Page 84 of 390 FirstFirst ... 3474828384858694134184 ... LastLast
Results 831 to 840 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Hybrid View

  1. #1
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    Sundar Rajan











    Sundar Rajan

    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    தற்போது சினிமாவில் நமது தலைவரின்
    படத்தை அல்லது படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியையோ அல்லது நடிப்பு என்றால் சிவாஜி தான் என்று பேச...ுவது என பெரும்பாலான திரைப்படங்களில் வருவது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
    பீட்சா, ஜிகர்தண்டா போன்ற படங்களின் இயக்குநா் கார்த்திக்சுப்புராஜ் அவர்கள் மேயாத மான் என்ற பெயரில் முதன்முதலாக சொந்தப் படம் தயாரிக்கிறார்.
    அதில் அண்ணன் தங்கை பற்றி பாடல் ஒன்று வருகிறது. அந்தப் பாடலில் அண்ணன் தங்கை இருவருக்கும் நடிகர்திலகம் மற்றும் நடிகையர்ர்திலகம் இருவரது மாஸ்க் வைத்து ஆடுவது போல் படமாக்கப்பட்டுள்ளது.
    இநத பாடல் தற்போது யூ டியூப்பில் வெளிவந்துள்ளது.
    மேலும் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ஜிகர்தண்டா
    படத்தின் ஆரம்பமே நமது நடிகர்திலகத்தின் பாசமலர் படத்தில் இடம் பெற்ற சரித்திரப் புகழ்பெற்ற மலர்ந்தும் மலராத பாதி மலர் பாடல் இடம்பெறும் வகையில் இருக்கும், அவருடைய கேரியரில் ஜிகர்தண்டா மாபெரும் வெற்றியையும், புகழையும் பெற்றுத் தந்தது.
    தற்போது தான் தயாரிக்கும் முதல் படத்திலேயும் அதே பாசமலர் படத்தினை பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் மேயாதமான் திரைப்படமும் மாபெரும் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை.
    யூடியூப்பில் வெளிவந்துள்ள பாடல்காட்சியின் புகைப்படம் மற்றும் மேயாத மான் படத்தின் போஸ்டர் உங்களுக்காக....
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    Jahir Hussain



    சிவகுமார்,,,, ஒரு நடிகராக, ஓவியராக, இப்போது கை தேர்ந்த சொற் பொழிவாளராக,,, நம்முடன் வாழ்ந்து வருகிறார்,,, நம்மைப் போல ஆகப் பெரும் சிவாஜி ரசிகர்,,, சுமார் 17 படங்களில் அவரோடு பணியாற்றி கதாநாயகன் என்ற தகுதியை சிவாஜி என்ற உரைகல்லில் தீட்டப் பட்டு பெற்ற பாக்கியவான்,,, திலகத்தைப் பொருத்தவரை சிவகுமார் அவர்கள் தன்னுடைய இளவல்,, அவளவுதான்,,, வி சி சண்முகத்தின் மீது எவ்வளவு பாசம் வைத்தாரோ அதே அளவு சிவகுமாரின் மீதும் வைத்திருந்தார்,,, ஒரு சமயம் சிவக்குமாரின் வீட்டிற்கு சிவாஜி போகிறார்,,, அவரை கண்டவுடன் சிவகுமாரின் அருமை மகள் பிருந்தா அப்போது சிறுமி,,, ஹை சிவாஜி அங்கிள் என்று ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறார்,, சிவாஜி பிருந்தாவிடம் உன் அப்பனுக்கு நான் அண்ணன்,,, ஆகவே நான் உனக்கு பெரியப்பா ஆகிறேன்,,, என்னை அங்கிள் என்று அழைக்கக் கூடாது பெரியப்பா என்றுதான் அழைக்க வேண்டும் எனறு கூறுகிறார்,,, சிவாஜி அவர்களுக்கு ஒருவரை மிகவும் பிடித்துப் போனால் "வாடா போடா" என்று மிக உரிமையோடு நெருங்கி விடுவார்,, சிவகுமாரையும் வாடா போடா என்றுதான் அழைப்பார்,,, சில நேரங்களில் ஜாதியை சொல்லியும் அழைப்பார்,,, அதில் எவ்வித நெருடலோ விஷமமோ இருக்காது,,, பாந்தமாக இருக்கும்,,, ஒரு ஓவியராக நடிகர் திலகத்தைப் பற்றி சிவகுமார் என்ன கூறுகிறார்?
    சிவாஜியின் மிகப் பெரிய சொத்து, அவரது ஒளிமிக்க உயிர்ப்புள்ள கண்கள்தான்,,,, அந்த கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்,,, என்று கூறுகிறார்,, எவ்வளவு நிதர்சனமான உண்மை,,,
    சிவாஜி என்றால் நடிப்பு,,, நடிப்பு என்றால் சிவாஜி,, அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு முன் மாதிரியும் கிடையாது,,, பின்மாதிரியும் கிடையாது,,, நம் திலகம் பற்றின எத்தனையோ விஷயங்களை சிவகுமார் அவர்கள் நம்மிடம் பகிந்து இருக்கிறார்,,,, அத்தனையும் இச்சிறு பதிவுக்குள் அடக்க முடியாது,, உயர்ந்த மனிதன் படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் நல்ல தார்க் குச்சியில் சிவகுமார் வாங்கிய அடி கொஞ்சமா நஞ்சமா? காலத்திற்கும் மறக்க மாட்டார்,,, அந்த சீனில் நடித்த சௌகார் ஜானகி "ஷாக் கார் ஜானகி" ஆகிட்டார்,,, விளையாட்டுப் பிள்ளை படத்தில் பத்மினியம்மா வுக்கு கன்னத்தில் ஒரே அறை,,, காதணிகள் கழண்டோடி விட்டது,, அதையும் சிவகுமார் அறிவார்,,நடிப்பென்று வந்து விட்டால் அடித்து நொறுக்கி விடுவார்,,, சீன் நன்றாக வரவேண்டும் என்ற அக்கரை,..
    சிவகுமாரிடம் தன் தாயார் படத்தை ஓவியமாக வரைந்து கொடுக்க கேட்டிருந்தார்,,, சந்தர்ப்ப வசத்தில் சிவகுமார் அதை மறந்து விட்டார்,,, ஒருமுறை சந்திப்பில் என்னடா சிவா இப்படி ஏமாத்திக்கிட்டு இருக்கே,,, அம்மா படத்தை படத்தை வரைந்து கேட்டேனே மறந்துட்டியா,,, அவங்க ரொம்ப நாள் தாங்க மாட்டாங்கடா என்று சொல்லும் போதே மனதை கசிய வைக்கிறார்,,,,
    சிங்கப்பூர் விழாவில் மயங்கி விழுந்தார் சிவாஜி,,, சிகிச்சை அளிக்கப்பட்டு ஓய்வுக்குப் பின் குடும்பத்துடன் சிவகுமார் திலகத்தை சந்திக்க வருகிறார்,,, அந்த நடிகனுக்குள் இருந்த ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார்,,சிங்ப்பூர்ல ஐந்தாயிரம் அடி திரையில கட்டபொம்மன் காட்சியை போடுறான்,, ஐந்தாயிரம் பேர் விசிலடித்து கொண்டாடி தீர்க்கிறான்,,, ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே தங்கப்பதுமை காட்சிக்கு அரங்கமே குலுக்குது,,, சிவா,, வாட் எ ஃபைன் மூவ்மெண்ட்! உங்க அண்ணன் அப்போ ஏண்டா சாகல,, இப்போ எதுக்குடா உயிரோட வந்தேன்? என்று மனக் குமுறல்களை கூறுகிறார்,, எவ்வளவு ஆதங்கம் உள்ள கலைஞன்,,, புகழின் உச்சத்திலேயே உயிரை விட வேண்டும் என்பதுதானே,,, நடித்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது நடிப்பின் பாராட்டுதலின் போதோ உயிர் போகவேண்டும் என்ற ஆதங்கம் அந்த கலைஞனுக்குள் இருந்து வெளிப்பட்ட தருணம் அது,,,
    முத்தாய்பாக சிவக்குமாரின் வார்த்தைகளில் இருந்து இந்த கட்டுரையை முடிக்கிறேன்,,, நடிகர் திலகம் ஒரு யுகக் கலைஞர்,,, மஹா கலைஞர்,,, அவர் என் துரோணர்,,, அவர் போடாத வேடமில்லை,,, நடிக்காத நடிப்பு இல்லை,,, அடுத்த தலைமுறைக்கு எதையும் விட்டு வைக்காமல் நடித்தவர்,,, இன்றைக்கு எங்கள் நடிப்பு எல்லாம் அவரது நடிப்பின் பாதிப்புதான்,, அப்படிப் பட்ட மஹா கலைஞனை எப்படி மறக்க இயலும்?


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    Jahir Hussain

    நடிகர் திலகமும்,,, பெண் நடிகர் திலகமும்,,,,,,,,,,,

    அண்ணல் அவர்கள் சுமார் 300 படங்களில் நடித்து இருக்கிறார் எனறால் மனோரமா அவர்கள் அவருடன் சுமார் 150 படங்களிலாவது நடித்திருப்பார்,,, ஒரே படத்தில் இருவரும் நடிக்கும் போதுதான் உண்மையான போட்டியே நிகழும்,, பன்முக திறமையாளர் "சோ" அவர்களின் அக்மார்க் ஸ்டேட்மெண்ட்,,, மனோரமா ஒரு பொம்பளை சிவாஜி என்பதுதான்,,, சோ அவர்கள் யாரையும் அவசரப்பட்டு பாராட்டி விட மாட்டார்,,, அவர் பாராட்டும் போதே கப் என்று பிடித்துக் கொள்ள வேண்டும்,,, சரி பெண் சிவாஜி எனறால் என்ன? பெண் நடிகர் திலகம்,,, நடிகையர் திலகம் அல்ல,,, அவர் வேறு ஒருவர்,,, நடிகர் திலகத்தின் இன்னொரு போட்டியாளர்,,, அவர் வேறு ஒரு எபிஸோடில் வருவார்,,, ஆக நடிகர் திலகத்தின பெண்பால்,,, சாம்பிளுக்கு தில்லானா மோனாம்பாளை எடுத்துக் கொள்வோமே? ஜில் ஜில் ரமாமணியோட அட்டாகாசத்தைப் பார்த்து கோடையிடி நந்தி முத்து ராக்கு அண்ணனே கதி கலங்கி போயிருப்பார்,
    அந்தப் படத்தில் சிக்கலாருக்கும் ரமாமணிக்கும் ஒரு அந்யோநியமான சகோதரப் பாசம் இருக்கும்,,, அது சினிமாவுக்கான நடிப்பு என்றால் நாம் ஏமாந்து போவோம்,,, உண்மையான சகோதரப் பாசம் அது,, பாசமலர் தங்கை ஒரே ரத்தம் என்றால் இது ஒன்றுவிட்ட ரத்தம் அவ்வளவுதான்,,
    நடிகர் திலகம் சிவாஜி படப் பிடிப்புத் தளத்தில் இருந்தாரென்றால், அத்தனை நடிகர்களும் அவரது நடிப்பை வியந்து ரசிப்பார்கள். அதில் நடிப்பிற்கான பாடத்தைப் படிப்பார் கள். அதேபோல் நடிகர் திலகம் அவர்கள் ஒருவரின் நடிப்பை ரசித்துப் பார்க்கிறாரென்றால், அது மனோரமாவின் நடிப்பாகத்தான் இருக்கும்,,,,
    ‘”என் தங்கச்சி நடிப்பப் பாருங்க… எவ்வளவு இயல்பா இருக்கு’’ என மனம் திறந்து பாராட்டுவாராம் சிவாஜி. அப்படி நடிப்பிற்கான பல்கலைக் கழகத் திடமே பாராட்டு பெற்ற பேராற் றல் மிக்கவர்தான் மனோரமா. அதனால்தான் அவர் பெண் சிவாஜி ஆகிப்போனார்,,, சரி தங்கையாக எப்படி ஆனார்?
    காலம் தான் மனோரமா மூலம் சிவாஜிக்கு "ரக்ச பந்தன்" கயிறு கட்டி அவருக்கு தங்கையாக்கியது,, மனோரமாவே கூறுகிறார்,,,,,
    ‘‘எனக்கும், சிவாஜிக்கும் உள்ள உறவு, அண்ணன்-தங்கை உறவு. இதை உண்மை என்று நிரூபிப்பது போல் என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
    எனக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக, மிகப்பெரிய துணையாக இருந்தவர், என் தாயார். அவர் திடீரென்று இறந்து போனார். என்னால் துயரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தகவல் அறிந்ததும் முதல் ஆளாக என் வீட்டுக்கு வந்தவர், அண்ணன் சிவாஜிதான். என்னை தேற்றியதுடன், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் நெகிழ்ந்து போகும்படி ஒரு செயலை செய்தார்.
    எங்கள் குடும்ப வழக்கப்படி, தாயார் மறைந்தால் முதலில் மகன்தான் கோடித்துணியை தாயார் உடம்பில் போர்த்த வேண்டும். எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் யாரும் கிடையாது. இதை நினைத்து நான் அழுது கொண்டிருந்தபோது, அண்ணன் சிவாஜி, என் கூடப்பிறந்த அண்ணனாக விலை உயர்ந்த ஒரு வெண் பட்டுப்புடவையை என் தாயாரின் உடம்பில் போர்த்தினார்.
    என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘‘அண்ணே, இந்த தங்கச்சி மீது உங்களுக்கு இத்தனை பாசமா அண்ணே’’ என்று கதறி அழுதேன். ‘‘என்னைக்குமே நீ எனக்கு தங்கச்சிதாம்மா’’ என்று என்னை தேற்றினார்.’’
    நடிப்புத்துறைக்கு வந்தோமா நடித்தோமா போனாமா என்றில்லாமல் தன்னுடன் நடிக்கும் அத்தனை கலைஞர்களையும் தன் குடும்பம் போல கருதியவர் அண்ணலார்,, ஆகவேதான் அவரது நடிப்பு இன்றும் சிலாகிக்கப் படுகிறது,,,, தனக்கு சவால் விடும் நடிப்பாளினியை நடிக்காமலேயே வென்று விட்டவர் அவர்,,, அவர்தான் நடிகர் திலகம் என்ற மஹான்,,,



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #4
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    Ranganathan Kalyan

    ·




    நயவஞ்சகம் நம்பிக்கைத் துரோகம் புறம்பேசுதல் முதுகில் குத்துதல் இவையெல்லாம் தன் படங்களில் விட. தனது சொந்த வாழ்க்கையில் நடிகர்திலகம் அனுபவதித்தார் என்றால் அது மிகையில்லை. சிலை விவகாரம் நமக்கு யாருமே இல்லையா என்ற கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது அடுத்தவனுக்கு கோஷம் போட்டே ஆயுளில் பாதி போயிடுச்சி இப்போதைய சிவாஜி ரசிகன் அனைவரும் 40 வயது மேற்பட்டவர் களே இருப்பார்கள் நம் கண்முண்ணே இந்த இழிநிலை என்றால் எனக்கு 52 வயது எப்போது வேண்டுமானாலும் சிவாஜியடி சேரலாம். ஆணால் கண்ட கண்ட .......யெல்லாம் கருத்து என்ற பெயரில் வந்ததை எல்லாம் வாந்தி எடுக்கிறார்கள் அதை கண்டிக்க நமக்கு யாரும் இல்லையே... எல்லாம் இருக்கு, ஆணால் எதுவுமில்லை. காரணம் சிவாஜி ரசிகன் அரசியல் கட்சி பல விதமான அமைப்பு என சுக்கு நூறாக சிதறி கிடக்கிறார்கள். நல்லதுதுக்கு தான் நாம் ஒன்று சேர்வதில்லை இதை பார்த்து இனியும் இப்படியே இருந்தால் சிவாஜி என்ற அந்த இறைவனுக்கே வெளிச்சம் ... ஒரு கடை கோடி சிவாஜி ரசிகனின் மனக்குமுறல் இந்த கருத்தில் உடன்படாதவர்கள் தயவு செய்து மன்னித்து விடுங்கள்.. வாழ்க சிவாஜ!





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #5
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    Gopalakrishnan Sundararaman




    சிவாஜி என்ற மாமனிதர்.

    ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.

    அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.

    ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.
    நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை எழுதி பெருமை கொள்கிறேன்.
    இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .

    செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.
    அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .

    வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.

    எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .

    கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.

    சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.

    பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.

    சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.

    நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.

    மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.

    கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.

    தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர்.

    தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.


    பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.

    ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.

    இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.

    தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.

    அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.

    நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.

    படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.

    பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.

    யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.

    தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.

    உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.

    பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.

    நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.

    தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.

    தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #6
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    Vasu Devan





    நடிகர் திலகத்தின் நாயகிகள் (பானுமதி)'

    'திரையுலகின் அஷ்டாவதானி' எனப் புகழ் பெற்றவர். சகலகலாவல்லி. பல்வேறு துறைகளிலும் சிறந்த திறைமைசாலி. 'அறிவாளி' நடிகர் திலகத்துடன் சிறந்த ஜோடியாகத் திகழ்ந்த பெண் அறிவாளி. நடிகர் திலகத்திற்கும் சீனியர் நடிகை. நடிப்பு, இசை, தயாரிப்பு, இயக்கம், பாடல்,எடிட்டர், ஸ்டுடியோ அதிபர், வசனகர்த்தா என்று எட்டுத் துறைகளிலும் கொடிநாட்டிய அசாதாரண திறமை கொண்ட நடிகை. இவர் திறமையை எண்ணி வியக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். தமிழக சூப்பர் ஸ்டார்கள் தியாகராஜ பாகவதர் அவர்களுடன் 'ராஜமுக்தி' திரைப்படத்திலும், பி.யூ.சின்னப்பா அவர்களுடன் 'ரத்னகுமார்' திரைப்படத்திலும் நடித்து பெரும் புகழ் பெற்றவர். 1953 இல் வெளிவந்த 'சண்டிராணி' என்ற தன் சொந்தத் தயாரிப்பு படத்தின் இயக்குனரும் இவரே. இருபத்தெட்டு வயதிலேயே இயக்குனரான இமய நடிகை.
    தெலுங்கில் 1945-இல் வெளிவந்த 'ஸ்வர்க்கசீமா' திரைப்படத்தில் "ஓஹோ...பாவுரமா" என்று இக்கால நடிகைகள் போல உடையணிந்து புறாவை கையில் வைத்துக் கொண்டு இவர் பாடி வருவதைப் பார்த்து தென்னிந்திய திரைப்பட உலகமே கிறங்கியது. அந்தப் பாடலைப் பார்த்து அசந்து போன முக்கியமானவர்களில் ஒருவர் யார் தெரியுமா? சாட்சாத் நடிகர் திலகம்தான். இதை நடிகர் திலகமே பானுமதி பற்றி கூறும்போது பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
    தெலுங்குத் திரைப்பட உலகில் 'பாவுரமா பானுமதி' என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறார். தெலுங்கில் டாப் ஸ்டார்களாய் திகழ்ந்த என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், நாகையா ஆகியோருடன் ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் படங்களை அளித்தவர்.
    நடிகர் திலகத்துடன் 'கள்வனின் காதலி'யில் முதன் முதலாக ஜோடி சேர்ந்தார் பானுமதி. இந்தப் படத்தில் நடிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது.
    பானுமதியோ சீனியர் நடிகை. மிகவும் கண்டிப்பானவர். கதாநாயகர்கள் அவரை தொட்டு நடிக்கக் கூட பயப்படுவார்கள். அவர் பெர்மிஷன் இல்லாமல் அவரை தொடக் கூட முடியாது. அப்படிப்பட்ட சீனியருடன் நடிக்க 'கள்வனின் காதலி'யில் நம்மவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஷூட்டிங் நடக்கத் தொடங்கியது. பானுமதி 1939-இல் திரையலகில் களமிறங்கியவர். நம்மவர் 1952 இல் புயலாகப் புகுந்தவர். கிட்டத் தட்ட 13 வருடங்கள் பானுமதி நம்மவருக்கு சீனியர். பட ஆரம்ப ஷூட்டிங்கின் போது பானுமதி இயக்குனர் வி.எஸ் ராகவனிடம் "பையன் எப்படி... நன்றாக நடிப்பானா... எனக்கு சமமாக நடிக்க வேண்டுமே!" என்றாராம். நடிப்பு என்று வந்துவிட்டால் நம்மாளுக்கு சீனியராவது ஜூனியராவது ...நடிகர் திலகம் வழக்கம் போல கள்வனின் காதலியில் நடிப்பில் களேபரம் செய்ய, பானுமதி நம்மவரின் நடிப்பில் மிரண்டு, அரண்டு போய் இயக்குனரை சில நாட்களுக்குள்ளேயே தனியே அழைத்து "அந்தப் பையனை (நடிகர் திலகத்தை) கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்... விட்டால் என்னையே காணாமல் காலி செய்து விடுவான் போல இருக்கிறது" என்றாராம் பரிதாபமாய். (இருங்கள்... கொஞ்சம்... கொஞ்சமென்ன... முழுக் காலரையுமே தூக்கி விட்டுக் கொள்கிறேன்... ஸாரி ...தூக்கி விட்டுக் கொள்ளுவோம்)
    (இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் பின்னாளில் 'சர்வர் சுந்தரம்' படத்தில் மனோரமா சீனியர் நடிகையாகவும்,நாகேஷ் அறிமுக நடிகராகவும் நடிக்கும் காட்சி ஒன்று சித்தரிக்கப்பட்டிருந்ததாக கூறுவோர் உண்டு... அந்தக் காட்சியும் பிரமாதமாகவே இருக்கும் )
    கல்கியின் 'கள்வனின் காதலி', கொங்கு நாட்டுத் தமிழை புகழ் படுத்திய "மக்களைப் பெற்ற மகராசி', அண்ணாவின் 'ரங்கோன்' ராதா, ("நடிப்பின் இலக்கணம்" என்று அண்ணாவால் பானுமதி போற்றப் பட்டார்), 'அம்பிகாபதி', அறிவாளி, 'மணமகன் தேவை', 'ராணி லலிதாங்கி' படங்களில் கதாநாயகியாக நடிகர் திலகத்துடன் சோபித்தவர். அதுமட்டுமல்லாமல் சாரங்கதாரா, ராஜபக்தி (வில்லி), தெனாலிராமன் (வில்லி), படங்களிலும் நடிகர் திலகத்துடன் நடித்துள்ளார்.
    "வெயிற்கேற்ற நிழலுண்டு"... "வெண்ணிலா ஜோதியை வீசுதே".... "போறவளே போறவளே பொன்னுரங்கம்"... "கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே"..."மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு"...போன்ற அற்புத பாடல்களைப் பாடி தன் தனித்தன்மையான குரல் வளத்தால் நம் உள்ளங்களில் குடிகொண்டவர்.
    குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு படம்'அறிவாளி'. நடிகர் திலகமும், பானுமதியும் போட்டி போட்டுக் கொண்டு தத்தம் திறமைகளை நிரூபித்திருப்பார்கள். சும்மா நம்ம தலைவர் பானுமதியை பாடாய் படுத்துவார் பாருங்கள்... பானுமதியும் சரியாக ஈடு கொடுப்பார்... அந்த ரோலில் பானுமதியைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்துகூட என்னால் பார்க்க முடியவில்லை.
    தத்துவம், ஜோதிடம் இவற்றிலும் சிறந்தவர் பானுமதி. இவருடைய கணவர் ராமகிருஷ்ணா. சொந்தமாக தன் மகன் பெயரில் 'பரணி ஸ்டுடியோ' என்ற ஸ்டுடியோவும் இவருக்கு உண்டு. 'பரணி பிக்சர்ஸ்' பெயரில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். அதில் 'மணமகன் தேவை' என்ற அற்புத நகைச்சுவை படத்தை நடிகர் திலகத்தை வைத்து அருமையாக எடுத்திருந்தார் பானுமதி. Western hero போல இப்படத்தில் நடிகர் திலகத்தை வித்தியாசமாக,அழகுறக் காட்டியிருந்தார்கள்.
    AVM -ன் 'அன்னை' படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார் பானுமதி. பல பரிசுகளையும், அவார்டுகளையும் பானுமதி பெற்றிருக்கிறார். அவற்றுள் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் முக்கியமானவை. Western music, Hindustani music இரண்டிலும் கரை கண்டவர். பல சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.
    நடிகர் திலகம் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட பானுமதி "நியூஸ் கேள்விப்பட்டவுடன் என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை"...என்று துக்கம் தொண்டை அடைக்க கதறியதை நம்மால் மறக்கவே முடியாது.




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #7
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #8
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like

    Sundar Rajan


    அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
    மற்றும் நண்பர்களே,
    நமது தமிழ்நாட்டில்
    நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் கலையுலக பிரவேசமான 1952ல் இருந்து தமிழகத்தின் முதலமைச்சர்கள் பெ...யர் பட்டியல் இதோ,
    1.குமாரசாமி ராஜா 2.ராஜாஜி 3.காமராஜ் 4.பக்தவச்சலம் 5.அண்ணாதுரை 6.நெடுஞ்செழியன் 7.கருணாநிதி 8.எம்ஜிஆர் 9.ஜானகி எம்ஜிஆர் 10.ஜெயலலிதா 11.பன்னீர்செல்வம் 12.எடப்பாடி பழனிசாமி
    இதில் எதிர்பாராத வகையில் நெடுஞ்செழியன் 2 முறையும், பன்னீர் செல்வம் அவர்கள் 3 முறையும் முதலமைச்சராக இருந்துள்ளனர்.
    அதாவது,
    தமிழ்நாட்டில் 1952ல் இருந்து 2017 வரை 65 வருடமாக 12 முதலமைச்சர்கள் இருந்துள்ளனர். இனி இது தொடரும் நாளை சசிகலா அல்லது தினகரன் கூட முதலமைச்சராகலாம்.
    முதலமைச்சர் பதவி என்பது இவர் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவரை மிஞ்சி அடுத்தவர் என தாெடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
    முதலமைச்சர் பதவி என்பது இன்று மிகவும் சாதாரணமாகி விட்டது.
    ஆனால்,
    நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் தான் கால்பதித்த
    1952 முதல், தான் விண்ணுலகம் சென்ற 2001வரை
    49 வருடமாக கலையுலகில் அவரை அசைச்க ஒருவரும் கிடையாது.
    சரி போகட்டும் 2001க்கு பிறகாவது அவருடைய சாதனையை முறியடிக்க அல்லது அவரை மிஞ்ச யாராவது வந்தார்களா என்றால் அதுவும் இல்லை.
    2001க்கு பிறகும் தற்போது 2017 வரை இன்றும் கலையுகில் சிவாஜி ஒருவரே ராஜாவாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.
    அன்பானவர்களே, 2017 மட்டுமல்ல 3000மாவது ஆண்டு வந்தாலும் திரையுலகில் சிவாஜி என்ற ஒருவரை விஞ்ச எவரும் முடியாது.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #9
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    Jahir Hussain

    நடிகர் திலகத்துடன் அதிக படங்களில் பணியாற்றியவர்,, எம். என். நம்பியார்,,, சிறு வயதில் நாங்கள் அவரை அழைப்பது எமன், நம்பியார் என்றுதான்,, அத்தனை தத்ரூபமான வில்லன் நடிகர்,, ஆனால் நிஜ வாழ்க்கையில் பரிசுத்தமான மனிதர்,,, மேன்மையான குடும்பஸ்தர், சிறப்பு மிக்க ஐயப்பன் பக்தர்,,, குருசாமி,,, இத்தனை குண நலன்கள் மிக்க ஒருவர் நம் திலகத்தை எப்படிப் பார்க்கிறார்? அங்கேதான் வானுயர உயர்ந்து விடுகிறார் நம்மவர்,, ஒருமுறை நம்பியார் தன்னுடன் நடிக்கும் ஒரு கதாநாயகர் நடிகருடன் உணவு இடைவேளையில் உரை...யாடிக் கொண்டு இருக்கும் போது நம்பியார் அவர்களுக்கு வந்த கேரியரில் கருவாட்டு குழம்பும் மீன் வகைகளும் கண்டு அதிர்ச்சி அடைகிறார்,,, காரணம் அவர் சுத்த சைவம்,,, இந்த சாப்பாட்டு கேரியர் மாற்றப்பட்டது அந்த கதாநாயக நடிகரின் செயல்,, இதுதான் அந்த குறிப்பிட்ட நடிகர் நம்பியாரை மதித்த சம்பவம்,, நம்மவர் அப்படி இல்லை தான் அசைவ உணவாளி யாகா இருந்தாலும் பிறர் உணவுப் பழக்கத்தை மதித்தவர்,, அதுமட்டுமின்றி நம்பியார் அவர்களின் ஆலோசனைகளின் படி தானும் ஐயப்பனுக்கு விரதம் இருந்து மாலை போட்டு சபரிமலைக்கு தரிசனம் சென்று வந்தது வரலாறு,,, நம்மவர் செயலுக்கும் அந்த கதாநாயகர் செயலுக்கும் மனித நேயத்தில் எத்தனை வித்தியாசம்,,,,,
    அப்படிப்பட்ட நம்பியார் அவர்கள் நம் திலகத்தைப்பற்றி என்ன சொல்கிறார்? அவர் கூற்றுலேயே பார்க்கலாம்,,,, உலகின் தலைசிறந்த நடிகர்களில் எல்லாம் அவர் தலை சிறந்தவர். எந்த வேடமாக இருந்தாலும் மற்றவர்களைவிட திறமையாக செய்யக்கூடியவர். உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை கூறும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தப் படத்துக்குப் பிறகும் சிவாஜி வில்லனாக நடித்திருந்தால், எனக்கெல்லாம் வேலை இல்லாமல் போயிருக்கும்.
    யயாதி மகாராஜா, இந்திரலோகத்தில் இருக்கும் தேவர்கள் போல் இளமையாகவே வாழ விரும்பினார். அதற்கு அவரது பிள்ளைகளில் எவராவது தனது இளமையைத் தந்தால் அவர் இளைமையுடன் வாழலாமென ரிஷி ஒருவர் வரம் தந்தார். ஆனால் எந்தப் பிள்ளையும் தங்களது இளமையைத் தர முன் வர வில்லை. அவர் பெற்ற பிள்ளைகளில் அரூபியாக இருந்த ஒரு பிள்ளையை மட்டும் அவர் வெறுத்து ஒதுக்கினார். அந்தப் பிள்ளை தனது இளைமையை தன் தந்தைக்கு தந்ததாக புராணக் கதையொன்று உண்டு. யயாதியின் நிலையில் சிவாஜி இருந்திருந்தால், நான் என் இளமையைத் தந்திருப்பேன்,,,, என்று கூறுகிறார், ஒரு சிறந்த மனிதர் ஒரு மிகச்சிறந்த மனிதர்பால் உயர்வான அபிப்ராயம் கொண்டுள்ளார் என்றார்,,, அந்த மிகச்சிறந்த மனிதரான நம் நடிகர் திலகம் நம்பியார் அவர்கள் மனதை எவ்வளவு ஆட்கொண்டு இருந்து இருக்கிறார் என்று புரிகிறதல்லவா? அதனால்தான் காலத்தை வென்றவராக மறைந்தும் மறையாத மாமணியாய் திகழ்கிறார்,,,,,






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #10
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    Natarajen Pachaiappan


    தூவானம்
    ***********
    அன்பிற்குரிய அய்யன் சிவாஜியின் தீவிர தொண்டர் பெ.ஜெயகுமார் அய்யா,
    வருத்தப்படும் செய்தியாய் ஆகிபோனதுதான் மிச்சம். கூவிக் கூவி சொல்ல வேண்டுமோ அய்யன் சிவாஜி சிலையகற்றல் செய்தியை? உணர்வுள்ள மனிதர்கள் மிகவும் குறைந்து போனார்களய்யா தாய் தமிழ்நாட்டிலே.
    ... இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசை படலாமோ? கண்ணை விற்று ஓவியம் வாங்க ஆசை படலாமோ? ஒரு பக்கம் அய்யன் சிவாஜி சிலை அகற்றம், இன்னொரு பக்கம் மணிமண்டபம் திறப்பு.
    ஏதோ நடக்கிறதென எனச்சொல்லி அமைதியான ஓர் கூட்டம்.
    உலகமே பாராட்டிய உத்தமன்,தெய்ப்பிறவி,தெய்வமகன்,
    பேசும்தெய்வம் என்றெல்லாம் சொல்லி அவரை அகற்றியாகிவிட்டது. இனி என்ன ஆகபோகிறது?
    உணர்வுள்ள கூட்டந்தான் நமது அய்யன் சிவாஜியை சிந்தனை செய்யும் கூட்டம். அக்கூட்டம் சிவாஜி ரசிகர்கள் மட்டுமா?
    ஏழு வயதில் நடிக்க வந்த நம்தெய்வம் 65 ஆண்டுகள் நடித்து உலகமெங்கும் இவர்போல் ஓர் நடிகரில்லை என்ற பாராட்டும் பெற்று இந்திய நாட்டிற்கும் தான் பிறந்த தமிழ் நாட்டிற்கும் ஒரு கலையின் அடையாளமாய் திகழ்ந்தது.
    திரையுலகின் பிதாமகரை முள் படுக்கையில் படுக்கவைத்து வேடிக்கை பார்க்கும் நடிகர் சங்கத்தால் யாதொரு பயனுமில்லை.
    காங்கிரஸுக்காக எத்தனையோ போராட்டங்கள் நடத்தி சிறை சென்றவர்கள்தான் நமது சிவாஜி ரசிகர்கள் ஆனால் அதே காங்கிரஸ் தியாகிதான் வழக்கை போட்டார். காங்கிரஸ் நினைத்திருந்தால் தடுத்து நிறுத்த முயற்சி செய்துயிருக்கலாம். சிலையகற்றிய பின்பாவது குறைந்த பட்ச கண்டன போராட்டம் நடத்தியிருக்கலாம்.
    எந்த திமுகவிலிருந்து வந்தாரோ, எந்த திமுக அரசு அய்யனுக்கு சிலை வைத்ததோ அதே திமுகவின் செயல் தலைவர் கண்டனத்தை வாய் மொழியாக மட்டும் கூறிவிட்டார்.
    அதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவரும், நாம் தமிழர் கட்சி தலைவரும், விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், இதையெல்லாம் தாண்டி பாட்டாளி கட்சியின் நிறுவுனர் சிலையகற்றலின் பின்னனியில் உள்ள சதியையும் சொல்லிவிட்டார்கள்.
    நடிகர்கள் சங்கம் வீண்...
    ஏதோ கொஞ்சம் நடிகர்களும் ஓர் நடிகையும் தன் ஆதங்கத்தை வெளியிட்டதோடு சரி.
    சிலையகற்றம் என்றவுடன் புயலாய் ஆகவேண்டிய நேரத்தில் வெறும் தூவானமாய் போனபின், நாம் என்னதான் செய்ய முடியும்?
    இதற்காக இத்தனை காலம் தன் சுய சந்தோஷங்களை தள்ளிவைத்து பொருளாதார இன்னல்கள் அனுபவித்து, மிரட்டல்களை சந்தித்து, ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியவைத்து. வழக்கையும், மணிமண்டபதிற்காண உண்ணாவிரதத்தையும் நடத்தி, இத்தனை நாட்கள் சிவாஜி அய்யன் சிலை நிற்பதற்கும், மணிமண்டபம் கட்டப்படுவதற்கும் காரணமான நடிகர்திலகம் சிவாஜி சமூகநல பேரவைக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்.
    அன்புடன்...
    சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •