Page 36 of 41 FirstFirst ... 263435363738 ... LastLast
Results 351 to 360 of 403

Thread: muthalidam

  1. #351
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by pavalamani pragasam


    Áâò¾ ¯Â¢÷¸û
    Á¨Èž¢ø¨Ä
    Á¢ýÛõ §¸¡Ê
    Å¢ñÁ£ý¸Ç¡ö
    ¯Ä¨¸ ¯È¨Å
    §¿¡ìÌõ ¸ñ¸û
    «Á¢ú¾¡É ¸½í¸û



    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #352
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,080
    Post Thanks / Like
    மிக்க நன்றி!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #353

    Join Date
    Nov 2006
    Posts
    128
    Post Thanks / Like


    Quote Originally Posted by pavalamani pragasam
    Thanx, suba! ithai solla bayam ethukku? bayaththai oziththu thairiyamaay kural kodungaL! kaLai edukka kaikaL niRaiya thEvai!!!
    athu sarithaanga. oru sila vishayangal oru silar sollum pothu nandraaga edupadum. uthaaranathukku... oru pennaagiya neengal pengalin kuraiyai ezuthuvathu....

    melum uthaaranam...

    - rajini thalai kooda seevaamal, paijaama jippaavoda enga venumnaalum varalaam. athan peyar simplicity. ithuve naan seithaal 'pichaikaaran vanthutaan paaru' enbaarkal.


  5. #354
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,080
    Post Thanks / Like
    athuvum sarithaan! But truly it is a boost to hear voices of support, moral or open.
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  6. #355
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,080
    Post Thanks / Like
    ஒரு மைல்கல்

    வந்தது அறுபது
    மயங்குது மனது
    ஒரு மைல்கல்
    வாழ்வின் உரைகல்
    நின்று நிதானிக்க
    திரும்பிப் பார்க்க
    விரும்பி ரசிக்க
    திகைத்து மலைக்க
    நன்றே நடந்தது
    நன்றி தளும்புது
    மீதமும் கடக்க
    இதமாய் முடிக்க
    நம்பி நடக்க
    நடுக்கம் தவிர்க்க
    ஊன்றுகோல் எத்தனை
    தூண்டுதல் எத்தனை
    ஆறுதல் அளித்திட
    உறவும் நட்பும்
    நிழலாய் இருக்க
    நிம்மதி நிலைக்க
    புதிய பூவின்
    சுகந்த மணமாய்
    மலர்ந்த நாள்
    எழுதாத தாள்
    அடுத்த அத்தியாயம்
    எப்படி தொடருமோ
    கடைசி வரை
    ஆர்வம் ஏறும்
    மர்மக் கதை
    தருமோ போதை
    சலித்து ஒதுக்கி
    தள்ளாது எதையும்
    நலிந்து தவங்கி
    தள்ளாத போழ்தும்
    நன்றே நாளை
    தள்ளும் யுக்தி
    தரட்டும் சக்தி
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  7. #356
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,080
    Post Thanks / Like
    எலியும் பூனையும்


    சிறிய குழந்தைகள் வியக்க
    'பெரிய' குழந்தைகள் ரசிக்க
    டாம் என்றொரு பூனையும்
    ஜெர்ரி என்றொரு எலியும்
    நடத்தும் ஓயாத போர்
    வெற்றியும் தோல்வியும் இன்றி
    இனிதே தொடரும் வாடிக்கை
    என்றும் அலுக்காத வேடிக்கை

    ஆக்ரோஷம் ஆத்திரம் வேகம்
    அந்தப் பூனையின் அடையாளம்
    சாமர்த்தியம் கூர்மதி விவேகம்
    சின்ன எலியின் ஆயுதம்
    பாய்ந்து துரத்தும் பூனை
    பதுங்கி கவிழ்க்கும் எலி
    புயலாய் விரட்டும் பூனை
    பத்திரமாய் பம்மும் எலி

