையை பெத்தா இளநீரு வரிகளுக்கு எவ்வளவு முயன்றும் தமிழில் வந்த அந்த உணர்வை கொண்டு வர முடியவில்லை என்பது வரலாறு.

    எளிமையான ஆனால் வலிமையான வரிகளுக்கு அதே போல் மெல்லிசை மன்னர் எளிமையாய் போட்டிருந்த ட்யுன் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தது. இந்த பாடலின் உள்ளார்ந்த அனைத்து உணர்வுகளையும் தன் வெண்கல குரலின் பாவத்தில் வெளிக் கொணர்ந்து டி.எம்.எஸ். மெருகேற்ற வழக்கம் போல் தன் நடிப்பால் அனைத்து கைதட்டல்களையும் நடிகர் திலகம் அள்ளிக் கொண்டு போனார்.
    படம் 1968 அக்டோபர் மாதம் 21-ந் தேதி தீபாவளியன்று வெளியானது. அந்த நேரத்தில் நடிகர் திலகத்தின் படங்களே எப்படி போட்டியாக வந்தது என்பதைப் பற்றி லட்சுமி கல்யாணம் விமர்சனத்தில் சொல்லியிருந்தோம். அதன் சுருக்கம் மீண்டும்.1968-ம் ஆண்டு ஜூலை 27 அன்று வெளியான தில்லானா மிக வெற்றிகரமாக 86 நாட்களை கடக்கும் போது தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியானது. எங்க ஊர் ராஜா வெளிவந்து 25 நாட்களே ஆகியிருந்த நிலையில் நவம்பர் 15 அன்று லட்சுமி கல்யாணம் வெளியானது. அதற்கு அடுத்த 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியானது. ஆக ஒரே நேரத்தில் நான்கு சிவாஜி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

    மதுரையில் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, ஸ்ரீதேவியில் லட்சுமி கல்யாணம் சென்ட்ரலில் உயர்ந்த மனிதன். அந்த போட்டியிலும் வெற்றிகரமாக ஓடியது எங்க ஊர் ராஜா. சென்னையில் 85 நாட்கள், மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் 72 நாட்கள் ஓடிய இப்படம் 1969 ஜனவரி 1 அன்று வெளியான நடிகர் திலகத்தின் அன்பளிப்பு படத்திற்காக பல ஊர்களிலும் மாறிக் கொடுக்க வேண்டுய சூழ்நிலை. கோவையில் 9 வாரங்களையும் கடந்தது. சென்னையிலும் மதுரையிலும் ஷிப்டிங்கில் 100 நாட்களை கடந்தது இந்தப் படம்.

    Tail Piece: 1996-ம் வருடம் மத்தி. இந்தியன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரம், கமலை நேரில் சந்தித்த ஒரு சின்னத்திரை பெரிய திரை நடிகர் அதைப் பற்றி பாராட்ட, படத்தைப் பற்றி பேசிய கமல், படம் நாம் பிறந்த மண் படத்தின் inspiration -ஆக இருந்தாலும் இந்தியன் தாத்தா பாத்திரம் பற்றி குறிப்பிடுகையில் அதன் inspiration எங்க ஊர் ராஜா விஜய ரகுநாத சேதுபதி என்றாராம்.
    படத்தில் சேதுபதி தன் குழந்தைகளை சைக்கிளில் வைத்து ஒட்டி செல்லும் போது வேறொரு சைக்கிள் அவரை முந்த முயற்சிக்க தனி ஆளாக செல்லும் அந்த நபரை குழந்தைகளோடு செல்லும் சேதுபதி முந்தி சென்று வெற்றி கொள்வதாக ஒரு காட்சி வரும். இந்த படம் வெளியான போது சேதுபதி என்ற சைக்கிளை முந்தி செல்ல சிலர் வாகனத்தில் வந்தனர். ஆனால் மக்கள் ஆதரவு என்னும் எரிபொருள் கிடைக்காததால் வாகனம் நின்று போக, மக்கள் ஆதரவு எனும் காற்று அனுகூலமாய் வீச சேதுபதியின் சைக்கிள், வெற்றி எனும் destination -ஐ அடைந்தது.
    தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை நடிப்புக் கலையாகட்டும், வசூல் சாதனையாகட்டும் என்றென்றும் நடிகர் திலகம்தானே எங்க ஊர் ராஜா

    அன்புடன்


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •