துரும்பு இவள்
துன்புறுத்தலாம்
வக்கில்லாதவள்
வதைக்கலாம்
திக்கில்லாதவள்
துரத்தலாம்
இதுதானே உனது கணிப்பு
அதில் அளவில்லா களிப்பு
விதை தான் சிறியது
விருட்சமோ பெரியது
சின்னப்பயலே தெரியாதா
சின்னவள் பலம் புரியாதா
எரிமலையை தீண்டாதே
கடும்புயலை தூண்டாதே
நாகத்தை சீண்டாதே
நஞ்சை கக்க வைக்காதே
விடியலை நானும் தேடட்டுமா
புதிய பாதையை வகுக்கட்டுமா
குனிந்த தலையை நிமிர்த்தட்டுமா
விஸ்வரூபம்தனை காட்டட்டுமா
வெப்பத்தை நீயும் தாங்குவாயா
வெந்து பின் புதிதாய் எழுவாயா