    உடல் வலிமையில் பிறந்த
    ஆவேசமெல்லாம் வீணாக
    தெளிவான அறிவில் உதித்த
    எளிதான உத்திகள் பலிக்க
    ஒன்றை ஒன்று துரத்தி
    நடத்துகின்ற பகைப் பாவனை
    உணர்த்தும் பாடம் உளதோ
    வெறும் கதை இதுவோ

    புஜபலமுள்ள ஆண்தான்
    ஆதிக்க நாயகந்தான்
    அந்தோ! என்னாச்சு அவன் வலி?
    சினமென்ன? சீற்றமென்ன?
    புஸ்வாணமாகும் இறுதியிலே
    புத்தியுள்ள பெண் முன்னாலே
    விதைத்து வினை அறுத்து
    நோவான் பரிதாபமாகவே

    யோசனையில்லா கொதிப்புகள்
    அவசரமான அவன் செய்கைகள்
    ஓசையில்லா துரித தீர்வுகள்
    தவறாத அவள் கணிப்புகள்
    அடக்கும் எண்ணம் ஓயாமல்
    அடங்கும் சாத்தியம் இல்லாமல்
    அகிலம் உள்ள மட்டும்
    அரங்கேறும் அழகு காவியம்.
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  8. #357
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,080
    Post Thanks / Like
    சிரிக்க மாட்டாயோ


    ஆரிய உதடும் திராவிட உதடும்
    ஆர்வமாய் உறவாடியிருக்க
    அவனியதில் களிப்பேறியிருக்க
    என்னவளின் சின்ன உதடுகள்
    சிறு சிரிப்பும் சிந்தாததேன்
    என் சிந்தை மிக நொந்ததேன்
    முல்லைப்பூ இதழலளவேனும்
    சிக்கனமாய் சிரிக்க மாட்டாயோ

    பெண்ணே புகையிலையல்ல நீ
    வாசமிழந்து போய்விடுவதற்கு
    காசா பணமா சிரிப்பதற்கு
    செலவில்லா செயலல்லவோ
    கருமி போல் காரிகையே
    காத்து என்ன செய்வாயோ
    காத்து நான் நிற்கின்றேன்
    சொர்க்கவாசல் திறக்குமென
    மாதுளை இதழ்களிடையே
    பச்சரிசி பல்வரிசை பார்த்திடவே
    கண நேர மின்னலில்
    கண் கூசிப் போவதுபோல்
    இருண்ட மன வானிலே
    ஒளிவெள்ளம் பாயுமென
    தவமான தவமிருந்து
    தவித்துக் கிடந்த பின்னே
    தடாகத்துத் தாமரை போல்
    குவிந்த மொட்டு திறந்தது
    குமிழ் சிரிப்பும் பிறந்தது

    அந்தோ!விரிந்த மலரும் மூடுமோ
    மீண்டும் மொட்டாய் மாறுமோ
    விந்தையென்ன விந்தையோ
    விளங்காத மர்மமோ
    மறுபடியும் மெளனமோ

    கொத்தாய் சிரிக்கும் கொடிமலராய்
    நீ சிரித்திருக்கக் கூடாதோ
    விரிந்திருக்கும் புது மலராய்
    பூத்தே இருக்கக் கூடாதோ
    பூட்டிப் பூட்டி வைப்பதேன்
    புன்னகைதான் பொன்னகையோ
    பொல்லாத கள்ளியே
    கொள்ளையடித்தவளே
    முள்ளால் மூடியவளே

    சுலபமாய் உதட்டில் ஒட்டிய சிரிப்புடனே
    சுதந்திரமாய் சுந்தரிகள் சுற்றிவர
    அரிதாய் சிரிப்பவளே
    அரிதாய் இருப்பவளே
    அரிதாய் இருப்பதே
    ஆர்வம் தருவதே
    அரிதான கருத்தினை
    அறிந்தேன் அரிவையே
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  9. #358
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,080
    Post Thanks / Like
    சக்தியை போற்றுதும்

    கானகத்தே கடுந்தவம் செய்தே
    மாமுனி பெற்றான் பெரும்பலனே
    நடந்தான் நாட்டை நோக்கியே
    நாடி வருவோர்க்கு நல்லாசி வழங்கவே
    தலை மேலே பறந்த கொக்கொன்றுமே
    அந்தோ! அவன் மேல் எச்சமிட்டதுவே
    பொங்கி எழுந்த கோபத்திலே கனலாய்
    நோக்கினான் பகுத்தறிவில்லா பறவைதனை
    பொசுங்கித்தான் போனதது ஒரு நொடியிலே

    தவ வலியுணர்ந்து மதர்ப்புடன் சென்றான்
    கண்ணில் பட்ட கதவின் முன்னின்று
    அழைத்தான் விருந்தோம்பல் வேண்டி
    மங்கை நல்லாள் தன் மணாளனுக்கு
    மதிய உணவு படைத்திடும் நேரமது
    பார்த்துப் பார்த்துப் பரிமாறி பசியாற்றி
    பின்னரே பதறாமல் வாசலுக்கு வந்தாள்

    தாமதத்தை அவமதிப்பாய் கருதிவிட்ட
    தவமுனி தத்தளித்தான் தணலிலே
    கொதிகலனாய் கொதித்தான் கோபத்திலே
    காக்க வைத்த காரிகையை கண்ட உடன்
    எரி தழலை பார்வையாயவன் வீசினான்
    கலங்காது வினவினாள் இளைய நங்காள்:
    'கொக்கென நினைத்தாயோ கொங்கணவா?'
    சாம்பலாவாளோ சமர்த்துப் பெண்டாட்டி?
    காணாத காட்சியை கொக்கின் கதையை
    ஞானத்தால் உணர்ந்த பெருமாட்டி!

    பிறழாத நெறிகள்தானே அவள் திறம்
    தவமுனியின் பலத்தை விஞ்சும் வரம்
    தெய்வம் தொழாது கொழுநனை தொழுது
    மழை பெய்ய கட்டளையிடும் கண்ணாட்டி
    இல்லாளாய் இருந்து இல்லம் நிறைத்திருந்து
    இல்லாத நலனில்லை தலைவன் வாழ்விலென
    நடத்தும் இல்லற வாழ்வின் விளக்கானவள்
    பத்தினியாம் பத்தரை மாற்று பொன்னவள்
    மானிடர் வாழ்வை இயக்கும் அச்சானவள்
    மானிலம் போற்றும் சக்தியின் உருவானவள்
    மாண்பினை கொண்டாடும் நன்னாளிதுவே
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  10. #359
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,080
    Post Thanks / Like
    விசாரம்


    வெள்ளித்திரை வெளிச்சத்தில்
    வெகுஜன ஊடகத்தில்
    மரபுகள் இல்லா
    புதுக் கவிதைகள்
    மதுரமில்லா
    வெறும் ஓசைகள்
    நல்ல பயிரிடை
    நலிந்த களைகள்

    சுத்தமில்லா மொழி
    சத்தமான ஒலி
    பாதி புரியவில்லை
    புரிந்தது பிடிக்கவில்லை
    சிதைந்த உச்சரிப்பு
    புதைந்த புலனின்பம்
    கலப்பட சந்தங்கள்
    உலகமய சங்கங்கள்
    அந்தரங்க தனிமை
    அவையேறும் புதுமை
    கூட்டத்தோடு காதலர்
    கூத்தாடும் கலாசாரம்
    விரசத்தில் விஞ்சி
    வித்தியாசம் நாடி
    விதவிதமாய் ரோதனை
    விந்தையான சாதனை

    குடியோடு பாட்டு
    குட்டியோடு ஆட்டம்
    குத்துகிற கும்மியாட்டம்
    காசின் மேலே நாட்டம்
    காதில் பாய்வது
    இன்பத் தேனா
    காய்ச்சிய ஈயமா
    இசையின் பெயரில்
    இம்சை திரையில்
    இணையாய் அசைவுகள்
    சாமியாடும் உடல்கள்
    ஒட்டி உரசி
    பின்னி பிசைந்து
    முக்கி முனகி
    தொட்டுத் தடவி
    உருண்டு புரண்டு
    கவ்வி கவுந்து
    பொருள் பச்சை
    பதிவும் கொச்சை
    காதும் கண்ணும்
    ஒன்றாய் நோகுது
    இதுவோர் வன்முறை
    இக்கட்டில் ரசனை
    கற்பனை வறுமை
    அழகின் வெறுமை

    வரவும் செலவும்
    கோடிகள் என்பர்
    வர்த்தகமாகும் கலை
    விலை மாதின் நிலை
    வக்கிரத்தின் எல்லை
    வெட்கமே இல்லை
    அபத்தமா ஆபாசமா
    அதிகமெது அறியோம்
    அதிர்ச்சியா ஆயாசமா
    அருவருப்பா எரிச்சலா
    எதுவோவா எல்லாமேவா
    எவரே கூற வல்லார்

    சின்னத்திரையில் இதை
    சித்தரிக்கவோர் போட்டி
    சின்னத்தனமாய் இளமை
    சீரழிகின்ற கொடுமை
    கனவுகள் துரத்தி
    திறமைகள் ஏற்றி
    வளரும் வயதில்
    வீணாகும் வாழ்வு
    சிற்றின்ப சேற்றில்
    சிக்குது தலைமுறைகள்
    துய்க்கவும் விதிமுறைகள்
    வகுத்த நம் கரைகள்
    காப்பாற்றி போற்றிட
    கட்ட வேண்டும் அணைகள்
    காட்டாற்றை தணித்து
    பாசனம் செய்திட்டால்
    பயிர் செழித்திடாதோ
    தாய் தலை நிமிராதோ
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #360
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,080
    Post Thanks / Like
    இடைவெளி


    இரயில் வண்டியோடும் இருப்புப்பாதையில்
    கணக்காய் ஓர் அளவிலே வகுத்தார்
    சீராய் முழு தூரத்துக்கும் இடைவெளி-
    தடம் புரளாத துரித சுகமான பயணம்

    சூரிய மண்டலத்திலே கிரகங்களிடையே,
    பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே
    அளவான பிரபஞ்ச இடைவெளி-
    ஈர்ப்பின் எல்லை தாண்டாத நலம்

    அந்தரங்கம் அறிந்தவரேயாயினும்
    அனைத்தும் பகிர்ந்தவராயினும்
    இல்லறத்திலும் வேண்டும் இடைவெளி
    இருவர் உறவும் தொடர்ந்து மணந்திட

    பஞ்சுக்கும் நெருப்புக்கும் இடையே
    பயிர் நாற்றுக்களின், மரங்களின் நடுவே
    காந்தத்தின் எதிர் துருவங்களிடையே
    இடைவெளி-பயனும் பாதுகாப்பும் உண்டு

    பிள்ளைப்பேறுகளிடையே இடைவெளி-
    மக்கட்தொகை சுருக்க அரசாங்க யோசனை
    சாலையில் வாகனங்களிடையே இடைவெளி
    விபத்தைத் தவிர்த்திட ஒரு நல்ல வழி

    விதை வெடித்து முளைத்து மரமாகிடவும்
    பூத்து காய்த்து கனிந்து குலுங்கிடவும்
    உயிர்கள் பழுத்து சருகாய் உதிர்ந்திடவும்
    கட்டாயம் இருக்கிறது கால இடைவெளி
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

Page 36 of 41 FirstFirst ... 263435363738 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •