Page 27 of 400 FirstFirst ... 1725262728293777127 ... LastLast
Results 261 to 270 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #261
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sundar Rajan
    அன்பு இதயங்களே,
    ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் தேசியவிருது வாங்க வந்திருந்தார், அவ்விழாவில் விஐபிகளை மேடைக்கு அழைத்து செல்லும் பணி என்னை போன்ற சிலருக்கு... வழங்கப்பட்டது.
    அப்போது நடிகர்திலகம் சிவாஜி அவர்களை மேடைக்கு அழைத்து செல்லும் பணி எனக்கு வழங்கப்பட்டது. விருது வாங்கி விட்டு மேடையில் இருந்து இறங்கும் போது, நான் அவர் கையைப் பிடித்து இறக்கி விட்டேன். அதற்கான பலன் தான் இப்போது நான் நடிகனாகி பேரும் புகழும் பெற்றிருக்கிறேன்.

    விஜய் அவார்ட்ஸ் விழாவில் சிவாஜி விருது பெற்றுக் கொண்டு ஷாருக்கான் அவர்கள் பேசியது தான் மேலே உள்ள செய்தி.
    இப்போது இந்த புகைப்படத்தைப் பற்றி...


    கையைப் பிடித்தவரே நடிப்பில் சக்கை போடு போடும் போது, நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் தீவிர ரசிகர் சிவக்குமார் அவர்கள் புதல்வர்கள் சூரியா, கார்த்தி அவர்கள் நமது நடிகர்திலகத்தின் மடியில் விளையாடியவர்கள், பிறகு அவர்களுக்கு எப்படி நடிப்பு வராமல் போகும். இப்போது தெரிகிறதா, சூர்யா, கார்த்தி நடிப்பின் ரகசியம்.
    மேலே உள்ள புகைப்படம்
    இளையதிலகம் பிரபு, சிவக்குமார் அவர்கள் இணைந்து நடித்த உறுதிமொழி படபிடிப்பின் போது எடுக்கப்பட்டது. சிவக்குமார் அவர்கள், மனைவி மற்றும் தனது புதல்வர்கள் சூர்யா, கார்த்தி (குண்டாக இருப்பவர்) மற்றும் உறவினர்கள் நமது மக்கள்தலைவர் சிவாஜி-கமலா அம்மாள், இளையதிலகம் பிரபு அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
    உறுதிமொழி
    படபிடிப்புக்கு நான் சென்றிருந்த போது, இளையதிலகம் அவர்கள் நேற்று வந்திருந்தால் அப்பாவை பார்த்திருக்கலாமே என்று கூறியது இந்தப் புகைப்படத்தை பார்த்த போது நினைவுக்கு வந்தது.


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #262
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Nagarajan Velliangiri

    · 18 hrs

    ( மன்னிக்கவும்.இது முழுக்க முழுக்க ஒரு அக் மார்க் காதல் சமாச்சாரம்.கோபித்துக் கொள்ளாமல் பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.

    காதல் பிடிக்காதவர்கள் தவிர்த்து விடுங்கள்) அவர்கள் இருவரும் இளம் காதலர்கள். ஒருவர் மனம் முழுவதும் மற்றவர்தான். மனதை முழுக்கப் பறிகொடுத்து விட்டதால், இருவர் மனதிலும் தாம் காதலர் என்ற எண்ணம் இல்லை. தான் என்ற சுய நினைவும் இல்லை. போன ஜன்ம பந்தத்தின் தொடர்ச்சியோ, அதுவும் தெரியவில்லை. இருவரும் இனியதொரு மாலைப் பொழுதில் தனிமையில் சந்திக்கின்றனர். அவள் அழகில் அவன் மயங்க, அவன் அன்பில் அவள் ஊறித் ததும்ப அங்கே சொர்க்கலோகமே வானிலிருந்து இறங்கி வந்து விடுகிறது.

    இருவரும் தம்மை மறந்து ஆடிப் பாடுகின்றனர். பெண்ணென்றால் எப்படி இருப்பாள்.? பொதுவாகக் கவிஞர்கள் கூறும் பெண் எப்படி இருப்பாள் ?முக அழகு, உடல் வனப்பு ஒரு புறம் இருக்கட்டும். கண்கள் எப்படி இருக்கும்? அழகிய மலர் போல இருக்கும், கரு விழிகளுக்கு வெளியே வெள்ளை வெளேர் என்று அழகிய வெண்திரை இருக்கும்.உதடுகள் எப்படி இருக்கும்? மென்மையான, சிவந்த இதழ்களாக இருக்கும். ஆனால் இங்கோ இவளுக்கு அப்படி இல்லை..அதுதான் வியப்பு. அவளுடைய கண் மலர்க்கண் தான். நன்கு கவனியுங்கள், மலர் போன்ற கண் அல்ல. கண்ணே மலர்தான்.( உருவகம்). ஆனால், கண்ணின் வெண்படலத்தில் வெண்மை துளியும் இல்லை...மாறாக முற்றிலும் சிவந்திருக்கிறது. அழகிய வாயின் இரண்டு இதழ்களும் சிவந்திருப்பதற்கு மாறாக வெளுத்துப் போய் வெண்மையாக இருக்கின்றன. ஏன் இந்த மாற்றம் ? வெளுப்பும் சிவப்பும் இடம் மாறி இருக்கின்றனவே ? அதுதான் காதலின் மகிமை. நெஞ்சமெல்லாம் நினைவெல்லாம் நிறைந்திருப்பவரை , நேரில் கண்டதும், கண்கள் முழுக்க அவரைக் கண்ட மகிழ்ச்சியில், உடல் படபடப்பு ஏற, கண்களில் உள்ள ரத்தத்தந்துகிகளில் அதிக ரத்தம் பாய்ந்ததால் கண்மலர்கள் இரண்டும் சிவந்து விட்டன. சரி, சிவந்த இதழ்கள் இரண்டும் எப்படி வெளுத்தன ? ஆயிரம் எண்ணங்கள் , ஆசைகள் மனதில் இருந்தாலும், அவள் ஒரு பெண்ணல்லவா ? தன் எண்ணங்களை எப்படி அவள் வெளிப்படையாகச் சொல்லுவாள் ? மனம் உந்த , நாணம் தடுக்க , உதடுகளில் ஈரம் உலர்ந்து போய் வெளுத்துப் போய் விட்டன. சரி.கண்களும் இதழ்களும் மட்டுமா தம் குணம் மாறின ? காதலர்களைக் கண்ட மகிழ்ச்சியில், நிலவும் தன் இயல்பை மாற்றிக் கொண்டது. எப்படி ? நிலவின் இயல்பென்ன ? இரவில் இப்பூவுலகுக்கு ஒளி தருதல் . ஆனால் இங்கு நிலா என்ன செய்கிறது ? மழை பொழிகிறது. தன் ஒளியைப் மழையாகப் பொழிகிறது... அதே நேரத்தில் அந்த மழையில் நனைந்து காதலர்கள் வருந்தக்கூடாது என்று, சூடாகவும் காய்கிறது, இரக்கம்
    நிறைந்த ஒரு அன்னையைப் போல. இங்குதான் இன்னொரு விசயம் வருகிறது...'காலம் நடத்தும் உறவிலே..' என்று காதலி சொல்கிறாள்.அதற்கு என்ன பொருள். "'நானும் நீயும் இன்று நேற்றா பழகுகிறோம்? காலம் காலமாக, ஒவ்வொரு பிறவியிலும் என் இன்பத்துணை நீதான் , உன் ஆசைப் பேடு நான்தான். ( பேடு என்றால் புறா என்று பொருள்.). நம் மனத்தைக் காலமே நன்கு அறிந்து உள்ளது, எனவே நம் இன்ப வாழ்வின் உறவை அந்தக்காலமே தன் சொந்த வாழ்வு போல் எண்ணி நம்மை ஆனந்த உறவில் ஆழ்த்தி அழைத்துச் செல்கிறது, பிறவிகள் தோறும்" என்று. இங்கு இன்னொரு இன்பமான காட்சியைப் பாருங்கள். அவளின் நெற்றியில் இருக்க வேண்டிய அழகான குங்குமம் அவனது நெஞ்சில் இடம் பெற்றிருக்கிறது... அவள் தலையில் இருக்க வேண்டிய மல்லிகை மலர்கள் எல்லாம் தரையில் உதிர்ந்து கிடக்கின்றன. இது எதனால் இப்படி நடந்தது? காதலனை நீண்ட நாள் காணாதிருந்து இன்று கண்டாள், கண் சிவந்தாள், வாய் வெளுத்தாள்.. ஆனால் மனம் முழுவதும் ஆசை வெள்ளத்தில் மிதந்தாள்.... நெஞ்சம் நெக்குருக, அன்பே உருவமாய் எதிரில் நிற்கும் ஆசைக் காதலனின் நெஞ்சில் தன் முகம் கவிழ்த்தாள் , நேசமே ஒரு உருவெடுத்தாள் போன்றவள். அதனால் அவள் நெற்றியில் இருந்த மங்கலக் குங்குமம் அவனின் நெஞ்சில் அழுந்திப் பதிந்து விட்டது. இது வரை எல்லாம் சரிதான். ஆனால் அவள் தலையில் சூடி இருந்த மல்லிகை மலர்கள் எப்படித் தரையில் கிடக்கின்றன ? தவறான திசையில் உங்கள் எண்ணம் போனால், அது உங்கள் தவறுதான் . உண்மைக் காரணம் என்ன தெரியுமா ? காதலன் பிரிந்திருந்த போது அவள் மல்லிகை மலர்களைச் சூடி இருந்தாள்....தன்னை அலங்கரித்துக் கொள்ள அல்ல. தான் சூடியிருக்கும் மலர்களின் வாசம் தன் தலைவனைச் சென்று சேரும், அதை முகரும் தலைவன், 'அடடா... என் ஆசைக் கிழத்தி எனக்காகக் காத்திருக்கிறாள்' என்றுணர்ந்து தன்னைக் காண ஓடோடி வருவான்' என்பதற்காக. அவனும் வந்தான் ஆசை உள்ளத்துடன். அவளை அன்புடன் அரவணைக்கவும் செய்தான்.அப்போதுதான் மல்லிகை மலர்களுக்கு உண்மை புரிந்தது, 'இவ்வளவு நாள் இந்தக் கள்ளி தன் தலையில் தம்மைச் சூடிக் கொண்டதெல்லாம் தம் மேல் கொண்ட ஆசையால் அல்ல, தன் காதலனை அழைக்கும் உபாயத்துக்காக' என்று. உண்மை உணர்ந்த மலர்கள் மனம் வெதும்பி, இனி இவள் தலையில் இருந்தால் தமக்கு அவமானம்தான் என்று கருதி அவள் தலையை விட்டு நீங்கித் தரையில் விழுந்து கிடந்தன. சரி. பிரிந்து இருந்த தலைவன் திரும்பவும் வந்து விட்டான். ஆனந்தம், பேரானந்தம்.ஆனால் அது எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்.? நேரமோ இரவு நேரம், விரைவில் விடிந்து விடும் . இன்பக்கதைகளும் முடிந்து விடும். எனவே, காதலி இரவைப் பார்த்துக் கெஞ்சிக் கேட்கிறாள் ' இரவே நீ விடிந்து விடாதே....என் காதலருடன் நான் கூறவும் அவர் கேட்கவும் அவர் கூறவும் அதை நான் கேட்கவும் என்று ஏராளமான இன்பக் கதைகள் உள்ளன. இரவு முழுக்கப் பேசினாலும் அவை முடியா. ஆனால் நீ விடிந்து விட்டால் பொழுது மலர்ந்து விட்டால் எங்கள் இன்ப நிலை தொடராது.எனவே நீ விடிந்தால் எங்கள் இன்பக் கதைகளைத் தொடர முடியாமல் முடித்தது நீதான் என்ற கெட்ட பெயர் உனக்கு வரும் .எனவே நீ விடியாதிருந்து எங்களை மகிழ்விப்பதுடன், உனக்கு வரப்போகும் அவப் பெயரையும் தவிர்த்துக் கொள்' என்கிறாள். சரி, ஒரு வழியாக இரவை விடியாதிருக்க வேண்டியாயிற்று.இன்னொரு ஆபத்து இருக்கிறதே? என்ன அது? அதுதான் சேவல். ஊரே அயர்ந்து உறங்கினாலும் விடியற்காலையில் எழுந்து உறக்கக் கூவி ஊர் மக்களை எல்லாம் எழுப்பி விடுமே ? மனம் கலங்கிய தலைவி சேவலைப் பார்த்து வேண்டுகிறாள் 'சேவலே, நாளை அதிகாலையில் வழக்கம் போல் நீ எழுந்து கூவி விடாதே...என் உயிருக்கு உயிரான காதலரும் நானும் இன்றுதான் சேர்ந்திருக்கிறோம். நீ கூவினால் அதனால் நாங்கள் பிரிய நேரிடும். அப்போது பிரிவைத்தாங்க முடியாமல் எங்கள் உயிர்கள் எங்கள் உடலை விட்டுப் பிரிந்தாலும் பிரிந்து விடும் .எனவே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே' என்று கெஞ்சுகிறாள்.காதலி சேவலிடம் இறைஞ்சுவதைக் கண்ட தலைவனும் தன் பங்குக்குச் சேவலிடம் ' சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே' என வேண்டுகிறான். இனி : பின் காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் பார்த்து இவ்வாறு பேசிக் கொள்கிறார்கள் . ' என் அன்பே, இனி என் மடிமீது உன் தலையையும், உன் மடிமீது என் தலையையும் வைத்து இருவரும் நாளைக் காலை விடியும் வரை தூங்குவோமா? உள்ளங்கள் ஒன்றான போது உறக்கம் எப்படி வரும் ? எனவே தூங்குவது போலப் படுத்துக் கொண்டு நம் இன்பக் கதைகளை இனிமையாகப் பேசலாம் .சரி. விடிய விடியப் பேசினாலும்,விடிந்து விட்டால் என்ன செய்வது ? விடிந்தால் நாம் பிரிய வேண்டியிருக்குமே.......அப்படிப் பிரிந்தால் நம் உயிர் நம் உடம்புகளில் தங்குமா ? பிரிவு தாங்காமல் பிரிந்து விடுமே ? அப்படி நம் உயிர்கள் பிரியாமல் இருந்தால் நாளைக் காலை இருவரும் எழுந்து நம் இருவரையும் நாமே உயிருடன் பார்த்துக் கொள்ளலாம். அப்படி நம் உயிர்கள் பிரிந்து விட்டாலும் நம் உயிரற்ற உடல்களை நாம் இருவரும் ஒன்று சேர்ந்து ஆன்ம ரூபத்தில் பார்த்துக் கொள்ளலாம்.'. நண்பர்களே ! இந்த அற்புதமான காதல் ஓவியம், நடிகர் திலகமும் , தேவிகாவும் இணைந்து நடித்த ' அன்னை இல்லம்' படத்தில் வரும் " மடிமீது தலை வைத்து...விடியும்வரை தூங்குவோம்....." பாடலில் கவிஞர் வரைந்தது. அதை எனக்குத் தெரிந்த வரையில் எனக்குப் புரிந்த வகையில் கொஞ்சம் சொல்லி இருக்கிறேன். இதில் ஒரு இடத்தில் கூட திலகம் தேவிகா இருவரின் நடிப்பைப் பற்றி சிறு துளி அளவும் குறிப்பிடவில்லை. ஏனெனில் அவர்கள் இருவரையும் நான் நடிகர்களாகப் பார்க்கவில்லை, ஆதர்சமான அன்புசால் ஆருயிர்க் காதலர்களாகவே என்றும் உணர்கிறேன், அதனால். அந்தப் பாடல் வரிகளையும் மீண்டும் நான் குறிப்பிடப் போவதில்லை. நீங்கள் , இப்பதிவைப் படித்த பின், பாடலைப் பார்த்து உணர்ந்து ரசித்தால் அதுவே இப்பதிவுற்குக் கிடைக்கும் வெற்றி என்று நான் மகிழ்வேன்.


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #263
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Murali Srinivas

    · 7 hrs

    பாலாடை
    16.06.1967 அன்று வெளியாகி இன்று 16.06.2017 அன்று 50 பொன்விழா ஆண்டுகளை நிறைவு செய்யும் பாலாடை படத்தைப் பற்றி 2012-ல் எழுதியது.
    இந்தப் படத்தைப் பொருத்தவரை நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த படம் எனபது ரசிகர்களை தவிர பொது மக்களுக்கு பரவலாக தெரியுமா என்றால் தெரியாது என்றே பதில் வரும். காரணம் படத்தை பற்றிய சரியான விளம்பரமின்மை. அதை பற்றி பேசுவதற்கு முன் நமது நடிகர் திலகத்தின் performance பற்றி பார்த்து விடலாம்.
    நாம் ஆய்விற்காக எடுத்துக் கொள்ளும் படங்களில் சொன்ன அதே வரிதான் இப்போதும் சொல்ல வேண்டியிருக்கிறது. அதாவது எந்த விதமான மிகைப்படுத்தலும் இல்லாமல் வெகு இயல்பான நடிப்பை இந்தப் படத்திலும் வெளிப்படுத்தியிருப்பார். மனைவி மீது அளப்பரிய அன்பு வைத்திருக்கும் ஒரு கணவன்தான் இந்த சேகர் என்பதை முதல் காட்சியிலேயே establish பண்ணி விடுவார். நீ இதுவரை எதுவுமே என்னிடம் கேட்டதிலையே என்று அவர் கேட்கும் காட்சியிலே படத்தின் நடுவில் வரப்போகும் முடிச்சிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விடும்.
    நண்பனின் வீட்டிற்கு நவராத்திரி கொலுவிற்கு மனைவியுடன் செல்கிறார். நண்பனின் நண்பன் insurance ஏஜென்ட் பாலிசி எடுப்பது பற்றி பேச ஆரம்பிக்கிறார். அப்போதுதான் பத்து வருடங்களாகியும் குழந்தை இல்லை என்ற செய்தி சேகரின் நண்பனால் சொல்லப்படுகிறது. ஏன் சார் டாக்டரை பார்க்கலாமே என்ற கேள்வி வருகிறது. குழந்தை இல்லை என்பதே sensitive ஆன விஷயம். அதை பற்றிய ஒரு discussion வரும்போது அதிலும் குறிப்பாக அறிமுகமில்லாத முதன் முறை சந்திக்க நேர்கிற ஓர் மனிதனுக்கு முன்பு பேச வேண்டும் என்கிறபோது பாதிக்கப்பட ஒரு ஆண் மகன் எப்படி தர்மசங்கடப்படுவான், பதில் சொல்ல எப்படி தடுமாறுவான் என்பதை அச்சு அசலாக காட்டியிருப்பார் நடிகர் திலகம். அடுத்து டாக்டர் கிளினிக். உள்ளே மனைவிக்கு பரிசோதனைகள் நடந்துக் கொண்டிருக்க வெளியே உட்கார்ந்து அங்கே இருக்கும் ஒரு பருவ இதழில் வந்துள்ள குழந்தைகளின் புகைப்படங்களை ரசிக்கும் அந்த மனிதன் மனதில் உள்ள குழந்தை ஆசை பார்வையாளனக்கு உணர்த்துவார். வெளியே வரும் மனைவியின் முகத்திலிருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் டாக்டரை பார்க்க நான் ஜானகிகிட்டே சொல்லியிருக்கிறேன்-னு சொல்ல பத்மினி குழந்தை பிறக்கும்னு சொல்லியிருக்காங்க என்றவுடன் சந்தோஷத்தில் வார்த்தை வராமல் போகலாம் என்று மனைவியை கூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டு சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்தது போல் திரும்பி உள்ளே வந்து டாக்டரிடம் Thank You டாக்டர் என்று சொல்லிவிட்டுப் போகும் அந்த elegance, அழகாய் செய்திருப்பார்.
    பின்னாளில் பொருட்காட்சியில் வைத்து டாக்டரின் மகனைப் பார்த்து பேசும்போது உண்மை தெரிய வர அந்த அதிர்ச்சியை அவர் மறைக்கும் விதம் பிரமாதம். என்ன சொல்றது ராமு என்று ஆரம்பித்து விட்டு என்ன சொல்றது என்று மட்டும் சொல்லி ஒரே வார்த்தையை வேறு அர்த்தத்தில் அவர் சொல்லும்போது ஏமாற்றப்பட்ட கையாலாகாத அந்த முகபாவம் எல்லாம் வெகு இயல்பு.
    வீட்டிற்கு வந்து யாரோ ஒருவருடன் பேசுவது போல தன் மனதில் இருப்பதை கொட்டி தீர்ப்பது [எப்படிப்பட்ட விஷயம் அதை யார்ட்டே மறைக்கிறது? கட்டின கணவன்கிட்டேவா?], குழந்தை மட்டுமே தன்னுடைய ஆசை இல்லை மனைவியும் அவள் மேல் இருக்கும் அன்பும்தான் முக்கியம் என்பதை மனைவியின் மனதில் பதிய வைக்கும் அந்த காட்சியும் அவர் நடிப்பில் பரிமளிக்கும்.
    அவரின் நடிப்பில் icing of the cake என்று இந்த படத்தில் சொல்ல வேண்டும் என்றால் அவர் தான் கண்ட கனவு பற்றி கே.ஆர்.விஜயாவிடம் விவரிக்கும் அந்தக் காட்சியைத்தான் சொல்ல வேண்டும். ரூமிலிருந்து நடந்து வரும் சிவாஜி. ரேடியோவில் ஒலிப்பரப்பி கொண்டிருக்கும் மலர்ந்தும் மலராத பாடலை நிறுத்தி விட்டு ஒரு வெறித்த பார்வையுடன் வந்து உட்காரும் சிவாஜி. இதை பார்த்தவுடன் தன்னுடைய அறையிலிருந்து வந்து என்ன ஆச்சு என்று கேட்கும் விஜயா. கனவை விவரிக்கும் சிவாஜி. வாசலிலே பெல் சத்தம். போய் பாக்கறேன் தங்க விக்கிரகம் மாதிரி ஒரு குழந்தை அப்படியே ஓடி வரான் இந்த சோபாவிலே வந்து உட்காறான் என்று ஆரம்பிப்பார். அப்போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே. இங்கேயா என்று விஜயா கேட்க, yes இந்த இடத்திலிருந்து ஓடி அங்க மாட்டியிருக்கிற கண்ணாடி மேல இந்த சாமானை எறியறான். கண்ணாடி உடைந்து சிதறுது. வாயெல்லாம் ரத்தம். ஏன்பானு கேட்க கடகடன்னு சிரிக்கிறான். ரத்தத்தை துடைக்கலாம்னு போறேன்" என்று பேசிக்கொண்டே அந்த அறையை சுற்றி வருவார். Mesmerising என்று வார்த்தையின் அர்த்தத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பை பார்த்தல் போதும். இந்தக் காட்சியைப் பொறுத்தவரை கவனித்தோம் என்றால் ஒன்று புலப்படும். உளவியாளர்கள் சொல்வது என்னவென்றால் ஒரு பொருளை ஒரு விஷயத்தை நாம் அளவிற்கு அதிகமாக விரும்புகிறோம் ஆனால் நமக்கு அது கிடைக்கவில்லை என்ற பட்சத்தில் ஆழ் மனது hallucinations எனப்படும் ஒரு வித பிரமையில் சிக்கிக் கொண்டு ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத நிகழ்வுகளை கனவு வடிவத்தில் கற்பனை செய்யும் என்கிறார்கள்.[உடல் நிலை சரியில்லாத போது உட்கொள்ளும் strong anti biotics கூட எப்போதும் ஏதாவது பிரச்சனைகளில் அல்லாடிக் கொண்டிருக்கும் சஞ்சல மனம் உடையவர்களுக்கு இது போன்ற hallucinations-ஐ கொண்டு வரும் என்று சொல்கிறார்கள்].அத்தகைய illusions மிகவும் weird ஆக இருக்கும் என்றும் உளவியாளர்கள் சொல்கிறார்கள்.
    இப்படிப்பட்ட ஒரு மனோநிலையில்தான் நமது நாயகன் இருக்கின்றான் என்பதை இப்படி ஒரு காட்சியமைபபின் மூலமாக திரைக்கதையில் கொண்டு வந்த கதாசிரியருக்கும் அதை சரியான விதத்தில் கையாண்ட இயக்குனருக்கும் அதை அழகாய் உள்வாங்கி தன அற்புதமான நடிப்பால் திரையில் ஒரு காவியமாக உருவாக்கிய நடிகர் திலகதிற்கும் ஒரு royal salute.
    இதை தவிர அவர் நடிப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் கே.ஆர்.விஜயாவிடம் கல்யாணத்திற்கு முன்பும் பின்பும் அவர் பழகும் விதம் பற்றி சொல்ல வேண்டும். கல்யாணத்திற்கு முன் மனைவியின் தங்கை என்ற உரிமையில் கிண்டல் செய்வது கேலியாக கமண்ட் அடிப்பது என்று ஜாலியாக இருக்கும் அவர் உடல் மொழி. அதே பெண் சந்தர்ப்ப சூழல் காரணமாக தன மனைவியாக வந்தவுடன் அவளிடம் ஓட்ட முடியாமல் விலகி விலகி போவதை அருமையாக செய்திருப்பார். அந்தப் பெண்ணும் மனைவிதான். ஆனாலும் முதல் மனைவியிடம் உள்ள attachment இரண்டாவதில் இல்லை எனபதை அவர் உணர்த்தும் விதம் நேர்த்தி.
    இறுதிக் காட்சியில் உயிருக்குயிராய் நேசித்த மனைவி தான் விரும்பிய குழந்தையை கொடுத்துவிட்டு இறந்து விடும் போது அந்த scene ஒரு melodrama-வாக மாறி விடக் கூடிய அனைத்து சாத்தியங்களும் இருந்தும் அதற்கு இடம் கொடுக்காமல் அடக்கி வசிப்பது அவர் எந்தளவிற்கு பல படங்களில் subtle acting செய்திருக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம்.
    ஒரு சில நடிகர் திலகத்தின் படங்களில் அவரை தவிர வேறு யாரும் குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள் பாலாடை படமும் அதில் ஒன்று. மனைவியாக வரும் நாட்டியப் பேரொளியும் சரி இரண்டாவது மனைவியாக தோன்றும் புன்னகை அரசியும் சரி மனதில் தங்குகிற மாதிரி பெரிதாக ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள்.
    இந்தப் படத்தில். அன்றைய நாட்களில் படவுலகில் எழுதப்படாத சட்டப்படி நாகேஷ் மனோரமா நகைச்சுவை பகுதியும் உண்டு. படத்தின் கதைக்கு தொடர்பு வேண்டும் என்பதற்காக சிவாஜியின் சித்தப்பாவாக வரும் விகேஆர் பாத்திரத்தையும் இந்த நகைச்சுவை காண்டத்தில் சேர்த்திருப்பார்கள். ஆனால் நீலவானம் படம் போல இந்தப் படத்திலும் நகைச்சுவை ஒட்டாது என்பது மட்டுமல்ல ரசிக்கும்படியாகவும் இருக்காது.
    மோகன் ஆர்ட்ஸ் என்ற பானர் வரையும் நிறுவனத்தை நடத்தி வந்த மோகன், நடிகர் எம்.ஆர்.சந்தானத்துடன் சேர்ந்து ராஜாமணி பிச்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி காலத்தால் அழிக்க முடியாத காவியமான பாச மலர் திரைக் காவியத்தை 1961-ல் நமக்கு அளித்தனர். பிறகு 1963-ல் அதே பானரில் மோகன் தனியாக தயாரித்த படம் குங்குமம். அந்த படத்திற்கு பிறகு ராஜாமணி பிச்சர்ஸ் படம் எதுவும் தயாரிக்கவில்லை.
    இந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருந்த எம்.ஆர்.சந்தானம்.[இயக்குனர் சந்தானபாரதியின் தந்தை] இதற்கிடையில் கமலா பிச்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அன்னை இல்லம் படத்தை தயாரித்தார்.இது 1963-ம் வருடம் நவம்பர் 15 அன்று வெளியானது. சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு படம் தயாரிக்க துவங்கி அதற்கு தங்களின் முதல் பட இயக்குனரான பீம்சிங்கை ஒப்பந்தம் செய்தார். 1965-ல் வெளிவந்த பழனி, சாந்தி திரைப்படங்களுக்கு பிறகு பீம்சிங் இந்தி படவுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இருப்பினும் இந்தப் படத்தை இயக்குவதற்கு ஒப்புக் கொண்டார்.
    அந்தக் காலத்தில் பருவ இதழ்களில் கதை தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தவர் பிலஹரி. ராமன் என்ற இயற் பெயருடைய இவருடைய கதைதான் பாலாடை. அவரே வசனம் எழுத படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் தமிழ் இந்தி என்று ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரி செய்துக் கொண்டிருந்த பீம்சிங்கால் இந்தப் படத்தில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் படபிடிப்பு விட்டு விட்டு நடந்தது.
    கல்யாணமாகி பல வருடங்கள் குழந்தை இல்லாத மனைவி தன கணவனுக்கு வாரிசு வேண்டும் என்று முடிவு செய்து தன் தங்கையையும் கணவனையும் இரண்டாம் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறாள். திருமணம் முடிந்து அவர்கள் முதலிரவுக்கு செல்லும் நேரத்தில் இங்கே இவள் கர்ப்பம் என்று தெரிய வருகிறது. இந்த சுவாரசியமான முடிச்சு விழும் போது இடைவேளை. ஆடியன்ஸ் நிமிர்ந்து உட்காரும் நேரம். ஆஹா இதை எப்படி கொண்டு போகப் போகிறார்கள் என கற்பனை செய்யும் போது அந்த சுவாரஸ்யத்திற்கு ஈடு கொடுக்காமல் தடுமாறும் திரைக்கதை இறுதிவரை அப்படியே அதே பாட்டையில் பயணிக்க ஆடியன்ஸ் ஏமாற்றமடைகின்றனர். இது எதனால் நேர்ந்தது என்பது நமக்கு தெரியாத புதிர்.
    முன்பே சொன்னது போல் பிலஹரி கதை வசனம் எழுதியிருக்க பீம்சிங் இயக்கினார். பீம்சிங் இந்தியில் பிசியாக இருந்த நேரம் எனவே அவரின் associate இயக்குனர்கள் திருமலை மகாலிங்கம் பல காட்சிகளை இயக்கியதாக அன்றைய நாளில் ஒரு பேச்சு உண்டு.
    இந்தப் படத்திற்கு இசை கே.வி.மகாதேவன். பாசமலர் படத்திற்கு மெல்லிசை மன்னர்களை பயன்படுத்திய ராஜாமணி பிக்சர்ஸ் தங்களது அடுத்த படமான குங்குமம் படத்திற்கு மகாதேவனை ஒப்பந்தம் செய்தார்கள். இரண்டிலுமே பாடல்கள் பெரும் புகழ் பெற்றன. எம்.ஆர்.சந்தானம் தனியாக எடுத்த அன்னை இல்லம் படத்திற்கு மாமாவை ஒப்பந்தம் செய்தார். குங்குமம் படத்தில் மாமாவை பயன்படுத்திக்கொண்ட அந்த நெருக்கமோ என்னவோ அன்னை இல்லம் பிறகு பாலாடை ஆகியவற்றுக்கும் மகாதேவனே இசையமைப்பாளர் ஆனார்.
    நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த படங்களில் இரண்டிற்கு மட்டுமே மாமா மியூசிக்.ஒன்று படிக்காத மேதை மற்றொன்று பாலாடை.[இதே கூட்டணியில் வெளிவந்த ராஜா ராணி படத்திற்கு டி.ஆர். பாப்பாவும், பெற்ற மனம் படத்திற்கு C.ராஜேஸ்வர ராவும் இசையமைத்தனர். மற்றவை எல்லாம் மெல்லிசை மன்னர்கள்.இந்தக் கூட்டணியின் கடைசி படமான பாதுகாப்பு மட்டும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள்].
    அந்தக் காலகட்டத்தில் புராணப் படங்களிலும் சமூக படங்களிலும் [பேசும் தெய்வம் போன்றவை] வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த மாமா இந்தப் படத்தில் கோட்டை விட்டிருப்பார்.
    பட்டாடை கட்டிக் கொள்ள வேண்டும் - நடிகர் திலகத்திற்கு உண்மை தெரிந்தவுடன் பத்மினியிடம் மனதில் உள்ளதை கொட்டி தீர்க்க பத்மினி மன்னிப்பு கேட்க அந்நேரத்தில் இது எதுவும் தெரியாமல் உள்ளே வரும் கே.ஆர். விஜயா பாடுவது. இது ஓரளவிற்கு பிரபலமான பாடல். சுசீலாவின் குரல் இனிமை பிளஸ்.
    அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும் - அணைக்கட்டு வேலைக்கு சென்றிருக்கும் போது அங்கே நடக்கும் ஒரு பிறந்த நாள் விழாவிற்கு சிவாஜியும் விஜயாவும் போவார்கள். அந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பாடுவதாக வரும் பாடல். நடிகர் திலகத்தின் சிகரெட் ஸ்டைலை இந்தப் பாட்டில் ரசிக்கலாம்.
    டூயட் டூயட் பாடும் முதலிரவு - நாகேஷ் மனோரமா முதலிரவில் பாடுவதாக வரும் பாடல். தாராபுரம் சுந்தர்ராஜன் பாடியிருப்பார்.
    எங்கே எங்கே எங்கே என் கண்ணுக்கு விருந்தெங்கே - படத்தில் நடிகர் திலகத்திற்கு ஒரே பாடல் இது மட்டும்தான். அதுவரை காய்ந்து கிடந்த ரசிகர்களுக்கு கைதட்ட ஆராவரிக்க ஒரு சீன். அந்த ஸ்டைல் போஸ் தனித்துவமான அந்த நடை என்று கலகலப்பாய் போகும்.
    தயாரிப்பில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக படம் 1967 ஜூன் 16-ல் வெளியானது. ஆனால் அதற்குள்ளாகவே கிட்டத்தட்ட இதே போன்ற கதையமைப்பை கொண்ட இதே நாயகனும் நாயகியும் நடித்த பேசும் தெய்வம் 1967 ஏப்ரலில் வெளியாகி வெற்றியும் பெற்று பாலாடை வெளியாகும் போது ஓடிக் கொண்டிருக்கிறது.அது மட்டுமல்ல நடிகர் திலகத்திற்கு action hero என்ற ஒரு புதிய இமேஜ் நல்கிய தங்கை படமும் 1967 மே-யில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய நேரத்தில் வெளியான பாலாடை போதிய வெற்றியை பெறாமல் போனது. மெயின் நகரங்களில் எல்லாம் ஐம்பது நாட்களை கடந்து ஓடிய பாலாடை எங்கள் மதுரை மாநகர் மீனாட்சி திரை அரங்கில் தன அதிக பட்ச நாட்கள் ஓட்டத்தை பதிவு செய்தது.
    நடிகர் திலகத்தின் படங்களைப் பொருத்தவரைக்கும் எது எப்படி இருப்பினும் அவருக்காக [மட்டும்] சில படங்களை பார்க்க நேரிடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் பாலாடை

    அன்புடன்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #264
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sundar Rajan with Bala Krish Nan.

    · 32 mins ·


    கெளரவம் திரைப்படத்தில் ஒரு வசனம்
    பண்டரிபாய் - யானைக்கும் அடி சறுக்கும்
    தலைவர் - யானைக்கும் அடி சறுக்குமா, சறுக்குனா எப்படி இருக்கும்னு தெரியுமா
    அதத் தானே எதிர்பார்க்குறா எல்லாம்.....
    நடக்காதுடி.. நடக்காது.
    அன்பு இதயங்களே,
    அன்றும் சரி இன்றும் சரி நமது மக்கள்தலைவரின் சாதனையை மறைக்க ஒரு கூட்டமே செயல்பட்டது.
    அன்று நம் தலைவர் படங்களின் தொடர் வெற்றியின் மூலம் அதை உடைத்தெறிந்தார்.
    இன்று அவர்தம் இதயங்களாகிய நாம் அவரின் சாதனையை பரப்புவதன் மூலம் உடைத்தெறிந்து கொண்டிருக்கிறோம்.
    எத்தனை பாகுபலி வந்தாலும்
    எங்கள் ராஜபார்ட் ரங்கதுரையை வெல்ல முடியாது.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #265
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #266
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #267
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #268
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sekar Parasuram


    சினிமா என்றால் அதன் அர்த்தம்
    " சிவாஜி"
    நடிகர்திலகத்தின் திரைப்பிரவேசத்திற்கு பிறகே தமிழ் மற்றும் இந்திய சினிமாவைப் பற்றிய தகவல்களை உலகளாவிய மக்கள் அறிய ஆ...ர்வம் கொண்டனர்
    நடிப்பிற்காக.உலக அரங்கில் விருதை வென்ற முதல் இந்திய நடிகர்(1960 ஆம் ஆண்டு)
    நடிப்பிற்காக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் படம் தெய்வமகன் (1969)
    இதுபோன்ற ஏராளமான சாதனைகளை கொண்டவரானதால் " சினிமாவின் குறியீடு ஆகவே திகழ்கிறார் நம் நடிகர்திலகம்
    நடிகர்திலகத்தின் " பாசமலர்" அதனை சினிமா குறியீடாக சித்தரிக்கும் புத்தகம்,
    அதன் ஆசிரியர் முனைவர் பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி!


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. Likes Harrietlgy liked this post
  11. #269
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #270
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Today Nadigar Thilagam special,

    இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாக இருக்கும் நடிகர் திலகம் திரைப்படங்கள்,

    10 am ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் " நீதி"

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •